Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் டோமினிக் ✠(St. Dominic)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug- 08)
 ✠ புனிதர் டோமினிக் ✠(St. Dominic)

 குரு/ டோமினிக்கன் சபை நிறுவனர் :
(Priest/ Founder of the Dominican Order)

பிறப்பு : ஆகஸ்ட் 8, 1170
காலேருவேகா, கேஸ்டில் அரசு, (தற்போதைய ஸ்பெயின்)
(Caleruega, Kingdom of Castile (Present-day Castile-Leon, Spain)

இறப்பு : ஆகஸ்ட் 6, 1221
போலோக்னா, இத்தாலி
(Bologna (Present-day Emilia-Romagna, Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரனியம்
(Lutheranism)

புனிதர் பட்டம் : ஜூலை 13, 1234
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
(Pope Gregory IX)

முக்கிய திருத்தலங்கள் :
புனித தோமினிக் பசிலிக்கா, போலோக்னா
(San Domenico, Bologna)

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 8

சித்தரிக்கப்படும் வகை :
செபமாலை, நாய், விண்மீன், லில்லி மலர், தொமினிக்கன் சபை உடையில் புத்தகம் மற்றும் கைத்தடியோடு

பாதுகாவல் :
சோதிடம் (Astronomy); சோதிடர்கள் (Astronomers); டொமினிக்கன் குடியரசு (Dominican Republic); "சேன்டோ டோமிங்கோ புயேப்லோ" (Santo Domingo Pueblo), "வலேட்டா" (Valletta), "பிர்கு" (மால்ட்டா) (Birgu (Malta), "மனகுவா" Managua

பழைய தமிழ் வழக்கில் "புனிதர் சாமிநாதர்" என்றழைக்கப்படும் புனிதர் டோமினிக், "கேஸ்டிலியன்" (Castilian) மொழி பேசும் ஒரு ஸ்பேனிஷ் (Spanish) குருவும் "டோமினிக்கன் சபையின்" (Dominican Order) நிறுவனரும் ஆவார்.

"டொமினிக் ஆஃப் ஆஸ்மா" (Dominic of Osma) என்றும், "டொமினிக் ஆஃப் கலேரிகா" (Dominic of Caleruega) என்றும், "டொமினிக் டி குஸ்மான்" (Dominic de Guzmn) என்றும், "டோமிங்கோ ஃபெலிக்ஸ் டி குஸ்மான்" (Domingo Flix de Guzmn) என்றும் பல பெயர்களில் அறியப்படும் இவர், கி.பி. 1170ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் "கலேருகா" (Caleruega) என்ற ஊரில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையின் பெயர், "ஃபெலிக்ஸ் கஸ்மன்" (Felix Guzman) ஆகும். "ஜுவன்னா" (Juanna of Aza) இவரது தாயார் ஆவார். (ஜுவன்னாவுக்கு, பின்னாளில், 1828ம் ஆண்டு, திருத்தந்தை "பன்னிரெண்டாம் லியோ" (Pope Leo XII) அவர்களால் முக்திபேறு பட்டம் அளிக்கப்பட்டது.) வெகு காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாது வருந்திய இவரது தாயார் ஜுவன்னா, தமது சொந்த ஊரான "கலேருகாவிலிருந்து" (Caleruega) சில மைல் தொலைவிலிருக்கும் "சிலோஸ்" (Silos) எனும் ஊரிலிருக்கும் "சிலோஸ்" நகர புனிதர் டோமினிக்" (Saint Dominic of Silos) அவர்களின் "பெனடிக்டைன்" (Benedictine abbey) துறவற மடத்திற்கு புனித யாத்திரை சென்றார். அங்கே, ஒரு நாய் தமது வயிற்றிலிருந்து குதித்தோடியதாகவும், அதன் வாயில் ஒரு தீப்பந்தம் இருந்ததாகவும் கனவு கண்டதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு "சிலோஸ்" நகர டோமினிக்கின்" நினைவாக "டோமினிக்" என்று பெயர் வைத்ததாக ஐதீகம். இலத்தீன் மொழியில், "டோமினி கனிஸ்" (Domini canis) என்றால் கடவுளின் நாய் என்றும் அர்த்தமாம். டோமினிக்கின் தாயார் "ஜுவன்னாவுக்கு" (Juanna of Aza) பிற்காலத்தில், 1828ம் ஆண்டு திருத்தந்தை "பன்னிரெண்டாம் லியோ" (Pope Leo XII) அவர்கள் முக்திபேறு பட்டமளித்தார்.

டோமினிக், "பலேன்சியா" (Palencia) பள்ளிகளில் கல்வி கற்றார். 1191ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, தம்மிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆடைகள் மற்றும் அனைத்தையும் விற்று பசித்தோர்க்கு உணவிட்டார். 1194ம் ஆண்டு, தமக்கு இருபத்துநான்கு வயதானபோது, "ஒஸ்மா" (Cathedral of Osma) நகர பேராலயத்திலுள்ள "அகுஸ்தினார்" (Saint Augustine) சபையில் இணைந்தார்.

டோமினிக், 1203 அல்லது 1204ம் ஆண்டு, "ஒஸ்மா" ஆயரான (Bishop of Osma) "டியேகோ" (Diego de Acebo) என்பவருடன் இணைந்து "கேஸ்டில்" அரசன் (King of Castile) "எட்டாம் அல்ஃபோன்சோவுக்காக" (Alfonso VIII) அரசு முறை பயணமாக "டென்மார்க்" நாட்டுக்கு பயணமானார். "இளவரசர் பெர்டினாண்டுக்கு" (Prince Ferdinand) டென்மார்க் நாட்டில் திருமணத்துக்கு பெண் பார்க்க செல்வதே இவர்களது பயணத்தின் நோக்கமாக இருந்தது. தூதர்கள், "அராகன்" மற்றும் "தென் ஃபிரான்ஸ்" (Aragon and the South of France) வழியாக டென்மார்க் பயணித்தனர். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. ஆனால் இளவரசி "கேஸ்டிலுக்குப்" (Castile) போகும்முன் இறந்து போனார்.

டோமினிக்கும், ஆயர் "டியேகோவும்" (Diego de Acebo) இணைந்து, தென் ஃபிரான்ஸில் "கத்தார்" (Cathars) எனும் ஒரு இன மக்களை மனமாற்றம் செய்வதற்கான ஒரு திட்டத்தை வகுத்து செயலாக்கினர். (அக்காலத்தில், 12 மற்றும் 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில், தென் ஐரோப்பியாவின் சில பகுதிகளில், குறிப்பாக தென் ஃபிரான்ஸில் "கத்தார்" (Catharism) எனும் ஞான மற்றும் இரட்டை நம்பிக்கைகள் கொண்ட கிறிஸ்தவ மத மறுமலர்ச்சி இயக்கம் செழித்தோங்கி இருந்தது. இவ்வியக்கம், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரானதாக கருதப்பட்டது.) இதன் ஒரு பாகமாக, "வெர்ஃபில்" (Verfeil), "செர்வியன்" (Servian), "பமியெர்ஸ்" (Pamiers) "மாண்ட்ரியல்" (Montral) மற்றும் பிற பகுதிகளில் "கத்தோலிக்க கத்தார்" பொது விவாதங்கள் நடத்தப்பட்டன. உண்மையான புனிதத்தன்மை, மனத்தாழ்ச்சி மற்றும் துறவறம் ஆகியவை கொண்ட பிரசங்கிப்பாளர்களே "கத்தார்" இயக்கத்தினரை வெற்றிகொள்ள இயலும் என முடித்து வைத்தார். டொமினிக்கால் சில "கத்தார்" இயக்கத்தினரை மனமாற்றம் செய்விக்க முடிந்தது.

இவரைப் பின்பற்றும் பிரசங்கிப்பாளர்கள், ஒரு சமூகமாக மாறினார்கள். பின்னர், 1215ம் ஆண்டு, தம்மைப் பின்பற்றும் ஆறு பேர்களுடன் இணைந்து, (Toulouse) என்னுமிடத்தில் ஒரு இல்லத்தை அமைத்தார். அதுவே, பிரபல டோமினிக்கன் சபையின் தொடக்கமாகும். டிசம்பர் 1216 மற்றும் ஜனவரி 1217ல் புதிய திருத்தந்தை "மூன்றாம் ஹானரியஸ்" (Pope Honorius III) இச்சபைக்கு அங்கீகாரமளித்தார்.

டோமினிக், வளர்ந்து வரும் சகோதர துறவியரின் தொடர்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக பரவலாக பயணங்கள் செய்தார். ரோம் நகரை தமது தலைமையகமாகக் கொண்டார்.

டோமினிக் புலால் உண்ணுவதை முழுமையாக விலக்கினார். நோன்பு மற்றும் மௌன விரதம் போன்றவற்றை கடைபிடித்தார். எங்கே சென்றாலும், எப்போதும் தாம் தங்குவதற்காக மோசமான இடவசதி மற்றும் சராசரி ஆடைகளையே தேர்ந்தெடுத்தார். ஆடம்பர படுக்கை வசதியை எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை. பயணங்களின்போது ஆன்மீக புத்தகங்களை படிப்பதிலும் செபிப்பதிலும் ஈடுபட்டார். நகரம் மற்றும் கிராம எல்லைகளை கடந்ததும் தமது காலணிகளை அவிழ்த்துவிட்டு வெறும் கால்களுடனேயே நடப்பார். மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்காக எப்போதுமே முணுமுணுத்தது இல்லை; மாறாக, இறைவனை புகழ்வதிலேயே கருத்தாய் இருப்பார்.

டோமினிக், 1218ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 21ம் நாளன்று, வட இத்தாலியில், "ஃபுளோரன்ஸ்" (Florence) நகரின் வடகிழக்கிலுள்ள "போலோக்னா" (Bologna) வந்து சேர்ந்தார். 1221ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் தேதியன்று, மதியம், தமது ஐம்பத்தொரு வயதில் டோமினிக் மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா