Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் கிளாடியா ✠(St. Claudia)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 07)
 ✠ புனிதர் கிளாடியா ✠(St. Claudia)

 பிறப்பு : தெரியவில்லை

இறப்பு : தெரியவில்லை

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 7

புனிதர் கிளாடியா, ரோமில் (Rome) வாழ்ந்த பிரிட்டிஷ் வம்சாவளியைச் (British Descent) சேர்ந்த ஒரு பெண் ஆவார். கவிஞர் "மார்ஷல்" (Martial) என்பவருக்கு அறிமுகமான இவர், கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையான, "திருத்தந்தை லைனஸ்" (Pope Linus) என்பவரின் தாயார் ஆவார்.

இவரது தந்தையான பிரிட்டிஷ் அரசன் "காரகடஸ்" (British King Caratacus), பிரிட்டிஷ் எதிர்ப்பை வழிநடத்தியவராவார். ரோம அரசியல்வாதியும், பிராந்தியத்தின் முதல் ஆளுநருமான "ஔலஸ் பிலௌஷியஸ்" (Aulus Plautius) என்பவனால் தோற்கடிக்கப்பட்டு, சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டார்.

ரோம பேரரசின் பேரரசரான (Emperor of the Roman Empire) "கிளாடியஸ்" (Claudius) கிளாடியாவின் தந்தையான "காரகடசை" விடுவித்தார். இந்த காரணத்தால் "கிளாடியா" என்ற பெயரை தமது பெயராக ஏற்றுக்கொண்டார் என்பர். பின்னர், கத்தோலிக்க திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற இவர், ரோமிலேயே வாழத் தொடங்கினார்.

புனிதர் பவுல் (Saint Paul), புதிய ஏற்பாட்டில் (New Testament), கிரேக்க நகரான "எபேசசின்" (Ephesus) முதலாம் நூற்றாண்டின் ஆயரான (First-Century Christian Bishop) "திமொத்திக்கு" (Timothy) எழுதிய "இரண்டாம் திருமுகத்தில்" (Second Epistle to Timothy), அவர் கிளாடியாவைப் பற்றி எழுதியிருக்கிறார். புனிதர் பவுல் (Saint Paul) "திமொத்திக்கு" (Timothy) எழுதிய "இரண்டாம் திருமுகம்," பொதுவாக, பவுலின் கடைசி கடிதம் எனப்படுகின்றது. திமோத்திக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தின், நான்காம் அதிகாரத்தில், 21ம் வசனத்தில் (2 திமோத்தி 4:21) கிளாடியா குறிப்பிடப்பட்டுள்ளார்.

கிளாடியா, உண்மையில் "கிளாடியஸ் காகிடூப்னஸ்" (Claudius Cogidubnus) என்பவரின் மகள் என்றும் நம்பப்படுகிறது. இவரே கிளாடியஸின் கூட்டாளியாக இருந்து, பின்னர் ஒரு பேரரசராக ஆனார் என்பர். கிளாடியாவின் உண்மையான பெயர் "கிளாடியா ரூஃபினா" (Claudia Rufina) என்றும், கவிஞர் "மார்ஷலுடைய" (Martial) நண்பரான "ஔலஸ் புடேன்ஸ்" (Aulus Pudens) என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்றும் கூறுகிறார்.

புனிதர் கிளாடியாவின் நினைவுத் திருநாள் ஆகஸ்ட் மாதம் ஏழாம் நாளாகும்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா