✠ புனிதர் ஆண்ட்ரூ ✠(St. Andrew the Scot) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஆகஸ்ட்/
Aug
22) |
✠ புனிதர் ஆண்ட்ரூ ✠(St. Andrew the Scot)
✠ தலைமைக் குருவின் பெரிய உதவி அதிகாரி :
(Archdeacon)
✠பிறப்பு : 800
✠இறப்பு : 877 அல்லது 880
ஃபியசோல், இத்தாலி
(Fiesole, Italy)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
✠முக்கிய திருத்தலம் :
புனித மார்ட்டின் தேவாலயம், ஃபியசோல், இத்தாலி
(Saint Martin, Fiesole, Italy)
புனிதர் ஆண்ட்ரூ ஸ்காட் (St. Andrew the Scot), இத்தாலிய
பிராந்தியமான "டுஸ்கனியின்" (Tuscany) பெருநகரான
"ஃபுளோரன்ஸின்" (Metropolitan City of Florence) பகுதியான
"ஃபியசோலின்" (Fiesole) ஆயரான "புனிதர் டோனடஸின்" (St.
Donatus) "பெரிய உதவி அதிகாரி" (Archdeacon) ஆவார். இவர்
"டஸ்கனியின் ஆண்ட்ரூ" (Andrew of Tuscany) என்றும், "ஃபியசோல்
நகர ஆண்ட்ரூ" (Andrew of Fiesole) என்றும், "அயர்லாந்தின்
ஆண்ட்ரூ" (Andrew of Ireland) என்றும் அறியப்படுகிறார். இவர்,
புனிதர் பிரிட்ஜெட்டின் (Bridget of Fiesole) சகோதரரும்
ஆவார்.
"அயர்லாந்து" அல்லது "ஸ்காட்லாந்து" (Ireland or Scotland)
நாட்டில் பிறந்ததாக கூறப்படும் இவர், இத்தாலியிலுள்ள
"டுஸ்கனியின்" (Tuscany) "ஃபுளோரன்ஸிலுள்ள" (Florence)
"ஃபியசோல்" (Fiesole) நகரில் மரித்தார்.
ஆண்ட்ரூவும் அவரது சகோதரியும் புனிதர் டோனடஸிடம்" (St.
Donatus) கல்வி கற்றனர். டோனடஸ் இத்தாலிக்கு புனித யாத்திரை
சென்றபோது, ஆண்ட்ரூவும் உடன் சென்றார். டோனடஸ், ஆண்ட்ரூ
இருவரும் ஃபியசோல் சென்று சேர்ந்தபோது, அங்குள்ள மக்கள்,
தமக்கு ஒரு ஆயரை தேர்ந்தெடுப்பதற்காக ஒன்றுகூடியிருந்தனர்.
அப்போது, வானிலிருந்து இறங்கி வந்த அசரீரி குரல் ஒன்று, டோனடசை
சுட்டிக்காட்டி, "இவரே மரியாதைக்கு மிகவும் தகுதியுள்ளவர்"
என்றது. ஆயராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டதும்,
டோனடஸ் தமது "பெரிய உதவி அதிகாரியாக" (Archdeacon) ஆண்ட்ரூவை
நியமித்துக்கொண்டார்.
ஃபியசோல் நகரிலிருந்தபோது, பிரபு ஒருவரின் மகள் ஒருவர் இவரால்
குணமடைந்ததாக கூறப்படுகிறது. முடக்குவாத நோயால்
பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை காப்பாற்ற மருத்துவர்களால்
இயலவில்ல என்றானதும், சிறுமியின் தந்தை, ஆண்ட்ரூவை வந்து தமது
மகளுக்காக செபிக்குமாறு வேண்டினார். சிறுமியின் படுக்கையருகே
முழங்கால்படியிட்டு செபித்த ஆண்ட்ரூம், "உன்னை இயேசு
குனமாக்கிவிட்டார்; எழுந்திரு" என்றார். அந்த சிறுமியும்
எழுந்து சென்றாள். ஃபியசோல் நகரில் "பெரிய உதவி அதிகாரியாக"
(Archdeacon) இருந்த காலத்தில், இதுபோல் பல அற்புதங்களை
இயேசுவின் பெயரால் நிகழ்த்தியதாக கூறப்படுகின்றது. பிசாசுக்களை
துரத்தினார். பார்வையற்றவர்களுக்கு பார்வை வரவழைத்தார்.
நோயுற்றோரை குணமாக்கினார்.
நாற்பத்தேழு வருட ஆயராக சேவையில், ஆண்ட்ரூ டோனடஸுக்கு தீவிர
விசுவாசமாக பணியாற்றினார். "மென்சுலா" நகரிலுள்ள "புனித
மார்ட்டின் ஆலயத்தை" (Church of San Martino di Mensula)
மீட்கவும் அங்கே ஒரு துறவியர் மடத்தை உருவாக்கவும்
உந்துசக்தியாக விளங்கினார். தமது கடினமான, மற்றும் எளிய
வாழ்க்கைக்காகவும், ஏழைகளுக்கு இவர் ஆற்றிய எல்லையற்ற
தொண்டுகளுக்காகவும் ஆண்ட்ரூ பாராட்டப்படுகிறார். இவர், தமது
ஆசான் டோனடஸ் மரித்த சில காலத்திலேயே இவரும் மரித்தார். இவர்
மரண படுக்கையிலிருந்தபோது, இவருக்கு உதவுவதற்காக இவரது சகோதரி
புனிதர் பிரிட்ஜெட்டை (Bridget of Fiesole) அயர்லாந்திலிருந்து ஒரு தேவதூதர் அழைத்து வந்ததாக
கூறப்படுகிறது. இவர் மீட்டெடுத்த புனித மார்ட்டின்
தேவாலயத்தில் (St. Martin's Church) இவரது உடல் அடக்கம்
செய்யப்பட்டது. |
|
|