Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஆல்பர்ட்டோ ஹர்டடோ க்ருச்சகா ✠(St. Alberto Hurtado Cruchaga)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 18)
✠ புனிதர் ஆல்பர்ட்டோ ஹர்டடோ க்ருச்சகா ✠(St. Alberto Hurtado Cruchaga)

 இயேசு சபை குரு, வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகர் :
(Jesuit Priest, Lawyer and Social Worker)

பிறப்பு : ஜனவரி 22, 1901
வின டெல் மார், சிலி
(Vina del Mar, Chile)

இறப்பு : ஆகஸ்டு 18, 1952 (வயது 51)
சேன்டியாகோ, சிலி
(Santiago, Chile)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : அக்டோபர் 16, 1994
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர்பட்டம் : அக்டோபர் 23, 2005
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

பாதுகாவல் :
சிலி, ஏழை மக்கள், தெருக்குழந்தைகள், சமூக சேவகர்கள்

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 18

புனிதர் ஆல்பர்ட்டோ ஹர்டடோ க்ருச்சகா (Saint Alberto Hurtado Cruchaga), சிலி நாட்டு இயேசு சபையின் கத்தோலிக்க குருவும் (Chilean Jesuit Priest), வழக்குரைஞரும், சமூகப் பணியாளரும், எழுத்தாளரும், 'ஹோகர் தே கிறிஸ்டோ' (Hogar de Cristo Foundation) எனும் கத்தோலிக்க நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். இவர் சிலி நாட்டின் இரண்டாவது கத்தோலிக்க புனிதர் ஆவார்.

"லூயிஸ் ஆல்பர்ட்டோ ஹர்டடோ குருச்சகா" (Luis Alberto Hurtado Cruchaga) எனும் இயற்பெயர் கொண்ட இவர், மிகவும் வறுமையான ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தமது நான்கு வயதிலேயே தமது தந்தையை இழந்தார். இவரது தாயார், குடும்ப கடன்களை அடைப்பதற்காக சொற்ப பணத்துக்கு மிஞ்சியிருந்த கொஞ்ச சொத்துக்களையும் விற்றார். அடிக்கடி தமது சகோதரருடன் உறவினர்களின் வீடுகளில் மாறி மாறி தங்கினார். தங்குவதற்கென்று சிறிய வீடுகூட இல்லாத ஏழையாய் வாழ்வதன் துயரங்களை அனுபவித்து உணர்ந்தார்.

கி.பி. 1909ம் ஆண்டு முதல் 1917ம் ஆண்டு வரையான காலத்தில், இயேசு சபை குரு ஒருவரின் உதவியால், "புனிதர் இக்னாசியோ, சேன்டியாகோ" (St. Ignacio, Santiago, Chile) இயேசு சபை (Jesuit school) பள்ளியில் கல்வி பயின்றார். இக்காலத்தில், அருகாமையிலுள்ள கத்தோலிக்க பங்கின் ஏழை மக்களுக்கு வேண்டிய உதவிகள் புரிந்தார். அவர்களது குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தார். தான் படிக்கும்போதும் விடுமுறை நாட்களிலும் தன் ஊரை சுற்றியுள்ள குடிசைகளுக்குச் சென்று, மக்களை தேற்றியும் ஆறுதல்படுத்தியும் வந்தார். சிறந்த முறையில் சமூக சேவை செய்தார். 1918ம் ஆண்டு முதல் 1923ம் ஆண்டு வரையான காலத்தில், (Pontificia Universidad Católica de Chile) எனும் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பயின்றார். தொழிலாளர் சட்டம் சம்பந்தமான தேர்வுகள் எழுதினர். இடையே, கட்டாய இராணுவ சேவை சட்டம் அவரது கல்வியில் இடையூறாய் அமைந்தது. ஆனால், கட்டாய இராணுவ சேவையையும் முடித்த அவர், தமது கல்வியை தொடர்ந்தார்.

சட்டம் பயின்று பட்டம் பெற்ற ஹர்டடோ, வழக்கறிஞர் தொழில் செய்வதை விடுத்து, 1923ம் ஆண்டு இயேசு சபையில் (Jesuit novitiate) புகுமுக பயிற்சியில் சேர்ந்தார். 1925ம் ஆண்டு, இவர் "கொர்டோபா", "அர்ஜென்டினா" (Córdoba, Argentina) ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். அங்கே மனிதநேயம் பற்றின கல்வி கற்றார். 1927ம் ஆண்டு, தத்துவயியல் மற்றும் இறையியல் ஆகியன கற்பதற்காக "பார்சிலோனா" மற்றும் "ஸ்பெயின்" (Barcelona, Spai) ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். ஆனால், 1931ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டிருந்த இயேசுசபை துறவியர்களின் ஒடுக்குமுறை காரணத்தால், "பெல்ஜியம்" (Belgium) சென்று இறையியல் படிப்பை தொடர்ந்தார். 1933ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 24ம் தேதியன்று, அங்கேயே குருத்துவ அருட்பொழிவு பெற்ற ஹர்டடோ, 1935ம் ஆண்டு "கற்பித்தல்" மற்றும் "உளவியல்" (Pedagogy and Psychology) ஆகியவற்றில் முனைவர் பட்டம் வென்றார்.

ஆழ்ந்த பக்தியுள்ள ஹர்டடோ, தொழிலாளர் மற்றும் இளைஞர்களுக்காக களைப்பற்று பணியாற்றினார். அவரது பணிகளில் அறிவார்ந்த பிரதிபலிப்பும் நடைமுறை செயல்களும் இணைந்திருந்தன. மிகவும் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிமிக்க அவர், ஒரு கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவராக இருந்தார். இளைஞர்களும், வயதானவர்களும்; அறிவாளிகளும், உடலுழைப்பால் பணியாற்றும் தொழிலாளர்களுமாய், பல்வேறு மக்களை கிறிஸ்துவிலும் திருச்சபையிலும் மனம் மாற்றி அழைத்து வந்தார். எப்போதும் அவர் சமூக சிந்தனைகளை கொண்டு செயல்பட்டார். சமுதாயத்தை பற்றியும், ஏழைகளை பற்றியும் சில நூல்களை எழுதியுள்ளார்.

ஏழைகளின் நண்பரான ஆல்பர்ட்டோ, 1952ம் ஆண்டில் ஒருநாள், திடீரென ஏற்பட்ட அதீத வேதனை காரணமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கே, அவர் கணைய புற்றுநோயால் (Pancreatic Cancer) பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டார். நோயால் தாக்கப்பட்ட நாளிலிருந்து இறக்கும்வரை பொறுமையோடும், மகிழ்வோடும் தன் நோயை ஏற்றுக்கொண்டார். இவர் இறந்தாலும் ஏழைகளின் மனங்களில் உயிருடன் வாழ்கிறார். நோயுடனான சுருக்கமான போருக்குப் பிறகு, அவர் "சாண்டியாகோ" (Santiago) நகரில் ஆகஸ்ட் மாதம், பதினெட்டாம் நாள் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா