Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஆபிரகாம் ✠(St. Abraham of Smolensk)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 21)
✠ புனிதர் ஆபிரகாம் ✠(St. Abraham of Smolensk)
ரஷிய துறவி மற்றும் குரு :
(Russian Monk and Priest)

பிறப்பு : 1150
ஸ்மோலென்ஸ்க், ரஷியா
(Smolensk, Russia)

இறப்பு : 1222
ஸ்மோலென்ஸ்க், ரஷியா
(Smolensk, Russia)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம் : 1549
திருத்தந்தை மூன்றாம் பவுல்
(Pope Paul III)

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 21

பாதுகாவல் :
ஸ்மோலென்ஸ்க் (Smolensk)

புனிதர் ஆபிரகாம், ஒரு ரஷிய துறவியும் குருவும் (Russian Monk and Priest) ஆவார். "பொகாரோடிட்ஸ்காஜா" கான்வென்ட்டில் (Bogoroditzkaja convent) வசித்துவந்த இவர், அற்புதங்கள் புரிபவராக கருதப்பட்டார். விரிவான பிரசங்கங்களிலும், விவிலிய ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்த இவர், மங்கோலிய ரஷியாவுக்கு முந்தைய (Pre-Mongol Russia) முக்கிய பிரமுகராக கருதப்படுகிறார்.

இப்புனிதர், கி.பி. 1150ம் ஆண்டு அல்லது 1172ம் ஆண்டில் பிரபுக்களுக்கு பிறந்ததாக கூறப்பட்டது. சிறு வயதிலேயே அனாதையான இவர், இவ்வுலக வாழ்க்கையை கைவிட்டு, மிகவும் கடினமான மற்றும் எளிய ஆன்மீக வாழ்க்கையை தேர்வு செய்ய முடிவு செய்தார். அவர் மனதில் கண்டிப்பு மற்றும் போர்க்குணமிக்க ஒரு மனிதராக விவரிக்கப்படுகிறார். இறுதி நியாயதீர்ப்பினை தமது மனதில் இருத்தியிருந்த இவர், அதனை பிறர் மனதிலும் இருத்த முயற்சித்தார். நோயுற்றவர்களுக்காகவும், கஷ்டபட்டவர்களுக்காகவும் பணிபுரிந்த அவர், உண்மையிலேயே விசுவாசமுள்ளவர்களுள் பிரபலமடைந்திருந்தார். அவருடைய உதவிக்காகவும் ஆலோசனைக்காகவும் அவரிடம் வருகிறவர்களுடன் அவர் மென்மையாக நடந்துகொண்டார். அவரது வெற்றிகள்மீது பொறாமை கொண்டிருந்த பிற குருமார்களோடு அவர் குறைவாகவே பிரபலமடைந்திருந்தார். பிற குருக்களிடையே இருந்த இந்த பதற்றம், அவருக்கு எதிரான பல தார்மீக மற்றும் இறையியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. இதன்காரணமாக, உள்ளூர் ஆயர் இவர் மீது நடவடிக்கை எடுத்து, இவரை பிரசங்கிக்க தடை விதித்தார். இதன் காரணமாக, இவர்மீது எப்போதும் சந்தேகம் கொண்டிருந்த குருக்களைத் தவிர்த்து, இவருக்கு நண்பர்கள் எவரும் இல்லாது போயினர்.

பின்னர், இவருக்கு எதிரான வழக்கை மீண்டும் கையிலெடுத்த உள்ளூர் ஆயர், இவர் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் இவரை விடுவித்தார். பின்னர், அப்பகுதியிலுள்ள கடவுளின் அன்னையின் சிறிய மற்றும் வறிய பள்ளியின் மடாதிபதியாக அவரை நியமித்தார்.

தமது மீதமுள்ள வாழ்க்கையை அங்கேயே வாழ்ந்த இப்புனிதர், கி.பி. 1222ம் ஆண்டு, மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா