![]() 1) பழைய ஏற்பாடு என்றால் என்ன? கிறீஸ்து வருவதற்கு முன் எழுதப்பட்ட விவிலிய நூல்கள் 2) பழைய ஏற்பாட்டில் உள்ள மொத்த நூல்கள் எத்தனை? 46 3) பழைய ஏற்பாட்டு மொத்த நூல்கள் எப்பொழுது எழுதப்பட்டன? கி.மு.1500க்கும் கி.மு.63க்கும் இடையில் 4) பழைய ஏற்பாட்டின் முதல் நூல் எது ? தொடக்கநூல் 5) தொடக்க நூலின் ஆசிரியர் யார் ? மோயீசனின் பெயரில் உள்ளது 6) பழைய ஏற்பாட்டின் கடைசி நூல் எது ? 2 மக்கபேயர் 7) 2 மக்கபேயர் என்னும் நூலின் ஆசிரியர் யார் ? சீரேனைச் சேர்ந்த யாசோன். கிரேக்கமெரழியில் ஐந்து தொகுதிகளில் விரிவாக எழுதிய வரலாற்றினை சுருக்கமாக ஓர் ஆசிரியர் எழுதினார் எனக் கருதப்படுகிறது. 8) பழைய ஏற்பாடடு எந்த மொழியில் எழுதப்பட்டது ? எபிரேய மொழியில் 9) பழைய ஏற்பாட்டு நூல்கள் எப்படி பிரிக்கப்பட்டுள்ளது ? பெந்ததேயூக் (Pentateuch) வரலாற்று நூல்கள் (Histirical Books) ஞானாகம நூல்கள் (Wisdom Books) இறைவாக்கினரின் நூல்கள் (Books of Prophets) |