*நற்கருணை ஆண்டவரை நீண்ட நாட்களாக உட்கொள்ளாமல் இருப்பது.
* நல்ல பாவசங்கீர்தனம் செய்யாமல் நற்கருணை ஆண்டவரை உட்கொள்வது.
*நற்கருணை ஆண்டவருக்கு உரிய மரியாதை இல்லாமல் கரங்களில்
பெறுவது.மிகவும் மோசமான அவமரியாதையாக இடது கரங்களில் பெறுவது.
*நற்கருணை ஆண்டவரை பெற்றதும் இருதயத்தில் இருக்கும் இயேசுவிடம்
பேசாமல் புனிதர்களிடம் செபிப்பது. இயேசுவை கண்டுக்கொள்ளாமல்
அருகில் இருப்பவருடன் பேசுவது.
*இருதயத்தில் தங்கியிருக்கும் நற்கருணை ஆண்டவரை ஆராதிக்காமால்,
செபிக்காமல் வரவு செலவு கணக்கு வாசித்து, பாராட்டு, கைதட்டு
என்று கல்வாரி பலிபீடத்தை, விழா மேடையாக மாற்றுவது.
இந்த மாபெரும் நற்கருணை அவசங்கைகள் ஒவ்வொரு கத்தோலிக்க
குடும்பத்திற்கும்,பங்கிற்கும்,மறைமாவட்டத்திற்கும் சாபத்தையே
கொண்டுவரும்.
நற்கருணை ஆண்டவரை அவசங்கைப்படுத்த அலகை விரித்துள்ள வலையில்
சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருப்போம்.
நல்ல பாவசங்கீர்தனம் செய்து நற்கருணை ஆண்டவரை முழங்காலில்
நின்று நாவில் பெறுவோம்.குறைந்தது 10 நிமிடமாவது நம் இதயத்தில்
வந்து தங்கியிருக்கும் நற்கருணை ஆண்டவருடன் பேசுவோம்.
*வாசிப்போம்*
எவராவது *தகுதியற்ற நிலையில்* இந்த அப்பத்தை உண்டால் அல்லது
ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் *உடலுக்கும்
இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.* எனவே ஒவ்வொருவரும்
*தம்மையே சோதித்தறிந்த பின்பே* இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில்
பருக வேண்டும். ஏனெனில், *ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு
பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக்
கொள்கிறார்.* இதனால்தானே, உங்களில் பலர் வலுவற்றோராயும்
உடல் நலமற்றோராயும் இருக்கின்றனர்; மற்றும் பலர் இறந்தும்
விட்டனர். (1 கொரி: 11:27-30) |
|