இறையடியார்களின் பெயர்கள் பெரும்பாலும் அவர்களுடைய சில
வழிகாட்டும் சிறப்பம்சமான பணிகளாலும் குணங்களாலும் குறிக்கப்படும்.
கடவுளே பெயரிடும் போதும் இதே நிலைதான். யோசேப்பு எனும் பெயர்
சேர்த்தல் அல்லது வளர்தல் என்ற பொருள் கொண்டது. இறைவனின் தயவு
மற்றும் அருள் மட்டுமல்லாது மனிதர்களிடம் மதிப்பும் மரியாதையும்
பெற்று அது உலகுள்ளவரையில் அவருடைய இடைவிடா முன்னேற்றத்தின்
முன்னறிவிப்பாக இருந்தது. வளர்ந்துவரும் புனித யோசேப்பின் பக்திமுயற்சியில்
மகிழ்ந்திரு, மேலும், புனித யோசேப்பு மீது உனக்கிருக்கும் பக்தி
வளர்ந்திருக்கிறதா என்று உன்னையே கேட்டுக்கொள்.
துன்பம் நிறைந்த குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை புனித
யோசேப்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய சகோதரர்களால்
இழிவாக நடத்தப்பட்டு துன்புறுத்தப்பாட்டார். தொடக்கநூலில் நமது
குலமுதுவர் இவ்வாறே நடத்தப்பாட்டார் என்பதால் இதை நாம் எதிர்பார்க்க
வாய்ப்பிருக்கிறது. எல்லாவாற்றுக்கும் மேலாக, இவ்வுலக திருச்சபையில்
ஒரு உயர் பொறுப்பிலும், விண்ணகத்தில் அளவில்லா மகிமையிலும் இருக்கும்
ஒருவர் நமது ஆண்டவருடைய பாடுகளில் பங்கெடுத்து உறுதிப்படுத்தபட
வேண்டியிருந்தது. நாம் பரிசுத்த விவிலியத்தில் நாம் வாசிக்கிறது
போல புனித யோசோப்பின் குணம் துன்பத்தினால் தூய்மையாக்கபட்டதாய்
இருக்கிறது. அத்தகைய பொறுமை, கனிவு, ஆழ்ந்த சிந்தனை கொண்ட ஈகை
ஆகிய குணங்கள் உயர்ந்த விலையில்லாமல் கிடைப்பதில்லை.
யோசேப்பினுடைய வேலை தச்சுத் தொழில். அகில உலக திருச்சபையின் மிகப்பெரிய
பாதுகாவலர், கன்னி மரியாளின் கணவர், ஒரு தொழிலாளர் என்னும்
நினைவு கடின உடலுழைப்பின் மீது நமக்கு ஒரு மரியாதையைத் தரவேண்டும்.
இது நமது மேன்மைக்கு ஒவ்வாதது எனும் எந்த எண்ணமாயினும் இழிவானது,
கிறிஸ்தவம் அல்லாதது, வேறு சமயம் சார்ந்தது. எல்லா புனிதர்களும்
கடின உடலுழைப்பின் மீது அன்பு கொண்டிருந்தார்கள். தன்னிறைவு
கொண்ட எளிதான சுகபோக வாழ்வைவிட எவ்வளவு மேன்மேயானது இது! அத்தகைய
உடலுழைப்பு உன்னிடம் இருந்தால் கடவுளுக்கு நன்றி.
புனித யோசேப்பே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். |
|