Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 புனித சூசையப்பர்  

  மார்ச் 2: புனித யோசேப்பின் முன்னோர் வழிமரபும் பிறப்பும்  

புனித யோசேப்பு ஏழ்மையிலும் இகழ்ச்சியிலும் வாழ்ந்திருந்தாலும், அவர் ஒரு உயர்குல மூதாதையர் மரபிலிருந்து வந்தவர். அரசர்கள் மற்றும் பரிசுத்தவாங்களுடைய இரத்தம் அவரது நாளங்களில் ஓடியது. மேலும் இதற்குமேல் வேறென்ன? அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த புண்ணியங்களை மிக உயர்ந்த விதத்தில் அதை வைத்திருந்தவர்களைவிட அதிகமாகப் பெற்றிருந்தார்.

எனக்குள் இருக்கும் நன்மைத்தனங்கள் என்னுடைய பெற்றோர் மற்றும் முன்னோர்களிடமிருந்து நான் பெற்றது; இருப்பினும், ஆவார்களிடமிருந்து பெற்ற அந்த புண்ணியங்களை எந்த அளவிற்கு நான் பயன்படுத்தி இருக்கிறேன்! புனித யோசேப்பைப் போல அவர்களை விட சிறந்த ஒரு வாழ்வு வாழாமல் என்னைப் பார்க்கிலும் ஒரு சீரழிந்த பிள்ளையாக என் பெற்றோருக்கு இருந்திருக்கிறேன்.

அன்னை மரியாளுக்கு அடுத்தபடியான பெரிய புனிதரான புனித யோசேப்பு, மற்றெல்லா புனிதர்களின் சிறப்புரிமைகளையும் பெற்றிருந்தார். எனவே, புனித திருமுழுக்கு யோவானைப் போல தன்னுடைய தாயின் கருவிலேயே புனித யோசேப்பும் அவருடைய எல்லா பாவத்திலிருந்தும் தூய்மையாக்கப்பட்டார் என்று நாம் பணிவோடு நம்பலாம். அவர் கன்னி மரியாலின் கணவராக இருக்கப்போகிறவர், இயேசுவின் குடும்பத்தில் முதன்மையான இடத்தை நிரப்பப்போகிறவர், அதன் பிறகு அவர் முழு திருச்சபைக்கும் பாதுகாவலராக இருக்கப்போகிறவர், எனவே, இதன் பொருட்டு விண்ணக அரசின் வாரிசாகவும், கடவுளின் குழந்தையாகவும் இருக்கும் ஆரம்ப சிறப்புச் சலுகை அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பது மிகவும் பொருத்தமானதே. அவர்மீது பொழியப்பட்ட இந்த சிறப்புக்கு கடவுளுக்கு நன்றி.

புனித யோசேப்பு கடவுளின் பழைய மற்றும் புதிய அருளாட்சியின் இணைப்பாளர். வரவிருக்கும் நாளை அறிவிக்கும் முதல் விடியல். அவரது இளமையில் அவர் பழைய சட்டத்தைச் சார்ந்தவாராயிருந்தார். பின்னைய வாழ்வில் புதிய சட்டத்திற்கு உட்பட்டிருந்தார். விடியல் மேன்மையான பகலாய் பிரகாசிப்பதைப் போல, புனித யோசேப்பின் வாழ்வும் அழகாய் ஆரம்பித்து அட்டகாசமாய் தொடர்ந்து முன்னேறியது. என் வாழ்வின் வரலாறும் இவ்வாறு உள்ளதா? இறையன்பில் தொடர்ந்த முன்னேற்றத்தை நான் கொண்டிருக்கிறேனா?

புனித யோசேப்பே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்