Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        03  செப்டம்பர்  2018  
                                                           பொதுக்காலம் 22ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
இயேசுவைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை.

நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 119: 97-98. 99-100. 101-102 (பல்லவி: 97a )
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!

97 ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன். 98 என் எதிரிகளை விட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது. பல்லவி

99 எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளவனாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்; 100 முதியோர்களை விட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன். பல்லவி

101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். 102 உம் நீதி நெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( லூக் 4: 18 )

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30

அக்காலத்தில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப் பட்டது.

அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்."

பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், "மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, "கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.

மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது" என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

சிந்தனை

ஏற்றுக் கொள்ளப்படல்.

இன்றைக்கு தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்றப்படி இருப்போரைNயு ஏற்றுக் கொள்வேன், மற்றவாகளை வாழ விடுவதில்லை என்ற சித்தார்ந்தம் உள்ளதை பார்க்கின்றோம். இது அன்றே கிறிஸ்துவின் காலத்திலேயே தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப போதிக்காத கிறிஸ்துவை தொலைத்து விட தீர்மானித்தார்கள் என்பதை பார்க்கின்றோம். இது ஆரோக்கியமான சிந்தகையல்ல.

பலவேறுபட்ட வண்ணங்கள் தான் அழகு தருகின்றது. அதுபோல சிந்தனைகள் மாறுபட்டு இருந்தால் தான் வளர்ச்சி, வாழ்வு உண்டு. மாற்று சிந்தனை கொண்டவர்களின் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான் முன்னேற்றம் உண்டு. மாற்று சிந்தனையாளர்களை வரவிடாமல் தனக்கு தடையாய் உள்ளனர் என கருதி அவர்களை ஒழிக்க நினைக்கும் சமூகம் வளராது, முன்னேறாது என்பதுவே உண்மை. இதை புரிந்து கொண்டால் நலமே.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் எற்றுக்கொள்ளப்படுவதில்லை."

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, கடுமையான போட்டி நிலவியது. அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் சிறிதுகூட நாகரீகம் இல்லாமல் ஆபிரகாம் லிங்கனைப் பார்த்து கடுமையாகச் சாடினார்.

"உங்களை எனக்குத் தெரியாதா? நீங்கள் சாராயக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவராயிற்றே" என்றார் அவர். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆபிரகாம் லிங்கனை திகைப்போடு பார்த்தனர். ஆபிரகாம் லிங்கன் பொறுமையுடன் கூட்டத்தினரைப் பார்த்தார். பிறகு அமைதியாக அந்த வேட்பாளரைப் பார்த்து, "நண்பரே! நான் சாராயக் கடையில் வேலை பார்த்தது உண்மைதான், நான் டோக்கன் வழங்கும் கவுண்டரின் உட்பக்கம் நிற்கும்போது, நீங்கள் கவுண்டரின் முன்பக்கம் நின்றுகொண்டிருப்பீர்களே, அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்" என்றார்.

அதைக் கேட்டதும் எதிர்க்கட்சி வேட்பாளர் தலைகுனிய, மக்கள் பலத்த கைதட்டல் எழுப்பினர். தேர்தலில் ஆபிரகாம் லிங்கனையே வெற்றிபெறச் செய்து அமெரிக்காவின் அதிபர் ஆக்கினர்.

தேர்தலில் ஆபிரகாம் லிங்கனை எதிர்த்து நின்றவர் எப்படி அவரை, "உங்களை எனக்குத் தெரியாதா? நீங்கள் சாராயக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவராயிற்றே" என்று சொல்லி புறக்கணித்தாரோ, அவரை எள்ளி நகையாடினரோ, அது போன்று நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன் சொந்த ஊரில் போதிக்கும்போது அவருடைய ஊர்க்காரர்கள் அவரை, "இவர் யாரென்று தெரியாதா? இவர் யோசேப்பின் மகன்தானே?" என்றுசொல்லி அவரைப் புறக்கணிக்கின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களிடம், "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்கின்றார்.

இயேசுவின் சொந்த ஊர்க்காரர்கள் அவரைப் புறக்கணித்தற்குக் காரணமென்ன, இயேசு அந்தப் புறக்கணிப்புகளை எல்லாம் எப்படி எதிர்கொண்டு வெற்றிவீரராய் வளம்வந்தார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை அவருடைய சொந்த ஊர்காரர்கள் புறக்கணித்தற்கு முதலாவது காரணம் அவருடைய குடும்பப் பின்னணி. இயேசுவின் குடும்பம் வசதியான குடும்பம் கிடையாது. அவருடைய வளர்ப்புத் தந்தையோ தச்சுத் தொழில் செய்து, குடும்பத்தை நிர்வகித்து வந்தார். இப்படி இருக்கும்போது இயேசுவை அவருடைய சொந்த ஊர்க்காரர்கள் புறக்கணித்ததில் வியப்பேதும் இல்லை.

இயேசு புறக்கணிக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம், அவர் அவர்களுக்கு மிகவும் அறிமுகம் ஆனவர் என்பதால். இயேசு நாசரேத்தில் தான் வளர்ந்தார். அதனால் அங்கிருந்தவர்களுக்கு அவர் மிகவும் அறிமுகமாயிருப்பார். அப்படி இருக்கும்போது நமக்குத் தெரியாததையா இவர் பேசிவிட்டார் என்று அவர்கள் அவரை புறக்கணிக்கின்றார்கள். "அருகாமை ஆபத்தை விளைவிக்கும்" என்ற கூற்று ஒன்று உண்டு. அது இயேசுவுக்கு அப்படியே பொருந்துகின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இயேசு புறக்கணிக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அதுதான் இயேசு தன்னுடைய பணிவாழ்வு யூதர்களுக்கு மட்டும் கிடையாது எல்லா மக்களுக்கு உண்டு எனச் சொன்னது. இதனால் யூதர்கள் கடுஞ்சினம் கொண்டு அவரை மலையிலிருந்து கீழே தள்ளிவிடப் பார்க்கின்றார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே நடந்துசென்று அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகின்றார்.

யூதர்கள் புறவினத்தாரை நாயென, ஏன் நாயைவிடக் கீழானவர்களாக நினைத்தார்கள். இப்படி இருக்கும்போது ஆண்டவர் இயேசு, இறைவாக்கினர்களான எலியாவும் எலிசாவும் எப்படி புறவினத்தாருக்கு மத்தியில் பணிசெய்தார்களோ, அதுபோன்று தானும் செய்வேன் என்று சொன்னதால் அவர்மீது சீற்றம்கொள்கின்றார்கள், அவரைக் கொலை செய்யவும் துணிகின்றார்கள்.

இப்படி மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்களே என்று இயேசு கலங்கிவிடவில்லை. தன்னுடைய பணியைச் செய்யாமல் அவர் பின்வாங்கிவிடவும் இல்லை. இயேசு தொடர்ந்து இறையாட்சிப் பணியைச் செய்துவந்தார். இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், அவரைப் போன்று நாமும் நம்முடைய குடும்ப மற்றும் பொருளாதார இன்னும் சமூகப் பின்னணிகளுக்காகப் புறக்கணிக்கப்படலாம். இத்தகைய சூழ்நிலையில் நாம் மனம் தளர்ந்து போகாமல், முன்னேறிச் செல்லவேண்டும் என்பதற்கு இயேசுவே முன்னுதாரணமாக இருக்கின்றார்.

கவிஞன் ஒருவன் சொல்வான், "முடங்கிக் கிடந்தால் சிலந்தி வலைகூட உன்னைச் சிறைப்பிடிக்கும், மாறாக எழுந்து நடந்தால் இமயமலை கூட உனக்கு வழிகொடுக்கும்" என்று. எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை. ஆம், நாம் ஒருபோதும் மனம்தளர்ந்து போகக்கூடாது.

ஆகவே, இயேசுவின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி நடக்கக்கூடிய நாம், அவரைப் போன்று புறக்கணிப்புகளையும் கடந்து, தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இறையாட்சிப் பணியை மனவுறுதியோடு செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
Holy Mass Readings
=================================================================================
1st Reading: 1 Corinthians (2:1-5)
Paul was ill when he came to Corinth, yet his preaching was animated by the Holy Spirit

When I came to you, brethren, I did not come proclaiming to you the testimony of God in lofty words or wisdom. For I decided to know nothing among you except Jesus Christ and him crucified. And I was with you in weakness and in much fear and trembling; and my speech and my message were not in plausible words of wisdom, but in demonstration of the Spirit and of power, that your faith might not rest in the wisdom of men but in the power of God.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

Resp. Psalm (Ps 119)
R.: Lord, how I love your law

Lord, how I love your law.
It is always in my mind.
Your command makes me wiser than my foes,
for it is with me forever. (R./)

I have more insight than all my teachers
as I ponder your law..
I have more discernment than the elders,
because I keep your precepts. (R./)

On evil paths I refuse to walk,
that I may obey your word.
From your decrees I do not turn away,
for you have instructed me. (R./)

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

Gospel: Luke (4:16-30)
Jesus key sermon at Nazareth, affirming Isaiahs hope-filled vision

When Jesus came to Nazareth where he had been brought up, he went to the synagogue on the sabbath day, as was his custom. He stood up to read, and the scroll of the prophet Isaiah was given to him. He unrolled the scroll and found the place where it was written: The Spirit of the Lord is upon me, because he has anointed me to bring good news to the poor. He has sent me to proclaim release to the captives and recovery of sight to the blind, to let the oppressed go free, to procaim the year of the Lords favour. And he rolled up the scroll, gave it back to the attendant, and sat down. The eyes of all in the synagogue were fixed on him. Then he began to say to them, Today this scripture has been fulfilled in your hearing.

All spoke well of him and were amazed at the gracious words that came from his mouth. They said, Is not this Josephs son? He said to them, Doubtless you will quote to me this proverb, Doctor, cure yourself! And you will say, Do here also in your hometown the things that we have heard you did at Capernaum.' And he said, Truly I tell you, no prophet is accepted in the prophets hometown. But the truth is, there were many widows in Israel in the time of Elijah, when the heaven was shut up three years and six months, and there was a severe famine over all the land; yet Elijah was sent to none of them except to a widow at Zarephath in Sidon. There were also many lepers in Israel in the time of the prophet Elisha, and none of them was cleansed except Naaman the Syrian. When they heard this, all in the synagogue were filled with rage. They got up, drove him out of the town, and led him to the brow of the hill on which their town was built, so that they might hurl him off the cliff. But he passed through the midst of them and went on his way.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

Reflection
Gods promise to us

Two key moments are brought to our attention today, the first being the time of special grace during Jesus earthly ministry, the second being his hoped-for return at the end of time. To the Thessalonians, Paul offers the power of Christs resurrection as a pledge that they too have a future beyond this life. For if we believe that Jesus died and rose, God will bring forth with him from the dead those also who have fallen asleep believing in him.

If spiritual power derives from Christ, we need not be discouraged, even if at times we live in weakness and fear. Pauls letters to the Corinthians reveal the intensity with which he argued. What kept him going was a personal sense of being consecrated to ministry, and he felt the guiding presence of the Spirit. Therefore he was open to new inspiration, and even to changes of his mood. After doing his best, Paul could calmly leave the results with the power of God.

Today we begin reading from Lukes gospel, with the account of Jesus opening address at Nazareth. With Luke we will follow the journeys of Jesus through all the remaining weekdays in ordinary time, from this 22nd week till the 34th. In his home town Jesus announces, Today this Scripture is fulfilled in your hearing. Later he points out that the kingdom of God is not to be identified with a point of time, nor is it here or there. For the deepest truth is that the reign of God is already in your midst (Lk 17:21). This inaugural sermon at Nazareth combines some of the major themes of Lukes gospel: concern for the poor; the peoples amazement; the outreach to Gentiles; the role of the Spirit; Jesus as prophet; and finally Jesus rejection outside the city.

Today this Scripture passage is fulfilled in your hearing. The power of the resurrection is already being felt. The jubilee year of favour announced in Isaiah 61, which leads up to the new Jerusalem (Isa 62) and the new heaven and new earth (Isa 65:17-25), has already begun with Jesus, who proclaims the wonder and the joy of the jubilee. Such happiness cannot be possessed selfishly. It will be lost if it is not shared. We must be willing to share the same messianic fulfillment with widows and foreigners, with outcasts and lepers. Jesus cannot rise to new life unless the glad tidings be sent to all the poor and neglected of the world.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


Reflection
The aims of Jesus

When he read from the scroll of Isaiah and then sat down to comment on what was read, Jesus indentified with the prophet who was sent to bring good news to the poor, to proclaim liberty to captives and new sight to the blind, and set the downtrodden free. He goes on to identify himself with two other prophets, Elijah and Elisha, who ministered to non-Israelites, a hungry widow from Sidon and a leper from Syria. Jesus was saying to the people of Nazareth that he had come for those in greatest need, regardless of who they were or where they were from.

Oddly, hearing him claim this generous vision as his own mission made the people of Nazareth angry. Since Jesus was one of their own they expected special treatment from him. But the good news is that Jesus has come for all mankind. If he has any favouritism it is towards those who are broken in body, mind, or spirit. The Lord is constantly reaching out to us in our brokenness, in our need and our suffering. All he asks is that we receive him as he is, on his own terms, which the people of Nazareth could not do. The Lord is always close to all of us; it is our need, our suffering, whatever form it takes, which can bring us close to him.



--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!