Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                              01 நவெம்பர்  
                                                   புனிதர் அனைவர் பெருவிழா

முதல் வாசக முன்னுரை

திருவெளிப்பாடு 7: 2-4, 9-14

இறப்புக்குப்பின் நிலைவாழ்வு ஒன்று உண்டு என்பது கிறிஸ்தவத்தின் தொன்மை வாய்ந்த நம்பிக்கைகளுள் ஒன்றாகும். அதன்படி உலக வாழ்வில் மேற் கொள்ளப்பட்ட செயல்களின்படி ஒருவருக்குத் தீர்ப்பு வழங்கப்படும். விண்ணகக் கொடையை உடனடியாகப் பெறுவது என்பது எதிர்பார்ப்பாகும். அதன்படி புதுவாழ்வு பெற்ற புனிதர் கூட்டத்தை தம் காட்சியில் கண்ட திருத்தூதர் யோவான் விவரிப்பதை எடுத்துக்கூறும் முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

முதல் வாசகம்


பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.


திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14

கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, " எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்" என்று அவர்களிடம் கூறினார்.

முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம். இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

அவர்கள், "அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது" என்று உரத்த குரலில் பாடினார்கள். அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். "ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்" என்று பாடினார்கள்.

மூப்பர்களுள் ஒருவர், "வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?" என்று என்னை வினவினார். நான் அவரிடம், " என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்" என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: " இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
பதிலுரைப் பாடல் - திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி
=====================================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================================
இரண்டாம் வாசக முன்னுரை

01 யோவான் 3: 1-3

வானகத் தந்தை தூயவராய் இருக்கிறார். எனவேதான் விண்ணக தூதரணி அவரை எப்போதும் "தூயவர்" எனப் புகழ்ந்தேத்துகிறது. நமது தந்தை எப்படியோ நாமும் அப்படியே ருக்க வேண்டும். அப்போது தான் வானகத் தந்தையின் உரிமைப் பிள்ளைகள் நாம் என்ற பேறு நமக்கு என்றும் நிலைக்கும். தொடக்க முதல் முடிவு வரை தூய்மையயே நமது நிலைப்பாடு என வாழத் தூண்டும் இன்றைய இரண்டாவது வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்


கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.


திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3

சகோதரர் சகோதரிகளே! நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே! இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 28

அல்லேலூயா! அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
======================================================================================
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர்.

அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

" ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அனைத்துப் புனிதர்களின் விழா

ுனிதர்கள் - தூயவர்கள் - வானதூதர்களைப் போன்று விண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள் அல்ல, மாறாக அவர்கள் நம்மைப் போன்று மண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள்; சாதாரண மனிதர்கள். அப்படியிருந்தாலும் தங்களுடைய வாழ்வால், பணியால் புனிதர்களாக உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இன்றைய நாளில் நாம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம். ஆம், இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களுடைய விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்த புனிதர்களின் எண்ணிக்கை வெறும் 365 மட்டுமே, ஏராளமான புனிதர்கள் இருக்கிறார்கள். திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் படிப்பது போன்று, " யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான புனிதர்கள் இருக்கிறார்கள்" (திவெ 7: 9). எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து பார்ப்பதற்குத்தான் திருச்சபை ஒருநாளை ஒதுக்கி, அவர்களைச் சிறப்பு செய்கிறது.

முதலில் அனைத்துப் புனிதர்களின் விழா தோன்றியதன் வரலாற்றுப் பின்னணியை சிந்தித்துப் பார்த்து, அதன்பின் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இவ்விழா கொண்டாடப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது நான்காம் நூற்றாண்டில் "கிறிஸ்த மதத்தைப் பின்பற்றியதற்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாப்பட்டதற்கான ஒரு சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனாலும் அது சிறிய அளவில்தான் நடந்திருக்கின்றது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை நான்காம் போனிபெஸ்தான் (608 -615) ரோம் நகரில் இருந்த "பந்தேயோன" என்று அழைக்கப்படுகின்ற அனைத்துக் கடவுள்களின் கோவிலை இடித்துத் தள்ளி, அந்த இடத்தில் கிறிஸ்துவுக்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களின் நினைவாக ஆலயம் ஒன்று எழுப்பினார். அன்றிலிருந்துதான் அனைத்துப் புனிதர்களின் விழா படிப்படியாக வளர்ந்தது.

கி.பி 993 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. இப்படிதான் அனைத்துப் புனிதர்களின் விழா நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இவ்விழா புனிதர்கள் - தூயவர்கள் - ஆகியோரின் எடுத்துகாட்டான வாழ்வை நினைவுகூர்ந்து பார்க்க நமக்கு அழைப்புத் தருகின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 13:7 ல் வாசிக்கின்றோம், உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்" என்று. ஆம், இன்றைய நாளில் நாம் அவர்களை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்.

இரண்டாவதாக புனிதர்கள் - தூயவர்கள் - எப்போதும் இறைவனின் திருமுன் நின்று கொண்டு எப்போதும் நமக்காக பரிந்துபேசுபவர்களாக இருக்கிறார்கள். எனவே அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.

மூன்றாவதாக புனிதர்களைப் போன்று நாமும் நல்வழியில் நடந்து புனித நிலையை அடையவேண்டும். அதனைத்தான் இவ்விழா நமக்கு சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. தூய அகுஸ்தினார் கூறுவார், " அவனும் அவளும் புனிதராக, புனிதையாக மாறும்போது, ஏன் உன்னால் முடியாது?" என்று. ஆம், நம்மாலும் புனித நிலையை அடையலாம். அதற்கான வழிமுறைகளைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எட்டு விதமான பேறுபெற்றவர்களைப் பற்றி பேசுகின்றார். நாம் ஏழையரின் உள்ளம் கொண்டவராக, இயேசுவுக்காக துயருறுவோராக, கனிவுடையோராக..... இருக்கின்றபோது நம்மாலும் புனித நிலையை அடையலாம் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது. நாம் இயேசு குறிப்பிடுகின்ற வழிமுறைகளின்படி வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஆசிரியரிடம் பாடம் கற்ற முன்னாள் மாணவன் ஒருவன் அந்த ஆசிரியரை சந்திக்கச் சென்றான். அவர் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு ஒரு சாதாரண குடிசையில் வாழ்ந்துவந்தார். இதைப் பார்த்த மாணவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. " எவ்வளவு பெரிய ஆசிரியர் நீங்கள், எத்தனையோ மனிதர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றியவர்கள் நீங்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சாதாரண குடிசையில் வாழ்வதா? என்று கேட்டார். அதற்கு அவர், " இந்த உலகத்தில் நான் ஒரு பயணிதான்" என்றார்.

பின்னர் அவர் மேலே சுட்டிக்காட்டி, " விண்ணகம் என்னுடைய (நம்முடைய) நிலையான வீடு. அங்கே வாழ்வதற்குத்தான் நான் என்னுடைய செல்வத்தை எல்லாம் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

ஆம், இந்த மண்ணுலகில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நாம் செய்யும் உதவியாவும் விண்ணுலகில் சேர்க்கும் செல்வமாகும். அப்படிப்பட்ட வாழ்வு வாழும்போது நாமும் தூயவர்கள் ஆகின்றோம்.

ஆகவே அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி நாமும் தூயவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை -2   (நவம்பர் 01)
=================================================================================
புனிதர் அனைவரின் பெருவிழா

இன்று திருச்சபையானது புனிதர் அனைவரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. " ஒவ்வொரு புனிதரும் தங்கள் மனநிலை ஆளுமைத்தன்மையிலும், ஆன்மீக தனிவரங்களிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நின்றாலும் அனைவரும் இயேசுவின் அன்பின் பதிப்புக்களாகவும், சிலுவையின் சாட்சிகளாகவும் ஒன்றிணைந்து நிற்பார்கள்" என்பார் நமது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள்.

மேலும் இறையடியார் ஒருவர் புனிதர் எனப்படுபவர் யார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் தருவார், " புனிதர்கள் 1)மனிதராகப் பிறந்தவர்கள், 2) இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் திகழ்ந்தவர்கள், 3) தங்களது சான்று வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள், 4) என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், 5) தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள், 6) தங்கள் உயிரையே இறைமாட்சிக்காகக் கையளித்தவர்கள்" என்று.

ஆம், திருச்சபை பல்வேறு இறையடியார்களை, இறைவழி வாழ்ந்தவர்களைப் புனிதர்களாக அங்கிகரித்திருந்தாலும், இன்னும் எத்தனையோ மனிதர்கள் கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்திருக்கிறார்கள். எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து விழா கொண்டாட வேண்டும் என்பதற்குதான் திருச்சபை நவம்பர் ஒன்றாம் தேதியை புனிதர்கள் அனைவரின் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.

அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார்.

முன்னதாக கி.பி. 600 ஆம் ஆண்டில் உரோமையில் இருந்த அனைவரும் கிறிஸ்த மதத்தைத் தழுவினார்கள். இதனால் எல்லாக் கடவுளது சிலைகளும் வைக்கப்பட்டிருந்த பான்தேயேன் கோவிலானது அன்னை மரியாளுக்கும், அனைத்துப் புனிதர்களுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது. அக்கோவிலில் ஏற்கனவே இருந்த வேற்று தெய்வக் கடவுளின் சிலைகளானது திருந்தந்தை நான்காம் போனிபஸ் அவர்களின் உத்தரவின் பேரில் அடித்து நொறுக்கப்பட்டது. இப்பெருவிழா நாளில் பெந்தேயன் கோவிலுக்குச் சென்று மக்கள் யாவரும் இறையருளைப் பெற்றுச் செல்வார்கள்.

அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் திருச்சபையும், இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் "எல்லா இனத்தைச் சேர்ந்த, மொழியைப் பேசக்கூடிய எண்ணிக்கையில் அடங்காத மக்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டுக்கும் இடையில் இருந்து இறைவனை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்" என்று படிக்கின்றோம். இவர்கள் யார்?. இவர்கள் வேறு யாருமல்ல, இறைவழியில் நடந்து கடவுளையும், அயலாரையும் அன்பு செய்த தூயவர்கள்- புனிதர்கள் - கடவுளின்மக்கள் -ஆவர்.

இவர்களைப் போன்று இறைவனின் திருமுன் நிற்பததற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு தந்த மலைப்பொழிவை யாராரெல்லாம் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்களோ, அவர்களே இறைவன் தரும் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறமுடியும். எளிய உள்ளத்தோராய், தூய இதயத்தோராய், நீதியின்மீது தாகமுடையோராய், அமைதிக்காக உழைப்போராய், கனிவுடையோறாய், நீதிக்காக துன்பங்களை அனுபவிப்பவராய், இன்னும் பல்வேறு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழுகின்றபோது இறைவன் தரும் விண்ணரசு நமக்கு எப்போதும் உண்டு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இல்லை.

நாம் நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் போதனைகளின் படி வாழ்கின்றோமா? நம்மோடு வாழும் எளியோரை, இறைவனை அன்பு செய்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அரசியும், புனிதையுமான புனித ஹங்கேரி நகர எலிசபெத். இவர் 1207 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டு அரசர் அந்திரேயாவுக்கு மகளாகப் பிறந்தவர். 1221 ஆம் லண்ட்ரவேயின் அரசன் நான்காம் லூயி மன்னனுக்கு தன்னுடைய பதிமூன்றாம் வயதிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

அரசியான எலிசபெத் தான் அரசி என்றெல்லாம் பாராது ஏழைகள், வறியவர் யாவருக்கும் உதவி செய்துவந்தார். ஒருமுறை நாட்டில் கொள்ளை நோய் பரவியபோது ஏராளமான மக்கள் மடிந்துபோனார்கள். அத்தகைய வேளையில் அரசி துன்புறக்கூடிய மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்தார். இது அவளுடைய அத்தைக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவளது அத்தை, அதாவது மன்னன் லூயின் தாயார் தன்னுடைய மகனிடம் மருமகளைப் பற்றிக் குறைகூறினாள். ஆனால் மன்னனோ தன் மனைவியின்மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்ததால் அதனை அவன் கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் அரசி எலிசபெத் தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தொழுநோயாளி ஒருவரை அழைத்து வந்து, தன்னுடைய வீட்டில்வைத்து சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவளுடைய அத்தை, தன்னுடைய மகனிடம் சென்று, எல்லாவற்றையும் முறையிட்டாள். உடனே அவன், தன் தாயோடு வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அரசியின் அறைக்கு வந்தான். அங்கே படுக்கையில் இயேசுவின் உருவில் தொழுநோயாளர் படுத்துக் கிடந்தார். அவருக்கு அரசி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்னரின் தாயார், தன்னுடைய மருமகளின் காலில் விழுந்து "அவளைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டார். அதன்பிறகு தன்னுடைய மருமகள் பிறர் நலப்பணிகள் புரிவதற்கு அவர் உறுதுணையாக இருந்து வந்தார்.

அயலாருக்குச் செய்யும் சேவை யாவும் ஆண்டவருக்கு செய்யக்கூடியவை என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. புனிதர்கள் என்பவர் வேறு யாருமல்ல, அவர்கள் மனிதரை அன்பு செய்து, அவர்களுக்கு சேவைசெய்ததன் வழியாக இறைவனை அடைந்தவர்கள்.

ஆகையில் அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் புனிதர்களைப் போன்று இயேசு நமக்குப் போதித்த விழுமியங்களின் படி - மலைப்பொழிவின் படி - வாழ்வோம். இயேசுவுக்கு நமது வாழ்வால், வார்த்தையால் சான்று பகர்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்
.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அஞ்சா நெஞ்சத்தினராய் வாழ்வோம்!

ஜவஹர்லால் நேரு, அஸ்ஸாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரம். ஒருநாள் அவர் ஓர் ஊரில் பிரச்சாரம் செய்வதற்காக தன்னுடைய தொண்டர்களோடு இரயிலில் பயணம் செய்தார். அவர் போகவேண்டிய, குறிப்பிட்ட அந்த ஊரை இரயில் அடைந்ததும், அதிலிருந்து இறங்க நேரு முற்பட்டார். ஆனால் அந்த இரயில் நிலையத்தில் திரண்டிருந்த மக்கள், தங்களுடைய கைகளில் கறுப்புக் கொடியை ஏந்திக்கொண்டு " நேரு ஒழிக" " நேரு ஒழிக" என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்த சத்தத்தில் ஒருவிதமான கோபவெறி தென்பட்டது.

இதைப் பார்த்துவிட்டு நேருவோடு இரயிலில் வந்த அவருடைய தொண்டர்கள், " ஐயா! தயவுசெய்து நீங்கள் இரயிலிலிருந்து இறங்கவேண்டும். இறங்கினால் உங்களுடைய உயிருக்குப் பாதுகாப்பில்லை" என்று எச்சரித்தார்கள். ஆனால் நேருவோ எதற்கும் பயப்படாமல் இரயிலிலிருந்து இறங்கினார். இறங்கியவர் நேராக கலகக்காரர்களின் தலைவரிடம் சென்று, " உங்களுடைய கருத்தைச் சொல்வதற்கு உங்களுக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கின்றதோ, அதே அளவுக்கு என்னுடைய கருத்தை எடுத்துச் சொல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது... உங்களுடைய கோரிக்கை என்ன என்பதை என்னிடத்தில் எழுத்துப் பூர்வமாக எழுதிக்கொடுங்கள். அதில் நியாமானத்தை நிறைவேற்றித் தருகின்றேன்" என்றார்.

நேரு இவ்வளவு துணிச்சலாக பேசுவதைப் பார்த்துவிட்டு அவரோடு வந்த தொண்டர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமே, கலகக்காரர்கள் தன்னை ஏதாவது செய்துவிடுவார்களே என்றெல்லாம் நேரு பயப்படமால், அஞ்சா நெஞ்சத்தோடும் மிகத் துணிச்சலாகவும் அவர் செயல்பட்டது நம்முடைய கவனத்திற்கு உரியது.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் சிலர் இயேசுவிடம் வந்து, " ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான். அதனால் நீர் இங்கிருந்து போய்விடும்" என்கின்றனர். இயேசுவோ அவர்களிடம், " இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்" என்கின்றார்.

திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் வாக்கை மிகத் துணிச்சலாய் அறிவித்ததால் அவர் கொல்லப்பட்டார், நீரும் அவ்வாறே செய்வதால் உம்மை ஏரோது மன்னன் கொல்வதற்கு சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருக்கிறான் என்பதாக பரிசேயர்கள் இயேசுவிடத்தில் வந்து கூறுகின்றார்கள். பரிசேயர்கள் இயேசுவிடம் எப்போது குற்றம் குறைதானே கண்டுபிடித்துக்கொண்டிருப்பார்கள், இங்கே அவர்கள் இயேசுவின்மீது அக்கறையோடு பேசுகிறார்களே? என்று கேள்வி எழலாம். ஆம். பரிசேயர்களிலும் நிக்கதேமைப் போன்று, அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பைப் போன்று ஒருசில நல்லவர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் இயேசுவின்மீது அக்கறைகொண்டு, அவருக்கு ஏரோது மன்னன் கொலைவெறியோடு அலைவதையும் அவரிடத்தில் எடுத்துச் சொல்கிறார்கள்.

ஏரோதின் சதித்திட்டத்தைக் குறித்து தன்மீது அக்கறை கொண்ட பரிசேயர்கள் இவ்வாறு சொல்லிவிட்டார்களே என்பதற்காக இயேசு " தன்னுடைய கடையைக் காலிபண்ணிவிட்டு" வேறொரு ஊருக்குப் போய்விடவில்லை. மாறாக இயேசு அவர்களிடம், தான் செய்து முடிக்கவேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. மூன்றாம் நாளில் பணி நிறைவுபெறும். இதனை அந்த நரியிடம் போய்ச் சொல்லுங்கள் என்கின்றார் இயேசு.

இயேசு, ஏரோது மன்னனைக் கண்டும் பயப்படவில்லை. மாறாக அவனை " நரி" என அழைக்கின்றார். நரி எத்துணை தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்தது என்பதை நாம் அறிவோம். அத்தகைய பெயரால் இயேசு அவனை அழைக்கின்றார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய பணியை தொடர்ந்து செய்கின்றார். இயேசுவிடம் இருந்த இந்த மனதிடமும் அஞ்சா நெஞ்சமும் உறுதியும்தான் நாம் இங்கே கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஒரு சாதாரண அச்சுறுத்தலோ, மிரட்டலுக்கோ பயந்துபோய், நம்முடைய பணியிலிருந்து பின்வாங்கக் கூடிய நாம், எத்தனையோ சவால்களுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் இயேசு தன்னுடைய பணியை தொடர்ந்து செய்தார் என்பது வியந்து பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இந்த உலகம் பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிபவர்களை ஒருபோதும் நினைத்துப் பார்ப்பது கிடையாது. அதனை மனவுறுதியோடு எதிர்த்து நிற்பவர்களையும் அந்தப் பிரச்சனையையே வெற்றிக்கான ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தி முன்வருபவர்களையும்தான் நினைவுகூரும். நாம் பிரச்சனைக் கண்டு ஓடி ஒளிந்துவிடாமல், இயேசுவைப் போன்று மனவுறுதியோடு எதிர்த்து, வெற்றிகாண்பதுதான் சாலச் சிறந்த ஒரு செயலாகும்.

மேலும் பிரச்சனைகளையும் சவால்களையும் நாம் மட்டுமே தனியாக எதிர்த்து நின்று போராடவேண்டும் என்றில்லை. நம்மோடு இருக்கின்ற இறைவனின் துணைகொண்டு நாம் அதனை எதிர்த்துப் போராடலாம். அவ்வாறு நாம் இறைவனின் துணைகொண்டு பிரச்சனைகளை எதிர்த்து நின்றோம் என்றால், வரலாறு நிச்சயம் நம்மை நினைவுகூரும்.

ஆகவே, எத்தகைய சூழ்நிலையிலும் எதிர்ப்பைக் கண்டு பின்வாங்காமல், தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை -4   (நவம்பர் 01)
=================================================================================
நிகழ்வு

கி.மு.முதலாம் நூற்றாண்டில் உரோமையை மார்கஸ் அக்ரிப்பா (கி.மு. 63- கி.மு. 12) என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் எல்லா தெய்வங்களுடைய சிலைகளையும் வைப்பதற்கு என்று பாந்தயோன் என்ற ஆலயத்தைக் கட்டி எழுப்பினான். இவ்வாலயமானது கி.பி. 126 ஆம் ஆண்டு மீண்டுமாகக் கட்டி எழுப்பப்பட்டது. 4 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் உரோமையின் அரச மதமாக மாறியபிறகு, அதன்பிறகு வந்த போகஸ் என்ற மன்னன் பந்தயோன் என்ற அந்த ஆலயத்தை திருச்சபைத் தந்துவிட்டான். அப்போது திருச்சபையின் தலைவராக திருத்தந்தையாக - இருந்த ஆறாம் போனிபேஸ் என்பவர் எல்லா தெய்வங்களுக்குமாக இருந்த பந்தயோன் ஆலயத்தை அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றினார். அன்றிலிருந்துதான் அனைத்துப் புனிதர்களின் விழாவானது அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் புனிதர்கள் அனைவருடைய விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். திருச்சபை ஒவ்வொருநாளும் ஒரு புனிதரை நினைவுகூறும்போது, எதற்காக அனைத்துப் புனிதர்களின் விழா என்று தனியாக ஒரு நாளை ஒதுக்கி புனிதர்களுக்கு விழாக் கொண்டாடவேண்டும் என்றும் நினைக்கலாம். ஆனால் திருவெளிப்பாடு நூலில், "யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும்திரளான மக்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சேர்ந்தவர்கள் அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டு, கையில் குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய், "அரியனையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகின்றது" என்று உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் 365 நாட்களில் நினைவு கூர்ந்து கொண்டாடுவது என்பது இயலாத காரியமாகும்.
எனவேதான் திருச்சபை, இந்த மண்ணுலகில் கடவுளுக்காக உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த தூயவர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடுகின்றது. அவ்விழாதான் 'அனைத்துப் புனிதர்கள் விழா' என்று கொண்டாடப் படுகின்றது.

முதலில் புனிதர்கள் என்பவர் யார்?, எதற்காக நாம் அவர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்துவிட்டு, இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை சற்று அறிந்துகொள்வோம். புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவர்கள் அவர்கள்தான் புனிதர்கள் தூயவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். புனிதர்களை எதற்காக நாம் நினைவுகூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு விவிலியத்திலிருந்தே பதில் இருக்கின்றது. "உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்" (எபி 13:7) என்கிறார் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர். ஆம், நமக்கு இறைவாக்கைப் போதித்த புனிதர்களை நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவர்களுடைய வழியில் நடக்கவேண்டும். அதைத்தான் திருச்சபை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

இரண்டாம் வத்திகான் சங்கமானது "தூயவர்களின் வாழ்விலே மாதிரியையும் அவர்களின் ஒன்றிப்பிலே தோழமையையும் அவர்கள் பரிந்து பேசுவதால் உதவியையும் அவர்களிடமிருந்து நாம் தேடுகின்றோம்" என்கிறது. ஆகவே, புனிதர்கள் அல்லது தூயவர்களின் விழாவைக் கொண்டாடுவதால் பயன்பெறப் போவது என்னமோ நாம்தான் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எதற்காக அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடுகின்றோம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை இப்போது உணர்ந்துகொள்வோம். புண்ணிய வாழ்வு அல்லது சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் 155- 156 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கமிர்னா நகரின் ஆயராக இருந்த போலிக்கார்ப்பின் எலும்புகளை எடுத்து, அதனை பத்திரமாக வைத்து இறைமக்கள் அவருடைய விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சிப்ரியான் என்பவரும் புனிதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி இருந்த வழக்கம் திருத்தந்தை ஆறாம் போனிபேஸ் காலத்தில் பந்தயோன் ஆலயம் அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றப்பட்டபிறகு அனைத்துப் புனிதர்களின் விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. சாட்சிய வாழ்வு

புனிதர்கள் அசாதரணமான காரியங்களைச் செய்துவிடவில்லை. மாறாக அவர்கள் சாதரணமான காரியங்களை அசாதாரணமாக செய்தார்கள். அதனால்தான் அவர்கள் இன்றைக்கு நம்மால் புனிதர்களாக நினைவுகூரப்படுகின்றார்கள். எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தால் நாம் தூயவர்களாக மாறலாம் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு விடையாக இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்கும் நற்செய்தி வாசகமானது அமைகின்றது. ஏழையரின் உள்ளத்தவராக, துயறுருபவராக, கனிவுடையவராக, நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டவராக, இரக்கமுடையவராக, தூய்மையான உள்ளத்தோராக, அமைதியை ஏற்படுத்துவோராக, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோராக நாம் வாழும்போது உண்மையிலே நாம் தூயவராக இருக்கின்றோம் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்கும் இத்தகைய போதனைகளின் படி நாம் வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அன்னை தெரசாவின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு இது. ஒருநாள் இலண்டன் தெருக்களில் அன்னை தெரசா நடந்துகொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் மிகவும் மோசமாகவும் கோரமாகவும் ஒருவர் இருந்தார். அவர் அருகே சென்ற அன்னை தெரசா, அவரது கையை எடுத்து குலுக்கியபடியே கேட்டார், "எப்படி இருகிறீர்கள்?" என்று. அதற்கு அம்மனிதர் அன்னையின் கையில் இருந்த இளஞ்சூட்டை உணர்ந்தவராய், "அம்மா... நீண்ட நாட்கள் கழித்து, இப்போதுதான் ஓர் இளஞ்சூடான, இனிமையான அன்பை ஒரு மனிதரின் கரங்களின் மூலமாக உணர்கின்றேன்" என்றார்.

அன்னை தெரசா செய்தது பெரிய காரியமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த ஒரு சாதாரண அன்புச் செயல் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அந்த மனிதரின் உள்ளத்தில் அன்பை, மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. நாம் அன்பினால் உந்தப்பட்டு பெரிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதில்லை, சாதாரண காரியங்களைச் செய்தாலும் போதும். அது நம்மை விண்ணகத்தில் உள்ள புனிதர்கள் கூட்டத்தில் சேர்த்துவிடும். இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.

ஆகவே, புனிதர்களைப் போன்று நாம் செய்யக்கூடிய எளிய, அன்புச் செயல்களால் இயேசுவுக்கு சான்று பகர்வோம், அதன்வழியாக விண்ணகத் திருக்கூட்டத்தில் இடம்பெறும் பாக்கியம் பெறுவோம்.

2. பரிந்து பேசுதல்

புனிதர்கள் இறைவனின் திருமுன் இருப்பதால் அவர்கள் எப்போதும் நமக்காக பரிந்து பேசுகிறார்கள் என நாம் நம்புகிறோம். இத்தகைய ஒரு பணியைச் செய்துவரும் புனிதர்களை நமக்குத் தந்திருக்கும் இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். அதே நேரத்தில் புனிதர்களைப் போன்று கடவுளிடத்தில் பரிந்து பேசும் வல்லமை நமக்கு இல்லாவிட்டாலும், நாம் ஒருவர் மற்றவர்க்காக ஜெபிக்கலாம். 'நம்மோடு இருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது இறைவன் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வர்' என்பது ஆழமான உண்மை. ஆகவே, புனிதர்களின் பரிந்துரையின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நாம், ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்போம்.

'அவனும் அவளும் புனிதராக மாறும்போது, என்னால் ஏன் புனிதராக மாறமுடியாது?" என்பார் தூய அகுஸ்தினார். அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இன்று, நாமும் புனிதர்களாக மாற இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளின் படி வாழ முயற்சிப்போம். நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளிடத்தில் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டுவாழ்வோம். அதன்வழியாக புனிதர்கள் கூட்டத்தில் இடம்பெறும் பேறுபெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை -5    அனைத்துப் புனிதர்களின் விழா (நவம்பர் 01)
=================================================================================
மறையுரைச் சிந்தனை (நவம்பர் 01)

இன்று திருச்சபையானது புனிதர் அனைவரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. "ஒவ்வொரு புனிதரும் தங்கள் மனநிலை ஆளுமைத்தன்மையிலும், ஆன்மீக தனிவரங்களிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நின்றாலும் அனைவரும் இயேசுவின் அன்பின் பதிப்புக்களாகவும், சிலுவையின் சாட்சிகளாகவும் ஒன்றிணைந்து நிற்பார்கள்" என்பார் நமது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள்.

மேலும் இறையடியார் ஒருவர் புனிதர் எனப்படுபவர் யார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் தருவார், "புனிதர்கள் 1)மனிதராகப் பிறந்தவர்கள், 2) இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் திகழ்ந்தவர்கள், 3) தங்களது சான்று வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள், 4) என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், 5) தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள், 6) தங்கள் உயிரையே இறைமாட்சிக்காகக் கையளித்தவர்கள்" என்று.

ஆம், திருச்சபை பல்வேறு இறையடியார்களை, இறைவழி வாழ்ந்தவர்களைப் புனிதர்களாக அங்கிகரித்திருந்தாலும், இன்னும் எத்தனையோ மனிதர்கள் கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்திருக்கிறார்கள். எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து விழா கொண்டாட வேண்டும் என்பதற்குதான் திருச்சபை நவம்பர் ஒன்றாம் தேதியை புனிதர்கள் அனைவரின் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.

அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார்.

முன்னதாக கி.பி. 600 ஆம் ஆண்டில் உரோமையில் இருந்த அனைவரும் கிறிஸ்த மதத்தைத் தழுவினார்கள். இதனால் எல்லாக் கடவுளது சிலைகளும் வைக்கப்பட்டிருந்த பான்தேயேன் கோவிலானது அன்னை மரியாளுக்கும், அனைத்துப் புனிதர்களுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது. அக்கோவிலில் ஏற்கனவே இருந்த வேற்று தெய்வக் கடவுளின் சிலைகளானது திருந்தந்தை நான்காம் போனிபஸ் அவர்களின் உத்தரவின் பேரில் அடித்து நொறுக்கப்பட்டது. இப்பெருவிழா நாளில் பெந்தேயன் கோவிலுக்குச் சென்று மக்கள் யாவரும் இறையருளைப் பெற்றுச் செல்வார்கள்.

அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் திருச்சபையும், இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் 'எல்லா இனத்தைச் சேர்ந்த, மொழியைப் பேசக்கூடிய எண்ணிக்கையில் அடங்காத மக்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டுக்கும் இடையில் இருந்து இறைவனை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்' என்று படிக்கின்றோம். இவர்கள் யார்?. இவர்கள் வேறு யாருமல்ல, இறைவழியில் நடந்து கடவுளையும், அயலாரையும் அன்பு செய்த தூயவர்கள் புனிதர்கள் கடவுளின்மக்கள் - ஆவர்.

இவர்களைப் போன்று இறைவனின் திருமுன் நிற்பததற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு தந்த மலைப்பொழிவை யாராரெல்லாம் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்களோ, அவர்களே இறைவன் தரும் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறமுடியும். எளிய உள்ளத்தோராய், தூய இதயத்தோராய், நீதியின்மீது தாகமுடையோராய், அமைதிக்காக உழைப்போராய், கனிவுடையோறாய், நீதிக்காக துன்பங்களை அனுபவிப்பவராய், இன்னும் பல்வேறு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழுகின்றபோது இறைவன் தரும் விண்ணரசு நமக்கு எப்போதும் உண்டு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இல்லை.

நாம் நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் போதனைகளின் படி வாழ்கின்றோமா? நம்மோடு வாழும் எளியோரை, இறைவனை அன்பு செய்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அரசியும், புனிதையுமான புனித ஹங்கேரி நகர எலிசபெத். இவர் 1207 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டு அரசர் அந்திரேயாவுக்கு மகளாகப் பிறந்தவர். 1221 ஆம் லண்ட்ரவேயின் அரசன் நான்காம் லூயி மன்னனுக்கு தன்னுடைய பதிமூன்றாம் வயதிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

அரசியான எலிசபெத் தான் அரசி என்றெல்லாம் பாராது ஏழைகள், வறியவர் யாவருக்கும் உதவி செய்துவந்தார். ஒருமுறை நாட்டில் கொள்ளை நோய் பரவியபோது ஏராளமான மக்கள் மடிந்துபோனார்கள். அத்தகைய வேளையில் அரசி துன்புறக்கூடிய மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்தார். இது அவளுடைய அத்தைக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவளது அத்தை, அதாவது மன்னன் லூயின் தாயார் தன்னுடைய மகனிடம் மருமகளைப் பற்றிக் குறைகூறினாள். ஆனால் மன்னனோ தன் மனைவியின்மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்ததால் அதனை அவன் கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் அரசி எலிசபெத் தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தொழுநோயாளி ஒருவரை அழைத்துவந்து, தன்னுடைய வீட்டில்வைத்து சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவளுடைய அத்தை, தன்னுடைய மகனிடம் சென்று, எல்லாவற்றையும் முறையிட்டாள். உடனே அவன், தன் தாயோடு வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அரசியின் அறைக்கு வந்தான். அங்கே படுக்கையில் இயேசுவின் உருவில் தொழுநோயாளர் படுத்துக் கிடந்தார். அவருக்கு அரசி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்னரின் தாயார், தன்னுடைய மருமகளின் காலில் விழுந்து 'அவளைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டார். அதன்பிறகு தன்னுடைய மருமகள் பிறர் நலப்பணிகள் புரிவதற்கு அவர் உறுதுணையாக இருந்து வந்தார்.

அயலாருக்குச் செய்யும் சேவை யாவும் ஆண்டவருக்கு செய்யக்கூடியவை என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. புனிதர்கள் என்பவர் வேறு யாருமல்ல, அவர்கள் மனிதரை அன்பு செய்து, அவர்களுக்கு சேவைசெய்ததன் வழியாக இறைவனை அடைந்தவர்கள்.

ஆகையில் அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் புனிதர்களைப் போன்று இயேசு நமக்குப் போதித்த விழுமியங்களின் படி மலைப்பொழிவின் படி வாழ்வோம். இயேசுவுக்கு நமது வாழ்வால், வார்த்தையால் சான்று பகர்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

சிந்தனை
புனிதர்களின் சமூக உறவை விசுவசிக்கின்றேன்.
ஒவ்வொருவரும் உச்சரிக்கின்ற வார்த்தைகள் இவை.
இதை உணர்ந்து உச்சரிக்கின்றோமா? திருச்சபையில் எல்லாரும் ஒரே குடும்பமாக இருந்து வருகின்றோம். இங்கு தூதர்கள், புனிதர்கள், விசுவாசிகள் என எல்லாரும் திரியேக தேவனோடு உறவு கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றோம் என்பதனையே உச்சரிகின்றோம். இத்தகைய உறவினில் நாம் உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்வோமேயானால் நாமும் புனித நிலையடைந்து பேறுபெற்றவர்களாவோம்.

THE COMMUNION OF THE HOLY: TRUE CONSOLATION OF OUR FAITH

Vatican City, 30 October 2013 (VIS) - "The communion of the holy", one of the most beautiful aspects of our faith, as it was defined by Pope Francis, was the theme of the catechesis of this Wednesday's general audience, which took place in St. Peter's Square and was attended by more than 80,000 people.

The communion of the holy consists of two related meanings: the communion of holy things and communion between holy people, and the Pope focused on the second, "one of the most consolatory aspects of our faith". In fact, the term "holy" refers to those who believe in Jesus Christ and who are integrated with him in the Church by baptism".

The relationship between Jesus and the Father is "the 'matrix' of the link between us as Christians: if we are intimately inserted in this 'matrix', in this ardent fire of love, then we can truly become one heart and one soul, because God's love burns away all our selfishness, our prejudices, our divisions, both internal and external. If we are thus rooted at the source of Love, which is God, we encounter a reciprocal movement: from brothers to God. The experience of fraternal communion leads me to communion with God. God's love burns away our sins".

Francis moved on to consider the second aspect of the communion of the holy: faith needs the support of others, especially in difficult times, and asked, "Who among us has not experienced insecurity, disorientation, and even doubt along the path of faith? We have all experienced this; I have too, it forms part of the path of faith, the path of our lives. None of this should surprise us, because we are human beings, marked by our frailty and limits. However, in these difficult moments it is necessary to trust in the help of God, through filial prayer and, at the same time, it is important to find the courage and the humility to open ourselves to others. In this communion because communion means common union were are a great family, whose members all help and support one another".

The third aspect of the communion of the holy "goes beyond earthly life, it goes beyond death and lasts forever. It is a spiritual communion, born at baptism, and it is not interrupted by death but, thanks to the risen Christ, is destined to find its full meaning in eternal life. There is a deep and indissoluble bond between those who are still pilgrims in this world, between us, and those blessed who have crossed the threshold of death to enter into eternity. All baptised persons here on earth, the souls in Purgatory and those who are already in paradise form a great and single family. This communion between heaven and earth is achieved above all through intercessory prayer. This communion is ours, it makes us brothers, it accompanies us on our path through life and it means that we meet again in heaven. Let us continue on this path, with joy!" concluded the Holy Father.

புனிதர் அனைவரின் பெருவிழா

புனிதர் அனைவரின் பெருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1ம் தேதி சிறப்பிக்கின்றது திருஅவை.

பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள்இ எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரகரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது. திருஅவையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும்இ இவ்வகை அங்கீகாரம் பெறாமல்இ ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இறை விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்து விண்ணுலகில் இறையின்பத்தை அனுபவிப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் உற்றுநோக்கினால்இ இலட்சக்கணக்கானவர்களை புனிதர்கள் என்று திடமாக கூறலாம் என்று பலரும் கருத இடமுண்டு.

புனிதர்கள் இவ்வுலகில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்திருப்பினும் அவர்கள் முன்னுதாரண வாழ்வு வாழ்ந்ததால் சிறப்பான முறையில் போற்றப்படுகின்றார்கள். புனிதர்கள் அனைவரும், இறைவனால் தமக்கு வழங்கப்பட்ட தனிப்பட்டக் கொடைகளுக்கு மதிப்பளித்து, இறை அழைத்தலுக்குவிடுத்து, தன்னலமற்ற தியாக வாழ்வு வாழ்ந்தவர்கள். புனிதர்கள் ஒவ்வொருவரும் இறைமகன் கிறிஸ்துவை தமது மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள். புனிதர்களில் பலர், எண்ணற்ற தியாகங்கள் செய்தது மட்டுமல்ல இரத்தம் சிந்தி தமது உயிரையே தியாகப்பலியாக்கி மறைசாட்சியாக இறந்தவர்கள்.
திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் மறை சாட்சிகள் ஆகிய புனிதர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்டதே நமது அன்னையாம் திருஅவை. புனிதர்கள் கிறிஸ்துவின் உறவில் கட்டடமாய் எழுப்பப்பெற்று, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெற்றிருக்கின்றார்கள் என புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலில் (எபேசியர் 2:20-22) தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

புனிதர்கள் எனப்படுவோர் சாதாரண மனிதர்களாக, நிறைகளும் குறைகளும் கொண்டிருந்தபோதிலும், தமது வாழ்வை இறை விருப்பத்திற்கேற்பஇ இறை வார்த்தையின்படி வாழ்ந்ததால், புனிதர்கள் என அழைக்கப்படுகின்றனர். புனிதர்களை எந்நாளும் நாம் நினைவு கூர்ந்தால, நாமும் புனிதர்களாக வாழ முயற்சி செய்யலாம் என்பதே இவ்விழா தரும் நம்பிக்கை.

புனிதர்கள் வாழ்ந்து சென்ற பாதையில் நாமும் பின்தொடர்ந்து இறைமகன் இயேசுவுக்கு உகந்த வகையில் நமது வாழ்வை மாற்றியமைக்க இந்நாள் அழைப்புவிடுக்கிறது.

=================================================================================
மறையுரைச் சிந்தனை -3   புனிதர் அனைவரின் பெருவிழா
=================================================================================
யார் புனிதர்கள்?

நாம் எல்லாருமே புனிதர்கள், இப்போது வரை. ஆனால் இன்னும் நாம் புனிதர்களாக நம்மை முழுமையாக வெளிப்படுத்தவில்லை - நமக்கு, பிறருக்கு, இந்த உலகத்திற்கு. ஆனால் கடவுளுக்குத் தெரியும் நாம் எந்த சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று. அவருக்குத் தெரியும் நாம் யாரைப்போல உருப்பெற்றவர்கள் என்று. அவருக்குத் தெரியும். அவருக்குத் தெரியும் நாம் புனிதர்களென்று!

இதோ! கொஞ்சம் கொஞ்சமாக நாம் புனிதர்களாக வளர்கிறோம். நம்மிலிருந்து நாம் வெளியே வருகிறோம். நம் கூட்டை நாமே கொத்திக் கொத்தி உடைத்துக் கொள்கிறோம். நம்மை நாமே படைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளே நம் உள்ளிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இது எப்படி நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்மால் மட்டும் தான் அதை உணர முடியும் - கொஞ்சம் கொஞ்சமாக, நம் இயல்பு நிறைவு பெறும் போது!

அப்படியென்றால், யார் புனிதர்?

புனிதர் என்பவர் மனச்சுதந்திரம் பெற்றவர். தன் வாழ்வின் ஆதாரத்தோடு தொடர்பு கொண்டிருப்பவர். தன் மையம் எது என்ன என்பதைக் கண்டுகொண்டவர்.

புனிதருக்குத் தெரியும் தான் எங்கிருந்து வந்தோம் என்பதும் எங்கே செல்கிறோம் என்பதும்! தான் வலுவற்றவன் தான் என்றாலும், தான் படைக்கப்பட்டது நிரந்திரத்திற்கு என்பதை அவருக்குத் தெரியும்!

புனிதர் என்பவர் ஒரு சுதந்திரப் பறவை!

அவர் தன் வேர்களிலிருந்தும், தன் குணாதிசயத்திலிருந்தும், தன் வரையறைகளிலிருந்தும், தன் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் அல்ல - இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டால் தான் அவர் புனிதரா? - புனிதர் என்பவர் இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, இவைகள் வழியாகவும், இவைகளிலும் சுதந்திரமாகக் கடந்து செல்பவர்.

புனிதர் தன் உள்ளார்ந்த போராட்டங்களை வென்று வெற்றிகரமாக வெளியே வந்தவர்!

புனிதர் எந்த நிலையிலும் தன்னை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்று நினையாதவர்!

புனிதர் கடவுளை நோக்கி கதறியழத் தெரிந்தவர். சின்னக் குழந்தை போல எல்லாவற்றையும் நம்பத் தெரிந்தவர்.

ஆனால் புனிதர் எதார்த்தமானவர். வாழ்வின் எதார்த்தங்கள் அவருக்குப் பிடிக்கும். வாழ்வின் மாயைகளையும், பதின்பருவத்துக் கனவுகளையும், இலக்குகளையும் அறவே விலக்கியவர். தன்னோடும், தன் அருகில் இருப்பவரோடும் சமாதானம் செய்து கொள்பவர். புனிதர் தன்னிடம் இல்லாததை நினைத்து வருந்துபவர் அல்ல. இருப்பதை வைத்து மகிழ்பவர்.

புனிதருக்கு நடிக்கத் தெரியாது. முகமூடி அணியத் தெரியாது. மற்றவரின் வாழ்வைப் போல தன் வாழ்வை அவர் அமைத்துக் கொள்ள ஒருபோதும் அவர் நினைப்பதில்லை. மற்றவரைப் போல வாழ வேண்டும் என்றும் எண்ணுவதில்லை. தன்னைப் போல இருப்பதே தனக்குப் போதும் என்று உறுதியாக நம்புபவர்.

புனிதருக்கு தன் உண்மை என்ன என்று தெரியும்!

தான் யாரென்று தெரியும்!

காற்று நிரப்பப்பட்ட பலூன் அல்ல அவர். காற்றே இல்லாத பலூனும் அல்ல அவர். ஆற்றலோ, ஆசைகளோ, ஆண்மையோ இல்லாதவர் அல்ல அவர்.

புனிதர் ஒரே கடவுள் இருப்பதாக நம்புபவர். விதியின் மேலும், மற்றொரு உயர்ந்த சக்தி மேலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. வாழ்வில் நடக்கும் அனைத்தும் கடவுளின் பொம்மலாட்டம் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, தானே உலகைப் படைத்து அதை பரிசாக தன் கடவுளுக்குப் படைப்பவர் அவர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், சந்திக்கும் ஒவ்வொரு நபரிலும், சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும், வியர்வையிலும் கடவுள் ஒளிந்திருப்பது அவருக்குத் தெரியும்.

புனிதர் பொருட்களையும், உடலையும், உடலின் மணத்தையும், சுகத்தையும், அதன் நிறத்தையும், வழுவழுப்பையும் அன்பு செய்பவர். வாழ்வின் எதார்த்தங்கள் ஒரு இசை போல ஒழுங்கானவை என்றும் அதே நேரத்தில் கடினமானவை என்பதையும் உணர்ந்தவர்.

புனிதர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி நிற்பவர் அல்ல. சாதாரணமானவர்களோடு சாதாரணமாக நிற்பவர்.

வாழ்வோடு முழுமையாகக் கலந்தவர். தன் உடலின் உணர்வுகளோடு வாழத் தெரிந்தவர்.

ஆனால் அவர் எதையும் மிகைப்படுத்துவதில்லை.

புனிதர் சாந்தமானவர். ஆகையால் தான் இந்த உலகை அவர் உரிமையாக்கிக் கொள்கிறார். அங்கே மகிழ்ச்சியாக அவர் வாழ்கிறார்.

புனிதர் தனக்குத் தானே சிரிக்கத் தெரிந்தவர். தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தயங்காதவர்.

புனிதர் தன்னால் இயன்றவற்றை முழுமையாகச் செய்பவர் - தன் முழு ஆற்றலோடு செய்பவர். தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார். இந்த உலகத்தைத் தான் ஒருவர் தான் மாற்ற முடியும் என்றும் மீட்க முடியும் என்றும் அவர் நினைப்பதில்லை. புனிதர் தன்னைக் கடவுளாக எண்ணிக்கொள்வதில்லை.

புனிதர் மனிதர்களை மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாதவரையும் அன்பு செய்பவர். அவைகளோடு தான் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்தவர் அவர்.

புனிதர் உண்மையானவர்.

புனிதர் சில நேரங்களில் கடவுளை அறிவதில்லை! அவர்கள் கடவுளை மறந்து விடுவார்கள்! அவர்கள் கடவுளை திட்டுவார்கள்! அவர்கள் கடவுளிடம் சண்டை போடுவார்கள்! ஆனால் அவர்களுக்குத் தெரியும் கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்று. ஏனெனில் அவரும் ஒரு கடவுளே!

இனிய திருநாள் வாழ்த்துக்கள்!

புனிதர்களாகிய உங்கள் அனைவருக்கும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)

=================================================================================
 திருப்பலி முன்னுரை புனிதர் அனைவரின் பெருவிழா
=================================================================================

இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே,

உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள். அனைத்து புனிதர்களின் பெருவிழாவை திருச்சபை கொண்டாடும் இந்நாளில் புனிதர்களின் நாமம் தாங்கிய ஒவ்வொருவருக்கும் நாம விழா நல்வாழ்த்துக்கள்.

" புனிதம்" அல்லது " புனிதர்" எனபதை எபிரேய மொழியில் " குவதோஸ்" என்றும், கிரேக்க மொழியில் " ஆகியோன்" என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு பிரித்தெடுக்கப்பட்ட" அல்லது " வேறுபடுத்தப்பட்ட" என வார்த்தையளவில் பொருள் கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவர்கள், புனிதம் என்பது கடவுளையும், அவரை வழிபட பயன்படுத்தப்படும் பொருட்களையும், இடங்களையும் மட்டும் சார்ந்ததாக கருதி வந்தனர். பின்னர், மிகக் குறிப்பாக, இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த அனைவரையுமே தொடக்ககால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. .இதை புனித பேதுருவின் முதல் திருமுகத்திலே நாம் காணலாம். " புனிதர்கள் யார்? " என்று நாம் ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப் பார்க்கின்றபோது, கிடைக்கின்ற பதில், " புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து, அர்ப்பணித்தவர்கள்." என்பதுவே. ஆம்;. புனிதர்கள் வாழ்வு நமக்குக் கற்றுத் தரக்கூடியதும் அதுவே. இறைமகன் இன்றைய நற்n;;சய்தியில் போதித்தவை அனைத்தும் " நான் எதற்காக வந்திருக்கின்றேன், எனது பணி யாருக்காக... என்னைப் பின்பற்ற விரும்புகிறவர்களும் இவற்றின்வழி வாழ வேண்டுமென்பதையும்" மிகத் தெளிவாக கூறுகின்றார். இம்மலைப்பொழிவை வாழ்வாக்கியவர்களே இன்று நாம் போற்றிக் கொண்டாடும் புனிதர்கள். யாருமே பிறக்கும்போதே புனிதர்களாகப் பிறப்பதில்லை. அவர்களும், நம்மைப் போல சாதாரண மனிதர்களாக பிறந்தவர்கள்தான். நம்மைப் போல நிறை, குறை உடையவர்கள்தான். ஆனால், தங்கள் வாழ்வை இறைதிருவுளம் உணர்ந்து, இறைவார்த்தையின்படி வாழ்ந்து, இறைவனுக்காகவும், பிறருக்காகவும் அனைத்தையும் துறந்து, வாழ்ந்து, மரித்து, இறைபாதம் சேர்ந்து, அவரை முகமுகமாய் தரிசிக்கும் பேற்றினை பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்.

புனிதர்கள் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல. அவர்கள் வழியாக நாம் இன்னும் கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக்க துணைபுரிபவை என்று எண்ணுதலே சிறந்தது. நமக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள். நாம் இறைநம்பிக்கையில் வளர துணைபுரிபவர்கள். கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து காட்டிய, மற்றும் அவரின் மதிப்பீடுகளை வாழ்வாக்கிய, புனிதர்களின் வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழ்ந்;திட அருள் வேண்டி, இத்தெய்வீகத் திருப்பலியில் இணைந்திடுவோம்.



மன்றாட்டுக்கள்:

" மண்முகத்தே மழையைப் பொழிபவரும், வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே" என்ற இறைவா,
நீர் அழகுற படைத்த இயற்கையை நாங்கள் சுயநலத்;தால் அழித்து, சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தி வருகின்றோம். அதனால், பருவநிலைகளும் மாறி, வானம் பொய்த்து, நீரின்றி வறண்ட நிலையிலிருக்கின்றது. இறைவா, எங்களின் தவறுகள், பாவங்களை உமது பேரிரக்கத்தால் மன்னித்து, தக்க காலத்தில் மழையைத் தந்து, நிலம் செழித்திடவும், குடிநீர் பற்றாக்குறை நீங்கிடவும் அருள்பொழிய வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

" என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன், மதிப்பு மிக்கவன், நான் உன்மேல் அன்பு கூர்;கிறேன்" என்ற இறைவா,
இந்த உலகம் பிறர் வாழ்வை எப்போதும் விமர்சனம் செய்து, குறை கூறி அவர்களின் திறமைகள், ஆற்றல்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது, கீழே வீழ்த்த முற்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் விமர்சனங்கள், ஏற்றுக் கொள்ளாத நிலையில் மனம் சோர்ந்து, தளர்ந்திடாது, திறமைகள், உழைப்பை முடக்கி விடாது, எத்தகைய நிலையிலும் முன்னேற்றப் பாதையிலிருந்து விலகிடாது, அவர்களின் தரமற்ற விமர்சனங்களை புறம் தள்ளி, இந்த உலகம் ஒதுக்கினாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நாங்கள் உமது பார்வையில் மதிப்புக்குரியவர்களாக இருக்கிறோம் என்ற உள்ளார்ந்த நிறைவுடன், வாழ்வின் கடமைகளை, பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றக்கூடிய, இலட்சியங்களில் தொடர்ந்து பயணிக்கக்கூடிய திடமான, வலிமையான மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன்" என்ற இறைவா,
வாழ்வில் ஆதரவற்று, துணையின்றி, ஆறதலின்றி தவிக்கும் மாந்தர்களை, அவர்களின் மனத் துயரை, மனப்பாரங்களை, கண்ணீரை கண்ணோக்கும். அவர்களின் மனத்துயரை மாற்றிட, உடனிருந்து ஆறுதல், அன்பை அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களைத் தேற்றி, அவர்கள் வாழ்வு ஏற்றம் கண்டிடும் வகையில், அவர்கள் மகிழ்வில் உம்மைக் காணும் மாந்தர்களாக நாங்கள் வாழ்ந்திடக் கூடிய, நல்இதயத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

" வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்" என்ற இறைவா,
முப்பத்n;;தட்டு ஆண்டுகளாக குளத்தில் இறக்கிவிட ஆளின்றி, எத்துணை பொறுமையோடு காத்திருந்திருந்த, மனிதருக்கு நீர்; சுகம் தந்து வாழ்வு கொடுத்தீர், பதினெட்டு ஆண்டுகளாக தீய ஆவி பிடித்து, கூன் விழுந்து உடல்நலம் குன்றிய பெண்ணைக் குணப்படுத்தினீர். இவர்களின் பொறுமை இன்று எங்களிடம் காணாமற் போய்விட்டது. இன்று மாந்தர்களிடம் இல்லாத ஒரு "மை"யாக பொறுமை வலம் வருகிறது. எதையும்; காத்திருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு, பொறுமையில்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடன் வாழும் மாந்தரிடமும், பணித்தளத்திலும், எங்கள் விசுவாச வாழ்விலும் பொறுமையிழந்து, எரிச்சல்பட்டு, நிம்மதியின்றி வாழும் மனநிலையை மாற்றி, பொறுமை என்னும் உன்னத பண்பினைப் பெற்று, வாழ்ந்திட, வரமருள, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

" ஒரு சொல் ஒரு கொடையை விட மேலானது" என்ற இறைவா,
நாங்கள் பேசுகின்ற வார்த்தைகள், பலரை காயப்படுத்துவதாக, வீழ்த்துவதாக, கண்ணீரில் ஆழ்த்துவதாக அமையாமல், பலரும் பயன்பெறக்கூடிய பண்பான, கனிவான, ஊக்கம் தரக்கூடியதான வார்த்தைகளாக அமைந்திடவும், எங்கள் வீண் வார்த்;தை ஒவ்வொன்றுக்கும் நாங்கள் கணக்கு கொடுக்கும் வேண்டுமென்பதை உணர்ந்தவர்களாக, தவறான வார்ததைகளை பேசாமல், எங்கள் நாவைக் காத்துக் கொள்ளவும், இனிய சொற்களால், பல இதயங்களை இதமாக்கி, இன்பத்தை கொடுக்கவும், தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்கவும், எங்கள் நாவினை பயன்படுத்திட ஆற்றல் தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!