"கருணைகூர்ந்து என்னிடம் வருவாயா?"
"நீரூற்றுக்கு வாருங்கள் அங்கே உங்களைக் கழுவூங்கள்"
நினைவில் கொள்வோம்!
1858ஆம் ஆண்டு, பிப்ரவரி 25ஆம் தேதி, 9ஆம் காட்சியின் போது தான், "மகளே பாவிகளுக்காக
நீ முழந்தாள்படியிட்டு, தரையை முத்தம் செய்து, புல்லை சாப்பிடு" என்ற அன்னை மரியாளின்
குரலை பெர்னதெத் கேட்டார்.
அன்னை கூறிய அனைத்தையும் பெர்னதெத் செய்து முடித்த போதிலும் இவைகள் அவருக்கு கடினமாக
இருந்தன. ஏனெனில், தரை அசுத்தமாக இருந்தது. புல் கசப்பாக இருந்தது. நீரும் கலங்கி
சேறாக இருந்தது. அந்நாள் வரையிலும் உற்சாகத்தோடு கூடி வந்த மக்கள் பெர்னதெத்தின்
இச்செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர், முகம் சுளித்தனர். பெர்னதெத்தை அடித்து, எள்ளி நகையாடி, நடுவரிடம் இழுத்துச் சென்றனர்.
புனித வெள்ளியை நமக்கு
நினைவூட்டும் இத்துயரமான நாளில்தான், பாவிகளுக்காகவே
இவ்வாறு செய்ததாக பெர்னதெத் எவ்வித சலனமுமின்றி அமைதியாக விளக்கினார். அன்றைய
நாளிலிருந்து அவரது வாழ்க்கையானது பரிவும் இரக்கமும் நிறைந்த செப வாழ்க்கையாக
உருமாறியது. இவ்வுலகம் பாவிகளால் நிறைந்தது, அவர்களும்; நம் சகோதரர்களே என்பதை
அவர் கண்டறிந்தார். இவர்களைச் சுடடிக்காட்டியே,
"தவம்! தவம்! தவம்! பாவிகள் மனமாற்றமடைய
செபி" என்று அன்னை மரியாள் கூறியிருந்தார்கள். பெர்னதெத் அழுததைக் குறித்து அன்னை
மரியாள் அந்நாளில் மிகவும் கவலை கொண்டிருந்தார்கள்.
அந்தக் குறிப்பிட்ட நாளுக்குரிய திருப்பலி வாசகமானது: சிலுவையில் அறையப்பட்டு,
போர் வீரனின் வாளால் குத்தி ஊடுருவப்பட்ட விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும்
வழிந்தோடிய இயேசுவைப் பற்றி எடுத்துரைத்தது.
லூர்து நகர் நீரூற்று
லூர்து நகருக்கு வரும்போது, நாம் பெர்னதெத்தின் முன்மாதிரிகையை தாழ்ச்சியோடு
கடைபிடிக்கிறௌம். நமது விசுவாசத்தை ஆழப்படுத்தவும் பலப்படுத்தவும் அழைக்கும் அன்னையின்
குரலுக்கு செவிமடுக்கிறௌம். இதனாலேயே நாம் நீருக்குரிய தன்மைகளைப் பாராமல், அவைகளைக்
கடந்து செல்கிறௌம். அத்தண்ணீரை:
"பாவிகளுக்கு" வாழ்வைத் தரும் கிறிஸ்துவின் அன்பின் அடையாளமாவுகம்,
கடவுளின் பிள்ளைகளுக்குரிய வாழ்வைத் தரும் திருமுழுக்கின் அடையாளமாகவும்,
நமக்கு மன்னிப்பையும், இரக்கத்தையும், தூய்மையையும் தரும் ஒப்புரவு அருட்சாதனத்தின்
அடையாளமாகவும்
பெற்றுக்கொள்கிறௌம்.
"விசுவாசம் இல்லையேல், இந்நீரூற்றினால் எதுவூம் செய்ய இயலாது" என்று பெர்னதெத்துவே
கூறியிருக்கிறார்.
புதுப்பிறப்பெடுக்க, மன்னிப்பு பெற, தூய்மை பெற, ஒப்புரவாக வேண்டிய தேவை நமக்கு
இருப்பதாலேயே இந்நீரூற்றுக்கு நாம் வருகிறௌம்.
குளிக்குமிடத்தில்
லூர்து மாநகரில் உள்ள குளியல் தொட்டிகளின் மூலம் அன்னை மரியாள் நாம் பெற்ற
திருமுழுக்கின் உண்மையான அர்த்தத்தை நமக்கு நினைவூட்டுகிறார். அதாவது, பாவங்களை
விட்டு விடவும் "கிறிஸ்துவை அணிந்து கொள்ளவும்" (கலா 3:27) திருமுழுக்கில் நாம்
அழைக்கப்படுகிறௌம். தண்ணீருக்குள் நாம் மூழ்குவதன் மூலம், நாம் நமது
திருமுழுக்கைப் புதுப்பிக்கிறௌம். நமது நம்பிக்கையை மீண்டும் கடவூளின் கரங்களில்
ஒப்படைக்கிறௌம். திருமுழுக்குப் பெறாதவர்களும் மனமாற்றத்திற்கான இச்செயலில் பங்கு
பெற அழைக்கப்படுகிறார்கள்.
அதிக எண்ணிக்கையில் நாம் மேற்கொள்ளும் சமயச் செயல்பாடுகளை வைத்து, நாம்
கடவுள்மீது உரிமைக் கொண்டாடலாம் என்று நினைக்கக் கூடாது. கடவுள் தனது அருளை அன்பின்
பொருட்டு நமக்குக் கொடையாகத் தருகிறார். நமக்கு இதய அமைதியைத் தருகிறார். நமக்கு
நல்லது என்று அவர் கருதினால், நமது துன்பங்களை அவர் எளிதாக்குகிறார்.
தந்தையாம் கடவுளே!
முற்றும் கன்னியான அன்னை மரியாள் வழியாகவே
வாழ்வின் ஊற்றான உம் மகன்
எம்மிடம் வந்தார்.
அவரது இதயத்திலிருந்து வழிந்தோடும் அருளின் ஊற்றினில்
எங்களைத் தூய்மைப்படுத்த வரும் வேளையில்
அவரது அழைப்புக்கு நாங்கள் செவிமடுக்க எங்களுக்கு உதவியருளும்.
இதன் அடையாளமாகவும் நினைவூட்டலாகவும் இந்நீரூற்று அமைந்துள்ளது.
இவ்வாறு திருமுழுக்கில் எங்களில் உருவான புதிய படைப்பு
எங்களில் வாழ்வதாக!
லூர்து அன்னையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித பெர்னதெத்துவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
புனித பெர்னதெத் திருக்காட்சிகளின் போது ஒப்பரவு அருட்சாதனத்தைப் பெறச்
சென்றார். உங்களது திருப்பயணத்தின் தொடர் குணமளித்தலின் ஒரு பகுதியாகிய ஒப்பரவு அருட்சாதனத்தைப் பெற நீங்களும் அழைக்கப்படுகிறீர்கள்.
தன்னார்வத் தொண்டர்கள் திருப்பயணிகள் குளிப்பதற்கும் செபிப்பதற்கும் உதவி
செய்வார்கள். குளிப்பதற்கான தனி ஆடைகள் தேவையில்லை. குளிப்பதற்கு எவ்வித கட்டணமும்
இல்லை. கோடை காலங்களிலும் திருவிழாக் காலங்களிலும் திருப்பயணிகளின் எண்ணிக்கை
அதிகமாக இருக்கும்போது நெடுநேரம் காத்திருக்க நேரலாம். குளிக்கும் நேரமும்
குறைக்கப்படலாம். இத்துண்டு பிரசுரத்தை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.