Sr. Gnanaselvi (india) |
மனிதம் காக்க பிறக்கும் புனிதத்தை வரவேற்க வந்திருக்கும் நல்
இதயங்களே! |
துக்கம் மறைந்து மகிழ்ச்சி பிறக்க
வேண்டும்...
அச்சம் மறைந்து அமைதி பிறக்க
வேண்டும்...
அநீதி மறைந்து நீதி பிறக்க
வேண்டும்...
ஆணவம் மறைந்து அன்பு பிறக்க
வேண்டும்....
தன்னலம் மறைந்து பொது நலம் பிறக்க
வேண்டும் ....
சங்கடங்கள் மறைந்து சந்தோஷங்கள் பிறக்க
வேண்டும்...
வறுமை மறைந்து வளமை பிறக்க வேண்டும்... குழப்பங்கள் மறைந்து குதூகலம்
பிறக்க வேண்டும்...
சண்டைகள் மறைந்து சமாதானம் பிறக்க
வேண்டும்...
கடன் மறைந்து நிம்மதி பிறக்க வேண்டும்... இவை எல்லாம் வேண்டும்
என ஆசைக் கனவுகளோடு ஆலயம் வந்திருக்கும் நம்மை, குடிலில் பிறக்க
இருக்கும் பாலன் இயேசுவே அன்போடு வரவேற்கின்றார்.
நம் இதயம் விரும்பும் ஆசையை நிறைவேற்ற இயேசு
ஆண்டவர் நம் இதயக் குடிலில் பிறக்க விரும்புகின்றார்.
நமது வீட்டுக்குள் அன்பு இருந்தால் இயேசு நம் இல்லத்தில் பிறந்து
நம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஆசிர்வதிப்பார்.
அன்பு நிறைந்த இதயத்துடன் நமது குடும்பங்கள் இயங்க...
நமது குழந்தைகள், இளையோர், தம்பதியர் முதியோர், நோயுற்றோர்,
நலிவுற்றோர் வாழ்கைத் தரம் உயர.
பங்கின் வளர்ச்சிப் பணிக்கு உழைக்கும் பங்குத் தந்தையர்கள் பணி
சிறக்க...
எல்லாம் இழந்து நிற்கும் மனிதர்கள் மனம் மகிழ...
உலகமெங்கும் அன்பும், அமைதியும் நற்செய்தியாய் வலம் வர...
நாம் காணும் கனவுகள் எல்லாம் பலிக்க...
பிறக்கும் இயேசு தன் பிஞ்சுக் கரங்களால் அள்ளி வழங்கும் ஆசியைப்
பெற திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
|
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் |
1. மகிழ்ச்சியை பிறக்கச் செய்ய எங்களிடையே பிறந்த பாலகனே!
அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்கும் திருச்சபையை ஆசிர்வதியும்.திருச்சபையின்
தலைவர்கள், நாடுகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பெற்றோர்கள்
ஆசிரியர்கள் அனைவரும் அன்புமிக்க செயல்களைச் செய்து ஒருவர் ஒருவர்
மனங்களில் மகிழ்ச்சியைப் பிறக்கச் செய்ய அருள் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
2. எளிய கோலத்தில் மாட்டுக் குடிலில் பிறந்த பாலகனே!
எல்லாம் இழந்து நிற்கும் மனிதர்களை ஜாதியால், மொழியால், சமூக
மாறுபாட்டால் வெறுக்கப்பட்ட மனிதர்களைத் தேடிச்சென்று உறவாடும்
போது, நீர் எம் நடுவில் வாழ்கின்றீர். நீர் எம்மோடு வாழ்வது தான்
உண்மையான கிறிஸ்மஸ் என்பதை உணர்ந்து எளியோரை வாழச் செய்யும் நலமிகு
செயல் செய்து உம்மை எம்மோடு வாழ வைக்க அருள் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
3. உலகை அன்பினால் உருவாக்க உதித்த பாலகனே!
தவறான வாக்குவாதங்களில் ஈடுபடுவோர், அநீதியாக நடந்துவிட்டு மனசாட்சியின்படி
நடக்கின்றேன் என மார்தட்டுவோர், விட்டு கொடுக்காமல் பிடிவாதம்
கொண்டு குடும்பங்களில் பணி செய்யும் இடங்களில் பிரச்சனை ஏற்படுத்துவோர்,
வன்முறை, போராட்டம், கொலை கொள்ளை செயல்களில் ஈடுபடுவோர் அனைவருக்கும்
பாலன் இயேசுவின் பிறப்பு அன்பையும் அமைதியையும் தருகின்ற ஒன்றாக அமைய அருள்
தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. வானக நலன்களை பூமிக்குக் கொண்டு வர மனித வடிவெடுத்த பாலகனே!
இன்று எங்கள் மனங்களில் பிறந்துள்ள நீர் எம் மனம் விரும்பிக்
கேட்கின்றவரங்களை எல்லாம் தந்து வானக நலன்களால் எங்கள் குடும்பங்களைச்
செழிக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. உலகில் உமக்கு உகந்தோருக்கு அமைதி அருள வந்த பாலகனே!
துன்புறுவோர், அமைதியை இழந்து தவிப்போர், கருத்து வேறுபாட்டால்
பிரிந்து வாழும் தம்பதியர், மகப்பேறின்றி வாடுவோர், வரன் தடையால்
வருந்துவோர், முதுமையால் வாடுவோர் அனைவர் மனங்களிலும் அமைதியை பிறக்கச்
செய்ய அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
மறையுரை சிந்தனைகள் |
கிறிஸ்மஸ்
பெருவிழாவுக்கு உண்மையாகவே பிறக்க விரும்பிய இயேசு தான் பிறக்க
வேண்டிய இடம் தேடிச் சென்றார்.
அந்தப் பங்கில் இளையோர் மிக தத்ரூபமாக சூசை மரத்தை அறுப்பது ரம்பம்
முன்னும் பின்னுமாக இழுப்பது போன்றும், மரியா தண்ணீர் அடிப்பது நிஜமாகவே
தண்ணீர் வருவது போன்றும் இடையர்கள் ஆட்டிற்கு புல் அள்ளி அள்ளி
வைப்பது போலவும், ஆடு மாடு இடையர்கள் நிஜமாகவே அசைந்து அசைந்து
மேய்வது போலவும் குட்டி இயேசு சிரிப்பது போலவும் இளையோர் குடில் அமைத்தார்கள்.
ஆனால் வெளி ஆடம்பரத்திற்காகவும் தற்பெருமைக்காகவும் குடில் அமைத்தார்கள்.
வீண் களியாட்டங்களும் தவறான விதத்தில் செல்பேசியை பயன் படுத்திக்
கொண்டும் அவர்கள் அமைத்த குடில் தத்ரூபமாக இருந்தபோதும், அந்த
குடில் தான் பிறக்க ஏற்ற ஒன்று அல்ல என்று அடுத்த ஊருக்குப் போனார்.
பங்கில் முதன் முதலாக இந்தப் பங்கின் பொறுப்பினை நான் ஏற்றுள்ளேன்
என்று, பங்கு குரு மக்களிடம் ஏகப்பட்ட பணத்தை வாங்கி செலவு செய்து
போட்ட குடில் அது. கிறிஸ்மஸ் திருப்பலி ஆரம்பமாகும் முன், கணக்குக்
கேட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சண்டை சச்சரவு நிறைந்த
இந்த இடம் நமக்கு ஒத்து வராது என அங்கும் பிறக்க பிரியமின்றி வேறு
இடம் தேடினார்.
இப்போது ஒரு வீட்டில் தாயிடம் வருடத்துக்கு ஒரு முறை கூட துணி எடுக்க
உனக்கு மனம் வராதா? என் வாதாடிய வண்ணம் குடில் கடமைக்கு தன்
வீட்டுக் குடிலை அமைத்துக் கொண்டிருந்தான் மகன். அந்த வீட்டிலும்
பிறக்க மனமின்றி நகர்ந்தார் இயேசு.
"எங்கள் பங்குத் தந்தை 30 விதவைகளுக்கு துணி எடுத்துக்
கொடுத்தார். அதில் ஒன்று எனக்குக் கிடைத்தது நன்றி யேசுவே" எனஒருபெண்மணி மனநிறைவோடு
குடிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். கோயிலைப் பெருக்கியதன் பலன்
உணவும் உடையும் எப்படியாவது எனக்கு கிடைத்து விடுகிறது என புதிய
சேலையை உடுத்திக் கொண்டு குடிலுக்கு முன் குனிந்து கும்பிட்டுக்
கொண்டே பாட்டி ஒருவர் பெருக்கினார். குடிலை அமைத்த இளையோர் கடின
மனம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பனியன் ஒன்றை
சீருடையாகத் தந்து, இளையோரின் மனதை சீராக்கினார் அருட்தந்தை. சண்டைகள்
வந்த போதும் விட்டுக் கொடுத்துப் போவோம் என சமாதானமாக குடிலுக்கு
அருகில் இளையோர் நின்றார்கள். புதிய துணி இல்லாவிட்டாலும் நல்ல உடல்
சுகம் உள்ளது என மன நிறைவோடு குடிலுக்கு அருகில் ஒருவர் செபித்துக்
கொண்டிருந்தார். பாடலை தகுந்த தயாரிப்புடன் ஆடு மேய்க்கும் எனது
வாழ்வில் புதிய துணி நான் அணிந்தது இல்லை. எனக்கு பங்கு சாமியார் மிகச் சரியான அளவுடன் பிடித்தமான கலரில் டிரஸ் கொடுத்திருக்கிறார். இயேசுவே
நீயே வந்து கொடுத்த மாதிரி இருக்கு உனக்கு நன்றி என்று
கும்பிட்டுக் கொண்டிருந்தார் ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர். திருவழிபாட்டுக்கு பாடலை பாடலாசிரியர்
தயார் செய்து தானே கையால் எழுதி ஜெராக்ஸ் எடுத்து எவரையும் எதிபார்க்காமல்
தன் பணியை சிறப்பாக பாடலாசிரியர் செய்து கொண்டிருந்தார். அனைவரையும்
உற்றுப்பார்த்தார் இயேசு. அந்த இடத்தில் நிலவிய அன்பு சந்தோஷம் அமைதி
இயேசுவுக்கு மிகவே பிடித்துவிட்டது. "இந்த இடத்தில் நான் தேடும்
அன்பு சமாதானம் சந்தோஷம் இருக்கிறது. இது நான் பிறக்க ஏற்ற இடம். இந்த
இடத்தில் நான் பிறப்பேன். இவர்கள் நடுவே பேரொளி வீசச் செய்வேன் இவர்களைச்
சுற்றி நிலவும் காரிருளை நீக்குவேன். இவர்கள் கேட்பதைக் கொடுப்பேன்.இவர்கள் மகிழ்ச்சியை
மிகுதியாக்குவேன்" என்றார்.
நமது மனதுக்குள் அன்பை நிரப்பி குடில் அமைத்தால் அந்தக் குடிலில்
நிச்சயம் இயேசு பிறப்பார்.
நம்மைச் சுற்றி எத்தனை போட்டிகள் பொறாமைகள் தந்திரங்கள் எதிர்ப்புகள்
வீண்வாக்குவாதங்கள் நிலவினாலும் அனைத்தையும் பாலன் இயேசுவிடம் ஒப்புக்
கொடுப்போம். அன்பை மனம் நிறைய நிரப்பிக் கொண்டு கிறிஸ்து பிறப்புப்
பெருவிழாவைக் கொண்டாட தயாராவோம். பாலன் இயேசு கொண்டுவந்த அமைதி நம் குடும்பங்களில் நிலவும்.
பெத்லகேமில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் குழந்தை இயேசு பிறப்பதற்கு முன்பாக
வானதூதர் ஒருவர், எந்த விலங்கை குழந்தை இயேசுவுக்கு அருகிலே அமர்த்துவது
என்று தீவிரமாக யோசித்தார். உடனே அவர் எல்லா விலங்குகளையும், பறவையினங்களையும்
தம்மிடம் வரவழைத்து அவற்றிடம், "உங்களை மாட்டுக் தொழுவத்தில் பிறக்க
இருக்கும் குழந்தை இயேசுவுக்கு முன்பாக அமர்த்தினால் நீங்கள் என்ன
செய்வீர்கள், குழந்தை இயேசுவை எப்படி பாதுக்காப்பீர்கள்?" என்று
கேட்டார். அதற்கு காட்டு இராஜாவான சிங்கம், "நான்தான் விலங்குகள்
அனைத்திற்கும் அரசன். எனவே, என்னை நீங்கள் குழந்தை இயேசுவுக்கு
முன்பாக அமர்த்தினால், அதற்கு எந்தத் தீங்கும் நேரிடாமல்
காத்திடுவேன்" என்றது. உடனே வானதூதர் அதனிடம், "ஆணவம் கொண்டோர் ஆண்டவருக்கு
முன்பாக நிற்கக்கூடாது" என்று சொல்லி அதனை அனுப்பி விட்டார்.
அதற்கு அடுத்து நரி வானதூதரிடம் வந்து, "வானதூதர் அவர்களே!, நான்
மட்டும் குழந்தை இயேசுவுக்கு முன்பாக இருந்தால், மிகவும் தந்திரமாகச்
செயல்பட்டு எங்கெல்லாமோ கிடைக்கும் பொருட்களை எடுத்து வந்து, அதனை
குழந்தை இயேசுவுக்குத் தருவேன்" என்றது. வானதூதரோ அதனிடம்,
"தந்திரமானவர்கள் குழந்தை இயேசுவுக்கு முன்பாக நிற்க அருகதை அற்றவர்கள்"
என்று சொல்லி அதனை அனுப்பிவிட்டார். அதன்பின்னர் மயில் வந்து,
"நான் குழந்தை இயேசுவுக்கு முன்பாக நின்றால் என்னுடைய அழகான தோகையை
விரித்து அவரை மகிழ்விப்பேன்" என்றது. அதற்கு வானதூதர் அதனிடம்,
"அழகு எப்போதும் நிலையானது அல்ல, நீ உன் அழகைக் குறித்து
பெருமைகொள்கிறாய், ஆதலால் நீயும் ஆண்டவர் இயேசுவின் முன்பாக நிற்கத்
தகுதி இல்லாது போனாய்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
இப்படி நிறைய விலங்குகள், பறவையினங்கள் வானதூதரிடம் வந்து, தங்களுடைய
நிலையை எடுத்துச் சொல்லி, தாங்கள் குழந்தை இயேசுவுக்கு முன்பாக நிற்கிறோம்
என்று சொன்னார்கள். அவர்கள் அனைவரையும் வானதூதர் தகுதியற்றவர்கள்
என்று சொல்லி, அனுப்பிவிட்டார்.
அது வரை வந்த விலங்குகளில் கன்றும், கழுதையும் வரவில்லை. எனவே வானதூதர்
தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவற்றிடம் சென்று, நீங்கள்
ஏன் வரவில்லை?, உங்களுக்கு குழந்தை இயேசுவுக்கு முன்பாக நிற்க ஆசையில்லையா?என்று
கேட்டார். அதற்கு கழுதை வானதூதரிடம், "நான் ஒன்றும் அவ்வளவு பெரிய
ஆளில்லை. எப்போதும் மனிதர் என்மீது சுமத்தும் சுமைகளைச் சுமக்கிற
வேலையை மட்டுமே செய்கிறேன். நான் எப்படி குழந்தை இயேசுவுக்கு
முன்பாக நிற்பது" என்று மிக வருத்தத்தோடுச் சொன்னது, கழுதையைத் தொடர்ந்து
கன்று, "நானும் பெரிய ஆளில்லை, என்னுடைய வாலை வைத்துக்கொண்டு குழந்தை
இயேசுவுக்கு அருகே வரக்கூடிய பூச்சி இனங்களை விரட்டுவதைத் தவிர
வேறு என்ன வேலையைச் செய்துவிட முடியும்" என்றது.
கழுதை மற்றும் கன்றினது பேச்சைக் கேட்ட வானதூதர் மிகவும் மகிழ்ந்து
போனார். இவர்கள் இவ்வளவு தாழ்ச்சியாக இருக்கிறார்களோ என்று சொல்லி,
அவர்கள் இருவரையும் குழந்தை இயேசுவுக்கு முன்பாக பாதுகாவலுக்கு அமர்த்தினார்.
ஆணவத்தோடு இருப்பவர் அப்புறப்படுத்தபடுவார், தாழ்ச்சியோடு இருப்பவரோ
என்றென்றைக்கும் உயர்த்தப்படுவார் என்ற உண்மையை இந்த கற்பனைக் கதையானது
மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில்
"தம்மைத் தாமே உயர்த்துகிறவர் யாவரும் தாழ்த்தப்படுவார்,
தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் யாவரும் உயர்த்தப்படுவர்" என,
வாசிக்கிறோம். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தங்களுக்குக்
கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, சாதாரண மக்களை வதைத்தார்கள். அதிகமதிமான
சுமைகளை மக்கள் மீது சுமத்தினார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள்
போதிப்பது ஒன்றும், வாழ்வது ஒன்றுமாய் இருந்தது. ஆணவத்தை அல்ல
தாழ்ச்சியை விரும்பும் கடவுள் எளிய மாட்டுக் குடிலில் பிறக்கின்றார்.தாழ்ச்சியுடன்
இருப்பவரை உயர்த்துகிறார்.
கிறிஸ்து அழகிய குடிலில் பிறப்பதைவிட நம் நெஞ்சக் குடிலில் பிறப்பதை
விரும்புகிறார். ஆகையால், நாம் பொறுப்பில் இருப்பவர்களாகவோ, வேறு
எந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொண்டு
வாழவேண்டும்.என்றைக்கு நாம் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் செயல்படுகின்றோமோ
அன்றைக்கு நாம் அழிந்து போவது உறுதி.
எனவே, நம்முடைய உள்ளத்தில் தாழ்ச்சியை, பணிவை தாங்கி வாழ்வோம்,
வெளிவேடத்தை, அகங்காரத்தை நம்மிடமிருந்து அகற்றி வாழ்வோம், அதன்வழியாக
இறையருளை நிறைவாய்
பெறுவோம்.
மனித பிறப்பு பலவீனமானது கடவுள் பிறப்போ பவீனமானதை பலமாக்குவது.
வல்லமையான கடவுள் வலிமையனதை அல்ல எளியதைத் தேடி வந்தார்.
ஏழை எளிய மக்களை பாவிகளைத் தேடி வந்து அவர்களோடு ஒன்றாகக் கலந்து
நிற்கிறார். இன்று நம் தேவைகளை நிறைவு செய்ய வந்தவர் நம்மையும் எளியோரின்
தேவையை நிறைவு செய்து அவர்களோடு வாழ அறிவுறுத்துகின்றார்.
முதிர் வயதினால் நடமாட முடியாத நிலையில் ஓய்வு இல்லத்தில் இருக்கின்ற
அருட்தந்தையர்கள் ஒவ்வொருவருக்கும் வெளிநாட்டில் மருத்துவப் பணிசெய்கின்ற
அருட்தந்தை ஒருவர் ரூபாய் 3000 கொடுத்து கிறிஸ்மஸ் பெருவிழாவை தனது
வாழ்வில் அர்த்தம் பெறச் செய்கின்றார்.
அந்தப் பணத்தை யாரிடம் கொடுத்தாலும் கொடுக்கத்தான் போகிறார்கள். இருப்பினும்
அந்தப் பணத்தை மிகுந்த அன்போடு எடுத்துச் சென்று கொடுக்கும் அருட்தந்தை
ஒவ்வொரு மூத்த அருட்தந்தையிடமும் அமர்ந்து பேசி அவரது உடனிருப்பு
அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு செய்து தனது பணிக்கு மெருகு
சேர்க்கின்றார்
நமது கிறிஸ்மஸ் விழாவுக்கு நாம் எப்படி மெருகு சேர்க்கப் போகிறோம்
எஅனச் சிந்திப்போம்.
மிகப் பெரிய அளவில் கிறிஸ்மஸ் கொண்டாட விரும்பி அந்த வளாகத்தில்
குடில் காட்சி அரங்கேற்றம் செய்தார்கள். சிறுவர் சிறுமியரை ஒப்பனை
செய்து கபிரியேல் தூதராக, அன்னை மரியாவாக, சூசையாக சிறுமியரை நிற்க
வைத்தார்கள் குட்டி பொம்மை ஒன்றை பாலன் இயேசுவாக தொட்டிலில் கிடத்தி
இருந்தார்கள்.வானதூதராக நின்று கொண்டிருந்த சிறுமி பாலன் இயேசுவாக
இருந்த பொம்மையைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். அன்னை மரியாக
சூசையாக நின்று கொண்டிருந்த சிறுமிகள் பாலன் இயேசுவாக இருந்த
பொம்மையை தூக்கிக் கொண்டு ஓடிய சிறுமியிடம் இருந்து பொம்மையை பறித்தார்கள். ஆனால்
அந்தச் சிறுமியோ பொம்மையை தர மறுத்து அடம் பிடித்தாள். அரங்கத்தில்
இருந்த சில பெரியவர்கள் அந்த பொம்மையை பறிக்க முற்பட்ட போது அழ ஆரம்பித்தாள். அந்த
பொம்மையை அவள் நெஞ்சோடு அனைத்து மகிழ்ந்தாள். பார்த்தவர்கள் எல்லோரும்
சிரித்தார்கள். பொம்மையை தன்னோடு வைத்திருப்பது குழந்தைக்கு மகிழ்ச்சியாக
இருந்தது. பொம்மையின் உடனிருப்பு குழந்தைக்கு மகிழ்ச்சியை
மிகுதியாக்கியது.
நமக்கும் ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பு நம் மகிழ்ச்சியை
மிகுதியாக்குமல்லவா?
இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் இயேசுவை நம்மோடு இருக்கச்செய்ய
என்ன செய்யப் போகிறோம்.
1. நம்மிடம் உள்ள ஆணவத்தை அகற்றுவோம்.
2. எளியோரின் மகிழ்ச்சியை மிகுதியாக்க ஏழைகளுக்கு இயன்ற சிறு சிறு
உதவி செய்வோம்.
3. உடை இல்லாத சிறுவர் சிறுமியருக்கு ஏழைக் கைம்பெண்களுக்கு உடையளிப்போம்.
4. நோயினால் வாடுவோருக்கு ஆறுதல் அளிப்போம்.
5. துன்புறும் ஆதரவற்ற மக்கள் அருகில் நின்று ஆறுதல் சொல்
பேசுவோம்.
6. முதியோர் இல்லங்களில் வாடும் முதியோர்களைக் கண்டு ஆறுதலாய்
பேசுவோம்.
7. யாருமில்லாத அதரவு இழந்த உள்ளங்களை அன்பு செய்வோம்.
8. குடும்பத்தில் பணிசெய்யும் இடங்களில் அன்பை வெளிப்படுத்தி வம்பை
சமன் செய்வோம்.
|
|
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா. |
|
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm |
|
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி. |
சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன!
ஒரு நிழற்படம். மங்கிய மாலைப்பொழுது. திடீரென மழைத்துளிகள்
விழத்தொடங்கும் பொழுது. பழைய கைத்தறிச் சேலை ஒன்றை உடுத்தியவாறு
ஓர் இளம் தாய். அவளுடைய மார்பைக் கட்டிக்கொண்டு
தொங்கும் ஆடையில்லாக் கைக்குழந்தை. அவருக்கு அருகில்
தலையைச் சொறிந்துகொண்டு ஒரு குழந்தை. இரு கைகளையும்
தூக்கிக்கொண்டு இன்னொரு குழந்தை. சாலை ஒன்றில் அமர்ந்துகொண்டிருக்கும்
இந்தக் குடும்பத்திற்குத் தார்ப்பாய்தான் வீடு.
காற்றின் வேகத்தில் தார்ப்பாய் அடித்துச் செல்லப்படாதவாறு
வெறும் இரப்பர் வளையல்கன் அணிந்த தன் கைகளைத் தலைக்கு
மேல் தூக்கிக்கொண்டு மழைக்குள் அமர்ந்திருக்கிற அந்தத்
தாய்க்குப் பெயரில்லை. நிழற்படத்தின் கீழே இத்தாலிய
மொழியில் ஒரு வாக்கியம்: சில குடில்கள் எப்போதும்
நீடிக்கின்றன! (Alcuni presepi durano tutto lanno).
இன்று நம் ஆலயத்தில் குடில் ஜோடித்துள்ளோம். அசிசி நகர்
புனித பிரான்சிஸ் முதன்முதலாக அமைத்த நிஜ மனிதர்களை
வைத்து உருவாக்கிய குடிலின் 800-ஆவது ஆண்டு இது. இந்த
ஆண்டில் நாம் அமைக்கும் குடில்களைச் சந்திக்கும்போதெல்லாம்
ஒப்புரவு அருளடையாளம் பெற்றுத் தூய்மையான நிலையில், நம்பிக்கை
அறிக்கை செய்து, திருத்தந்தையின் கருத்துகளுக்காக
ஜெபித்தால் நமக்குப் பரிபூரண பலன் கிடைக்கும் என அறிவித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். புனித இஞ்ஞாசியார் குடில்
முன் நின்று மேற்கொள்ளும் அழகான காட்சி தியானத்தைத் தன்னுடைய
ஆன்மிகப் பயிற்சிகள் நூலில் எழுதுகிறார். குடில் என்பது
இவ்வாறாக, மறைக்கல்வியும் நம்பிக்கையும் வழங்கும் இடமாகவும்,
காட்சி தியானத்தின் வழியாகக் கடவுளின் மையத்தை நோக்கி
நம்மை நகர்த்தும் புள்ளியாகவும் இருக்கிறது
.
கடவுளால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் எப்படி ஒருவருக்கொருவர்
வேறுபட்டவர்களோ, அவ்வாறே மனிதர்களால் உருவாக்கப்பட்ட
குடில்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன.
ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரி ஜோடிக்கிறோம். கடந்த
ஆண்டு போல இந்த ஆண்டு வேண்டாம் என்றும், அந்த ஆலயத்தில்
செய்ததுபோல நம் ஆலயத்தில் வேண்டாம் என்றும்
நினைக்கிறோம். உலக நிகழ்வுகளின் பின்புலத்தில், மையக்கருத்து
கொண்டு, ஒரே பொருள்களைப் பயன்படுத்தி என நிறைய படைப்பாற்றலைப்
பயன்படுத்தி குடில்கள் ஜோடிக்கிறோம்.
ஒரு பங்குத்தளத்தில் பங்குத்தந்தை ஒருவர் குடில் ஒன்றை
ஜோடித்து, குழந்தை இயேசுவை வைப்பதற்குப் பதிலாக முகம்
பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைத்து, அதன் மேலே, நீங்களே
இங்கு பிறக்கிற கிறிஸ்து என எழுதி வைத்தார். இவ்வாறாக,
புதிய புதிய கருத்துகளுடனும் வடிவங்களுடனும் கிறிஸ்து
ஒவ்வோர் ஆண்டும் பிறக்கிறார். ஆனால், நாம்
வைத்திருக்கிற இக்குடில்கள் பிரிக்கப்படும். நாம் இன்று
குடில்கள் வைக்கிற இடத்தில் இன்னும் நான்கைந்து மாதங்களுக்குள்
உயிர்த்த ஆண்டவரை வைப்போம். குடில்கள் குகைகளாக
மாறிவிடுகின்றன. நாம் அமைக்கும் குடில்கள் பிரிக்கப்படுகின்றன.
புதிய குகைகளாக அவை மாறுகின்றன.
ஆனால், சில குடில்கள் என்னவோ எப்போதும் நீடிக்கின்றன.
அவை ஒருபோதும் மாறுவதில்லை.
ஆண்டவராகிய இயேசு பிறந்த முதல் குடில் பற்றி எழுதுகிறார்
புனித லூக்கா. குடில்கள் எதுவும் அமைக்கப்படாமலேயே ஒரு
தம்பதியரின் பயணம் புறப்படுகிறது. யோசேப்பு தன் மனைவி
மரியாவை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வருகிறார்.
கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து புறப்பட்டு
யூதேயாவிலுள்ள பெத்லகேம் நோக்கி வருகிறார்கள்
யோசேப்பும் மரியாவும், மரியாவின் வயிற்றில் உள்ள குழந்தையும்.
கடவுள் தம் சொந்த ஊருக்கு வருகிறார். கடவுள் மனிதர்கள்
நடுவே வசிக்க வருகிறார். இதையே யோவான் நற்செய்தியாளர்,
அவர் தமக்குரியவர்களிடம் வந்தார் (யோவா 1:11) எனப்
பதிவு செய்கிறார். நாம் எல்லாரும் அவருக்கு உரியவர்கள்.
அவர் நம்மைத் தேடி வருகிறார். இயேசுவின் முதற் பயணம்
நாசரேத்திலிருந்து யூதேயாவை நோக்கி இருந்ததுபோல, அவருடைய
இறுதிப் பயணமும் இருக்கும். தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்ட
இயேசு, சிலுவையில் கிடத்தப்படுவார். அப்பத்தின் வீடு
என்னும் அழைக்கப்படும் பெத்லகேமில் பிறந்த இயேசு, எருசலேமில்
நற்கருணையை ஏற்படுத்தித் தம்மையே உணவாக வழங்குவார். எருசலேமிலிருந்து
அவர் மீண்டும் தம் தந்தையிடம் திரும்புவார். கடவுள்
நம்மோடு என நம்மிடம் வந்த இயேசு, கடவுள் நமக்காக
எனக் கடவுளிடமே திரும்புவார்.
மரியா கருவுற்றிருந்தார் என்றும், அவர்கள்
யூதேயாவுக்கு வந்தபோது அவருக்குப் பேறுகாலம் வந்தது
எனவும் எழுதுகிறார் லூக்கா. கருவுற்ற பெண்கள், பேறுகாலத்திற்குக்
காத்திருக்கிற பெண்களும் பயணம் செய்ய வேண்டும் என்ற
நிலை ஏற்படும் அளவுக்குக் கொடுமையாக இருந்த மக்கள்
தொகைக் கணக்கு நமக்குச் சற்றே கோபத்தை வரவைக்கிறது. அன்றிலிருந்து
இன்றுவரை அதிகாரம் என்னவோ வலுவற்றவர்களைப் பொருட்படுத்தாததாகவே
இருக்கிறது.
குழந்தையைப் பெற்றெடுக்கிற மரியா தீவனத்தொட்டியில் குழந்தையைக்
கிடத்துகிறார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை
என்று இதற்கான காரணத்தைப் பதிவிடுகிறார் லூக்கா. இந்த
வாக்கியத்துக்கு விளக்கம் தருகிற பேராயர் ஷீன்,
அன்றைய நாளில் விடுதிகள் நிரம்பி வழிந்தன. அங்கே அமைச்சர்களுக்கு
இடம் இருந்தது. அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு இடம்
இருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் அதிகாரிகளுக்கு
இடம் இருந்தது. ஆளுநரின் படைவீரர்களுக்கு இடம் இருந்தது.
இரண்டு மடங்கு பணம் கொடுத்துப் பெறுவதற்கு இடம் இருந்தது.
ஆனால், நாசரேத்துத் தம்பதிக்கு இடமில்லை. கடவுள் எமக்கு
வேண்டாம் என்று அன்றே சொன்னது மனுக்குலம். இதையே
யோவான், அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள்
அவரை ஏற்றக்கொள்ளவில்லை (யோவா 1:11) என எழுதுகிறார்.
ஒட்டுமொத்த உலகையும் படைத்த கடவுளுக்கு விடுதியில் இடம்
மறுக்கப்பட்டபோது யோசேப்பும் மரியாவும் அங்கிருந்து
நகர்கிறார்கள். தாங்கள் யாரென்றும் மரியாவின் வயிற்றில்
இருப்பது யாரென்றும் அவர்கள் மற்றவர்களுக்குப் புரியவைக்க
விரும்பவில்லை. தன் கனவுபற்றி யோசேப்பு வாய்திறக்கவில்லை.
கபிரியேல் தூதரைக் கண்ட காட்சி பற்றி மரியா சொல்லவில்லை.
ஏனெனில், பெரிய புதையலைக் கண்ட ஒருவன், எல்லாரிடமும்
போய், என்னிடம் புதையல் ஒன்று இருக்கிறது எனச்
சொன்னால் அவனை யாரும் நம்ப மாட்டர்கள் என்பது அவர்களுக்குத்
தெரியும்.
கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச்
செய்கிறார் எனப் பதிவு செய்கிறது விவிலியம் (சஉ
3:11). இடமும் தமக்குரியது காலமும் தமக்குரியது என்பது
கடவுளுக்குத் தெரியும். மனிதர்களின் நோ! என்னும்
சொல், கடவுளை நம்மிடமிருந்து வெளியேற்றிவிட இயலாது.
அவர் மாடடைக் குடிலில் பிறக்கிறார். தீவனத்தொட்டி அவருடைய
இருப்பிடமாகிறது. துணிகள் சுற்றப்படுகின்றன. முதற்பெற்றோரின்
பாவத்தால் வந்தது ஆடை. பாவம் போக்கப் பிறந்த குழந்தையையும்
தழுவிக்கொள்கின்றன ஆடைகள். தீவனத்தொட்டி, ஆடைகள், குழந்தை
இம்மூன்றும் வானதூதர் வழங்குகிற அடையாளமாக மாறுகின்றன.
விடுதியில் இடம் இல்லையென்றாலும் தீவனத்தொட்டியும் ஆடைகளும்
தயாராக இருந்தன குழந்தைகள். ஆக, கிறிஸ்து பிறப்பு என்பது
எதிர்மறையான நிகழ்வு அன்று. மனிதர்களின் நிராகரிப்புக்
கடவுளை ஒருபோதும் அந்நியமாக்கிவிடாது. அவர் தமக்கென ஓர்
இடத்தைக் கண்டுபிடித்துக்கொள்கிறார்.
இந்நிகழ்வு நடந்துகொண்டிருக்கிற இதே நேரத்தில் நடக்கும்
நிகழ்வுபற்றித் தொடர்ந்து எழுதுகிறார் லூக்கா:
இங்கே மாடடைக் குடில். அங்கே திறந்தவெளி. குடிலை ஒளிர்விக்கிறார்
கடவுளின் மாட்சியாகிய கிறிஸ்து.
திறந்தவெளியை ஒளிர்விக்கிறது கடவுளின் மாட்சிநிறை ஒளி.
வார்த்தை இங்கே பிறந்து கிடக்கிறது. வார்த்தை அங்கே அறிவிக்கப்படுகிறது.
இங்கே விழித்திருக்கிறார்கள் யோசேப்பும் மரியாவும். அங்கே
விழித்திருக்கிறார்கள் இடையர்கள்.
பொய்யர்கள், திருடர்கள், மற்றவர்களின் விளைச்சலில் தம்
மந்தைகளை மேயவிட்டு வளர்ப்பவர்கள், அழுக்கர்கள் எனச்
சொல்லப்பட்ட இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது குழந்தை
பிறப்பின் செய்தி: இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும்
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய
மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில்
பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில்
கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்.
ஒரே மூச்சில் சொல்லி முடிக்கிறார் வானதூதர்
.
அகுஸ்து சீசர் போன்ற அரசர்களின் பிறப்புச் செய்தி மகிழ்ச்சியாக
அறிவிக்கப்பட்ட அந்நாள்களில் இயேசுவின் பிறப்புச்
செய்தியும் மகிழ்ச்சியின் செய்தியாக அறிவிக்கப்படுகிறது.
ஆக, குழந்தை என்பது வலுவின்மையின் அடையாளமாக இருந்தாலும்
இன்னொரு பக்கம் அது ஓர் இளவரசராகவும் இருக்கிறது.
ஆண்டவர், மெசியா, மீட்பர் என்னும் மூன்று தலைப்புகளை
குழந்தைக்கு வழங்குகிற வானதூதர், உங்களுக்காக பிறந்திருக்கிறார்
என அறிவிக்கிறார்.
யாரெல்லாம் மெசியாவுக்காகக் காத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு
மட்டுமே மெசியாவின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது. இன்றைய
முதல் வாசகத்தில், யூதா நாடு வலுவற்றிருந்தபோது,
போர்மேகங்களும் குழப்பமும் கலக்கமும் சூழ்ந்திருந்த
வேளையில் இறைவாக்குரைக்கிற எசாயா, ஒரு குழந்தை நமக்குப்
பிறந்துள்ளார். ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும். அவர்
திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள
தந்தை, அமைதியின் அரசர் எனப்படும் என மொழிகிறார். இக்குழந்தை
அரசர் எசேக்கியாவைக் குறிப்பதுபோல இருந்தாலும், கிறிஸ்தவ
வாசிப்பில் இது இயேசுவையே குறிக்கிறது. ஏனெனில், என்றுமுள
ஒருவரே என்றுமுள தந்தையாகவும் வலிமைமிகு இறைவனாகவும்
இருக்க முடியும்.
அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும்
அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்துள்ளார்
எனத் தொடர்ந்து பதிவு செய்கிறார் யோவான் (1:12). இதையே,
உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி, உலகில் அவருக்கு உகந்தோருக்கு
மகிழ்ச்சி எனப் பாடுகிறார்கள் வானதூதர்கள்.
உன்னதம் அல்லது விண்ணகம் என்றால் என்ன என விளக்குகிற
புனித அகுஸ்தினார், விண்ணகம் என்பது மேலே இருக்கும்
ஓர் இடம் அல்ல, மாறாக, நம் இதயத்தின் ஒரு பகுதி என எழுதுகிறார்.
உடைந்த இதயம்கொண்டோருக்கு அருகில் உள்ளார் கடவுள்
(காண். திபா 34:18). தாழ்ச்சியோடு நாம்
குனியும்போதுதான் அவரைக் கண்டுகொள்ள முடியும். இதன்
பின்புலத்தில்தான் இன்றும் பெத்லகேமில் உள்ள இயேசு பிறந்த
ஆலயத்தின் நுழைவாயில் மிகவும் சிறியதாக உள்ளது. தங்களையே
வளைத்துக் குனிந்து நடக்கத் தயாராக இருப்பவர்களே உள்ளே
நுழைய முடியும்.
கடவுள் தம் சொந்த ஊருக்குப் பயணம் செய்கிறார்,
கடவுள் குழந்தைபோல வலுவின்மையை ஏற்கிறார், கடவுள்
நிராகரிக்கப்படுகிறார், கடவுள் நம் உணவாகத் தீவனத்தொட்டியில்
கிடக்கிறார், முதல் ஆதாம் போல இந்த இரண்டாம் ஆதாமும்
ஆடைகளால் உடுத்தப்படுகிறார், கடவுளின் மாட்சி ஒளிர்கிறது
என்று கிறிஸ்து பிறப்பு பற்றி நாம் புரிந்துகொள்ளும்
அனைத்துப் பாடங்களையும் ஒற்றை வரியில் தீத்துவுக்கு எழுதுகிறார்
பவுல்: மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள்
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக, கடவுளே வெளிப்படுத்தினாலன்றி
அவருடைய மறைபொருளை நாம் அறிந்துகொள்ள இயலாது. கடவுள்
மனித வலுவின்மை, இயலாமை வழியாகத் தம்மையே வெளிப்படுத்துகிறார்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நமக்குத் தரும் பாடங்கள்
எவை?
(அ) நாம் ஒவ்வொருவரும் கடவுள் பிறக்கிற குடில். நாம்
இன்று அமைத்துள்ள குடில்கள் பிரிக்கப்படும். பிரிக்கப்படாத
ஒரு குடில் என்றால் அது நம் ஒவ்வொருவருடைய வாழ்வுதான்.
நம் குடிலிலும் யோசேப்பு, மரியா போல நம் பெற்றோர்கள்,
இடையர்கள் போல உறவினர்கள், ஞானியர்கள் போல ஆசான்கள்,
பெரியவர்கள் இருக்கிறார்கள். நம் குடிலும் சில நேரங்களில்
நாற்றம் அடிக்கும். ஆனால், இந்தக் குடிலில்தான் கடவுளின்
மாட்சி வெளிப்படுகிறது. இந்தக் குடிலில்தான் நம் வலுவின்மை
வெளிப்படுகிறது. நம்மைத் தாங்கவதற்குத் தீவனத்தொட்டியும்,
உடுத்திக்கொள்ள ஆடைகளும் தேவை. நாம் வாழ்க்கை என்னும்
குடிலை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வோம்.
(ஆ) நம்மைப் போலவே நமக்கு அடுத்திருப்பவரும் ஒரு
குடில். அந்தக் குடிலிலும் கடவுள் இருக்கிறார்.
வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார் எனக்
கடவுளின் மனுவுருவாதல்பற்றிப் பதிவு செய்கிறார் யோவான்
(1:18). கடவுள் மனிதநிலையை ஏற்றதால் நம் மனிதம் இறைமை
நிலையை அடைந்து மதிப்பும் மாட்சியும் பெறுகிறது. ஒவ்வொரு
குழந்தையிலும் ஆண்டவரை, மெசியாவை, மீட்பரை நாம் கண்டுகொள்ள
வேண்டும். ஒவ்வொரு மனிதரிலும் அவரைக் கொண்டாட
வேண்டும். உங்களுக்காகப் பிறந்துள்ளார் என
மொழிகிறார் வானதூதர். நமக்கு அருகில் இருக்கும் ஒவ்வொருவரும்
நமக்காகப் பிறந்துள்ளார். இவ்வுலகம் நமக்கானது. அனைவரும்
நமக்குரியவர்கள். ஆக, ஒருவர் மற்றவரை அவருடைய வலுவின்மையோடு
நாற்றத்தோடு நெடியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(இ) தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த இயேசுவை இப்போது
நாம் நற்கருணையில் உட்கொள்ளப்போகிறோம். வாழ்வுதரும்
உணவாக அவர் நம்மையே தொடர்ந்து தருகிறார். தீவனத்தொட்டியில்
கிடத்தப்பட்ட இயேசுவின் உடல் சிலுவையில் கிடத்தப்பட்டு
நமக்கு மீட்பாக மாறுகிறது. அவருடைய உணவை உட்கொள்ளும்
நாம் அவரைப் போலவே மாறுவது அவசியமாகிறது. நாம் எத்தனை
குடில்கள் அமைத்துக் கொண்டாடினாலும் இயேசு அங்கே பிறப்பதில்லை.
ஏனெனில், அவர் பிறந்து, வாழ்ந்து, இறந்து, உயிர்த்து
நம்மோடு எப்போதும் வாழ்கிறார். அவர் மீண்டும் அரசராக
வருவார் என்பதே நம் எதிர்நோக்கு. மண்ணகத்தின் குடில்களைக்
காணும் நாம் விண்ணகத்தின் நம் நிலையான குடிலை நோக்கி
நம் உள்ளத்தைத் திருப்புவோம். அங்கே இயேசு கடவுளின்
வலப்புறம் வீற்றிருக்கிறார்.
சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன.
அரசு மருத்துவமனைகளில்.
அநாதை இல்லங்களில்.
முதியோர் காப்பகங்களில்.
சிறைகளில்.
புலம்பெயர்ந்தோரின் முகாம்களில்.
பேருந்து நிலையங்களில், இரயில் நிலையங்களில்.
சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன.
சொந்த ஊரிலும் மாட்டுத்தொழுவம் மட்டுமே தமக்குச் சொந்தமாக
இருந்த யோசேப்பு போல, தன் வயிற்றில் உள்ள குழந்தை உன்னத
கடவுளின் மகன் என்றாலும் மௌனமாக நகர்ந்த மரியா போல,
நாம் என்னவோ நகர்ந்துகொண்டே இருக்கிறோம் நம் நிலையான
குடில் நோக்கி!
ஆம், சில குடில்கள் எப்போதும் அகற்றப்படுவதில்லை! |
|
மறையுரைச்சிந்தனை - அருள்பணி மரிய அந்தோணி
பாளையங்கோட்டை |
முதலாம் வாசகம்: எசாயா 52:7-10
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 1: 1-6
நற்செய்தி வாசகம்: யோவான் 1: 1-18
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்.
முன்பொரு காலத்தில் பெர்சியா நாட்டை ஆண்ட ஷா என்ற மன்னர்
மக்கள்மீது அதிகமான அக்கறையும், அன்பும் கொண்டவராக இருந்தார்.
எந்தளவுக்கு என்றால் இரவு நேரங்களில் மாறுவேடத்தில்
நகர்வலம் சென்று, மக்களோடு பேசுவார். அப்போது அவர்கள்
சொல்லக்கூடிய குறை, நிறைகளை எல்லாம் கருத்தில் எடுத்துகொண்டு,
மக்களுக்கு எது தேவையோ அதை செய்துவந்தார். இதனால் மக்கள்
அனைவரும் அவரது ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருநாள் அரசர் ஊரில் இருக்கக்கூடிய பொதுக்குளியல் அறைகள்
பகுதிக்குச் சென்றார். அங்கே மக்கள் குளிப்பதற்காக தண்ணீர்
வெதுவெதுப்பான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வேலையை
முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பக்கூடியவர்கள் அதில்
மகிழ்ச்சியாகக் குளித்துவிட்டு வீட்டுக்குத்
திரும்புவார்கள். இப்படி மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகக்
குளிக்க, தண்ணீரை சூடாக்குகின்ற பணியை யார்
செய்கிறார்? என்று பார்ப்பதற்காக மன்னர்
பொதுக்குளியல் அறைகள் இருக்கக்கூடிய பகுதியின் உட்புறத்திற்குச்
சென்றார்.
அங்கே ஒரு தாழ்வான அறை இருந்தது. அதில் ஒரு பெரியவர்
நாள் முழுவதும் வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய அளவில் தண்ணீரைச்
சூடாக்கிக் கொண்டிருந்தார். சாதாரண மனிதர் உருவில் இருந்த
அரசர், அம்மனிதரிடம் பேச்சுக்கொடுத்தார். அதற்கு அம்மனிதர்,
"
நாள் முழுவதும் இந்த இருட்டு அறைக்குள் சூட்டையும்,
வெக்கையையும் தாங்கிக்கொண்டு வேலைபார்த்தாலும் மக்கள்
மகிழ்ச்சியாக குளிக்கிறார்ளே என்று நினைக்கும்போது எனக்கு
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது"
என்றார். அதோடு
நின்றுவிடாமல், அவர் தன்னிடம் இருந்த கொஞ்சம் உணவையும்
சாதாரண உடையில் இருந்த அரசரோடு பகிர்ந்து உண்டார்.
இவற்றையெல்லாம் பார்த்து அரசருக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.
சிறிதுநேரம் அவர் அவரிடம் பேசிவிட்டு, இன்னொரு நாள் வருவதாக
வாக்குறுதி கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து
விடைபெற்றுச் சென்றார்.
ஒருசில நாட்களுக்குப் பிறகு அரசர் மீண்டுமாக அந்த மனிதர்
இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரிடம் பேசினார். அன்றைக்கு
அரசர் அவரிடம், "
உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்,
நான் தருகிறேன்"
என்று சொல்லிவிட்டு, தான் யார் என்பதை
அவருக்கு வெளிப்படுத்தினார்.
அரசர்தான் தன்னைப் பார்க்க இங்கே மாறுவேடத்தில் வந்திருக்கிறார்
என்பதை அறிந்துகொண்டு அந்த மனிதர், "
அரசே! எனக்கு எதுவும்
வேண்டாம். யாருமே வராத இந்தப் பகுதிக்கு வந்து, என்னைப்
பார்த்துப் பேசினீர்களே, அந்த அன்பு ஒன்றே போதும்"
என்றார்.
தான் அரசனாக இருந்தாலும், தன்னுடைய நிலையிலிருந்து இறங்கிவந்து,
சாதாரண மனிதரைப் பார்க்கவந்த அந்த ஷா என்ற அரசரைப்
போன்றுதான் இயேசுவும் விண்ணிலிருந்து இறங்கிவந்து, மண்ணில்
மனிதனாக வாழவருகின்றார்.
இன்று நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் மகிழ்வோடு
கொண்டாடுகின்றோம். கடவுளோடு, கடவுளாக இருந்த
வார்த்தையாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு சாதாரண குழந்தையாகத்
தோன்றுகின்றார். இப்படி ஒரு குழந்தையாகப் பிறந்திருக்கும்
இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நமக்கு என்ன செய்தியைத்
தருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள் உஷ்ணம் (வெப்பம்) அதிகரித்தால்
பெருமழை வரும் என்று. அதே போன்றுதான் மக்களின்
வாழ்வில் துன்பமும், வேதனையும் அதிகரிக்கின்றபோது இறைவன்
தாமாகவே இறங்கிவந்து, அவர்களின் துன்பத்தை இன்பமாக
மாற்றுவார். இது உண்மை.
இஸ்ரயேல் மக்கள் தங்களை ஆண்ட உரோமையரின் ஆட்சிக்காலத்தில்
சந்தித்த துன்பங்கள், வேதனைகள் ஏராளம். அவற்றையெல்லாம்
வார்த்தையால் விளக்கிச் சொல்லமுடியாது. அந்தளவுக்கு
அவர்கள் கொடுமைகளைச் சந்தித்தார்கள். இதைக் கண்ணுற்றதாலோ
என்னவோ, கடவுள் தன்னுடைய ஒரே மகனை உலகிற்கு அனுப்பி,
அவர்களுக்கு வாழ்வுகொடுக்க முன்வருகிறார். எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், "
பலமுறை, பலவகைகளில்
முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் முன்னோர்களிடம்
பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தன் மகன் வழியாகப்
பேசியுள்ளார்"
என்று. ஆக, கடவுளே தன் மக்கள்மீது இரக்கம்கொண்டு,
தன்னுடைய ஒரே மகனையும் இந்த உலகிற்கு அனுப்பி வாழ்வளிக்கின்றார்
என்று சொன்னால் அது மிகையாது.
அடுத்ததாக, கடவுள் தன்னுடைய மகன் வழியாக இந்த உலகிற்கு
அளிக்கும் கொடை எத்தகையதாக இருக்கும் என்பதை இன்றைய முதல்
வாசகத்தில் நாம் படிக்கின்றோம். விண்ணத்திலிருந்து இறங்கி
வரும் மெசியாவாகிய இயேசு நற்செய்தியையும், நல்வாழ்வையும்,
ஆறுதலையும், மீட்பையும் தருவார் என்று எசாயா இறைவாக்கினர்
அங்கே சுட்டிக்காட்டுகின்றார். ஆகவே, இயேசுவின் பிறப்பினால்
நமக்கு எல்லாவிதமான ஆசிரும், அருளும், மீட்பும்
கிடைக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு
பிரபல மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிக்கு மகப்பேறு அறுவைச்சிகிச்சை
நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் கணவர்
வெளியே நின்றுகொண்டு, தன்னுடைய மனைவிக்கு என்ன ஆகுமோ?
என்று பரபரப்பாக இருந்தார்.
நீண்டநேர இடைவெளிக்கு பின்னர் வெளியே வந்த மருத்துவர்
அப்பெண்ணின் கணவரைத் தனியாக அழைத்து, "
தயவு செய்து எங்களை
மன்னித்துக்கொள்ளுங்கள், நாங்கள் எவ்வளவோ போராடியும்
உங்களுக்குப் பிறந்த குழந்தையை, இரண்டு மணிநேரத்திற்கும்மேல்
உயிர்பிழைக்கச் வைக்கமுடியவில்லை, மிகவும் பலவீனமாகப்
பிறந்த அந்தக்குழந்தை இப்போது இறந்துவிட்டது"
என்றார்.
இதைக் கேட்டு அவர் வீரிட்டு அழுதார்.
அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மனதைத்
தேற்றிக்கொண்டு அந்த மருத்துவரிடம், "
இன்று காலையில்
ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். அதாவது பக்கத்தில் இருக்கும்
ஒரு மருத்துவமனையில் ஒருவருக்கு இதய அறுவைச்
சிகிச்சையும், இன்னொருவருக்கு கண் சிகிச்சையும் நடைபெறுகிறது.
இறந்துபோன என்னுடைய குழந்தையின் இரண்டு கண்களையும்,
இதயத்தையும் தேவையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும்
பொறுத்தி வாழ்வளிக்கலாமே"
என்றார். இதைப் கேட்ட அந்த
மருத்துவர் மிகவும் சந்தோசப்பட்டார்.
உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன.
ஒருமணிநேரத்திற்குள்ளாகவே இறந்த அந்த குழந்தையின் கண்கள்
ஓர் ஏழைக்குப் பொறுத்தப்பட்டது. அதன் இதயமோ கணவனை இழந்து
தவித்த ஒரு விதவைக்குப் பொறுத்தப்பட்டது. இப்படியாக அந்த
குழந்தையால் இரண்டுபேர் வாழ்வு பெற்றார்கள். இந்த குழந்தையைப்
போன்றுதான் இயேசுவின் வருகையால் நாம் வாழ்வு
பெற்றுக்கொண்டோம்.
யோவான் நற்செய்தி 10:10, "
ஆடுகள் வாழ்வைப்
பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்"
என்று இதைதான் ஆண்டவர் இயேசு கூறுவார். ஆகவே, இயேசுவின்
மானிடப் பிறப்பால், நாம் அனைவரும் வாழ்வினைப்
பெற்றுக்கொண்டோம், அவரது அருளால் இன்றும் வாழ்கின்றோம்
என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே வாழ்வினை நிறைவாகத் தரவந்த ஆண்டவர் இயேசுவுக்கு
கைமாறாக நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் நமது சிந்தனைக்கு
உரியதாக இருக்கின்றது.
யோவான் எழுதிய இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம்,
"
அவரிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட
ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை
அளித்தார்"
என்று. அதாவது கடவுளின் திருமகனாகிய ஆண்டவர்
இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும் அல்லது ஏற்றுக்கொண்டு
வாழவேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு, நம்பிக்கைவைத்து
வாழும்போது இறைவன் நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வார்
என்பதே இங்கே குறித்துக்காட்டப்படும் செய்தியாக இருக்கின்றது.
எனவே, நம்மைத் தேடிவரும் இயேசுவை நாம் ஏற்றுக்கொள்வதுதான்
மீட்பிற்கான, வாழ்விற்கான வழியாக இருக்கின்றது.
ஆனால் நடைமுறையில் அவரை ஏற்றுக்கொள்ளாததும், அவர்மீது
நம்பிக்கை வைக்காமல் வாழ்வதும்தான் வேதனையான உணமையாக
இருகின்றது. "
அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு
உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எவ்வளவு வேதனை
நிறைந்த வார்த்தைகளாக இருக்கின்றது.
ஒரு போர்த்துக்கீசிய நாவலில் வரக்கூடிய நிகழ்வு இது.
ஜான் என்ற இளைஞன் கப்பலுக்கு வேலைக்குச் சென்று, பல ஆண்டுகளுக்குப்
பிறகு பெரும்செல்வம் திரட்டிக்கொண்டு, தன்னுடைய சொந்த
ஊரான லிஸ்பனில் வந்து இறங்கினான்.
அப்போது அவனுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. இப்படியே
உறவினர்களது வீட்டிற்குச் செல்லாமல், கிழிந்த, அழுக்கான
உடையில் செல்வோம். அப்போது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்
என்று பார்த்துவிட்டு, அதன்பிறகு அவர்களது
வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்துகொண்டு, ஒரு
கிழிந்த அழுக்கான சட்டையும், ட்ரவுசரையும்
போட்டுக்கொண்டு தன்னுடைய நெருங்கிய உறவினரான பட்ரோவின்
வீட்டிற்குச் சென்றான்.
அங்கே அவரிடம், "
கப்பலில் விபத்து ஏற்புட்டு, என்னிடம்
இருந்த பணமெல்லாம் போய்விட்டது, இப்போது இந்தநிலைக்கு
ஆளாகிவிட்டேன். அதனால் ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரைக்கும்
இங்கே தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு அவருடைய
உறவினரோ, "
என்னுடைய வீட்டில் போதுமான இடமில்லை, அதனால்
தயவுசெய்து வேறொரு இடத்தில் போய் தங்கிக்கொள்"
என்று
சொல்லி விரட்டிவிட்டார்.
அவனும் சரி என்று சொல்லிவிட்டு, தன்னுடைய நண்பர்கள்,
தெரிந்தவர்கள் என்று எல்லாரிடமும் கேட்டுப்பார்த்தான்.
ஆனால் எல்லாருமே ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லி,
அவனுக்கு இடம்தராமல் விரட்டிவிட்டார்கள். இறுதியாக அவன்,
இனிமேலும் இவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்று
தான்வைத்திருந்த பெரும் செல்வத்தை வைத்து ஒரு மிகப்பெரிய
மாடமாளிகை கட்டினான், அவனுக்கென்று பணியாளர்களை
வைத்துக்கொண்டான். இதனால் சில நாட்களிலேயே அவனுடைய
செல்வச் செழிப்பைப் பற்றிய பேச்சு லிஸ்பன் நகர் முழுவதும்
பரவியது.
இதைக் கேள்விப்பட்ட ஜானின் உறவினர்கள், நண்பர்கள்
இவையெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கு
வீட்டில் இடம் கொடுத்திருக்கலாமே என்று வருத்தப்பட்டார்கள்.
மக்கள் நம்மிடம் பணம் இருந்தால் ஒருவிதமாக நடந்துகொள்வதும்,
பணம் இல்லையென்றால் வேறொரு விதமாக நடந்துகொள்வதும் வேதனையாக
இருக்கின்றது. இயேசு சாதாரண ஒரு மனிதராகப் பிறந்ததனால்தான்
என்னவோ, அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு செல்வந்தராக
இருந்தும், நமக்காக ஏழையானார். எல்லாம் நம்மீது வைத்த
அன்புதான்.
ஆகவே, இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் நம்மைத்
தேடி வரும் இறைவனின் மேலான அன்பைப் புரிந்துகொள்வோம்,
அவரை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். இறைவனிடமிருந்து
பெற்ற அன்பை ஒருவர் மற்றவருக்குக் காட்டுவோம்.
எல்லாரையும் இறைவனின் மக்களாக ஏற்றுகொள்வோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
|
|
மறையுரைச்சிந்தனை -
அருட்பணி.குழந்தை
இயேசு பாபு |
மு.வா: எசா: 9: 2-4,6-7
ப.பா:திபா 96: 1-2. 2-3. 11-12. 13
இ.வா:தீத்து: 2: 11-14
ந.வ: லூக்:2: 1-14
இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியா!
இந்த உலகத்தில் புதிதாக ஒரு குழந்தை பிறக்கிறது என்றால்
அது அனைவருக்கும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மனுக்குலத்தின்
சின்னச் சின்ன ஆசைகளின் இறுதி வெளிப்பாடுதான் இந்த
கிறிஸ்து பிறப்பாகும். ஆண்டவர் இயேசு இருளை அகற்றி ஒளியேற்றும்
இளம் ஞாயிறாக பிறந்துள்ளார். இயேசுவின் பிறப்பு அடிமை
வாழ்வு வாழ்ந்த மக்களுக்கு விடுதலையை வழங்குவதாக இருக்கின்றது.
இருளில் உள்ளவர்கள் ஒளியைக் காணவும் அமைதியின் வழித்தடங்களை
உருவாக்கவும் பரிவுள்ளத்தாலும், பாசத்தாலும், இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து மண்ணகம் வந்த புதிய விடியலாக இயேசு இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவைக்
கொண்டாடுகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு நமக்குச்
சுட்டிக்காட்டும் வாழ்வியல் பாடத்தை மறந்து
விடுகிறோம். அவற்றைச் சிந்தித்துப் பார்க்க இன்றைய
நாளில் சிறப்பாக அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய முதல் வாசகத்தில்
இறைவாக்கினர் எசாயா "இம்மானுவேல்" பற்றி இறைவாக்கு உரைத்தார்.
"இம்மானுவேல்" என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள்.
இஸ்ரயேல் மக்கள் அதிகமாக அடிமைத்தனங்களை அனுபவித்துள்ளனர்.
போரில் தோல்வியுற்று அதன் விளைவாக பல்வேறு துன்பங்களுக்கு
உள்ளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். மேலும் அவர்கள்
அடிமைகளாக அசிரியா நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இத்தகைய சூழலில் அவர்கள் கண்ணீரோடும் கவலையோடும் இருந்தனர்.
அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகத் தான் இன்றைய
முதல் வாசகம் அமைந்துள்ளது. "காரிருளில் நடந்துவந்த மக்கள்
பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள
நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது"
என்ற இன்றைய இறைவார்த்தை அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்
விதமாக அமைந்துள்ளது. அதேபோல ஒரு ஆண் மகவு கொடுக்கப்படுவதாக
சுட்டிக்காட்டப்படுகின்றது. "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்;
ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்
பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ
`வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை,
அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின்
உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும்
முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின்
அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும்
நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது
உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச்
செய்து நிறைவேற்றும்" என்ற இறைவசனம் ஆண்டவரின் அளப்பரிய
அன்பைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. துன்பத்தில்
உழன்று கொண்டிருந்த இஸ்ரேல் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும்
விதமாக அமைந்துள்ளது. இறைவாக்கினர் எசாயாவின் மூலம் இம்மகிழ்ச்சியான
செய்தி இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆயர் பணியில் திருமுகங்களில்
மூன்றாவதாக வருகின்ற தீத்துவிற்கு எழுதப்பட்ட திருமுகத்தை
நாம் வாசிக்கிறோம். தீத்து ஒரு பிற இனத்து கிறித்தவர்.
ஆனால் இவர் பவுலின் பயணத்திலும் பணியிலும் உடனிருந்தவர்.
இந்த பகுதியானது ஒரு கிறிஸ்தவர் எப்படி வாழ வேண்டும்
என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. மக்கள்
அனைவரும் அன்பு, அமைதி, நல்லொழுக்கம் கொண்டு வாழ இத்திருமுகம்
அழைப்பு விடுக்கின்றது. உலகத்திலுள்ள மனிதர் அனைவரையும்
மீட்பதற்காகக் கடவுள் தனது அருளை தன்னுடைய மகன் வழியாக
வெளிப்படுத்தியுள்ளார். அந்த மகன் வழியாக அனைவரும்
மீட்புப் பெற வேண்டுமென கடவுள் திருவுளம் கொண்டார் என்ற
நற்செய்தியை அறிவிக்கும் விதமாக இன்றைய இரண்டாம் வாசகம்
அமைந்துள்ளது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் அகுஸ்துஸ் சீசர் எல்லா மக்களும்
அவர் அவர்களின் சொந்த ஊர்களில் தங்கள் பெயர்களை பதிவு
செய்ய கட்டளை பிறப்பித்தான். எனவே பேறுகால நேரத்திலும்
அன்னை மரியாவை கூட்டிக்கொண்டு சூசையப்பர் சென்றார்.
போகும் வழியில் பேறுகால வேதனை வரவே அவர்கள் இடம் தேடினர்.
இவர்களைப் போலவே எண்ணற்ற மக்கள் பெயர்களை பதிவு செய்யச்
சென்றதால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இறுதியில்
ஒரு மாட்டுத் தொழுவம் தான் அவர்களுக்கு கிடைத்தது. எனவே
இந்த உலகை மீட்க நம்மைத் தேடி வந்த மீட்பர்
மாட்டுத்தொழுவத்தில் பிறக்கத் திருவுளம் கொண்டார். இது
எதைச் சுட்டிக் காட்டுகிறது என்றால் எளிமையின் இடத்தில்தான்
இயேசு பிறப்பார் என்ற சிந்தனையையே. மேலும் இந்தப் பிறப்பின்
நற்செய்தி முதன்முதலாக இயேசு பிறந்த காலத்தில் இழிவானவர்களாக
கருதப்பட்ட இடையர்களுக்குத் தான் முதன் முதலாக வானதூதரால்
அறிவிக்கப்பட்டது.
இயேசுவின் பிறப்பு நமக்கு எளிமையின் மேன்மையை
சுட்டிக்காட்டுகின்றது. அப்படிப்பட்ட எளிமை தான் நமக்கு
நிறைவான மகிழ்ச்சியைக் கொடுக்கும். இந்த உலகைப் படைத்த
கடவுள் தான் திருவுளம் கொண்டிருந்தால் அரச குடும்பத்தில்
பிறந்திருக்கலாம். ஆனால் சாதாரண மாட்டுத்தொழுவத்தில்
பிறக்கத் திருவுளம் கொண்டார். உண்மையான எளிமையான மனநிலையில்தான்
கடவுள் குடிகொள்வார் இந்த ஆழமான சிந்தனையை வழங்குவதாக
இருக்கின்றது இன்றைய நற்செய்தி. இந்தக் கிறிஸ்து பிறப்பு
விழாவில் எத்தகைய மனநிலையோடு நாம் இவ்விழாவை கொண்டாட
முன் வருகின்றோம். இன்றைய எதார்த்த சூழலில் எளிமையாக
இருக்கவேண்டிய குடிலை மிகுந்த பொருட்செலவில் பல இடங்களில்
எழுப்புகிறோம். ஆனால் நம்மோடு வாழக்கூடிய ஒருவேளை உணவு
கூட இல்லாத மனிதரை கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம்.
இதை நிச்சயமாக கடவுள் விரும்புவதில்லை. குடில் எழுப்புவதில்
உள்ள ஆடம்பரத்தை விட்டுவிட்டு எளிமையாகக் குடில் அமைத்து
மனித நேயத்தில் பாலன் இயேசுவைக் காண முயற்சி
செய்யும்பொழுது நிச்சயமாக பாலன் இயேசு அகமகிழ்வார். இதைத்தான்
இன்றைய நாளிலே நாம் சிறப்பான விதத்தில் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இயேசுவின் பிறப்புப் பெருவிழா கடவுளின் அளவில்லா கருணையையும்
அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றது. தொடக்கத்தில்
கடவுள் மனிதனை "தமது சாயலிலும் உருவிலும் படைத்தார்"
(தொநூ: 1: 27) என வாசிக்கிறோம். இது மனித இனத்திற்குக்
கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த அங்கீகாரமாகும். அதற்கு
மேலாக மனிதன் மீது கடவுள் அன்பு செலுத்திய பொழுதும் மனிதர்கள்
மீண்டும் மீண்டுமாக பாவம் செய்து கடவுள் விட்டு
பிரிந்து சென்றனர். எனவே கடவுள் தன் ஒரே மகன் இயேசு
கிறிஸ்துவை பாவக் கழுவாயாக இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
"வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்"
(யோ: 1:14) என்ற வார்த்தை இயேசுவின் பிறப்பின் வழியாக
உண்மையாகப்பட்டது. பாலன் இயேசு நம்மை அன்பு செய்வதற்காக
இந்த உலகத்தில் வந்திருக்கிறார். இவ்வுலகம் சார்ந்த மக்கள்
நம்மைப் புரிந்து கொள்ளாமல் உதறிச் சென்றாலும் நம்மை
மீட்க வந்த பாலன் இயேசு நம்மைக் கைவிட்டு விடமாட்டார்.
நாம் எப்படிப்பட்ட பாவங்களைச் செய்தாலும் அவரிடம்
திரும்பி வரும்பொழுது நிச்சயமாக நம்முடைய பாவங்கள் அனைத்தையும்
மன்னித்து புது வாழ்வை வழங்குவார். இந்த கிறிஸ்து பிறப்பு
பெருவிழாவில் நம்முடைய தீய வாழ்வை விட்டுவிட்டு தூய
வாழ்வை வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது நாம் பாலன் இயேசுவினுடைய
அன்பை முழுமையாகச் சுவைக்க முடியும்.நாம் சுவைத்த அந்த
அன்பை எல்லா மக்களுக்கும் எல்லா படைப்புகளுக்கும்
கொடுக்க முடியும்.
இயேசுவின் பிறப்பு பெருவிழா சமூகத்தில் அடையாளம் காணப்படாதவர்களுக்கு
அடையாளம் கொடுப்பதாக இருக்கின்றது. இயேசுவின் பிறப்புச்
செய்தி வானதூதரால் இடையர்களுக்கு "அஞ்சாதீர்கள், இதோ,
எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை
உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும்
மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக்
காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' என்று அறிவிக்கப்பட்டது.
இது எதைச் சுட்டிகாட்டுகிறது என்றால் கடவுளின் நற்செய்தியானது
எளிமையான வாழ்வோடும் எளிய உள்ளத்தோடும் வாழ்பவர்களுக்கு
மட்டுமே முதன்முதலாக அறிவிக்கப்படும் என்பதைச்
சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. இயேசு பிறந்த காலகட்டத்தில்
இடையர்கள் என்பவர்கள் மிகவும் புறந்தள்ளப்பட்டவர்களாக
இருந்தனர். ஏழைகளுக்காக நற்செய்தியை எழுதிய லூக்கா இடையர்களை
மையப்படுத்துவதன் நோக்கம் இயேசுவின் பிறப்பு ஏழைகளையும்
சமூகத்தில் அடையாளம் காணப்படாதவர்களையும் உயர்த்தும்
உன்னதமான ஒன்றாகும். எனவே இந்த ஆண்டு நாம் கிறிஸ்து பிறப்பு
விழாவை கொண்டாடுகிறோம். நம்மிடையே உள்ள வேறுபாடுகளைக்
களைந்து அனைவரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்
என்ற மனநிலையில் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை
வேண்டுவோம். அவ்வாறு நாம் எல்லோரையும் சமமாக ஏற்றுக்
கொள்ளும்பொழுது நிச்சயமாக ஆண்டவர் இயேசுவின் பிறப்பின்
மகிழ்ச்சி நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.
இயேசுவின் பிறப்புப் பெருவிழா குடும்ப ஒற்றுமையை
சுட்டிக்காட்டுகிறது. அன்னை மரியாள் பேறுகால துன்பத்தில்
இருந்த பொழுது கணவரான சூசையப்பர் மிகுந்த அன்போடு அன்னை
மரியாவை கவனித்துக்கொண்டார். தன்னுடைய சுய விருப்பத்தையெல்லாம்
துறந்து அன்னை மரியா வழியாக மீட்பு இந்த உலகத்திற்கு
வர தன்னையே முழுவதுமாக கையளித்தார். நல்ல ஒரு கணவராக
தன் மனைவி அன்னை மரியாவின் துன்பத்தில் உடனிருந்தார்.
அதேபோல அன்னை மரியாவும் ஒரு நல்ல மனைவியாக தன் கணவர்
சூசையப்பருக்கு கீழ்ப்படிந்து ஒத்துழைப்பு கொடுத்தார்.
இத்தகைய மனநிலையை இன்றைய சமூகத்தில் வாழும் எல்லா
குடும்ப தம்பதியினருக்கு இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில்
பல்வேறு பிரச்சனைகள் குடும்பத்திற்கு வருவதற்கு காரணம்
கணவன் மனைவியை புரிந்து கொள்ளாததும் மனைவி கணவனை
புரிந்து கொள்ளாததும் ஆகும். இத்தகைய நிலை மாறி ஒருவரை
ஒருவர் புரிந்து ஏற்றுக் கொள்ளும் பொழுது நிச்சயமாக
கடவுளின் அருளை நாம் பெற முடியும். குடும்பமாக இணைந்து
கடவுளை நோக்கி ஜெபிக்கின்ற பொழுது கடவுளின் அருளை
நிறைவாகப் பெறமுடியும். இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு
பெருவிழாவில் கணவரும் மனைவியும் சூசையப்பர் மற்றும் அன்னை
மரியாவை போல வாழ முயற்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு மகிழ்ச்சியின்
விழாவாக இருக்கின்றது. "ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த
திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார்.
அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம்
சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு
கட்டினார்." (உரோ: 8:3) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நம்மையெல்லாம்
மீட்பதற்காகவே கடவுள் தன் மகனை அனுப்பி உள்ளார். அந்த
இயேசுவை நாம் முழுமையாக உணர்ந்து நம்முடைய இருள்
நிறைந்த பாவ வாழ்வை விட்டுவிட்டு ஒளி நிறைந்த தூய
வாழ்வை வாழ முயற்சி செய்யும்பொழுது நிச்சயமாக கடவுளின்
இரக்கத்தையும் அன்பையும் மன்னிப்பையும் முழுமையாகப்
பெற்று நிறைவான மகிழ்ச்சியைப் பெற முடியும். எனவே இந்த
கிறிஸ்து பிறப்பு விழாவில் நிறைவான மகிழ்ச்சியைப்
பெற்று வளமோடு வாழ தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! உம் திருமகன் ஆண்டவர் இயேசுவை எங்களுக்கு
மீட்பராக உலகத்திற்கு அனுப்பிய மேலான அருளுக்காக நன்றி
செலுத்துகிறோம். பிறந்துள்ள பாலன் இயேசு எங்களுக்கு
நிறைவான மகிழ்ச்சியையும் அமைதியையும் தர தொடர்ந்து
செபிக்கிறோம். ஆமென். |
மறையுரைச்சிந்தனை - அருள்பணி முனைவர்
ம அருள் பாளையங்கோட்டை |
வல்லமையுள்ள தேவன் பிறந்திருக்கிறார்
நம்மிடையே வல்லமையுள்ள தேவன் பிறந்திருக்கிறார் (எசா.
9:6). இவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்தும்
மீட்டுத் தூயவராக்கி, நம்மை நற்செயல்களில் ஓரினமாக்கி,
நம்மை அவருக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவே வந்தார்.
மாட்டுக் குடிலிலே பிறந்தவர் - இன்று நம் உள்ளத்திலே
பிறக்க நம்மைத் தேடி வந்துள்ளார். சாதாரணமாக நம்
வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களுக்குப் பிரியமானதைக்
கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துகிறோம். நமக்குப் பிரியமானதை
நாம் பிறருக்கு அளித்தால் அது சுயநலம். மற்றவருக்குப்
பிரியமானதை நாம் கொடுத்தால் அது பிறர் நலம். நம்மைத்
தேடி வரும் இயேசுவைப் பிறர் நல உள்ளத்தோடு வரவேற்க
புனித திருமுழுக்கு யோவான் கூறுவதுபோல் நம்மையே நாம்
தயாரிக்க வேண்டும். இயேசுவுக்குப் பிரியமானதாக நாம் எதைக்
கொடுக்கப் போகிறோம்?
சின்னக் குழந்தை இயேசுவுக்கு என்ன கொடுப்பேன் நான், என்ன
கொடுப்பேன் நான் (பாடல்).
மனிதனாக மட்டும் அல்ல. புனிதராக விளங்க விரும்பினார்
புனித எரோணிமுஸ். இதற்காக இஸ்ரயேல் நாட்டில் உள்ள எருசலேம்
நகரிலே ஒரு குகையிலே செபத்திலும் தவத்திலும் ஈடுபடத்
தொடங்கினார். ஒருநாள் திடீரென இயேசு அவருக்குக்
காட்சித் தந்தார். எரோணிமுஸ் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்
இயேசுவைப் பார்த்து. எனது இல்லத்திற்கு எழுந்தருளிய இயேசுவே!
உமக்கு என்ன வேண்டும்? உமக்கு எதை நான் கொடுக்க
வேண்டுமென்று விரும்புகிறீர் சொல்லும் என்றார் எரோணிமுஸ்.
இயேசுவோ என்னிடம் இல்லாத ஒன்றை எனக்குக் கொடு என்றார்.
எரோணிமுஸ், என்னிடமுள்ள இந்தப் புத்தகத்தை இந்தச் செல்வத்தை
எடுத்துக்கொள்ளும் என்றார். இயேசுவோ அது என்னிடம் உள்ளது.
வேறு என்னிடம் இல்லாத ஒன்று கொடு என்றார். எரோணிமுஸ்
என்னிடம் உள்ள அறிவு, ஆற்றல், ஞானம் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்
என்றார். வேண்டாம் அது என்னிடம் உள்ளது. அதை நான்தான்
உனக்குத் தந்தேன் என்றார். இதைக்கேட்ட எரோணிமுஸ்
திகைத்துப் பின் என்னதான் என்னால் உமக்குத் தர
முடியும் என்று கேட்டார். இயேசுவோ என்னிடம் இல்லாததைக்
கொடு என்றார் திரும்பவும் . எரோணிமுசுக்கு ஒன்றும்
புரியவில்லை . ஆண்டவரே நீர் கேளும், நீ எதைக்
கேட்டாலும் கொடுத்துவிடுகிறேன் என்றார். இயேசுவோ உன்
பாவத்தை என்னிடம் கொடுத்து விடு என்றார். ஆம்! பாவத்தை
ஆண்டவரிடம் கொடுக்க, எரோணிமுஸ் புனிதமான வாழ்க்கையின்
முதலடியை எடுத்து வைத்தார். மனிதருக்குள் ஒருவராக
வாழ்ந்தார். புனிதருக்குள் ஒருவரானார்.
கடவுள் நம்மிடமிருந்து பாவத்தைக் கேட்பதேன்? பாவம் மனிதனின்
நிம்மதியைத் திருடி அவன் மகிழ்ச்சியை அழித்து விடுகிறது.
நடைபிணமாக்கி விடுகிறது. ஆதிப்பெற்றோர் ஆதாம் ஏவாள் பாவம்
செய்ய, இறைவனைச் சந்திக்க அஞ்சினார்கள். மன நிம்மதியை
இழந்து சோகத்தின் வேகத்தைச் சந்திக்க சக்தியற்றவர்களாகத்
தடுமாறினார்கள் (தொநூ. 3:8). யூதாஸ் தற்கொலை செய்யும்
அளவுக்குத் தள்ளப்பட்டான் என்பதை அறிவோம் (திப. 1:18-1
மத். 27:3-8).
நாம் வாழ்வு பெறவே, அதை மிகுதியாகப் பெறும் பொருட்டே
இயேசு உலகிற்கு வந்தார். நல்லாயன் தன் உயிரைக் கொடுக்கவும்
வந்தார் (யோவா. 10:10-11). அப்படி நாம் நம் பாவத்தை
அவரிடம் கொடுக்க, நமது தூய இதயத்திற்குள், இல்லத்திற்குள்
இயேசு அவரது ஞானம், வல்லமை, நீதி, சமாதானம், மன உறுதி,
ஊக்கம் போன்றவைகளைப் (உரோ. 15:5) பொழிந்து நம்மை வாழ
வைப்பார்.
கல்வாரி சிலுவையிலே தொங்கிய இரு குற்றவாளிகளில் ஒருவன்
இயேசுவைக் கேலி செய்தான். மற்றவனோ இயேசுவின் இரக்கத்தைப்
பெற்றபின், இயேசுவின் இதயத்தையும் கொள்ளை
கொண்டுவிட்டான். இயேசு அவனது பாவத்தைப் பெற்றுக்
கொண்டு நீ இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்
என உறுதியாகச் சொல்லுகிறேன் (லூக். 23:43) என்றார்.
இத்தகைய மனநிலை நம் வாழ்வில் நிகழ்வதுதான் நாம்
கொண்டாடும் கிறிஸ்மஸ் விழா. |
|
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் - குடந்தை
ஆயர் F.அந்தோனிசாமி |
நம்மிடையே ஓர் அரசர் தோன்றியுள்ளார்
துக்கம் மறைந்து மகிழ்ச்சி பிறக்க வேண்டும்!
அச்சம் மறைந்து அமைதி பிறக்க வேண்டும்!
பாவம் மறைந்து மீட்புப் பிறக்க வேண்டும்!
மானிட இதயங்களின் ஆசைகளை நிறைவேற்ற இயேசு ஆண்டவர் இன்று
நம் நடுவே குடிலிலே பிறந்திருக்கின்றார். குடிலிலே பிறந்திருக்கும்
இயேசு நமது இல்லக் குடிலுக்குள் பிறந்து நம் வீட்டை ஆசிர்வதிப்பாரா?
இந்தக் கேள்விக்கு இந்த நாடகம் பதில் சொல்லும்.
இது ஒரு நாடகத்தின் கதைச் சுருக்கம்.
இயேசு, தாம் பிறக்கச் சரியான இடத்தைத் தேடி ஓர் ஊருக்குள்
நுழைந்தார். அந்த ஊருக்குள்ளே இருந்தவர்கள் இரண்டாகப்
பிரிந்து, எங்கள் தெருவில்தான் நீர் பிறக்க வேண்டும்
எனச்சொல்லி சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். இயேசுவோ,
நான் இரண்டு தெருக்களிலும் பிறக்கின்றேன். சண்டையை
நிறுத்துங்கள் என்றார். ஆனால் அந்த ஊர் மக்களோ, நாங்கள்
பஞ்சாயத்து வைத்து எந்தத் தெருவில் பிறக்க வேண்டும் என்று
சொல்கின்றோமோ அந்தத் தெருவில்தான் நீர் பிறக்க
வேண்டும் என்றார்கள். அமைதி இல்லாத இடத்திலே என்னால்
பிறக்க முடியாது எனச்சொல்லி அடுத்த ஊருக்குச் சென்றார்
இயேசு. ஏதாவது ஒரு வீட்டுக்குள் பிறக்கலாம் எனச்சொல்லி,
ஒரு வீட்டின் கதவருகில் சென்றார். உள்ளே தன் மகனை தாய்
அடித்துக்கொண்டிருந்தாள். உனக்கு புதுசட்டையா வேணும்
புதுசட்டை! இனிமே எதையாச்சும் கேட்டு வாயைத் திறந்தே
அவ்வளவுதான்! வருசா வருசம் கரெக்டா டிசம்பர் மாதம் 25-ஆம்
தேதி வந்து இயேசு பொறந்தர்றாரு. பொறக்கிறதுக்கு
முன்னாடி ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் ரூபா கொடுத்தா
என்ன? என்று திட்டிக்கொண்டிருந்தாள் !
கோபமும், சண்டையும், சச்சரவும் நிறைந்த வீட்டுக்குள்
என்னால் பிறக்க முடியாது என்று சொல்லி, அடுத்த
வீட்டுக்குச் சென்றார் இயேசு. அது கண்கள் தெரியாத குழந்தைகள்
வாழும் இல்லம். அந்த இல்லத்திலிருந்த குழந்தைகள் இயேசுவுக்குக்
குடிலைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். இயேசு அவர்கள்
நடுவே நின்று, யாருக்கு இந்தக் குழல்? என்றார். குழந்தைகளோ,
இயேசுவுக்கு என்றார்கள். இயேசுவோ, அவருக்கு எதற்குக்
குடில்? அவர்தான் உங்களுக்கு பார்வையைக் கொடுக்கவில்லையே!
என்றார். அதற்கு அக்குழந்தைகள், எங்களுக்குக் கண்ணொளி
மட்டும்தான் இல்லை! நல்ல கால்கள், நல்ல காதுகள், அன்பு
செய்யும் இதயம், எங்களைப் பார்த்துக்கொள்ள நல்லவர்கள்
- இப்படி எவ்வளவோ அவர் கொடுத்திருக்கின்றாரே! அதுக்காகத்தான்
அவருக்குக் குடில் என்றார்கள். இயேசுவோ, நான்தான் இயேசு!
நான் தேடும் அன்பு இங்கே இருக்கின்றது! இங்கேதான் நான்
பிறக்கப்போகின்றேன் என்றார். அன்பே இயேசு! இயேசுவே அன்பு!
நமது வீட்டுக்குள் அன்பு இருந்தால் இயேசு நம் இல்லத்தில்
பிறந்து நம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஆசிர்வதிப்பார்.
இயேசு நமது உள்ளத்திற்குள் பிறக்கும் போது நம்முள்
பேரொளி பிறக்கும் (எசா 9:2).
வலிமை பிறக்கும் - இறை வலிமை பிறக்கும் (எசா 9:6).
அருள் பிறக்கும் - மீட்பரின் அருள் பிறக்கும் (தீத்
2:11).
மாட்சி பிறக்கும் - கிறிஸ்துவின் மாட்சி பிறக்கும்
(தீத் 2:13).
மேலும் அறிவோம் :
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் 80 ).
பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன்
கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற
எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும். |
|
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி
Y.இருதயராஜ் |
கவிதா என்ற சிறுமி அவள் அம்மா வேலை பார்த்த பள்ளியின்
மெத்தைப் படியின் கீழே நின்று கொண்டிருந்தான்.
மெத்தைப் படியின் மேலே நின்று கொண்டிருந்த அவன் அம்மா,
'கவிதா, மேலே ஏறிவா' என்று கேட்ட போது, மேலே ஏற
முடியாத கவிதா அம்மாவிடம், "அம்மா! நீ கீழே இறங்கி வா"
என்றாள். அவன் அம்மாவும் கீழே இறங்கி வந்து அவளை
மெத்தைக்குத் தூக்கிச் சென்றார்.
படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனிதன் கடவுள் நிலையை எட்டிப்
பிடிக்க முயன்றான். விலக்கப்பட்ட மரத்தின் கனியைத்
தின்றால் கடவுளைப்போல் ஆக முடியும் என்ற அலகையின்
பொய்யுரையை தம்பி ஆதிப் பெற்றோர்கள் அம்மரத்தின் கனியை
உண்டனர். ஆனால் அவர்கள் இழிநிலையை அடைந்தார்களேயன்றி,
தெய்வு நிலையை அடையவில்லை. மனிதருடைய பரிதாப நிலையைக்
கண்ட கடவுள், கவிதா அம்மா கவிதாவின்
நிலைக்குத்தாழ்ந்து வந்து அவளை மேலே கொண்டு போனதுபோல்,
மனித நிலைக்குத் தாழ்த்த வந்து அவனைத் தெய்வ நிலைக்கு
உயர்த்தினார். கடவுள் மனிதராகப் பிறந்ததன் மூலம் மனிதர்
இறைத் தன்மையில் பங்கு பெறுகின்றனர் (2 பேது 1-4) என்ற
மறையுண்மையைக் கிறிஸ்து பிறப்பு விழ உணர்த்துகிறது.
கடவுள் செய்த மாபெரும் புரட்சி அவர் மனிதரானது.
'வாக்கு மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார்" (யோவா
1:14). கடவுள் மனுவுருவானார் என்ற மாபெரும் உண்மையைத்
திருத்தூதர் பவுல் பின்வருமாறு விவரித்துள்ளார் "நம்
மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டது"
(தீத் 3:4).
கிறிஸ்து மனிதராகப் பிறந்து கடவுளின் மனித நேயத்தை
வெளிப்படுத்தினார், கிறிஸ்துவின் கைகளால் பார்வையற்றோர்
பார்வை பெற்றனர்; கால் மானமுற்றோர் நடத்தனர்; தொழு
நோயாளர் நலமடைந்தனர்; காது கேளாதோர் கேட்டனர். இறந்தோர்
உயிருடன் எழுப்பப்பட்டனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது
(லூக் 7:22), சுருக்கமாக, கிறிஸ்து சென்றவிடமெல்லாம்
தன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38), பெருஞ்சுமை
சுமந்து சோர்ந்திருந்த அனைவர்க்கும் இளைப்பாற்றி அளித்தார்
(மத் 1-28), தம்மிடம் வந்த எவரையும் அவர் புறக்கணிக்கவில்லை
(யோவா 637) அவர் மனிதரின் பிணிகளை ஏற்று, நோய்களைச் சுமந்து
கொண்டார் (மத் 8:17)
கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் மனிதநேயம் கொண்டவர் களாக
வாழ வேண்டும். நாம் அரசியல்வாதிகள் ஆகலாம்; அறிஞர்கள்
ஆகலாம்; மருத்துவர் ஆகலாம்; அதுவாகலாம். இதுவாகலாம்.
ஆனால் மனிதர்கள் ஆவது எப்போது? பகவத்கீதை இத்துக்களையும்,
பைபிள் கிறிஸ்தவர்களையும், குரான் முகமதியர்களையும் உருவாக்கியுள்ளன,
ஆனால் இம்மூன்றும் சேர்ந்து மனிதர்களை உருவாக்கவில்லை.
இன்று மனிதர் வானத்தின் பறவைபோல் பறக்கக் கற்றுள்ளனர்;
ஆனால் வையகத்தில் மனிதர்களாக நடக்கக் கற்றுக் கொள்ளவில்லை.
அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ள அளவுக்கு மனித
தேயத்தை வளர்க்கவில்லை. மனிதர்கள் வடிகட்டிய தன்லைவாதிகளாக
மாறிக்கொண்டு வருகின்றனர். மனிதராகப் பிறப்பது ஒரு விபத்து;
ஆனால் மனிதராக வாழ்ந்து காட்டுவது ஒரு சாதனை, மனிதராக
வாழவேண்டுமென்றால், மனிதநேயத்தோடு வாழ வேண்டும். ஒருவரிடம்
அறிவு மிகவும் கூர்மையாக இருந்தாலும், அவரிடம் மனித பண்பு
இல்லையென்றால், அவர் வெறும் மரக்கட்டைக்கு ஒப்பாவார்.
அரம் போதும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர் (குறள் 977)
மாட்டுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று
ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில்; "மாடு
புல்லைத் தின்கிறது; மனிதன் சோறு தின்கிறான்." இதே
கேள்விக்கு ஓர் அறிவியல் மேதை கூறிய பதில்: 'ஒரு மாடு
அடுத்த மாட்டைப்பற்றி அக்கறை கொள்ளாது. ஆனால் ஒரு மனிதன்
அடுத்த மனிதனைப் பற்றி அக்கறை கொள்வான். அடுத்த மனிதனைப்
பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி."
மிகவும் சூடான பதில்.
அடுத்தவருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகக் கருதவில்லையென்றால்,
பகுத்தறிவு தமக்கு இருப்பதால் என்ன பயன் என்று
கேட்கிறார் பொய்யா மொழிப்புலவர்.
அறிவினான் ஆகுவது உண்டோபிறிதின் நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை? (குறள் 315)
ஆலயத்தைவிட்டு வெளியே வா. கடவுள் ஆலயத்தில் இல்லை. கடினமான
தரையை உழுகின்ற உழவனிடத்தில் அவன் இருக்கிறான். சாலை
அமைக்கச் சரளைக்கல் உடைத்துக் கொண்டிருப்பவனிடத்தில்
அவன் இருக்கிறான். அவர்களுடன் அவள் மழையில் நனைகின்றான்;
வெயிலில் காய்கின்றான்; நெற்றிவேர்வை நிலத்தில் விழ உழைத்து
நின் கடவுள் அருகில் நில்" என்று கீதாஞ்சலியில்
பாடியுள்ளார் தாகூர்.
ஆம், செல்வந்தராக இருந்தும் நமக்காக ஏழையான கிறிஸ்து
(2 கொரி 8:9), ஏழைகளின் கடவுள். ஏழைகளின் தோழமையில்
அவர் என்றும் இருக்கிறார்; இருப்பார். எனவே மாட்டுத்
தொழுவத்தில் பிறந்த மாபரன் இயேசுவின் ஏழ்மையில் பங்கு
பெற்று, மனித நேயத்துடன் ஏழைகளைத் தேடிச்சென்று அவர்களுடன்
கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடுவோம். மனிதரை மறந்து
கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு விழா கிறிஸ்துவே இல்லாத
கிறிஸ்து பிறப்பு விழா, கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்!
ஏழைகளுக்கும், எழையரின் உள்ளத்தைக் கொண்டவர்களுக்கும்
(மத் 5:3) இதயப்பூர்வமான இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா
நல்வாழ்த்துக்கள்
வாழ்க வையகம்! வளர்க மனிதநேயம்!! |
|
மறையுரைச்சிந்தனை -திருவுரைத்
தேனடை அருள்பணி இ.லூர்துராஜ்
|
வல்லமையுள்ள தேவன் பிறந்திருக்கிறார்
நம்மிடையே வல்லமையுள்ள தேவன் பிறந்திருக்கிறார் (எசா.
9:6). இவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்தும்
மீட்டுத் தூயவராக்கி, நம்மை நற்செயல்களில் ஓரினமாக்கி,
நம்மை அவருக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவே வந்தார்.
மாட்டுக் குடிலிலே பிறந்தவர் - இன்று நம் உள்ளத்திலே
பிறக்க நம்மைத் தேடி வந்துள்ளார். சாதாரணமாக நம்
வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களுக்குப் பிரியமானதைக்
கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துகிறோம். நமக்குப் பிரியமானதை
நாம் பிறருக்கு அளித்தால் அது சுயநலம். மற்றவருக்குப்
பிரியமானதை நாம் கொடுத்தால் அது பிறர் நலம். நம்மைத்
தேடி வரும் இயேசுவைப் பிறர் நல உள்ளத்தோடு வரவேற்க
புனித திருமுழுக்கு யோவான் கூறுவதுபோல் நம்மையே நாம்
தயாரிக்க வேண்டும். இயேசுவுக்குப் பிரியமானதாக நாம் எதைக்
கொடுக்கப் போகிறோம்?
சின்னக் குழந்தை இயேசுவுக்கு என்ன கொடுப்பேன் நான், என்ன
கொடுப்பேன் நான் (பாடல்).
மனிதனாக மட்டும் அல்ல. புனிதராக விளங்க விரும்பினார்
புனித எரோணிமுஸ். இதற்காக இஸ்ரயேல் நாட்டில் உள்ள எருசலேம்
நகரிலே ஒரு குகையிலே செபத்திலும் தவத்திலும் ஈடுபடத்
தொடங்கினார். ஒருநாள் திடீரென இயேசு அவருக்குக்
காட்சித் தந்தார். எரோணிமுஸ் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்
இயேசுவைப் பார்த்து. எனது இல்லத்திற்கு எழுந்தருளிய இயேசுவே!
உமக்கு என்ன வேண்டும்? உமக்கு எதை நான் கொடுக்க
வேண்டுமென்று விரும்புகிறீர் சொல்லும் என்றார் எரோணிமுஸ்.
இயேசுவோ என்னிடம் இல்லாத ஒன்றை எனக்குக் கொடு என்றார்.
எரோணிமுஸ், என்னிடமுள்ள இந்தப் புத்தகத்தை இந்தச் செல்வத்தை
எடுத்துக்கொள்ளும் என்றார். இயேசுவோ அது என்னிடம் உள்ளது.
வேறு என்னிடம் இல்லாத ஒன்று கொடு என்றார். எரோணிமுஸ்
என்னிடம் உள்ள அறிவு, ஆற்றல், ஞானம் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்
என்றார். வேண்டாம் அது என்னிடம் உள்ளது. அதை நான்தான்
உனக்குத் தந்தேன் என்றார். இதைக்கேட்ட எரோணிமுஸ்
திகைத்துப் பின் என்னதான் என்னால் உமக்குத் தர
முடியும் என்று கேட்டார். இயேசுவோ என்னிடம் இல்லாததைக்
கொடு என்றார் திரும்பவும் . எரோணிமுசுக்கு ஒன்றும்
புரியவில்லை . ஆண்டவரே நீர் கேளும், நீ எதைக்
கேட்டாலும் கொடுத்துவிடுகிறேன் என்றார். இயேசுவோ உன்
பாவத்தை என்னிடம் கொடுத்து விடு என்றார். ஆம்! பாவத்தை
ஆண்டவரிடம் கொடுக்க, எரோணிமுஸ் புனிதமான வாழ்க்கையின்
முதலடியை எடுத்து வைத்தார். மனிதருக்குள் ஒருவராக
வாழ்ந்தார். புனிதருக்குள் ஒருவரானார்.
கடவுள் நம்மிடமிருந்து பாவத்தைக் கேட்பதேன்? பாவம் மனிதனின்
நிம்மதியைத் திருடி அவன் மகிழ்ச்சியை அழித்து விடுகிறது.
நடைபிணமாக்கி விடுகிறது. ஆதிப்பெற்றோர் ஆதாம் ஏவாள் பாவம்
செய்ய, இறைவனைச் சந்திக்க அஞ்சினார்கள். மன நிம்மதியை
இழந்து சோகத்தின் வேகத்தைச் சந்திக்க சக்தியற்றவர்களாகத்
தடுமாறினார்கள் (தொநூ. 3:8). யூதாஸ் தற்கொலை செய்யும்
அளவுக்குத் தள்ளப்பட்டான் என்பதை அறிவோம் (திப. 1:18-1
மத். 27:3-8).
நாம் வாழ்வு பெறவே, அதை மிகுதியாகப் பெறும் பொருட்டே
இயேசு உலகிற்கு வந்தார். நல்லாயன் தன் உயிரைக் கொடுக்கவும்
வந்தார் (யோவா. 10:10-11). அப்படி நாம் நம் பாவத்தை
அவரிடம் கொடுக்க, நமது தூய இதயத்திற்குள், இல்லத்திற்குள்
இயேசு அவரது ஞானம், வல்லமை, நீதி, சமாதானம், மன உறுதி,
ஊக்கம் போன்றவைகளைப் (உரோ. 15:5) பொழிந்து நம்மை வாழ
வைப்பார்.
கல்வாரி சிலுவையிலே தொங்கிய இரு குற்றவாளிகளில் ஒருவன்
இயேசுவைக் கேலி செய்தான். மற்றவனோ இயேசுவின் இரக்கத்தைப்
பெற்றபின், இயேசுவின் இதயத்தையும் கொள்ளை
கொண்டுவிட்டான். இயேசு அவனது பாவத்தைப் பெற்றுக்
கொண்டு நீ இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்
என உறுதியாகச் சொல்லுகிறேன் (லூக். 23:43) என்றார்.
இத்தகைய மனநிலை நம் வாழ்வில் நிகழ்வதுதான் நாம்
கொண்டாடும் கிறிஸ்மஸ் விழா. |
|
மறையுரைச்சிந்தனை -
|
|
|
|
வளர்ந்த இயேசுவுக்கு வாசல் திறப்போம்
இயேசுவுக்கு இன்று பிறந்த நாள்! நமது நாட்டின் தந்தை
காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது அவரைக் குழந்தையாகவா
பார்க்கிறோம்? கையிலே ஒரு தடி, மூக்குக்கு மேலே ஒரு கண்ணாடி,
இடுப்பிலே ஒரு துண்டு, பொக்கை வாயில் ஒரு புன்னகை....
இப்படி ஒரு கிழட்டுத் தாத்தாவாகப் பார்ப்பதில் தானே
நமக்குப் பெருமிதம்!
இயேசு பிறந்த நாளிலோ அவரைக் குழந்தையாகத் தவழ விடுவதில்தான்
நமக்கு மகிழ்ச்சி! அதுதான் கிறிஸ்மஸ் தனிச்சிறப்பு. ஏன்
அப்படி? இயேசுவின் பிறப்பு எங்கோ , எப்பொழுதோ மலைக்
குகையில் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சி மட்டும் தானா?
இங்கே இப்பொழுது ஒவ்வொரு மனிதனின் மனக்குடிலிலும்
பிறக்க வேண்டும் என்ற ஆவல்! குழந்தையாக இதயத்தில்
ஏற்றுக் கொள்வதும் எளிது.
எண்ணம் சரிதான். ஆனால் அதற்கு முன் ஒரு கேள்வி! கடந்த
ஆண்டு நம் இதயத்தில் பிறந்த இயேசு என்ன ஆனார்?
வளர்ந்தாரா? வளரவிட்டோமா? அவரது வாழ்வுக்கும்
வளர்ச்சிக்கும் தகுந்த சூழலை, வாய்ப்பு வசதிகளை
உருவாக்கித் தந்தோமா? இல்லை, ஒருவேளை நம் இதயக்
கருவறையையே இயேசுவுக்குக் கல்லறையாக்கி விட்டோமா?
ஆயிரக்கணக்கான சிசுக்களுக்கு கருவறையையே கல்லறையாக்கி
விடுகின்ற சாக்கடைச் சமுதாயத்தில் வாழும் நமக்கு நமது
இதயத்தையே குழந்தை இயேசுவின் கல்லறையாக்கிவிடுவது
ஒன்றும் பெரிய தவறாகத் தெரிவதில்லை .
உலகில் வாழ்ந்த போது 12 வயதில் தான் காணாமற் போனார்.
இன்றோ நம்மில் பிறந்த 12 மணி நேரத்திற்குள்ளேயே நம்
வாழ்வை விட்டு அகன்று எங்கோ தலைமறைவாகி விடுகிறார்.
காரணம்? அவர் வளராமலேயே, கொஞ்சி விளையாட ஒரு
குழந்தையாக, பொழுது போக்குக் பொருளாகவே இருக்க
வேண்டும் என்று நமக்குள் வளர்த்துக் கொண்ட ஆசையா?
வளர்ந்து விட்டால் நமக்கே, நம் வாழ்க்கை முறைக்கே
சவாலாகி விடுவாரோ என்ற அச்சமா? நமது எண்ணங்களை,
கொள்கைகளை, விழுமியங்களை, செயல்பாடுகளைத் தட்டிக்
கேட்பாரோ, நம்மைக் கேள்விகளால் துளைத்து வசதியான மனித
நேயமற்ற நமது வாழ்க்கை முறையையே மாற்ற வைத்து விடுவாரோ
என்ற பயமா?
கருவாக முழு வளர்ச்சி அடைந்த கோழிக்குஞ்சு ஓட்டை
உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்பது இயற்கை
நியதி. ஒருவேளை அதனால் உடைக்க முடியாத அளவுக்கு ஓடு
கடினமாக இருந்தால் உள்ளேயே ஒடுங்கி வெந்து
மடிந்துவிடும். அதுபோல வளர வாய்ப்போ வசதியோ இல்லாத
நிலையில் குழந்தை இயேசு நம் இதயத்தின் இறுக்கத்தில்
சிக்கி இறக்க வேண்டியது தான். இறந்த அது உள்ளேயே
இருந்தால் தாய்க்கும் ஆபத்து.
வாழ்க்கையில் நமக்கு வசதியான கொள்கைகளை வகுத்து வாழ
முற்படுவது போல, வழிபாட்டிலும் வசதிக்கேற்ற இயேசுவையே
வழிபட முயல்கிறோம். ஒன்று கிறிஸ்து பிறப்பு விழாவன்று
ஆலயம் வந்து நம்மைத் தட்டிக் கேட்க இயலாத குழந்தை
இயேசுவைக் கண்டு பரவச மடைகிறோம். அல்லது புனித
வெள்ளியன்று வாய்திறந்து பேச இயலாத, சிலுவையில்
ஆணிகளால் கைகள் அறையுண்ட பலவீனமான இயேசுவைக் கண்டு
பரிதாப்படுகிறோம். இந்தப் பரவசத்திலும் பரிதாபத்திலுமே
நம் ஆன்மீகத்தை வளர்த்துக் கொண்டு பிறப்புக்கும்
இறப்புக்கும் இடைப்பட்ட வளர்ந்து விட்ட, வயதுக்கு வந்த
இயேசுவைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை.
வளர்ந்த இயேசுவைச் சந்திக்க நாம் தயாரில்லையென்றால்
குழந்தை இயேசு நம் உள்ளத்தில் எதற்காகப் பிறக்க
வேண்டும்?
இயேசு பிறந்தார் என்பதை விட, இயேசு ஏன் பிறந்தார்?
எதற்காகப் பிறந்தார் என்பது முக்கியமானது. இன்று
எப்படிப் பிறக்கிறார் என்பது அதைவிட முக்கியமானது.
இயேசு கண்டிப்பாக இன்றும் பிறந்தாக வேண்டும். ஆனால்
அது குடிலில் காணும் பொம்மை இயேசுவாக அன்று அந்த
பொம்மை இயேசுவுக்குச் சிரிக்க மட்டும் தான் தெரியும்!
நல்லவனைப் பார்த்தும் சிரிப்பார். தீயவனைப் பார்த்தும்
சிரிப்பார். உண்மையைக் கண்டும் சிரிப்பார். போலியைக்
கண்டும் சிரிப்பார். அந்தப் பொம்மை இயேசுவாகப்
பிறக்கக் கூடாது. உண்மையை உண்மையென்று சொல்ல, போலியைப்
போலி என்று தோலுரித்துக் காட்ட, அநீதியைக் கண்டு
கொதித்தெழ, ஒடுக்கப்பட்டவர்களைக் கண்டு குமுறிப்
பொங்க, வாழ்வு இழந்தவர்கள் வாழ வேண்டுமெனத் தேடி அலைய,
சமுதாயத்தில் நடிப்பவர்களின் வெளி வேடத்தைக் கலைக்க
இயேசு மீண்டும் பிறந்தே ஆக வேண்டும்.
இயேசு கொண்டிருந்த எண்ணங்கள் இலட்சியங்கள் என்னில்
உதிக்காத வரை, எழுச்சி கொண்டு அவை என்னில் செயல்
வடிவம் பெறாத வரை இயேசு எப்படிப் பிறக்க முடியும்?
ஓர் எடுத்துக்காட்டு : இயேசு ஏன் ஏழையாகப் பிறந்தார்?
யார் ஏழையாகப் பிறக்க விரும்புவார்? பிறப்பைத்
தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் இருந்தால் செல்வச்
செழிப்பான குடும்பத்தில் பிறக்கவே விரும்புவோம். ஆனால்
கடவுள் ஏழ்மையைத் தேர்ந்தெடுத்தார் என்றால் ஏழ்மை ஓர்
மதிப்பீடு என்று அவர் எண்ணியதும் நமக்கு உணர்த்த
விரும்பியதுமே! கிறிஸ்து பிறப்பு விழாவில் நாம்
வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஆடம்பரமும் இயேசுவுக்கு எதிர்
சாட்சியமே!
ஏழையரில் இறைவனைக் காண்போம், நேசிப்போம். அன்னை தெரசா
சொல்வது போல் "
அந்தக் கடவுளை நேசிப்பதில் உண்டாகும்
மகிழ்ச்சியை மனத்தில் வை. நீ சந்திக்கும்
ஒவ்வொருவரிடமும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்.
அப்போது அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும்
கருவியாக நீ மாறுவாய்"
.
எனவே வளர்ந்த இயேசுவுக்கு நம் இதய வாசலைத் திறந்து
வைப்போம். |
|
|
|
|
|
|
 |
|