காணிக்கை என்பது காசு பணத்தில் அல்ல.
கொடுக்கும் மனதில் உள்ளது எனக் கணிக்கிறது... இந்த 32 ஆம்
ஞாயிறு...! காணிக்கைப் பெட்டியோ... நாம் போடும் காசை அல்ல
கொடுக்கும் நம் மனசை குலுக்கி எண்ணிப் பார்க்க வரவேற்கிறது...!
ஆலய முற்றத்தில் அமர்ந்து ஆலயம் வந்தவர்களின் மன முற்றத்துச்
செயல்களை உற்று நோக்குகிறார் நம் யேசுபிரான்!
மிகுதியாய் வைத்திருந்தவர்கள் இருப்பதை எல்லாம் கொடுப்பது போல்
உண்டியலில் திணித்து நடித்தது கண்ணில் தூசியாய் விழுந்தது!
கொஞ்சமாய் வைத்திருந்த விதவை மிச்சமின்றி அத்தனையும் போட்டதோ
இதயத்தில் இதமாய் விழுந்தது. சிறிய பணம் பெரிய மனமாய் பரிணமித்தது.
தருவதில் இருக்கும் இன்பம் பெறுவதில் இல்லையே! தரும் போதலெலாம்
பெறுகின்றோம
சாரிபாத் ஊரில்கூட விதவைப் பெண்ணொருத்தி எலியாவுக்கு உதவிய
போதும் பாத்திரத்தில் மாவு குறையவுமில்லை, கலயத்தில் எண்ணெய்
தீரவுமில்லை
தியாகமாய் நினைத்துச் செய்வது யோகமாய் நிறையச் செய்யும்
நிச்சயம்....!
இப்போது திருப்பலியில் இறைவா "இருப்பதை எல்லாம், எப்போதும்
பகிர்ந்து கொடுக்கும் தியாக மனம்
தா... பணம், காசு, சொத்து,
சுகம், வசதிவாய்ப்பு மட்டுமல்ல புன்னகை, அன்பு, பாசம், என இதய
பாத்திரத்தில் இருக்கும் அனைத்தையும் வழித்து எடுத்து
ஏழையருக்கு அள்ளித் தரும் தியாக மனம் தா... வைத்திருப்பதை
வழங்கும் போது, பாத்திரத்தை வழியச் செய்வாய் என்ற நம்பிக்கை
உணர்வை தா" என உரிமையுடன் மனமுருகி மன்றாடுவோம்.
1. பெறுவதைவிட தருவதே இன்பம் என உணரச் செய்த இறைவா!
திருச்சபையின் தலைவர்கள் மக்களுக்கு கொடுப்பதற்குத் தங்களையே
முழுமையாக உம்மிடம் அர்பணித்து அதன் வழியாக உமது அன்பை
சுவைத்து வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. செல்வந்தரின் செப்புக் காசுகளைவிட ஏழையரின் மனதை விரும்பி
ஏற்கும் இறைவா!
நாடுகளின் தலைவர்கள், ஏழையர் மனம் மகிழ ஆட்சி செய்யும்
போதுதான் தங்கள் வாழ்வின் முழுமையைக் கண்டு கொள்ள முடியும்
என்ற எண்ணத்துடன் ஆட்சி செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. எங்கள் சார்பாக பலி ஒப்புக் கொடுக்க எங்கள் ஆன்மீகத்
தந்தையை அழைத்த ஆண்டவரே!
அவரது பணிவாழ்வின் பக்கத்தில் நீரே நின்று ஒப்புக் கொடுக்கும்
பலியின் நிறைவை அனுபவிக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. இருப்பதை எல்லாம் கொடுக்கும் மனநிலை தரும் இறைவா!
கொடுக்கும் போது பல மடங்கு பெறுகிறோம் என்ற உணர்வுடன்
எப்போதும் பிறரிடம் எதிர்பார்க்காமல் நாங்கள் பிறருக்கு
மனமுவந்து கொடுக்கும் மனநிலை தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் நிறைவே எம் இறைவா!
பொன், பொருளில் அல்ல நிறைவு. நீரே எம் நிறைவு என நாங்கள் வாழ
அருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
6. விதவையின் காணிக்கையை மதிப்போடு பேசும் ஆண்டவரே!
எங்களிடையே வாழும் விதiவையர் மதிப்போடு பேசப்பட வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
7. யாரும் நினையாதோரை நினைத்துக் கொண்டிருக்கும் ஆண்டவரே!
யாரும் நினையாத இறந்த ஆன்மாக்களுக்கு விண்ணக வீட்டில் நற்பேறு
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Gnanaoli- B
Savier திருப்பலி
முன்னுரை:
1அர. 17:10-16; எபி. 9:24-28
, மாற். 12:38-44
நாம் நம் இறைவனுக்கு இருப்பதிலிருந்து கொடுக்கிறோமா?
அல்லது உள்ளதையெல்லாம் கொடுக்கிறோமா? அல்லது நம் உள்ளத்தையே
கொடுக்கிறோமா? என்பது குறித்து சிந்திக்க வருகை தந்துள்ள
அன்பு இறை மக்களே உங்கள் அனைவரையும் பொதுக்காலத்தின்
32- ஆம் ஞாயிறு வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
இருப்பதிலிருந்து கொடுப்பது பெரிதல்ல ஆண்டவருக்காக இருப்பதையெல்லாம்
கொடுப்பதே சிறப்பு. உள்ளதிலிருந்து கொடுப்பதும், உள்ளவற்றையெல்லாம்
கொடுப்பதும் சிறப்பல்ல, நம் உள்ளத்தைக் கொடுப்பதே அனைத்திலும்
சிறப்பு என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இன்றைய
வழிபாடு.
மனிதர் மலரைக் கொடுத்தார், இறைவனோ மனதைக் கேட்டார். மனிதர்
பணத்தைக் கொடுத்தார், இறைவனோ பண்பைக் கேட்டார். மனிதர்
உள்ளதையெல்லம் கொடுத்தார், இறைவனோ உள்ளத்தைக்
கேட்டார். மனிதர் உள்ளத்தையே கொடுத்தார், இறைவன் உவந்து
மகிழ்ந்தார். இதைத்தான் இன்றைய வார்த்தை வழிபாடு நமக்கு
உணர்த்துகிறது.
உளமாற உள்ளதையெல்லாம் கொடுக்கும்போது செப்புக் காசு
கூட மதிப்பிட முடியாத செல்வமாகிறது. மாவுப்பானை அள்ள
அள்ளக் குறையத அட்சயப் பாத்திரமாகிறது. எண்ணெய் கலையம்
எடுக்க எடுக்க வற்றாத களஞ்சியமாகிறது என்பதை இரண்டு ஏழை
கைம்பெண்களைக் கொண்டு இறைவன் நமக்குப் பாடம் நடத்துகிறார்.
பெறுவதில் அல்ல கொடுப்பதில்தான் இன்பம் என்பதை உணர்ந்து,
இல்லாதவருக்கு இருப்பதைக் கொடுத்து, கடவுளுக்கு நம்மையே
முழுமையாக அர்ப்பணித்து வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில்
இணைவோம்.
முதல் வாசக முன்னுரை :
சரேப்தா ஊர் கைம்பெண்ணின் வழியாக இறைவன் எலியாவிற்கு
உதவும் நிகழ்வை படம்பிடித்து காட்டுகிறது இன்றைய முதல்
வாசகம். தனக்கென இருப்பதையெல்லாம் இதயப் பூர்வமாகக்
கொடுப்பவர் நிறைவாகப் பெற்று மகிழ்வார் என்பதை
மெய்ப்பிக்கும் இவ்வாசகத்தை மகிழ்வுடன் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை :
நம் தலைமை குருவான கிறிஸ்து தமது இரத்தத்தால் புதிய
உடன்படிக்கை பலியை நிறைவேற்றி நமக்காக இறைவன்
முன்னிலையில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரது
இரண்டாம் வருகையின்போது நம் அனைவரையும் வழி நடத்திச்
செல்வார் என்ற கருத்தை வழங்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன்
கேட்போம்.
வல்லமையும் திடனும் தருகின்ற தந்தயே இறைவா, இறைப்பணிக்கு
தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட எம் திருத்தந்தை,
ஆயர்கள், பங்குத் தந்தையர், அருட்பணியாளர்கள் அனைவரும்
பணி வாழ்வே திருஅவையின் மையம் என்னும் மனநிலையில் உம்
திருமகன் இயேசுவின் வழியில் நடந்திட, அவர்கள் இம்மண்ணுலகில்
அமைதியின் தூதுவர்களாக வாழ்ந்து, உம் திருமகன்
விட்டுச் சென்ற திருப்பணிகளைத் தொடர்ந்து ஆற்றிட நீர்
எப்போதும் அவர்களுக்குத் துணையாய் இருந்து வழி நடத்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஞானத்தின் ஊற்றான இறைவா, எம்மை ஆளுகின்ற தலைவர்கள் அதிகாரிகள்
அனைவரும் ஞானம் என்னும் அருட்கொடையை உம்மிடமிருந்து
பெற்று, நீதியோடும் நேர்மையோடும் செயல்பட்டு, நாட்டை
வளப்படுத்தும் நல்ல திட்டங்களை வகுத்து, நாட்டையும்
நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்
செல்ல வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா, தாராள மனம் என்பது கிறிஸ்துவத்தின்
தன்மை என்பதையும், கொடுப்பவனே பெற்றுக்கொள்ளத் தகுதியாகிறான்
என்பதையும் புரிந்து ஏழை எளியவர்க்கு எங்களால் இயன்றதை
கொடுத்து உதவ அருள் புரியும். அவர்களது வீடுகளில் மாவு
தீராமல், எண்ணெய் குறையாமல் இருக்க அருள் புரிய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Gnanaoli- B Savier
மறையுரை சிந்தனைகள்
தங்கத் தேர் ஒன்று அந்த தெருவில் வாடி நின்ற பிச்சைக்கார
மனிதனை நோக்கி வந்தது. அவனுக்கோ ஆச்சரியம். காலை முதல் கால்
கடுக்க கையேந்தி நின்றும் ஒன்றும் கிடைக்கவில்லை என
வருந்தியவன் அந்தத் தங்கத்தேரை உற்று நோக்கினான். அங்கே கடவுள்
அமர்ந்திருந்தார். ஆகா கடவுள் நம்மை நோக்கி வருகிறார். நமக்கு
ஏதாவது தருவார் என மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றான். தேர்
அவன் அருகில் வந்தவுடன் நின்றது கடவுள் அந்தத் தேரில் இருந்து
இறங்கி அவனருகில் வந்து கையை நீட்டி உண்பதற்கு ஏதாவது
இருந்தால் எனக்குக் கொடு என்று கேட்டார். பிச்சைக்கார
மனிதனுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன கடவுள் இவர் பிச்சைக்கார
கடவுளாக இருக்கிறார். நானே ஒரு பிச்சைக்காரன். என்னிடம் போய்
இந்த பிச்சைக்கார கடவுள் பிச்சை கேட்கிறார். என்று
புலம்பினான். வேண்டா வெறுப்புடன் தோளில் தொங்கிய பைக்குள் கையை
விட்டுத் துழாவினான். அவன் வைத்திருந்த அரிசியில் சொத்தையாக
இருந்த ஒரே ஒரு அரிசியை எடுத்து கடவுளின் கையில் போட்டான்.
கடவுள் மிக மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.
அன்று இரவு பிச்சைக்கார மனிதன் தன் வீட்டிற்கு வந்து தன்
பைக்குள் இருந்த அரிசியை கொட்டி சமைக்க எண்ணியபோது ஒரே ஒரு
அரிசி மட்டும் தங்கமாய் மினுமினுத்தது.
எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெற்றுக் கொள்கிறோம்.
அது ஒரு மணல்மேடு. அருகில் ஒரு அறிவிப்பு பலகை.
கொடுக்கும் மனநிலை வேண்டுமென்றால் நம்பிக்கை இருக்க வேண்டும்.
பாலைவனத்திலே நடந்த நிகழ்ச்சி இது.
பாலைவனத்திலே வழியைத் தொலைத்து விட்ட ஒருவன் தாகத்தால் சாகும்
நிலையில் இருந்தான். எங்கெல்லாமோ தேடி அலைந்தும் ஏதும்
கிடைக்காத நிலையில் இடிந்த வீடு ஒன்று இருந்தது. தவழ்ந்து
தவழ்ந்து சென்று வீட்டை நெருங்கிய போது அடிபம்பு ஒன்றிருந்தது.
அதன் மீது பாய்ந்து வேகமாக அடித்தான். தண்ணீர் வரவில்லை.
பக்கத்திலே மூடிய ஜாடி நிரம்ப தண்ணீர் இருப்பது தெரிந்தது.
அதன் மூடியின் மீது "அடிபம்பை பயன்படுத்தும் முன் இந்தத்
தண்ணீரை உள்ளே ஊற்ற வேண்டும்" என்றிருந்தது. பயணிக்கோ மிகுந்த
குழப்பம். இருந்த தண்ணீரை குடித்து தாகத்தைத் தணிப்பதா? அல்லது
நம்பிக்கையோடு துருபிடித்த அந்த பம்பினுள் இந்த நல்ல தண்ணீரை
ஊற்றி அடிப்பதா?
போராட்டத்திற்குப்பிறகு நம்பிக்கையோடு இருந்த தண்ணீரை
முழுவதும் இழக்கத் துணிந்தான். தண்ணீரை ஊற்றி அடிக்க ஆரம்பித்த
போது ஏராளமாகத் தண்ணீர் பாய்ந்தது. அந்தப் பாத்திரத்தை
மீண்டும் தண்ணீரால்நிரப்பி வைத்துவிட்டு அதிலே "என்னை
நம்புங்கள். தண்ணீரை முழுவதும் ஊற்றி அடித்தால் கண்டிப்பாக
தண்ணீர் நிரம்பக் கிடைக்கும்" என்று எழுதி விட்டுச் சென்றான்.
முழுவதுமாகக் கொடுப்பது என்பது சிரமம்தான். நம்பிக்கையோடு
கொடுத்தால் கண்டிப்பாகத் திரும்பவரும். அமெரிக்காவில் இருந்து
ஜெரிகிரீன் என்பவர் "
செங்கை மிஷன்"
என்ற அனாதை
இல்லத்திலிருந்து ஒரு கண் உடைய மேரி என்ற பெண்ணிற்கு புதுக்கண்
வைக்க விரும்பினார். செங்கை மிஷன் உருப்பெற காரணமாயிருந்த
அருட்தந்தை ஆல்பர்ட் வில்லியம் அடிகளார் துணையோடு எல்லா
ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் மருத்துவச் செலவைக் கணக்கு
பார்த்த போது ஜெரியின் உடைமை முழுவதும் விற்று கொடுத்தால்தான்
முடியும் என்பது புரிந்தது. ஆயினும் தொடர்ந்தனர். என்ன
ஆச்சரியம் மருத்துவர் சிலர் அனாதைப் பெண் மேரிக்கு இலவசமாக
அறுவை சிகிச்சை செய்து புதுக்கண் பொருத்தி ஒளி பெறச் செய்தனர்.
முழுமையாகக் கொடுத்து விட்டு எளிமை வாழ்வை ஏற்கும் அளவிற்கு
சவாலாக வருகிறது நம்பிக்கை அறிவிக்கும் புரட்சிகரமான வழி.
நம்பிக்கையும் முழுமையாகக் கொடுக்கும் மனநிலையும்
சந்திக்கும் இடமே இறைவனைச் சந்திக்கும் இடம்...
"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு
நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்."(மத்தேயு
25;:43)
ஹங்கேரி நாட்டில் எலிசபெத் என்ற பிறர் சிநேகம் நிறைந்த இராணி
ஒருத்தி இருந்தாள். இவள் ஒவ்வொரு நாளும் ஏழை எளியவர்களுக்கு
ஏராளமாக தான தர்மங்களைச் செய்வாள். தான தர்மங்களைச் செய்யும்
போது அந்த "ஏழை மக்களே நீங்களும் உங்களை விட ஏழைகளாக
இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்று அறிவுரை
கூறுவாள். அதற்கு அந்த ஏழை மக்கள் "அரசியே நாங்களே பரம
ஏழைகள். உங்களிடமிருந்து நாங்கள் பெற்றுக் கொள்வதைத் தவிர
எங்களிடம் வேறு ஒன்றுமே இல்லையே! அப்படி இருக்க நாங்கள்
எப்படிப் பிறருக்கு உதவி செய்ய இயலும்? "என்று திருப்பிக்
கேட்பார்கள். அதற்கு அந்த அன்பு அரசி "உங்களுக்கு இதயம் உண்டு
அதைக் கொண்டு நீங்கள் ஏழைகளை நேசிக்கலாம். உங்களுக்குக் கண்கள்
உண்டு. இவற்றைக் கொண்டு கண்ணீர் சிந்துபவர்களைக் கனிவோடு
பார்க்கலாம். உங்களுக்குக் கால்கள் உண்டு கால்களைக் கொண்டு
ஆறுதல் தேவைப்படுகிறவர்களை நாடிச் செல்லலாம்.உங்களுக்கு நாவு
உண்டு. உங்கள் நாவைக் கொண்டு பிறரோடு அன்புடன் உரையாடலாம்"
என்று கூறினாள்...
கொடுப்பவர்கள் மூன்று வகையினர்
1. தன்னிடம் மிகுதியாக இருப்பதில் இருந்து கொடுப்பவர்கள்.
2. தனக்கென வைத்திருப்பதில் கொடுப்பவர்கள்.
3. தனக்கென வைத்திருப்பது முழுவதையும் கொடுப்பவர்கள்.
இந்த மூன்றில் நாம் எந்த வகை?
இல்லாத விதவை இருப்பதை முழுவதுமாய் இறைவனிடம்
எடுத்துவைக்கும் போதே எஞ்சிய வாழ்வை இறைவனிடமே தஞ்சமாக
வைக்கிறாள்,
தரும் போதெல்லாம் குறைவின்றி பெறுகின்றோம்.
எப்போதும் ஏதோ ஒன்றினைப் பகிர்ந்து கொடுக்கும் தியாகச்
சிந்தனையுடன் இருப்போம்.
பணம், காசு, பொருள், சொகுசு மட்டுமல்ல பாமரருக்கு நல்ல
உணர்வையும் பகிந்து கொடுக்கும் உள்ளம் கொண்டிருப்போம்.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
கலயமும் காசும்
சில நாள்களுக்கு முன்னர் அஷ்வினி என்ற இளவலுக்கு மாமல்லபுரத்தில்
உள்ள ஆலயம் ஒன்றில் அன்னதானம் மறுக்கப்படுகின்றது. இவர் நரிக்குறவர்
இனத்தைச் சார்ந்த பெண். இவருடைய சாதி சுட்டிக்காட்டப்பட்டு
இவருக்கு உணவு மறுக்கப்படுகின்றது. தனக்கு ஏற்பட்ட அவலத்தை
அவர் காணொலியாகப் பதிவு செய்து பரவலாக்கம் செய்ய, அது வைரல்
ஆகி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கிறது. அவர் உடனடியாகச்
செயல்பட்டு நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு பல
கோடிக் கணக்கில் நலத்திட்ட உதவிகள் செய்கின்றார். 'பரவாயில்ல!
இருக்கட்டும்! சாப்பாடுதான! இன்னொரு இடத்தில்
பார்த்துக்கொள்ளலாம்' என்று அஷ்வினி ஓய்ந்திருக்கவில்லை.
ஏனெனில், பிரச்சினை சாப்பாடு சார்ந்தது அல்ல, மாறாக, தன்மரியாதை
சார்ந்தது என்பதை அறிந்திருந்தார்.
இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் இரு கைம்பெண்களைக்
காண்கின்றோம். அஷ்வினி தன் காணொலியால் புரட்சி செய்தது
போல, இவர்கள் தங்கள் கலயத்தாலும் காசாலும் புரட்சி
செய்கின்றனர்.
முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தன் இறைவாக்கினர் எலியாவை
சாரிபாத்தில் உள்ள கைம்பெண்ணின் இல்லத்திற்கு அனுப்புகின்றார்.
கதையை மேலோட்டமாக வாசித்தால் எலியா, கைம்பெண்ணைக்
காப்பாற்றுவது போல இருக்கிறது. ஆனால், இங்கே கடவுள்
கைம்பெண் ஒருத்தியைப் பயன்படுத்தித் தன் இறைவாக்கினரை உயிருடன்
வைத்துக்கொள்கின்றார். கடவுள் இப்படித்தான் சில நேரங்களில்
- சாமுவேலின் தாய் அன்னாவை, சிம்சோனின் தாயை, திருமுழுக்கு
யோவானின் தாய் எலிசபெத்தை - மனிதர்களின் நொறுங்குநிலையைத்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்.
நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர்கள் கைம்பெண்களின்
வீடுகளையும் விழுங்குகிறார்கள் என எச்சரிக்கின்ற இயேசு, தன்னிடம்
உள்ள அனைத்தையும் காணிக்கையாகப் போட்ட கைம்பெண்ணைப்
பாராட்டுகின்றார். ஒரு கைம்பெண் தன்னிடம் உள்ளது அனைத்தையும்
போட்டுத்தான் ஆலயத்தில் வழிபாடு செய்ய வேண்டுமா? என்ற எதிர்கேள்வியை
எழுப்பி புரட்சி செய்திருக்க வேண்டிய இயேசு, அவரின்
காணிக்கை இடும் செயலைப் பாராட்டுவது எனக்கு நெருடலாக இருக்கிறது.
கைம்பெண்கள் தங்களுக்கென உள்ளதையும் காணிக்கைப் பெட்டியில்
போட வைத்த ஆலயத்தையும், சமூக மற்றும் சமய அமைப்புகளையும்
அவர் சாடியிருக்கக் கூடாதா? தன்னிடம் உள்ளது அனைத்தையும்
கொடுத்த இக்கைம்பெண் காணிக்கை போடுவதற்கு முன்மாதிரி என்று
இன்றைய அருள்பணியாளர்களால் வர்ணிக்கப்படுவது நம் வேதனையைக்
கூட்டுகிறது. கைம்பெண்களின் கடைசிக் காசுகளை வைத்துத்தான்
ஓர் ஆலயமும் அதைச் சார்ந்திருக்கின்ற குருக்களும் தங்கள்
இருத்தலைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், அப்படிப்பட்ட அமைப்பு
தேவையா? என்ற கேள்வியும் நம்மில் எழுகின்றது.
இந்த இரு கைம்பெண்களும் புத்திசாலிகள்.
இவர்கள் தங்கள் கலயத்தாலும், காசுகளாலும் கடவுளுக்கே சவால்
விடுகின்றனர். கடவுளர்களைத் தங்களுக்கே பணிவிடை செய்ய
வைக்கின்றனர். தங்கள் பசி மற்றும் வறுமையை புரட்சியின் அடிநாதங்களாக
மாற்றுகின்றனர்.
எப்படி?
எலியா தன் இறைவாக்குப் பணியை மிகவும் கடினமான காலத்தில்
செய்கின்றார். சாலமோனுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல்
அரசு, வடக்கே 'இஸ்ரயேல்', தெற்கே 'யூதா' என இரண்டாகப்
பிரிகிறது. வடக்கே ஆகாபு ஆட்சி செய்தபோது தன் நாட்டை
சிலைவழிபாட்டின் நாடாக மாற்றுகின்றார். தன் பெனிசிய மனைவி
ஈசபேல் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தினால் இஸ்ரயேலின் கடவுளைக்
கைவிட்டு, பாகால் வழிபாடு செய்பவரா மாறுகின்றார் ஆகாபு. இஸ்ரயேல்
நாட்டின் அரச சமயமாகவும் பாகால் வழிபாட்டை ஏற்படுத்துகின்றார்.
அரசரைப் பின்பற்றுகின்ற பலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து
பாகாலுக்கு ஊழியம் புரிகின்றனர். பாகால் கடவுள் புயல்களின்
கடவுளாக இருந்ததால் மழைக்குக் காரணமானவராக இருந்தார். விவசாயத்தை
வாழ்வாதாரமாகக் கொண்ட இஸ்ரயேல் மக்களுக்கு மழை அதிகம்
தேவைப்பட்டதால் பாகால் கடவுள்மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் அதிகரித்தது.
அரசனின் இச்செயலைக் கண்டிக்கின்ற எலியா, அரசனின் எதிரியாக
மாறியதால், துன்புறுத்தப்பட்டு தன் சொந்த நாட்டை விட்டு
வெளியேறுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் எலியாவை சாரிபாத்தில் உள்ள
கைம்பெண் ஒருவரிடம் அனுப்புகின்றார். இந்த நகரம்
பெனிசியாவில் உள்ளது. இந்த நகரத்தார் அனைவரும் பாகால்
வழிபாடு செய்வோர் ஆவர். எலியா செல்லும் காலம் கொடிய பஞ்சத்தின்
காலம். இந்தப் பஞ்சத்தை ஆண்டவர்தாமே உருவாக்குகின்றார்.
அரசன் ஆகாபு செய்த குற்றத்திற்காக கடவுள் ஏன் நாட்டையும்,
அதில் உள்ள குற்றமற்றோரையும் தண்டிக்க வேண்டும்? மழையை
நிறுத்துவதன் வழியாக ஆண்டவராகிய கடவுள் பாகால் கடவுளின் இருத்தலைப்
பொய்யாக்குகின்றார். எலியா சந்தித்த கைம்பெண் பாகால்
வழிபாடு செய்பவர் என்பதை அப்பெண்ணின் வார்த்தைகளே சொல்கின்றன.
'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை!' என எலியாவைப்
பார்த்துச் சொல்கின்றார் அவர். ஆண்டவராகிய கடவுள் பற்றி
அவர் எப்படிக் கேள்வியுற்றார்? எலியா அக்கடவுளின் இறைவாக்கினர்
என்பதை எப்படி அறிந்துகொண்டார்? இந்தப் பெண்ணின் அறிவு நமக்கு
வியப்பளிக்கிறது.
முதலில் தண்ணீர் கேட்ட எலியா, பின்னர் அப்பமும்
கேட்கின்றார். தயங்கி நிற்கின்றார் பெண். ஏனெனில் அவர்களிடம்
இருப்பது கடைசிக் கை மாவும், பாட்டிலின் தூரில் உறைந்து கிடக்கும்
சில எண்ணெய்த்துளிகளும்தாம்! 'அதன்பின் சாகத்தான்
வேண்டும்' என்று இறப்பதற்கும் தயாராக இருந்தார் கைம்பெண்.
'ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு
தீராது. கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது' என்கிறார் எலியா.
எலியாவின் இறைவாக்கு உண்மையாகிறது. அந்தக் கலயம் எலியாவுக்கும்,
கைம்பெண்ணுக்கும், அவருடைய மகனுக்கும், வீட்டாருக்கும்
உணவளிக்கும் அமுதசுரபியாகவும் அட்சய பாத்திரமாகவும்
மாறுகின்றது.
எலியாவின் சொற்களை நம்புகின்றார் கைம்பெண். கலயம் வற்றினால்
தோற்பது கைம்பெண் அல்ல, எலியாவும் அவருடைய ஆண்டவரும் என்பதால்
துணிகின்றார் கைம்பெண். ஒரே நேரத்தில் எலியாவையும் எலியாவின்
கடவுளையும் நம்புகின்றார் கைம்பெண்.
நற்செய்தி வாசகம் மூன்று மனிதர்களை மையமாக வைத்துச் சுழல்கிறது:
(அ) மறைநூல் அறிஞர்கள் (அல்லது) திருச்சட்ட வல்லுநர்கள்,
(ஆ) பணக்காரக் கைம்பெண்கள், மற்றும் (இ) ஏழைக் கைம்பெண்.
மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் காலத்தில் எழுதப்படிக்கத்
தெரிந்தவர்கள். இவர்கள் குடியியல் மற்றும் சமயச் சட்டங்களைக்
கற்றுத் தேர்ந்தவர்கள். இவர்கள் பெரிதும் மதிக்கப்பெற்றனர்.
மதிப்பின் அடையாளமாக நீண்ட தொங்கலாடை அணிந்தனர். தொழுகைக்
கூடங்களிலும் மக்களின் கூடுகைகளிலும் இவர்களுக்கு முதன்மையான
இடம் வழங்கப்பட்டது. சட்டம்சார்ந்த ஆலோசனைகளுக்கு இவர்களுக்குப்
பணம் கொடுக்கப்படவில்லை. ஆக, அரசுசார் பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு
இவர்கள் பிறரின் தாராள உள்ளத்தையும் கைகளையும் நம்பியிருந்தனர்.
இவர்கள் 'கைம்பெண்களின் வீடுகளை விழுங்குகிறார்கள்' எனச்
சொல்கிறார் இயேசு. சில திருச்சட்ட அறிஞர்கள் தங்களுடைய வருமானம்
மற்றும் வசதிகளுக்காக பணக்காரக் கைம்பெண்களோடு இணைந்து
வாழ்ந்தனர். இக்கைம்பெண்கள் தங்களுடைய கணவரின் கட்டுப்பாட்டில்
இல்லாததால் பணம் மற்றும் சொத்துகளின் உரிமையாளர்களாக இருந்தனர்.
தங்களுடைய அழகான வார்த்தைகளாலும், நீண்ட இறைவேண்டல்களாலும்
இவர்கள் கைம்பெண்களை ஈர்த்து அவர்களிடமிருந்து பணம் பறித்தனர்.
சில நேரங்களில் அவர்களுக்கு எதிராக வழக்காடி அவர்களுடைய உரிமைச்சொத்து
அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டனர். சமயத்தின் பெயராலும்
சமயத்தின் சட்டங்களின் பெயராலும் கைம்பெண்களை மறைநூல் அறிஞர்கள்
பயன்படுத்துவதையும் பயமுறுத்துவதையும் சாடுகின்றார் இயேசு.
ஆக, தங்கள் அதிகாரத்தை மறைநூல் அறிஞர்கள் தங்களின் நலனுக்காக
மட்டும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஏழைக் கைம்பெண்ணுக்கு வேறு பிரச்சினை இருந்தது. எருசலேம்
ஆலயம் மற்றும் குருக்களின் நலனுக்காக ஒவ்வொரு யூதரும் அரை
ஷெக்கேல் வரியை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டாயம்
இருந்தது. இந்த வரியை எருசலேம் ஆலயத்தில் உள்ள காணிக்கைப்
பெட்டியில் அவர்கள் போட வேண்டும். ஏழைக் கைம்பெண் ஒரு
கொதிராந்துக்கு இணையான இரு செப்புக் காசுகளைப்
போடுகின்றார். கொடுக்க வேண்டிய வரியில் 60இல் 1 தான் இது.
ஆலய வரி கட்டும் அளவுக்கு அவளிடம் பணம் இல்லை. தன்னிடம் உள்ள
அனைத்தையும் அவள் போடுகின்றாள். கடவுள்மேல் கொண்டுள்ள பிரமாணிக்கத்தால்
தான் அனைத்தையும் போட்டாரா? அல்லது கடவுள் மேல் உள்ள கோபத்தால்
- என்னிடமிருந்து என் கணவனை எடுத்துக்கொண்டாய்! என் பணத்தை
எடுத்துக்கொண்டாய்! என் பிள்ளைகளை எடுத்துக்கொண்டாய்! என்
உடல்நலத்தை எடுத்துக்கொண்டாய்! இதோ, இந்தக் காசுகளையும்
நீயே எடுத்துக்கொள்! என்ற மனநிலையில் - போட்டாரா? என்று
தெரியவில்லை. ஆனால், அவர் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளவில்லை.
தனக்கென அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை என்பதால் இனி
அவரைக் கடவுளே பராமரிக்க வேண்டும். ஆக, தன்னிடம் உள்ளதை முழமையாக
இழந்த அவர் இறைமகன் இயேசுவால் முன்மாதிரியான நபராகக் காட்டப்படுகின்றார்.
ஆலய வரி என்பது இறைவனின் பராமரிப்புக்காக மக்கள்
செலுத்தும் நன்றிக் காணிக்கை. மற்றவர்கள் இக்காணிக்கையை தங்களிடமிருந்த
மிகுதியிலிருந்து போட்டனர். அதாவது, இறைப்பராமரிப்புக்காக
நன்றி சொல்வதற்கென அவர்கள் காணிக்கை அளித்தாலும், தங்களைத்
தாங்களே பராமரிப்பதற்கென்று அவர்கள் இருப்பை வைத்திருந்தனர்.
ஆனால், கைம்பெண்ணோ முழுக்க முழுக்க இறைப்பராமரிப்பின்மேல்
நம்பிக்கை கொண்டவராக இருக்கின்றார்.
முதல் வாசகத்தில், தன் கலயம் முழுவதையும் காலியாக்கி கடவுளின்
இறைவாக்கினருக்கு உணவளிக்கிறார் கைம்பெண்.
நற்செய்தி வாசகத்தில், தன் காசு முழுவதையும் காலியாக்கி
கடவுளின் மகன் முன் உயர்ந்து நிற்கிறார் கைம்பெண்.
இந்த இருவரும் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?
(அ) இறைப்பராமரிப்பின்மேல் நம்பிக்கை
'வானத்துப் பறவைகளுக்கு உணவும் வயல்வெளி மலர்களுக்கு உடையும்
வழங்கும் இறைவன்' தங்களுக்கும் உணவளிப்பார் என்று நம்பினர்.
முதல் வாசகத்தில், முதலில் அக்கைம்பெண் தன் கலயத்தையே
பார்க்கின்றார். ஆகையால்தான், உண்டு முடித்தபின் நானும் என்
மகனும் இறப்போம் என்கிறார். ஆனால், எலியாவின் இறைவனின்
வார்த்தைகளைக் கேட்டவுடன் துணிந்து புறப்படுகின்றார். இந்த
ஒற்றைக் கைம்பெண் அந்தக் கலயத்தைக் கொண்டு ஊருக்கே உணவளித்திருப்பாள்.
கலயத்தில் மாவும் எண்ணெயும் குறைவுபடாததை ஒட்டுமொத்த ஊரும்
அறிந்திருக்கும். பாகால் வழிபாடு நடக்கும் இடத்திலேயே ஆண்டவராகிய
கடவுள் தன் பராமரிப்பை நிலைநிறுத்துகின்றார். நற்செய்தி வாசகத்தில்
நாம் காணும் ஏழைக் கைம்பெண் ஆலய வரி என்பதை இறைப்பராமரிப்புக்கான
நன்றி என்று பார்க்கின்றார். அனைத்தையும் கொடுக்கின்றார்.
'அநாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆண்டவர் ஆதரிக்கின்றார்'
(காண். திபா 146) என்னும் இன்றைய பதிலுரைப்பாடல் வரிகளை அறிந்தவராக
இருந்திருப்பார் இக்கைம்பெண்.
(ஆ) மனச் சுதந்திரம்
நான் எதைப் பிடித்திருக்கிறேனோ, அதுவே என்னைப்
பிடித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாய்க்குட்டியை
கயிறு ஒன்றால் கட்டி நான் நடத்திச் செல்கிறேன் என்றால், முதலில்
நான் நாய்க்குட்டியைப் பிடித்திருப்பது போலத்தான் இருக்கும்.
ஆனால், அடிகள் நகர நகர, நாய்க்குட்டிதான் என்னைப் பிடிக்கத்
தொடங்குகிறது. என்னைவிட்டு அது ஓடிவிடக் கூடாது என
நினைக்கின்ற நான், அதைவிட்டுவிட்டு நான் ஓட முடியாத
நிலைக்கு மாறிவிடுகிறேன். செல்வம், பெயர், புகழ், அதிகாரம்
அனைத்தும் அப்படியே. மேற்காணும் கைம்பெண்கள் இருவரும் எதையும்
பற்றிக்கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இது இவர்களுடைய விரக்தியின்
அடையாளமாகவோ அல்லது மனச் சுதந்திரத்தின் அடையாளமாகவோ இருக்கலாம்.
மனச்சுதந்திரத்தின் அடையாளமே. விரக்தியின் அடையாளமாக இருந்தால்
முதல் கைம்பெண் கலயத்தை உடைத்துப் போட்டிருப்பார். இரண்டாம்
கைம்பெண் செப்புக் காசுகளை வெளியே நின்று ஆலயத்தின்மேல் எறிந்திருப்பாள்.
(இ) வலுவற்றவர்களுடன் உடனிருப்பு
லூக்கா நற்செய்தியின்படி தன் பணியை நாசரேத்தில் தொடங்குகின்ற
இயேசு, எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டதை
மேற்கோள் காட்டுகின்றார். புறவினத்துக் கைம்பெண் என்ற
நிலையில் வலுவற்று நின்ற அவருக்கு இறைவன் துணைநிற்கின்றார்
கடவுள். எருசலேம் ஆலயத்தில் தங்களிடம் உள்ளதிலிருந்து
காணிக்கை இட்ட பலர்முன் வலுவற்று நின்ற கைம்பெண்ணைப்
பாராட்டுவதன் வழியாக அவருக்கு நற்சான்று பகர்ந்து அவருடன்
உடன் நிற்கின்றார் இயேசு. இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் எருசலேம் ஆலயத்தின் தலைமைக்குருவையும்,
வானக எருசலேமின் ஒப்பற்ற தலைமைக்குரு இயேசுவையும் ஒப்பிட்டு,
இயேசுவின் ஞானஸ்நானம் அவர் வலுவற்றவர்களுக்குத் துணையாக
நிற்பதில் அடங்கியுள்ளது என்கிறார் (காண். எபி 4). இன்று
வலுவற்றவர்களோடு நாம் உடன் நிற்கத் தயாரா? வலுவற்ற
நிலையில் உள்ளவர்களுக்கு நாம் எப்படி வலு சேர்க்க இயலும்?
இறுதியாக,
காணொலி, கலயம், காசு என அனைத்தும் புரட்சியின், மாற்றத்தின்,
வாழ்வின் கருவிகள்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
பொதுக்காலம் 32ம் ஞாயிறு
யார் அந்தப் பெண்?
1 அரசர்கள் 17:10-16,
எபிரேயர் 9:24-28 ,
மாற்கு 12: 38-44
நான்கு பேர் அறிந்து உதவி செய்தால் அது விளம்பரம்.
நான்கு பேர் அறியாது செய்தால் அதற்கு பேர் உதவி.
உதவி பெறுபவர் யார் என்று அறியாது செய்தால் அது தானம்,
காணிக்கை....
நம்முடைய செயலை வைத்து நாம் யார் என்று நம்மை அடையாளப்படுத்த
வேண்டும். நம்முடைய உருவம், செல்வம், தகுதி , திறமை வைத்து அல்ல.
இப்பொழுதெல்லாம் நம்முடைய அடையாளங்கள் உருவத்தை வைத்தும் செல்வ வளத்தைப்
பொறுத்து மட்டுமே அமைகின்றன. யாரையாவது நாம் இன்னொருவருக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்றால், அதோ அந்த மாடி வீட்டில் வசிப்பவர், கோவிலுக்கு
காரில் வருபவர், முதல் பெஞ்சில் உட்காருபவர் என்று தான் அந்த நபரை
அடையாளப்படுத்துகின்றோம். மாறாக யாரும்
அவர் செய்த நற்காரியங்களை வைத்து அறிமுகப்படுத்துவது இல்லை, அடையாளப்படுத்துவது
இல்லை. ஏன் அப்படி செய்யும் அளவுக்கு நாம் நற்காரியம் எதுவும்
செய்து விடவில்லையா?. இப்பொழுதெல்லாம் நற்காரியங்கள் நான்கு சுவத்துக்குள்
மட்டுமல்ல நானிலம் முழுவதற்கும் அறிவிக்கப்படுகின்றன. ஒரு கை செய்வது
மறு கைக்கு தெரியக்கூடாது என்று சொன்ன காலம் போய், ஒரு கையால்
கொடுப்பதை மறு கையால் செல்ஃபி எடுத்து உலகிற்கு சொல்லும் காலம் வந்து
விட்டது. அதுவும் அருகில் வாழ்வோரை விட அயல் நாட்டில் வாழ்வோருக்கு
அறிவிக்கவும், அதிக லைக்குகள் வாங்கவுமே
செய்யப்படுகின்றன.
இப்படி நாம் இருக்க இன்றைய வாசகங்களில் நாம் கண்ட இரு பெண்கள் தங்களுடைய
செயலால் தங்களை யார் என்று நிருபித்து
இருக்கின்றார்கள். கைப்பேசியில் புகைப்படம் எடுக்கவில்லை, வலைதளத்தில்
காணிக்கை போடும் குறும்படம் காட்டவில்லை.
இணையதளம் இல்லாமலே இன்று வரை நம்மால் பேசப்படுகின்றார்கள். பெண்கள்
என்றாலே அழகு, உருவம் வைத்து
அடையாளப்படுத்தும் உலகில் தங்களது செயல்களால் யார் அந்த பெண்கள் என்று
பிறரை திரும்பி பார்க்க வைத்து இருக்கின்றனர் நம் மங்கையர்கள். இவர்களது
வாழ்வும் செயலும் இறைவாக்கினர் எலியாவையும் இறைமகன் இயேசுவையும்
நெகிழச்செய்தது. நம்முடைய வாழ்வும் செயலும் இயேசுவை நெகிழச்செய்ய
என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்களின் வாழ்க்கை வழி அறிந்து கொள்ள
முயல்வோம்.
பழைய ஏற்பாட்டு கைம்பெண்:
- படைத்த இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை
- இறையடியார்களை மதிக்கும் குணம்.
- எளிமை வாழ்வு. பகிரும் குணம்
- இவருக்கு பெயர் கொடுக்கப்படவில்லை.
சாரிபாத்து ஊரைச்சேர்ந்தவர் என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றார்.
கணவர் இருந்திருந்தால் இன்னாரின் மனைவி என்று கூறப்பட்டிருப்பார்.
கணவனை இழந்ததால் கைம்பெண் ஆக்கப்பட்டவர்.
தன்னிடம் இருக்கும் சிறிதளவு உணவை சமைக்க தேவையான சுள்ளிகளைப்
பொறுக்க வீட்டை விட்டு வெளியே வருகின்றார். தன் மகனை அனுப்பாமல்
தானே அந்த வேலைகளை செய்கின்றார். எளிய மகன் அதனால் அதிக பசியுற்று
துன்புறக் கூடாது என்று எண்ணிணாரோ என்னவோ?? ஏழ்மையிலும் பக்தி
நிறைந்த மன நிலையில் இருக்கின்றார். படைத்த இறைவன் உணவளிப்பார்
என்ற நம்பிக்கை, அவர் தந்த வாழ்வு அவர் கட்டளைப்படி நடக்கட்டும் என்ற
மன நிலை.
- இறைவாக்கினர் எலியாவை உடனே கண்டு கொள்கின்றார். தாகமாய் இருக்கிறது
தண்ணீர் கொடு என்று எலியா கேட்டவுடன் தண்ணீர் கொடுக்க விரைந்தவர்.
அப்படியே சிறிது அப்பமும் கொடு என்றவுடன் தயங்குகின்றார். தண்ணீர்
தாராளமாய் கொடுக்குமளவுக்கு இருக்கும் அவரிடம் அப்பம் இல்லை.
கைம்பெண்ணான தன்னிடம் ஒரு இறைவாக்கினர் தண்ணீர் கேட்டதை பெறும்
பேறாக எண்ணி இருந்திருப்பார். அப்பம் கேட்டும் கொடுக்க இல்லையே என்ற
வருத்தம் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. வாழும் கடவுள்
மேல் ஆணை என்று சொல்கின்றாள். கேட்டு மறுக்கப்படும் வலி என்ன என்பதை
நன்கு அறிந்தவ(ள்)ர். எலியாவின் பசி உணர்வையும், தான் இல்லை என்று
கூறும் உணர்வையும் எளிதில் கண்டு கொள்கின்றா(ள்)ர்.
தன்னிடம் எதுவும் இல்லாதபோதும் எலியா சொன்ன அந்த வார்த்தையின் மேல்
நம்பிக்கை கொள்கின்றார். சாவதற்கு முன் நல்லது செய்ய வாய்ப்பு
கிடைத்தது போல எண்ணி மகிழ்கின்றார். உணவின்றி செத்தாலும் பரவாயில்லை.
இறைவாக்கினர்க்கு உணவிட்டு மாண்டு விட எண்ணுகின்றார். அவர் சொன்னபடியே
அவர்க்கு அப்பம் சுட்டு கொடுக்கின்றார். அவரது நம்பிக்கையின் படியே
பானையிலுள்ள மாவும் தீரவில்லை கலயத்தில் உள்ள எண்ணையும் தீரவில்லை.
இன்றே இறந்து விடுவோம் என்று எண்ணியவர்க்கு, பல ஆண்டுகாலம் வாழ உணவு
கிடைக்கின்றது.
தான் செய்த செயலை எல்லோரிடமும் சென்று கூறி தம்பட்டம் அடித்திருக்க
மாட்டார். மாறாக தன்னைப் போல் துன்புறும் மக்களுக்கு கட்டாயம் அந்த
உணவை பகிர்ந்திருப்பார். உதவி செய்யும் குணம் உடையவர்களால் பிறருக்கு
உதவாமல் இருக்க முடியாது. பெற்ற உதவியை பிறருக்கு பகிர்ந்து அளித்திருப்பார்.
நாமும் நம்மைப் படைத்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில்
வாழ முயல்வோம். இறைவாக்கினர்கள் இறைவனின் அடியார்கள் என்பதை உணர்ந்து
வாழ்வோம். இருப்பதே போதும் என்ற மன நிலையில் எளிய வாழ்வு வாழ
முற்படுவோம்.
இப்படி வாழ்ந்ததாலேயே சாரிபாத்து கைம்பெண் இன்றளவும் பேசப்படுகின்றார்.
எலியா உணவு கேட்டதும் எரிந்து விழுந்து விரட்டி அடித்து இருந்தால்
இன்று இவர் இப்படி விவிலியத்தில் இடம் பெற்றிருக்க மாட்டார்.
கைம்மாறு கருதாது செய்யும் உதவிக்கு காலம் நல்ல பதில் சொல்லும் என்பதற்கு
நல்ல உதாரணம் இந்த சாரிபாத் நகர் கைம்பெண்.
புதிய ஏற்பாட்டு கைம்பெண்.
* நிறைவான மனது.
* கோவில் கடமை
* நம்பிக்கையான செயல்
நிறைவான மனதுடன் வாழ்கின்றார் இந்த கைம்பெண். தனக்கு அது இல்லை இது
இல்லை என்று அளவுக்கு அதிகமாக ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் இவர்
இது போதும் என்ற மன நிலையில் வாழ்கின்றார். அதனால் தன்னுடைய அடுத்த
வேளை உணவிற்கான பணமான அந்த திராக்மாவை காணிக்கையாக அளிக்கின்றார்.
அதில் அவருக்கு எந்த விதமான மன வருத்தமும் இருந்திருக்காது. ஏனெனில்
அவர் யாருடைய கட்டாயத்தினாலும் அதை காணிக்கையாக்கவில்லை. மாறாக
தானாக மனமுவந்து அதை அளிக்கின்றார். பிறர் பார்க்க வேண்டும் என்று
நினைத்து செய்யவில்லை. யாருக்கும் தெரியாமல் அதை
காணிக்கையாக்குகின்றார். ஏழ்மையிலும் நிறைவான மனது எல்லோருக்கும்
கிடைப்பதில்லை. நான் அவனைப் போல் இல்லை
இவனைப் போல் இல்லை என்று நினைத்து வெம்பி அழும் மனிதர்கள் நடுவில்
இருந்த அந்த காசுகளையும் காணிக்கையாக்குகின்றார்.
- தான் எப்படி இருந்தாலும் தன்னுடைய ஆலய கடமைகளை சரியாக செய்கின்றார்.
கோவிலுக்கு வருகின்றார். தன்னுடைய காணிக்கையை செலுத்துகின்றார்.
ஆலயத்திற்கு செல்லாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் தேடிக் கொள்ளும் மக்கள்
மத்தியில் கடமை தவறாமல் செல்கின்றார்.
என்ன உடை உடுத்துவது, என்ன நகை அணிவது எந்த வாகனத்தில் போவது யார்
அருகில் அமர்வது என்ற எந்த கேள்வியும் இவரிடத்தில் இல்லை. ஆலயத்திற்கு
செல்கிறேன் ஆண்டவனை பார்க்கிறேன். என்னிடத்தில் உள்ளதை
காணிக்கையாக்குகிறேன்என்ற ஒரே நோக்கத்தோடு செல்கின்றார். ஆண்டவனின்
கடமைகளை நாம் சரிவர செய்யும் போது அவர் நமக்கு உண்டான கடமைகளை மறக்காமல்
செய்வார் என்பதை ஆழமாக நம்பியிருப்பார்.
- தன்னுடைய எதிர்காலம் என்ன ஆகும்? அதற்கு எப்படி பணம் சம்பாதிப்பது?
யார் நமக்கு உதவுவார்? என்ற எந்தவிதமான
கவலையோ பயமோ அவருக்கு இல்லை. தன்னிடம் இருந்தது அனைத்தையுமே
காணிக்கையாக்குகின்றார். 100 மூ கடவுளையும் அவருடைய
வார்த்தையையும் மட்டுமே நம்பி செயல்படுகின்றார். கப்பல் மாலுமியின்
மகள் கொந்தளிக்கும் கடலை கொள்ளை அழகோடு
ரசிப்பது போல. கடல் கொந்தளித்தால் என்ன கப்பல் ஓட்டுவது என் அப்பா
என்ற நம்பிக்கையில் பயணம் செய்கின்றாள்.
அதே நம்பிக்கை இந்தக் கைம்பெண்ணிற்கும். நாளைய நாளைக் குறித்து கவலை
இல்லை இன்றைய பொழுது நான் இறைவனோடு என்ற நம்பிக்கையில் வளர முயற்சிப்போம்.
பழைய ஏற்பாட்டுக் கைம்பெண்ணும் புதிய ஏற்பாட்டுக் கைம்பெண்ணும் நமக்கு
விடுக்கும் செய்தி. எந்நிலையிலும் இறைவன்
மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் தளர்ந்து விடாதீர்கள். இருப்பதே
போதும் என்ற மன நிலையில் வளருங்கள். எதிர்பார்ப்பின்றி உதவுங்கள்
..
ஆம் அன்பு உள்ளங்களே இவர்களது வாழ்வும் செயலும் போன்று நமது வாழ்வு
மாற அருள் வேண்டுவோம். யார் இந்த பெண்-ஆண் என்று நம்முடைய
வாழ்வையும் செயலையும் வைத்து அவர்கள் அறிந்து கொள்ள முயற்சி
செய்வோம். இப்படி வாழ்ந்தால் நம்முடைய் மாவுப் பானை என்னும் நம்பிக்கை
அள்ள அள்ள குறையாமல் பெருகும். நற்செயல் என்னும் எண்ணெய்
கலயம்நிரம்பி வழியும். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள
அனைவரோடும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
கலயமும் காசும்
சில நாள்களுக்கு முன்னர் அஷ்வினி என்ற இளவலுக்கு மாமல்லபுரத்தில்
உள்ள ஆலயம் ஒன்றில் அன்னதானம் மறுக்கப்படுகின்றது. இவர் நரிக்குறவர்
இனத்தைச் சார்ந்த பெண். இவருடைய சாதி சுட்டிக்காட்டப்பட்டு
இவருக்கு உணவு மறுக்கப்படுகின்றது. தனக்கு ஏற்பட்ட அவலத்தை
அவர் காணொலியாகப் பதிவு செய்து பரவலாக்கம் செய்ய, அது வைரல்
ஆகி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கிறது. அவர் உடனடியாகச்
செயல்பட்டு நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு பல
கோடிக் கணக்கில் நலத்திட்ட உதவிகள் செய்கின்றார். 'பரவாயில்ல!
இருக்கட்டும்! சாப்பாடுதான! இன்னொரு இடத்தில்
பார்த்துக்கொள்ளலாம்' என்று அஷ்வினி ஓய்ந்திருக்கவில்லை.
ஏனெனில், பிரச்சினை சாப்பாடு சார்ந்தது அல்ல, மாறாக, தன்மரியாதை
சார்ந்தது என்பதை அறிந்திருந்தார்.
இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் இரு கைம்பெண்களைக்
காண்கின்றோம். அஷ்வினி தன் காணொலியால் புரட்சி செய்தது
போல, இவர்கள் தங்கள் கலயத்தாலும் காசாலும் புரட்சி
செய்கின்றனர்.
முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தன் இறைவாக்கினர் எலியாவை
சாரிபாத்தில் உள்ள கைம்பெண்ணின் இல்லத்திற்கு அனுப்புகின்றார்.
கதையை மேலோட்டமாக வாசித்தால் எலியா, கைம்பெண்ணைக்
காப்பாற்றுவது போல இருக்கிறது. ஆனால், இங்கே கடவுள்
கைம்பெண் ஒருத்தியைப் பயன்படுத்தித் தன் இறைவாக்கினரை உயிருடன்
வைத்துக்கொள்கின்றார். கடவுள் இப்படித்தான் சில நேரங்களில்
- சாமுவேலின் தாய் அன்னாவை, சிம்சோனின் தாயை, திருமுழுக்கு
யோவானின் தாய் எலிசபெத்தை - மனிதர்களின் நொறுங்குநிலையைத்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்.
நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர்கள் கைம்பெண்களின்
வீடுகளையும் விழுங்குகிறார்கள் என எச்சரிக்கின்ற இயேசு, தன்னிடம்
உள்ள அனைத்தையும் காணிக்கையாகப் போட்ட கைம்பெண்ணைப்
பாராட்டுகின்றார். ஒரு கைம்பெண் தன்னிடம் உள்ளது அனைத்தையும்
போட்டுத்தான் ஆலயத்தில் வழிபாடு செய்ய வேண்டுமா? என்ற எதிர்கேள்வியை
எழுப்பி புரட்சி செய்திருக்க வேண்டிய இயேசு, அவரின்
காணிக்கை இடும் செயலைப் பாராட்டுவது எனக்கு நெருடலாக இருக்கிறது.
கைம்பெண்கள் தங்களுக்கென உள்ளதையும் காணிக்கைப் பெட்டியில்
போட வைத்த ஆலயத்தையும், சமூக மற்றும் சமய அமைப்புகளையும்
அவர் சாடியிருக்கக் கூடாதா? தன்னிடம் உள்ளது அனைத்தையும்
கொடுத்த இக்கைம்பெண் காணிக்கை போடுவதற்கு முன்மாதிரி என்று
இன்றைய அருள்பணியாளர்களால் வர்ணிக்கப்படுவது நம் வேதனையைக்
கூட்டுகிறது. கைம்பெண்களின் கடைசிக் காசுகளை வைத்துத்தான்
ஓர் ஆலயமும் அதைச் சார்ந்திருக்கின்ற குருக்களும் தங்கள்
இருத்தலைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், அப்படிப்பட்ட அமைப்பு
தேவையா? என்ற கேள்வியும் நம்மில் எழுகின்றது.
இந்த இரு கைம்பெண்களும் புத்திசாலிகள்.
இவர்கள் தங்கள் கலயத்தாலும், காசுகளாலும் கடவுளுக்கே சவால்
விடுகின்றனர். கடவுளர்களைத் தங்களுக்கே பணிவிடை செய்ய
வைக்கின்றனர். தங்கள் பசி மற்றும் வறுமையை புரட்சியின் அடிநாதங்களாக
மாற்றுகின்றனர்.
எப்படி?
எலியா தன் இறைவாக்குப் பணியை மிகவும் கடினமான காலத்தில்
செய்கின்றார். சாலமோனுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல்
அரசு, வடக்கே 'இஸ்ரயேல்', தெற்கே 'யூதா' என இரண்டாகப்
பிரிகிறது. வடக்கே ஆகாபு ஆட்சி செய்தபோது தன் நாட்டை
சிலைவழிபாட்டின் நாடாக மாற்றுகின்றார். தன் பெனிசிய மனைவி
ஈசபேல் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தினால் இஸ்ரயேலின் கடவுளைக்
கைவிட்டு, பாகால் வழிபாடு செய்பவரா மாறுகின்றார் ஆகாபு. இஸ்ரயேல்
நாட்டின் அரச சமயமாகவும் பாகால் வழிபாட்டை ஏற்படுத்துகின்றார்.
அரசரைப் பின்பற்றுகின்ற பலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து
பாகாலுக்கு ஊழியம் புரிகின்றனர். பாகால் கடவுள் புயல்களின்
கடவுளாக இருந்ததால் மழைக்குக் காரணமானவராக இருந்தார். விவசாயத்தை
வாழ்வாதாரமாகக் கொண்ட இஸ்ரயேல் மக்களுக்கு மழை அதிகம்
தேவைப்பட்டதால் பாகால் கடவுள்மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் அதிகரித்தது.
அரசனின் இச்செயலைக் கண்டிக்கின்ற எலியா, அரசனின் எதிரியாக
மாறியதால், துன்புறுத்தப்பட்டு தன் சொந்த நாட்டை விட்டு
வெளியேறுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் எலியாவை சாரிபாத்தில் உள்ள
கைம்பெண் ஒருவரிடம் அனுப்புகின்றார். இந்த நகரம்
பெனிசியாவில் உள்ளது. இந்த நகரத்தார் அனைவரும் பாகால்
வழிபாடு செய்வோர் ஆவர். எலியா செல்லும் காலம் கொடிய பஞ்சத்தின்
காலம். இந்தப் பஞ்சத்தை ஆண்டவர்தாமே உருவாக்குகின்றார்.
அரசன் ஆகாபு செய்த குற்றத்திற்காக கடவுள் ஏன் நாட்டையும்,
அதில் உள்ள குற்றமற்றோரையும் தண்டிக்க வேண்டும்? மழையை
நிறுத்துவதன் வழியாக ஆண்டவராகிய கடவுள் பாகால் கடவுளின் இருத்தலைப்
பொய்யாக்குகின்றார். எலியா சந்தித்த கைம்பெண் பாகால்
வழிபாடு செய்பவர் என்பதை அப்பெண்ணின் வார்த்தைகளே சொல்கின்றன.
'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை!' என எலியாவைப்
பார்த்துச் சொல்கின்றார் அவர். ஆண்டவராகிய கடவுள் பற்றி
அவர் எப்படிக் கேள்வியுற்றார்? எலியா அக்கடவுளின் இறைவாக்கினர்
என்பதை எப்படி அறிந்துகொண்டார்? இந்தப் பெண்ணின் அறிவு நமக்கு
வியப்பளிக்கிறது.
முதலில் தண்ணீர் கேட்ட எலியா, பின்னர் அப்பமும்
கேட்கின்றார். தயங்கி நிற்கின்றார் பெண். ஏனெனில் அவர்களிடம்
இருப்பது கடைசிக் கை மாவும், பாட்டிலின் தூரில் உறைந்து கிடக்கும்
சில எண்ணெய்த்துளிகளும்தாம்! 'அதன்பின் சாகத்தான்
வேண்டும்' என்று இறப்பதற்கும் தயாராக இருந்தார் கைம்பெண்.
'ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு
தீராது. கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது' என்கிறார் எலியா.
எலியாவின் இறைவாக்கு உண்மையாகிறது. அந்தக் கலயம் எலியாவுக்கும்,
கைம்பெண்ணுக்கும், அவருடைய மகனுக்கும், வீட்டாருக்கும்
உணவளிக்கும் அமுதசுரபியாகவும் அட்சய பாத்திரமாகவும்
மாறுகின்றது.
எலியாவின் சொற்களை நம்புகின்றார் கைம்பெண். கலயம் வற்றினால்
தோற்பது கைம்பெண் அல்ல, எலியாவும் அவருடைய ஆண்டவரும் என்பதால்
துணிகின்றார் கைம்பெண். ஒரே நேரத்தில் எலியாவையும் எலியாவின்
கடவுளையும் நம்புகின்றார் கைம்பெண்.
நற்செய்தி வாசகம் மூன்று மனிதர்களை மையமாக வைத்துச் சுழல்கிறது:
(அ) மறைநூல் அறிஞர்கள் (அல்லது) திருச்சட்ட வல்லுநர்கள்,
(ஆ) பணக்காரக் கைம்பெண்கள், மற்றும் (இ) ஏழைக் கைம்பெண்.
மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் காலத்தில் எழுதப்படிக்கத்
தெரிந்தவர்கள். இவர்கள் குடியியல் மற்றும் சமயச் சட்டங்களைக்
கற்றுத் தேர்ந்தவர்கள். இவர்கள் பெரிதும் மதிக்கப்பெற்றனர்.
மதிப்பின் அடையாளமாக நீண்ட தொங்கலாடை அணிந்தனர். தொழுகைக்
கூடங்களிலும் மக்களின் கூடுகைகளிலும் இவர்களுக்கு முதன்மையான
இடம் வழங்கப்பட்டது. சட்டம்சார்ந்த ஆலோசனைகளுக்கு இவர்களுக்குப்
பணம் கொடுக்கப்படவில்லை. ஆக, அரசுசார் பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு
இவர்கள் பிறரின் தாராள உள்ளத்தையும் கைகளையும் நம்பியிருந்தனர்.
இவர்கள் 'கைம்பெண்களின் வீடுகளை விழுங்குகிறார்கள்' எனச்
சொல்கிறார் இயேசு. சில திருச்சட்ட அறிஞர்கள் தங்களுடைய வருமானம்
மற்றும் வசதிகளுக்காக பணக்காரக் கைம்பெண்களோடு இணைந்து
வாழ்ந்தனர். இக்கைம்பெண்கள் தங்களுடைய கணவரின் கட்டுப்பாட்டில்
இல்லாததால் பணம் மற்றும் சொத்துகளின் உரிமையாளர்களாக இருந்தனர்.
தங்களுடைய அழகான வார்த்தைகளாலும், நீண்ட இறைவேண்டல்களாலும்
இவர்கள் கைம்பெண்களை ஈர்த்து அவர்களிடமிருந்து பணம் பறித்தனர்.
சில நேரங்களில் அவர்களுக்கு எதிராக வழக்காடி அவர்களுடைய உரிமைச்சொத்து
அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டனர். சமயத்தின் பெயராலும்
சமயத்தின் சட்டங்களின் பெயராலும் கைம்பெண்களை மறைநூல் அறிஞர்கள்
பயன்படுத்துவதையும் பயமுறுத்துவதையும் சாடுகின்றார் இயேசு.
ஆக, தங்கள் அதிகாரத்தை மறைநூல் அறிஞர்கள் தங்களின் நலனுக்காக
மட்டும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஏழைக் கைம்பெண்ணுக்கு வேறு பிரச்சினை இருந்தது. எருசலேம்
ஆலயம் மற்றும் குருக்களின் நலனுக்காக ஒவ்வொரு யூதரும் அரை
ஷெக்கேல் வரியை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டாயம்
இருந்தது. இந்த வரியை எருசலேம் ஆலயத்தில் உள்ள காணிக்கைப்
பெட்டியில் அவர்கள் போட வேண்டும். ஏழைக் கைம்பெண் ஒரு
கொதிராந்துக்கு இணையான இரு செப்புக் காசுகளைப்
போடுகின்றார். கொடுக்க வேண்டிய வரியில் 60இல் 1 தான் இது.
ஆலய வரி கட்டும் அளவுக்கு அவளிடம் பணம் இல்லை. தன்னிடம் உள்ள
அனைத்தையும் அவள் போடுகின்றாள். கடவுள்மேல் கொண்டுள்ள பிரமாணிக்கத்தால்
தான் அனைத்தையும் போட்டாரா? அல்லது கடவுள் மேல் உள்ள கோபத்தால்
- என்னிடமிருந்து என் கணவனை எடுத்துக்கொண்டாய்! என் பணத்தை
எடுத்துக்கொண்டாய்! என் பிள்ளைகளை எடுத்துக்கொண்டாய்! என்
உடல்நலத்தை எடுத்துக்கொண்டாய்! இதோ, இந்தக் காசுகளையும்
நீயே எடுத்துக்கொள்! என்ற மனநிலையில் - போட்டாரா? என்று
தெரியவில்லை. ஆனால், அவர் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளவில்லை.
தனக்கென அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை என்பதால் இனி
அவரைக் கடவுளே பராமரிக்க வேண்டும். ஆக, தன்னிடம் உள்ளதை முழமையாக
இழந்த அவர் இறைமகன் இயேசுவால் முன்மாதிரியான நபராகக் காட்டப்படுகின்றார்.
ஆலய வரி என்பது இறைவனின் பராமரிப்புக்காக மக்கள்
செலுத்தும் நன்றிக் காணிக்கை. மற்றவர்கள் இக்காணிக்கையை தங்களிடமிருந்த
மிகுதியிலிருந்து போட்டனர். அதாவது, இறைப்பராமரிப்புக்காக
நன்றி சொல்வதற்கென அவர்கள் காணிக்கை அளித்தாலும், தங்களைத்
தாங்களே பராமரிப்பதற்கென்று அவர்கள் இருப்பை வைத்திருந்தனர்.
ஆனால், கைம்பெண்ணோ முழுக்க முழுக்க இறைப்பராமரிப்பின்மேல்
நம்பிக்கை கொண்டவராக இருக்கின்றார்.
முதல் வாசகத்தில், தன் கலயம் முழுவதையும் காலியாக்கி கடவுளின்
இறைவாக்கினருக்கு உணவளிக்கிறார் கைம்பெண்.
நற்செய்தி வாசகத்தில், தன் காசு முழுவதையும் காலியாக்கி
கடவுளின் மகன் முன் உயர்ந்து நிற்கிறார் கைம்பெண்.
இந்த இருவரும் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?
(அ) இறைப்பராமரிப்பின்மேல் நம்பிக்கை
'வானத்துப் பறவைகளுக்கு உணவும் வயல்வெளி மலர்களுக்கு உடையும்
வழங்கும் இறைவன்' தங்களுக்கும் உணவளிப்பார் என்று நம்பினர்.
முதல் வாசகத்தில், முதலில் அக்கைம்பெண் தன் கலயத்தையே
பார்க்கின்றார். ஆகையால்தான், உண்டு முடித்தபின் நானும் என்
மகனும் இறப்போம் என்கிறார். ஆனால், எலியாவின் இறைவனின்
வார்த்தைகளைக் கேட்டவுடன் துணிந்து புறப்படுகின்றார். இந்த
ஒற்றைக் கைம்பெண் அந்தக் கலயத்தைக் கொண்டு ஊருக்கே உணவளித்திருப்பாள்.
கலயத்தில் மாவும் எண்ணெயும் குறைவுபடாததை ஒட்டுமொத்த ஊரும்
அறிந்திருக்கும். பாகால் வழிபாடு நடக்கும் இடத்திலேயே ஆண்டவராகிய
கடவுள் தன் பராமரிப்பை நிலைநிறுத்துகின்றார். நற்செய்தி வாசகத்தில்
நாம் காணும் ஏழைக் கைம்பெண் ஆலய வரி என்பதை இறைப்பராமரிப்புக்கான
நன்றி என்று பார்க்கின்றார். அனைத்தையும் கொடுக்கின்றார்.
'அநாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆண்டவர் ஆதரிக்கின்றார்'
(காண். திபா 146) என்னும் இன்றைய பதிலுரைப்பாடல் வரிகளை அறிந்தவராக
இருந்திருப்பார் இக்கைம்பெண்.
(ஆ) மனச் சுதந்திரம்
நான் எதைப் பிடித்திருக்கிறேனோ, அதுவே என்னைப்
பிடித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாய்க்குட்டியை
கயிறு ஒன்றால் கட்டி நான் நடத்திச் செல்கிறேன் என்றால், முதலில்
நான் நாய்க்குட்டியைப் பிடித்திருப்பது போலத்தான் இருக்கும்.
ஆனால், அடிகள் நகர நகர, நாய்க்குட்டிதான் என்னைப் பிடிக்கத்
தொடங்குகிறது. என்னைவிட்டு அது ஓடிவிடக் கூடாது என
நினைக்கின்ற நான், அதைவிட்டுவிட்டு நான் ஓட முடியாத
நிலைக்கு மாறிவிடுகிறேன். செல்வம், பெயர், புகழ், அதிகாரம்
அனைத்தும் அப்படியே. மேற்காணும் கைம்பெண்கள் இருவரும் எதையும்
பற்றிக்கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இது இவர்களுடைய விரக்தியின்
அடையாளமாகவோ அல்லது மனச் சுதந்திரத்தின் அடையாளமாகவோ இருக்கலாம்.
மனச்சுதந்திரத்தின் அடையாளமே. விரக்தியின் அடையாளமாக இருந்தால்
முதல் கைம்பெண் கலயத்தை உடைத்துப் போட்டிருப்பார். இரண்டாம்
கைம்பெண் செப்புக் காசுகளை வெளியே நின்று ஆலயத்தின்மேல் எறிந்திருப்பாள்.
(இ) வலுவற்றவர்களுடன் உடனிருப்பு
லூக்கா நற்செய்தியின்படி தன் பணியை நாசரேத்தில் தொடங்குகின்ற
இயேசு, எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டதை
மேற்கோள் காட்டுகின்றார். புறவினத்துக் கைம்பெண் என்ற
நிலையில் வலுவற்று நின்ற அவருக்கு இறைவன் துணைநிற்கின்றார்
கடவுள். எருசலேம் ஆலயத்தில் தங்களிடம் உள்ளதிலிருந்து
காணிக்கை இட்ட பலர்முன் வலுவற்று நின்ற கைம்பெண்ணைப்
பாராட்டுவதன் வழியாக அவருக்கு நற்சான்று பகர்ந்து அவருடன்
உடன் நிற்கின்றார் இயேசு. இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் எருசலேம் ஆலயத்தின் தலைமைக்குருவையும்,
வானக எருசலேமின் ஒப்பற்ற தலைமைக்குரு இயேசுவையும் ஒப்பிட்டு,
இயேசுவின் ஞானஸ்நானம் அவர் வலுவற்றவர்களுக்குத் துணையாக
நிற்பதில் அடங்கியுள்ளது என்கிறார் (காண். எபி 4). இன்று
வலுவற்றவர்களோடு நாம் உடன் நிற்கத் தயாரா? வலுவற்ற
நிலையில் உள்ளவர்களுக்கு நாம் எப்படி வலு சேர்க்க இயலும்?
இறுதியாக, காணொலி, கலயம், காசு என அனைத்தும் புரட்சியின்,
மாற்றத்தின், வாழ்வின் கருவிகள்.
வெறுங்கை முழம் போடுமா?
கைம்பெண்கள் - நாம் எதிர்கொள்ளும் கேள்விக்குறிகள், ஆச்சர்யக்குறிகள்!
இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இரண்டு கைம்பெண்களை
(சாரிபாத்து, எருசலேம் நகர்) பார்க்கின்றோம். இவ்விரண்டு
கைம்பெண்களையும் இரண்டு இறைவாக்கினர்கள் (எலியா, இயேசு) சந்திக்கின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தை கொஞ்சம் முன்னும் (1 அர 17:1-9),
பின்னும் (1 அர 18) நீட்டிப் பார்த்தால்தான் இந்த வாசகத்தில்
குறிப்பிடப்படும் நிகழ்வை முழுவதும் புரிந்து கொள்ள
முடியும். சாரிபாத்து நகரில் எலியா இறைவாக்கினர் கைம்பெண்
ஒருவரால் பசியாறப்பெறுகின்றார். இதுதான் ஒற்றைவரியில் முதல்
வாசகம். ஆனால் இதன் பின்புலம் பாகால் வழிபாடு. சாலமோனுக்குப்
பின் ஒருங்கிணைந்த அரசு வடக்கு, தெற்கு என பிரிந்து போக,
எலியா வடக்கே, அதாவது இஸ்ராயேலில் ('தெற்கு', யூதா என அழைக்கப்பட்டது)
இறைவாக்குரைத்தார். வடக்கே ஆட்சி செய்த ஆகாபு தன் நாட்டில்
இருந்த பாகால் வழிபாட்டைத் தடுக்க முடியவில்லை. மக்கள் தங்கள்
இறைவனாம் யாவேயை மறந்துவிட்டு இந்தப் புதிய கடவுள்பின்
செல்கின்றனர். யாவே இறைவன் இதனால் கோபம் கொண்டு மழையை
நிறுத்திவிடுகின்றார். மூன்றரை ஆண்டுகள் கடும் பஞ்சம். தண்ணீர்நிலைகள்
வற்றிக்கொண்டிருக்கின்றன. காகங்கள் வழியாக எலியாவுக்கு
உணவளித்து வந்த இறைவன் இப்போது சாரிபாத்து நகர் ஏழைக்கைம்பெண்ணிடம்
அனுப்புகின்றார். அப்படி சாரிபாத்துக்கு வந்த எலியா, ஏழைக்கைம்பெண்ணைச்
சந்திக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.
எலியா நகரின் நுழைவாயிலை அடையும்போது கடைசிக் கள்ளிகளைப்
பொறுக்கிக்கொண்டிருக்கிறாள் கைம்பெண். 'பாத்திரத்தில் தண்ணீர்
கொடு' என்கிறார் எலியா. அந்தக் கைம்பெண்ணின் வீட்டில் ஒருவேளை
ஒரேயொரு பாத்திரம் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும்.
கைம்பெண்கள் வீட்டில் யாரும் தண்ணீர் கேட்டு வருவதில்லை.
ஆகவே, அவர்கள் தனி சொம்பு அல்லது டம்ளர் வைத்திருக்க
வாய்ப்பில்லை. இப்போது எலியாவுக்கு தண்ணீர் கொண்டு வர
வேண்டுமென்றால் மாவு இருக்கும் பாத்திரத்தைக் காலி செய்து
அதிலிருந்துதான் கொண்டு வர முடியும். முதலில் தண்ணீர் கேட்டவர்,
கூடவே அப்பமும் கேட்கிறார். ஒன்றுமில்லா கைம்பெண் தனக்கென்று
வைத்திருந்த எல்லாவற்றையும் இந்த எலியா கேட்டுவிடுகிறார்.
இறைவன் கேட்டால் நம்மிடம் அப்படித்தான் கேட்கிறார்.
கொடுத்தால் எல்லாவற்றையும் கொடு. அல்லது ஒன்றையும் எனக்குக்
கொடுக்காதே. 'எனக்கு கொஞ்சம், உனக்கு கொஞ்சம்' என இறைவனிடத்தில்
நான் பேச முடியுமா? முடியாது. கொடுத்தால் அப்படியே
முழுமையாகக் கொடுக்க வேண்டும்.
'அதன் பின் சாகத்தான் வேண்டும்'. கைம்பெண்ணின் இந்தச் சொல்
நம் உள்ளத்தையும் பிசைந்து விடுகிறது. எல்லா இடத்திலும் பஞ்சம்
அதிகரித்து மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கதாசிரியர்
இந்த ஒற்றை வரியில் பதிவு செய்கிறார். 'என்னையும், என் மகனையும்
சுவாசிக்க வைத்திருப்பது இந்த அப்பம்தான். இதன்பின் பசியும்,
இறப்பும்தான்' என முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் நிலை பற்றி
சொல்கின்றார் கைம்பெண். வாழ்வில் இதற்குமேல் ஒன்றுமில்லை
என்ற கட்டத்திற்கு வந்துவிட்டால் நாமும் முன்பின் தெரியாதவரிடம்கூட
நம் மனதை அப்படியே திறந்து காட்டுவிடுவோம்தானே. மற்றொன்றையும்
கவனிக்க வேண்டும். ஒரு விளக்கு அணையப்போகிறது என்று நினைத்தவுடன்
கடவுள் அங்கே சரியான நேரத்தில் தன் இறைவாக்கினரை அனுப்புகின்றார்.
ஏற்கனவே அவளின் வாழ்வில் கணவன் என்ற விளக்கு அணைந்து
போய்விட்டது. இன்னும் இருக்கும் நம்பிக்கை மகனில் எரிந்து
கொண்டிருக்கிறது. மகன் ஒருவேளை சிறு பையனாக இருக்கலாம். ஆகையால்தான்
இன்னும் தாயே அவனுக்கு உணவு தந்து கொண்டிருக்கிறாள். இவளின்
வாழ்வு என்னும் விளக்கு அணையும்போது, 'இனி உன் வீட்டில் விளக்கே
அணையாது' என்று அவளின் அடுப்பை என்றென்றும் எரிய
வைக்கின்றார்.
சாரிபாத்து நகரப் பெண் எலியாவின் இறைவனாம் யாவே கடவுளை அறிந்திருக்க
வாய்ப்பில்லை. இருந்தாலும், 'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல்
ஆணை!' என எலியாவின் கடவுளை 'வாழும் கடவுளாக' ஏற்றுக்கொள்கிறார்.
இந்த நம்பிக்கைதான் அவரைச் செயலாற்ற, தன்னிடம் உள்ளதை இழக்கத்
துணிவைத் தருகிறது. 'வாழும் கடவுள்' என்னை வாழ வைப்பார் என்ற
நம்பிக்கை அவரிடம் முதலில் எழுந்தது. 'பின் சாகத்தான்
வேண்டும்' என்று விரக்தியில் இருந்த பெண்ணிடம், 'போய் நீ
சொன்னபடி செய். ஆனால் அதற்கு முன் அப்பம் கொண்டு வா' என்று
சொல்வது சிறிது புன்னகையை வரச் செய்தாலும், 'நீ சொன்னபடி
நடக்காது' என்று எலியா அவரிடம் சொல்லி அனுப்புவது போலத்தான்
இருக்கிறது. தன்னிடமிருந்த கையளவு மாவையும், கலயத்தின் எண்ணெயையும்
கொடுக்கத் துணிந்த கைம்பெண்ணின் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
இந்த அற்புதம் நிகழக் காரணங்கள்
மூன்று:
அ. எலியாவின் ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.
ஆ. 'அந்த ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்று நம்பினார்.
இ. 'அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பசித்தவருக்கு
உணவு கொடுப்பேன்' தன்னை அடுத்தவருக்காக நொறுக்கினார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 12:38-44),
'கைம்பெண்களைக் கொள்ளையடிப்பவர் பற்றியும்,' 'முழுவதையும்
கொடுத்த கைம்பெண் ஒருவர் பற்றியும்' என இரண்டு பகுதிகளாக
உள்ளது.
முதல் பகுதியில், இயேசு மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கை
விடுக்கின்றார். அந்த எச்சரிக்கையின் ஒரு பகுதியாக, 'இவர்கள்
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்' என்கிறார்.
இதன் பொருள் என்ன? யூத சமூகத்தில் கைம்பெண்கள் மிகவும்
நொறுங்குநிலையில் இருந்தவர்கள். ஆகையால்தான் பத்திலொருபாகம்
கொடுப்பதற்கான சட்டம் பற்றிய பகுதியின் இறுதியில் மோசே, 'உன்
நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு
நிறைவு பெறுமாறு பத்திலொரு பாகத்தை நகரின் வாயிலருகே வை' (இச
14:19) என்கிறார். 'அந்நியருக்கு' தங்க இடம் கிடையாது. அவர்களுக்கு
மொழி உட்பட எல்லாம் புதிதாக இருக்கும். அநாதைகள் பெற்றோர்கள்
இல்லாததால் செல்லும் இடம் அறியாதவர்கள். கைம்பெண்கள் தங்கள்
வாழ்க்கைத் துணையை, வருமானத்தை இழந்தவர்கள். கையறுநிலையின்
உச்சக்கட்டத்தை உணர்ந்தவர்கள் இம்மூவர். மறைநூல் அறிஞர்கள்
என்ன செய்வார்கள் தெரியுமா? இம்மாதிரி கைம்பெண்ணைக் கவரும்
விதமாக நீண்ட செபம் செய்வார்கள். வாழ்வில் ஏற்கனவே
நொந்துபோய் இருப்பவர்கள் செபம் செய்பவர்களை எளிதாகப்
பிடித்துக்கொள்வார்கள். இப்படியாக, கைம்பெண்ணின் ஆவலைக்
கவர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடமிருந்து பணம்
பெறுவார்கள். இறுதியில், உனக்காக வாதாடுகிறேன், உன் உரிமைச்
சொத்தை மீட்கிறேன், உன் கணவனின் சொத்தில் உனக்கு பங்கைப்
பெற்றுத் தருகிறேன் என வாதாடுவதாகச் சொல்லி அவரின் ஒட்டுமொத்த
வீடு மற்றும் உடைமைகளையும் பறித்துக்கொள்வார்கள். இந்த
நிலையைத்தான் சாடுகின்றார் இயேசு. 'எரிகிற வீட்டில்
பிடுங்கின மட்டும் லாபம்' என்பதுதான் இவர்களின் லாஜிக்காக
இருக்கிறது.
இரண்டாம் பகுதியில், இயேசு காணிக்கை பெட்டி முன் அமர்ந்திருக்கிறார்.
எருசலேம் ஆலயத்தில் நிறையக் காணிக்கைப் பெட்டிகள் உண்டு.
இயேசு அமர்ந்த இடம் அவற்றில் ஏதாவது ஒன்றின் முன்
இருக்கலாம். வரிசையாக வந்தவர்களில் இரண்டு வகை
கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்: (அ) செல்வர் வகை -
தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து
போடுகின்றனர். (ஆ) கைம்பெண் வகை - தன்னிடம் உள்ளது
எல்லாவற்றையும் போட்டுவிடுகின்றார்.இந்த இரண்டு வகை
கொடுத்தலை 'உள்ளதிலிருந்து கொடுப்பது', 'உள்ளத்திலிருந்து
கொடுப்பது' எனவும் சொல்லலாம். ஒவ்வொரு யூதரும் ஆலயத்தின்
மேலாண்மைக்காகவும், பராமரிப்புக்காவும், ஆலயத்தின்
குருக்களின் பராமரிப்புக்காகவும் ஆண்டுக்கு இரண்டு
செக்கேல்கள் கொடுக்க வேண்டும் என்பது முறைமையாக இருந்தது.
இப்பெண் போட்ட காசு - ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு
காசுகள் - அதாவது, எவ்வளவு போட வேண்டுமோ அதில் 60ல் 1
பங்கு மட்டுமே. ஆனால், இவரிடம் இருந்தது இவ்வளவுதான்.
இயேசுவின் கணக்கு வித்தியாசமாக இருக்கிறது. 'எவ்வளவு'
போட்டோம் என்று பார்ப்பதைவிட, 'எந்த மனநிலையில்' போட்டோம்
என்று பார்க்கின்றார். அதாவது, 100 கோடி கொண்டுள்ள நான் 1
கோடியை ஆலயத்திற்கு கொடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம்.
எனக்கு அருகில் இருப்பவர் தன் ஒரு மாத சம்பளம் 5000 ரூபாயை
அப்படியே கொடுத்துவிடுகின்றார். 1 கோடி என்பது 5000
ரூபாயைவிட பெரியதுதான். ஆனால், என்னிடம் இந்த மாதம்
செலவுக்கு இன்னும் 99 கோடிகள் இருக்கின்றன. ஆனால் என்
அருகில் இருப்பவரிடம் ஒன்றும் இல்லை கையில். எனக்கு
அருகில் இருப்பவர்தான் அதிகம் போட்டார் என்கிறார் இயேசு.
பல நேரங்களில் இந்த நற்செய்திப் பகுதியை
அருட்பணியாளர்களும், சபைப் போதகர்களும், 'நல்ல கலெக்ஷன்'
ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்
என்பதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று. மாற்கு
நற்செய்தியாளரின் நோக்கமும், இயேசுவின் நோக்கமும் 'நிறைய
காணிக்கை எடுப்பது எப்படி?' என்று நமக்குச் சொல்வதற்கு
அல்ல. மாறாக, கடவுளின் திருமுன் நம் அர்ப்பணம் எப்படி
இருக்கிறது என்பதை நமக்குத் தோலுரித்துக் காட்டவே.
இந்தப் பெண்ணும் சாரிபாத்துக்
கைம்பெண் போலவே தான் செய்த செயலுக்கு மூன்று காரணங்கள்
வைத்திருந்தார்:
அ. ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.
ஆ. 'அவர் பார்த்துக்கொள்வார்' என நம்பினார்.
இ. 'அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இதுதான்
நான் என என் ஆண்டவரிடம் என்னைக் காட்டுவேன்' என இறைவன்முன்
தன்னை நொறுக்கினார்.
இவ்விரண்டு கைம்பெண்களும் நமக்கு
முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?
1. 'ஒரு கை மாவு - ஒரு கலயம்
எண்ணெய் - இரு செப்புக்காசுகள்'
'இதுதான் நான்' - முன்பின் தெரியாத எலியாவிடம் தன்
பீரோவைத் திறந்து காட்டி, 'இதுதான் நான்' என்று சொல்ல
சாரிபாத்துக் கைம்பெண்ணால் எப்படி முடிந்தது? 'என்னிடம்
உள்ளது இவ்வளவுதான்' என்று தன் உள்ளங்கை ரேகைகளை
விரித்துக்காட்ட எருசலேம் கைம்பெண்ணால் எப்படி முடிந்தது?
இவர்கள் இருவரும் தங்களை அறிந்த ஞானியர். பல நேரங்களில்
நான் என் இருப்பை இல்லாததையும் சேர்த்துக்
கூட்டிக்கொள்கிறேன். என் படிப்பு, குடும்பம், அழைப்பு,
பணி, பொறுப்பு ஆகியவற்றை என் இருப்பாக்கிக் கொண்டு நான்
என்னையே மிகைப்படுத்தி இறைவன் முன் நிற்கிறேன். ஆக,
என்னிடம் மிகைப்படுத்துதல் இருப்பதால் என்னையே இழக்க
என்னால் முடியவில்லை. நான் என்னையே நொறுக்காததால்
நொறுங்குநிலை என்றால் என்ன என அறியாமல் இருக்கிறேன். இன்று
என் அடையாளங்களை நான் இழக்க முன்வர வேண்டும். இது முதல்
பாடம்.
2. 'எனக்கு இன்னும் வேண்டும்'
'எனக்கு இன்னும் வேண்டும்' என்று சிறுவன் ஆலிவர்
கேட்டவுடன் ஆலிவர் டுவிஸ்ட் நாவல் ஒரு புதிய வேகத்தைப்
பெறுகிறது. அப்படிக் கேட்டதற்காக அந்தச் சிறுவன்
கொடுமைப்படுத்தப்படுகிறார். இன்று நாம் எதையாவது
வாங்கிக்கொண்டே இருக்க விழைகின்றோம். 'எனக்கு இன்னும்
வேண்டும்' - என்பதே என் தேடலாக இருப்பது. இது உறவு
நிலைகளிலும், 'எனக்கு இன்னும் புதிய நண்பர் வேண்டும்' என்ற
நிலையிலும், அல்லது 'என் நண்பரிடமிருந்து எனக்கு இன்னும்
வேண்டும்' என்ற நிலையிலும் சேகரிப்பதாகவே இருக்கிறது.
ஆனால், இன்று நாம் இறைவாக்கு வழிபாட்டில் காணும்
கைம்பெண்கள் இந்த மனநிலைக்கு எதிராக ஒரு புரட்சி
செய்கின்றனர். 'பெரிதினும் பெரிது கேள்' என்பதற்கு
மாற்றாக, 'சிறிதினும் சிறிது பார்' என இழப்பதில் இருப்பைக்
காண்கின்றனர். 'போதும் என்றால் இதுவே போதும். போதாது
என்றால் எதுவும் போதாது' - இதுவே இவர்கள் தரும் இரண்டாம்
பாடம். இதுவே இயேசுவின் சீடத்துவப் பாடமும்கூட.
3. 'கேள்விகள் கேட்காத சரணாகதி'
'எங்க ஊருக்கு மட்டும் ஏன் பஞ்சம்?' 'எங்க ஊருல மட்டும்
என் வறட்சி?' 'என் கணவர் மட்டும் ஏன் சாகணும்?' 'எனக்கு
மட்டும் ஏன் எதுவும் இல்லை?' 'என் ஆடை ஏன்
கிழிஞ்சுருக்கு?' 'என் வீடு மட்டும் ஏன் ஓட்டையாயிருக்கு?'
- இப்படி நிறையக் கேள்விகள் இரண்டு கைம்பெண்கள் மனத்திலும்
ஓடியிருக்கும். ஆனாலும், தங்கள் கேள்விகளை எல்லாம்
ஓரங்கட்டிவிட்டு சரணாகதி அடைகின்றனர். கேள்வி கேட்காத மனமே
சரண் அடையும். கேள்வி கேட்காத மனமே பகிர்ந்து கொடுக்கும்.
இவர்களின் சரணாகதி இறைவன் முகத்தில் இவர்கள் ஓங்கி
அறைவதுபோல இருக்கிறது. வாழ்வில் பல கேள்விகளுக்கு விடைகள்
இல்லை. அல்லது நாம் விரும்புகின்ற விடைகள் இல்லை.
அந்நேரங்களில் சரணடைவதே சால்பு.
இறுதியாக, இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 9:24-28)
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் மற்ற
தலைமைக்குருக்களின் பலிகளிலிருந்து இயேசுவின் பலியை
வேறுபடுத்திக் காட்டுகின்றார். மற்றவர்கள் கைகளில் ஆடுகளை
எடுத்துச் சென்றனர். ஆனால் இயேசு வெறுங்கையராய்ச்
சென்றார். அதுவே உயர்ந்த பலியானது.
வெறுங்கை முழம் போடுமா? என்பது பழமொழி.
ஆனால், வெறுங்கைதான் முழுவதும் போடும் என்பது இன்றைய
இறைமொழி.
அருள்திரு யேசு கருணாநிதி
I. 1 அரசர்கள் 17:10-16 II. எபிரேயர்
9:24-28 III. மாற்கு 12:38-44
முகமலர்ச்சியோடு கொடுப்போம்!
நிகழ்வு: ஒரு தொழிலதிபரும் ஒரு வழக்குரைஞரும் நெருங்கிய நண்பர்களாக
இருந்தார்கள். இருவரும் ஒருமுறை உலகைச் சுற்றிப் பார்க்கக்
கிளம்பினார்கள். இடையிடையே தாங்கள் கண்ட அரிய காட்சிகளை
அவர்கள் தங்களிடம் இருந்த புகைப்படக் கருவியால் புகைப்படம்
எடுத்துக் கொண்டார்கள்.
ஒருநாள் இருவரும் கொரியாவிலிருந்த ஒரு சிற்றூர் வழியாக நடந்து
சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, இளைஞன் ஒருவன், ஏர் கலப்பையில்
உள்ள நுகத்தடியைத் தன் தோள்மேல் வைத்துக்கொண்டு முன்செல்ல,
அவனுக்குப் பின்னால் இருந்த பெரியவர் ஒருவர், ஏர் கலப்பையில்
உள்ள கொழுவினை நிலத்தில் ஆழமான ஊன்றி, இளைஞனை வழிநடத்திக்
கொண்டிருந்தார். இவ்வாறு அந்த இளைஞனும் பெரியவரும் நிலத்தை
உழுதுகொண்டிருந்தார்கள். இக்காட்சியைக் கண்டதும் தொழிலதிபர்
வழக்குரைஞரிடம், "
வழக்கமாக, கலப்பையில் காளை மாடுகளைப்
பூட்டித்தானே நிலத்தை உழுவார்கள்! இங்கே இவர்கள் வித்தியாசமாக
உழுகிறார்கள்! ஒருவேளை இவர்களுக்குக் காளை மாடுகளை
வைத்திருக்கும் அளவுக்கு வசதியில்லையோ, என்னவோ?"
என்றார்.
வழக்குரைஞரும் அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் தலையாட்டினார்.
பின்னர் அவர் அந்தக் காட்சியைத் தன்னிடம் இருந்த புகைப்படக்
கருவியில் பதிவுகொண்டு முன்னோக்கி நகர்ந்தார். அவருக்குப்
பின் அவரது நண்பரும் வந்தார்.
வழியில் இருவரும் ஓர் அருள்பணியாளரைக் கண்டார்கள். இருவரும்
அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, புகைப்படக் கருவியில்
பதிவுசெய்திருந்த காட்சியை அவருக்குக் காண்பித்து,
"
கலப்பையில் உள்ள நுகத்தடியைத் தோள்மேல் வைத்துக்கொண்டு நிலத்தை
உழுவது மாதிரியான காட்சியைக் காண்பது இதுவே முதன்முறை"
என்றார்கள்.
புகைப்படக் கருவியில் பதிவுசெய்யப்பட்டிருந்த காட்சியை உற்றுக்
கவனித்த அருள்பணியாளர் அவர்களிடம், "
இந்தக் காட்சியில் இடம்பெறும்
இளைஞனும் பெரியவரும் என் பங்கைச் சார்ந்த தந்தை, மகன்தான்.
உண்மையில் இவர்களிடத்தில் காளை மாடுகள் இருந்தன; ஆனால், இங்கே
புதிதாகப் பங்குக்கோயில் கட்டி எழுப்பப்பட்டபொழுது, இவர்களிடம்
கோயில் கட்டுமானப் பணிக்காகக் கொடுப்பதற்குக் கையில் பணமோ,
தானியமோ இல்லை. அதனால் இவர்கள் தங்களிடம் இருந்த காளைகளை
விற்று, அதைக் கோயில் கட்டுமானப்பணிக்காக கொடுத்தார்கள்"
என்றார்கள்.
இதைக்கேட்டு வியப்படைந்த தொழிலதிபர் அருள்பணியாளரிடம்,
"
தங்கள் பிழைப்பிற்காக வைத்திருந்த காளை மாடுகளை விற்ற பணத்தை,
நீங்கள் ஏன் கோயில் கட்டுமானப் பணிக்காக வாங்கினீர்கள்?"
என்று கேட்டதற்கு, அருள்பணியாளர் அவரிடம், "
அவர்கள் முகமலர்ச்சியோடு
கொடுக்கும்போது வேண்டாம் என்று சொல்ல முடியுமா?"
என்று
புன்னகை மாறாமல் பதிலளித்தார்.
திருப்பணிக்காகத் தங்களிடம் இருந்த ஒரே வாழ்வாதரமான காளை
மாடுகளையும் முகமலர்ச்சியோடு கொடுத்த இந்தத் தந்தையும் மகனும்,
நாம் கொடுக்கின்றபோது எத்தகைய மனநிலையோடு கொடுக்கவேண்டும்
என்பதை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
பொதுக்காலத்தின் முப்பத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம்
வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, முகமலர்ச்சியோடு கொடுப்போம்
என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம்
சிந்திப்போம்.
கடமைக்காகவும், பிறர் பாராட்ட
வேண்டும் என்பதற்காகவும் கொடுப்பவர்கள்
தாமஸ் மெர்டன் என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய செய்தி இது:
"
அன்பில்லாமல் கொடுக்கப்படும் எதுவும் வெற்றுச் சடங்கே!"
தாமஸ் மெர்டன் சொல்லக்கூடிய இச்செய்தி முற்றிலும் உண்மை.
ஏனெனில், பலர் கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்கின்றார்;
ஆனால், அவர்கள் கொடுக்க வேண்டும் என்ற கடமைக்காகக்
கொடுக்கின்றார்கள் அல்லது கொடுப்பதை ஒரு சடங்காகச்
செய்கின்றார்கள். உள்ளார்ந்த அன்போடு அவர்கள் கொடுப்பதில்லை.
இதற்கு நல்ல உதாரணமாகப் பரிசேயர்களைச் சொல்லலாம். இவர்கள்
தங்களுடைய வருவாயிலிருந்து பத்திலொரு பங்கைக் காணிக்கையாகக்
கொடுத்தார்கள் (லூக் 18:12); ஆனால் மோசேயின் சட்டம் சொன்னது
என்பதற்காகக் கொடுத்தார்கள். உள்ளார்ந்த அன்போடு இவர்கள்
கொடுக்கவில்லை.
இன்னும் ஒருசிலர் மற்றவர் தங்களைப் பாராட்ட வேண்டும், புகழவேண்டும்
என்பதற்காகக் கொடுப்பார்கள். இன்றைய நற்செய்தியில் வரும்,
மிகுதியாகக் காணிக்கை செலுத்திய "
பலர்"
இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
இப்படிக் கடமைக்காகக் கொடுப்பதும், மற்றவர்கள் பாராட்ட
வேண்டும் என்பதற்காகக் கொடுப்பதும், "
கொடுப்பது"
என்ற வரையறைக்குள்
வராது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உள்ளதையெல்லாம் கொடுத்த ஏழைக்
கைம்பெண்கள்
அன்பில்லாமல் கொடுப்பது வெறும் சடங்குதான் என்று
பார்த்தோம். இதற்கு முற்றிலும் மாறாக, அன்போடு கொடுத்த அல்லது
முகமலர்ச்சியோடு கொடுத்த இருவரை இன்றைய இறைவார்த்தை பதிவு
செய்கின்றது. இவர்கள் இருவரும் பெண்கள் என்பதும், அதுவும்
கைம்பெண் என்பதும்தான் கூடுதல் சிறப்பு.
இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்துப் பெரும் பஞ்சம்
ஏற்பட்டபோது, எலியா இறைவாக்கினர், சீதோனிலிருந்து தெற்கில்
ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரிபாத்து என்ற ஊருக்குச்
செல்கின்றார். பின் அங்கே இருந்த ஒரு கைம்பெண்ணிடம் தனக்கு
ரொட்டி வேண்டும் என்று அவர் கேட்கின்றார். அந்தக்
கைம்பெண்ணோ கையளவு மாவும், கலயத்தில் சிறிது எண்ணெயுமே
வைத்திருக்கின்றார்; ஆனாலும் அவர் எலியா இறைவாக்கினர்
கேட்டுக்கொண்டதற்கேற்ப அவருக்கு (முகமலர்ச்சியோடு) ரொட்டி
சுட்டுத் தருகின்றார்.
நற்செய்தியில் வரும் ஏழைக் கைம்பெண் தன்னுடைய
பிழைப்புக்காக வைந்திருந்த ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு
செப்புக்காசுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றார். (ஒரு
கொதிராந்து என்பது தெனாரியத்தில் 164 இல் ஒரு பகுதி.
தெனாரியம் என்பது ஒருநாள் கூலி). இப்படித் தன்னுடைய
பிழைப்பிற்காக வைத்திருந்த இரண்டு செப்புக் காசுகளையும் ஏழைக்
கைம்பெண் (முகமலர்ச்சியோடு) காணிக்கையாகச்
செலுத்துகின்றார். இந்த ஏழைக் கைம்பெண்ணை நாம் இன்னொரு விதத்திலும்
பாராட்டியாக வேண்டும். ஏனெனில், இன்றைய நற்செய்தியின் முதற்பகுதியில்
இயேசு சொல்வதுபோல் மறைநூல் அறிஞர்கள் கணவனின்றி இருந்த
கைம்பெண்களை வஞ்சித்தார்கள்; அவர்களுடைய வீடுகளைப்
பிடுங்கிக்கொண்டார்கள். இவற்றுக்கு நடுவில்தான் கைம்பெண்
இரண்டு செப்புக்காசுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றார்.
இவ்வாறு முதல் வாசகத்தில் வரும் சாரிபாத்துக்
கைம்பெண்ணும், நற்செய்தியில் வரும் ஏழை கைம்பெண்ணும் தங்களிடம்
இருந்ததையெல்லாம் முகமலர்ச்சியோடு கொடுத்து, கொடுத்து வாழ்வதற்கு
மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றார்கள்.
தன்னையே தந்த இயேசு
எடுப்பவர் பலர் இருக்கையில், தன்னிடம் இருந்ததையெல்லாம் முகமலர்ச்சியோடு
கொடுத்த வகையில் ஏழைக் கைம்பெண் நமக்கெல்லாம்
முன்மாதிரிதான் என்றாலும், இவரை விடவும் சிறந்ததொரு
முன்மாதிரி நமக்கு இருக்கின்றார். அவர்தான் நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்து. ஆம், இயேசு கிறிஸ்து தன்னிடமிருந்த எல்லாவற்றையும்
கொடுத்தது மட்டுமல்லாமல், தன்னையே கொடுத்தவர் என்ற வகையில்,
அவர் எல்லாரையும்விட சிறந்த முன்மாதிரி. எபிரேயர் திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், "
கிறிஸ்து தம்மையே
ஒரே முறை பலியாகக் கொடுத்தார்"
என்று வாசிக்கின்றோம்.
ஆண்டுக்கொரு முறை, பாவக் கழுவாய் நாளில் தலைமைக் குரு விலங்குகளின்
இரத்தத்தோடு தூயகத்திற்குள் சென்று பலி செலுத்துவார் (லேவி
16:2) இப்பலியின் மூலம் மக்களுடைய பாவங்கள் போக்கப்பட்டன.
இயேசு கிறிஸ்துவோ தலைமைக் குருக்களைப் போன்று விலங்குகளின்
இரத்தத்தைச் சிந்தாமல், தம்மையே ஒரே முறை பலியாகக்
கொடுத்து நாம் பாவங்களைப் போக்கினார். இதன்மூலம் இயேசு
நாம் ஒவ்வொருவரும் நம்மையே கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த
நெறியை நமக்குக் கற்பிக்கின்றார்.
இன்றைக்குப் பலர் கடவுளுக்கும் அயலாருக்கும் கொடுப்பதற்கு
மிகவும் யோசித்துக் கொண்டிருக்கையில், இயேசு தம்மையே தந்து,
நாம் எதைக் கொடுக்க வேண்டும், அதை எப்படிக் கொடுக்கவேண்டும்
என்பதைக் கற்றுத் தருகின்றார். ஆகையால், நாம் இயேசுவின்
முன்மாதிரியைப் பின்பற்றி, அவரைப் போன்று நம்மையே கடவுளுக்கும்
இவ்வுலகம் வாழ்வு பெறுவதற்காகவும் கொடுப்போம்.
சிந்தனை
"
முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்"
(2 கொரி 9:7) என்பார் புனித பவுல். ஆகையால், கட்டாயத்தின்
பேரில் அல்ல, முகமலர்ச்சியோடு நம்மை ஆண்டவருக்கும் பிறருக்கும்
கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
சில ஆண்டுகளுக்கு முன் ஒரிசா மாநிலத்தில் ஏற்பட்ட புயல்,
பெரு வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து,
பொருள் இழந்து, உறவினர்களையும் இழந்து அனாதைகள் ஆக்கப்பட்ட
காட்சியை நாம் எல்லாப் பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலமாகக்
கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதனால் சக்தி படைத்த பலர் இடம்
பெயர்ந்து சென்றதும் உண்டு. ஆனால் ஒரு சிலர் அங்கேயே தங்கி
உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பரிதாப
நிலை பல நாட்கள் தொடர்ந்த போது சமூகத் தொடர்பினர்,
செய்தித் தொடர்பினர் உண்மையான செய்தியைச் சேகரிக்கச்
சென்றார்கள். இப்படி ஒரு குழு ஒரு கிராமத்தில் நுழைந்தபோது,
பல மக்களையும் சந்தித்துச் செய்திகள் சேகரித்தார்கள். இவ்வாறு
ஒரு குடிசைக்குள் இக்கூட்டத் தொண்டன் குனிந்து நுழைந்தபோது,
வெள்ளத்தில் கணவனை இழந்த ஒரு ஏழைப் பெண், எண்ணெய் இன்றி சப்பாத்தியை
நெருப்பில் சுட்டுத் தன் குழந்தைகளுக்குக் கொடுக்க தயாரித்துக்
கொண்டிருந்தாள். இவரைக் கண்டவுடன் இன்முகத்தோடு வாருங்கள்
என வரவேற்று, தன் குழந்தைகளுக்குக் கொடுக்க இருந்த
நெருப்பில் சுடப்பட்ட சப்பாத்தியை இந்தத் தொடர்புச்சாதனக்
குழுவினருக்குக் கொடுத்தாள் மகிழ்ச்சியோடு. இந்த நிகழ்ச்சி
பல பத்திரிக்கைகளிலும், தொலைத் தொடர்பு சாதனங்களிலும்
வெளியானபோது அது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அன்பார்ந்தவர்களே! இதேபோன்ற ஒரு அழகான நிகழ்ச்சியை நம் ஆண்டவர்
இயேசுவின் காலத்தில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் வாசிக்கக்
கேட்டோம்.
அன்பார்ந்தவர்களே! கொடுப்பது என்பது பெருந்தன்மையைக்
குறிக்கும் செயலாகும். இந்த உலகில் ஒரு சிலர் பெருமைக்காகக்
கொடுக்கிறார்கள். இது அவர்களின் சுயநலத்தைக் காட்டும் செயலாகும்.
இதைத்தான் பரிசேயர்கள் செய்தார்கள். அரசியல்வாதிகள் ஒரு சிலர்
தொல்லை தாங்க முடியாது கொடுப்பார்கள். இது அவர்களின் இயலாமையைக்
காட்டுவதாகும். இதைப்பற்றித்தான் இயேசு கதவைத் தட்டும் மனிதனின்
பிடிவாதத்தைக் காட்டுகிறார். இதைத்தான் இன்றைய அரசாங்கம்
செய்கிறது.
ஒரு சிலர் கடமைக்காகச் செய்கிறார்கள். இதைத்தான் சக்கேயுவின்
வாழ்க்கையில் பார்க்கிறோம். இது சட்டம் ஒழுங்கு ஆட்கொள்ளும்
தன்மையைக் காட்டுகிறது. இன்றைய உலகில் இதைத்தான் நாம்
செய்துகொண்டே இருக்கிறோம்.
ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் அன்பினால், மனித
மாண்பால் தூண்டப்பட்டுக் கொடுப்பவர் உண்டு. இதில் நாம் இடம்
பெற வேண்டும்.
முடிவுரை
பெருந்தன்மை என்பது நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்ற அளவில்
அமைவது அல்ல. மாறாக எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதுதான்
முக்கியம். உன்னிடம் பொருள் இல்லாமல் இருக்கலாம். அதனால்
கொடை வள்ளலாக இருக்க வேண்டாம். பிறர் துன்பத்தைக் காது
கொடுத்துக் கேட்க முடியாதா? அன்பார்ந்தவர்களே புனித
பிரான்சிஸ் பால் போர் கூறுவதுபோல் நாம் நம்மைப் பலவிதமாகப்
பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கலாம். முதலாவது நாம் பிறருக்குக்
கொடுக்க வேண்டியது மன்னிப்பு. இரண்டாவது பிரமாணிக்கம்.
மூன்றாவது நம் வாழ்வால் நல்ல முன் மாதிரியை - மரியாதை. எனவேதான்
இயேசு கொடுங்கள் பெற்றுக் கொள்வீர்கள் (லூக். 6:38) என்கிறார்.
பெருந்தன்மை என்பது அன்பை முன்னிலைப்படுத்தி தியாகத்தை எதிர்பார்க்கிறது.
இல்லையென்றால் கொடுக்க முடியாது. இறுதியாகச் சொல்லுகிறேன்.
பொருட்களைக் கொடுத்தவர் இறைவன் - நாம் அல்ல. அதைக் கொடுப்பதில்
நமக்குப் பெருமை. அல்ல நாம் நம்மை வழங்க அழைக்கப்படுகிறோம்.
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
மூன்று வகையான அன்பு உண்டு : 1. உள்ளத்திலிருந்து கொடுத்தல்
(லூக் 19:1-10), 2. உள்ளதையெல்லாம் கொடுத்தல் (மாற்
12:41-44), 3. உள்ளதையெல்லாம் கொடுத்து உயிரையும் கொடுத்தல்
(இரண்டாம் வாசகம்).
இன்றைய நற்செய்தியிலே வருகின்ற ஏழைக் கைம்பெண் அவரிடம் உள்ளதையெல்லாம்
கடவுளுக்குக் கொடுத்து இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவராகின்றார்.
நம்மில் யார் யார் தங்களிடம் உள்ளதிலிருந்து அல்லது உள்ளதையெல்லாம்
தர்மம் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் கடவுளால் தவறாமல்
உயர்த்தப்படுவார்கள். இந்த உண்மையைச் சுட்டிக்காட்ட விவிலியத்திலிருந்து
இதோ இரு உதாரணங்கள்.
பழைய ஏற்பாட்டுக் காலத்திலே எத்தனையோ விதவைகள் பஞ்சத்தால்
பாதிக்கப்பட்ட சாரிபாத்து நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் கடவுள்
அந்நகரிலிருந்த ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான்
உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து
கொடுத்தார் (1 அர 17:10-16).
புதிய ஏற்பாட்டில் எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரே
ஒரு பெண்ணை மட்டும் கடவுள் பெண்களுக்குள் ஆசி பெற்றவராக
(லூக் 1:42), எல்லாத் தலைமுறையினரின் போற்றுதலுக்கும் உரியவராக
(லூக் 1:48) உயர்த்தினார். காரணம் கன்னிமரியா தன்னை முழுவதும்
கடவுளுக்குக் கொடுத்து, நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்றார்.
திங்கள் பிறந்தாலும்
தீபம் எரிந்தாலும்
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
கண்ணீரில் உப்பிட்டு
காவிரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது காற்றினிலே
என்று வாழுகின்ற ஏழைகள் பக்கம் நமது ஈரம் நிறைந்த கண்களைத்
திருப்புவோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
தன்னலமற்ற அன்பு பந்து போன்றது. அதை நாம் சமுதாயம் என்னும்
சுவற்றில் எறியும்போது அது நம்மிடமே திரும்பி வரும். நாம்
பிறரை அன்பு செய்தால், பிறர் நம்மைத் தவறாது அன்பு
செய்வார்கள்.
பொருள் :
வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு
அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப்
பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு
வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
"
தெய்வீகப் பிச்சைக்காரன்" என்ற
தலைப்பில் வங்க கவி தாகூர் ஒரு கவிதை எழுதியுள்ளார்.
அக்கவிதையில் அவர் கூறுவது: ஓர் அரசர் மாறுவேடத்தில் ஓர்
ஊருக்குச் சென்று அங்கு ஒரு பாத்திரம் நிறைய கோதுமை
மாரிகளை வைத்திருந்த ஒரு பிச்சைக்காரனிடம் பிச்சை
கேட்டார். அவனோ ஒரே ஒரு கோதுமை மானியை மட்டும் கொடுத்தான்.
அரசர் அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கோதுமை மணி அளவு
தங்கம் போட்டுவிட்டு மாயமாக மறைந்துவிட்டார். ஒரு கோதுமை
மணி அளவு தங்கத்தைப் பார்த்த அப்பிச்சைக்காரன் தன்னை
நொந்துகொண்டு, "நான் எல்லாக் கோதுமை மணிகளையும்
கொடுத்திருந்தால், பாத்திரம் நிறைய தங்கம்
கிடைத்திருக்குமே" என்று சொல்லி தனது கஞ்சத்தனத்தை
எண்ணிக். கண்ணீர் விட்டான்.
நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கின்றோமோ, அவ்வளவுக்குக்
கடவுள் நமக்குத் திருப்பிக் கொடுப்பார். இதைக் கிறிஸ்துவே
பின்வருமாறு கூறியுள்ளார்: "கொடுங்கள், உங்களுக்குக்
கொடுக்கப்படும். அந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால்
உங்களுக்கு அளக்கப்படும்" (லூக் 6:38)
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் தாராள உள்ளம் கொண்ட
இரு கைம்பெண்களைப்பற்றிக் கூறுகிறது. பழைய ஏற்பாட்டில்
கைம்பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. மற்றவர்களால் அவர்கள்
ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் கடவுளை மட்டும் நம்பி
வாழ்ந்த இறைவனின் ஏழைகள்' என்று அழைக்கப்பட்ட 'அனாவிம்' வர்க்கத்தைச்
சேர்ந்தவர்களாக விளங்கினர். கடவுள் கைம்பெண்களைச் சிறப்பாக
ஆதரிப்பதாக இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "
ஆண்டவர் அனாதைப்
பிள்ளைகளை யும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்" (திபா
146:9).
இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற சரிபாத்து கைம்பெண் பஞ்சகாலத்தில்
இறைவாக்கினர் எலியாவுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட
அப்பமும் கொடுக்கிறார். தன்னைப் பற்றியோ தனது மகனைப்பற்றியோ
அவர் கவலைப்படவில்லை , கடவள் அவரை அபரிமிதமாக ஆசிர்வதிக்கிறார்.
பஞ்ச காலம் முடியும்வரை அவர் பானையில் மாவும் குறையவில்லை;
கலயத்தில் எண்ணெயம் {குறையவில்லை, "அனாதைகளைப்பற்றிக் கவலைப்படாதே,
நான் அவர்களை வாழவைப்பேன் உன் விதவைகள் என்னில் நம்பிக்கை
வைக்கட்டும்" (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக்
கூறியது சரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறுகிறது.
இன்றைய நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண் தன்னிடமிருந்த
இரண்டு செப்புக்காககளை உண்டியல் பெட்டியில்
போட்டுவிடுகிறார், எல்லாருடைய காணிக்கைகளிலும் கைம்
பெண்ணின் காணிக்கையே பெரியது என்று கிறிஸ்துவே
பாராட்டுகிறார், ஏனெனில் மற்றவர்கள் தங்களிடம் உபரியாக இருந்ததைக்
காணிக்கையாகக் கொடுத்தனர். ஆனால் ஏழைக் கைம்பெண் அவரது
வாழ்வாதாரம் அனைத்தையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டார்.
அவர் நாளையைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாளையைப் பற்றிக்
கவலைப்பட வேண்டாம், "நாளையக் கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும்"
(மத் 6:34) என்ற ஆண்டவரின் அருள் வாக்கைக் கடைப்பிடித்தார்.
அருளாளர் அன்னை தெரசாவிடம், "உங்கள் சபைக்கு என்ன
பாதுகாப்பு இருக்கிறது?" என்று கேட்டதற்கு, "கடவுள்தான் என்னுடைய
பாதுகாப்பு" என்றார், அவருடைய சபையின் எதிர்காலம் பற்றிக்
கேட்டதற்கு, "இது என்னுடைய வேலையாக இருப்பின் அழிந்துவிடும்,
கடவுளின் வேலையாக இருப்பின் எனக்குப் பிறகும் என் சபை
நீடிக்கும்" என்றார், இறைப்பராமரிப்பில் அவர் முழுக்க
முழுக்க நம்பிக்கை வைத்திருந்தார்.
ஒளவையார், அங்கவை, சங்கவை என்ற இரு பெண் குழந்தைகளை வளர்க்க
ஒரு வெள்ளாடு தேவைப்பட்டது. அதற்காகச் சேர மன்னனிடம்
சென்று பால் கொடுக்கும் ஒரு வெள்ளாடு கேட்டார், அரசரோ பொன்
வெள்ளாடு கொடுக்க, ஒளவையார் அரசரிடம்: *பொன் வெள்ளாடு பால்
கொடுக்காதே" என்றார். அரசரும் அவரிடம், "பால் கொடுக்கும்
வெள்ளாட்டை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். பிச்சைக்
கேட்பவர் எதையும் பெற்றுக்கொள்வர்; ஆனால் பிச்சைக் கொடுப்பவரோ
தனது தகுதிக்கேற்ப பிச்சையிட வேண்டும்" என்றார். ஒளவையார்
அரசரின் வள்ளல் தன்மை வியந்து பாடினார்.
நாம் எவ்வளவு குறைவாக உண்டியலில் காசு போட்டாலும், உண்டியல்
அதை ஏற்றுக்கொள்ளும், ஆனால் நாம் நமது தகுதிக்கேற்பக்,
காணிக்கைக் கொடுக்க வேண்டாமா?
கைம்பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவதில்லை, அவர்கள் சுமங்கலிகள்
அல்ல, நல்ல காரியங்களை முன்நின்று நடத்தக்கூடாது. இத்தகைய
பிற்போக்கான சிந்தனைகளுக்கு இன்றைய அருள்வாக்கு வழிபாடு சவுக்கடி
கொடுக்கிறது. தாராள உள்ளம் கொண்ட இரண்டு கைம்பெண்கள் நமக்கு
கொடுத்துக்காட்டாக நிறுத்தப்படுகின்றனர், அவர்களைப் பின்பற்றிக்
கடவுளுக்கும் பிறர்க்கும் தாராளமாகக் கொடுப்போம். கடவுள்
நம்மை இம்மை, மறுமை நலன்களால் நிரப்புவார்.
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
புனித இரண்டாம் ஜான் பால், தான் திருத்தந்தையான பிறகு முதன்
முறையாக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வருகை தந்தார். அங்கே
மேடையிலிருந்து முன்வரிசையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த
ஊனமுற்ற ஓர் இளம்பெண்ணைப் பார்த்தார். உடனே கீழே இறங்கி அருகில்
சென்று செபமாலை ஒன்றோடு சிறு அட்டையை இணைத்துக் கொடுத்து
அவளது நெற்றியில் முத்தமிட்டார். அந்த அட்டையில் இரு லத்தீன்
வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன - " Totus Tuus'" என்று.
அதன் பொருள் "முழுமையாக உனது". தான் சந்திக்கின்ற ஒவ்வொருவருக்கும்
தன்னையே முழுமையாகக் கையளிக்கும் அவருடைய ஆசையை இந்த நிகழ்வு
வெளிப்படுத்தவில்லையா?
விவிலிய சமயத்தின் பண்பு அதுதான். இறைவனாகட்டும், இறைவன்
சாயலான மனிதனாகட்டும், தன்னையே முழுமையாகக் கையளிக்க
வேண்டும் என்பது. மனிதனுக்கு எழுதும் மடல்களில் எல்லாம் 'truly
yours' அதாவது உண்மையுடன் உனது' என்று கையெழுத்திடுகிறோம்.
ஆனால் கடவுளுக்கு எழுதும் கடிதங்களில் அது போதாது; மாறாக 'totallyyours'
(totus tuus) அதாவது முழுமையாக உமது' என்றுதான்
கையெழுத்திட வேண்டும்.
இந்த உண்மையை உணர்த்தும் வகையில் இன்றைய வழிபாட்டு வாசகங்கள்
இரண்டு கைம்பெண்களை நம் கண்முன் நிறுத்துகின்றன. 1.
சாரியாத்து ஊரின் கைம்பெண். 2 எருசலேம் நகரின் கைம்பெண்.
ஆகாபு மன்னனின் அடாத செயல்களை முன்னிட்டு நாட்டில் கடும்
பஞ்சம் உண்டாகும் என்று இறைவாக்கினர் எலியா முன்னறிவித்திருந்தார்.
அவ்வாறே பஞ்சம் தலை விரித்தாடியது. தன் உயிரைக் காத்துக்
கொள்ள புற இனத்தினர் வாழும் பகுதிக்குச் செல்கிறார். விறகு
பொறுக்கிக் கொண்டிருந்த விதவைப்பெண்ணைச் சந்திக்கிறார்.
அவள்தான் எலியாவுக்கு உணவளித்த ஏழை சாரிபாத்துக் கைம்பெண்.
அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாதவள். அந்தக் கடுமையான பஞ்ச
காலத்தில் இறைவாக்கினர் எலியா உணவு கேட்டபோது, தன் இயலாமையை
ஒளிவு மறைவு இன்றி, கள்ளங்கபடின்றி வெளிப்படுத்துகிறார்.
இதுவே ஏழ்மைக்குரிய சிறப்பம்சம். அதனாலன்றோ " ஏழையின் உள்ளத்தோர்
பேறு பெற்றோர்"
(மத் 5:3) என்றார் இயேசு. தனக்கென எதையும்
வைத்துக் கொள்ளாமல் இறைவாக்கினரின் வார்த்தைகளை நம்பி முழுவதையுமே
அவருக்கு உணவாகத் தருகின்றாள். விளைவு? வாழ்நாள் முழுவதற்குமே
எடுக்க எடுக்கக் குறையாத, எண்ணெய் வற்றாத கலயத்தை அமுத சுரபியாகவன்றோ
இறைவன் அவளுக்கு வழங்கிவிட்டார்!
மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்றோ, பாராட்ட வேண்டுமென்றோ,
ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றோ அல்ல, ஆண்டவர் மட்டும் தன்னைப்
பார்த்தால் போதும் என்று செயல்பட்டவள் அந்த எருசலேம் நகர்க்
கைம்பெண். பலரும் ஆதாயத்தைத் தேடிக் காணிக்கை போட்டார்கள்.
இவளோ தன் ஆதாரத்தையே காணிக்கையாக்கினாள் என்ற இயேசுவின்
பார்வையில் எப்படி உயர்ந்து நிற்கிறாள். தன் பிழைப்புக்கான
அந்த இரண்டு செப்புக் காசுகளையுமே காணிக்கைப் பெட்டியில்
போட்ட அவளது மனநிலை என்ன?
அமுக்கிக் குலுக்கிக் கொடுப்பார் என்ற எதிர்நோக்கா அவளைக்
கொடுக்க வைத்தது? பழைய ஏற்பாட்டில் பத்தில் ஒரு பகுதி (தசம்
பாகம்) எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு செப்புக்காசுகளில் ஒன்றைக்
கொடுத்திருந்தால் கூட, அது இரண்டில் ஒரு பகுதி, ஐம்பது
விழுக்காடு வருமானத்தில் பாதியாகும். ஆனால் அவளது காணிக்கை
முழுமையானது.
அனைத்தையும் விண்ணரசின் பொருட்டுத் துறந்துவிடும் ஓர் உத்தமசீடனை
விதவைப் பெண்களின் வடிவில் பார்க்கிறோம். ஆண்டவனுக்குக்
கொடுப்பது நமது நன்றியுணர்வின் வெளிப்பாடு. மீண்டும் இறைவன்
நமக்குக் கொடுப்பார் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதுதானே!
பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்
ஒரு பணக்காரன். அதனால் மன அமைதி இழந்து தவித்தான். அந்நிலையில்
தனது பிரச்சனைகள் தீர்ந்தால், தனது ஆடம்பர மாளிகையை
விற்று, அதன் முழுத் தொகையையும் ஆலய உண்டியலில் போடுவதாக
நேர்ச்சை செய்து கொண்டான். காலம் சென்றது. அவன் கவலைகள்
தீர்ந்தன. "இவ்வளவு விரைவில் என் மன்றாட்டுக்குச் செவி
கொடுப்பார் என்று முன்பே தெரிந்திருந்தால் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக
நேர்ந்திருக்க வேண்டாமே. அழகான ஓர் அந்தோணியார் மொட்டை
போடுகிறேன் என்று நேர்ந்திருப்பேனே " என்று புலம்பினான்.
ஆனால் அதே வேளையில் ஓர் அச்சம். நேர்ச்சைப்படி செயல்படத்
தவறினால், வேறு பெரும் கேடு வந்தால் என்ன செய்வது? பயந்து
நேர்ச்சையை நிறைவேற்ற முடிவு செய்தான்.
வீட்டின் விலை ரூ.100/- என்று விளம்பரப்படுத்தினான்.
வீட்டை விலைக்கு வாங்கத் திரண்டது மக்கள் கூட்டம். இவன் என்ன
உளறுகிறானா என்று பலரும் நினைத்தனர். "வீட்டை விலைக்கு
வாங்க விரும்புகிறவர்கள் அவ்வீட்டில் உலவும் ஒரு
பூனையையும் சேர்த்து வாங்கிக் கொள்ள வேண்டும் " என்று நிபந்தனை
விதித்தான். பூனையின் விலை ரூ. 50 இலட்சம் என்று நிர்ணயித்தான்.
கிறுக்கன் உளறுகிறான் என்று நினைத்த அவர்களில் ஒருவர் 50
இலட்சத்து நூறு ருபாய் கொடுத்து வீட்டை வாங்கிக் கொண்டார்.
வீடும் பூனையும் விலை போயின.
விற்ற பணத்தை ஆலயத்துக்கு எடுத்து வந்து நூறு ரூபாயைக்
காணிக்கைப் பெட்டியில் போட்டுவிட்டு மற்ற 50 இலட்சத்தையும்
தன் சட்டைப்பையில் திணித்துக் கொண்டான். "
வீடு விற்ற பணம்
ஆண்டவனுக்கு. பூனை விற்ற பணம் எனக்கு" என்று திருப்திப்பட்டுக்
கொண்டானாம்.
அறிவுக்கும் அருப்பணத்துக்குமிடையே எவ்வளவு பள்ளத்தாக்கான
இடைவெளி! நேர்ச்சையை நிறைவேற்றுவதில் கூட இவ்வளவு குறுகிய
மனமா? கோணல் புத்தியா?
இந்தப் பொய்மையும் போலித்தனமும் திருப்பலியில் நாம் பாடும்
காணிக்கைப் பாடல்களில் கூட தலை நீட்டுகின்றன. கழுத்திலும்,
காதிலும் தங்கம் மின்ன, "பொன்னும் பொருளுமில்லை, என்னிடத்தில்
ஒன்றுமில்லை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" என்று பாடுவது
கூட பொய்யின்றி வேறென்ன?
அழகான வரிகள், அருமையான இசை. ஆனால் அருத்தமுள்ளதா? பொருத்தமானதா?
என்ற கேள்விகளை எழுப்பும் இன்னொரு பாடல் :
"
மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா
என் மனம் ஏற்கத் தயக்கமோ? - நான்
காகிதப் பூ என்ற வருத்தமோ?"
இயற்கைப் பூவில் தான் இறைவன் இன்பம் காண்கிறார், செயற்கைப்
பூவுக்கு முகம் சுளிக்கிறார் என்பதுபோலப் பாடலாமா?
இயற்கை மலர்தான் இறைவனுக்கு ஏற்ற காணிக்கை என்று நினைக்கலாமா?
வழியில் கிடக்கிற தேங்காயை எடுத்துப் பிள்ளையாருக்கு உடைத்தாலும்
பரவாயில்லை. பிள்ளையாருடைய தேங்காயை எடுத்தே அவருக்கு உடைப்பதா?
சொல்லப்போனால் காதிதப்பூதான் கடவுள் விரும்பும்
காணிக்கையாக இருக்கும். அதில்தான் என் ஆற்றலை என் திறமையை,
என் கற்பனை வளத்தை, என் கடின உழைப்பை அதாவது என்னையே
பார்ப்பார்.
பாவமே பலிப் பொருளாகும் அளவுக்கு, இருப்பதுபோல என்னை ஏற்றுக்
கொள்பவர் என் கடவுள் !
அந்த விதவையின் காணிக்கை (தேவைக்கு மிகுதியான மிச்சத்திலிருந்து
கொஞ்சம், அதுவும் பிறர் பெரிதாகக் கணிக்க வேண்டும் என்பதற்காகவே
கொடுத்தது அன்று)
- கடவுள் மட்டுமே எனக்குச் சொந்தம், தனக்கிருக்கும் ஒரே
துணை என்று உள்ளூர உணர்ந்ததால் கொடுத்தது.
- நாளையத் தேவைக்குக் கடவுள் இருக்கிறார் என்ற ஆழமான நம்பிக்கையால்
அனைத்தையும் கொடுத்தாள்.
"
ஆண்டவரே என் உரிமைச் சொத்து" என்ற உணர்வில் வாழ்வது
நிறைவு தரும் (தி.பா. 16:5).
மேலே செல்ல
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
மறையுரை அருட்திரு பவுல் லியோன்
வறுவேல்
அன்பார்ந்த நண்பர்களே!
-- எருசலேம் கோவிலுக்குச் சென்ற மக்கள் கடவுளுக்கென்று
காணிக்கை அளித்தார்கள். கோவில் வழிபாட்டுக்கும் பிற
செலவுகளுக்கும் அக்காணிக்கை பயன்பட்டது. காணிக்கை
அளிப்பதன் வழியாக மக்கள் தங்கள் சமய உணர்வை
வெளிப்படுத்தினார்கள். சிலர் தங்களது செல்வக் கொழிப்பைக்
காட்டுகின்ற தருணமாக அதைக் கருதியிருக்கலாம். மக்கள்
காணிக்கை போடுவதை இயேசு கூர்ந்து பார்க்கிறார். எல்லாரும்
பார்க்கும் விதத்தில், கேட்கும் விதத்தில் அவர்கள்
போடுகின்ற செப்பு நாணயம் காணிக்கைப் பெட்டியில் விழுந்து
ஒலி எழுப்புகிறது. அப்போது அங்கே வருகிறார் ஓர் ஏழைக்
கைம்பெண். அவரிடத்தில் செல்வம் கிடையாது. அவர் கைவசம்
இருக்கும் செல்வம் இரண்டு சிறு காசுகளே. அவற்றின் மதிப்பு
இன்றைய கணிப்புப்படி ஒரு சில பைசா மட்டுமே. அந்த இரு சிறு
காசுகளையும் அப்பெண் காணிக்கையாக அளிக்கிறார். இதைக் கண்ட
இயேசு அப்பெண்ணின் தாராள உள்ளத்தைப் பாராட்டுகிறார். அவர்
"
தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே
காணிக்கையாகக் கொடுத்துவிட்டார்"
(காண்க: மாற் 12:44) என
இயேசு அவருடைய செயலைப் புகழ்கிறார்.
-- இதிலிருந்து நாம் இரு கருத்துக்களைப் பெறலாம். அந்த
ஏழைக் கைம்பெண்ணை இயேசு பாராட்டியதற்குக் காரணம் அவர்
கொடுத்த தொகை பெரிது என்பதல்ல, மாறாக, அவர் தமக்கென்று
எதையுமே தக்க வைக்காமல் "
எல்லாவற்றையுமே"
காணிக்கையாகப்
போட்டுவிட்டார் என்பதே. கடவுளை முழு உள்ளத்தோடு நாம்
அன்புசெய்ய வேண்டும் (காண்க: மாற் 12:29-30) என்று இயேசு
கூறியதற்கு அப்பெண் முன் உதாரணம் ஆகின்றார். அவருடைய
காணிக்கை "
முழுமையானதாக"
இருந்தது. அவர் கடவுளுக்குத்
தம் உயிரையே காணிக்கையாக்கிவிட்டார். இன்னொரு கருத்து,
அந்த ஏழைக் கைம்பெண் ஏன் அவ்வாறு காணிக்கை அளித்தார்
என்பதைப் பற்றியது. அக்காலத்தில் "
கைம்பெண்களின்
வீடுகளைப் பிடுங்கியவர்கள்"
இருந்தார்கள் என இயேசு
கூறினார் (காண்க: மாற் 12:40). கடவுளின் பெயரால்,
சமயத்தின் பெயரால் மக்களைச் சுறண்டிய அதிகாரிகள் அன்றும்
இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். மனிதர் மாண்போடு
வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமேயன்றி, அவர்கள்
சமயச் சட்டங்களுக்கு அடிமைகளாக்கப்பட்டு, துன்பத்தில் வாட
வேண்டும் என்பதல்ல (காண்க: மாற் 2:23-28; 3:1-5; 7:9-13).
ஆயினும், இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணின் தாராள உள்ளத்தைப்
போற்றினார். இயேசுவும் தம்மையே முழுமையாக நமக்குக்
கையளித்தார்; தம் உயிரை நமக்குக் "
காணிக்கையாக்கினார்"
.
அவரைப் போல, அந்த ஏழைக் கைம்பெண்ணைப் போல நாமும் முழு
உள்ளத்தோடு கடவுளை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அன்பார்ந்த நண்பர்களே!
-- பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைத் தேடிய
மனிதர்களை இயேசு பல முறை கண்டித்துப் பேசினார். மறைநூல்
அறிஞருள் சிலர் நேர்மையாக நடந்தார்கள் என்றாலும் (காண்க:
மாற் 12:28-34), வேறு பலர் வெளிவேடக்காரர்களாகவும் பதவி
மற்றும் பண ஆசை கொண்டவர்களாவும் நடந்துகொண்டார்கள்.
அவர்களைக் குறித்து இயேசு எச்சரிக்கை விடுத்தார். அவர்கள்
"
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்"
(மாற் 12:40). இயேசு வாழ்ந்த காலத்தில் கைம்பெண்களின் நிலை
மிகவும் மோசமாகவே இருந்தது. ஆணாதிக்கம் கோலோச்சிய அன்றைய
சமுதாயத்தில் கைம்பெண் துணையற்ற ஒருவராக வாழ
வேண்டியிருந்தது. கணவனின் சாவுக்குப் பிறகு பிறந்த
வீட்டுக்கே திரும்பிச் செல்லும் நிலைக்குப் பலர்
தள்ளப்பட்டனர். இவ்வாறு துணையற்றவர்களாக இருந்த
கைம்பெண்களை ஏமாற்றித் தங்களுக்குச் செல்வம் சேர்த்த
மறைநூல் அறிஞரும் இயேசுவின் காலத்தில் இருந்திருக்க
வேண்டும் எனத் தெரிகிறது. இப்பின்னணியில் நாம் "
ஏழைக்
கைம்பெண்ணின் காணிக்கை"
என்னும் பகுதியைப் புரிந்துகொள்ள
வேண்டும் (மாற் 12:41-44). எருசலேம் கோவிலுக்குச் சென்ற
இயேசு அங்கே வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளில்
மக்கள் காணிக்கை போடுவதை "
உற்று நோக்கிக்
கொண்டிருந்தார்"
(மாற் 12:41). ஒவ்வொருவராக வந்து
காணிக்கை போடுகின்றனர். சிலர் பெரும் தொகையைப் பெட்டியில்
போடுகின்றனர். அப்போது காணிக்கைப் பெட்டியை நோக்கித்
தயக்கத்தோடு வருகிறார் ஓர் ஏழைக் கைம்பெண். அவரிடம்
பெருமளவில் பணம் இல்லை. இரண்டு காசுகள் மட்டுமே உள்ளன.
அதுவே அவருடைய முழுச் சொத்து. அச்சொத்து முழுவதையும் அவர்
காணிக்கையாகக் கொடுத்துவிடுகிறார்.
-- இதைக் கண்ட இயேசு தம் சீடர்களுக்கு ஒரு பாடம்
கற்பித்துக் கொடுக்கிறார்: "
இந்த ஏழைக் கைம்பெண்,
காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட
மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்"
(மாற் 12:43). இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம்
பல கருத்துக்களை அறிந்துகொள்கிறோம். அதாவது, சமயத்தின்
பெயரால் ஏழைகள் ஒடுக்கப்பட்டது அன்று மட்டுமல்ல, இன்றும்
நடந்துதான் வருகிறது. கடவுளுக்குக் காணிக்கை என்று
கூறிவிட்டு, ஏழைகளைச் சுறண்டுகின்ற வேலையே நடந்தால் அது
கொடுமைதான். ஆனால் அக்கைம்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவருடைய
உள்ளத்திலிருந்து எழுகின்ற அன்பு நம்மைக் கவர்ந்து
இழுக்கிறது. "
உன் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு
ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக"
(மாற் 12:31) என்னும் அன்புக் கட்டளையை அக்கைம்பெண்
நடைமுறையில் செயல்படுத்துகிறார். தன் உடைமையை மட்டுமன்று,
தன்னை முழுவதுமே அவர் கடவுளுக்குக்
காணிக்கையாக்கிவிடுகிறார். கடவுளிடம் அவர் கொண்ட
நம்பிக்கையின் ஆழம் நம்மை வியப்புறச் செய்கிறது.
கடவுளையும் பிறரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பது நம்
செல்வத்தை நாம் காணிக்கையாக்க வேண்டும் என்பதோடு
நின்றுவிடுவதில்லை. நம் உள்ளத்திலிருந்து எழுகின்ற
அன்புணர்வோடு நாம் கடவுளை அணுகிச் செல்லும்போது நம்
திறமைகள், நேரம் ஆகியவற்றையும் பிறர் நலம் சிறக்கச்
செலவிடத் தயங்க மாட்டோம். செய்கின்ற தொழிலையும்
கடமையுணர்வோடு நாம் ஆற்றும்போது அது பிறரன்புப் பணியாக
மாறும். இவ்விதத்தில் நம் தாராள உள்ளம் வெளிப்படும்.
தன்னிடமிருந்த அனைத்தையும் காணிக்கையாக்கிய கைம்பெண்ணைப்
போல நாமும் கடவுள் முன்னிலையில் "
செல்வர்கள்"
ஆவோம்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ