கானாவூர் புதுமையை அனுபவிக்க
விரும்பும் இனியவர்களே!
ஆறு கற்சாடிகளும், திராட்சை இரசமாய் மாறிய தண்ணீரும், அன்று நிகழ்ந்த
கானாவூர் புதுமையை இன்று நம் குடும்பங்களில் அனுபவித்து மகிழ
வாருங்கள் என அன்புடன் வரவேற்கின்றன!
அது கானாவூரின் கல்யாண வீடு.... இருமணங்கள் இணைந்து கட்டுகின்ற
தேன்கூடு..... புதிய உறவுகள் கூடி காணாத உறவுகளைக் கண்டு
மொய்க்கும் கூட்டத்தின் கொண்டாட்டம்....
எதுவும் இல்லை என வாடும் உள்ளங்களே!
இருந்ததும் தீர்ந்ததென தவிக்கும் தங்கங்களே!
அநியாய அவமானத்தால் தேய்ந்த சொந்தங்களே!
கானாவூர் வீட்டை மட்டுமா புதுமையால் களைகட்டச் செய்வார்? நாம்
காணாத நம் தேவன், தாம் காணும் நம்ம வீட்டையும் புதுமையால் களைகட்டச்
செய்ய, நம்ம கண்ணீரையும் துடைக்க நாம் திரும்பும் திசைகளில் நின்று
கொண்டிருக்கிறார்.
திருப்பலிக்கு அழைக்கும் ஆறு கற்ஜாடிகளாய் நம் வீட்டு தேவைகளையும்,
பிரச்சினைகளையும் அடுக்கி வைப்போம். துன்பத்தால் வடிக்கும் கண்ணீரைத்
தண்ணீராய் கற்ஜாடிக்குள் ஊற்றி வைப்போம்.
திருப்பலியின் தெய்வீக அற்புதத்தால் நம் கண்ணீர் பன்னீராகி, தீர்த்தமாய்
நம் மீது தெளிக்கப்படுகிறது. இது நிகழும் போது அதிசயமாய் தீராத பிரச்சனைகள்
தீர்ந்து போகிறது. போதவில்லை என தவிக்க வைத்த குறைபாடுகள் எல்லாம்
நிறைபாடுகளாகி நிரம்பி வழிகிறது. இந்த அற்புதத்தை அனுபவிக்க வாருங்கள்.
நம்பிக்கையுடன் பலியில் பங்கேற்போம்!!!! அவர் சொல்வதை எல்லாம் அப்படியே
செய்வோம்!!!!
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. கானாவூர் திருமணவீட்டில் புதுமையை நிகழ்த்திய அன்பு
இயேசுவே!
திருச்சபையின் பணியாளர்களுக்காக செபிக்கிறோம். திருச்சபைத்
தலைவர்கள் தங்கள் பணிகளையும் கடமைகளையும் தொண்டுகளையும்
உமது மாட்சிமைக்காக செய்யும் மனத்தை தர வேண்டுமென ஆண்டவரே
உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்னை மரியின் பரிந்துரையால் முதல் அரும்பெரும் நிகழ்ச்சியை
நடத்திய இயேசுவே!
நாட்டு மக்களின் நலனில் அக்கறையோடு ஆட்சி செய்ய மரியாளின்
பரிந்துரையை நாட்டுத் தலைவர்களுக்கு தர வேண்டுமென ஆண்டவரே
உம்மை மன்றாடுகிறோம்.
3. வெற்றியை வைகறை ஒளியென வழங்கும் வள்ளல் இயேசுவே!
எமது பங்கினை வழிநடத்தும் எங்கள் ஆன்மீகத் தந்தை கடவுளின்
கரத்தில் உமது அரச மகுடமாய் விளங்க அருள் தர வேண்டுமென
ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4. ஏழையரை மகிழ்ச்சிப்படுத்தும் இனிய இயேசுவே!
ஏழைகள், அனாதைகள் விதவைகள் கைவிடப்பட்டோர் அனைவரையும்
உமது புதுமையால் மகிழ்ச்சியை மிகுதியாக்க அருள் தர
வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
இரு கல்லூரிகளுக்கு இடையே கால் பந்தாட்ட போட்டித் திருவிழா. மாணவர்கள்
மிக உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். ஒன்று தூய வளனார் கல்லூரி,
மற்றொன்று தூய பேதுரு கல்லூரி. வளனார் கல்லூரியில் வசதிகள் அதிகம்.
மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம. அங்கிருந்த மாணவர்களுக்கு
கால்பந்து போட்டிக்கான பயிற்சி அதிகம் அளிக்கப்பட்டது. தூய
பேதுரு கல்லூரியில் வசதிகள் மிகவும் குறைவு. மாணவர்களின் எண்ணிக்கையும்
குறைவு. வசதி வாய்ப்புகள் எல்லாமே குறைவு. பயிற்சியும் மிகக்
குறைவாகவே அளிக்கப்பட்டன!
இப்படியான சூழ்நிலையில் தான் கால்பந்தாட்ட போட்டி நிகழ்ந்து
கொண்டிருந்தது. தூய வளனார் கல்லுரி மாணவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சிக்கு
ஏற்ப மிகத் திறமையாக விளையாடி அசத்திக் கொண்டிருந்தார்கள்.
கடகடவென்று கோல் போட்டுக் கொண்டே போனார்கள் கூட்டமும் கரவொலி
எழுப்பி தங்கள் ஆதரவையும் பாராட்டையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
ஆறு கோல்கள் போட்டு மகிழ்ந்த தூயவளனார் கல்லூரி மாணவர்கள் எதிர்பார்க்காத
வேளையில், தூய பேதுரு கல்லூரி மாணவர்கள் ஒரே ஒரு கோல்
போட்டுவிட்டார்கள். அப்போது கூட்டத்துக்கு மத்தியில் விடாது கைதட்டி
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள்
கூட்டத்தினர் இரண்டு பக்கமும் கைதட்டிக் கொண்டிருக்கின்ற நீங்கள்
யார் எனக் கேட்ட போது "நான் இயேசு" என்று அந்த மனிதர்
சொன்னாராம். ஒரே ஒரு கோல் போட்ட மாணவர்களுக்கு கை தட்டுகின்றீர்களே
என்று கேட்ட போது "ஏழைகள் பக்கம் நானிருப்பேன்" என்று
சொன்னாராம்.
அன்று கானாவூர் கல்யாண வீடும் ஏழை வீடாக இருந்திருக்கலாம். காரணம்
பணக்கார வீடுகளில் உணவுப் பற்றாக்குறைக்கு இடமேயில்லை மீதியானதை
கீழே கொட்டும் அளவிற்கு உணவு நிரம்பியிருக்கும். அப்படியே உணவு
தீர்ந்தால் கூட பணத்தால் வசதி வாய்ப்புகளால் குறைவு
நிறைவாகிவிடும். ரசம் தீர்ந்ததை எண்ணி தவிக்கிறார்கள்.
இயேசு ஏழையர் நலனில் அக்கறை கொண்டிருக்கிறார். ஏழையரின் தேவைகளை
நிறைவு செய்கிறார். ஏழையாக இருந்த கானாவூர் திருமண வீட்டாரின்
மகிழ்ச்சியை மிகுதியாக்குகிறார்.
பிரேஸில் நாட்டில் கலவரக்காரர்களை அடக்க இராணுவ அதிகாரி ஒருவர்
சென்ற போது கலவரக்காரர்களைப் பார்த்து தயவு செய்து கலைந்து
செல்லுங்கள் இன்று எனது பிறந்த நாள். இந்த நாளில் என்னை மோசமானவனாக
ஆக்கிவிடாதீர்கள் என்றார்;. கூட்டத்திலிருந்த கலகக்காரர்களில்
ஒருவா உடனே கேக் வாங்கிக் கொண்டு அச்சத்தோடு ஜெனரலை அணுகி வந்து
வாழ்த்து தெரிவிக்க நெருங்கினார்.உடனே இராணுவ அதிகாரி கண்ணீரோடு
அந்த கலவரக்காரரை கட்டி அரவணைதத்துக் கொண்டார். மனிதம் வென்றது.
நாம் பேசும் ஒரு சில வார்த்தை புயல் போன்ற பிரச்சனையையும்
திசைமாற்றி மனித நேசத்தின் உச்சியைத் தொடச்செய்கிறது.
மரியாள் நினைத்திருந்தால் புதுமையை தானே நிகழ்த்தி இருக்கலாம்.
தன் மகனை முன்னிலைப் படுத்துகிறார்.
தலைமைப் பதவியில் இருந்து கொண்டு என் பேச்சை மீறக்கூடாது என
சட்டம் அமைத்து ஏழையரை வாட்டும் சர்வாதிகரிகளுக்கெல்லாம் மரியாள்
மகனை மதித்து பாடம் புகட்டுகின்றார்.
"அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள் எனச் சொல்லி நன்னெறியில்
கீழ்படிதலின் பாதையில் நடக்கத் தூண்டுகிறார்.
மகனின் புதுமையை அறிமுகம் செய்யும் அற்புத மொழி பேசுகிறார்.
மனிதம் மலர்ந்து விரிந்திட செய்யும் திசையை உற்பத்திசெய்கிறார்.
குறைகள் களையப்பட நிறைகள் கரைபுரண்டோட காரணமாகின்றாள்.
பிறரை முன்னிலைப்படுத்த, பிறரின் குறைகளைப் போக்க பாடம் கற்பிக்கின்றாள்.
அவர் சொல்வதை எல்லாம் செய்யும் போது அதிசயத்தை அனுபவிக்கும்
வாய்ப்பு பெறுவோம்..!!!!!
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
தீர்ந்தது நிறைந்தது!
பழைய பொருள்கள் விற்கும் ஒரு கடையில் வயலின் ஒன்று பல நாள்களாக
விற்காமல் கிடந்தது. விலையைக் குறைத்தாலும் யாரும்
வாங்குவில்லை. 'இதை வைத்து அடுப்பெரிக்கக்கூட முடியாது' என்று
யாரும் வாங்காமல் ஒதுங்கினர். அந்நேரம் முதியவர் ஒருவர் வந்தார்.
அந்த வயலினைத் தன் கையில் எடுத்து, தான் வைத்திருந்த
துணியால் அதை மெதுவாகத் துடைத்தார். பின் அங்கேயே அமர்ந்து
அதை வாசிக்கத் தொடங்குகினார். வயலினிலிருந்து புறப்பட்ட இசை
கேட்டு கடை வீதியே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்த்தது.
வயலினை வாசித்து முடித்த முதியவர் அதை அதே இடத்தில்
வைத்துவிட்டுப் போய்விட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில்,
'அது எனக்கு, அது எனக்கு' என்று அந்த வயலினை வாங்கப் பலர்
போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தனர்.
தீர்ந்து போன இசை வயலினில் நிறைந்தது அந்த முதியவரால்!
தீர்ந்து போன திராட்சை ரசம் ஜாடிகளில் நிறைந்தது நம் இயேசுவால்!
நம் வாழ்க்கையில் தீர்ந்து போகும் அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை
இன்று நிறைவதும் அவரால்தான் - எப்படி?
'இயேசு கானாவூர்த் திருமண விழாவில் தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றிய நிகழ்வை' இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா
2:1-11) காண்கிறோம். யூத மரபில்
திருமணம்
என்பது எட்டு
நாள்கள் நடக்கின்ற ஒரு குடும்ப, சமூக, நட்பு விழா. இதில்
மையமாக இருப்பது 'திராட்சை இரசம்.' உணவுப் பொருள்களில் தயாரிப்பிற்கு
அதிக நாள்கள் எடுக்கும் பொருள் திராட்சைரசம் தான். ஆகையால்,
ஒரு திருமணம் என்றால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னே
திட்டமிட்டு திராட்சை ரசம் செய்யத் தொடங்க வேண்டும். அதற்கு
ஆறு மாதங்களுக்கு முன்னர் திராட்சை பயிரிடவும் வேண்டும்.
கானாவூரின் இந்தக் குடும்பம் ஏறக்குறைய ஒரு வருடமாக இந்தத்
திருமணத்திற்காகத் தயாரித்திருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்தால்
திராட்சைரசம் தீர்ந்துவிட்டது. இந்தக் குறைவு வெறும் பசி
அல்லது உடல்சார் குறைவு அல்ல. மாறாக, சமூக அந்தஸ்தின்
குறைவு. திராட்சை ரசம் பரிமாறாத திருமண இல்லம் இகழ்ச்சிக்குரியதாகக்
கருதப்படும்.
'திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது' என்று நிகழ்வைத் தொடங்கி
வைக்கிறார் இயேசுவின் தாய் (யோவான் நற்செய்தியாளர், 'மரியா'
என்னும் பெயரை தன் நற்செய்தியில் பயன்படுத்தவில்லை). 'அம்மா,
அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?' 'அம்மா' என்பது இங்கே
பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும் வார்த்தையே அன்றி,
'தாய்' என்ற அர்த்தம் அல்ல. மேலும், தொடர்ந்து, 'உனக்கும்,
எனக்கும் என்ன?' எனக் கேட்கின்றார் இயேசு. ஒருவர் மற்றவரை
தொந்தரவு செய்யும்போது, தொந்தரவு செய்யப்படுபவர், தொந்தரவு
செய்பவரைப் பார்த்துக் கேட்பதாகவோ (நீத 11:12), அல்லது சம்பந்தப்படாத
ஒருவரை ஒன்றில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தும்போது,
அவர் கழுவுற மீனுல நழுவுற மீனா ஓடும்போது சொல்வதாகவோ (2 அர
3:13) இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்பட்டுள்ளது.
'எனது நேரம் இன்னும் வரவில்லையே!' என்கிறார் இயேசு. யோவான்
நற்செய்தியில் இரண்டு வகை நேரம் குறிப்பிடப்படுகிறது: ஒன்று,
'க்ரோனோஸ்.' அதாவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நொடி,
நிமிடம், மணி, நாள், வாரம் சம்பந்தப்பட்டது. இதன்படி, இந்த
நிகழ்வு நடக்கும் நாள் 'மூன்றாம் நாள்.' இரண்டு, 'கைரோஸ்.'
அதாவது, மீட்பு நேரம். இயேசு குறிப்பிடும் நேரம் இந்த இரண்டாம்
நேரமே. தான் செயல்படும் நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு
சொல்வது இரண்டாம் வகை நேரத்தையே குறிக்கிறது.
'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று இயேசுவின்
தாய் அங்கிருந்த பணியாளர்களிடம் சொல்கின்றார். சிலுவையின்
அடியில் இயேசு தன் தாயை, 'இதோ! உன் தாய்' என்று தன் அன்புச்
சீடரிடம் ஒப்படைக்கின்றார். இங்கே, மறைமுகமாக, 'இதோ! உன்
தலைவர்' என்று இயேசுவை தலைவராகப் பணியாளர்களிடம்
முன்மொழிகின்றார் இயேசுவின் தாய்.
தூய்மைச் சடங்கிற்கென வைக்கப்பட்ட ஆறு கற்தொட்டிகளில் நீர்
நிரப்புமாறு சொல்கின்றார் இயேசு. யூத, இசுலாமிய, அல்லது
சில இந்து மரபு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் வெளியே
தண்ணீர்த்தொட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். இப்போது நவீனமாக
திருகு-குழாய்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில்
தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்பவர்கள்
தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு இத்தண்ணீரில் இறங்கி பின்
வழிபாட்டிற்குள் செல்வார்கள். கீழைமரபில் உள்ள மற்றொரு
பழக்கம் - இரண்டு வகையான தண்ணீரைப் பயன்படுத்துதல்:
குடிக்க ஒன்று, சுத்தம் செய்ய மற்றொன்று. குடிக்க
வைத்திருக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கும். சுத்தம்
செய்ய வைக்கப்படும் தண்ணீர் கேட்பாரற்றுக் கிடக்கும். ஆக,
காலடிகளைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் சுத்தம்
குறைந்த தண்ணீர் பந்தியில் ஊற்றிப் பரிமாறப்படும் திராட்சை
ரசமாக மாறுகிறது.
'இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்'
என்கிறார் இயேசு. தொட்டிகளில் உள்ள தண்ணீர் திராட்சை ரசமாக
மாறியதா, அல்லது பணியாளர்கள் மொண்டு போகும்போது அது
மாறியதா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், தண்ணீர்
திராட்சை ரசமாக மாறுகிறது.
இந்த இரசம் எங்கிருந்து வந்தது என்பதை பணியாளர்களே அன்றி,
பந்தி மேற்பார்வையாளர் அறியார் எனப் பதிவு செய்கின்றார்
யோவான். 'எங்கிருந்து வந்தது?' என்பதற்கான விடை,
'தொட்டியிலிருந்து,' அல்லது 'இயேசுவிடமிருந்து' என்று
வாசகர் புரிந்துகொள்ளலாம். பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக்
கூப்பிட்டு, 'நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன்
வைத்திருந்தீர்?' எனக் கேட்கின்றார். மேலோட்டமாக, இந்தக்
கேள்வியை அவர் மணமகனைப் பார்த்துக் கேட்கின்றார். ஆனால்,
இந்நிகழ்வை வாசிக்கும் ஒவ்வொருவரும், தாமே பந்தி
மேற்பார்வையாளராக மாறி, இயேசு என்னும் புதிய மணமகனிடம்
கேட்பது போன்று இருக்கிறது.
யோவான் இந்நிகழ்வை முதல் அறிகுறி என அழைக்கின்றார். இயேசு
எப்படிப்பட்டவர், அவர் எதற்காக வந்தார் என்பதற்கான
அறிகுறியாக அவரின் செயல்கள் இருந்தன என்பதைச்
சுட்டிக்காட்டத்தான் யோவான் இச்சொல்லாடலைப்
பயன்படுத்துகின்றார். இந்த அறிகுறி வழியாக இயேசுவின்
மாட்சி வெளிப்படுகிறது. சீடர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.
ஆக நிகழ்வு ஒன்றுதான். ஆனால், இங்கே, தீர்ந்து போன ரசம்
நிறைகிறது. சீடர்களின் ஐயம் தீர்ந்து போய் நம்பிக்கை
நிறைகிறது.
எசாயா நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து (காண். எசா 61:1-5)
எடுக்கப்பட்டுள்ள, இறைவாக்குப் பகுதியின் பின்புலம்
இஸ்ரயேல் மக்களின் நாடு திரும்புதல். கி.மு. 539ஆம் ஆண்டு
பாரசீக அரசன் சைரசு பாபிலோனியாவில் சிறைப்பட்டுக் கிடந்த
மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்று கட்டளை
பிறக்கின்றார். திரும்பி வந்தவர்கள் தங்கள் நாடும்,
நகரும், ஆலயமும் சிதைந்து கிடந்ததைக் கண்டு மிகவும்
துயருற்றனர். தரை மட்டமாகக் கிடந்த தங்கள் வீடுகள், ஆலயம்,
சாம்பலாகக் கிடந்த தங்கள் வயல்கள் என நிலம் வறண்டு
கிடந்தது. 'எல்லாவற்றையும் சீக்கிரம் கட்டி
எழுப்பிவிடலாம்' என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைய
ஆரம்பிக்கிறது. சோர்வும்,தோல்வியும், ஏமாற்றமும்,
சந்தேகமும் கவ்விக் கொள்கிறது. தங்கள் கடவுள் தங்கள்
முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும்
பொய்யா? என்ற கேள்வியும் எழ ஆரம்பிக்கிறது. இந்தப்
பின்புலத்தில்தான் எசாயாவின் இறைவாக்கு அங்கே
உரைக்கப்படுகின்றது. முழு நம்பிக்கையாடும், தடுமாற்றமில்லா
உறுதியோடும் எருசலேமின் புதிய மாட்சி பற்றி
இறைவாக்குரைக்கின்றார் எசாயா.
'ஆண்டவரின் வாயிலிருந்து வரும் புதிய பெயர்' என்பதே
இறைவாக்கின் மையமாக இருக்கிறது. விவிலியத்தில் பெயர்
மாற்றங்கள் இரண்டு பொருள்களைத் தருகின்றன: ஒன்று, பெயர்
மாற்றம் பெறுகிற அந்த நபர் புதிய பணிக்கான அல்லது புதிய
வாழ்க்கைமுறைக்கான அழைப்பைப் பெறுவார். இரண்டு, புதிய
பெயரைத் தருவதன் வழியாகக் கடவுள் அந்த நபரின் மேல் புதிதாக
உரிமை கொண்டாடுவார். இன்றைய முதல் வாசகத்தை, (அ) புதிய
பெயர் (62:1-4), (ஆ) புதிய வாழ்க்கை நிலை (62:5), (இ)
புதிய பாதுகாப்பு (62:6) என்று மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கலாம். யூதர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று
நிகழ்வுகளாக நடைபெறும். முதலில், வாக்குறுதி பத்திரம்
எழுதப்படும். இரண்டு, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே
உடன்படிக்கை செய்யப்படும். மூன்று, மணமகனும் மணமகளும்
உடலால் இணைவர். இரண்டாவது நிகழ்வான உடன்படிக்கை அல்லது
வாக்குறுதி பத்திரத்தில்தான் மனைவியின் பெயர்
மாற்றப்படும். அதே போல, இங்கே ஆண்டவரும் இஸ்ரயேலை
மணப்பதற்கு முன்னர், தழுவிக்கொள்ளுமுன், அவளுக்கு
பாபிலோனிய அடிமைத்தனத்தில் வழங்கப்பட்ட 'அசுவா'
('கைவிடப்பட்டவள்'), 'ஷெமமா' ('பாழ்பட்டது') என்ற பெயர்களை
மாற்றி, 'எப்சி-பா' ('என் மகிழ்ச்சி அவளிடம்'), 'பெயுலா'
('மணமுடித்தவள்') என்ற புதிய பெயர்களை அளிக்கின்றார்.
நாடிழந்து நிற்கும், இழப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும்
இஸ்ரயேல் மக்களை இறைவன் உரிமையாக்கிக் கொண்டு
அவர்களுக்குப் புதிய வாழ்க்கை நிலையை வாக்களிக்கின்றார்.
மணமகளுக்கு பாதுகாப்பு தரும் மணமகன் போல இஸ்ரயேலுக்குப்
பாதுகாப்பு தருவார் இறைவன். திருமணத்தில் மணமக்கள் ஒருவர்
மற்றவருக்குத் தரும் உரிமை அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக
இருப்பது போல, இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் கொண்டாடும்
உரிமை அவர்களின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது. இஸ்ரயேல்
மக்களின் அடிமைத்தனம் தீர்ந்து போக, இறைவன் தரும் அமைதி
அவர்களில் நிறைகிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 12:4-11) பவுல்
கொரிந்த நகரத்திருச்சபையின் பிளவுகளில் ஒன்றான 'கொடைகள்
பிளவு' பற்றியதாக இருக்கின்றது. கொரிந்த நகரத் திருச்சபை
போட்டி, பொறாமை, பிளவு நிறைந்த சபையாக இருக்கிறது. அதன்
பிளவுக்கான பல காரணங்களில் ஒன்று 'அருள்கொடையும்'
அக்கொடையினால் வரும் 'திருத்தொண்டும்.' அருள்கொடைகள் பலவாக
இருந்தாலும், அவை ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன: அந்தப்
புள்ளிக்கு இரண்டு முகங்கள் உண்டு: ஒன்று, 'ஆவியானவர்'
என்னும் ஊற்று, இரண்டு, 'பொதுப்பயன்பாடு' என்னும் நோக்கம்.
ஆக, எல்லா அருள்கொடைகளும் ஒரே ஆண்டவரால் தரப்பட வேண்டும்.
அவை ஒட்டுமொத்த குழுமத்தின் வளர்ச்சிக்குப் பயனுள்ளவையாக
அமைதல் வேண்டும். அருள்கொடைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட
உடைமை என்றாலும், அது பயன்படுத்தப்பட வேண்டியது பொது
நன்மைக்காக. இறைவன் நம்மைக் கொடைகளால் நிரப்புகின்றார்
என்றும், அக்கொடைகளைக் கொண்டு நாம் ஒருவர் மற்றவரை
நிரப்பக் கடமைப்பட்டுள்ளோம் என்பதும் இங்கே புலனாகிறது.
'திராட்சை ரசம் தீர்ந்து போய்க் கிடக்கும்' நம் வாழ்க்கை
நிலைகள் எவை? அவற்றை இறைவன் எப்படி நிரப்புகின்றார்?
இறைவன் தரும் நிறைவை நாம் காண்பது எப்படி? இறுதி வரை இனிய
இரசத்தைக் காத்துக்கொள்தல் சாத்தியமா?
(அ) எதார்த்தம் அறிதல். 'திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது'
என்னும் இயேசுவின் தாயின் அறிதலே அறிகுறிக்கு முதற்படியாக
அமைகின்றது. தீர்ந்துவிட்டது என்று நான் உணராத ஒன்றை
இறைவன் நிரப்ப முடியாது. சில நேரங்களில், 'திராட்சை ரசம்
தீரவில்லை' என நாமே போலியான ஆறுதல் கூறுகிறோம். அல்லது,
நம் தொட்டிகளை வெறும் கானல் நீரால் நிரப்பிக்கொள்கின்றோம்.
'குறைவு' என்பது ஒரு எதார்த்தம். அதை நினைத்து நாம்
கவலைப்படத் தேவையில்லை. வயது மூப்பு, நோய், வறுமை, தனிமை,
வேலையின்மை, சோர்வு, உறவுச் சிக்கல் ஆகியவற்றால் நம்
வாழ்க்கையில் ஏற்படும் குறைவை ஏற்றுக்கொள்தல் முதல் சவால்.
(ஆ) கல்தொட்டிகளை நிரப்புதல். வெறும் தொட்டிகளில் ரசம்
ஊற்றெடுக்கவில்லை. மாறாக, தண்ணீர் ரசமாக மாறுகின்றது.
இறைவன் நம்மை நிறைக்குமுன்னர் நாம் நம் தொட்டிகளை,
நம்மிடம் உள்ளதைக் கொண்டு நிறைத்தல் நலம். கொரிந்து நகர
மக்கள் தங்கள் தொட்டிகளை அருள்கொடைகளால் நிரப்புகின்றனர்.
(இ) அவர் சொல்வதைச் செய்தல். இயேசு சொன்னதை முதலில்
பணியாளர்கள் செய்கின்றனர். பின் தண்ணீர் செய்கின்றது.
இயேசுவின் சொல்லின் ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது
அமைந்துள்ளது. புதிய மணமகன் தன் குரலால் அனைத்தையும்
நிறைக்கின்றார். இன்று நாம் அவர் சொல்வதை எங்கெல்லாம்,
எப்படியெல்லாம் கேட்கின்றோம்?
நம் தாழ்நிலை கண்டு தள்ளி நிற்பவர் அல்லர் நம் இறைவன். நம்
பழைய இயல்பை புதிய இயல்பாக மாற்றக் கூடியவர் அவர். அவரின்
நிறைவை அனுபவிக்கும் நாம் அதை நம் வாழ்வால் அறிக்கையிடுதல்
நலம் (காண். திபா 96).
தலைவனின் தழுவல்
பழைய பொருட்கள் விற்கும் ஒரு கடையில் வயலின் ஒன்று பல நாட்களாக
விற்காமல் கிடந்தது. அதை விலைகுறைத்தாலும் யாரும் வாங்குவதாகயில்லை.
'இதை வைத்து அடுப்பெரிக்கக்கூட முடியாது' என்று யாரும்
வாங்காமல் ஒதுங்குகினர். அந்நேரம் அங்கே டிப்டாப்பாக ஒரு
முதியவர் வந்தார். அந்த வயலினைத் தன் கையில் எடுத்து தான்
வைத்திருந்த துணியால் மெதுவாகத் துடைத்தார். பின் அங்கேயே
அமர்ந்து அதை வாசிக்கத் தொடங்குகினார். வயலினிலிருந்து புறப்பட்ட
இசை கேட்டு கடை வீதியே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்த்தது.
வயலினை வாசித்து முடித்த முதியவர் அதை அதே இடத்தில்
வைத்துவிட்டுப் போய்விட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில்,
'அது எனக்கு, அது எனக்கு' என அந்த வயலினை வாங்கப் பலர்
போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தனர். கேட்பாரற்றுக் கிடந்த
அந்தப் பழைய வயலினுக்கு இப்போது ஏன் போட்டி? அந்த வயலினுக்கு
மதிப்பைத் தந்தது எது? 'தலைவனின் தழுவல்' ('master's touch').
இசைத்தலைவன் தொட்டவுடன் வயலினின் மதிப்பு கூடுகிறது.
தலைவராம் இறைவன் தழுவும் பொருள்களும், நபர்களும் புதிய மதிப்பு
பெறுகின்றனர் என்று நமக்கு முன்மொழியும் இன்றைய இறைவாக்கு
வழிபாடு, அந்தத் தழுவலுக்கு நம்மை சரணாகதியாக்க அழைக்கின்றது.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 61:1-5) எசாயா நூலின்
மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு.
539ஆம் ஆண்டு பாரசீக அரசன் சைரசு பாபிலோனியாவில் சிறைப்பட்டுக்
கிடந்த மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்று கட்டளை
பிறக்கின்றார். சிலர் பாபிலோனியாவியே தங்கிவிட, சிலர் மட்டும்
தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புகிறார்கள். திரும்பி வந்தவர்கள்
தங்கள் நாடும், நகரும், ஆலயமும் சிதைந்து கிடந்ததைக் கண்டு
மிகவும் துயருற்றனர். தரை மட்டமாகக் கிடந்த தங்கள் வீடுகள்,
ஆலயம், சாம்பலாகக் கிடந்த தங்கள் வயல்கள் என நிலம் வறண்டு
கிடந்தது. 'எல்லாவற்றையும் சீக்கிரம் கட்டி எழுப்பிவிடலாம்'
என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பிக்கிறது.
சோர்வும்,தோல்வியும், ஏமாற்றமும், சந்தேகமும் கவ்விக்
கொள்கிறது. தங்கள் கடவுள் தங்கள் முன்னோர்களுக்குக்
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யா? என்ற கேள்வியும்
எழ ஆரம்பிக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய எசாயாவின்
இறைவாக்கு அங்கே உரைக்கப்படுகின்றது. முழு நம்பிக்கையாடும்,
தடுமாற்றமில்லா உறுதியோடும் எருசலேமின் புதிய மாட்சி பற்றி
இறைவாக்குரைக்கின்றார் எசாயா.
'ஆண்டவரின் வாயிலிருந்து வரும் புதிய பெயர்' என்பதுதுதான்
இறைவாக்கின் மையமாக இருக்கிறது. விவிலியத்தில் பெயர் மாற்றங்கள்
இரண்டு பொருள்களைத் தருகின்றன: ஒன்று, பெயர் மாற்றம்
பெறுகிற அந்த நபர் புதிய பணிக்கான அல்லது புதிய
வாழ்க்கைமுறைக்கான அழைப்பைப் பெறுவார். இரண்டு, புதிய பெயரைத்
தருவதன் வழியாகக் கடவுள் அந்த நபரின் மேல் புதிதாக உரிமை
கொண்டாடுவார். இன்றைய முதல் வாசகத்தை, (அ) புதிய பெயர்
(62:1-4), (ஆ) புதிய வாழ்க்கை நிலை (62:5), (இ) புதிய
பாதுகாப்பு (62:6) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
யூதர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும்.
முதலில், வாக்குறுதி பத்திரம் எழுதப்படும். இரண்டு, மணமகனுக்கும்
மணமகளுக்கும் இடையே உடன்படிக்கை செய்யப்படும். மூன்று,
மணமகனும் மணமகளும் உடலால் இணைவர். இரண்டாவது நிகழ்வான உடன்படிக்கை
அல்லது வாக்குறுதி பத்திரத்தில்தான் மனைவியின் பெயர் மாற்றப்படும்.
அதே போல, இங்கே ஆண்டவரும் இஸ்ரயேலை மணப்பதற்கு முன், தழுவிக்கொள்ளுமுன்,
அவளுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்தில் வழங்கப்பட்ட 'அசுவா'
(கைவிடப்பட்டவள்), 'ஷெமமா' (பாழ்பட்டது) என்ற பெயர்களை
மாற்றி, 'எப்சி-பா' (என் மகிழ்ச்சி அவளிடம்), 'பெயுலா' (மணமுடித்தவள்)
என்ற புதிய பெயர்களை அளிக்கின்றார். நாடிழந்து நிற்கும்,
இழப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் இஸ்ரயேல் மக்களை இறைவன்
உரிமையாக்கிக் கொண்டு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை நிலையை
வாக்களிக்கின்றார். மணமகளுக்கு பாதுகாப்பு தரும் மணமகன்
போல இஸ்ரயேலுக்குப் பாதுகாப்பு தருவார் இறைவன். திருமணத்தில்
மணமக்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் உரிமை அவர்களுக்குப்
பாதுகாப்பு அரணாக இருப்பது போல, இறைவன் இஸ்ரயேல் மக்கள்
மேல் கொண்டாடும் உரிமை அவர்களின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது.
ஆக, தவிடு பொடியாய்க் கிடந்த எருசலேம் நகரமும், அந்த
நிலையில் கிடந்த நகரத்திற்குத் திரும்பிய மக்களும் தலைவனின்
தழுவலால் புதிய பெயரும், புதிய வாழ்க்கை நிலையும், புதிய
பாதுகாப்பும் பெறுகின்றனர்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 12:4-11) பவுல்
கொரிந்த நகரத்திருச்சபையின் பிளவுகளில் ஒன்றான 'கொடைகள் பிளவு'
பற்றியதாக இருக்கின்றது. கொரிந்த நகரத் திருச்சபை போட்டி,
பொறாமை, பிளவு நிறைந்த சபையாக இருக்கிறது. அதன் பிளவுக்கான
பல காரணங்களில் ஒன்று 'அருள்கொடையும்' அக்கொடையினால் வரும்
'திருத்தொண்டும்.' 'ஞானம் நிறைந்த சொல்வளம்,' 'அறிவுசெறிந்த
சொல்வளம்,' 'நம்பிக்கை,' 'பிணிதீர்க்கும் அருள்கொடை,' 'வல்ல
செயல் செய்யும் ஆற்றல்,' 'இறைவாக்குரைக்கும் ஆற்றல்,' 'ஆவிக்குரிய
பகுத்தறியும் ஆற்றல்,' 'பரவசப் பேச்சு,' 'பேச்சை விளக்கும்
ஆற்றல்' என கொரிந்து நகரத் திருச்சபை பெற்றிருந்த அருள்கொடைகளைப்
பார்க்கும்போது நமக்மே ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது.
தொடக்கத் திருச்சபையில் துலங்கிய அருள்கொடைகள் இன்று நம்மிடையே
இல்லாதது அல்லது குறைவாயிருப்பது ஏன்? ஆவியானவரின் செயல்பாடுகள்
இன்று குறைந்துவிட்டனவா? அல்லது அவருடைய செயல்பாட்டிற்கு
இன்றைய திருச்சபையின் இயல்பு தடையாக இருக்கின்றதா?
அருள்கொடைகள் இப்படிப் பலவாக இருந்தாலும், அவைகள் ஒரே
புள்ளியில் சங்கமிக்கின்றன: அந்தப் புள்ளிக்கு இரண்டு முகங்கள்
உண்டு: ஒன்று, 'ஆவியானவர்' என்னும் ஊற்று, இரண்டு, 'பொதுப்பயன்பாடு'
என்னும் நோக்கம். ஆக, எல்லா அருள்கொடைகளும் ஒரே ஆண்டவரால்
தழுவப்பட வேண்டும். அப்படி தழுவப்பட்டால்தாம் அவைகளால் பயன்
உண்டு. அப்படிப் தழுவப்பட்ட கொடைகள் ஒட்டுமொத்த குழுமத்தின்
வளர்ச்சிக்குப் பயனுள்ளவைகளாக அமைதல் அவசியம். பவுலின்
மூவொரு இறைவன் தத்துவம் இங்கே காணக்கிடக்கிறது: 'அருள்கொடைகள்
பல. தூய ஆவியார் ஒருவரே. தொண்டுகள் பல. ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள்
பல. கடவுள் ஒருவரே' என, தூய ஆவி, மகன், தந்தை என தலைகீழாக
மூவொரு இறைவனை புதிய கோணத்தில் தருகின்றார். அதாவது, கடவுளை
மேலிருந்து கீழ் வருபவராகக் காட்டாமல், கீழிருந்து
மேலேற்றுகிறார். இதை வைத்து பவுலை ஒரு மார்க்சிஸ்ட் என்று
சொல்லலாம்! பவுலின் இரண்டாவது மார்க்கிய சிந்தனை இது: அருட்கொடைகள்
ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடைமை என்றாலும், அது பயன்படுத்தப்பட
வேண்டியது பொது நன்மைக்காக. கொடைகளை முன்னிறுத்தும்போது
நாம் நமக்குள் ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்யத் தொடங்குகிறோம்.
ஆனால், ஊற்றையும், நோக்கத்தையும் பார்த்தால் ஒப்பீடுகள் மறைந்துவிடும்.
ஆக, தலைவனின் தழுவல் நம்பிக்கையாளர்களுக்கு நற்கொடைகளை
வழங்குகிறது. இந்நற்கொடைகள் திருச்சபையின்
பொதுநலத்திற்காகக் கையாளப்படுகின்றன.
'இயேசு கானாவூர் திருமண விழாவில் தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றிய நிகழ்வை' இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா
2:1-11) காண்கிறோம். நமக்குப் பரிச்சயமான இவ்வாசகப்
பகுதியை கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்:
அ. பழைய புரிதல்களும், புதிய கேள்விகளும்
1. யோவான் நற்செய்தியில் வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும்
இரண்டு அடுக்கு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, மேலோட்டமானது.
இரண்டு, ஆழமானது. உதாரணத்திற்கு, கானாவூர் திருமண விழாவில்
மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், இயேசு தண்ணீரை திராட்சை
ரசமாக மாற்றியது. ஆனால், ஆழமான அர்த்தம் என்னவென்றால்,
இதன்வழியாக இயேசுவின் மாட்சிமை வெளிப்படுகிறது. இரண்டு
அர்த்தங்களையும் நாம் அலசிப் பார்ப்பது அவசியம்.
2. மரியாள் பரிந்து பேசுபவரா? 'மரியாள் வழி இயேசுவிடம்'
என்ற ஒரு சொல்லாடல் கேட்டிருப்போம். இந்த சொல்லாடல்
உருவானதன் பின்புலம் கானாவூர் நிகழ்வுதான். மரியாள்
கானாவூர் திருமண விழாவில் பரிந்து பேசுகிறார் என நாம் பல
நேரங்களில் சொல்கிறோம். எனக்கு இந்த அர்த்தத்தில் உடன்பாடு
இல்லை. மரியாள் இல்லையென்றாலும் இயேசுவின் முதல் அற்புதம்
அன்று நடந்தேறியிருக்கும். இதற்காக, நான் மரியாளை தள்ளி
வைக்கிறேன் என எண்ண வேண்டாம். தொழுநோயால் வருந்திய நாமானை
இஸ்ரயேலுக்குச் சென்று நலம்பெறுமாறு அவரின் மன்னன் கடிதம்
கொடுத்து அனுப்புகிறான். இதில் மன்னன் அனுப்புகிறான்தான்.
ஆனால், குணம் பெறக் காரணமாக இருந்தவர் எலிசா. மன்னன்
கடிதம் கொடுத்ததால்தான் நாமான் நலம் பெற்றார் எனச் சொல்ல
முடியுமா? இல்லை. கானாவூர் நிகழ்வை இலக்கிய அடிப்படையில்
பார்த்தால் மரியாளின் வேலை, ஒரு ஏஜன்ட். அதாவது, ஒரு
நிகழ்வு நடக்குமுன் நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுத்து
வழங்குவதுபோல. நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லையென்றால்
நிகழ்ச்சியே நடக்காது என்று நாம் சொல்ல முடியுமா?
3. திருமணம் என்று நிகழ்வு தொடங்குகிறது. ஆனால், மணமக்கள்
பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பாரம்பரியத்தில் இந்த
திருமணம் யூதா ததேயுவின் திருமணம் என்பது பலரின் கருத்து.
நற்செய்தியாளரின் உள்ளார்ந்த பொருளின்படி இயேசுவே இங்கே
மணமகனமாகவும், ஒட்டுமொத்த மானுடம் மணமகளாகவும் இங்கே
உருவகிக்கப்படுகிறது.
4. 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?' 'அம்மா'
என்பது இங்கே பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும்
வார்த்தையே அன்றி, 'தாய்' என்ற அர்த்தம் அல்ல. மேலும்,
தொடர்ந்து, 'உனக்கும், எனக்கும் என்ன?' என்பதுதான் சரியான
மொழிபெயர்ப்பாக இருக்க முடியும். மேலும் முதல் ஏற்பாட்டில்
இந்த சொல்லாடல் மிகுந்து கிடக்கிறது. ஒருவர் மற்றவரை
தொந்தரவு செய்யும்போது, தொந்தரவு செய்யப்படுபவர், தொந்தரவு
செய்பவரைப் பார்த்துக் கேட்பதாகவோ (நீத 11:12), அல்லது
சம்பந்தப்படாத ஒருவரை ஒன்றில் வலுக்கட்டாயமாக
சம்பந்தப்படுத்தும்போது, அவர் கழுவுற மீனுல நழுவுற மீனா
ஓடும்போது சொல்வதாகவோ (2 அர 3:13) பயன்படுத்தப்பட்டுள்ளது.
5. 'நேரம்.' யோவான் நற்செய்தியில் இரண்டு வகை நேரம்
குறிப்பிடப்படுகிறது. ஒன்று, 'க்ரோனோஸ்.' அதாவது, நாம்
அன்றாடம் பயன்படுத்தும் நொடி, நிமிடம், மணி, நாள், வாரம்
சம்பந்தப்பட்டது. இதன்படி, இந்த நிகழ்வு நடக்கும் நாள்
'மூன்றாம் நாள்.' இரண்டு, 'கைரோஸ்.' அதாவது, மீட்பு நேரம்.
இயேசு குறிப்பிடும் நேரம் இந்த இரண்டாம் நேரமே.
6. 'அறிகுறி.' யோவான், மற்ற நற்செய்தியாளர்கள்
பயன்படுத்தும் 'அற்புதம்' (miracle) என்ற வார்த்தையை
விடுத்து 'அறிகுறி' (sign) என்ற வார்த்தையைப்
பயன்படுத்துகின்றார்;. இயேசு எப்படிப்பட்டவர், அவர்
எதற்காக வந்தார் என்பதற்கான அறிகுறியாக அவரின் செயல்கள்
இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டத்தான் யோவான்
இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். அதாவது, அற்புதங்கள்
செய்யப்பட்டதன் நோக்கம் அற்புதங்கள் அல்ல. மாறாக, அவற்றின்
வழியாக என்ன வெளிப்பட்டது என்பதுதான் முக்கியம். இங்கே,
சீடர்கள் இந்த அறிகுறியின் வழியாக இயேசுவின்மேல் நம்பிக்கை
கொள்கின்றனர்.
ஆ. சமய, சமூக பின்புலம்
யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாள்கள் நடக்கின்ற ஒரு
குடும்ப, சமூக நட்பு விழா. இதில் மையமாக இருப்பது
'திராட்சை இரசம்.' உணவுப் பொருட்களில் தயாரிப்பிற்கு அதிக
நாட்கள் எடுக்கும் பொருள் திராட்சைரசம் தான். ஆகையால் ஒரு
திருமணம் என்றால் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்னே
திட்டமிட்டு திராட்சை ரசம் செய்யத் தொடங்க வேண்டும்.
அதற்கு ஆறு மாதத்திற்கு முன் திராட்சை பயிரிடவும்
வேண்டும். ஆகையால் கானாவூரின் இந்தக் குடும்பம் ஏறக்குறைய
ஒரு வருடமாக இந்தத் திருமணத்திற்கான தயாரிப்பை
நிகழ்த்தியிருக்கவேண்டும். ஏதோ ஒரு காரணத்தால்
திராட்சைரசம் தீர்ந்துவிட்டது. விருந்தினர்களுக்கு 'இல்லை'
என்று சொன்னால் நன்றாக இருக்காது. அதுவும் சொந்தங்களுக்கு
'இல்லை' என்று சொன்னால் என்ன நடக்கும் என்பது நம்
அனைவருக்குமே தெரியும். நமக்கு அறிமுகமாகாத மூன்றாம்
நபரும், நம் நண்பர்களும் 'இல்லை' என்ற சொல்லை
ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நம் சொந்தக்காரர்கள் கண்டிப்பாக
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மைக் குறைத்துப் பேச மற்றொரு
'டாபிக்' கிடைத்ததாக எண்ணுவார்கள். இந்த இக்கட்டான
சூழலில்தான் இயேசுவின் அறிகுறி நிகழ்கின்றது.
இ. வாழ்வும், வாக்கும்
'தன்னைப் படைத்தவரைக் கண்ட தண்ணீர் வெட்கத்தால் தன் முகம்
சிவந்து இரசமாய் மாறியது' என்று கவிதையாகச் சொல்கின்றார்
ஒரு ஆங்கிலக் கவிஞர்.இன்றைய நற்செய்திப்பகுதியில் வருகின்ற
'தூய்மைச்சடங்கிற்கென வைக்கப்பட்ட ஆறு கற்தொட்டிகள்'
என்னும் சொல்லாடலில், இந்த ஆறு கற்தொட்டிகளுக்கு ஒரு
பெயரெச்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. யூத, இசுலாமிய, அல்லது
சில இந்து மரபு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் வெளியே
தண்ணீர்த்தொட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். இப்போது
நவீனமாக திருகு-குழாய்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு
சில இடங்களில் தண்ணீர் தொட்டியில் சேமிக்கப்பட்டிருக்கும்.
உள்ளே செல்பவர்கள் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு
இத்தண்ணீரில் இறங்கி பின் வழிபாட்டிற்குள் செல்வார்கள்.
கீழைமரபில் உள்ள மற்றொரு பழக்கம் - இரண்டு வகையான
தண்ணீரைப் பயன்படுத்துதல்: குடிக்க ஒன்று, சுத்தம் செய்ய
மற்றொன்று. குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் பாதுகாப்பாக
இருக்கும். சுத்தம் செய்ய வைக்கப்படும் தண்ணீர்
கேட்பாரற்றுக் கிடக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பாக நிலை எப்படியிருந்திருக்கும்? அதுவும் பாலஸ்தீனம்
போன்ற வெப்பபூமியில் தண்ணீர் கிடைத்திருக்குமா?
கிடைத்திருக்கும் தண்ணீரின் தரம் எப்படி இருந்திருக்கும்?
தரம் தாழ்ந்த தண்ணீரைத் தலைவன் இயேசு தழுவியதால்
அத்தண்ணீர் புதிய இயல்பு பெற்றது.
இன்றைய முதல் சிந்தனை: நாம் திராட்சை ரசமாக, இனிமையாக
மாறுவதற்கு 'நீ இப்படி இருக்க வேண்டும், அப்படியிருக்க
வேண்டும்' என்று இயேசு நம்மிடம் சொல்வதில்லை. நாம் எப்படி
இருந்தாலும், எந்தப் பின்புலத்தில் வந்தாலும் அவர்
தொட்டால் நாம் திராட்சை இரசமாக மாறமுடியும். இரண்டாவதாக,
தண்ணீர் இரசமாக மாற வேண்டுமென்றால் தன் இயல்பை இழக்க
முன்வர வேண்டும். 'இல்லை. நான் இப்படியே இருக்கிறேன்.
தூய்மைச் சடங்கிற்கு பயன்படும் தண்ணீராக மட்டும்
இருக்கிறேன்' என்று தன்னையே சுருக்கிக் கொள்ளாமல்,
மற்றவர்கள் தங்கள் கைகளில் ஏந்தும் மதிப்பிற்குரிய பொருளாக
மாறவேண்டுமானால் தன் இயல்பை இழக்க வேண்டும். நம்
வாழ்விலும் நம் எண்ணங்கள் நிறைவேற வேண்டுமானால் நம்
இயல்பை, தாழ்வு மனப்பான்மையை, குறுகிய எண்ணங்களை இழக்க
வேண்டும். ஆன்மீகம் என்பது நம் இயல்பை மாற்றுவது. நம்
கூட்டை உடைத்து வெளியேறுவது. மூன்றாவதாக, தலைவன்
தழுவியவுடன் விளிம்பு மையமாகிவிடுகிறது. மையம்
விளிம்பாகிவிடுகிறது. பணியாளன் திராட்சை இரசத்தின் ஊற்றை
அறிகிறான். ஆனால், வீட்டுத் தலைவனுக்கு அது மறைபொருளாக
இருக்கிறது.
ஆக, தலைவனின் தழுவல் தண்ணீரைத் திராட்சை இரசமாக
மாற்றியதோடல்லாமல், கடவுளின் ஆட்சி வெளிப்படவும், இதன்
வழியாகச் சீடர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவும் காரணமாக
அமைகிறது.
இவ்வாறாக, தலைவனின் தழுவல் முதல் வாசகத்தில் எருசலேமிற்கு
புதிய பெயரையும் பாதுகாப்பையும், இரண்டாம் வாசகத்தில்
நம்பிக்கையாளர்களுக்கு அருள்கொடைகளையும், நற்செய்தி
வாசகத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாகவும் மாற்றுகிறது.
என் இன்றைய இயல்பும், இருப்பும் எப்படிப்பட்டதாக
இருந்தாலும், என் தலைவன் என்னைத் தழுவும்போது என்னில்
மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் பொங்கி எழும். என்
தலைவன் என்னைத் தழுவி மாற்றம் பெற்ற நான், என் தழுவலால்
மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும்
தரும்போது நானும் அவரைப் போன்ற தலைவனே!
"எத்தனை காலம்தான் அடிமையாய் இருப்பது? நாட்டை அடக்கி ஆண்டுகொண்டிருப்பவர்களின்
கொட்டத்தை முறியடித்து, நாட்டு மக்களைச் சுதந்திரக்
காற்றைச் சுவாசிக்கச் செய்யவேண்டும். அதற்கு நான் ஏதாவது
செய்யவேண்டும்" என்று நினைத்த அந்த இளைஞன், நாட்டிலிருந்த
தன்னைப் போன்ற துடிப்புமிக்க இளைஞர்களையெல்லாம் ஒருங்கிணைந்தான்.
பின்னர் அவன் ஒரு குறிப்பிட்ட நாளில் தன்னோடு இருந்த இளைஞர்
படையைத் திரட்டிக்கொண்டு, தங்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்த
நாட்டோடு போர்புரிய புறப்பட்டுச் சென்றான்.
போரில் அவன் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. அவனுடைய படையிலிருந்த
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மடிந்தார்கள்; பன்னிரண்டாயிரம் வீரர்கள்
மட்டுமே எஞ்சி இருந்தார்கள். இதனால் அந்த இளைஞன், "இவ்வளவு
குறைவாக வீர்ரர்களை வைத்துக்கொண்டு, வலிமை வாய்ந்த எதிரி
நாட்டுப் படையோடு போரிட்டு வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது"
என்று சோர்ந்து போனான்.
அப்பொழுது அவனிடம் வந்த படைவீரன் ஒருவன், "தலைவரே! போரில்
மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுவிட்டது என நினைத்து நீங்கள்
சோர்ந்துபோயிருக்கிறீர்கள்; ஆனால், நம்முடைய படையில் உள்ள
வீரன் ஒருவன் அங்கே வீரர்களை ஒன்றுதிரட்டி அவர்களிடம்,
"போரில் நம்மால் வெற்றி பெற முடியும்" நம்பிக்கையூட்டிக்
கொண்டிருக்கின்றான்" என்றான். இச்செய்தி அந்த இளைஞனுக்கு
நம்பிக்கையூட்டியது. அதனால் அவன் வீரர்களை ஒன்று திரட்டி,
எதிரிநாட்டுப் படையோடு போரிட்டு, நாட்டிற்கு வெற்றியைத்
தேடித் தந்து, நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்குமாறு செய்தான்.
இப்படி அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைச் சுதந்தரக் காற்றைச்
சுவாசிக்குமாறு செய்த அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல, அமெரிக்காவின்
முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனே. அவன் எதிர்த்துப் போரிட்ட
நாடு இங்கிலாந்து.
ஆம், மிகப்பெரிய தோல்விக்குப் பின், வெற்றி கண்டு, அமெரிக்கா
சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது! பொதுக் காலத்தின் இரண்டாம்
ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, "உன்
வெற்றி வைகறை ஒளியென இருக்கும்" என்ற சிந்தனையைத் தருகின்றது.
கடவுள் அளிக்கும் இந்த வெற்றிக்கு ஒவ்வொருவரும் என்ன செய்ய
வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
வீழ்ச்சிக்குப் பின் எழுச்சி:
"வாழ்க்கையில் எல்லாமே முடிந்துவிட்டது; இனி மீண்டு எழுவதற்கு
வழியே இல்லை" என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கையில், ஒருவர்
ஆதரவாய் நம் தோள்மேல் கைபோட்டு, நம்பிக்கை நிறைந்த
வார்த்தைகளை நம்மிடம் சொல்லி, நம்மை மீண்டு எழச் செய்தார்
எனில், அந்த மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல
முடியாது.
பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டினர் அன்னிய
மண்ணில் அடிமைகளாய் வாழ்ந்தபோது மேற்சொன்னது போன்று
"எல்லாமே முடிந்துவிட்டது; இனி மீண்டு எழுவதற்கு வழியே இல்லை"
என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆண்டவராகிய
கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, "சீயோனின் வெற்றி வைகறை
ஒளியென இருக்கும்" என்கிறார். வைகைறை ஒளியானது புதிதானது;
புதுமையானது; புத்துணர்வு ஊட்டக்கூடியது. இத்தகைய வெற்றியை
ஆண்டவர் யூதா நாட்டினருக்கு அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார்.
தொடர்ந்து அவர் அவர்களிடம் கூறுகின்றபோது, உன் வெற்றியைப்
பிற இனத்தார் காண்பர்; புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்;
ஆண்டவர் உன்னை விரும்புகிறார் என்கிறார். கடவுளுக்குக்
கீழ்ப்படியாததால் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த யூதா
நாட்டினர், அவரது பேரன்பினாலும் பேரிரக்கத்தினாலும்
வெற்றியைக் காண்பர் என்பது எத்துணை ஆறுதலான வார்த்தைகள்.
இவ்வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக அல்லாமல், இயேசுவால்
செயல்வடிவம் பெற்றது. அதற்குச் சான்றுதான் இன்றைய நற்செய்தி
வாசகம்.
துன்பத்திற்குப் பின் இன்பம்:
கடவுள் அளிக்கின்ற வெற்றி அல்லது விடுதலை என்பது எதிரிகளிடமிருந்து
கிடைக்கும் விடுதலை மட்டுமல்ல, துன்பத்திலிருந்தும்
தோல்வியிலிருந்தும் பிரச்சனையிலிருந்தும் கிடைக்கும் விடுதலை
கூடத்தான்.
யூத இரபிகள் சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: "திராட்சை இரசம்
இல்லையெனில், மகிழ்ச்சிக்கு வழியில்லை." ஒரு வாரம் நடைபெறும்
யூதர்களின் திருமணக் கொண்டாட்டத்தில் திராட்சை இரசம்
முக்கிய இடம் வகிக்கும். அது தீர்ந்துவிட்டால் மணமகன்
வீட்டாருக்கு பெரிய அவமானமாகக் கருதப்படும். இயேசு தன்
தாய் மற்றும் சீடர்களோடு சென்றிருந்த கானா திருமண
விருந்தில் திராட்சை இரசம் தீர்ந்துபோக, இயேசுவின் தாய்
அவரிடம் வந்து, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்கிறார்.
இதற்கு இயேசு அளித்த பதில், "எனது நேரம் இன்னும் வரவில்லையே"
என்பதாகும்.
"எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்று இயேசு சொன்னது,
அவரது அவரது பாடுகளைக் குறிக்கின்றது (யோவா 7:30, 8:20).
தான் பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து,
மாட்சியுடன் மீண்டும் வரும்பொழுது திராட்சம் இரசம்
மிகுதியாகக் கிடைக்கும் என்கிற பொருளில் இயேசு, "எனது நேரம்
இன்னும் வரவில்லையே" என்கிறார். ஏனெனில், மெசியாவின் வருகையின்போது
திராட்சை இரசம் மிகுதியாகக் கிடைக்கும் (எரே 31:12; ஓசே
14:7) என்பது கடவுள் தந்த வாக்குறுதி.
இது ஒரு பக்கம் இருக்கைகில், இன்னொரு பக்கம் இயேசு, மரியாவின்
பரிந்துரையின் பெயரில், தண்ணீரைத் திராட்சை இரசமாக்கி,
மணமகன் வீட்டாரின் அவலத்தைப் போக்கி, அவர்களது துன்பத்தை
இன்பமாக மாற்றுகின்றார். அவலத்தை ஆனந்தமாக மாற்றுகின்றார்.
பெற்ற கொடைகள் பொது நன்மைக்கானாவை
மனித வாழ்க்கையில் துன்பங்களும் தோல்விகளும் இருந்தாலும்,
அவற்றையெல்லாம் நாம் ஆண்டவரிடம் கொண்டு சென்றால், ஆண்டவர்
அவற்றை இன்பமாக மாற்றுவார் என்பதை நற்செய்தியின் வழியாக
நாம் அறிந்துகொண்டோம். கடவுள் நமது துன்பத்தை இன்பமாக மாற்றவேண்டும்
என்றால், அதற்கு நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும்.
அதுதான், தூய ஆவியார் கொடுத்திருக்கின்ற கொடைகளை நமக்காக
அல்ல, பொதுநன்மைக்காகப் பயன்படுத்து ஆகும். இது நாம் நமது
மனத்தில் பதிய வைக்கவேண்டிய முக்கியமான செய்தி.
சொல்வடிவில் உள்ள அருள்கொடைகள், செயல்வடிவில் உள்ள அருள்கொடைகள்
என இருவகையான அருள்கொடைகளைத் தூய ஆவியார் தந்திருக்கின்றார்.
இக்கொடைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் பொதுநன்மைக்காகவே பயன்படுத்த
வேண்டும் என்று பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒவ்வொருவருக்கும்
அழைப்பு விடுக்கின்றார். இந்த உலகத்தில் மனிதருக்கு வரும்
பலவிதமான துன்பங்களுக்குக் காரணம், அவனது தன்னலமாகவே இருக்கும்.
எனவே, நாம் தன்னலத்தோடு வாழ்வதை விடுத்து, தூய ஆவியாரின்
அருள்கொடைகளை, ஆண்டவரோடு ஒன்றித்துப் பொதுநன்மைக்காகப் பயன்படுத்திவிட்டால்,
ஆண்டவருடைய அருளால் நமது துன்பமெல்லாம் இன்பமாக மாறும்.
எனவே, நாம் நமக்கு வெற்றி அளிக்கின்ற ஆண்டவரோடு ஒன்றித்து
வாழ்ந்து, அவரது மாட்சி விளங்கச் செய்து, அவர் தரும் எல்லா
ஆசிகளையும் பெற்று மகிழ்வோம்.
சிந்தனைக்கு:
"கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்" (யூதி 11:6)
என்கிறது இறைவார்த்தை. எனவே, நமக்கு வெற்றி அளிக்கும்
ஆண்டவரிடம் தஞ்சம் அடைந்து, அவரது வார்த்தைகளின் நடப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
தூய ஆவியின் கொடைகள் பொது நன்மைக்காகவே!
அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர் வில்லியம்
ஆலன் ஒயிட். மிகுந்த தாராள உள்ளமும், இரக்க குணமும்
உடையவர். ஒருமுறை அவர் தனக்கென்று இருந்த 50 ஏக்கர்
நிலத்தையும் தன்னுடைய ஊர் மக்களுக்காக எழுதி வைத்தார். இதை
அறிந்த அவருடைய உறவுக்காரர் ஒருவர் அவரிடம், எதற்காக
இவ்வளவு நிலத்தையும் ஊர் மக்களுக்கு எழுதி வைக்கிறீர்கள்
என்று கேட்டார்.
அதற்கு அவர், நான் என்னிடம் இருப்பதை பிறருக்குக்
கொடுக்கிறபோது மூன்றாவது விதமான மகிழ்ச்சியை
அனுபவிக்கிறேன் என்றார். அது என்ன மூன்றாவது விதமான
மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் எனக்குத் தெளிவாக விளக்குங்கள்
என்று கேட்க, வில்லியம் ஆலன் ஒயிட் மறுமொழியாக, பணம்
மூன்றுவிதமான மகிழ்ச்சிகளைத் தருகிறது. முதலாவது பணத்தைச்
சேர்ப்பதில் மகிழ்ச்சி; இரண்டாவது கஷ்டப்பட்டு சேர்த்த
பணத்தை பாதுகாப்பதில் மகிழ்ச்சி; மூன்றாவது மற்ற
எல்லாவற்றையும்விட சிறந்தது, அது நம்மிடம் இருப்பவற்றை
பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி.
பலர் தாங்கள் பெற்ற செல்வத்தை; திறமைகளை; கடவுள் கொடுத்த
ஆசிர்வதங்களை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள்.
அதனால் அவர்கள் மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அடைவதில்லை.
ஆனால் நான், என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதால்
அதை அனுபவிக்கிறேன் என்றார்.
நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும்
மகிழ்ச்சி மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை
இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும்
நமக்கு இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும்
அழைப்பு நமக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள் பிறரது
நம்மைக்காகவே என்பதே. கடவுள் கொடுத்த திறமைகள், கொடைகள்,
வாய்ப்பு வசதிகள் யாவற்றையும் நமது சொந்த தேவைக்காகவே
பயன்படுத்தி வாழும் நமக்கு, இன்றைய வாசகங்கள் அவற்றைப்
பொதுநலத்திற்காக பயன்படுத்த அழைப்புத் தருகிறது.
கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், கடவுள் நம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையைக்
கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிலருக்கு ஞானம்
நிறைந்த சொல்வன்மை, அறிவுநிறைந்த சொல்வன்மை, நம்பிக்கை,
வல்ல செயல்கள் புரியும் ஆற்றல், பரவசப் பேச்சுப் பேசும்
ஆற்றல், இன்னும் ஒருசிலருக்கு அவற்றை விளக்கும் ஆற்றல்
இவையெல்லாம் கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் அதனை
பிறருக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும்
என்றதொரு அழைப்பினை விடுக்கிறார் (1 கொரி 12:7).
ஆனால் நடைமுறையில் கடவுள்/ தூய ஆவியார் கொடுத்த திறமைகளை,
கொடைகளை பொது நன்மைகாகப் பயன்படுத்தாமல் தன்னுடைய
சுயநலத்திற்காக, தன்னுடைய பெயர் விளங்கச் செய்வதற்குத்தான்
மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய
ஒன்றாக இருக்கிறது. வெறுமனே பணம், பொருள் என்று
மட்டுமல்லாமல் இறைவனின் பணி செய்ய கடவுள் கொடுத்திருக்கும்
ஆற்றலையும், திறமையையும்கூட இன்றைக்கு மக்கள் தங்களுடைய
சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட
வேண்டிய ஒன்று.
ஒருமுறை மராட்டிய மன்னர் சிவாஜி பகைவர்களிடமிருந்து
மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய கோட்டையைக்
கட்டிக்கொண்டிருந்தார். அந்த கோட்டையைக் கட்டும் பணியில்
ஏராளமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள். அரசர் அவர்கள்
எல்லாருக்கும் உணவு கொடுத்து, அவர்களை பராமாரித்துக்
கொண்டும் வந்தார். இது அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான
கர்வத்தை உண்டுபண்ணியது. நான்தான் எல்லாருக்கும் உணவு
கொடுக்கிறேன். நான் எவ்வளவு பெரிய மன்னர் என்ற கர்வம்
அவருடைய பேச்சிலே அடிக்கடி தெறித்தது.
இதைக் கண்ணுற்ற அவருடைய குரு மன்னருக்கு சரியான பாடம்
கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர்
மன்னரிடம், மன்னர் மன்னா! எனக்காக அருகே இருக்கக்கூடிய
பாறையை உடைத்து, அதை இங்கே கொண்டுவர முடியுமா? கேட்டார்.
அதற்கு மன்னரும் தன்னுடைய வேலையாட்களிடம் பாறையை
உடைத்துக்கொண்டு வரச்சொல்ல, அவர்களும் அதைக்
கொண்டுவந்தார்கள்.
அப்போது அந்த பாறைக்குள் இருந்து ஒரு தேரை (தவளை) வெளியே
ஓடியது. உடனே குரு மன்னரை பார்த்து, மன்னா! எல்லாருக்கும்
உணவிடுகிறீர்கள், இந்த பாறைக்குள் இருந்த தேரைக்கும்
நீங்கள்தானே உணவிடுகிறீர்கள் என்று சொன்னதும்,
மன்னருக்கு, குரு தன்னுடைய ஆணவத்தான் சுட்டிக்
காட்டுகிறார் என்பதை உரைத்தது. அதன்பிறகு ஆணவம் இல்லாது
செயல்படத் தொடங்கினார்.
கடவுள் கொடுத்திருக்கும் கொடைகள்/பொறுப்புகள் எல்லாம்
கடவுளின் பேர் விளங்கப் பயன்படுத்த வேண்டுமே ஒழியே அதனை
தன்னுடைய பெயர் விளங்கப் பயன்படுத்துவது தவறு என்பதை இந்த
நிகழ்வானது அழகாக எடுத்துரைக்கிறது.
ஆக, நம்மிடம் இருக்கும் எல்லாமும் நாம் பிறருக்காக
பயன்படுத்த, இறைவன் கொடுத்த கொடைகள் என்பதை நாம்
உணரவேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய அடிப்படையான
மனநிலை, நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள், இந்த உடலின்
உறுப்புகளுக்குத் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே என்பதை நாம்
உணரவேண்டும். உடலில் காலோ அல்லது தலையோ அடிபட்டிரும்போது
கை சும்மா இருக்காது. உடனே அது உதவி செய்ய விரைந்து வரும்.
அதுபோன்றுதான் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாக இருக்கும்
நாம் அனைவரும், நம்மோடு வாழக்கூடிய மக்களின் நிலை அறிந்து,
உதவி செய்ய விரைந்து வரவேண்டும்.
அந்த வகையில் கடவுள் கொடுத்த எல்லா ஆசிர்வாதங்களையும் பொது
நன்மைகாகப் பயன்படுத்திய ஒருவர் இருக்கிறார் என்று
சொன்னால் அது இயேசுவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
இன்று படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் அதற்கு ஒரு நல்ல
எடுத்துக்காட்டாக இருக்கிறது.
கானாவூர் திருமணத்திற்கு தன்னுடைய தாய் மற்றும்
சீடர்களுடன் செல்லும் இயேசுக் கிறிஸ்து, அங்கே திருமண
விருந்தின்போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை
தன்னுடைய தாயின் வழியாகக் கேள்விப்படுகிறார். தாயின்
வேண்டுதலின் பேரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி,
மணவீட்டாருக்கு நேரிட இருந்த அவப்பெயரைப் போக்குகிறார்.
இங்கே இயேசுக் கிறிஸ்து கடவுள் கொடுத்த அருளை தனது பெயர்
விளங்கப் பயன்படுத்தவில்லை. மாறாக மணவீட்டாரின் அவல நிலை
நீங்கவும், கடவுளின் பெயர் விளங்கவுமே அப்படிச்
செய்கிறார். நற்செய்தியின் இந்த பகுதியில் மட்டுமல்லாது,
எல்லா இடங்களிலும் இயேசு தன் அருளை பிறரது நலனுக்காகவே
பயன்படுத்துகிறார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது
எல்லா மக்களும் இறைவனின் பிள்ளைகள் என்ற எண்ணமே. நாமும்
இப்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடையை
பிறருக்காகப் பயன்படுத்தும்போது அதைவிடச் சிறந்த பேறு வேறு
எதுவும் இருக்க முடியாது.
சமுதாயச் சேவையை சட்டையாக மாற்றாதீர்கள்; உங்கள் உடம்பின்
சதையாக மாற்றுங்கள் என்பார் கவிஞர் வைரமுத்து. நாம்
சமுதாயத்திற்கு ஏதோ ஒருசில நன்மைகளை மட்டும் செய்து
திருப்திப்பட்டுக் கொள்ளாமல், எப்போதுமே இயேசுவைப் போன்று
இறைபணி/சமூகப்பணி செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல
விரும்பும் கருத்து.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், பனிப்பொழிவு
அதிகமாக இருக்கும் ஒரு காலைப் பொழுதில், காரில் பயணம்
செய்துகொண்டிருந்த ஒருவர் பனிப்பொழிவில் மாட்டிக்கொண்டார்.
எவ்வளவுதான் அவர் சத்தம் போட்டாலும் யாருமே அவருக்கு உதவ
முன்வரவில்லை. அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர், தன்னுடைய
கையில் இருந்த இரும்புக் கம்பியால் பனிக்கட்டிகளை எல்லாம்
உடைத்து, அகற்றிவிட்டு, அவரை அதிலிருந்து காப்பாற்றினார்.
தனக்கு தக்க நேரத்தில் வந்து உதவியதற்காக, அன்பளிப்பாக
ஏதாவது தரலாம் என்று நினைத்த அந்தக் கணவான், தன்னுடைய
பையிலிருந்து கொஞ்சம் டாலரை எடுத்து அதை அவரிடம்
நீட்டினார். ஆனால் அந்த இளைஞர் பணத்தை வாங்க
மறுத்துவிட்டுச் சொன்னார், நான் DO UNTO OTHERS என்று
மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றத்தின்
முக்கியமான நோக்கம் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று
உதவுவதுதான் என்று சொன்னதும், காரில் வந்திரந்த அந்த
கணவான் நன்றிப் பெருக்கோடு அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு,
அங்கிருந்து சென்றார்.
நாம் ஒவ்வொருவருமே தேவையில் இருப்பவருக்கு, அதுவும் யாராக
இருந்தாலும் உதவவேண்டும்; கடவுள் கொடுத்த கொடைகளை பிறர்
நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு
உணர்த்துகிறது.
இப்படியெல்லாம் ஒரு மனிதர் வாழ்கிறபோது கடவுள் எத்தகைய
ஆசிர்வாதத்தைத் என்று இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா
புத்தகம் 62) படிக்கின்றோம்.
அவர்களது வெற்றியையும், மேன்மையையும் புறவினத்தார்
காண்பார்கள்; புதிய பெயரால் அழைக்கப்படுவார்கள்; இறைவனின்
கையில் அழகிய மணிமுடி போன்றும், அரச மகுடம் போன்றும்
இருப்பார்கள் என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஆம்,
இறைப்பணி நல்ல உள்ளத்தோடு செய்யும்போது இறைவனும் நம்மை
ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை.
எனவே நாம், நமது ஆண்டவர் இயேசுவைப் போன்று கடவுள் நமக்குக்
கொடுத்திர்க்கும் திறமைகளை/ கொடைகளை இறைவனின் பெயர்
விளங்கவும், பொது நன்மைகாகவும் பயன்படுத்துவோம். அதன்
வழியாக இறைவனின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அவரது ஆசியை
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின்
அருளால் நடந்த அற்புதம் இது. நான் குறிப்பிடும் அந்த தம்பதியர்
பாளையங்கோட்டையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம் தம்பதிகள்
திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல்
இருந்தவர்கள். எத்தனையோ மருத்துவத் துறையை நாடியும் பலன்
கிடைக்கவில்லை. பெண்ணோ இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க
திருமறைக்கு திருமணத்தின்போது மனம் மாறியவர். குழந்தை இல்லாத
நிலையில் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்ததால்தான் இந்த அவல
நிலை என்று நினைத்து பரம்பரை கிறிஸ்துவனாக இருந்த கணவரை வற்புறுத்தி
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று
திருநீறு பூசி காணிக்கை செலுத்தியும் வந்தார்கள். ஆனால்
பலன் இல்லை. இந்த சூழ்நிலையில் மனம் உடைந்த இந்தத் தம்பதியரைச்
சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு ஆறுதல்
கூறி, நீங்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம்
சென்று செபித்து வாருங்கள். அன்னை மரியா, கானாவூர் திருமணத்தின்
குறையை நீக்கியது போல, உங்கள் குறை நீங்க தன் மகன் இயேசுவிடம்
பரிந்து பேசுவார்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அங்கே,
தினமும் ஈர உடையோடு தவம் செய்தும், அங்கே வைக்கப்பட்டுள்ள
குணமானவர்களின் காணிக்கைப் பொருட்களைப் பார்வையிட்டும்,
செபித்தும் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்கள். என்ன ஆச்சரியம்!
குழந்தைப் பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால்
தெரிவிக்கப்பட்டும் அந்த இரண்டாவது மாதத்திலே வேளாங்கண்ணியிலே
கருவுற்று வீடு திரும்பினார்கள் அந்த சகோதரி. அவரும் ஒரு
மருத்துவர்! ஆம்! நான் கண்டதையும், கேட்டதையும் உங்களுக்கு
அறிவிக்கிறேன். ஓர் ஆண் மகனைப் பெற்றார்கள். அவருக்கு சார்லஸ்
பிரேம்குமார் என்று பெயரிட்டார்கள். அவரும் இப்போது ஒரு
டாக்டர்.
ஆம்! இயேசு கானாவூரில் மட்டுமல்ல, இன்றும் அவரது தாயின்
சொல்லிற்கிணங்க அற்புதங்கள் செய்து வருகிறார் என்பதற்கு இது
ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்று நமக்கு எத்தனையோ வரங்கள் தேவைப்படுகின்றன. ஆண்டவரின்
கையில் நாம் அழகிய மணி முடியாகவும், அரச மகுடமாகவும் விளங்க
வேண்டும். மணமகனைப்போல, மணப்பெண்ணைப் போல மங்களம் நிறைந்தவளாக
(எசாயா 62:1-5) நாம் திகழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த
விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அழகான வழி, அன்னை
மரியாவின் பரிந்து பேசுதலுக்காக நாம் நம்பிக்கையோடு அவளை
நோக்கி மன்றாடுவதாகும்.
அம்மா! அன்னை கன்னித் தாயே! இதோ உமது பிள்ளைகளாகிய நாங்கள்
உம்மிடம் ஓடி வந்தோம். எங்கள் குறை தீரவும், உமது திருமகனின்
புகழை நாங்கள் பாடவும், பரிந்து பேசம்மா என்று செபிப்போம்.
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம்
ஞாயிறு
எசாயா 62:1-5
1கொரி. 12:4-11
யோவா. 2:1-12
சில ஆண்டுகளுக்கு முன்னால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின்
அருளால் நடந்த அற்புதம் இது. நான் குறிப்பிடும் அந்த தம்பதியர்
பாளையங்கோட்டையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம் தம்பதிகள்
திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல்
இருந்தவர்கள். எத்தனையோ மருத்துவத் துறையை நாடியும் பலன்
கிடைக்கவில்லை. பெண்ணோ இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க
திருமறைக்கு திருமணத்தின்போது மனம் மாறியவர். குழந்தை இல்லாத
நிலையில் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்ததால்தான் இந்த அவல
நிலை என்று நினைத்து பரம்பரை கிறிஸ்துவனாக இருந்த கணவரை வற்புறுத்தி
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று
திருநீறு பூசி காணிக்கை செலுத்தியும் வந்தார்கள். ஆனால்
பலன் இல்லை. இந்த சூழ்நிலையில் மனம் உடைந்த இந்தத் தம்பதியரைச்
சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு ஆறுதல்
கூறி, நீங்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம்
சென்று செபித்து வாருங்கள். அன்னை மரியா, கானாவூர் திருமணத்தின்
குறையை நீக்கியது போல, உங்கள் குறை நீங்க தன் மகன் இயேசுவிடம்
பரிந்து பேசுவார்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அங்கே,
தினமும் ஈர உடையோடு தவம் செய்தும், அங்கே வைக்கப்பட்டுள்ள
குணமானவர்களின் காணிக்கைப் பொருட்களைப் பார்வையிட்டும்,
செபித்தும் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்கள். என்ன ஆச்சரியம்!
குழந்தைப் பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால்
தெரிவிக்கப்பட்டும் அந்த இரண்டாவது மாதத்திலே வேளாங்கண்ணியிலே
கருவுற்று வீடு திரும்பினார்கள் அந்த சகோதரி. அவரும் ஒரு
மருத்துவர்! ஆம்! நான் கண்டதையும், கேட்டதையும் உங்களுக்கு
அறிவிக்கிறேன். ஓர் ஆண் மகனைப் பெற்றார்கள். அவருக்கு சார்லஸ்
பிரேம்குமார் என்று பெயரிட்டார்கள். அவரும் இப்போது ஒரு
டாக்டர்.
ஆம்! இயேசு கானாவூரில் மட்டுமல்ல, இன்றும் அவரது தாயின்
சொல்லிற்கிணங்க அற்புதங்கள் செய்து வருகிறார் என்பதற்கு இது
ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்று நமக்கு எத்தனையோ வரங்கள் தேவைப்படுகின்றன. ஆண்டவரின்
கையில் நாம் அழகிய மணி முடியாகவும், அரச மகுடமாகவும் விளங்க
வேண்டும். மணமகனைப்போல, மணப்பெண்ணைப் போல மங்களம் நிறைந்தவளாக
(எசாயா 62:1-5) நாம் திகழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த
விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அழகான வழி, அன்னை
மரியாவின் பரிந்து பேசுதலுக்காக நாம் நம்பிக்கையோடு அவளை
நோக்கி மன்றாடுவதாகும்.
அம்மா! அன்னை கன்னித் தாயே! இதோ உமது பிள்ளைகளாகிய நாங்கள்
உம்மிடம் ஓடி வந்தோம். எங்கள் குறை தீரவும், உமது திருமகனின்
புகழை நாங்கள் பாடவும், பரிந்து பேசம்மா என்று செபிப்போம்.
இயேசு ஒரு போதும் நமது குறையைப் பார்க்கமாட்டார்; நமது
நிறையைத்தான் பார்ப்பார். இன்றைய நற்செய்தியிலே வரும் கதாப்பாத்திரங்களைப்
பாருங்கள்.
மாதா - நிறைவுள்ளவர்.
சீடர்கள் - நிறைவுள்ளவர்கள்.
பணியாளர்கள் - நிறைவுள்ளவர்கள்.
பணியாளர்களின் தலைவனுக்குத் தெரியுமே திராட்சை இரசம் எங்கிருந்து
வந்ததென்று! தெரிந்திருந்தும் அவன் நன்றி சொல்லவில்லை! அவன்
நன்றி சொல்ல மறந்தவன்.
கணவனும் மனைவியும் - அவர்களும் நன்றி சொல்லவில்லை!
விருந்தினர்கள் - அவர்களும் நன்றி சொல்லவில்லை.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்பார் திருவள்ளுவர்.
திருமண வீட்டில் 3 பேர் நிறைவுள்ளவர்கள் ! 3 பேர்
குறையுள்ளவர்கள்! ஆனால், இயேசு குறையைப் பார்க்காமல்,
நிறையைப் பார்த்து புதுமை செய்தார்.
இயேசு எப்பொழுதுமே நிறைவைப் பார்ப்பவர், நேர்மறையாகச்
சிந்திப்பவர்.
மத் 9:9-13 முடிய உள்ள பகுதி :
எல்லாரும் புனித மத்தேயுவிடம் ஒரு பாவியைப் பார்த்தனர்.
ஆனால் இயேசுவோ அவருக்குள் ஒரு புனிதரை, ஒரு
நற்செய்தியாளரைப் பார்த்தார்.
யோவா 4:1-42 முடிய உள்ள பகுதி :
எல்லாரும் அந்த சமாரியப் பெண்ணுக்குள் ஒரு பாவியைப்
பார்த்தனர்! ஆனால் இயேசுவோ அவளுக்குள் ஒரு புனிதையை, இறைத்
தூதரைப் பார்த்தார்.
எல்லாரும் சவுலிடம் ஒரு சமய விரோதியைக் கண்டார்கள். ஆனால்
இயேசுவோ, அவரிடம் ஒரு திருத்தூதரை, மறைச்சாட்சியைக்
கண்டார்.
நாம்தான் அடிக்கடி நமது குறைகளை நினைத்துக் கூனிக்
குறுகிப் போகின்றோம். ஆனால் இயேசுவோ, நம்மிடம் உள்ள நல்ல
குணங்களைப் பார்த்து நம்மை ஆசிர்வதிக்கக்
காத்துக்கொண்டிருக்கின்றார்.
இந்த உண்மை , மன்னிப்பே உருவான , அன்பே உருவான, கருணையே
உருவான, பரிவே உருவான, பாசமே உருவான இயேசுவின் பக்கம்
நம்மை உந்தித் தள்ளட்டும்.
இயேசு நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் (முதல் வாசகம்) ;
தள்ளிவிடமாட்டார். அவரது மன்னிப்பில் தூய்மை பெற்று, அவரது
வரங்களால் நிரப்பப்பட்டு (இரண்டாம் வாசகம்) புத்தாண்டில்
நாம் புது வாழ்வைத் தொடங்குவோம்.
மேலும் அறிவோம் :
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104).
பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச்
சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக்
கருதிப் போற்றுவர்.
இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன்
மற்றவனிடம், "வீட்டிலே யார் பெரியவங்க? அப்பாவா அல்லது அம்மாவா?"
என்று கேட்டான். அதற்கு மற்றவன், "நிச்சயமாக அம்மா தான்
பெரியவங்க. ஏனென்றால், எங்கள் அப்பா தனது தொழிற்சாலையிலே
100 பேரை அடக்கி ஆள்கிறார். ஆனால், வீட்டிலே அம்மா எங்க அப்பாவையே
அடக்கி ஆளுகிறாங்க" என்றான். இச்சிறுவன் கூறியதைப் போலவே
புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார்: "கடவுளை
விடச் சக்தி வாய்ந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் தான்
செபிக்கத் தெரிந்த மனிதர். கடவுள் உலகையே ஆளுகிறார், ஆனால்
செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார். கடவுள்
'முடியாது' என்று சொன்ன பிறகும், செபிக்கத் தெரிந்தவர் கடவுளை
'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்", புனித வியான்னியின்
கூற்று முழுக்க முழுக்க உண்மை என்பது கானாவூர் திருமணத்தில்
புலனாகிறது. மரியாவின் வேண்டுகோளுக்குக் கிறிஸ்து முதலில்
முடியாது: எனது நேரம் இன்னும் வரவில்லை ' என்று
சொல்லிவிட்டார். ஆனால், மரியா மனந்தளராது. பணியாளர்களிடம்
'இயேசு சொல்வதைச் செய்யுங்கள்' என்று கூறியபின், இயேசுவால்
தம் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியவில்லை. தமது முதற்
புதுமையைச் செய்கிறார். 'முடியாது' என்ற சொன்ன இயேசுவை
'முடியும்' என்று சொல்ல வைக்கிறார் மரியா.
நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்
(லூக் 18:1). நமக்குத் தேவையானது கிடைக்கும்வரை நாம்
கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; தட்டிக் கொண்டே இருக்க
வேண்டும்: தேடிக்கொண்டே இருக்க வேண்டும் (லூக் 11:9-10).
புனித மோனிக்கா தமது மகன் அகுஸ்தினார் மனமாற்றத்திற்காக 16
ஆண்டுகள் தொடர்ந்து கண்ணீர் சிந்திச் செபித்தார். அவருடைய
வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு திரு மணவிருந்தில் நான்கு பந்திகளிலும்
தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து பந்தி
பரிமாறியவர், "என்னப்பா நாலு பந்தியிலும் தொடர்ந்து
சாப்பிடுற; எனக்கு ஞாபக சக்தி இல்லை என்றா நினைக்கிறாய்?"
என்று கேட்டார். அதற்கு அந்தச் சாப்பாட்டு ராமன். "என்ன
செய்கிறது? உங்களுக்கோ ஞாபக சக்தி அதிகம்; எனக்கோ ஜீரண சக்தி
அதிகம்" என்றார்! பலருக்கு ஜீரண சக்தி அதிகம்.
சாப்பாட்டிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். அடுத்தவர்களைப்
பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், மரியாவுக்கு ஞாபக சக்தி
அதிகம். பிறருடைய தேவைகளைக் குறிப்பறிந்து உணர்ந்து அவற்றைப்
போக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார். "பெண்கள் வல்லினமா?
மெல்லினமா? இடையினமா?" என்று ஓர் அறிஞரைக் கேட்டதற்கு அவர்,
"பெண்கள் செலவினம்" என்றார்.
ஆனால், உண்மையில் பெண்கள்
"மரியினம்": மரியாவின் வாரிசுகள். மரியாவைப் போன்று
மென்மையான தாய்மை உணர்வுடன், "உண்டி கொடுத்தார், உயிர்
கொடுத்தார்" என்ற கொள்கைக்கேற்ப, பசித்தவர்களுக்கு உணவளித்து
உயிர் கொடுப்பவர்கள் பெண்கள். பெண்ணாகப் பிறப்பது ஒரு சாபக்கேடு
அல்ல, மாறாக அது ஒரு மாபெரும் பேறு; ஏனெனில் தாமரை போன்ற
அவர்களது கைகளால் தான் உலகில் அறங்கள் வளரும்.
இளவரசன் உதய குமாரனை மயக்கிய மணிமேகலை அழகி. ஆனால் தன் தலையை
மொட்டை அடித்து, காவி உடை அணிந்து, அமுத சுரபியைக் கொண்டு
மக்களின் பசி போக்கிய மணிமேகலை பேரழகி, எப்பொழுதெல்லாம்
பெண்கள் பிறரை வாழ வைக்கின்றார்களோ, அப்போதெல்லாம் அவர்கள்
பேரழகிகளாகத் திகழ்கின்றனர். பெண்களிடம் தாழ்வு மனப்பான்மை
இருக்கக் கூடாது. ஆண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தங்கள்
தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இன்றைய இரண்டாம் வாசகத்தில்
திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, கடவுள் எல்லாருக்கும் ஒரே
விதமான கொடைகளைக் கொடுப்பதில்லை. மாறாக, வெவ்வேறு வரங்களைப்
பொது நன்மைக்காகப் பகிர்ந்தளிக்கிறார் (1 கொரி 12:4- 11).
பெண்ணிடத்தில் தாய்மைப் பண்பு மற்ற எல்லாப் பண்புகளைவிட
விஞ்சி நிற்க வேண்டும். கானாவூர் திருமணத்தில் இயேசு செய்த
புதுமையின் இறுதிப் பயன் என்ன என்பதை யோவான் அழுத்தமாகக்
கூறியுள்ளார். "இதுவே இயேசு செய்த முதல் அரும்அடையாளம், இது
கலிலேயாவிலுள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம்
மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை
கொண்டனர்" (யோவா 2:11).
ஒருதாய் தம் மகளுக்குப் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்து,
கடைசியில் மகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்து
பெருமிதம் அடைகிறார். அவ்வாறே மரியாவும் தம் மகன்
கிறிஸ்துவினுடைய மீட்பின் நற்செய்தியைக் கானாவூரில் அரங்கேற்றம்
செய்து எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார், கிறிஸ்துவின்
மாட்சிமை வெளிப்படவும் அவருடைய சீடர்கள் அவரிடம் விசுவாசம்
கொள்ளவும் மரியா மூலகாரணமாக இருக்கிறார். எனவே, மரியா
கிறிஸ்துவின் மகிமையை மறைக்கிறவர் அல்ல, மாறாக அதை வெளிச்சத்துக்குக்
கொண்டு வருபவர். மரியாவைப் பின்பற்றி, மரியாவின் திருத்தலங்கள்
மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் காசு சம்பாதிக்காமல்,
கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும் புனிதத் தலங்களாகத்
திகழவேண்டும்,
ஒருவர் போலிப் போதகரா? அல்லது உண்மையான போதகரா? என்பதை அறிந்து
கொள்ள உதவும் அமிலப் பரிசோதனை என்ன? போலிப்போதகர்கள் தங்களை
மையமாக வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடுவார்கள். ஆனால்,
உண்மையான போதகர்கள் மரியாவைப் போன்று கடவுளை மையப்படுத்தி
அவரை மகிமைப்படுத்துவார்கள். திருமுழுக்கு யோவானைப் போன்று
உண்மையான போதகர்கள், "அவரது (கிறிஸ்துவின்) செல்வாக்குப்
பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" (யோவா
3:30) என்னும் மனநிலையைக் கொண்டிருப்பர். மரியாவின் இறுதிக்
கட்டளை; "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"
(யோவா 2:5).
மரியா கிறிஸ்துவின் தாய் என்பதைவிட கிறிஸ்துவின் தனி முதற்
சீடர் ஆவார். கிறிஸ்துவின் சீடராகத் திகழ வேண்டுமென்றால்,
அவரின் வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். "என்
வார்த்தையை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், என் சீடராய்
இருப்பீர்கள்" (யோவா 8:31). நாம் கிறிஸ்துவின் விசிறிகளா?
அல்லது அவருடைய சீடர்களா? கடவுள் இஸ்ரயேல் மக்களோடு திருமண
உடன்படிக்கை செய்து கொண்டார் (முதல் வாசகம், எசா 62:1-5).
கிறிஸ்து புதிய உடன் படிக்கையின் மணமகன், அவர் கொண்டு வந்த
இறையாட்சி ஒரு திருமண விருந்தாகும். அவர் தமது முதல்
புதுமையை ஒரு திருமணத்தில் செய்தது மிகப் பொருத்தமானது.
அவர் கொடுத்த முதல் தரமான இரசம் நற்கருணை என்னும் அன்பு
விருந்துக்கு அடையாளம், அதில் பங்கு பெறும் நாம்
பேறுபெற்றோர். சட்டமென்னும் பழைய சித்தையில் அன்பு என்னும்
புதிய இரசத்தை ஊற்றாது. புதிய சித்தையில் புதிய இரசத்தை
மாற்றுவோம். இனி நாம் சட்டத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாக
அன்பின் அடிமைகள். அன்பே அனைத்திலும் சிறந்த நெறி (1 கொரி
12:31)
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
மாபெரும் கவிதைப் போட்டி. தலைப்பு: "கானாவூர் அருட்சாதனங்கள்
".
குறிப்பிட்ட ஒரு நாளில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இளைஞர்,
பெரியோர் என கவித்திறன் கொண்ட பலர் பங்கேற்றனர். கற்பனை
வளம் சேர்த்து எல்லோரும் காவியம் எழுதினர். ஒருவர் மட்டும்
தன் கைகளைத் தலைக்கு முட்டுக்கொடுத்தவராய் ஒரு வார்த்தை
கூட எழுதத் தொடங்காமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
"நேரம் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன'' என்ற
அறிவிப்பைக் கேட்டதும் அப்பொழுதுதான் விழித்தவர் போல
நான்கு வார்த்தைகளைக் கிறுக்கிக் கொடுத்துவிட்டு
வெளியேறினார். இறுதியாகப் பரிசு யாருக்கு? அந்த நான்கு
வார்த்தைகளைக் கிறுக்கிக் கொடுத்தவருக்குத்தான்! பரிசு
வெற்றவர் ஆங்கிலக் கவிஞர் பைரன். பரிசுக்குரிய கவிதை என்ன?
"நாதன் நோக்கினான். நாணிச் சிவந்தாள் நங்கை" என்பதுதான்.
ஆண்டவர் இயேசுவைக் காதலனாகவும், ஆறு கல் தொட்டி நீரைக் காதலியாகவும்
உருவகித்து காதலனைக் கண்ட காதலி முகம் சிவப்பது போல, இயேசு
நோக்க, நிறமற்ற தண்ணீர் செந்நிறத் திராட்சை மதுவானதாம்
தலைவன் நோக்கத் தண்ணீர் மட்டுமா சிவந்தது? திருமணமேயன்றோ
சிவந்து நின்றது, சிறப்புப் பெற்றது!
இன்றைய நற்செய்தியில் "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.
இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர்"
(யோ. 2:1,2) என்ற அந்த வரிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்
.... திருமணமே சிறுமை அடைந்திருக்காதா?
இயேசுவும் மரியாவும் அழைக்கப் பெற்ற கிறிஸ்தவனின் வாழ்வு
அடைவது சிறப்பு. இயேசுவும் மரியாவும் அழைக்கப்பெறாத கிறிஸ்தவனின்
வாழ்வு அடைவது சிறுமை.
மனிதனின் தனி வாழ்க்கை மட்டுமல்ல மணவாழ்க்கையும் அப்படியே!
திருமண நாளில் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும்
இயேசுவையும் மரியாவையும் அழைத்தால் ஒருவருடைய வாழ்வு
முன்பு போல் ஒரு போதும் இருக்காது. முற்றிலும் மேன்மை கண்டிருக்கும்.
உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையும் கனிந்த அக்கறையோடும்
ஈடுபாட்டோடும் அல்லவா மரியா செயல்படுகிறாள்! நண்பர்களாக அல்ல
கடன்காரர்களாக அன்றோ நம்மைக் காட்டிக் கொடுக்கின்றன இன்றையத்
திருமணங்கள். மொய் எழுதிக் கொடுக்கல் வாங்கல் போல அமைகிறதேயொழிய
உறவை, கனிவை, எங்கே வெளிப்படுத்துகின்றன? பந்திக்கு முந்து
படைக்குப் பிந்து என்று சொன்னவனை கட்டி வைத்து உதைக்க
வேண்டும். வந்தோம். வாழ்த்தினோம். உண்டோம். ஓடினோம் என்று
தங்களை மட்டுமே நினைத்துச் செயல்படும் மக்கள் மத்தியில் மரியா
வித்தியாசமாக நேசக்கரம் நீட்டி எப்படித் துன்பத்தின் சூழலை
மாற்றுகிறாள்!
"அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாக மாட்டாய். வெட்கி
நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்பட மாட்டாய்" (எசா. 54: 4)
என்ற எசாயாவின் இறைவாக்கு நிறைவேற, கானாவூர் திருமணத்தில்
பற்றாக்குறை என்ற இக்கட்டில் தன் மாட்சிமையை மட்டுமல்ல தனது
மன உருக்கத்தை வெளிப்படுத்துகிறார் இயேசு!
நெஞ்சில் மனதுருக்கம் நீரைத் தேனாக்கும், திராட்சை மதுவாக்கும்!
தங்கள் தூரத்து உறவுப் பெண்ணான கமலாவைக் கண்ணன் அழைத்து வருவதைப்
பார்த்ததும் அவன் அம்மா
திடுக்கிட்டாள்
"கமலா பாவம்'மா. அவளுக்கு ஆதரவாய் இருந்த அவள் அம்மாவும்
திடீர்னு பஸ் விபத்தில் இறந்துட்டா. இனி அவளுக்கு யார் இருக்கா?
அதான் நானே அவளைக் கல்யாணம் செய்துக்கிறதா முடிவு பண்ணிட்டேன்".
கமலா உள்ளே போனதும் அம்மா வெடித்தாள். "ஏன்டா வரதட்சனைக்கு
வழியில்லாத ஏழைன்னுதானே முந்தியே அவளை ஒதுக்கினே! இப்ப அவ
அம்மா செத்ததும் இரக்கம் வந்திருச்சா?"
அவன் கிசுகிசுத்தான்: "ஐயோ அம்மா! உனக்கு விவரம் பத்தாது.
பஸ் விபத்துலே அவ அம்மா செத்ததுக்கு எப்படியும் ஒரு லட்ச
ரூபாய் இழப்பீடு கிடைக்கும்னு வக்கீல் சொல்லியிருக்கார்.
ஒரு லட்ச ரூபாய்னா சும்மாவா?". அவன் அம்மா திகைப்பில்
வாயைப் பிளந்தாள்.
உதவிக்குக் கூட உள்நோக்கம் வைக்கிற காலம் இது. உதவி என்பது
இரக்கம் என்ற உணர்வின் உந்துதலால் ஏற்படும் ஒரு செயல். ஆள்
அல்ல, உறவல்ல அடிப்படை, அவசியம்' என்பதே அடிப்படை.
"எல்லோருக்கும் மனசுல ஒரு காது, ஒரு கண் இருக்கு. திறந்து
வைச்சுக்கிட்டா, அடுத்தவுங்க பிரச்சனை புரியும்.
மூடிக்கிட்டா தனது தவறுகூட தெரியாமப் போயிடும்" என்கிறார்
அறிஞர் ஒருவர்.
"கண்ணிருந்தும் குருடர்கள். காதிருந்தும் செவிடர்கள்" இயேசுவின்
இந்தச் சிந்தனைக்குப் பொருள் என்ன? உடலில் கண் உண்டு, காது
உண்டு. இது போதாது. மனதில் கண் வேண்டும், காது வேண்டும் என்பதுதானே!
நம் உள்ளிருக்கும் மனக் கண்ணையும் காதையும் திறந்து வைத்து
பிறர் துன்பங்களைச் சொல்லாமலே கூர்ந்து கவனித்து உதவி செய்வது
என்பது உன்னதமான மனிதத்தன்மை. மரியாவின் மனம் அது!
அன்னை தெரசா குறிப்பிடுவது போல எதையும் கண்டுகொள்ளாமை என்பதுதான்
இன்றைய உலகின் மிகப் பெரிய பாவமாகும். எல்லாருக்கும் கண்களை
ஒரே மாதிரியாகத்தான் படைத்திருக்கிறார் கடவுள். ஆனால்
பார்வையோ எப்படியெல்லாம் வேறுபடுகிறது! பல்லக்கைப்
பார்க்கும்போது அதில் பயணிக்க மாட்டோமா என்று ஒருவன் ஏங்குகிறான்.
இன்னொருவனோ அந்தப் பல்லக்கைச் சுமப்பவர்களின் தோள் வலியை
நினைத்து வருந்துகிறான். எல்லோருக்கும் அன்பும் இரக்கமும்
கண்களில் வந்துவிடுவதில்லை.
தனது முதல் புதுமை வழியாக இயேசு தம் மாட்சியை வெளிப்படுத்தி
தன்னில் தன் சீடர் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
இன்றைய நற்செய்தியில் தன் இறைமாட்சியை மட்டுமல்ல, மீட்புத்
திட்டத்தில் அன்னை மரியா ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும்
என்பதையும் இயேசு உணர்த்தியிருக்கிறார். யோவான் தன் நற்செய்தியில்
மரியாவைப் பற்றி இரண்டு இடங்களில்தான் குறிப்பிடுகிறார்.
ஒன்று கானாவூர்த்திருமணம்
. மற்றொன்று கல்வாரிச் சிலுவையடி.
இரண்டிலும் மரியாவை "இயேசுவின் தாய்" என்றே
குறிப்பிடுகிறார். மரியாவுக்கு இடைநிலையாளராகச் செயல்படும்
முக்கிய பங்கு உண்டு என்பதை உணர்த்துவதற்காகவே அவ்வாறு
குறிப்பிடுகிறார்.
பங்கு ஒன்றில் நடைபெற்ற பாஸ்கா நாடகத்தில் இயேசுவைக்
காட்டிக் கொடுத்த யூதாஸ், "ஐயோ, பழிபாவமற்றவரைக் காட்டிக்
கொடுத்துப் பாவம் செய்தேனே" என்று தூக்கிலிட்டு வயிறு
வெடித்துச் சாகிறான் (மத். 27:3-4, தி.ப. 1:18-19). அதைப்
பார்த்துக் கொண்டிருந்த சிறுமி தன் தாயிடம் "அம்மா, யூதாஸ்
மாதாவிடம் போயிருக்கலாமே, கண்டிப்பாக மாதா
காப்பாற்றியிருப்பார்களே" என்று உரக்கச் சொன்னாள்.
கேட்டவர் அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி சொன்னது போல்
யூதாஸ் இறை அன்னையிடம் சென்றிருந்தால் நரக வேதனையை
அனுபவித்திருக்க மாட்டான். இப்படித் துன்புறுபவர்களைத்
தேற்றும் அன்னை அன்றோ மரியா!
அது சரி, எங்கள் வீட்டில் குடிபோதை எங்கள் குடும்பத்தைக்
கெடுக்கிறது. அங்கே இயேசு தண்ணீ ரை ரசமாக அல்ல, என் கணவர்
பருகும் (மது) ரசத்தை தண்ணீராக மாற்ற மாட்டாரா என்று
ஏங்குகிறீர்களா? மாற்றுவார். உங்கள் துக்கம் மகிழ்ச்சியாக
மாறும். தண்ணீ ரை திராட்சை ரசமாக மாற்றியவர் - பிறகு ஒரு
நாள், ஏன் இன்றுகூட திராட்சை ரசத்தைத் தன் ரத்தமாக மாற்றி,
நமக்கு வாழ்வளிப்பவர் அல்லவா!
அன்னை மரியா அருள் வரங்களின் வாய்க்கால். அவள் இறுதியாகச்
சொன்னது: "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"
(யோ. 2:5). இயேசு சொல்வதுதானே நமக்கெல்லாம் நற்செய்தி!
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
இயேசுவையும், மரியாவையும் அழைத்து...
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது, தமிழ் பாரம்பரியத்தில்
நிலவிவரும் நம்பிக்கை. பிறந்துள்ள தை மாதத்தில், மக்கள்
வாழ்வில் வழி பிறக்கும், மற்றும், வழி திறக்கும் என்ற நம்பிக்கையை
ஊட்டுவதற்கு, இறைவாக்கினர் எசாயா வழங்கும் ஆசி மொழிகள், இன்றைய
முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன:
இறைவாக்கினர் எசாயா 62: 3-4
ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன்
கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். "கைவிடப்பட்டவள்"
என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; "பாழ்பட்டது" என இனி உன்
நாடு அழைக்கப்படாது; நீ "எப்சிபா" என்று அழைக்கப்படுவாய்;
உன் நாடு "பெயுலா" என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர்
உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.
தை பிறந்ததும், பல குடும்பங்களில் திருமணங்கள் நடைபெறும்.
இத்தகைய ஒரு சூழலில், இயேசுவும், அன்னை மரியாவும் கலந்துகொண்ட
ஒரு திருமண விழா, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.
புனித யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள
கானா திருமண விழாவின் அறிமுக இறைவாக்கியம் இதோ:
யோவான் 2: 1
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று
நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.
பொதுவாக, எந்த ஒரு கதையிலோ, வரலாற்றிலோ ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை
அறிமுகப்படுத்தும் வேளையில், அவரைப்பற்றிய பல விவரங்கள்
வழங்கப்படும். இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றிய
மரியாவை, புனித யோவான், தன் நற்செய்தியில், முதன்முதலாக அறிமுகம்
செய்யும்போது, "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற எளியச்
சொற்களில், அன்னையை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்தத்
தாயின் பெயரைக்கூட அவர் பதிவு செய்யாமல், 'இயேசுவின் தாய்'
என்ற அடைமொழியை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.
கத்தோலிக்கப் பாரம்பரியத்தில், மரியாவின் 'கன்னிமை',
'தாய்மை' என்ற இரு அம்சங்கள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில்,
மரியாவின் 'கன்னிமை'யைச் சுட்டிக்காட்டும் நிகழ்வுகளை, நற்செய்தியாளர்கள்
மத்தேயுவும், (மத். 1:18-24), லூக்காவும் (லூக். 1:26-38)
கூறியுள்ளனர். மரியாவின் 'தாய்மை'யை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை,
யோவான் குறிப்பிட்டுள்ளார். யோவான் நற்செய்தியில், இரண்டு
நிகழ்வுகளில் மட்டுமே 'இயேசுவின் தாய்' இடம்பெறுகிறார். ஒன்று,
கானா திருமணம் (யோவான் 2:1-11); மற்றொன்று, கல்வாரி மலை நிகழ்வுகள்
(யோவான் 19:25-27).
தன் பணிவாழ்வின் துவக்கத்தில், கானா திருமணத்தில், இயேசு,
முதல் 'அரும் அடையாள'த்தைச் செய்தபோது, "இயேசுவின் தாய் அங்கு
இருந்தார்". அதுமட்டுமல்ல, அந்த அரும் அடையாளத்தை இயேசு
செய்வதற்கு, அவரே தூண்டுதலாகவும் இருந்தார். அதேவண்ணம், தன்
பணிவாழ்வின் இறுதியில், கல்வாரி மலைமீது, சிலுவையில் இயேசு
தொங்கிக்கொண்டிருந்தபோது, "சிலுவை அருகில் இயேசுவின்
தாய்... நின்றுகொண்டிருந்தார்" (யோவான் 19:25).
அன்னை மரியாவின் பிரசன்னம், அற்புதங்கள் நடைபெற தூண்டுதலாகவும்,
துன்ப வேளைகளில், ஆறுதல் தரும் அருமருந்தாகவும் உள்ளது என்பதை,
இவ்விரு நிகழ்வுகள் வழியே, நற்செய்தியாளர் யோவான் நமக்கு
உணர்த்துகிறார்.
கானா திருமணத்திற்குத் திரும்புவோம். திருமணம் என்றாலே,
பலவிதமான, பலமான ஏற்பாடுகள் செய்யப்படும். என்னதான் கவனமாக,
ஏற்பாடுகள் செய்தாலும், திருமணங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாகக்
குறைகள் எழத்தான் செய்யும். திருமண வைபவங்களில்,
பெரும்பாலும், சாப்பாட்டு நேரங்களில்தான் குறைகள் கண்டுபிடிக்கப்படும்;
பிரச்சனைகள் வெடிக்கும். கானாவில் நடந்த திருமணத்திலும்,
சாப்பாட்டு விடயத்தில்தான் குறை ஏற்பட்டது. யூதர்களின்
திருமணங்களில், திராட்சை இரசம் தீர்ந்து போவதென்பது, பெரிய
மானப்பிரச்சனை.
திருமண வைபவங்களில் குறைகள் ஏற்படும்போது, அவற்றை, விளம்பரப்படுத்தி,
வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. விரைவாகத் தீர்வு காண்பவர்களும்
உண்டு. அன்னை மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
குறையைக் கண்டதும் அதைத் தீர்க்க நினைக்கிறார். தன் மகனிடம்
கூறுகிறார். அன்னை மரியா தன் மகனிடம் இந்தக் குறையை எடுத்துரைத்த
அழகை, நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:
யோவான் 2: 3
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின்
தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார்.
மரியாவின் இந்தக் கூற்றை, அழகான ஒரு செபம் என்று, பல இறையியல்
வல்லுனர்கள் கூறுகின்றனர். இரசம் தீர்ந்துவிட்டது என்பது,
எதார்த்தமான ஒரு கூற்று. அதை எப்படி செபம் என்று சொல்வது
என்று, ஒரு சிலர் தயங்கலாம். இது ஓர் அழகிய செபம் என்பதைப்
புரிந்துகொள்வது நல்லது.
செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல்களை
கடவுளிடம் அனுப்புவதற்கு பதில், உள்ளத்தைத் திறந்து, உண்மைகளைச்
சொல்வது இன்னும் அழகான செபங்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இத்தகைய செபத்தைச் சொல்வது, எளிதல்ல. இத்தகைய செபத்தைச்
சொல்வதற்கு, ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை, நம்மைவிட,
நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் நம் உண்மை நிலையைச்
சொன்னால் போதும் என்ற மனநிலையுடன் செபிப்பதற்கு, ஆழமான நம்பிக்கை
வேண்டும். இவ்வகைச் செபத்தை, ஒரு சிறு கற்பனை வழியே
புரிந்துகொள்ள முயல்வோம்.
வீட்டுத்தலைவன் செய்தித்தாளைப் படித்தபடி அமர்ந்திருக்கிறார்.
வீட்டுத்தலைவி காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை
தீர்ந்துவிட்டது என்பதை உணர்கிறார். அங்கிருந்தபடியே, "என்னங்க,
சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன?
தயவு செய்து, செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப்
போய், சர்க்கரை வாங்கி வாருங்கள் என்பதுதானே? அவர் சட்டையை
மாட்டிக்கொண்டிருக்கும்போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன்.
அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத்தலைவி.
தலைவன் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத்
தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள் இவை.
"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்ற சொற்கள் வழியே, மரியாவும்,
இப்படி ஒரு செபத்தை, இயேசுவிடம் எழுப்புகிறார். நம்முடைய
செபங்கள், இவ்வகையில் அமைந்துள்ளனவா என்பதைச் சிந்திப்பது
நல்லது.
விவிலியம் முழுவதிலும், நான்கு நிகழ்வுகளில் மட்டுமே, அன்னை
மரியா பேசியதாக கூறப்பட்டுள்ளது. வானதூதர் கபிரியேலுடன் மரியா
மேற்கொண்ட உரையாடல் (லூக்கா 1:26-38), உறவினரான எலிசபெத்தின்
இல்லத்தில் அவர் எழுப்பிய புகழ்ப்பாடல் (லூக்கா 1:46-56),
எருசலேம் கோவிலில், சிறுவன் இயேசுவிடம் கேட்ட கவலை நிறைந்த
கேள்வி (லூக்கா 2:48) என்ற மூன்று நிகழ்வுகள், லூக்கா நற்செய்தியில்
பதிவாகியுள்ளன. யோவான் நற்செய்தியில், கானா திருமண நிகழ்வில்
மட்டுமே அன்னை மரியா பேசியுள்ளார். அதுவும், இரு அழகான,
பொருள் நிறைந்த கூற்றுகளை கூறியுள்ளார்.
'இரசம் தீர்ந்துவிட்டது' என்று இயேசுவிடம் 'சிம்பிளாக'ச்
சொன்ன மரியன்னை, பின்னர், பணியாளர்களைப் பார்த்து, இன்னும்
'சிம்பிளாக' "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"
என்று சொல்லிவிட்டு அகன்றார். அதன்பின், அந்தத் தாயைப் பற்றி
எவ்வித கூற்றும் இல்லை இன்றைய நற்செய்தியில். தன் மகன்
புதுமை ஆற்றும்போது, அருகில் நின்று, 'இது என் மகன்' என்று
அனைவரிடமும் அறிமுகம் செய்து, அங்கு எழும் பிரமிப்பில், மகிழ்வில்,
தனக்கும் பங்கு உண்டு என்பதை நிலைநாட்டும் எண்ணங்கள் அன்னை
மரியாவிடம் எழவில்லை.
இதுதான் அன்னை மரியாவின் அழகு, இதுவே அவரது இலக்கணம். குறைகள்
உருவானதும் வந்து நிற்கும் அன்னை மரியா, அவரது பரிந்துரையால்
புதுமைகள் நிகழும் வேளையில், அந்தப் புகழில் பங்கேற்காமல்
மறைந்துவிடுவார். நல்ல காரியம் ஒன்று நடக்கும்போது, அதற்கு
எவ்வகையிலும் காரணமாக இல்லாத பலரும், அது தன்னால் நிகழ்ந்தது
என்பதை, பல வழிகளிலும் பறைசாற்றிக் கொள்வதை நாம்
பார்த்திருக்கிறோம். மக்களின் வரிப்பணத்தில், வறியோருக்கு
உதவிகள் செய்யப்படும் வேளையில், அந்த உதவிகளை தங்கள் சொந்தப்
பணத்தில் செய்வதுபோல் அரசியல் தலைவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம்,
நம்மை, வேதனையிலும், வெட்கத்திலும், தலைகுனிய வைக்கிறது.
அதே வேளையில், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தாங்கள் செய்யும்
நற்செயல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக
இருப்பதையும் நாம் அறிவோம். இவர்களைப்பற்றிக் கேள்விப்படும்போது,
மனிதகுலத்தின் மீது நம் நம்பிக்கை வளர்கிறது. இவர்கள் அனைவரும்
அன்னை மரியாவின் வாழ்க்கைப்பள்ளியில் பயின்ற மாணவர்கள். அன்னை
மரியாவிடம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள், நம் வாழ்நாள்
முழுமைக்கும் போதாது.
"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று, தங்களிடம்,
மரியன்னை சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்குக் குழப்பம். மரியன்னை
'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள்
அதுவரைப் பார்த்ததில்லை. அந்த இளைஞனைப் பார்த்தால், பிரச்சனையைத்
தீர்த்துவைப்பவர் போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும்,
கடந்து மூன்று அல்லது நான்கு நாட்களாய் தங்களுடன் சேர்ந்து
அதிகம் வேலைகள் செய்தவர், மரியன்னை என்பதால், அவர் மட்டில்
பணியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அதுவும், அந்த அன்னை,
அதுவரை, பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததை, கண்கூடாகப்
பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அந்த அன்னை சொன்னால், அதில்
ஏதோ ஓர் அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர்.
மேலும், அந்த இளைஞன், அந்த அம்மாவுடைய மகன் என்றும்
கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு, அவர்கள் மனம்
ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.
பணியாளர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசு,
தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த
முற்றத்தில், கை, கால் கழுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த ஆறு
தொட்டிகளைக் கண்ட இயேசு, பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர்
நிரப்புங்கள்" என்றார்.
இந்தக் காட்சியை, நாம் வாழும் காலத்திற்கு ஏற்றதுபோல் சொல்லவேண்டுமெனில்,
ஒரு கிராமத்தில் நடக்கும் திருமண விழாவைக் கற்பனை
செய்துகொள்வோம். கை, கால் கழுவ, குழாய் வசதி இல்லாத இடங்களில்,
பெரிய பாத்திரங்களில், பிளாஸ்டிக் வாளிகளில் அல்லது
சிமென்ட் தொட்டிகளில் தண்ணீர் வைத்திருப்பர். விருந்துக்கு
வருவோர், கைகளையும், கால்களையும் கழுவ, அந்த தண்ணீர் பயன்படுத்தப்படும்.
அதை யாரும் குடிப்பதில்லை. அந்தத் தொட்டிகளில், தண்ணீரை நிரப்பச்
சொன்னார், இயேசு.
இயேசு சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி,
கொஞ்சம் எரிச்சலும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற
திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும்போது,
இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும்
எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதேநேரம், இயேசு சொன்ன கட்டளையில்
ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம், அவர்கள் மனதில் ஏதோ ஒருவகை
நம்பிக்கையைத் தந்தது. தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு
நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப்போல், இயேசுவின்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர்.
அங்கு என்ன நடந்தது என்பதை, இன்றைய நற்செய்தி இவ்வாறு
கூறியுள்ளது:
யோவான் நற்செய்தி, 2: 7-9
இயேசு அவர்களிடம், "
இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்"
என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள்.
பின்பு அவர், "
இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம்
கொண்டு போங்கள்"
என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே
செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய்
மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து
வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த
பணியாளருக்கே தெரிந்திருந்தது.
பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள்
மொண்டு எடுத்துச் சென்றபோது, அது இரசமாக மாறியிருந்தது. எப்போது,
எப்படி இந்த புதுமை நடந்தது?
வழக்கமாக, இயேசுவின் சொல்லோ, செயலோ புதுமைகளை நிகழ்த்தும்.
ஆனால், இந்தப் புதுமை நடந்தபோது, அப்படி தனிப்பட்ட வகையில்
இயேசு எதையும் சொல்லவில்லை. செய்யவுமில்லை. "தண்ணீர் நிரப்புங்கள்"
என்றார். "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்"
என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, நீர் நிரப்பப்பட்ட
தொட்டிகள் மீது அவர் கரங்களை நீட்டியதாகவோ, வேறு எதுவும்
சொன்னதாகவோ, நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், இயேசுவின் இந்த இரு கூற்றுகளுக்குமிடையே, யோவான் ஓர்
அழகிய வாக்கியத்தை இணைத்துள்ளார். "
இத்தொட்டிகளில் தண்ணீர்
நிரப்புங்கள்"
என்று இயேசு சொன்னதும், அவர்கள் அவற்றை
விளிம்பு வரை நிரப்பினார்கள் (யோவான், 2: 8). இதுதான் அந்த
பொருள்நிறைந்த வாக்கியம். எப்போது அந்தப் பணியாளர்கள் அத்தொட்டிகளை
விளிம்பு வரை நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர்
திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்தது என்று நாம் கூறமுடியும்.
இயேசு சொல்லியதைக் கேட்டு, குழப்பத்தோடும், கோபத்தோடும் பணியாளர்கள்
செயல்பட்டிருந்தால், தொட்டிகளை அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள்.
ஆனால், யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்: அவர்கள் அத்தொட்டிகளை
விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று. அப்படியெனில் அந்த பணியாளர்களின்
உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த உள்ள மாற்றம்தான்,
தண்ணீரையும் இரசமாக மாற்றியது. தங்கள் அதிர்ச்சி, தயக்கம்,
எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள், தாங்கள்
செய்யும் செயலை, முழுமையாகச் செய்த அந்த நேரத்தில், அவர்கள்
ஊற்றிய தண்ணீர், திராட்சை இரசமாக மாறியது. முழுமையான ஈடுபாட்டுடன்
செய்யும் ஒவ்வொரு செயலும், மன நிறைவைத் தருவதோடு, வாழ்வில்
பல அற்புதமான மாற்றங்களையும் உருவாக்கும். புத்தாண்டின் துவக்கத்தில்,
இப்புதுமையின் வழியே, இப்படிப்பட்ட ஒரு பாடத்தை நாம் பயில்வது
பயனளிக்கும்.
இறுதியாக, இந்நாட்களில் திருமண உறவில் இணையும் மணமக்கள்
வாழ்வில் அன்னை மரியாவும், இயேசுவும் பங்கேற்கவும், அந்த
அன்னையின் பரிந்துரையால், மணமக்கள் வாழ்வில், இறைவன், அற்புதங்களை
ஆற்றவும், சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 62:15)
கடவுளின் எல்லையில்லா அன்பு எருசலேமிற்கு என்றும் உண்டு
என்பதை உறுதிபடுத்துகின்றார் எசாயா இறைவாக்கினர். கடவுள்
எருசலேமுக்குப் "
எப்சியா' (அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்)
என்ற புதியப் பெயரை வழங்கி தன்னுடைய உறவைப்
புதுப்பித்துக் கொள்கின்றார். இது அவர்களிடையே ஒரு மாற்றத்தை
ஏற்படுத்தி கடவுளோடு ஒன்றித்திருக்க உதவுகின்றது. இந்த வாசகம்
முழுக்க முழுக்க, எருசலேம் ஆண்டவருடைய அருள் வாக்கின்
மீது கொண்டுள்ள ஆனந்தக் களிப்பைப் பற்றிப் பாடும் பாடலாக
அமைகின்றது.
இரண்டாம் வாசகப் பின்னணி (கொரி. 12:4-11)
ஆண்டவர் கொரிந்து நகர மக்களை ஆன்மீக கொடைகளால் அபரிவிதமாக
ஆசிர்வதித்துள்ளார். ஏனென்றால் அவர்களுடைய ஆன்மீகப் பணி
சிறப்பாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பிணார். ஆனால்
அவர்கள் தங்களுக்கு அருளப்பட்டக் கொடைகளில், உயர்ந்தது,
சிறந்தது என்று பாகுபாடுகள் ஏற்படுத்திச் சண்டையிடத் தொடங்கினர்.
அப்பொழுது பவுல் எக்கொடை முக்கியமானது, எது உண்மையானது,
எது தேவையானது எது பயனுள்ளது என்று விளக்கி ஆன்மீகக்
கொடையின் மேன்மையைக் கொரிந்து நகர மக்கள் உணரச்
செய்தார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 21-12)
கானாவூர் திருமண நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே
நாம் காணமுடியும். மரியாள், ஒருவேளை இத்திருமண
வீட்டாருக்கு நெருங்கிய உறவினராக இருந்து இருக்கலாம், ஆகையால்தான்
அவர்களுடைய துன்ப நிலையைக் கண்கொண்டு பார்த்த நிலையில்
தன் மகனிடம் பரிந்து பேசுகின்றாள். இப்புதுமை இயேசுவின்
பணி வாழ்வின் தொடக்கமாக அமைகின்றது. திருமண விழாவிற்கு வருகைத்
தரும் அனைவரும், விழாவிற்குப் பயன்தரும் ஏதாவது ஒரு
பொருளைக் கொண்டு வருவது யூதர்களின் வழக்கமாக இருந்தது.
திராட்சை இரசம் விருந்தில் பரிமாறுவது அங்கு பாரம்பரிய
வழக்கமாக இருந்தது. நற்செய்தியாளர் யோவானின் நோக்கமானது,
கடவுளின் வல்லமை இயேசுவின் இந்த அற்புதத்தின் வழியாக
வெளிப்பட வேண்டும் என்பதற்காக இந்தத் திராட்சை இரச தட்டுபாட்டினைக்
கடவுள் ஏற்படுத்தினார்! என்பதாகக் கொள்ளலாம்,
மறையுரை
இறைவனின் மாட்சி ஒரு திருவெளிப்பாடு! "
கனவுகளைச் சுமந்துகொண்டு
நடந்துச் செல்லும் பொழுது, தோல்விகள் தோழமைகளால் தொடர்கின்ற
பொழுது, நம் தனித்தன்மை நம்மை விட்டு தொலைந்து
விடும்பொழுது, சமுதாயச் சூழமைவுகள் நம் சுதந்திரத்தைச்
சுரண்டுகின்ற பொழுது, நம் வாழ்வு இவ்வுலகை விட்டு பிரிய
நினைக்கும் பொழுது, ஒரு திருவெளிப்பாடு என்னில் நிகழக்கூடாதா?
இறைவனின் மாட்சி என்னில் வெளிப்படுத்தபடாதா?"
என்ற ஏக்கமும்,
உணர்வுகளும் நம் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்து
கொண்டுதான் இருக்கின்றன!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு திருமண விழா இறைமகன்
இயேசு கிறிஸ்துவின் மாட்சியினை உலகிற்கு வெளிப்படுத்தும்
ஒரு மாபெரும் விழாவாக மாறிய நிகழ்வைத் தியானித்துப்
பார்க்க இன்றைய வாசகம் நம்மை அழைக்கின்றது. கலிலேயாவில்
உள்ள கானான் என்னும் ஊரில் நடைபெற்ற ஒரு திருமண
விழாவிற்கு அன்னை மரியாளும், இயேசுவும், அவருடைய சீடர்களும்
சென்றிருந்தணர். ஒரு திருமண விழா என்றால் அங்கு விருந்து
அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆம், வந்தாரை, வயிறார உண்ண
வைத்து அவர்களுடைய வாழ்த்துகளைப் பெறுவது, திருமணம் செய்பவர்களின்
சிறப்பியல்பை வெளிப்படுத்து- கின்றது. அத்தகைய விருந்து
உபசரிப்பில் திடீரென்று திராட்சை இரசம் தீர்ந்துவிடத்
திருமண வீட்டார் செய்வதறியாது திகைத்து நிற்கையில்,
விருந்திற்கு வந்தவர்களிடையே ஏற்படும் உரையாடல்கள் இறைவனின்
மாட்சி வெளிப்பட ஒரு தருணமாக அமைகின்றது.
1. பிறருடைய இன்னல்களைத் தன்னுடையதாக உணர்ந்து போராடுதல்.
2. பிறருடைய மனத்துயரைப் போக்குவதற்காகத் தன்னையே
முழுமையாக ஒப்புக்கொடுத்தல்.
இவ்விரண்டு உணர்வுகளையும் எவரெல்லாம் தன் இதயத்தில்
வைத்து வாழ்ந்து வருகின்றனரோ, அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு
செயலிலும் இறைவனுடைய மாட்சி முழுமையாக வெளிப்படுகின்றது.
கானாவர் திருமணத்தில் அன்னை மரியாள் அத்திருமண
வீட்டார் துன்ப நிலையை யாரும் அறிவிக்காமலேயேத் தாமாகவே
அறிந்தவராய், அதற்காகத் தன் மைந்தன் இயேசு கிறிஸ்துவிடம்
பரிந்து பேசுகின்றார். அன்னை மரியாள் பல்வேறு திருமண
வீட்டிற்கு விருந்திற்குச் சென்றிருக்கலாம். அங்கு இதை
போலவே திராட்சை இரசம் தீர்ந்து போனதால் ஏற்பட்ட குழப்பங்களைக்
கண்டிருக்கலாம். ஆனால் பிறர்க்குத் தன்னால் முடிந்த
உதவியைச் செய்ய வேண்டும் என்ற மனநிலையைப் பெற்றிருந்ததால்
தான் இயேசுவிடம் சென்று, "
ஏதாவதுச் செய்"
என்று
கூறுகின்றாள். நல்லது நடக்க வேண்டும், பிறர் மனம் மகிழ்ச்சியில்
மகிழ வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போடு மரியாள் அங்கு செயல்பட்டது
இறைவனை மகிழ வைத்தது. அவர் மாட்சியினை வெளிப்படுத்த உதலவியாயிருந்தது.
அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாகச் சொல்லண்ணா
வேதனைகளோடு வாழ்வின் நாட்களை நகர்த்தி கொண்டிருந்த
பொழுது, கடவுள் தம் மக்களின் வேதனைகளை அறிந்தவராய்,
அவர்களின் துன்ப நிலையை உணர்ந்தவராய், அவர்களை அடிமை தளையிலிருந்து
மீட்க இறைவாக்கினர் மோசேவை அழைத்தார். கடவுள் தான்
கேர்ந்தெடுத்த மக்களான இஸ்ராயேலைப் பார்த்து கூறுகிறார்,
"
என் மக்களே உம்மை எவ்வாறு நான் கைவிட முடியும், என்
அன்பு நிறை இதயம் இதைச் செய்ய ஒரு போதும் அனுமதிக்காது,
ஏனெனில் என் அன்பு உறுதியானது"
(ஓசே 11:1-11). இயேசு
கிறிஸ்து இரு குருடர்களைக் கண்டு மனமிரங்கி, அவர்களுடைய
விசுவாசத்திற்கு வெகுமதியாக, அவர்களுக்குப் பார்வைக்
கொடுத்து தன் மாட்சியை வெளிப்படுத்தி அவர்களுடைய விசுவாசத்தை
வளர்ப்பதைப் பார்க்கலாம் (மத்தேயு 9:27-28). மேலும் இயேசு
மக்களைப் பார்த்து மனமிரங்கினார், இரக்கம் கொண்டார் என்று
வாசிக்கின்றோம் (மத்தேயு 9:36). இயேசுவின் மூன்று ஆண்டுப்
பணி வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வும், இறைவனுடையப் பராமரிப்பை
வெளிப்படுத்தும் வண்ணமாக அமைந்திருப்பதை நாம் காண
முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா கடவுளின்
கனிவான, ஆறுதலான வார்த்தைகளை எருசலேம் மக்களுக்கு எடுத்துரைப்பதை
வாசிக்கக் கேட்டோம். இங்கு கடவுளின் மாட்சி யாரிலே
வெளிப்படுத்தப்படும் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
கடவுள் எருசலேமைக் குறித்து மகிழ்ச்சி கொள்கின்றார், அன்பு
செய்கின்றார். கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வு கடவுளின்
மாட்சிக்கு வழிவகுக்கும் என்று தெளிவாகக் குறிப்பிடுவதைக்
காணலாம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் இறைவன் தரும் ஆன்மீகக்
கொடைகள் பற்றி புனித பவுல் கொரிந்து மக்களுக்கு எடுத்துரைப்பதைக்
காண்கின்றோம். இறைவனைச் சார்ந்த, இறைவனுக்கு ஏற்புடைய இறைவனை
அன்பு செய்து அவர் மாட்சியில் மகிழ ஆன்மீகக் கொடைகள்
மிக அவசியமாகும். அருங்கொடைகளைப் பெற்றவர்களான நாம் நம்முடைய
ஓவ்வொரு செயலிளும் பிறரின் நலனைக் கருத்தில் கொண்டவர்களாக
வாழ முயல வேண்டும். கொரிந்து மக்கள், அவ்வாறு இல்லாது
தனக்கு வழங்கப்பட்டக் கொடைகள் பெரியது, சிறந்தது என்று
சண்டையிட்டு கொண்டு அக்கொடைகளின் மேன்மையை உணராதவர்களாகச்
செயல்பட்டனர். அப்பொழுது புனித சின்னப்பர் அவர்களிடம்,
"
உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் இக்கொடைகள், பிறரை அன்பு
செய்வதற்கும், அவர்களுடைய சுமைகளை இறக்கி வைப்பதற்கும்
கருவிகளாகப் பயன்படுத்த வேண்டும்"
என்று உணர்த்துவதைக்
காண்கின்றோம். நம் அன்றாட வாழ்விற்கு வருவோம். இன்றைய
சூழலில் உறவினர்களின், நண்பர்களின் அழைப்பை ஏற்று திருமணத்திற்குச்
செல்லுகின்ற .நாம், எத்தனை முறை அடுத்தவர்களின் துன்பத்திற்குத்
தோள் கொடுத்திருக்கின்றோம்? மணமக்கள் வீட்டாரைப் பற்றி
எவ்வளவு தூரம் நாம் அக்கரை கொள்கின்றோம்? பிறரை நேசிப்பது
புதிதல்ல! பிறர் உறவை நேசிப்பது பெரிதல்ல! பிறர் துன்பத்தை
நேசிப்பதுதான் முக்கியம். இங்குதான் நம் அன்பின் ஆழம்
வெளிப்படுத்தப்படுகின்றது. நேசிக்கக் கற்றுக்கொன்வோம்,
ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருப்போம். இத்தகைய ஒரு
கிறிஸ்தவ வாழ்வைதான் இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடமிருந்து
எதிர்ப்பார்க்கின்றார். அன்னை மரியாள் திருமண
லீட்டாரின் கலக்கமான சூழ்நிலையை உணர்ந்து, அவர்கள் மேல்
அக்கறை கொண்டு, அவர்களின் துன்பத்திற்காக இறைஞ்சுகிறாள்!
பிறரின் நலனுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் அன்புடையவர்களின்
செயல்பாட்டைப் பார்த்த பிறகுதான் ஆண்டவர் மாபெரும் அற்புதத்தைச்
செய்து கடவுளின் மாட்சியை வெளிப்படுத்தினார்.
வாழ்வின் ஒவ்வொரு கணமும் என் கடவுளின் மாட்சியைக் காண
மாட்டேனா என்று பரிதவிப்போடு இருக்கும் அன்பு உள்ளங்களே!
கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் பிறருடைய துன்பத்திலும்,
கண்ணீரிலும் பங்கெடுக்கும் அர்ப்பண வாழ்வுதான்.
கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வாழ்வாக நம் வாழ்வு மாறும்
பொழுது நமது குடும்பத்தில் ஏற்படும் எதிர்பாராத பரிதவிப்பு,
தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றங்கள் அனைத்தும் நம்மை
விட்டு மறைந்து போகும். இறைவனின் மாட்சி மகிமையுடன்
வெளிப்படுத்தப்படும்.
அப்பொழுது நாம் அனைவரும் நிறைவாக மகிழ்ச்சியோடு இறைவனின்
பராமரிப்பை ஒரு "
திருவெளிப்பாடு"
என்று பறைசாற்றுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
⏺ இயேசுவின் தாய் பணியாளரிடம், "
அவர் உங்களுக்குச்
சொல்லுவதெல்லாம் செய்யுங்கள் என்றார்"
இது அன்னை மரியாள்.
இயேசுவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.
⏺ யாருக்கு என்ன நடந்தாலும் நமக்கு என்ன! என்று இல்லாமல்,
அன்னை மரியாள் உடனே அக்கறை கொண்டு தன் இரக்கக் குணத்தை
வெனளிப்படுத்தினார்.
⏺ "
தாமதமாக வந்தாலும் நன்கு தரமாக உள்ளது"
என்று கூறுமளவுக்குத்
தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றும் பொழுது இயேசு அங்கு வல்லமையுடன்
செயல்பட்டார்.
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
இறைவாக்குப் பயணம்
பொதுக் காலம் மூன்றாம் ஞாயிறு
இன்றைய இறைவாக்குகள் மூன்றுமே மிகவும் ஆழமான காகவும்,
பொருள் பொதிந்தவையாகவும் உள்ளன. அதிலும் குறிப்பாக முதல்
வாசகமும் நற்செய்தியும் பல நிலைகளில் ஒத்திருக்கின்றன.
எஸ்ராவைப் போல இயேசுவும் செபக்கூடத்தில் இறைவாக்குகளின்
ஏட்டை வாசிக்கின்றார். இருவரும் அதற்கு விளக்கமும் தருகின்றனர்.
இங்கு பக்கங்களின் அளவு கருதி நற்செய்திப் பகுதியை மட்டும்
விளங்கிக்கொள்ள முயற்சி எடுப்போம்.
1. அர்ப்பணம்
இன்றைக்கு நற்செய்தியாக நமக்கு அளிக்கப்பட்டிருப்பது
லூக்கா நற்செய்தியின் இரு வேறு அதிகாரங்களிலிருந்த இரு
சிறு பகுதிகளாகும். அதாவது முதல் அதிகாரத்தின் முதல்
நான்கு வசனங்களும், நான்காம் அதிகாரத்தின் சில வசனங்களுமாகும்.
முதல் அதிகாரத்தின் முதல் வசனங்கள் நிகழ்ச்சிப் பகுதிக்கு
வெளியே மொத்த நூலுக்கும் முன்னுரையாக, மாண்புமிகு
தியோபில் என்பவருக்கு அர்ப்பணமாக அமைகின்றது. அதன் ஒரு
சில உள்கூறுகளை இவண் காண்போம்.
அ. வரலாற்று நூல்
லூக்கா தனது நற்செய்தியை எழுதத் தொடங்கும்முன் தான் ஒரு
வரலாற்று தலை எழுதப் போகின்றோம் என்று உணர்ந்திருந்தார்.
நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி எழுதியது', "பலர் இதை எழுத முயன்றது
(வச. 1), நேரில் கண்டவர்களைப் பற்றிய குறிப்பு (வச. 2),
நற்செய்தியாளர் கருத்தாய் செய்த ஆராய்ச்சி (வச. 3), அதை
ஒழுங்குபடுத்தியது (வச. 4) ஆகியவற்றைப்பற்றி குறிப்பிடுவதன்
வழியாக அவர் ஒரு சிறந்த வரலாற்று நாலை எழுதப்
போகின்றார் என்பதை உணர்ந்திருந்தார் என்பது புலப் படுகின்றது.
ஆ. வித்தியாசமான நூல்
லூக்கா தனக்கு முன்பே சிலர் இயேசுவின் வரலாற்றை முறைப்படுத்தி
எழுதியுள்ளனர், அல்லது எழுத முயன்றுன்னனர் என்பதை அறிந்திருந்தார்.
அதை பதிவும் செய்திருக்கின்றார் (வச. 7-2). ஆனால்
லூக்கா அதில் எதிலும் நிறைவு அடைந்ததாகத் தெரியவில்லை.
ஏனெனில் அவை முழுமையாக இல்லை என்பது அவரது கருத்தாக இருக்கலாம்.
அதே வேளையில் தன்னுடைய நூல் அந்த முந்தைய நரல்களைவிட சிறந்ததாக
முழுமையானதாக இருப்பதாகவும் அவருக்கு ஓர் உணர்வு இருந்ததை
நாம் உணரமுடிகின்றது. எனவே லூக்காவின் நாலை சிறப்பானதாக
ஆக்குவது மாற்றுவது எது எனும் கேள்வி எழுகின்றது.
லாக்காவே இதற்குப் பதில் தருகின்றார். அதாவது, அவரின்
"
ஒழுங்குபடுத்துதல்' (வச. 4) சரியானதாக, முழுமையானதாக அமைகின்றது.
இந்த "
ஒழுங்குபடுத்துதல்"
எதில் அடங்கியிருக்கின்றது எனும்
வினாவிற்கு நிகழ்ச்சிகளுக்கு இடையேயுள்ள தொடர்பை ஆஅரக்கா
சரியாக கணித்திருப்பதாக உணர்ந்திருக்கலாம் என சில அறிஞர்கள்
எண்ணுகின்றனர். இந்தத் "
தொடர்புகள் பிற நூல்களின் ஆசிரியர்களுக்கு
புரிபடாமல் போயிருக்கலாம்.
இ. நற்செய்தி நூவின் நோக்கம்
இந்தப் பகுதிக்கு இது முக்கியமானது. லூக்கா இந்த நற்செய்தி
நாலை எழுதுவதற்கு முக்கிய நோக்கம் தியோபிலும், அவரைப்
போன்ற பிறஇன கிறிஸ்தவர்களும் நம்பி ஏற்றிருக்கும் இயேசுவைப்
பற்றிய நம்பிக்கையை உறுதிப்படுவதற்காகத்தான்.
ஈ. இறையியல் நோக்கம்
இந்த முன்னுறையை வெறும் வரலாற்று நாலுக்கோ அல்லது ஓர்
இலக்கியப் படைப்புக்கோ அளிக்கப்பட்ட அர்ப்பண மாக மட்டும்
பார்க்கக்கூடாது. மாறாக இங்கும் ஓர் இறையியல்
செய்தியையும் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். எனவே
இந்த நற்செய்தி நூல் ஏற்கெனவே இருந்த நூல்களையும், தரவுகளையும்
லூக்கா தொடக்கத்திலிருந்தே ஆய்ந்து, அறிந்து. எழுதிய அவர்
காலத்து "
அறிவியல்"
பூர்வமான வரலாற்று நூல் என்று மட்டும்
கொள்ளக் கூடாது. மாறாக இது ஓர் இறையியல் புத்தகமாகவும்
பார்க்கப்பட வேண்டும். அதை இந்த அதிகாரத்தின் முதல்
வசனத்திலேயே குறிப்பிடுகின்றார். அதாவது வரலாற்று நிகழ்ச்சிகளை
"
நிறைவேறிய (வச. 7) நிகழ்ச்சிகள் எனக்
குறிப்பிடுகின்றார். எனவே இயேசு காலத்திலும், அதற்கு
பின்னும் நிகழ்ந்தவை வெறும் வரலாற் று நிகழ்ச்சிகள் மட்டுமல்ல,
மாறாக அவை மீட்புத் திட்டத்தின், விவிவிய வரலாற்றின்,
தொடர்ச்சியும், நீட்சியுமாகும். எனவே பிறஇனத்தாராகிய
தியோபில் போன்ற வர்கள் கிறிஸ்துவை ஏற்று இருப்பது இறைத்திட்டத்தின்
மீட்பு வரலாற்றின் ஒரு நோக்கம் ஆகும். இதை விரிவாக விளக்குவதே
இந்நூலின் நோக்கமாகும். திருத்தூதர் பணிகள் நூலையும்
இந்த நற்செய்தியோடு இணைத்துப் பார்த்தால் இக்கருத்து
தெளிவாய் விளங்கும். அங்கும் அவர் தியோபிலுக்கு அந்நரலை
அர்ப்பணிப்பதையும் நாம் நோக்க வேண்டும். இனி இன்றைய நற்செய்திப்
பகுதியின் இரண்டாம் பகுதியான நாசரேத்தில் இயேசு நிகழ்த்தியவற்றின்
பொருளைக் காண முயல்வோம்.
2. நாசரேத்தில் இயேசு
இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தில் நிகமும் இந்த நிகழ்ச்சி
இயேசுவின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இங்கு
இயேசுவின் பணியின் இலக்கை நிர்ணயிக்கும் 'நாசரேத்து அறிக்கை"
அறிவிக்கப்படுகின்றது. மேலும் இந்நிகழ்ச்சி இயேசு யார்
என்பதையும் விளக்க லாக்காவுக்குப் பயன்படுகின்றது. இயேசு
மெசியா என்பதை லூக்கா நற்செய்தியை தொடக்க முதல் வாசிப்பவர்
அறிந்திருப்பர். ஆனால் அவர் எத்தகைய மெசியா என்பதை இந்த
நற்செய்திப் பகுதி விளக்குகின்றது. இறைவாக்கினர் ஏசாயாவின்
சுருள் ஏடு (வச. 77) அதில் அண்டவரின் ஆவி இறைவாக்கினர்
மேல் உள்ளது (வச. 18), அருள் பொழிவு (வச. 18), மறைநூல்
வாக்கு நிறைவேறுவது (வச. 27) ஆகியவை பற்றிய குறிப்புகள்
எல்லாம் அவர் *இறைவாக்கினரான மெசியா"
என்பதைப் புலப்படுத்துகின்றன.
இந்த நிகழ்ச்சிப் பகுதிக்கு அடுத்துவரும் பகுதியில் இறைவாக்கினர்களான
எலியாவும் (வச. 23-26), எலிசாவும் (வச. 27) குறிப்பிடப்படுவதிலிருந்து
இது உறுதிப்படுத்தப்படுகின்றது.
3. ஏழையருக்கான பணி
இயேசு தன் பணி என ஏற்றுக்கொண்ட இந்த அறிக்கையில் இருவிடயங்கள்
நோக்கப்படவேண்டும் இயேசு தனது பணி ஏழையருக்கு நற்செய்தி
அறிவிப்பது, சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிப்பது, பார்வையற்றோருக்கு
பார்வை தருவது, ஓடுக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்குவது என
சமூகத்தின் கடைநிலையில் உள்ளவருக்கே என தெளிவுபடுத்துகின்றார்.
இரண்டாவதாக, ஆண்டவர் அருள்தரும் அண்டினை"
முழக்கமிடுவதைப்
பற்றிய குறிப்பு, கடன்கள் மன்னிக்கப்பட்டு, நிலங்கள் உரியவரிடம்
சேர்ப்பிக்கப்பட்டு, அடிமைகள் விடுதலைபெற்று அனுப்பப்படும்
யூபிவி ஆண்டைக் குறிப்பதாக அமைகின்றது. இதைப் பற்றிய
குறிப்புகள் லேவி 25:70-18ல் மேலும் காணக்கிடக்கின்றன.
இந்த விடுதலை வாழ்வை நிஜமாக்குவதற்கு உதவுவதற் காகத்தான்
யூபிலி ஆண்டுகள் கொம்பூதி அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இறையிரக்கத்தின் சிறப்பு
யூபிலி அண்டை புனிதக் கதவுகளை திறந்து துவங்கி வைத்தார்.
இயேசு தனது பணி என்று ஏற்றுக் கொண்ட கடைநிலையினரின் நல்வாழ்வு,
விடுதலை வாழ்வு நமது பணியாகவும், அறிக்கையாகவும், பிரகடனமாகவும்
ஆகட்டும்.
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - மூன்றாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம்: நெகே. 8:2-6,8
பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பின் எருசலேம் வந்த மக்கள்
அழிந்த ஆலயத்தை நெகேமியா தலைமையில் மீண்டும் கட்டி எழுப்பினர்.
எஸ்ரா என்னும் திருச்சட்ட வல்லுநர், மோசேயின் சட்டத்தை
மக்கள் கடைப் பிடிக்கும் பழக்கத்தைப் புதுப்பித்தார்.
விழாக் காலங்களில் வேத நூல்கள் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டன.
இன்றைய வாசகத்தில் வரும் நிகழ்ச்சி, திருப்பலியில் வரும்
இறைவார்த்தை வழிபாட்டின் எதிரொலியாகவும் நமதாண்டவர் நாசரேத்தூர்
செபக் கூடத்தில் ஏட்டுச் சுருளை வாசித்து விளக்கம் அறித்ததன்
பின்னணி ஆகவும் அமைந்துள்ளது.
வார்த்தை வழிபாடு
திருச்சட்ட நூல் வேதவாக்கு ஆனதால் அதற்குத் தக்க வணக்கம்
செலுத்தப்படுகிறது. எஸ்ரா, பன்னிருவர் புடை சூழ திருச்சட்ட
நூலை எடுத்து வருகிறார்; மேடைக்குச் செல்லுகிறார் (4)
நூலைத் திறந்து வாசிக்கிறார்; அனைத்து மக்களும் எழுந்து
நிற்கின்றனர்; எஸ்ரா இறைவனைத் துதித்து வாழ்த்தவே அனைவரும்
கைகளை உயர்த்தி 'ஆமென், ஆமென்' என்று சொல்லிப் பணிந்து,
முகம் குப்புற விழுந்து கடவுளைத் தொழுதார்கள் (7);
வாசிக்கப்பட்ட பகுதிக்கு லேவியர் விளக்கம் கூறினர்.
வார்த்தை வழிபாட்டில் பக்தியுடன் பங்கெடுக்க
வேண்டுமானால், வேத ஏடுகள், தேவ ஏடுகள், இறைவனின்
வார்த்தைகளைக் கொண்ட ஏடுகள் என்ற விசுவாசம் தேவை. "
இதோ
பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்" எரே.1:
9). ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப் பட்டது. "இஸ்ரயேலின்
கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச்
சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை''
(எரே. 30 : 2). "
மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல்
பெற்றுள்ளது" (2 திமொ. 3 : 16). "
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட
மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும்
மனித விருப்பத்தால் உண்டானது அல்ல"
(2 பேது. 1 : 21) இறைவார்த்தையைப்
படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் அதற்குரிய வணக்கத்தைச்
செலுத்துகிறேனா? நாள்தோறும் திருவிவிலியம் படிக்கும் நல்ல
பழக்கம் உண்டா?
வார்த்கையின்படி நடக்கவேண்டும்
"
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்"
என்றாள்"
மரியா.
திருச்சட்ட நூலை வாசிக்கக் கேட்ட மக்கள், சட்டங்களை மீறியதற்காக
மனம் வருந்தி அழுதனர். அழவேண்டாமென அவர்களைத் தடுத்து,
இந்த நல்ல நாளில் நீங்கள் விருந்துண்டு, உணவு இல்லாதவர்களுக்கு
உணவு அனுப்பி வையுங்கள் என்கிறார் எஸ்ரா. இதுவே இறைவாக்குகளைக்
கேட்டதன் பயனாயிருக்க வேண்டும். தூய ஆவியின் தூண்டுதலால்
எழுதப்பட்ட இறைவாக்கு "
கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும்
சீராக்குவ தற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும்
பயனுள்ளது'' (2 திமொ. 3 : 16).
இறைவார்த்தை எந்த வாளினும் கூர்மையானதாய் ஆன்மாவின் உள்ளாழத்தையும்,
ஆவியின் உள்ளாழத்தையும் ஊடுருவி, மூட்டு மச்சை வரை எட்டி
(எபி. 4 : 12) நம்மில் ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும்.
வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடக்காதவன் முகச்சாயலைக்
கண்ணாடியில் பார்த்துவிட்டுப் போனதும், அச்சாயலை மறந்து
விடுபவனுக்குச் சமம் என்கிறார் யாக்கோபு (1: 24).
வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவன் பாறைமீது அடித்தளம்
அமைத்து வீடு கட்டுபவனுக்குச் சமம் என்கிறார் நமதாண்டவர்
(லூக். 6 : 7). இறைவார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்காதவனைத்
தீர்ப்பிடுவது இறைவார்த்தையே என்கிறார் இயேசு (யோ. 12 :
48). எத்தனை முறை இறைவார்த்தையை நான் வாசித்துள்ளேன்,
கேட்டுள்ளேன். என்னில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
அவர்கள் மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும்
பொருளோடும் வாசித்தனர்.
அருட்கொடைகள் வெளிப்படும் வகையிலும் அவற்றின் செயல்முறையிலும்
வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து வரங்களும் ஒரே தெய்வீக
ஊற்றிலிருந்தே பிறக்கின்றன (12 : 4 - 10. திருச்சபையின்
பொது நன்மைக்காகவே இவை அளிக்கப்படுகின்றன என்பதை பவுல்
உடலின் உவமை வழியாகத் தெளிவுபடுத்துகிறார்.
கிறிஸ்துவில் உறவு
நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு வேறு எந்த உறவுடனும்
ஒப்பிட முடியாத உறவு. புறக்கண்ணுக்குப் புலப்படாத உறவு.
ஆனால் இது ஒர் உண்மையான இணைப்பு. யூதராயினும், புறவினத்தாராயினும்
ஒரே ஆவியால், ஒரே உடலாகிய கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு
பெற்றதால் வரும் உறவு (1: 18; காண். உரோ 4: 25). உறுப்பினர்கள்
கூடித்தான் ஒர் அமைப்பை உருவாக்குவர். ஆனால் திருச்சபையாகிய
அமைப்பில் உறுப்பினர்கள் சேர்ந்து அதை உருவாக்குவதில்லை.
மாறாக, கிறிஸ்துவே மனிதர்களைத் தம் உறுப்புகளாக ஏற்றுக்கொள்ளுகிறார்.
எனவே "
கிறிஸ்துவின் உடல்"
என்னும் தொடர் வெறும் உருவகம்
அன்று; இது ஓர் உண்மைச் செயல். கிறிஸ்தவர்களின் உடல்கள்
கிறிஸ்துவின் உறுப்புகள் (6 : 15; எபே. 8 : 30);
கிறிஸ்துவே தலை (கொலே. 1 : 18), அதனின்றே முழு உடலும் ஊட்டம்
பெறுகிறது. அதன் செயலால்தான் உறுப்புகள் ஒன்றோடொன்று இணைந்து
செயல்படுகின்றன (கொலே 2 : 19). நமது தலையுடன் ஏனைய உறுப்புகள்
பொருந்தி ஒரே உயிரைப்பெற்று வாழ்வதுபோலவே, நாமும்
கிறிஸ்துவை தலையாகக்கொண்ட திருச்சபை என்ற உடலின் உறுப்புகளாக
இருக்கின்றோம் என்பதை உணர்கின்றோமா?
படிப்பினைகள் பல
"
கண் கையைப் பார்த்து நீ எனக்குத் தேவையில்லை என்று
கூறுவதில்லை"
(21). அப்படியே திருச்சபையில் உள்ள அனைவரும்
ஒருவர் மற்றவருக்குத் தேவை. உடல் உறுப்புகளில் உயர்ந்தவை,
தாழ்ந்தவை, பயனுள்ளவை ! பயனற்றவை என்ற பாகுபாடு இல்லை. அனைத்தும்
உடலுக்குத் தேவை. அப்படியே திருச்சபைக்கு அனைத்துப் பணியாளர்களும்
தேவை. ஆண்டவரோடு வாழ்ந்து, அவரது உயிர்ப்புக்குச் சான்று
கூறிய திருத்தூதர்கள் (திப. 1 : 22), திருநூலுக்கு விளக்கம்
சொல்லி விசுவாசப் படிப்பினைகளின் பொருளையும், கிறிஸ்தவ
மரபுகளையும் எடுத்துரைக்கும் போதகர்கள் (காண். உரோ. 12
: & கலா. 6 : 6), சமூகத் தொண்டர்கள் (உரோ. 12:7) இறைமக்களை
வழிநடத்திச் செல்லும் மேற்பார்வையாளர்கள், மூப்பர்கள்
(திப 20 : 17, 28) ஆகிய அனைவரும் திருச்சபைக்குத் தேவை.
ஒருவர் அழைப்பையும் பணியையும் கண்டு மற்றவர் பொறாமைப்படுதலும்,
ஒருவர் பெற்றுள்ள அருட்கொடைகளைக் கண்டு மனம் புழுங்குதலும்
கிறிஸ்துவின் உடலையே வெறுக்கும் பாவமாகும். உறுப்பினர்களுக்கு
அளிக்கப்படும் அருட்கொடைகள் திருச்சபையைக் கட்டி எழுப்பவே
அளிக்கப்படுகின்றன. ஐந்து தாலந்து பெற்றவன் அதை மேலும்
ஐந்து தாலந்தாகப் பெருக்க வேண்டும்.
"உறுப்பு ஒன்று துன்புற்றால், எல்லா உறுப்புகளும் அதனுடன்
சேர்ந்து துன்புறும்; உறுப்பு ஒன்று மாண்புற்றால், எல்லா
உறுப்புகளும் சேர்ந்து இன்புறும்"
(26). ஒவ்வொரு கிறிஸ்தவனும்,
மற்றவனின் துன்பத்திலும் இன்பத்திலும் பங்குகொள்ள
வேண்டும் என்ற பாடமே இங்கு போதிக்கப்படுகிறது.
என் உடன் உழைப்பாளிகளுடன் இணைந்து செயல்படுகின்றேனா? ஒற்றுமையின்
கருவியாக உள்ளேனா?
நீங்களோ கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் ஒர் உறுப்பு
நற்செய்தி : லூக் 1 : 1-4; 4 : 14-21
அருள்பொழுவு செய்துள்ளார்.
செபக்கூட்டத்தில் இயேசு தம் பணியின் இலட்சிய இலக்கை அறிவிக்கிறார்.
இறைவாக்கினர் வரிசையில் தாம் அனுப்பப்பட்டவர் என்பதைக்
குறிக்க அருள்பொழிவு செய்துள்ளார்"
என சாட்சியம்
கூறுகிறார். பேதுருவும் தம் அருளுரையில் இஸ்ரயேல் மக்களுக்கு
சாட்சியம் கூறுகிறார். "
கடவுள் நாசரேத்து இயேசுவின்
மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்..."
(திப. 10 : 38).
இயேசுவில், இயேசுவைப்போல் நாமும் திருமுழுக்கில் அருள்பொழிவு
பெற்றுள்ளோம்.
"
தடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; அவரே நமக்கு அருள்பொழிவு
செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத்
தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம்
முத்திரையைப் பதித்தார்" (2 கொரி. : 22).
நாம் பெற்ற அருள்பொழிவு கடவுளின் மக்களாகும் ஒரு உரிமை
மட்டுமல்ல... கடவுள் மக்களாக வாழ்வதற்கு ஒரு சவால். இறை
அடியார்களின் அருள்பொழிவு அனுபவத்தை உள்ளார்ந்த விதமா விளக்குகிறது
திருமந்திரம்:
"
விளக்கைப் பிளந்து விளக்கினையேற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டு
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான்கழல் மேவலுமாமே. "
எளியோர்க்கு நற்செய்தி
எல்லா இறைவாக்கினருமே ஏழைகளுக்கு சார்பாக... ஏழைகளின் உரிமைகளுக்காகக்
குரல் கொடுத்தனர். குறிப்பாக ஆமோஸ் இறைவாக்கினர்
சாட்சியம் நம் உள்ளத்தைத் தொட்டு உலுக்குகிறது.
"
எளியவனை ஓரு சோடி செருப்புக்கு விற்கிறார்கள் (2 : 6) ஏழை
மக்களது கூக்குரல் இறைவனை எட்டுகிறது என்கிறார் திருப்பாடல்
ஆசிரியர். அவர்களே இறைவனைச் சார்ந்து வாழ்கிறார்கள்
(திபா. 9. 22.25,69). ஏழைகளின் எதிரிகள் இறைவனின் எதிரிகள்
(திபா. 18 : 23; 9 :14). எனவே இறைவனின் அன்புக்குச் சிறப்பாக
உரியவர்களாகிறார்கள் ஏழை மக்கள்.
"
இறைவா! நீ எடுத்துள்ள எண்ணிலா வடிவங்களுள் ஏழை வடிவத்தை
நான் என்றென்றும் ஏத்துவேனாக!"
' என்று விவேகானந்தர்
வேண்டினார். ஏழைகள் பற்றிய நம்து கண்ணோட்டம் என்ன? ஏழைகளை
நண்பர்களாகக் கொள்ள நாம் பெருமிதப்படுகிறோமா? இயேசுவும்
ஒரு ஏழைதானே!
ஆண்டவர் அருள்குரும் ஆண்டினை அறிவிக்க
அருள் தரும் ஆண்டு ஜூபிலி ஆண்டைக் குறிக்கிறது. லேவியர்
ஆகமத்தில் (25 : 10 - 13) இவ்வாண்டு மெசியாவின் ஆண்டை,
மீட்பின் காலத்தைக் குறிக்கிறது. ஜூபிலி ஆண்டின் மகிழ்ச்சியை
இயேசுவின் வருகை கொணர்ந்துள்ளது என்பது இங்கு அறிவிக்கப்படுகிறது.
ஏன்? ஜூபிலி ஆண்டில் (ஏழாவது ஏழு ஆண்டுகளின் நிறைவு) அதாவது
ஒவ்வொரு 50-வது ஆண்டிலும் மக்கள் மத்தியில் சமத்துவ -
சகோதரத்துவ உறவுகள் மலர, சில உடைமைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இது மன்னர்கள் ஆட்சி வருமுன் இஸ்ரயேல் மக்கள் மத்தியில்
நிகழ்ந்த சமூக சீர்திருத்தமாகும். யாவே ஆண்டவரே நிலம் அனைத்திற்கும்
உரிமையாளர். மக்கள் அவரது பங்காளிகள். எனவே ஒரு சிலர்
மட்டும் நிலம் வைத்திருப்பது இறைவனின் திட்டத்திற்கு எதிரானது
என உணர்ந்திருந்தனர் (எசா. 5 : 8 - 10; எசே. 46- 7). இந்த
நிலவுடைமைப் பார்வையும், கருத்தும் சமத்துவ சமுதாயம்
உருவாக மிகவும் அடிப்படையென்று நாம் விஞ்ஞானப்பூர்வமாக
அறிகிறோம்.
இன்று ஏழைகள் விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான அம்சம்
நிலஉடைமைச் சீர்திருத்தமாகும். ஏனெனில் நில பகிர்வு இல்லையேல்,
அடிப்படை - நீதியான- நிலையான - சமத்துவம் நிகழ முடியாது.
ஆண்டவரின் ஆவி என்மேலே... என்னை அருள்பொழிவு
செய்துள்ளார்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ