பெரியவர்களாக வாழ விரும்பினால் குழந்தை உள்ளம் கொண்டு வாழச் சொல்லி
25 ஆம் ஞாயிறு திருப்பலி நம்மை அழைக்கிறது.
குழந்தை உள்ளத்தோடு வாழ்ந்தால் பெரியவர்களாக வாழலாம். குழந்தைகளிடம்
தான் இறையாட்சி இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
குற்றங்களை மறங்து விடும் மனதால் ஒன்று.
அன்றாட அலுவலில் ஒவ்வொருவருமே அடுத்தவரிடம் கைகட்டி வேலை செய்வதைவிட,
அடுத்தவரை கைதட்டி வேலை வாங்கவே ஆசைப்படுகிறோம்.
சும்மா நடந்து போகும்போதுகூட சீடர்கள் நடுவே நம்ம இரண்டு பேரில்
யார் தான் பெரியவர்? என்ற விவாதம். வாதாடிய விவாதத்திற்கு விடையை
எடுத்துச் சொல்ல இயேசுவோ சிறு பிள்ளையை எடுத்து நடுவே
நிறுத்துகிறார். சிறுபிள்ளைககள் கபடற்றவர்கள். தன்னலம், போட்டி,
பொறாமை இவைகளை அறியாதவர்கள். சிறுபிள்ளை மனம் கொண்டோரே பெரியவர்களாக
வாழும் தகுதி கொண்டோர். பதவி வேண்டும் என ஆசைப்படுவோர் உதவும் மனம்
கொண்டோராய் இருக்க வேண்டும். முதல்வராக இருக்க விரும்பினால் வேலைகளை
சலிப்பின்றி செய்ய வேண்டும்.
கடமையை கண்ணாக செய்ய வேண்டும். அன்போடு அயலாரை அரவணைக்க வேண்டும்.
இனிமையாகப் பேச வேண்டும். உறவை ஏற்படுத்தவேண்டும். தானம் செய்யவேண்டும்.
உண்மையே பேசவேண்டும்.
பதவி என்பது நற்பண்புக்குக் கிடைக்கும் உயர்வு. மனித மாண்புக்கு
கிடைக்கும் உயர்வு. முதல் நிலை வர விரும்புவோர், முதலில்
தொண்டுசெய்யும் மனம் கொண்டிருக்க வேண்டும். தலைமை ஏற்க
விரும்புவோர், முதலில் தொண்டனாய் வாழ்வைத் தொடங்க வேண்டும். மனித
குலம் தழைக்கும் பணியை பிறருக்கு இழைக்க வேண்டும். மனித நேயம் மறந்தோரை
மனிதராக்கும் பணியை முதல்வராய் நின்று செய்ய முற்படவேண்டும்.
சிறு பிள்ளையாய் சிரித்துத் திரிந்து, பணியை பணிவோடு செய்து எல்லோரையும்
ஏற்று, இறங்கி நின்று அரவணைக்கும் போது பதவி ஏறி வந்து அரவணைக்கும்.
கடைசியாக வரிசையில் நின்றாலும் முதல் வரிசையில் முதல்வனாய் நின்று
பெரியவர்களாக பட்டியலில் இடம் பெறலாம்.
பதவி தேடும் பணி சிறக்காது. பணி சிறக்கச் செய்தால் பதவிகூட சிறக்கும்
விண்ணின் அரசை அறிவிக்க அதிகாரம் தேவையில்லை, ஆணவம் தேவையில்லை,
அடக்குமுறை தேவையில்லை. குழந்தையுள்ளம் போதும்.
குழந்தையுள்ளம் தந்து நம்மை இறையரசின் வழியில் நடக்க அருள் தரும்
திருப்பலி இது. குழந்தையுள்ளம் கொண்டு தொண்டு செய்யும் மனம்
வேண்டும் இறைவா என மனமுருகி மன்றாடுவோம்.
1. நீதிமான்களை கடவுளின் மக்கள் என அழைக்கும் இறைவா!
திருச்சபையை வளர்த்தெடுக்கும் திருப்பணியாளர்களை பகைவர்களிடமிருந்து
பாதுகாத்தருளும். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும்,
அவர்களது பொறுமையை சோதித்தறியவும் ஏற்படுகின்ற இக்கட்டுகளுக்கு
இடையில் அவர்களது வாய் மொழி வழியாக பாதுகாப்பு தரவேண்டும்
என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியை ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி நீதியை
விளைவிக்கும் என அறிவித்த இறைவா!
ஏழை எளியோரின் வசதி வாய்ப்புகளை பெருகச் செய்யும் மனநிலையுடன்,
தூய்மை அது நாடும் அமைதி, பொறுமை, இணங்கிப் போகும் தன்மை
நடுநிலை தவறாமை, வெளிவேடமற்ற தன்மை போன்ற நற்பண்புகளுடன்
தொண்டு செய்யும் தலைவர்களை நாடுகளிடையே பெருகச் செய்ய
வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. "முதல்வராய் இருக்க விரும்பினால் கடைசியாக
அனைவருக்கும் தொண்டராக இருக்க வேண்டும்" எனப்
பணிக்கும் இறைவா!
எங்களிடையே அனைவருக்கும் தொண்டராயிருந்து பணிசெய்யும்
அருட்தந்தைக்கு உடல் உள்ள ஆன்மீக நலம் தந்து இன்னும்
மிகுதியாகப் பணிசெய்திட விண்ணகக் கொடையால் நிரப்ப
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. குழப்பத்தையும் கொடுஞ் செயலையும் நீக்கும் அன்பு
தெய்வமே எம் இறைவா!
எங்கள் குடும்பங்களிலும், பணிசெய்கின்ற இடங்களிலும்,
சமுதாயத்தின் வேறுபாடுகளிலும் ஏற்படுகின்ற
குழப்பங்களில் சிக்கித் தவித்துக் கொண்டு
கொடுமைகளுக்கு இடையில் வேதனையில் வாடுகின்றோம்.
குழப்பங்கள் நீங்கி மனநிம்மதியோடு வாழும் சூழ்நிலையை
தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5 இறையாட்சிக்கு குழந்தையுள்ளம் போதும் என அறிவிக்கும்
இறைவா!
அதிகாரம், ஆணவம், அடக்கு முறை இவைகளால் பிறரைக்
குறைகூறித் திரிவதால் சண்டை சச்சரவு, கட்சி
மனப்பான்மை, இவைகள் மனித செயல்களை இழிவு
படுத்துகின்றன. மனிதம் மாண்புறும் செயல்களைச் செய்து
முதலானோர் பட்டியலில் இடம் பெற இங்கே கூடியுள்ள
அனைவருக்கும் குழந்தையுள்ளம் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
ஒரு முறை கான்ஸ்டன்டைன் சக்ரவர்த்தி தனது அரசவைப் பரிவாரங்களோடு
நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார். அவர் போகின்ற
வழியில் ஒருவன் ஓடி வந்து சக்கரவர்த்தியின் கன்னத்தில் ஓங்கி
அறைந்தான்.
இதைக் கண்ட படை வீரர்கள் கோபமடைந்து "பேரரசே! அந்தக் கயவனைக்
கொன்று விடும்" என்றனர்.
அதற்கு சக்கரவர்த்தி மறுமொழியாக என்னுடைய பணியாளர்களில் மிகவும்
தாழ்நிலையில் உள்ள ஒருவர் செய்த செயலையே நானும் செய்வது
பெரிதா? ஆனால் நான் அந்த மனிதனை மன்னிக்கிறேன். இச்செயல் என்னுடைய
மிகப்பெரும் ஆற்றலின் அடையாளமாய் இருக்கிறது என்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டரைச் சந்திக்க குறைதீர்க்கும்
நாளில் எட்டுவயது சிறுவன் மனுவோடு வந்தான். அந்த மனுவில்
பிரிந்து வாழும் எனது பெற்றோரைச் சேர்த்து வையுங்கள் என்று
சொல்லியிருந்தான். தான் சேர்த்து வைத்திருந்த தனது 40 ரூபாயைக்
கொடுத்து நானும் என் தங்கையும் எனது தாத்தா வீட்டில் அன்பில்லாமல்
|கஷ்டப்படுகிறோம். இந்தத் தொகையைப் பெற்று விரைவில் செயல்படுங்கள்
என்று கேட்டுக் கொண்டான். குழந்தைகளிடம் தான் இறையாட்சி இருக்கிறது
இது ஓர் உதாரணம். பிரிந்திருப்பதையே விரும்புகிறவர்கள் பெரியவர்கள்.
இணைந்து வாழ்வதையே விரும்புகிறவர்கள் குழந்தைகள். பிரிந்து போன
உறவுகளை இணைக்கத்தான் இறைவனே குழந்தையானார். அத்தகைய குழந்தையுள்ளமே
இறையாட்சியின் நற்குணம். இன்றும் நம் மனங்களில் நீங்காமல் இருப்பவர்கள்
குழந்தை உள்ளத்தோடு நம்மை வளர்த்த தாயும் புரியாத மழலை
மொழியில் பேசியபோது நம்மோடு அன்பாக உரையாடிய முதல் வகுப்பு ஆசிரியையும்தான்.
அவர்கள் தான் சிறந்த தலைவிகள். அவர்கள் வழி வாழும்போது நாமும்
உயர்த்தப்படுவோம்.
சீன நாட்டுச் சிறுவன் ஒருவன் "தாயிடம் அம்மா வாழ்க்கையின் இரகசியம்
என்ன?" என்று வினவினான். அம்மா அதற்கு வாழ்க்கையின் இரகசியம்
மகிழ்ச்சி என்று பதில் சொன்னாள்.
அடுத்த நாள் பள்ளி சென்ற அந்தச் சிறுவனின் வகுப்பில் மாணவர்களிடம்
ஆசிரியைக் கேட்டார். "நீங்கள் எல்லாம் படித்து முடித்து என்னவாகப்
போகிறீர்கள்" என்று
"நான் டாக்டர் ஆவேன், நான் கலெக்டர் ஆவேன்" என ஒவ்வொருவரும்
அவரவர் விருப்பத்தை சொன்னார்கள். அந்தச் சிறுவனோ "நான் மகிழ்ச்சியாக
இருக்கப் போகிறேன்" என்றான்.
அப்போது ஆசிரியர் "எனது கேள்வியை நீ நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை"
என்றார். சிறுவனோ ஆசிரியரைப் பார்த்து "வாழ்க்கையைப் நீங்கள்
நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை" என்றான்.
மகிழ்ச்சியாக வாழத் துணைபுரிவது குழந்தையுள்ளமே!
இறையரசை அறிவக்கத் துணைபுரிவது குழந்தை உள்ளமே!
ஆணவம், அடக்கு முறை அகற்றத் துணைபுரிவது குழந்தை உள்ளமே!
விரும்பும் பதவியை பணிசெய்ய பெற்றுத் தருவது குழந்தை உள்ளமே!
குழந்தை உள்ளம் கொண்டு கடைசியாய் நின்று பணி செய்வோம். பதவியில்
இல்லாவிட்டாலும் பலரும் பாராட்டும் பரிசு பெற்று முதலிடம்
பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
நீங்கள்லாம் பெரிய ஆளுங்க ....
நம்முடன் இருக்கும் நமது நண்பர்கள் யாரையாவது நாம் கிண்டல் செய்ய,
கலாய்க்க இந்த வார்த்தையை வாக்கியத்தை நாம் அதிகமாக பயன்படுத்துவோம்.
நீங்கள்லாம் யாருப்பா பெரிய ஆளுங்க... எங்களெல்லாம் உங்களுக்கு கண்ணு
தெரியுமா என்றெல்லாம் சொல்லியிருப்போம். ஒன்று அவர்கள் நம்மை
விட்டு தொலைவில் சென்று விட்டார்கள் என்ற வருத்தம் இல்லையென்றால்
எங்கே நம்மை விட அதிகமான தொலைவு உயரம் சென்று விடுவார்களோ என்ற பயம்
. எனவே அதனை அங்கலாய்ப்பாக மாற்றி இவ்வாறு சொல்வோம்.
உலகில் வாழும் அனைவருக்கும் தாம் இன்னும் அதிகமாக வளர வேண்டும்
பொருளளவில் மதிப்பளவில், செல்வாக்களவில் என்ற எண்ணம் உண்டு. யாரும்
நான் வளர வேண்டாம் குறைய வேண்டும் என்று நினைப்பது கிடையாது
(திருமுழுக்கு அருளப்பரைத் தவிர...) அப்படியிருக்க இயேசுவின் சீடர்களுக்குள்
இத்தகைய கேள்வி எழுந்ததில் வியப்பேதும் இல்லை. பெற்றோர்களின் உயிர்
பிரியும் முன் சொத்தினை பங்கு போட விவாதம் செய்யும் மனிதர்கள்
வாழும் காலத்தில் இயேசுவின் பிரிவிற்கு பின் அவர் பணியை செய்ய, மக்களை
வழிநடத்த தங்களுக்குள் உயர்ந்தவர் யார் என்ற விவாதம் அவர்களுக்குள்
எழுகிறது. அதனைக் கவனித்த இயேசு மூன்றே வார்த்தைகளில் அதற்கு பதிலளிக்கிறார்.
அவரின் இப்பதில் இன்றைய காலகட்டத்தில் யார் பெரியவர் என்று
கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கும் பொருந்தும். யார் பெரியவர்? நீயா?
நானா? என்று நாம் வாழ்கின்ற சமூகத்தில் சில சமயம் சப்தமாகவும் பல
சமயம் மௌனமாகவும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தியின் மூலமாக இயேசு யார் பெரியவர் என்பதை நமக்கு
மூன்று வார்த்தைகளில் சொல்கிறார்.
1. தொண்டனாயிருப்பவர்.
2. வெறுமையாக்குபவர் .
3. ஏற்றுக்கொள்பவர்.
தொண்டனாயிருப்பவர்...
தொண்டன் என்பவன் ஒரு அடிமட்ட நிலை மனிதன் . தனது தலைவன் மற்றும் மக்களைப்
பற்றியும் அவர்களின் சூழல் பற்றியும் நன்கு அறிந்தவன். எந்நிலையிலும்
தயாராக இருப்பவன் பிறருக்கு உதவ பகிர விருப்பமுடையவன். நல்ல தொண்டனே
சிறந்த தலைவனாக முடியும் என்பதை நன்கு உணர்ந்ததனாலே தான் இயேசு ,
உங்களில் முதன்மையானவராக இருக்க விரும்புபவர் முதலில் தொண்டராக இருக்கட்டும்
என்கிறார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் அப்படி இருந்தும்
காட்டினார் தன்வாழ்வினால். நமது வீடுகளில் யார் தலைவர் யார் தொண்டர்.?
வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து குடும்பத்தை நிர்வகிக்கும்
தாய்மார்கள் ஒரு போதும் தங்களை தலைவர்களாக எண்ணியது கிடையாது. சாதாரண
தொண்டர்களிலும் கீழான பணிவிடை புரிபவர்களாகவே தங்களை நினைத்து பணியாற்றுவர்.
ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் உள்ள நலன் ஏற்றம் இறக்கம்
அனைத்தையும் நன்கு அறிந்தவர் அவர் ஒருவரே. அன்னையர்கள் தொண்டர்கள்
போல் செயலாற்றும் தலைவர்கள். எனவே தான் இயேசு ஒரு தொண்டனாக இருந்து
,முதன்மை பெற்று பெரியவர்கள் என்னும் நிலையில் நம்மை நிலைத்து
நிற்கச் சொல்கின்றார். அடித்தளத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வோம்
அப்போது தான் அதன் மேல் எப்படிப்பட்ட கட்டிடம் கட்டலாம் என்பதை
உறுதி செய்ய முடியும். தொண்டனாயிருந்து தூய தலைவராக முயல்வோம்.
2. வெறுமையாக்குபவர் .....
வெறுமையாக்குதல் என்பது ஒன்றுமில்லாமை . வெற்றிடம். அமெரிக்க
நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி ஒருவர் வெற்றிடத்தில் புவி
ஈர்ப்பு விசை குறித்த சோதனையை நிகழ்த்தினார். முதலில் சாதாரணமாக
ஒரு குறிப்பிட்ட உயரமான இடத்திலிருந்து ஒரு இரும்புக் குண்டு,
மற்றும் ஒரு பறவையினது மெல்லிய இறகு இரண்டையும் மேலிருந்து கீழே
போட்டார். இரண்டும் அதன் அதன் எடைக்கேற்ப, இரும்பு விரைவாகவும்
இறகு தாமதமாகவும் பூமியை தரையை வந்தடைந்தது. அதன் பின் ஒரு காற்று
புகா வெற்று அறையினுள் இரும்பு இறகு இரண்டையும் வைத்து, தன்
ஆராய்ச்சியை மீண்டும் துவக்கினார். அறை முழுதும் வெற்றிடம் .
காற்று கூட இல்லை அனைத்தும் வெளியேற்றப்பட்டு, வெறுமையின்
கூடாரத்தில் சோதனை நிகழ்த்தப்பட்டது. எடையில் வேறுபாடுடைய இரும்பு
இறகு இரண்டும் மேலிருந்து கீழே வர ஒரே அளவு நேரம் எடுத்துக்கொண்டன.
காரணம் வெற்றிடத்திற்கு தெரியாது எடை . அதைப் பொருத்தவரையில்
இரண்டும் ஒரு பொருள் . மேலிருந்து போடப்பட்ட அவை இரண்டும் பூமியை
அடைய வேண்டும் என்பது மட்டுமே அதன் இலக்கு. சாதாரண ஒரு இடம்
வெற்றிடமாகும் போதே இவ்வளவு மாற்றம் என்றால் நமது மனம்
வெற்றிடமாகும் போது நம்மில் எவ்வளவு மாற்றாம் உண்டாகும் என்று
சிந்திப்போம் . இத்தகைய ஒரு வெற்றிடம் நமது மனதிலும் தோன்றி
ஏற்றத்தாழ்வு பார்க்காது பணிபுரிய இயேசு அழைக்கிறார். நம்மை
வெறுமையாக்கி, வெறுமையில் நிறைவு காண அழைக்கிறார்.
3. ஏற்றுக்கொள்பவர்.....
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்பது
தமிழ்க்கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள். தன்னிடம்
இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து இட்டு வாழ்பவர்கள் பெரியவர்கள்
.பகிர்ந்திடாதோர் எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் போலாவர்
என்கிறார். பொருள் இருப்பவன்- இல்லாதவன், உயர்ந்தவன் -தாழ்ந்தவன்
என அனைவருமே சமம் என உணர்ந்து ஏற்று வாழும் மனிதர்களே நல்ல
தலைவர்கள் பெரியவர்கள் என இயேசு எடுத்துரைக்கின்றார். ஏற்றுக்
கொள்ளுதல் மிகவும் முக்கியமான ஒன்று . எந்த எதிர்பார்ப்பும் இன்றி
அவரவர் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். நான் தான்
உங்கள் அனைவரின் தலைவன் என்று வீடு வீடாய் சென்று சொல்ல வேண்டிய
தேவை இல்லை மாறாக, உடன் வாழும் மக்களின் தேவைகளையும் அவர்களின்
ஏற்ற இறக்கங்களையும் நன்கு அறிந்திருந்து செயல்பட்டாலே போதும்.
அவர்களே சொல்வார்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் நாம் தாம்
அவர்களின் தலைவர் பெரியவர் என்று.
எனவே அன்பு உள்ளங்களே செய்வதற்கரிய செயல்களைச் செய்யும்
பெரியவர்கள் போல் நாம் செயல்பட முயல்வோம். ஏனெனில் சிறியோர்
அத்தகைய செய்வதற்கரிய செயல்களை செய்ய மாட்டார். உடலளவில்
சிறியவர்களாக இருந்தாலும் உள்ளத்தளவில் பெரியோராக செயல்பட்டு வாழ
அருள் வேண்டுவோம். நம்மால் முடிந்த உதவிகளை தொண்டனைப் போல செய்து ,
நமது பிறப்பிற்கும் இருப்பிற்கும் (வாழ்க்கைக்கும்) அர்த்தம்
இருக்கிறது என்று எடுத்துரைத்து வாழ்வோம். நமது இருப்பால் ஒருவர்
பயனடைகிறார் என்றால் நாம் பெரியவர்களே. அப்போது நம்மைப் பார்த்து
யாராவது நீங்கள்லாம் யாருப்பா பெரிய ஆளுங்க என்றால், மறுக்காமல்
சொல்வோம் ஆம் நாங்களும் பெரியவர்களே என்று..... இறையருள் என்றும்
நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.
Sr. Merina OSM
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு
(செப்டம்பர் 19, 2021)
சாலமோனின் ஞானம் 2:17-20
யாக்கோபு 3:16
- 4:3
மாற்கு 9:30-37
யார் பெரியவர்?
'நீங்கள் கடவுளைவிட பெரியவராக அல்லது கடவுளைப் போல பெரியவராக
இருப்பீர்கள்' என்பதுதான் விவிலியத்தில் மனுக்குலம் எதிர்கொள்ளும்
முதல் சோதனை. காயின் ஆபேலைத் தாக்கக் காரணமாக இருந்தது,
'யார் பெரியவர்?' என்ற உந்துணர்வே.மக்கள் பாபேல் கோபுரம்
கட்ட முனைந்ததும்,யாக்கோபு ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையைப்
பெற்றுக்கொண்டதும், யோசேப்பின் சகோதரர்கள் அவரை மிதியானியர்கள்
கையில் விற்றதும்,பாரவோன் இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்தியதும்,
பாரவோன் இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் விடுவிக்க மறுத்ததும்,
சவுல் தாவீது மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்க விரும்பியதும்,
தாவீதின் மகன்களே ஒருவருக்கு ஒருவர் அரியணை சண்டை இட்டதும்,
சாலமோன் ஞானியாக இருந்தாலும் சிலைவழிபாட்டுக்கு தன்னையே கையளித்ததும்
என எல்லா நிகழ்வுகளிலும் கதைமாந்தர்கள் தங்களுக்குள் எழுப்பிய
கேள்வி, 'யார் பெரியவர்?' என்பதுதான்.
இந்தக் கேள்விதான் இந்த உலகின் பெரிய நாடுகள் எடுக்கும்
முடிவுகளிலிருந்து, நம் வீட்டிற்குள் நடக்கும் சின்னச் சண்டை
வரை அனைத்தின் பின்புலத்தில் இருக்கிறது. 'பெரியவராக' அல்லது
'முக்கியத்துவம்' பெற்றவராக இருக்க நாம் விருப்பம் அல்லது
வெறி கொண்டிருக்கின்றோம்.
'பெரியவராக இருத்தல்' என்பதில் மூன்று கூறுகள் உள்ளன:
(அ) அனைவருடைய கவனமும் பெரியவர்மேல் இருக்கின்றது. எடுத்துக்காட்டாக,
திருமண மண்டபத்திற்குள் அமர்ந்திருக்கிறோம். திடீரென 'பெரியவர்'
ஒருவர் வருகின்றார். அனைவரும் அவரை நோக்கித் திரும்புகின்றனர்.
(ஆ) அனைவரும் அவருக்குப் பணிவிடை புரிவர். 'பெரியவர்' வரும்போது
கதவுகள் திறக்கப்படுகின்றன.
(இ) அனைவரும் அவருடைய வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவர். அல்லது
அவர் தன் வார்த்தைகளால் அனைவரையும் தன் கட்டுக்குள்
வைத்திருப்பார்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குள் இருக்கும் இந்தச்
'சிற்றின்ப நாட்டத்தை' சுட்டிக்காட்டுவதோடு, 'பெரியவராக இருப்பது'
எதில் அடங்கியிருக்கிறது என்பதையும் அறிவுறுத்துகிறது.
சாலமோனின் ஞானநூல் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்த யூத குழுமத்திற்கு
எழுதப்பட்டது. அலெக்ஸாந்திரியா நகரம் கிரேக்க கலாச்சாரத்தை
மிகவும் உள்வாங்கி செல்வச் செழிப்பிலும், கல்வி அறிவிலும்
மேலோங்கி நின்றது. அந்நகரில் வாழ்ந்த யூதர்கள் கிரேக்க கலாச்சாரத்தினால்
ஆச்சர்யப்பட்டு, தங்களின் 'திருச்சட்டம் பின்பற்றும்
வாழ்வை' காலாவதியானதாக, உலகிற்கு ஒவ்வாத ஒன்றாகக் கருதினார்கள்.
காலப்போக்கில், அவர்கள் கிரேக்க கலாச்சாரத்தை ஒட்டி வாழவும்
தொடங்கினார்கள். இதே நேரத்தில் மற்றொரு யூதக் குழுமம்
கிரேக்க கலாச்சாரத்திற்கு உட்படாமல் தங்களின் சட்டங்களையும்,
மரபுகளையும் பின்பற்றுவதிலும், தாங்கள் கடவுளால்
தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தினர் என்ற சிந்தனையிலும் வாழ்ந்தனர்.
இந்த இரு குழுமங்களுக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல்களும்,
சண்டைகளும் வந்தன. தங்களின் திருச்சட்டத்தை மட்டும்
பிடித்துக்கொண்டவர்கள் மற்றவர்களை 'நம்பிக்கையை மறுதலித்தவர்கள்'
என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால், இப்படி குற்றம் சாட்டப்பட்ட
முதல் குழுவினர் - அதாவது, யூதர்களாக இருந்தாலும் கிரேக்க
கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் - திருச்சட்டத்தைப் பின்பற்றியவர்களின்
செய்கை தவறு என்றும், அவர்கள் வைத்திருக்கும் கடவுள் நம்பிக்கை
என்பது மூடநம்பிக்கை எனவும் நிரூபிக்க விரும்பினார்கள்.
எனவே, அவர்கள் கடவுளையும், கடவுளைப் பின்பற்றுபவர்களையும்
சோதிக்க விரும்பினார்கள். இப்படி இவர்களைச் சோதிக்கும்போது
கடவுள் வருவாரா என்று பார்த்து, கடவுளையும் பொய்யராக்க
நினைத்தார்கள். இந்நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில்
(காண். சாஞா 2:17-20) வாசிக்கின்றோம்: 'நீதிமான்களுடைய
சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம். முடிவில் அவர்களுக்கு என்ன
நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால்
அவர் அவர்களுக்கு உதவி செய்வார்.'
கிரேக்க கலாச்சாரத்தைப் பின்பற்றிய 'பொல்லாதவர்கள்' தங்கள்
அடையாளத்தை வெளிப்புற கிரேக்க சின்னங்களில் தேடுகின்றனர்.
தாங்கள் கிரேக்கர்களைப் போல இருப்பதால் இவர்கள் தங்களை
'பெரியவர்கள்' என நினைத்தார்கள். மேலும், இதனால் தங்களைச்
சாராத மற்றவர்களைப் பழிதீர்க்கவும் விரும்பினார்கள். ஆனால்,
கடவுளின் திருச்சட்டத்தையும், அவர் தந்த கடவுளின் பிள்ளைகள்
என்னும் அடையாளத்தையும் பின்பற்றிய 'நீதிமான்கள்' தங்கள்
அடையாளத்தை தங்களுக்கு உள்ளே கண்டனர். இந்த நீதிமான்கள் தங்கள்
நீதியான வாழ்வின் வழியாக தாங்கள் 'பெரியவர்கள்' என
நினைத்தார்கள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 3:16-4:3) தன்
திருச்சபையின் அடுத்த பிரச்சினையான 'பிளவு மற்றும் கட்சி
மனப்பான்மையை' கையாளுகின்றார். யாக்கோபின் திருச்சபை
பொறாமை மற்றும் தன்னல எண்ணங்களால் துன்பற்றது. பொறாமை மற்றும்
தன்னல மையப்போக்கின் வழியாக தங்களையே 'பெரியவர்கள்' என
நினைத்துக்கொண்டனர் அத்திருச்சபையில் உள்ள சிலர். ஆனால்,
இந்த இரண்டிற்கும் மாறாக, 'கடவுளின் ஞானத்தை' அவர்களுக்கு
முன்வைக்கிறார் யாக்கோபு: 'ஞானத்தின் பண்பு தூய்மை. அது அமைதியை
நாடும். பொறுமை கொள்ளும். இணங்கிப் போகும். இரக்கமும் நற்செயல்களும்
கொண்டிருக்கும். நடுநிலை தவறாது. வெளிவேடம் கொண்டிராது.'
எல்லாவற்றிற்கும் மேலாக, ஞானத்தின் கனி அமைதி. யாக்கோபின்
திருச்சபையின் பிரச்சினை நம்பிக்கையாளர்களுக்கு
வெளியிலிருந்து வரவில்லை. மாறாக, அவர்கள் உள்ளத்தில் உதிக்கிறது.
'நாட்டம்' என்பதும், 'இன்பம்' என்பது ஒரே கிரேக்க
வார்த்தையால் குறிக்கப்படுகிறது. ஆக, 'நாட்டம்' என்ற ஒன்று
இருக்கக் காரணம் அந்த நாட்டம் கொண்டுவரும் இன்பமே. நாட்டம்
கொண்டுள்ள மனிதர் தன்னுள்ளே பிளவுபட்டிருக்கிறார். அது அவருக்கு
பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்தப் பிளவை நிரப்ப அவர் தன்
அந்தஸ்து, அதிகாரம், புகழ், அறிமுகம் ஆகியவற்றை
நாடுகிறார். இது தொடர் போராட்டத்திற்கும், சண்டை சச்சரவுகளுக்கும்,
கொலைக்கும் வழிவகுக்கிறது.
'யாரும் பயணம் செய்யாத பாதை' என்ற நூலின் ஆசிரியர் ஸ்காட்
பெக் 'க்ராட்டிஃபிகேஷன்' என்ற வார்த்தையை அறிமுகம்
செய்தார். இவர் யாக்கோபின் திருமடலில்தான் இந்த சிந்தனையைக்
கண்டறிந்திருக்க முடியும். அதாவது, நீண்டகால மதிப்பீடுகள்
தரும் மகிழ்ச்சிக்கு காத்திராத மனம், சின்னச் சின்ன
சிற்றின்பங்களை நாடி, தன்னையே 'கிராட்டிஃபை' செய்து
செய்துகொள்ள நினைக்கிறது. உதாரணத்திற்கு, குழுவாழ்வு என்பது
ஒரு நல்ல மதிப்பீடு. எல்லாரும் சேர்ந்து வாழ்வது, சேர்ந்து
உழைப்பது, சேர்ந்து சாப்பிடுவது என்பது. ஆனால், இந்த மதிப்பீடு
ஒரே நாளில் நாம் அடையக்கூடியதா? இல்லை. இதற்கு பல மாதங்கள்
அல்லது ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமையாக
இருந்தால் இத்தகைய வாழ்வை நாம் கண்டிப்பாக அடைந்துவிட
முடியும். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமை காக்க மறுக்கும்
மனம் என்ன செய்கிறது? சிறு சிறு குழுக்களாக மக்கள்
பிரிந்து வாழ்வதில் சிற்றின்பம் தேடுகிறது. சாதி அடிப்படையில்,
மொழி அடிப்படையில், மதம் அடிப்படையில், இன அடிப்படையில்,
உறவு அடிப்படையில் என சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இந்தக்
குழு தரும் சின்னச் சின்ன பாதுகாப்பு உணர்வில் இன்பம் அடைகிறது.
ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்நேரமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம்
என்பதை அது மறந்துவிடுகிறது. சிற்றின்ப நாட்டம் (பாலியல்
உணர்வு என்று மட்டும் இதை நினைக்க வேண்டாம்!) உடனடி
தீர்வைத் தருகிறது. ஆனால், உடனடித் தீர்வுகள் எப்போதும் நல்ல
தீர்ப்புகளாக இருப்பதில்லையே. மேலும், சிற்றின்ப எண்ணங்கள்
கொண்டவர்கள் கடவுளிடமிருந்துகூட உதவி பெற முடியாதவர்களாக
ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் சோகத்தின் உச்சம்.
இப்படியான வாழ்வு ஒருவரின் ஆன்மீக வாழ்வையும் அழித்துவிடுகிறது.
இப்படி பிளவுபட்டிருப்பவர்கள், தங்கள் நாட்டங்களால் அலைக்கழிக்கப்படுவதால்,
கடவுளைச் சார்ந்திருப்பதிலிருந்து முற்றிலும் விலகி
விடுகிறார்கள். இவர்கள் கடவுளிடம் 'கேட்பதற்குப்' பதிலாக
அவரிடமிருந்து 'பறித்துக்கொள்ள' விரும்புகிறார்கள். மற்றும்
சிலர் கடவுளிடம் தவறானவற்றைக் கேட்கின்றனர். தன்மையம்
கொண்ட விண்ணப்பங்களுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இப்படிப்பட்ட
நிலையில் தன் திருச்சபையினர் கடவுளின் ஞானத்தை மட்டும்
கேட்கவும், அந்த ஞானத்தின் கனியாக அமைதியை அவர்கள் சுவைக்கவும்
அழைப்பு விடுக்கிறார் யாக்கோபு.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 9:30-37), 'யார் பெரியவர்?'
என்ற கேள்வியை இரண்டு படிநிலைகளில் அணுகுகிறது. நற்செய்தி
வாசகத்தில் முதல் பகுதியில் இயேசு தன் இறப்பை இரண்டாம்
முறை முன்னறிவிக்கின்றார். ஆனால் அவர் சொன்னது அவரின் சீடர்களுக்கு
விளங்கவில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.
இரண்டாம் பகுதியில் அவர்கள் புரிந்துகொள்ளாததற்கான காரணம்
நமக்குத் தெரிகிறது.
இயேசுவும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமிற்கு வருகிறார்கள்.
பல சீடர்களின் சொந்த ஊரும் அதுதான். ஆக, சீடர்கள் தங்கள்
சொந்த ஊருக்கு வருகின்றனர். வரும் வழியில் தங்களுக்குள்
'யார் பெரியவர்?' என்று விவாதிக்கின்றனர். தங்கள் சொந்த ஊரில்
தாங்கள் பெரியவர் என அவர்கள் காட்ட விரும்பினர். ஒவ்வொருவரும்
தாங்கள் செய்த போதனைகள், புதுமைகள், இயேசுவுக்கும் தங்களுக்கும்
உள்ள நெருக்கம், தங்களின் இன்றியமையாமை குறித்து தங்களின்
அடையாளத்தை மற்றவர்களுக்கு உறுதி செய்ய விரும்பினார்கள்.
தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களிடம் தங்களைப் பற்றிச்
சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள விரும்பினார்கள். இயேசு தன்னுடைய
தற்கையளிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சீடர்கள் தங்களின்
அடையாளத்தையும், தகுதியையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
தன் சீடர்களை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளாத இயேசு அவர்களுக்கு
இந்த நேரத்தில் 'யார் பெரியவர்?' என்று கற்பிக்கிறார்.
முதலில், 'பெரியவராக' இருப்பது என்பது 'பணி ஆற்றுவது' அல்லது
'சேவை செய்வது.' இயேசுவின் இப்போதனை அவரின் சமகாலத்து சிந்தனையை
தலைகீழாகப் புரட்டியது. ஏனெனில், சீடர்களைப் பொருத்தவரையில்
'பெரியவராக' இருப்பது என்பது 'பணிவிடை பெறுவது' என்ற
நிலையில்தான் இருந்தது. இரண்டாவதாக, சீடத்துவம் என்பது குழந்தைகளை
ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. குழந்தைகள் அடிமைகளைப் போல
அக்காலத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் இருந்தவர்கள்.
தங்களின் பெற்றோர்களின் விருப்பங்கள் மற்றும் தெரிவுகளைச்
சார்ந்தே வாழ்ந்தனர். இன்றுதான் நாம் குழந்தை என்றால் 'இன்னசன்ஸ்',
'தாழ்ச்சி', 'இயல்பானவர்கள்' என்று ரொம்ப ரொமான்டிக்காக
சொல்கிறோம். குழந்தைகள் என்பவர்கள் யூத மரபில் 'மனிதர்கள்
நிலையை அடையாதவர்கள்'. அவர்கள் வெறும் 'பொருட்கள்'. அவர்கள்
'வலுக்குறைந்தவர்கள்'. ஆக, இப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள
நிறைய தாழ்ச்சி தேவை. ஆக, குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று இயேசு சொல்லும்போது, அவர் தாழ்ச்சியைக் கற்பிக்கின்றார்
என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆக, பெரியவர் என்பவர்
யார்? கடைசியில் இருப்பவர். அல்லது தொண்டராக இருப்பவர்.
இவரால் மட்டும்தான் வலிமையற்ற குழந்தையையும் ஏற்று அரவணைத்துக்
கொள்ள முடியும். ஆக, 'பெரியவர் நிலை' என்பது 'தனியே நிற்க
முடியாதவர்களுக்கு உறுதுணையாக இருப்பதில்தான் இருக்கிறது'
என்றும், சீடர்கள் தங்களுக்குள் படிநிலையை வகுத்து அதில்
'பெரியவர் நிலையை' அடைதலை விடுத்து, தற்கையளிப்பு, பணிவிடைபுரிதல்,
மற்றவர்கள்மேல் அக்கறை போன்றவற்றில் அதைக் கண்டுகொள்ளவும்
அழைக்கின்றார் இயேசு.
இவ்வாறாக, 'முதன்மையாக இருப்பது' அல்லது 'பெரியவராக இருப்பது'
என்பது நமக்குள் பரவலாக இருக்கும் ஒரு உந்துணர்வு. இந்த உந்துணர்வின்
நேர்முகமான பகுதிதான் நம்மை முன்னேறத் தூண்டுகிறது. ஆனால்,
இதன் எதிர்மறையான பகுதி அடுத்தவர்களை அழிக்கவும், அடுத்தவர்களைக்
கண்டுகொள்ளாமல் இருக்கவும் செய்துவிடுகிறது. ஆகையால்தான்,
அலெக்ஸாந்திரியாவில் இருந்து யூதர்கள் தங்கள் இனத்தாருக்கு
எதிராகவே பழிதீர்க்க முனைந்தார்கள். தங்கள் தெரிவுகளைச் சரி
என்று காட்டும் முகத்தான் மற்றவர்கள்மேல் வன்முறையும், கோபமும்
காட்டினார்கள். அடுத்ததாக, தனிநபரின் நாட்டம் மையப்படுத்தப்பட்டால்
அது ஒட்டுமொத்த குழுமத்தின் நலனைப் பாதிக்கும் என அறிந்திருந்த
யாக்கோபு ஒவ்வொருவரும் தங்கள் உள்மனப் போராட்டங்களை வெல்ல
அழைக்கின்றார். தொடர்ந்து, சீடத்துவம் பற்றிய தவறான புரிதலைக்
கொண்டிருந்த தன் சீடர்களுக்கு 'பெரியவர்நிலை' என்பது
'சிறிதினும் சிறிதில்' இருக்கிறது எனக் காட்டுகிறார் இயேசு.
இயேசுவின் இப்புதிய புரிதலை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே, 'என்
ஆண்டவரே என் உதவி. அவரே என் வாழ்வுக்கு ஆதாரம்' (காண்.
திபா 54) என்று பாட முடியும்.
நாம் குழந்தைகள் நிலையிலிருந்து பெரியவர் நிலைக்கு வளர்தல்
அவசியம். ஏனெனில், வளர்தலில்தான் மேன்மை இருக்கின்றது. ஆனால்,
'நான் மற்றவர்களை விடப் பெரியவர்' என்ற ஒப்பீட்டு உணர்வே
களையப்பட வேண்டியது. இந்த உணர்வை நாம் எப்படிக் களைவது?
(அ) பிறருக்கும் எனக்கும் உள்ள வேற்றுமையைப் பாராமல் அவருக்கும்
எனக்கும் உள்ள ஒற்றுமையைக் காண்பது
பிறரைவிட என்னில் எது வேறுபடுகிறது என்று பார்க்கும்போது
அது மேட்டிமை உணர்வைத் தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக,
'நான் ஓர் அருள்பணியாளர். அவர் ஒரு பொதுநிலையினர்' என்று
நான் சிந்திக்கும்போது மற்றவரிடமிருந்து நான் எப்படி வேறுபட்டுள்ளேன்
என்பதை உறுதிப்படுத்த நான் முனைகின்றேன். ஆனால், 'அவர் ஒரு
நம்பிக்கையாளர். நானும் ஒரு நம்பிக்கையாளர்' என்ற நிலையில்
நான் அவரோடு ஒரே தளத்தில் நிற்கின்றேன். வேற்றுமை மறக்கின்றேன்.
(ஆ) இன்றியமையாதநிலையுணர்வு விடுத்தல்
'நான் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவும் இல்லை' என்று
நினைப்பதே இன்றியமையாதநிலையுணர்வு. இந்த உணர்வினால் நாம்
நமக்குரிய இடத்தைத் தக்கவைக்க நினைக்கின்றோம். ஆனால்,
யாரும் இல்லாமலும் எதுவும் நடக்கும் என்பதை நாம்
பெருந்தொற்றுக்காலத்தில் மிகவே உணர்ந்தோம்.
(இ) அடையாளங்கள் விடுத்தல்
குழந்தைகள் தங்களுக்கென்று எந்த அடையாளங்களையும் பற்றிக்கொண்டிருப்பதில்லை.
புதிய வீடு ஒன்றைக் கட்டி அதைத் திறக்கும் நிகழ்வுக்குச்
செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அங்கே வருகின்ற 'வளர்ந்தவர்கள்'
எல்லாம் ஒவ்வொன்றையும் திறனாய்வு செய்துகொண்டிருப்பார்கள்.
இது 'ஏசியன் பெயின்ட்ஸ்,' இது 'ஜக்வார்' ஃபிட்டிங்க்ஸ் என்று
ஒவ்வொன்றையும் ப்ராண்ட் கொண்டு அறிய முற்படுவார்கள். ஆனால்,
குழந்தைகளுக்கு அது வெறும் நிறமும் தண்ணீர் வரும்
குழாயும்தான். அடையாளங்களை அறிய முயல்பவர்கள், அடையாளங்களாக
தாங்கள் மாற விரும்புவார்கள்.
நம் குடும்பத்திலும், குழுமத்திலும், 'நான் பெரியவர்' என்று
உணர்வு நம்மில் எழுந்தால், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி,
குழந்தை ஒன்றைப் பற்றிக்கொள்தல் நலம். குழந்தைகள் மிகப்பெரிய
சமநிலையாளர்கள்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்
I சாலமோனின் ஞானம் 2: 17-20
II யாக்கோபு 3: 16- 4: 3
III மாற்கு 9: 30-37
"
கடவுளின் மக்களும் அலகையின் மக்களும்"
எதிரி நாடுகளோடு நடந்த போர்களில் நாட்டிற்குப் பல வெற்றிகளைத்
தேடித்தந்த படைத்தளபதி ஒருவன், மன்னரிடம், "
மன்னா! நம்முடைய
நாட்டிற்கு எத்தனையோ வெற்றிகளை நான் தேடித் தந்திருக்கின்றேன்.
அதனால் நீங்கள் என்னைத் தேரில் அமர்த்தி, நகர் முழுவதும்
கூட்டிச் சென்று கெளரவிக்க வேண்டும்"
என்றான். "
உனது
விருப்பம் போலவே ஆகட்டும்"
என்று சொன்ன மன்னன், அதற்கான எல்லா
ஏற்பாடுகளையும் செய்தான்.
மறுநாள் படைத்தளபதி தேரில் அமர்த்தப்பட்டு, நகர் முழுவதும்
அழைத்துச் செல்லப்பட்டான். அவனுக்கு முன்பாகச் சென்ற வீரன்,
"
நம் படைத்தளபதி வாழ்கவே"
என்று குரலெழுப்பிக் கொண்டே
சென்றான். திடீரென்று படைத்தளபதி அமர்ந்து சென்ற
குதிரையின் மீது ஏறிய ஓர் அடிமை படைத்தளபதிக்குப்
பின்னால்போய் அமர்ந்து கொண்டான். அந்த அடிமை, முன்னால்
சென்றுகொண்டிருந்த வீரன், "
நம் படைத்தளபதி வாழ்கவே!"
என்று
குரலெழுப்பியபோதெல்லாம் படைத்தளபதியின் முதுகில் அடித்தான்.
கூடவே, "
நம் படைத்தளபதி ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை!
அவர் நம்மைப் போன்று குறைபாடுகள் உடையவர்தான்! என்று
சொல்லிக் கொண்டே வந்தான். இது படைத்தளபதிக்குக் கடுஞ்சினத்தை
வரவழைத்தது.
அதனால் படைத்தளபதி நகர்வலம் முடிந்ததும் மன்னனிடம்,
"
மன்னா! நீங்கள் என்னைக் கெளரவிப்பதுபோல் கெளரவித்துவீட்டு,
ஓர் அடிமைக்கொண்டு என்னை அவமானப்படுத்திவிட்டீர்களே! நீங்கள்
ஏன் இப்படிச் செய்தீர்கள், இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை"
என்று சீறினான். இதற்கு மன்னன் படைத்தளபதியிடம், "
உன்னைப்
போன்று எல்லாராலும் படைத்தளபதியாக உயர முடியும் என்பதற்காகவே
ஓர் அடிமையை நீ அமர்ந்திருந்த தேரில் அமர்த்தினேன். வீரனுடைய
வாழ்த்தொலி கேட்டு நீ ஆணவம் கொள்ளக்கூடாது என்பதற்காக அடிமையைக்
கொண்டு உன்னை அடிக்க வைத்தேன். இவை எல்லாவற்றிற்கும்
மேலாக, புகழ்ச்சியில் நீ உன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக
அடிமையிடம் உன்னுடைய உண்மையான நிலையைப் பறைசாற்றச்
சொன்னேன்"
என்றான். இதைக் கேட்டுப் படைத்தளபதியால் எதுவும்
பேச முடியாமல் போனது.
பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற படைத்தளபதியைப் போன்று,
"
நான் எவ்வளவு பெரிய ஆள்"
, "
என்னால்தான் எல்லாம் ஆனது"
என்று
ஆணவத்தோடு அலைவதைக் காண முடிகின்றது. இத்தகைய சூழலில்,
ஆணவம் எவ்வளவு பெரிய அழிவிற்கு இட்டுச் செல்லும், தாழ்ச்சி
ஒருவரை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதைப் பொதுக்காலத்தின்
இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை
நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
ஆணவம்கொள்வோர் அலகையின் மக்கள்
யாரும் எப்படியும் போகட்டும்; நமது வேலை ஒழுங்காக நடந்தால்
போதும்"
என்று ஒருசிலர் இருப்பது உண்டு. நற்செய்தியில் இயேசு
தம் பாடுகளையும் இறப்பையும் உயிர்ப்பையும் பற்றி முன்னறிவிக்கின்றபொழுது,
அதைப் பற்றி இயேசுவிடம் எதுவும் கேட்காமல், தங்களுக்குள்
யார் பெரியவர் என்று சீடர்கள் விவாதித்துக் கொண்டது, மேலே
உள்ள கூற்றினைத்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றது.
தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் சீடர்கள் நடுவில்
ஏற்பட்டதற்குக் காரணம், இயேசு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய
மூவரை மலைக்குக் கூட்டிக்கொண்டு போனதால்தான். சீடர்கள் நடுவில்
ஏற்பட்ட இந்த யார் பெரியவர் என்ற விவாதம் பல பிரச்சனைகளுக்கும்
இட்டுச் செல்லும் என்பதை நன்கு உணர்ந்ததால், இயேசு அவர்கள்
நடுவில் ஒரு குழந்தையை நிறுத்தி அவர்களுக்குப் பாடம் புகட்டுகின்றார்.
நான் பெரியன் என்ற ஆணவம் திருஅவைக்குள் சண்டை சச்சரவை ஏற்படுத்தும்,
அது கொலைக்குக்கூட இட்டுச் செல்லும், பிறகு அது நாம் கடவுளிடம்
கேட்கின்ற எதையும் கிடைக்காமல் செய்துவிடும் என்று இன்றைய
இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.
யோவான் இன்னும் ஒருபடி மேலே சென்று, அலகை அல்லது எதிர்க்கிறிஸ்து
இருக்கும் இடத்தில் பிளவு இருக்கும் (1 யோவா 2: 19) என்கிறார்.
ஆகையால், ஆணவத்தால் ஏற்படும் சண்டை சச்சரவு, பிளவு போன்றவற்றிற்குக்
காரணமாக இருக்கும் யாவரும் அலகையின் மக்களே!
தாழ்ச்சியுடையோர் கடவுளின் மக்கள்
ஆணவம் கொண்டோர் அலகையின் மக்கள் எனில், அதற்கு எதிராக உள்ள
தாழ்ச்சிகொண்டோர் கடவுள் மக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம்,
நீதிமான்களுக்கு எதிராகப் பொல்லாதவர்கள் சூழ்ச்சி செய்வதைக்
குறித்துப் பேசுகின்றது. மேலும் நீதிமான் கடவுளின் மக்கள்
எனக் கூறுகின்றது.
நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்பதை இயேசுவோடும், அவரைப்
போன்று கனிவோடும் தாழ்ச்சியோடும், பொறுமையோடும் இருக்கின்ற
ஒவ்வொருவரோடும் நாம் பொருத்திப் பார்க்கலாம். மெசியாவாம்
இயேசு கிறிஸ்துவைக் குறித்து இறைவாக்கினர் எரேமியா நூலில்
இவ்வாறு நாம் வாசிக்கின்றோம்: "
அந்நாள்களில் நான்
தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்"
(எரே 33: 15). தளிர் என்பது மெசியாவைக் குறிக்கின்ற சொல்லாடல்.
மெசியாவாம் இயேசு நீதியின் தளிராக இருப்பதால், அவர் கடவுளின்
மகனாகின்றார். மேலும் அவர் கனிவும் மனத்தாழ்ச்சியும் உடையவராக
இருப்பதாலும் (மத் 11: 28) கடவுளின் மகனாகின்றார்.
இவ்வாறு இயேசு நீதிமானாய் - நீதியின் தளிராய் - இருந்து,
கனிவு, மனத்தாழ்ச்சி பொறுமை போன்ற பண்புகளைக்கொண்டு கடவுளின்
மகனாக இருப்பது போல், யாரெல்லாம் கனிவு, மனத்தாழ்ச்சி,
பொறுமை போன்ற பண்புகளைக் கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களின்
கடவுளின் மக்களாகின்றார்கள். கடவுளின் மக்களாக இருக்கும்
அவர்களுக்கு இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிப்பது போலக்
கடவுள் அவர்களைப் பகைவர்களிடமிருந்து விடுவித்து, உதவி
செய்வார்.
நாம் யாராக இருக்கப் போகிறோம்?
ஆணவம் கொண்டோர் அலகையின்மக்கள் எனவும், கனிவும் மனத்தாழ்ச்சியும்
கொண்டோர் கடவுளின்மக்கள் என்றும் இதுவரையில் சிந்தித்தோம்.
இப்பொழுது இந்த இருவரில் நாம் யாராக இருக்கப்போகிறோம் என்று
சிந்திப்போம். இணைச்சட்ட நூலில் நாம் வாசிப்பதுபோல், கடவுள்
நமக்கு முன்பு வாழ்வையும் சாவையும், நன்மையையும்
தீமையையும் வைத்துள்ளார் (இச 30: 15). இதில் நாம் எதைத்
தேர்ந்தெடுக்கின்றோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்வும்
தாழ்வும் அடங்கியுள்ளது. ஆணவம் நம்மை அலகையின் மக்களாக்கி
அழிவுக்கு இட்டுச்செல்லும் எனில், கனிவும் மனத்தாழ்ச்சியும்
நம்மைக் கடவுளின் மக்களாக்கி வாழ்வுக்கு இட்டுச் செல்லும்
என்பது உறுதி. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், "
என்
தலைவர் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்"
என்கிறது..
வாழ்வுக்கு ஆதரவாய் இருப்போர் கனிவும் மனத்தாழ்சியும் கொண்டவரே!
எனவே, நாம் ஆணவத்தை அல்ல, கனிவையும் மனத்தாழ்ச்சியையும்
கொண்டு வாழ்ந்து, கடவுளின் மக்களாவோம்.
சிந்தனை: "
கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்களே கடவுளின் மக்கள்"
(உரோ 8: 14) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளின்
ஆவியால் இயக்கப்பட்டுக் கடவுளின் மக்களாவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 2:12,17-20
யாக்கோபு 3:16-4:3
மாற்கு 9:30-37
துன்பம் இன்பம்
அன்புக்குரிய சகோதரர்களே!
ஒரு நாள் இயேசு தன் சீடர்களைப் பார்த்து நான் கொல்லப்பட
வேண்டும். ஆனால் என்னை அடக்கம் செய்த மூன்று நாட்களுக்குப்
பின் (மாற். 9:13) உயிர்த்தெழுவேன் என்றார். அப்படி இயேசு
சொன்னது சீடர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் நமக்கு விளக்கம்
தேவை இல்லை. ஏனெனில் இயேசு உயிர்த்து நம்மோடு
வாழ்கின்றார்.
ஆனால் இன்று அந்த இயேசுவின் பாடுகள் நம் வாழ்வில், உடல்
நோயாலோ, எதிர்பாராத ஆபத்தாலோ, உறவுகள் முறிவுகளாலோ,
பொறாமையின் சக்தியாலோ, நம் வாழ்வில் குறிக்கிடுகின்றன.
நாம் அனைவரும் இதற்கு உட்பட்டவர்கள் தான். ஆனால் அதை நாம்,
எவ்வாறு எதிர்நோக்குகிறோம் என்பதில்தான் வித்தியாசம் உண்டு.
ஒரு சிலர் துன்பங்களால், வெட்கத்திற்குரிய வேதனைகள், தாங்க
முடியாத மனநிலையில் தள்ளப்பட்டு, மனத்தளர்ச்சி அடைந்து,
குறை கூறும் நிலைக்குச் செல்லலாம். ஒரு சிலருக்குத் துன்பங்கள்
தைரியத்தையும், சகிப்புத் தன்மையையும் சவாலாக ஏற்றுக்கொள்ளச்
செய்யலாம். இன்னும் சிலர் துன்பத்தை அமைதியுடனும், சாந்தமுடனும்
எதிர்நோக்கி, பதில் காண நுழையலாம். முடியாதெனில், பொறுமையுடன்
மனம் தளராமல், குழப்பத்திற்கும் கீழ்த்தர ஆசைகளுக்கும் இடம்
தராது ஏற்று நடக்க முயற்சி எடுப்பார்கள்.
அரபு நாட்டிலே ஒரு நினைவாலயம். அது புனித ஜெரோனிமாவின் கல்லறை.
1569 - ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி. அவனை நாயைப் போலக் கட்டி
இழுத்து வாருங்கள் என்றான் அரசன்.
உன்னை நாயைப்போல இழுத்துச் செல்ல எனக்கு அதிகாரம் - உண்டு
என்றான் அரசன் - அங்கே அமைதி.
உன்னைக் கொன்று பிணமாகப் புதைக்க எனக்கு அதிகாரம் உண்டு -
அங்கே அமைதி.
சாட்டை அடிகள் அவர் மேல் விழுந்தன. கைகள் கட்டப்பட்டன.
எட்டி உதைத்தனர். ஏளனம் செய்தனர். ஆலயத்தை விட்டு வெளியே
இழுத்துச் செல்லப்பட்டார் - இறுதியாக அரசன் கேட்டான்: " நீ
உயிர் வாழ விரும்பினால் உன் கடவுளை விட்டுவிடு." ஜெரோனிமா
: இயேசுவே உயிரும் உயிர்ப்பும். அவரை இழந்த பிறகு என்னில்
உயிர் எப்படி இருக்க முடியும் என்றார். நீங்கள் எனக்குக்
கல்லறை கட்டுங்கள். இயேசுவே என் கல்லறை. அவரில் நான் இன்று
அடக்கம் செய்யப்படுவேன். அவரைப் போல நானும்
உயிர்த்தெழுவேன், வாழ்வேன் என்று புன்னகை பூத்தார். ஆனால்
அவருக்கு உயிரோடு சமாதி கட்டியது அரபு நாடு. ஆனால் சாவே
உனக்கு சாவு வராதோ என்று குமுறிய ஆன்றோர் மொழிக்கேற்ப,
அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்;
அவர், கல்லறையில் பூத்த உயிருள்ள மலர்.
முடிவுரை
இன்றைய முதல் வாசகத்திலே கூறப்பட்ட ஞானியைப்போல் (ஞானா.
2:2-17, 20) நாமும் நமது வாழ்வு தரும் உன்னத இறைவனை
நம்புவோம். இதுதான் ஜெரோனிமா நமக்குக் காட்டிய பாதை. அவர்
இறைமகனாக இருந்தாலும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக்
கற்றுக்கொண்டார். தமக்குக் கீழ்ப்படிபவர் அனைவருக்கும்
என்றென்றும் மீட்படையக் காரணமானார் (எபி. 5:8-9).
=அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 2:12,17-20
யாக்கோபு 3:16-4:3
மாற்கு 9:30-37
உண்மையான தொண்டர் யார் ?
இன்றைய நற்செய்தியின் வழியாக, ஒருவர் முதல்வராக இருக்க
விரும்பினால் அவர் அனைவருக்கும் தொண்டராக இருக்க முன்வர
வேண்டும் என்கின்றார் இயேசு.
ஓர் உண்மையான தொண்டர் எப்படியிருக்க வேண்டும் ? என்பதை இந்தக்
கதை நமக்குச் சுட்டிக்காட்டும்.
அது ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமத்திற்குப் பக்கத்திலே
ஓர் அழகான மாமரம். அந்தக் கிராமத்திலிருந்த சிறுவன் ஒருவன்
அந்த மாமரத்தடியில் வந்து விளையாடுவான். அவனைக் கண்டதும்
அந்த மரம் பெரும் மகிழ்ச்சி அடையும். ஒவ்வொரு நாளும் அந்த
மரம் அவன் வரவுக்காகக் காத்திருக்கும். திடீரென ஒரு வாரம்
அச்சிறுவன் மரத்தடிக்கு வரவில்லை ! மரம் சோகமானது ! ஒரு
நாள் திடீரென அச்சிறுவன் வந்தான் . அவன் முகத்திலே சோகம் !
அவன் பொம்மை வாங்க வேண்டும் என்றான். மரம் தனது பழங்களைக்
கொடுத்தது. அவற்றை விற்று அவன் பொம்மை வாங்கிக்கொண்டான்.
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அவன் முகத்தில் சோகம் ! அந்த
மரம் அவனுக்கு அதன் கிளைகளைக் கொடுத்தது. அதைப் பயன்படுத்தி
அவன் விரும்பிய வீட்டைக் கட்டிக்கொண்டான்.
மீண்டும் சில ஆண்டுகள் கழித்து அவன் முகத்தில் சோகம் ! பழுதடைந்திருந்த
அவனுடைய படகைச் சரிசெய்து கொள்ள மரம் தேவைப்பட்டது. அந்த
மரமோ அவனைப் பார்த்து, உனக்காக என் உயிரைக் கொடுக்கவும் தயாராக
இருக்கின்றேன். என்னை அடியோடு பெயர்த்து எடுத்துச்செல் என்றது.
அவனும் அப்படியே செய்தான்.
கதையில் வந்த மரம் வாழ்ந்த வாழ்வுக்குப் பெயர்தான் தொண்டு
வாழ்வு. அயலாருக்காக நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும்
கையளிக்க முன்வருவதில்தான் உண்மையான தொண்டு வாழ்வு அடங்கியுள்ளது.
பதுங்கியிருந்து (முதல் வாசகம்) மற்றவர்களுக்கு உரியதை எடுப்பவர்கள்
உண்மையான தொண்டர்கள் அல்ல; மாறாக அமைதி பெற்றெடுக்கும்
நீதி வழி நின்று (இரண்டாம் வாசகம்) அவரவர்க்கு உரியதை
அவரவர்க்குக் கொடுப்பவர்களே உண்மையான தொண்டர்கள்.
பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக்
கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப்
பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு
வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!
இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 2:12,17-20
யாக்கோபு 3:16-4:3
மாற்கு 9:30-37
ஒரு வீட்டில் அப்பா சாகக் கிடக்கிறார்; மரணத்தோடு போராடிக்
கொண்டிருக்கிறார். மூச்சுவிட முடியாமல் திணறிக்
கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய கூறு கெட்ட பிள்ளைகள் அவருடைய
சொத்துக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், கிறிஸ்து
இரண்டாம் முறையாகத் தமது பாடுகளை முன் அறிவிக்கிறார். ஆனால்
சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டைபோட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
முதலிடத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த தம் சீடர்களிடம்,
"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும்
தொண்டராகவும் இருக்கட்டும்" என்கிறார் கிறிஸ்து (மாற்
9:35). பெரியவர்களையும் சிறியவர்களையும் வேறுபடுத்திக்
காட்டும் பண்பு பணிவுடமையாகும், பெரியவர்கள் என்றும் பணிவுடன்
வாழ்வர்; சிறியவர் என்றும் செருக்குடன் வாழ்வர்.
பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து (குறள் 978).
கடவுளுடைய எண்ணங்களும் வழிமுறைகளும் மனிதருடைய எண்ணங்களிலிருந்தும்
வழிமுறைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை (எசா 55:8-9).
மனிதனின் வழி ஆணவத்தின் வழி; கடவுளுடைய வழியோ தாழ்ச்சியின்
வழி. முதல் பெற்றோரின் பாவம் ஆணவம், அவர்கள் மனிதர்களாக இருந்தும்
கடவுளுடைய நிலையைத் தட்டிப்பறிக்க விரும்பினர். எனவேதான்
விலக்கப்பட்ட. கனியை உண்டு, பாவத்தையும் சாவையும் இவ்வுலகில்
புகுத்தினர், அவர்களின் ஆணவ வழிக்கு மாற்று வழியாகக்
கிறிஸ்து தாழ்ச்சியின் வழியைப் பின்பற்றினர். அவர் கடவுள்
நிலையிலிருந்தும் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்தார் (பிலி
2:6-8).
பாவமே அறியாத அவர் உலகின் பாவ மூட்டைகளை எல்லாம் சுமந்து
கொண்டு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெறச் சென்றார்.
அதைக் கண்ட திருமுழுக்கு யோவான் அதிர்ச்சி அடைந்தார். இறுதி
இராவுணவின் போது சீடர்களுடைய காலடிகளைக் கழுவினார். அதைக்
கண்டு பேதுரு அதிர்ச்சி அடைந்தார், நமது ஆணவத்திற்குத்
தேவையான அதிர்ச்சி வைத்தியத்தை (shock treatment) அவர் அளித்தார்.
நாம் பெரியவர்களாக அல்ல, குழந்தைகளாக மாறவேண்டும்; இல்லையென்றால்,
விண்ணரசில் நுழைய முடியாது என்றும், ஒரு குழந்தையைப் போலத்
தன்னைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் பெரியவர் என்ற புரட்சிகரமான
போதனையையும் வழங்கினார் (மத் 18:3-4), "நான் கனிவும் மனத்தாழ்மையும்
உடையவன்" (மத் 11:29) என்று தம்முடைய தனிப்பட்ட பண்பைக்
போட்டுக் காட்டினார்.
ஒரு கணவன் தமது பங்குத் தந்தையிடம் சென்று, "சாமி! இந்நாள்
வரை எனது மனைவி என்னை வாயால் திட்டிக் கொண்டிருந்தான். ஆனால்,
இப்போ கையை நீட்டி என்னை அடிக்க வருகிறாள் அவளை எப்படி அடக்குவது
என்று கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டார். அதற்குப் பங்குத்தந்தை,
அது தெரிஞ்சா நான் என் மியாராய் வந்தேன்" என்றாராம்! ஒரு
கணவர் ஓர் அறிஞரிடம் சென்று, "நான் கிழித்த கோட்டை என் மனைவி
தாண்டக்கூடாது. அதற்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?"
என்று கேட்டதற்கு, அந்த அறிஞர், கோட்டை எங்கே கிழிப்பது என்று
(முதலில் உங்கள் மனைவியைக் கேட்டுக கிழியுங்கள்" என்றாராம்!
இன்றைய குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஒருவர் மற்றவரை
அடக்கி ஆள விரும்புகின்றனர். இதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும்
காரணம். அடக்குமுறை மனிதத் தன்மை கொண்டது அல்ல, அது மிருகத்
தன்மை வாய்த்தது. காட்டிலே கொடிய விலங்குகள் சாதுவான விலங்குகளை
வேட்டையாடுகின்றன. மனிதன் என்பவன் பிறரை அடக்கி ஆளாமல் பிறருக்கு
விட்டுக் கொடுக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒருவரை ஒருவர்
கடித்து விழுங்குவதை நிறுத்த வேண்டும் (கலா 5:15), பிறரை
அடக்கி ஆளும் முறை பிற இனத்தாரின் முறை என்றும், இயேசுவின்
சீடர்கள் பிறரை அடக்கி ஆனாமல் பிறருக்குத் தொண்டு ஆற்ற
வேண்டும் (மத் 20:25-28) என்றும் போதிக்கிறார் கிறிஸ்து.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யாக்கோபு விண்ணக ஞானத்தையும்
மண்ணக ஞானத்தையும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் (யாக்
3:13-18), மண்ணக ஞானம் பேய்த்தன்மை கொண்டது: அது பொறாமை,
மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை ஆகிய தீய பண்புகளைக் கொண்டது.
ஆனால் கடவுளிடமிருந்து வரும் விண்ணக ஞானம் தெய்வத் தன்மையுடையது.
அது அமைதி, பொறுமை, இணங்கிப் போகும் தன்மை ஆகிய நற்பண்புகளைக்
கொண்டது. கடவுள் தன்மை கொண்டவர்கள் பிறருடன் இணங்கிப் போவர்.
பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிகமாக வெற்றி அடைந்தாலும்
நிரந்தரத் தோல்வியைத் தழுவுவர், மாறாக, பணிந்து போகிறவர்கள்
தற்காலிகமாகத் தோல்வி அடைந்தாலும் நிரந்தரமான வெற்றியை அடைவர்
என்று இன்றைய முதல் வாசகமும், பதிலுரைத் திருப்பாவும்
சுட்டிக் காட்டுகின்றன.
நீதிமானின் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள்
இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர்காலம் இல்லை என்று
ஏளனம் செய்கின்றனர். ஆனால் கடவுள் நீதிமான்களை எல்லாவிதத்
துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். "செருக்குற்றோர் எனக்கு
எதிராக எழுந்து என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர். கடவுள்
எனக்குத் துணைவராய் இருக்கிறார்" (திபா 54:3-4),
தீமைக்குத் தீமை செய்பவர்களுக்கு கிடைப்பது ஒருநாள் இன்பம்.
தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர
இன்பம்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும்
துணையும் புகழ் (குறள் 156)
இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 2:12,17-20
யாக்கோபு 3:16-4:3
மாற்கு 9:30-37
யாருக்கு முதல் மரியாதை?
ஒரு நாள் மன்னன் ஒருவன் வேட்டையாடப் புறப்படுமுன் தனது
அமைச்சரை அழைத்து "மழை வருமா?" என்று கேட்டான். வானிலை அறிகுறிகளையெல்லாம்
பார்த்துவிட்டு 'வராது" என்று அமைச்சர் சொன்னதும், மன்னன்
உற்சாகத்தோடு காட்டுக்குப் புறப்பட்டான். போகிற வழியில்
ஒரு குடியானவன் கழுதைமேல் வந்து கொண்டிருந்தான். மன்னனைக்
கண்டதும் இறங்கிப் பணிவோடு "சிறிது நேரத்தில் மழை வரப்போகிறது"
என்று எச்சரித்தான். அதனைப் பொருட்படுத்தாமல் போன மன்னன்
வேட்டையாடிக் கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்ய மன்னன் நன்றாக
நனைந்துவிட்டான். திரும்பும் வழியில் அதே குடியானவனைச்
சந்தித்த மன்னன் "மழை வரும் என்று உனக்கு மட்டும் எப்படித்
தெரிந்தது?" என்று கேட்க, உடனே குடியானவன் "மழை வருகிற
சமயங்களில் என் கழுதையின் இரண்டு காதுகளும் வெடைத்து
நிற்கும் " என்றான். அரண்மனை சென்ற மன்னன் முதல்
வேலையாக மழை வராது என்று சொன்ன அமைச்சரை நீக்கிவிட்டு அந்தக்
கழுதையை அமைச்சராக்கிக் கொண்டான்.
அமெரிக்கப் பாராளுமன்றத்தில் இந்த உருவகக் கதையைக்
கூறிவிட்டு ஆபிரகாம் லிங்கன் இப்படி முடித்தாராம்:
"அங்குதான் மன்னன் ஒரு பெரிய தவறு செய்துவிட்டான். ஏனெனில்
அது முதற்கொண்டு"எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி
கிடைக்காதா?" என்று பேயாய் அலைந்து கொண்டிருக்கின்றன.
இன்று பல கழுதைகள் இப்படி அலைவது - அரசியலில் மட்டுமல்ல.
திருஅவையிலும்தான். பதவி ஒரு பணி என்பது மறைந்து பண் ஒரு
பதவி என்று ஆகிவிட்ட காலம் இது.
எத்தனை பதவி வெறி இந்த மனிதருக்கு?
செத்த பின்னும் அதனைச் சிவலோக பதவி என்பார்! இயேசுவின்
சிந்தனை எங்கே? அவருடைய சீடர்களின் எண்ணச் சிதறல்கள் எங்கே?
(மார்க். 9:34). இயேசுவின் இலக்கு எல்லாம் பலி வாழ்வு
பற்றி. சீடர்களின் எண்ணமெல்லாம் பதவிப் போட்டி பற்றி.
"பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும்
எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும்" (யாக். 3:16) என்கிறது
இரண்டாம் வாசகம்.
இறையாட்சிக் குடும்பமான திருஅவையின் இயல்பும் பண்பும்.
பணி புரிவதே. இயேசுவின் திருஅவையில் தலைமை என்பது தொண்டு
(மார்க். 10:41-45).
யார் பெரியவன்? இல்லறத்தானா? துறவறத்தானா? சாமியார்
.... பெரியவனா? சந்நியாசி பெரியவனா? இவர்கள் அனைவரையும்
விடத் துப்புரவுத் தொழிலாளிதான் பெரியவர்! அவர்
செய்கிற வேலையை நம்மால் செய்ய முடியுமா? அவர் வேலை
நிறுத்தம் செய்தால் ... நாறிப்போகும் நாடு! காரணம்? பணி
மட்டுமல்ல, பணியில் வெளிப்படும் பணிவு, தாழ்ச்சி. பணிவு
இல்லாத பணி அழிவுக்குக் காரணமாகும்.
அதனால்தான், "உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்
உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக
இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்"
(மத். 20:26,27) என்ற இயேசு, தானே முன்மாதிரியாய் நின்று
"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன்
என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக்
கடமைப்பட்டிருக்கிறீர்கள் " (யோவான் 13:14) என்று செயல்பட்டு,
நம்மைச் செயல்படத் தூண்டி அவரே நமக்காய் அடிமையானார்
(பிலிப். 2:6).
அலுவலகம் ஒன்றில் ஆண்டுதோறும் "சிறந்த பணியாளராக" ஒருவரைத்
தேர்ந்து பரிசும் விருதும் பாராட்டும் கொடுப்பது வழக்கம்.
குறிப்பிட்ட ஒர் அலுவலரின் உண்மையான உழைப்பாலும்
நேர்மையான நடத்தையாலும் நிறுவனத்துக்கே நல்ல பெயர், நல்ல
ஆதாயம்! ஆனால் பரிசு, விருது என்று வரும்போது அவரை
யாரும் நினைக்காதது பலருக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும்
தந்தது. இந்த உணர்வை ஒருவர் வெளிப்படுத்தியபோது அவர்
சொன்னார்: "எனக்குக் கொடுக்கப்பட்ட இந்த வேலையே இறைவன்
எனக்குத் தந்த பரிசு, கொடை. அதற்கு ஏற்ப - ஊதியமும்
பெறுகிறேன். நான் ஏன் பாராட்டுக்காக ஏங்க வேண்டும்?"
"நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின்,
நாங்கள் பயனற்ற ஊழியர்கள். எங்கள் கடமையைத்தான்
செய்தோம் எனச் சொல்லுங்கள்" (லூக். 17:10) என்று இயேசு
வகுத்த இலக்கணத்துக்கு அந்தப் பணியாளர் இலக்கியமன்றோ!
நாம் செய்வதெல்லாம் புகழுக்காக அல்ல, பாராட்டுக்காக அல்ல,
நன்றியை எதிர்பார்த்துக்கூட அல்ல. கடமையைச் செய்ய
வேண்டும். பவுலும் பர்ணபாவும் இதற்கு எடுத்துக்காட்டு.
லிஸ்திராவில் பிறவியிலேயே கால் விழங்காத ஊனமுற்ற ஒருவரை
இயேசுவின் பெயரால் அவர்கள் நடக்கச் செய்ததைப் பார்த்த
மக்கள் "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றனர்'"
என்று குரல் எழுப்பியபோது பாராட்டைக்கூட தெய்வ நிந்தனையாகக்
கருதிய பாங்கு "மனிதர்களே... நாங்களும் உங்களைப் போன்ற
மனிதர்கள்தாம். நீங்கள் பயனற்றவைகளை விட்டுவிட்டு ... அனைத்தையும்
உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை
உங்களுக்கு அறிவிக்கின்றோம்"" என்று சொல்ல வைத்தது.
(திருத்தூதர் பணிகள் 14:11-15).
நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி கைவிரல்கள் ஐந்திற்குள்ளும்
ஒரு நாள் எழுந்தது.
கட்டைவிரல் சொன்னது: "கட்டையாக இருந்தாலும் வலிமையின்
அடையாளம் நான். என்னைச் சேர்த்துக் கொள்ளாமல் நீங்கள்
நான்கு பேரும் சேர்ந்து எதையும் சரியாகச் செய்ய இயலாது.
வெற்றியா, சாதனையா என்னைத்தானே உயர்த்திக் காட்டுகிறான்
மனிதன்". இதைக் கேட்ட சுட்டுவிரல் "நான்தான் மனிதர்களையே
அடையாளம் காட்டுபவன். ஆள்காட்டி என்றுதானே என்னை அழைக்கிறார்கள்"
என்றது. நடுவிரலோ ஏளனமாகச் சிரித்து சவால் விட்டது:
"எங்கே நிமிர்ந்து நின்று பாருங்கள். என்னை விட உயரமான விரல்
எது?". மோதிர விரல் தன் புகழைப் பாடியது. "மனிதர்கள்
என்னைத்தானே கணையாழி கொண்டு பொன்னால் அணி செய்து கெளரவிக்கிறார்கள்.
தங்களையும் செல்வந்தர் எனக் காட்டிக் கொள்கிறார்கள்".
சுண்டு விரலுக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. அழுகையே
வந்துவிட்டது. தனக்கென்று ஒரு பெருமையும் இல்லையா என்று
கடவுளிடமே முறையிட்டது. கடவுள் பதில் அளித்தார்: "என்னை
நோக்கி மனிதர்கள் கும்பிடும்போது விரல்களின் வரிசையில்
எனக்கு நெருக்கமாக முதலில் நிற்பவன் நீதானே! என் பார்வை
படுவது முதன் முதலில் உன் மீது மட்டும்தான்".
யார் ஆண்டவனுக்குப் பக்கமாக இருக்கிறானோ, யாருக்குப் பக்கமாக
ஆண்டவன் இருக்கிறானோ அவன்தான் பெரியவன். போட்டி மனப்பான்மையைக்
கைவிடுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு.
தாழ்வு மனத்தைத் தகர்த்தெறியுங்கள். தலை நிமிர்ந்து
நில்லுங்கள்.
உன்னிடம் எத்தனை பதக்கங்கள், பட்டங்கள்,
நற்சான்றிதழ்கள் இருக்கின்றன என்று கடவுள்
கவனிப்பதில்லை. எத்தனை தியாகம், தொண்டு தழும்புகள் உள்ளன
என்றுதான் கவனிக்கிறார்.
இயேசுவின் இறையாட்சிப் பயணத்தில் சிலுவையின் நிழல்
படிவது சீடரால் ஏற்க முடியாத ஒரு புது அனுபவம். இயேசு
சாவை நோக்கிப் பயணம் செய்கிறார். இந்தச் சாவு
இயேசுவைப் பொருத்தவரை எதிர்பாராத விபத்து அல்ல. மாறாக
அவரது பணியின் இலட்சியமே.. இதுதான்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
சிறு
பேராசிரியரிடமிருந்து பாடம் பயில...
அருள் சகோதரி ஒருவர், தன்னிடம் மறைகல்வி பயிலும் சிறுவர்,
சிறுமியரை வரிசையில் நிற்கவைத்து, கோவிலுக்கு அழைத்துச்
சென்றார். கோவில் வாசலில் அவர்களை நிறுத்தி, "கோவிலில்
திருப்பலி நடக்குபோது நாம் சப்தம் போடக்கூடாது. ஏன்?
சொல்லுங்கள்" என்று கேட்டார். ஒரு சிறுவன் உடனே, "ஏன்னா,
கோவில்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அதனாலதான்"
என்று தயக்கமில்லாமல் பதில் சொன்னான்.
மழலையர்பள்ளி (LKG) ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக
மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின்
ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி
வந்துகொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ
வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன
வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன்
ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், "நான்
கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னாள்,
அக்குழந்தை. உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார்
என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை
ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்...
இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று
தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில்
சொன்னாள்.
குழந்தைகள் உலகம் அழகானது. அங்கு உண்மைகள் எளிதாகப்
பேசப்படும். அங்கு, கடவுளையும் எளிதாகக் காணும் கனவுகளும்,
கற்பனைகளும் கரைபுரண்டோடும். அந்த உலகை நாம்
கடந்துவிட்டோம் என்பதால், அதை மறந்து விடவேண்டும் என்ற
அவசியமில்லை. பார்க்கப்போனால், அவ்வப்போது அந்த
பள்ளிக்குள் மீண்டும் சென்று, பாடங்கள் பயில்வது நம்
வாழ்வை மேன்மையாக்கும். மென்மையாக்கும். இதையொத்த ஓர்
ஆலோசனையை இயேசு இன்றைய நற்செய்தி வழியே நமக்குச்
சொல்கிறார். இந்த வார நற்செய்தியில் இடம்பெறும் இறுதி
இறைச்சொற்றொடர்களை மையமாக வைத்து, நம் ஞாயிறு சிந்தனையை
ஆரம்பிப்போம்.
மாற்கு நற்செய்தி 9: 36-37
பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே
நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய
சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர்
எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர்
என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்
கொள்கிறார்" என்றார்.
அருள்சகோதரிகள் நடத்தும் மழலையர் பள்ளி ஆண்டு விழா ஒன்றில்
கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. LKG மழலைகள் மேடையில்
ஏறினார்கள், அழகான ஒரு நடனம் ஆரம்பமானது. "
நான் காலையில்
எழுவேன், பல் துலக்குவேன், சாப்பிடுவேன்..."
என்று அன்றாட
நிகழ்வுகளின் அட்டவணையைச் சொல்லும் ஒரு பாடல். அதற்கு ஏற்ற
நடன அசைவுகள், செய்கைகள். பல் துலக்குவேன் என்று அந்தக்
குழந்தைகள் பாடியபோது, எல்லா குழந்தைகளும் வலது ஆள்காட்டி
விரலால் பல் தேய்த்தனர். அனால் ஒரு குழந்தை மட்டும் இடது
ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தாள். அருகிலிருந்த
அருள்சகோதரியிடம் அக்குழந்தையைச் சுட்டிக்காட்டினேன். அவர்
அப்போது சொன்ன ஒரு தகவல், என்னை அதிகம் சிந்திக்கவைத்தது.
LKG குழந்தைகளுக்கு செய்கைகளுடன் பாடல்களைச் சொல்லித்தரும்
ஆசிரியர்கள் குழந்தைகளின் கண்ணாடி பிரதிபலிப்பாக
இருக்கவேண்டும். அதாவது, குழந்தை ஒரு செய்கையை வலது கையால்
செய்யவேண்டும் என்றால், ஆசிரியர் அதை இடது கையால்
செய்யவேண்டும். அதைப் பார்க்கும் குழந்தை, செய்கைகளை
சரியான வழியில் செய்யக் கற்றுக்கொள்ளும் என்ற கருத்தை அந்த
அருள்சகோதரி எனக்குச் சொன்னார்கள்.
அன்பர்களே, சிந்தித்துப் பார்ப்போம். நமது கண்ணாடி
பிரதிபலிப்புகள், குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை
பிரதிபலிப்பவர்கள். வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை
உபசரித்துக்கொண்டிருந்தார், ஒரு வீட்டுத்தலைவி. நான்கு
அல்லது ஐந்து வயதான அவரது மகள், அம்மாவுக்கு உதவி
செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது
சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும்
விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். குட்டிமகள் கூட
இருக்கிறாளே என்ற எண்ணம் சிறிதும் இன்றி, வந்திருந்தவர்களை
வாய் நிறைய வசைப்பாடிக் கொண்டிருந்தார், அம்மா.
விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு
முன்னால், செபம் சொல்லும்மா." என்றார். "என்ன சொல்றதுன்னு
எனக்கு தெரியாதே" என்றாள் மகள். "அம்மா என்ன சொல்வாங்களோ,
அப்படி சொல்லும்மா" என்றார் அப்பா. உடனே, மகள் கண்களை
மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி
பாத்து வந்து, என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே" என்று
வேண்டினாள், மகள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது,
செய்வது, எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது
போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.
இன்னொரு நிகழ்வு. ஊடக உலகம், ஒவ்வொருவர்
குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது
என்பதையும், குழந்தைகளிடமிருந்து அவர்களது குழந்தைப்
பருவத்தை ஊடகம் எவ்விதம் பறித்துவிடுகிறது என்பதையும்
வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வு. ஒரு வீட்டுத்தலைவி, தன்
வீட்டிற்கு வந்த தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்வில், ஒரு
பிரபலமான நடிகை, கவர்ச்சிகரமாக ஆடிக்கொண்டிருக்கிறார்.
வீட்டுத்தலைவி தன் தோழியிடம், "என் மகளும் இதே மாதிரி
ஆடுவா" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்நேரம்,
அங்கு வருகிறாள், அந்த LKG படிக்கும் குழந்தை. ஆர்வமாய்
அம்மாவிடம் போய், "அம்மா, இன்னைக்கி ஸ்கூல்ல ஒரு புது
'
ரைம்'
சொல்லித் தந்தாங்க." என்று சொல்லி, அந்த '
ரைமை'
ச்
செய்கையோடு செய்து காட்டுகிறாள், சிறுமி. அம்மாவும்,
தோழியும் பாராட்டுகின்றனர். பிறகு, அம்மா மகளிடம், "அந்த
டான்ஸ் ஆடும்மா" என்று சொல்லி தொலைக்காட்சியில்
ஆடிக்கொண்டிருக்கும் நடிகையைக் காட்டுகிறார். மகளோ,
"சினிமா டான்ஸ் வேண்டாம்மா. இன்னொரு '
ரைம்'
சொல்கிறேன்."
என்கிறாள். அம்மாவுக்கு கோபம். தன் தோழிக்கு முன்னால்,
மகள் சினிமா டான்ஸ் ஆடவில்லை என்கிற வருத்தம். "'
ரைம்'
எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த டான்ஸ் ஆடு." என்று மீண்டும்
வற்புறுத்துகிறார் தாய். குழந்தைகளை, அவர்கள் உலகத்தில்
வளர்ப்பதற்கு பதில், நம் உலகத்திற்கு, அதிலும்,
பளபளப்பாய், செயற்கை பூச்சுக்களுடன் மின்னும் போலியான ஊடக
உலகிற்கு, அவர்களை, பலவந்தமாக இழுத்துவரும் முயற்சி இது.
அன்பர்களே, நாம் காணும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்,
முக்கியமாக, சிரிப்பு என்ற பெயரில் காட்டப்படும்
நிகழ்ச்சிகளில், ஒரு சிறுவனோ, சிறுமியோ, அவர்கள் வயதுக்கு
மீறிய கருத்துக்களைச் சொல்வதைப் பார்த்திருக்கிறோம்.
அவர்கள் சொல்லும் சிரிப்புக்கள், அவர்களுக்கு புரியுமோ
என்னவோ தெரியாது. ஆனால் கேட்கும் இரசிகர்கள்
சிரிப்பார்கள். ஒருவேளை, தன் மகனோ, மகளோ தொலைக்காட்சியில்
தோன்றவேண்டும் என்பதற்காக, பெற்றோர் இந்த வசனங்களை எழுதி,
அவர்களை மனப்பாடம் செய்யச் சொல்லி, அங்கே சொல்ல
வைப்பார்களோ? பாவம். இதெல்லாம் குழந்தைகளைச்
சித்திரவதைக்கு உள்ளாக்கும் வழிகள். குழந்தைகள்
வதைப்படலம்.
முதிர்ச்சி அடைந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும்
நாம், நம்மைப்போல் குழந்தைகளை மாற்ற முயல்கிறோம்.
நம்மிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்க்கிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மாறாக,
'குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்; முடிந்தால்,
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்' என்று இயேசு
வலியுறுத்துகிறார். இந்தப் பாடத்தை சீடர்கள் மனதில்
ஆழப்பதிக்கவே அவர் ஒரு குழந்தையை அவர்கள் நடுவில்
நிறுத்துகிறார். இயேசு, சீடர்கள் நடுவில், குழந்தையை
நிறுத்தியது ஏன் என்ற பின்னணியை அலசிப் பாப்போம்.
சென்ற வாரம், இயேசு, சீடர்களிடம் இரு முக்கியமானக்
கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று
சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?
என்று இயேசு கேட்ட அந்த இரு கேள்விகள், சீடர்கள் மத்தியில்
ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும்.
தன் கேள்விகளுக்கு விடையளித்த பேதுருவை, அதுவும் தன்னை
"மெசியா" என்று அடையாளப்படுத்திய பேதுருவை இயேசு
புகழ்ந்தார். பேதுரு தந்த "மெசியா" என்ற பட்டத்தில்
மகிழ்ச்சி, மமதை கொண்டு மயங்கிப் போகவில்லை இயேசு. மாறாக,
அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம், சிலுவை
இவற்றைப்பற்றி பேசினார். இயேசு இவ்வாறு பேசியது,
பேதுருவையும், சீடர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
எனவே, பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரை சொல்ல
ஆரம்பித்தார். தன்னைப்பற்றியும், தன் வாழ்வின்
இலக்குபற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக்
கோபமாகக் கடிந்துகொண்டார். சீடர்களிடம், தன் சிலுவையைப்
பற்றி, மீண்டும் ஆணித்தரமாக பேசினார், இயேசு. சீடர்கள்
இதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை, இன்றைய நற்செய்தியின்
ஆரம்பத்தில் நாம் வாசிக்கிறோம்.
மாற்கு நற்செய்தி 9: 31-32
"மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்;
அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று
நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று இயேசு தம்
சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது
அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும்
அவர்கள் அஞ்சினார்கள்.
இயேசு, சிலுவையைப்பற்றி பேசியது அவர்களுக்கு விளங்காமல்
போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில்
சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்?
என்பது அவர்களது சிந்தனைகளை நிறைத்த எண்ணமாயிற்று.
இயேசு, அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார்.
அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின்
எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு
பக்கம் ஒரு நெருடல். ஒருவேளை அவர்கள் பேசிக்கொண்டதை
சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போடுகிறோமோ என்ற
நெருடல். எனவே, தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள,
"வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார்.
பதில் வரவில்லை. எப்படி வரும்? அவர்கள்
பேசிக்கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும்
மாறுபட்டதாயிற்றே. தாங்கள் பேசியதை அவரிடம்
சொல்லமுடியவில்லை. அவர்களது மௌனம், அவருக்கு எரிச்சலையும்,
வருத்தத்தையும், ஏன் சலிப்பையும் உண்டாக்கியிருக்க
வேண்டும். தன்னையும், தன் கொள்கைகளையும் சீடர்கள்
புரிந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் இயேசுவுக்குள்
இருந்தாலும், சலிப்படையாமல், மீண்டும் அவர்களுக்கு தன்
எண்ணங்களைப் புரிய வைக்க முயல்கிறார்.
மாற்கு நற்செய்தி 9: 35
அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு,
அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர்
அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும்
இருக்கட்டும்" என்றார்.
இந்தக் கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள்
நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில்
விண்ணரசில் நுழையமுடியாது என ஏற்கனவே அவர்களுக்கு
சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்தச் சிந்தனையை
மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார்.
குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை
உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள்
குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்.
"எந்த ஒரு குழந்தையும் பிறக்கும்போது இரு இறக்கைகளுடன்
சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள்
குறைந்து மறைந்து விடுகின்றன" என்பது பிரெஞ்சு மொழியில்
ஓர் அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள் இவை. கால்கள்
மட்டுமல்ல, நமது எண்ணங்களும், கருத்துக்களும்
வளர்ந்துவிட்டதாக நாம் எண்ணும்போது, சம்மனசுக்குரிய
இறக்கைகள் மறைந்து விடுகின்றன.
அன்பர்களே, குழந்தைகளைப் பற்றி பேசும்போது,
குழந்தைப்பருவம் திருடப்பட்டு, வளர்ந்துவிட்டவர்கள் உலகில்
வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் குழந்தைகளை நினைத்துப்
பார்க்காமல் இருக்க முடியவில்லை. வறுமைப்பட்ட பல
நாடுகளில், உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குழந்தைத்
தொழிலாளர்களை, இவ்வேளையில் நினைத்துப் பார்க்கவேண்டும்.
நமது உழைப்பால், குழந்தைகளை வளர்க்க வேண்டியது நமது கடமை.
மாறாக, அவர்களது உழைப்பில் நாம் சுகம் காண்பது பெரும்
குற்றம். இன்றைய நற்செய்தி வழியாக இயேசு சொல்லித் தரும்
பாடங்களை நாம் ஓரளவாகிலும் கற்றுக்கொள்ளும் வரத்தை
இறைவனிடம் வேண்டுவோம். குழந்தைகளைக் குழந்தைகளாகவே
வாழவிடுவோம். அவர்களை நம்மைப்போல் மாற்றாமல், முடிந்த
அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
மறையுரை
பெரிய பதவியில் இருக்க வேண்டும் அல்லது பெரிய பதவியில்
இருப்பவர்களோடு இணக்கமாக இருக்க வேண்டும். இதுதான்
இன்றைய எதார்த்த மனநிலை.
நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது
ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும் (சீஞா
3:18).
உங்களுள் பெரியவர் சிறியவராகவும், ஆட்சிபுரிபவர்
தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும் (லூக் 22:26).
தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு
புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும் (உரோ 12:7).
முதன்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் நம்மை
முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க தூண்டுகிறது.
முன்னேற்றத்தின் வளர்ச்சி என்பது தனிமனித வளர்ச்சி
என்பதைக் கடந்து சமூக வளர்ச்சி ஆகும்.
நாம் வாழும் இந்த உலகத்தில் தன்னைப் பெரியவராக அடையாளப்படுத்திக்
கொள்ளும் ஏராளமான கூட்டம் இருக்கின்றது. பிறர்க்கு
முன்னால் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் எண்ணற்ற
மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழ்கின்றனர். தாங்கள் தான் பெரியவர்கள்
பிறர் அனைவரும் தங்களுக்கு கீழ் தான் என்ற கருத்தியலையும்
பலர் கொண்டுள்ளனர். ஜாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும்
மொழியின் பெயராலும் இனத்தின் பெயராலும் படிப்பின் பெயராலும்
பணத்தின் பெயராலும் எண்ணற்ற பாகுபாடுகளை நம்முடைய சமூகத்தில்
பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்ட அவலநிலை இயேசு வாழ்ந்த
காலகட்டத்தில் மிக அதிகமாக இருந்தது.
உரோமையர்கள் யூதர்களை விடத் தங்களைப் பெரியவர்களாகக் கருதினர்.
யூதர்கள் பிற இனத்தார் சமாரியர்களை விடத் தங்களைப் பெரியவர்களாகக்
கருதினர். இவ்வாறாக தங்களை பெரியவர்களாகக் காட்டிக்
கொள்ளும் வழக்கம் அன்று முதல் இன்று வரை இருந்து
கொண்டேதான் இருக்கிறது.
நாமும் நம்மை பல விதத்தில் பெரியவர்களாக்
காட்டிக்கொள்கிறோம். கொஞ்சம் அதிகம் படித்திருப்பதால் பெரியவர்களாகி
விடுகிறோம். சற்று திறமைகள் அதிகம் இருந்தால் பெரியவர்களாகக்
காட்டிக்கொள்கிறோம். பணம், பதவி, தனக்குப் பின் தலையாட்ட
ஒரு கூட்டம் இருந்தால் நாமெல்லாம் பெரியவர்களா?
நம்முடைய குடும்பத்தில் எப்பொழுது பிரச்சனை வருகின்றதென்றால்
நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டு நம்மையே பெரியவராக அடையாளப்படுத்தும்
பொழுதுதான் என்று சொன்னால் மிகையாகாது. குடும்பத்தலைவர் என்னதான்
உழைத்தாலும் குடும்பத் தலைவியின் ஒத்துழைப்போடு மட்டுமே சிறப்பான
குடும்பத்தை அமைக்க முடியும். இவர்கள் யாரும் பெரியவர்
சிறியவர் என்பதில்லை. இருவரும் சமம். இருவருக்கும் சம உரிமை
உண்டு. இவ்வாறான புரிதல் குடும்ப வாழ்வில் இருக்கின்ற
பொழுது கணவன் மனைவிக்கிடையே எந்த ஒரு பாகுபாடும் பிளவும்
இருக்காது. ஆனால் நாம் வாழும் இந்த சமூகத்தில் கணவன் மனைவியை
அடக்கியாள கூடியவராகவே பெரும்பாலும் இருக்கிறார். ஒரு சில
இடங்களில் மனைவி கணவரை அடக்கி ஆளக்கூடியவராகவும் இருக்கிறார்.
உண்மையான பெரியவர் என்பவர் தன்னை மிகைப்படுத்தாமல் ,தன்னைப்
போல பிறரையும் எண்ணுபவரே. அப்படிப்பட்ட மனிதரே பிறரின்
தேவையை அறிந்து, உதவி செய்வார். துன்பத்தில் உடனிருப்பார்.
புரிந்து கொள்வார். அனைவருடனும் அன்பாய்ப் பழகுவார். '
பெரிய மனசு வேணும்' என்று கிராமத்தில் கூறும் வழக்கம் உண்டு.
பெரிய மனசுதான் ஒரு மனிதரை உயர்ந்தவராக காட்டுகிறது. பணமோ
பட்டமோ பதவியோ ஒரு மனிதனை பெரிதாக அடையாளப்படுத்த
முடியாது. ஆனால் அந்த மனிதன் செய்கின்ற நல்ல செயல்கள் மட்டுமே
அடையாளப்படுத்தப்படும்.
ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் எண்ணற்ற மறைநூல் அறிஞர்களும்
பரிசேயர்களும் சதுசேயர்களும் இருந்தபோதிலும் அவர்கள்
பெரிதாக மக்களால் போற்றப் படவில்லை. மக்கள் அவர்களை பின்பற்ற
தயாராகவும் இல்லை. ஆனால் இயேசுவைப் பின்பற்ற தயாராக இருந்தார்கள்.
அதற்கு காரணம் அவரின் உள்ளமும் எண்ணமும் செயலும் உயர்வாக
இருந்தது. சின்னஞ்சிறு ஏழை மக்களுக்கும் பாவிகளுக்கும் உரிமைகள்
இழந்தவர்களுக்கும் புது வாழ்வை வழங்கினார். தன்னுடைய சீடர்களை
தனக்கு சமமாக நடத்தினார். நண்பர்களாகக் கருதினார். ஏன்?
அவர்களின் பாதங்களைக் கழுவினார். பெரியவராய் உயர்ந்தார்.
நாமும் பெரியவர்களாகவாம். நம்மை மிகைப்படுத்தாமல் ,பிறரோடு
ஒப்பிடாமல்,
நம்மோடு வாழக்கூடிய சின்னஞ்சிறு மக்களை அன்பு செய்து அவர்களுக்கு
உதவும் பொழுதும் அவர்களில் இயேசுவைக் கண்டு பணிசெய்யும்
போதும், வழிகாட்டும் பொழுதும் நாம் பெரியவர்களாகவும்,
பெரிய மனசு உடையவகளாகவும் மாறுகிறோம். அதில்தான் உண்மையான
நிறைவு இருக்கின்றது.எனவே சிந்திப்போம். நம்மை வெறும்
பேச்சால் பெரியவர்களாக்கிப் பெருமைப்படுத்தாமல், நம் இருத்தலால்
செயல்களால் பெரியவர்களாக்கத் தயாரா?
இறைவேண்டல்
இறைவா! பெரியவரான நீர் எளியவரானீர். நாங்களும் உம்மைப் போல
எளியவர்களாய் வாழ்ந்து அன்பிலும் பிறரன்புப் பணியிலும்
பெரியவர்களாய் வாழ அருள் புரியும். ஆமென்.
பெரியவராய்
கருதப்பட வேண்டுமா?
நாம் அனைவருமே உயர்ந்தவராக பெரியவராக நம்மைக்
காட்டிக்கொள்ள விரும்புபவர்களாகவே வாழ்கிறோம்.
அவ்விருப்பத்தில் ஒன்றும் தவறில்லை. ஆனால் பெரியவராய்
வாழத் தேவையான பண்புகள் நம்மிலே இருந்தால் நம்மை நாமே
பெரியவர்களாய் காட்டிக்கொள்ளத் தேவையில்லை. மாறாக அது நமது
இயல்பாகவே மாறிவிடும். இதையே இன்றைய மூன்று வாசகங்களும்
நமக்கு எடுத்துரைக்கின்றன.
முதல்வாசகத்தில் பெரியவர் என்ற வார்த்தைக்கு பதில்
நீதிமான் எனக் கூறப்பட்டுள்ளது. நீதிமான் அல்லது
நேர்மையாளர் என்பவர் மற்றவர்களை விட சற்று
வித்தியாசமானவர். எவ்வாறெனில் அவருடைய வாழ்வில்
துன்பங்களும் சவால்களும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
ஆனால் கடவுள் அவர்களுக்கு துணையாக வருவார். ஆக நாமும்
பெரியவராக வாழ விரும்பினால் கடவுளின் துணையில் நம்பிக்கை
கொண்டு துன்பங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.
இரண்டாம் வாசகத்தில் புனித யாக்கோபு நமது வாழ்வில்
ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கான காரணங்களை தெளிவாகச்
சொல்கிறார். பொறாமை, கட்சி மனப்பான்மை, சிற்றின்ப
நாட்டங்கள் மற்றும் தீயஎண்ணங்கள் வாழ்வின் அமைதியை
சீர்குலைக்கின்றன. இத்தகைய பண்புகளை உடையவர் நிச்சயமாக
சமூகத்தில் உயர்ந்தவராய் பெரியவராய் இருக்க முடியாது.
மாறாக தூய்மை, பொறுமை, இணங்கி போதல், இரக்கம்,
நற்செயல்கள், நடுநிலை தவறாத வெளிவேடமற்ற பண்புகள் போன்றவை
வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் உருவாக்கும். இவையே
நம்மை பெரியவராய் உயர்த்தும் பண்புகள்.
இவையனைத்தையும் தாண்டி நற்செய்தி வாசகத்தில் இயேசு
பெரியோராய் இருக்க விரும்புவோர் பணியாளரைப்போன்ற
குழந்தையைப் போன்ற தாழ்ச்சி என்ற புண்ணியத்தைக்
கொண்டவர்களாய் விளங்க வேண்டும் என்கிறார்.தாழ்ச்சி என்பது
என்ன?உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்வது. திறந்த மனநிலையோடு
அனைத்தையும் அனைவரையும் வரவேற்பது. இயேசு இப்பண்பைக்
கொண்டிருந்தார். உயர்த்தப்பட்டார். பெரியோர்க்கெல்லாம்
பெரியவராய் திகழ்கிறார்.
எனவே நாமும் இத்தகைய நற்பண்புகளை உள்வாங்கி நீதிமான்களாக
பெரியவர்களாக வாழ வளர முயல்வோம்.
இறைவேண்டல்
தாழ்ச்சியில் உயர்ந்த இயேசுவே! இப்பண்பிலே நாங்களும்
வளர்ந்து வாழ்வில் உயர வரமருளும். ஆமென்.
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
நாம் நினைப்பதைவிட
தமிழகத்தின் எல்லா மூளைமுடுக்களிலும் பலரின் பார்வைக்கு
சொந்தமானவர் இவர். தன் புத்தக வாசிப்பின் வழியாக வாழ்வை
நேசிப்பவர். தமிழ் மீதான ஆர்வமும், தமிழ் மீதுள்ள பற்றும்
இவரின் சொற்பொழிவுகளில் தெவிட்டாத தேனாய் பாய்ந்தோடும்.
அதுமட்டுமல்லாமல் படிப்பு, பண்பு, ஒழுக்கம், திறமை,
சுயமுன்னேற்றம், வழிகாட்டுதல் போன்ற தலைப்புகளில் பல
மேடைகளில் தன் பேச்சின் மூலமாக இம்மானுடத்தின் தவறுகளைச்
சரியாக சுட்டிக்காட்டி வாழ்வின் உண்மையான சுவையை
ஒவ்வொருவரும் அறிந்திட, சுவைத்திட உதவுகிறார். இவர் ஒரு
காவல்துறை அதிகாரி. திருச்சி எஸ்பியாக இருந்து ஒய்வுப்
பெற்றவர். தன்னுடைய காவல் பணியையும், கருத்துகளை
எடுத்துரைக்கும் கனிவான பணியையும் ஓய்வின்றி செய்யும்
ஆற்றலுள்ள, துடிப்புமிக்க மனிதர் இவர். ஒரு முறை தன்னுடைய
பேச்சில்; தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவரசியமான நிகழ்வு
ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். கேரளத்தைச் சார்ந்த ஒரு
போலீஸ் அதிகாரியின் மகள் துப்பாக்கிச் சுடும் போட்டியில்
கலந்து கொள்ள வந்தார். நானும் அந்தப் போட்டியில் பங்கேற்க
சென்றிருந்தேன். எப்போதும் முதல் இடத்தைப் பெறும் நான்
அன்று கொஞ்சம் மதமதப்பில்தான் இருந்தேன். என்னைவிட யார்
பெரியவராய் இருக்க போகிறார் என்றெல்லாம் நினைத்தேன்;.
வழக்கமாய் நான்தான் இந்த போட்டியின் மெடலைப் பெறுகிறேன்.
இந்த ஆண்டும் எனக்குத்தான் என்று காலரைத் தூக்கிவிட்டேன்.
அந்தோ அவரின் நிலை மோசமானது. இளம் பெண்ணாக வலம் வந்த அந்த
கேரளத்து காவல்துறை அதிகாரியின் மகள் மிக நேர்த்தியாக
துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று விளையாட்டை
நிறைவுச்செய்கிறார். போட்டியில் வெற்றியும் பெறுகிறார்.
இதுவரை, இந்த போட்டியில் என்னைவிட யாரும் வெற்றி பெற
முடியாது என நினைத்து பெரிய கனவு கோட்டை கட்டியவரை கடவுள்
உன்னைவிடவும் பெரியவர் இவ்வுலகில் இருக்கிறார்கள் என
சொல்லி அவருக்கு பாடம் புகட்டியதாக அவரே
சொல்லியிருக்கிறார். இத்தகைய எண்ணங்களுக்கும்,
செயல்பாட்டுக்கும் சொந்தக்காரர் யார் என்றால், முன்னாள்
காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய ஐயா திரு.
கலியமூர்த்தி IPS அவர்களே. நம் வாழ்வில் நம்மைவிட
மற்றவர்கள் பெரியவர்கள்தான் என்ற தாழ்ச்சியுள்ளம் நமக்கு
இருந்தால், எல்லாரையும்விட நாம் பெரியவற்றைச் செய்யவும்,
பெரிய காரியங்களில் ஈடுபடவும் முயற்சி செய்வோம் என்கிறார்
அவர்.
இறைஇயேசுவில் இனியவர்களே,
நாம் வாழும் இந்த சமுதாயத்தில் கடந்த இரண்டு ஆண்டளவாக
பெருந்தொற்றான கொரானா வைரசின் தொற்று நம்மை
ஆட்டிப்படைக்கின்றது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,
தூக்கிப் போட கூட ஆளில்லாமல் அனாதையாகவும், குவியல்
குவியலாக குழிகளைத் தோண்டி அடக்கம் செய்யும் அவலநிலையும்
நம் நாட்டில் இருக்கிறது என்பதை யாவரும் அறிவோம். இதில்
ஒன்றை ஆழமாக உற்றுநோக்க வேண்டும். கல்லறையில் அடக்கம்
செய்கையில் இவர் பெரியவர், இவர் அரசியல்வாதி, இவர்
அருள்பணியாளர், இவர் பொறியாளர் என்று யாரையும் பெரியவர்
சிறியவர் பார்வையில் பார்ப்பதில்லை. இறந்தால்
எல்லோருக்கும் ஒரே ஒரு பெயர்தான் 'பிணம்'. இதைக்கடந்து
வேறு பெயர்கள் எதுவும் இறந்தவருக்கு வைப்பதில்லை. ஏன்
இவற்றைச் சொல்கிறேன் என்றால், நாம் இறப்பதற்கு முன்பு வரை
எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோம் என்பதில்
அடக்கியிருக்கின்றது நம்முடைய 'பெரியவர்' என்ற மதிப்பும்,
மரியாதையும். நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய நோயாக,
அச்சுறுத்தும் வைரசாக கொரானாவைப் பார்க்கின்றோம். ஆனால்
அதைவிட மிகப்பெரிய வைரஸ் எதுவெனில் 'தன்னை பெரியவனாக
காட்டிக்கொள்ளும் பழக்கமும், பெரிய இடத்தை நோக்கி
நடைபோடும் வாழ்வும்தான்'. இது மிகப்பெரிய நோயாக மனிதன்
வாழ்வில் இருக்கிறது என்பதை இன்றைய நாள் இறைவாக்கு வழிபாடு
மிகத் தெளிவாய் எடுத்துரைக்கின்றன. படைப்பின்
தொடக்கத்திலேயே ஆணும், பெண்ணுமாக மனிதர்களைக் கடவுள்
படைத்த நாள் தொடங்கி இன்றுவரை பெரியவர், சிறியவர்
போராட்டம் தொன்றுதொட்டு வந்துகொண்டே இருக்கின்றன. சிறுவர்
தொடங்கி அனைத்து தரப்பினரும் நம்மைவிட வேறு யாருமே பெரிய
ஆள்; கிடையாது என்பதை மனதில் இருத்திப் பயணிக்கின்றோம்
என்பதைத் தெளிவுப்படுத்தி, எங்கே, எதில், எப்போது நாம்
பெரியவராக இருக்கிறோம் என்பதையும், அது எப்படிப்பட்ட
புரிதலுடன் இருக்க வேண்டுமென்பதையும் இன்றைய நாள் வழிபாடு
வரையறுத்து நமக்குக்கொடுக்கின்றன.
பிரியமானவர்களே,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாட்டிடைக் குகையிலே குழந்தையாக
பிறந்தார். குடிசையிலே வளர்ந்தார். குன்றிலே இறந்தார்.
இதுதான் அவரின் வாழ்வின் சுருக்கம். பிலி 2:6-11 வரையுள்ள
இறைவார்த்தையில் 'தம்மையே வெறுமையாக்கி அடிமையின்
வடிவமேற்று மனிதருக்கு ஒப்பானார்' என்று இயேசு தன்னையே
முழுவதுமாக இந்த மானுடச் சமூகத்தின் மீட்புக்காக தன்னையே
கையளிப்பதைக் காண்கின்றோம். யோசனையில் பெரியவரே ஆராதனை
ஆராதனை என்று பாடுகிறபோது, நம் எண்ணங்கள் எப்படிப்பட்டதாய்
இருக்கின்றன. இறைவனே மிகப்பெரியவர் என்ற சிந்தனைத்தெளிவு
நமக்குள் உதிக்க வேண்டுமென்பதற்காகத்தான் இப்படிப்பட்ட
பாடல்கள் எல்லாம் நம் திருஅவையில் உள்ளன. ஆகவே இன்றைய
உலகிலே 'யார் மிகப்பெரியவர்' என்ற நோய் எல்லாருடைய
வாழ்விலும் வந்ததால் மிக குறைந்த மனிதர்களே கடவுளே
பெரியவர் என்பதை தங்கள் வாழ்வின் வழியாக
கண்டுபிடிக்கின்றனர். தன்னுடன் வருபவரே மிகப் பெரியவர்
என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத சீடர்கள் தங்களுக்குள்
யார் பெரியவர் என்று; பேசிக்கொண்டனர். ஆக சீடர்களின்
பெரியவர் பற்றிய சிந்தனை அழைப்பு, இருப்புநிலை,
அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல், இயேசுவின்
உடனிருப்பு, அன்புவட்டத்துக்குள் இருக்கும் வாழ்வு,
நெருங்கி பழகுதல், நட்புறவு போன்றவற்றின் அடிப்படையில்
வாக்குவாதம் அங்கே நிகழ்ந்தது. ஆனால் இயேசுவின்
வார்த்தையும், அவர் விரும்பும் வாழ்வும் வித்தியாசமானது.
பெரியவர் யார் என்ற சிந்தனையையும், எப்படிப்பட்ட வகையில்
நாம் பெரியவராக மாற முடியும் என்ற தெளிவையும் தன் போதனை
வழியாக கொடுக்கிறார் இயேசு. இதைத்தான் எசாயா புத்தகத்தில்,
55:8-9இல் 'என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள்
வழிமுறைக் என் வழிமுறைகள் அல்ல' என்று ஆண்டவர் அறிதிட்டு
கூறுவதை வாசிக்கின்றோம். எனவே நாம் நினைப்பதைக்காட்டிலும்
ஆண்டவர் மிகப் பெரியவற்றைச் செய்ய கூடியவராக இருக்கிறார்
என்கிற கருத்தைத் திருப்பாடல் ஆசிரியர் அடிக்கடி தன்
பாடலின் வழியாக செபிக்கின்றார். இன்றைய பதிலுரைப்பாடலிலும்
கூட 'என் வாழ்வுக்கு ஆதரவாய் இருப்பவர் கடவுள்' என்கிற
ஆழமான புரிதலைக் கொடுக்கின்றார்.
இவ்வளவும் கொடுத்த பின்பும்கூட நமக்குள் இருக்கும்
'நான்தான் பெரியவன்' என்ற நோய் நீங்காமலே இருப்பதால்தான்
மீண்டும் மீண்டும் இயேசுவின் வார்த்தைகள் தேவைப்படுகின்றன.
இன்றைய வாசகங்களில் பின்னணியில் சிந்திக்கின்ற போது,
மூன்று வாசகங்களுமே முத்தான செய்திகளைக் கொடுக்கின்றன.
முதல் வாசகத்தில்,
கிரேக்கத் தழுவுதலில் ஆழமாய் வேரூன்றிய யூதமக்கள் கிரேக்க
ஞானத்தையும், படிப்பையும், அறிவுத்திறனையும்
உடையவர்கள்தான் பெரியவர்கள் என்று நினைத்தார்கள். கடவுள்
என்ற பார்வையும், அதன் பார்வையில் உருவாகும் வழிபாடும்
மூடநம்பிக்கை என்றும் வாதிட்டு, கடவுளைவிட நாங்களும்,
நாங்கள் வைத்திருக்கும் பணம், பதவி, பட்டம், அறிவுத்திறன்,
திறமை, படிப்பாற்றல் இவற்றின் அடிப்படையில் 'நீ பெரியவர்'
என்ற புரிதலுக்குள் வந்தனர். ஆனால் கடவுளோ இத்தகைய
ஞானத்தைவிட என் ஞானமே சிறந்தது என்பதை தெளிவுபடுத்துவதற்கே
'நீதிமான்களின் சொற்கள்' என்ற சொல்லாடல்
பயன்படுத்தப்படுகிறார். அதன் அர்த்தத்தையும்
விளக்குகிறார்.
இரண்டாம் வாசகத்தில்,
நீங்கள் அனைவரும் பெரியவராக இருக்க விரும்புவதால்தான்
உங்களிடையே பொறாமையும், கட்சிமனப்பான்மையும், குழப்பமும்
அதிகமாக வருகின்றன. கடவுளை முன்னிறுத்தி வாழ்வை பேண
வேண்டிய நீங்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னுறுத்தி
சுயஇலாபம் தேடுகின்றனர். எனவேதான் சண்டை, சச்சரவுகள்,
பேராசை, கொலை செய்யும் எண்ணம் இவையெல்லாம் தோன்றுகின்றன
என்பதையும் தெளிவுபடுத்துகிறார் புனித யாக்போபு.
அப்படியானால் இயேசு கொடுக்க விரும்புகின்ற 'பெரியவர்' என்ற
மனநிலை எப்படித் தோன்றும், அது கிடைத்தால் என்ன நிகழும்
என்பதன் விளக்கவுரையே இந்த இரண்டாம் வாசகம்.
நற்செய்தியில்,
இயேசு தம் சீடர்களுக்கு அழகான உவமைகள், தெளிவான பார்வைகள்,
ஆழமான புரிதல்களுடன் பல்வேறு கருத்துகளைக்
கற்றுக்கொடுத்தார். இருந்தாலும் அவர்களின் எண்ணமெல்லாம்
இயேசு மெசியா அவர் ஒரு அரசர் என்பதில் இருந்ததால்தான்,
அவரின் அரசவையில் யார் பெரியவராய் இருப்பார் என்ற
எண்ணமும், ஏக்கமும் எழுந்ததால்தான் அவர்களுக்குள்ளே வீண்
வாக்குவாதமும், சண்டையும் நிகழ்ந்தது. அதை நிவர்த்திச்
செய்யும் பணியைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில்
செய்கிறார்.
இறைஇயேசுவில் பிரியமானவர்களே,
நாம் ஒவ்வொருவரும் கடவுளைவிட பெரியவர் கிடையாது என்ற
சிந்தனையும், மற்றவர்களுக்கு பணிபுரிவதில், பணி செய்வதில்,
கற்றுக்கொடுப்பதில், கற்றுக்கொள்வதில், நேசிப்பதில்
பெரியவராக இருந்தால் மற்றவர்களின் பார்வையில் நாம்
சிறியவராகவும் இருந்தாலும் பெரியவராக பார்க்கப்படுவோம்
என்ற சிந்தனையையும் இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு
எண்பித்துகாட்டுகிறது. ஆகவேதான் குழந்தை ஒன்றை எடுத்து
அவர்கள் நடுவில் நிறுத்தி இயேசு போதிக்கிறார் என்றால்,
குழந்தைகளிடத்தில் கபடற்ற உள்ளம், பற்றற்ற தன்மை, மனநிறைவு
காணும் குணம் இம்மூன்றும் அப்பழுக்கற்ற நிலையில் உள்ளன.
எனவே குழந்தைக்குரிய மனநிலையில் வாழ்ந்தோமானால் நாம்
பெரியவராக ஆண்டவரின் பார்வையில் இருப்போம். அதற்கு நாம்
என்ன செய்ய வேண்டும். நாம் பெரியவர் என்பதை எதனடிப்படையில்
கண்டுபிடிக்கலாம் என்பதைத்தான் பின்வரும் தலைப்புகளின்கீழ்
உணர்ந்துகொள்வோம்:
பணத்தால் அல்ல பண்பால்:
ஒருத்தருக்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப்
பொறுத்துதான் இவ்வுலக பெரியவர் என்ற நிலையைத்
தீர்மானிக்கிறது. ஆனால் பணத்தைவிட ஒருவரிடத்தில்
காணப்படும் பண்புதான் கடைசி வரை 'இவர் பெரியவர்' என்ற
தகுதியை நமக்கு வழங்குகின்றது.
குறை காண்பதில் அல்ல குணத்தால்:
ஒருசில நேரங்களில் அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே அலசி
ஆராய்ந்து தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ளும் மனிதர்கள்
நம்மிடத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவரின்
குறைகளைக் கண்டால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.
அப்படியிருக்கையில் குறைகள் மட்டுமே மிஞ்சுமே ஒழிய குணம்
பிறக்காது என்பதே உண்மை. பெரியவராய் இருக்க வேண்டிய
இடத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதைவிட குணத்தால்
குறைகளை நிறையாக்கும் பண்புடையவர்தான் அவசியம் என்கிறது
எதார்த்த வாழ்வு.
பதவியால் அல்ல பண்பட்ட வாழ்வால்:
யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் பதவியால் யாரும் பெரிய
இடத்தைப் பிடிப்பதில்லை. வேண்டுமென்றால் அது பணி
நிமித்தமாய் இருக்கலாம். ஆனால் உண்மையில் யார் ஒரு
பெரியவராய் இருப்பார் என்றால், பண்பட்ட உள்ளம் கொண்டவராய்
இருப்போரே என்றென்றும் பெரியவராய் இருப்பர் என்ற
கருத்தியலை வழங்குகிறார். அவர்கள்தான் தூய்மை, அமைதி,
பொறுமை, நடுநிலை தவறாமை, வெளிவேடமற்ற செயல்பாடு, நீதி
ஆகியவற்றை அடித்தளமாய் வைத்து கடவுளே நம்மைவிட பெரியவர்
என்ற மனநிலையில் பெரியவருக்குரிய மனப்பான்மையைப்
பெறுகின்றனர். சிந்திப்போம்! இறைவனின் செயல்கள் நம்முடைய
அறிவுக்கும், ஆற்றலுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்டது.
நாம் நினைப்பதற்கு மேலாகவே இறைவன் எல்லாவற்றையும் செய்ய
கூடியவர். அவரிடத்தில் தஞ்சம் அடைவோம். அப்போது தெளிவான
பார்வை ஒன்று நமக்கு பிறக்கும்: 'கடவுளைவிட நாம் பெரியவர்
அல்ல. கடவுள் நினைத்தால் நம்மைப் பெரியவராய் மாற்றுவார்'
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத்
தமிழ்க் கழகம் பெங்களூர்
பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (சா.ஜா. 2:12,17-20)
"
சாலமோனின் ஞானம்" என்னும் இந்நூல், சாலமோனைப் பற்றிய
சில மறைமுகக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும்,
காலத்தாலும் கருத்தாலும் பிந்தியது என்பது உறுதி.
பாலஸ்தீ னத்துக்கு வெளியே வாழ்ந்து வந்த யூதர்களுள்
சிலர், கிரேக்க மொழி, மெய்யியல், பண்பாடு, வழிபாட்டு
முறை முதலியவற்றின் மீது அளவற்ற நாட்டம் கொண்ட போது,
மக்களை யூத மறைக்கு மனம் மாறி அழைப்பு விடுப்பது,
இந்நூல் ஆசிரியரின் முதன்மை நோக்கம். அதே நேரத்தில்,
யூத கோட்பாடுகளில், பிடிப்போடு இருந்தவர்களை
ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர்.
விசுவாசத்தில் தளர்ந்து தடுமாற்ற நிலையில் இருந்தவர்களை
எச்சரிக்கின்றார். கிரேக்கருடைய சிலை வழிபாட்டில்
மூடத்தனத்தை அடையாளம் காட்டுவதோடு, ஆண்டவர் மீது அச்சம்
கொள்வதே, அவரது திருச்சட்டத்தின் படி ஒழுகுவதே, உண்மையான
உயரிய ஞானம் என்றும் கோடிட்டுக் காட்டுகிறார்.
போலி ஞானத்தின்று உண்மையான ஞானத்தையும் பிரிந்தறிந்து,
அதன் வழியே நடக்க வேண்டும் என்று அறிவுரைத் தருகிறார்.
இந்த ஞானம், இறைவனில் நம்பிக்கை கொண்டவர்களை
தீமையிலிருந்து மீட்கும். இஸ்ராயேல் மக்களின்
விடுதலைப் பயணத்தில், ஞானம் ஆற்றிய மீட்புச் செயல்கள்
இதற்கு சான்று. இரண்டாம் வாசகப் பின்னணி (யாக்.
3:16-4:3)
அனைத்து திருச்சபைக்கும் எழுதப்பட்ட பொது மடல். இதை
விசுவாசிகளின் ஒழுக்க வாழ்விற்கு உதவும் கருத்துக்களைப்
பழைய ஏற்பாட்டில் ஞான நூலின் அடிப்படையில் யாகப்பர்
எழுதுகிறார். உண்மையான கிறிஸ்துவன், பொறாமையும்,
போராட்டத்தையும் விலக்கி, சமாதானத்தின் தூதுவனாய்
விளங்க வேண்டும் என்றும், செபிக்கும் முறை அறிந்து
செபிக்க வேண்டும் என்றும். நாம் கேட்பது கிடைக்கும்
என்ற நம்பிக்கையின் கீதமே இன்றைய வாசகம். ஞானத்தின்
ஊற்று இறைவன். இறைவனின் வாயிலிருந்து விவேகமும்
அறிவும் புறப்படுகின்றன (நீ.மொ. 2:6) "
இறை ஞானம்
கொண்டவர் பொறுமையை கடைபிடிப்பர், நடுநிலை தவறார்,
கள்ளமறியார், சமாதானத்தின் தாதுவர்களாய் விளங்குவார்"
இவர்களை மனதில் கொண்டே "
சமாதானம் செய்வோர்
பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள்
எனப்படுவர்"
என்கிறார் இயேசு (மத்தேயு 59).
கட்டுக்கடங்காத ஆசையே அனைத்து தீமைகளின் ஆணிவேர், என்பது
ஞானிகளின் கணிப்பு (4:2). ஆசைகள் நிறைவேறாத போது சண்டை
சச்சரவுகள் ஏற்படுகின்றன. கீழ்தர ஆசைகளால் தூண்டப்பட்டு,
நம் சுயநல ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு, இறைவன்
துணை நிற்க மாட்டார் என்பதை உணரவேண்டும் (4:3).
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 9:30-37)
இயேசு தம் சாவைப் பற்றி இரண்டாம் முறை
முன்னறிவிக்கிறார். தலைமை குருக்கள் பரிசேயர்கள்
ஆகியோரால் மெசியா புறக்கணிக்கப்பட்டூ,
தீர்ப்பிடப்படுவார். இறந்தவர் உயிர்த்தெழுவார் (மாற்கு
8:31). ஆண்டவரின் உயிர்ப்பு சீடர்களுக்கு புரியவில்லை,
அவரது அவமான மரணத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. எனவே, தன் பாடுகள் வழியாகத்தான் மீட்பு
உண்டு என்று எடுத்துரைக்கிறார்.
இயேசு இறையரசைப் பற்றி பல இடங்களில் போதித்தார்.
இறையாட்சியை முதலில் தேடுங்கள் என்று தம் சீடர்களுக்கு
எடுத்துக் கூறினார். எனவே இயேசுவின் ஆட்சியில் யார்
பெரியவன் என்ற தாக்கம் ஏற்படுகிறது. சீடர்களின் பதவி
உயர்வுக்காக மன்றாடிய செபதேயுவின் மனைவியும் உண்டு
(மத்தேயு 20:20-22). ஆனால், இயேசு "
குழந்தைகளை என்னிடம்
வரவிடுங்கள், அவர்களை தடுக்க வேண்டாம், ஏனெனில்
கடவுளின் அரசு இத்தகையோரதே"
கடவுளின் அரசைக்
குழந்தைகள் போல் ஏற்றுக் கொள்ளாத எவனும் கடவுளின்
அரசில் நுழைய முடியாது"
(மாற்கு 10:13-14). பட்டம்,
பதவி, பெருமை, முதலிடம் ஆகியவற்றை குழந்தைகள்
தேடுவதில்லை, என்பதை இயேசு கூறுகிறார்.
மறையுரை
"
நான் பெரியவன் என்ற எண்ணம் என்னையும், என்னைச்
சூழ்ந்துள்ளவர்களையும் அழித்துவிடும்"
. ஒர் ஊரில்
மூன்று நண்பர்கள் இருந்தார்கள். இவர்கள் திருடுவதையே
தொழிலாக வைத்திருந்தார்கள். திருடிய பிறகு மூவரும் சமமாக
பங்கு போட்டு எடுத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஒரு
நாள் ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் திருடச்
சென்றார்கள். அந்த வீட்டில் அவர்கள் எதிர்பரப்பதைவிட
அதிகமான செல்வம் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையிலே இந்த
முறைதான் பெரிய அளவில் பணம், நகைகள், மற்ற விலை
உயர்ந்த பொருட்களை திருடியதால் மகிழ்ச்சியடைந்தார்கள்.
ஆனால் மூவரின் மனதிலும், பெரிய பங்கு எனக்கு தான் என்ற
எண்ணம் இருந்தது. தாங்கள் திருடிய எல்லாவற்றையும்
மூட்டை கட்டிக் கொண்டு, ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த
ஒரு குகைக்குள் போனார்கள்.
அங்கே தாங்கள் திருடிய பொருட்களை பங்கிடுவதற்கு முன்னதாக
தங்கள் பசியைப் போக்க, உணவு வாங்கி வரும்படி அவர்களுள்
ஒருவனை அனுப்பினார்கள். அவன் உணவு பொட்டலங்களை வாங்கி
வரும் வழியிலே அவனுக்கு வழியிலேயே அவனுக்குள் சொல்லிக்
கொண்டான். "
திருடிய பொருட்களை எல்லாம் நானே அனுபவிக்க
வேண்டூம்', என்ற பேராசையால் அவர்களின் உணவு
பொட்டலத்தில் விஷத்தை கலந்து எடுத்துச் சென்றான்.
அவ்வாறே குகையில் இருந்த இருவரும் நாம் திருடிய
பொருட்களை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். உணவு வாங்கி
வருபவனைக் கொன்று போடுவோம் என்று சொல்லி, உணவு வாங்கி
வந்தவனை கொன்று போட்டார்கள்.
பிறகு அவன் வாங்கி வந்த உணவை மகிழ்ச்சியோடு உண்டு சில
நிமிடங்களில் அவர்களும் மாண்டு போனார்கள். கடைசியாக
இவர்கள் திருடிய பெருஞ்செல்வம் யாருக்கும்
கிடைக்கவில்லை. பேராசை கொள்ளும் மனிதன் மற்றவர்களை
அழிப்பதை விட தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றான்.
தான் மற்ற மனிதரை விட பெரியவனாக இருக்க வேண்டும் என்ற
போட்டி மனப்பான்மை, இன்றும் அனைவரையும் ஆட்டிப்
படைக்கின்றது. மற்றவரை விட எனக்கு எல்லாம் தெரியும்,
நான் தான் உயர்ந்தவன், என்ற எண்ணம் சிறுவர் முதல்,
வயதான பெரியவர்கள் வரை எல்லாரையும் பாதிக்கும் கொடிய
நோய். இந்த நோய் இயேசுவின் சீடர்களையும்
விட்டுவைக்கவில்லை, என்பதை இன்றைய நற்செய்தி வாசகம்
சுட்டிக் காட்டுகிறது. இந்த போட்டி மனப்பான்மை தவறானது
என்பதை இறைமகன் இயேசு மிகவும் அழகாக சுட்டிக்
காட்டுகிறார்.
(அ) போட்டி மனப்பான்மை பொறாமைக்கு வழிகாட்டுகிறது
நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் பெரும்பாலான
கொடுஞ்செயல்களுக்கும், குழப்பங்களுக்கும் காரணமாக
இருப்பது பொறாமையே, என்று தூய யாக்கோபு இன்றைய இரண்டாம்
வாசகத்தில் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். போட்டி
மனப்பான்மை கொண்டுள்ள நண்பர்கள், ஒருவர் மீது ஒருவர்
பதவிக்காகவும், பட்டத்திற்காகவும், பணி உயர்விற்காகவும்
பொறாமை கொண்டு, மற்றவரை கொல்வதற் கும் தயங்குவதில்லை.
இதையே இயேசுவின் வாழ்வில் பார்க்கிறோம். இயேசுவின்
புகழையும், பெயரையும் கெடுக்க விரும்பிய யூதகுருக்கள்,
பரிசேயர்கள், சதுசேயர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து
கொன்றார்கள். இதையே நீதிமொழிகள் புத்தகம் "
சினம்
மற்றும் சீற்றத்தை விட பொறாமையே கொடியது"
என்று சுட்டிக்
காட்டுகிறது (நீ.மொ. 27:4).
இன்றைய அவசர உலகமானது "
வெற்றியை"
அச்சாணியாக கொண்டுள்ளது.
எல்லாக் கம்பெனிகளும் மற்ற கம்பெனிகளை விட பெரிய
கம்பெனியாக மாறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில்
வேலை செய்கிறார்கள். இந்த போட்டியில் பங்கு
கொள்பவர்கள், வெற்றி ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு உண்மை,
நீதி, பிறரன்பு, பகிர்வு, மன்னிப்பு போன்ற நல்ல பண்புகளை
மறந்து, மனசாட்சிக்கு எதிராக மற்ற மனிதரை தோற்கடிக்க, கொலை
செய்யவும் தயங்குவதில்லை. வெற்றியே அவர்கள் கண்முன்
இருப்பதால் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
என்ற எண்ணம் மக்களின் மனதில் முத்திரைப்
பதிக்கப்பட்டுள்ளது. செய்வினை செய்தல், அடாவடித்தனம்,
மற்றவரின் நற்பெயரைக் கெடுத்தல், கொலை செய்தல்
முதலியவற்றின் மூலம் எதிரிகளை அழித்துவிட்டு,
தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மட்டுமே
காப்பாற்ற நினைக்கிறோம். நமக்கு நாமே சிறு வட்டங்கள்
அமைத்துக் கொண்டு. நம்மை நாமே பாராட்டிக் கொள்கிறோம்.
பணக்காரன் பலமடங்கு பெரிய பணக்காரனாக மாறிக் கொண்டே
இருக்கிறான் ஏழை இன்னும் பரம ஏழையாக தாழ்ந்து கொண்டே
போகிறான். இப்படிப்பட்ட பொறாமை, பேராசை கலந்த வெற்றியும்
காரணமாக, மனித மதிப்பீடுகள் மறுக்கப்படுகின்றது.
ஒட்டுமொத்த மனிதகுல வளர்ச்சி ஓரம் கட்டப்படுகிறது. இதையே
இன்றைய முதல் வாசகத்தில் நீதிமான்களின் எதிரிகள்
நீதிமான்களை அழிப்பதற்காக திட்டமிடுவதை வாசிக்க கேட்டோம்.
(ஆ) போட்டி மனப்பான்மை மனித ஆளுமையைச் சீரழிக்கிறது.
எங்கு போட்டி இருக்கிறதோ அங்கு தான் ஒரு மனிதன் தனது
திறமைகளை கூர்மைப்படுத்த ஆரம்பிக்கிறான். போட்டி இல்லாத
இடத்தில் சோம்பேறித்தனமும், தாழ்வு மன்பபான்மையும்
குடியேற ஆரம்பித்து விடும் என்பது தான் உண்மை. எனவேதான்
"
போட்டி இருக்கின்ற இடத்தில் தான் சிறந்தது
வெளிப்படும்"
என்பார்கள். போட்டியால் நாம் பெறும்
வெற்றி உண்மை என்றாலும், இந்த போட்டி மனப்பான்மையால்
வரும் வெற்றியை கவலையோடு பார்க்கிறார்கள் உளவியலார்கள்.
காரணம், போட்டி மனப்பான்மை மனித ஆளுமையையும் மனித
உறவுகளையும் முழுமையாக சீரழிக்கிறது. அதோடு போட்டி என்பது
எப்போதும் வெற்றித் தோல்வியோடும் தொடர்புடையதாக
இருக்கிறது. போட்டியில் தோல்வியுறும் மனிதன், தாழ்வு
மனப்பான்மையில் தத்தளிக்கிறான். இது என் தலைவிதி நான்
தோற்பதற்காகவே பிறந்துள்ளேன் என்று தன்னைப் பற்றி மோசமான
மதிப்பீட்டைக் கொள்கிறான். வெற்றி பெறும் மனிதனோ,
தற்பெருமையால் தாண்டவமாடுகிறான். தன்னால் முடியாதது
எதுவுமே இல்லை என்று தன்னைப் பற்றி அளவுக்கதிகமாக
மதிப்பிட ஆரம்பிக்கிறான். தாழ்வு செய்யும் காரியங்கள்
அல்ல. மாறாக, நாம் மற்றவரை அவர்கள் உள்ளவாறு ஏற்றுக்
கொண்டு, அவர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்.
பிறர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். என்பதை நாம்
ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
விளம்பரம் என்று பல குழந்தைகள் ஓட்டப் பந்தயத்தில்
கலந்து கொண்டு ஓடுகிறார்கள். ஆனால் அவர்களுள்
நோய்வாய்ப்பட்ட ஊனமான குழந்தையும் ஓடுகிறது. ஆனால், கீழே
விழுந்துவிடுகிறது. இதைப் பார்த்த ஓட்டப்பந்தயத்தில்
ஓடிய எல்லாக் குழந்தைகளும் திரும்பி வந்து, விழுந்த
குழந்தையை தாங்கி நிற்க வைத்து, அந்த குழந்தைகள்
அனைவரும் ஒருவர் மற்றவர் தோல்மேல் கைகளைப் போட்டுக்
கொண்டு, எல்லோரும் ஒன்றாக நடந்து சென்று இலக்கை
அடைகிறார்கள். எல்லோருமே முதல் பரிசு பெறுகிறார்கள்.
நாமும் இந்த சிறு குழந்தைகளிடம் இருக்கும் நற்பண்புகளை
கற்றுக் கொள்ள வேண்டும். யார் பெரியவன்? என்று கேட்பதை
விட எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்பதை மனதில்
கொண்டூ வாழ்வோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
இறை ஞானம் மனித பாவச் செயல்களிலிருந்து மீட்கும்.
உங்களுக்கு சமாதானம் என்று கூறிய இயேசுவின் வார்த்தையை
வாழ்வாக்க சமாதானத்தின் தூதுவர்களாய் வாழ வேண்டும்.
குழந்தையாய் மாறாவிடில் விண்ணரசில் நுழையமாட்டீர்கள்
என்ற இயேசுவின் வார்த்தைக்கேற்ப குழந்தை மனநிலை பெற
வேண்டும்.
இயேசு தம் சாவை முன்னறிவித்தார். நாமும் ஒரு நாள்
இறப்போம் என்பதை மனதில் கொண்டு புனிதமான வாழ்வு வாழ
வேண்டும். முதல்வராக இருக்கிறவன் பணியாளனாக
இருக்கட்டும் என்ற
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத்
தமிழ்க் கழகம் பெங்களூர்
பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (சா.ஜா. 2:12,17-20)
"
சாலமோனின் ஞானம்' என்னும் இந்நூல், சாலமோனைப் பற்றிய

கி.மு. 50ம் ஆண்டில் எழுதப்பட்ட சாலமோனின் ஞானம்
நூல், போலி ஞானத்தினின்று உண்மையான ஞானத்தைப்
பிரித்தறிந்து, அதன் வழியிலே நடக்க வேண்டுமென்ற
அறிவுரையைத் தருகிறது. இந்த ஞானம் இறைவனில் நம்பிக்கை
கொண்டவர்களைத் தீமையினின்று மீட்கும். இஸ்ரயேல்
மக்களின் விடுதலைப் பயணத்தில் ஞானம் ஆற்றிய மீட்புச்
செயல்களே இதற்குச் சான்று. நல்லவர்களைத் தீயவர்
எதிர்த்து எளனம் செய்வதும், அவர்களது அழிவைத்
தேடுவதும் அடங்கிய பகுதியே இன்றைய வாசகம்.
தீயவரின் நோக்கும் போக்கும்
தீயவர் இவ்வுலக வாழ்விலே இன்பம் காண்பர்: மரணத்துடன்
அனைத்தும் முடிந்து விடுகின்றன என்பது அவர்களின்
எண்ணம், "
நம் வாழ்நாள் நிழல்போலக் கடந்துசெல்கின்றது.
நாம் மீண்டு வருவதில்லை: ஏனெனில் முடிவு
குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.
எனவே, வாருங்கள் இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்;
இளவேனிற்கால மலர்களில் எதையும் விட்டுவைக்கமாட்டோம்.
இன்பத்தின் சுவடுகளை எங்கும் விட்டுச்செல்வோம்"
"
(சாஞா.
2 : 5 - 10) என்று தம் புலன் போன போக்கிலே செல்வர்.
புலன்போல போக்கிலே வாழும் இவர்களை நல்வழிப்படுத்த
நெறியாளர்கள் முயன்றபொழுது "
'நீதிமான்களைத் தாக்கப்
பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத்
தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை
எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான
பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; அவர்களைப்
பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது"
என்று கூறி (காண்
2: 42 - 16) நல்லவர்களை அழிக்க முனைகின்றனர். இவ்வுலகில்
நன்மை-தீமைக்கும், இருள்-ஒளிக்கும், உண்மை-பொய்க்கும்
என்றுமே போராட்டம், இவ்வுலக இன்பம் எளிதில் நம்மைக்
கவர்ந்திழுக்கிறது. அதை நாடி ஓடி, நித்திய வாழ்வை மறந்து
விடுகிறோம்; நல்லவர்களையும் வெறுத்து ஒதுக்குகிறோம்.
ஆனால் தீயவர்களுக்குத் தண்டனையும், நல்லவர்களுக்குப்
பரிசும் உண்டு என்பதையும் நினைவில் கொண்டால், எத்தகைய
இன்னல்களுக்கு இடையிலும் நன்னெறியில் நடக்க முயலுவோம்:
"
நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையிலுள்ளன;
கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது;
இறவாமையில் அவர்கள் உறுதியான
நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் (கடவுள்)
அவர்களைப் புடமிட்டார்.
இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப
தண்டிக்கப்படுவார்கள்..."
(சாண் சாஞா :3 :2- 11).
இயேசு ஒரு சவால்
இயேசு தீயவர்களைத் திருத்தி அவர்களை நன்னெறிப்படுத்த
முயன்றார். பொருளற்ற சாத்திரங்களைச் சாடினார்.
பரிசேயர்களின் வெளிவேடத்தை அம்பலப்படுத்தினார்.
நன்மையைப் பேசி, நல்லதையே செய்து வந்த இயேசுவை
ஒழித்துக்கட்டப் பகைவர்கள் திட்டம் தீட்டினர்.
கழுமரத்தில் ஏற்றினர். '"
கடவுளிடம் இவன் உறுதியான
நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது
இவனை விடுவிக்கட்டும். 'நான் இறைமகன்"
என்றானே!"
என்று
கூறினர் (மத் 27 : 43). நாமும் இவ்வுலகில்
புறக்கணிக்கப் படலாம்; ஊழல், ஏமாற்றுதல், பொருளாசை
மிக்க மக்களிடையே - சமுதாயத்திலே, நேர்மையுடன்
இறைவனுக்குப் பயந்து வாழும் மக்கள் ஒரு கேள்விக்
குறியாக, கேலிப்பொருளாக எண்ணப்படலாம். அவ்வேளையில்
தாவீதரசனின் மன்றாட்டு நம் நாவில் எழ வேண்டும்.
"
கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான்
என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன்
நீரே. என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; ஏனெனில்
ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி செய்வார்
யாருமில்லை "
(திபா. 22: 10-11).
"
அவனுடைய சாந்தத்தை அறிந்துகொள்ளவும், பொறுமையைச்
சோதித்துப் பார்க்கவும், அவனை நிந்தை வேதனைப்படுத்திப்
பார்ப்போம்."
இரண்டாம் வாசகம் : யாக். 3:15-4:1-3
அனைத்து திருச்சபைக்கும் எழுதப்பட்ட பொதுமடல் இது.
விசுவாசிகளின் ஒழுக்க வாழ்வுக்கு உதவும் கருத்துக்களைப்
பழைய ஏற்பாட்டு ஞானநூலின் பாணியில் தருகிறார் யாக்கோபு.
உண்மையான கிறிஸ்தவன் பொறாமை யையும் போராட்டத்தையும்
விலக்கி, சமாதானத்தின் தூதுவனாய் விளங்க வேண்டும்.
செபிக்கும் முறை அறிந்து செபித்தால் நாம் கேட்பது
கிட்டும் என்ற நம்பிக்கையின் கீதமே இன்றைய வாசகம்.
ஞானத்தின் ஊற்று இறைவன் "
ஏனெனில் ஞானத்தை அளிப்பவர்
ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே"
(நீமொ. 2: 6). இறைவனின் ஞானம் "
கடவுளின் ஆற்றலிலிருந்து
புறப்படும் ஆவி. எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து
எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள்
நுழைய முடியாது"
(சாஞா. 7 : 25). வாக்காக இருந்த ஞானமே
இயேசு வழியே எம்மிடையே குடிகொண்டது (காண் யோ. 1:1- 3)
என்கிறார் யோவான். "
உமது அரியணை அருகில்
வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும்"
என்று
வேண்டுகிறார் சாலமோன் (சாஞா 9: 4). "
விண்ணினின்று வரும்
ஞானம் தீய எண்ணத்துடன் கலவாதது; இதுவே அதன் தலையாய
பண்பு"
(17). மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்தறன். தீய
எண்ணம் நம் சொல்லையும் செயலைபும்
தீட்டுப்படுத்துகின்றது. எனவே இறை ஞானத்தின் சிறப்பான
அம்சம் தீய எண்ணம் கலவாததாகும் என்கிறார். இந்த ஞானம்
என்றும் சமாதானத்தையே நாடும். "
அமைதியை அருளும்
நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில்
மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள்"
என்கிறார் பவுல்
(எபே. 6 : 15). ஞானி பொறுமையைக் கடைப்பிடித்து, விட்டுக்
கொடுக்கும் மனப்பான்மையுடன் ஏனையோருடன் இணங்கிச்
செல்லும் பக்குவம் பெறுகிறான். இறைஞானத்தின் மற்றொரு
அம்சம் கருணை உள்ளத்துடன் நற்செயல்கள் புரிவதாகும்.
இறைஞானம் கொண்டவர் "
பொறுமையைக் கடைப்பிடிப்பர்:
இணக்கத்தை நாடுவர்; நடுநிலை தவறார்; கள்ளமறியார் (17)
இறைஞானிகள் சமாதானத் தூதுவர்களாய் விளங்குவர். இவர்களை
மனதில் கொண்டே "
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபேற்றோர்,
ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்"
என்கிறார் இயேசு (மத் 5 : 9). நற்செய்தியை அறிவிக்கவும்
சமாதானத்தைத் தெரிவிக்கவும்... வருகிறவருடைய மலரடிகள்
மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன என்று சமாதானத்
தூதுவரின் புகழ்பாடுகிறார் (எசா. 52 : 7). இறைஞானத்தின்
அம்சங்களை நான் எந்த அளவு பெற்றுள்ளேன்?
தீய ஆசைகள்
கட்டுக் கடங்காத ஆசையே அனைத்துத் தீமைகளின் ஆணிவேர்
என்பது ஞானிகளின் கணிப்பு. செல்வத்தைக் குவிக்க
வேண்டும் என்ற பேராசை குடும்பத்தில் குழப்பத்தையும்
பிளவுகளையும் ஏற்படுத்துகிறது. மண்ணாசையால் ஒரு நாடு
மற்றொரு நாட்டை விழுங்கிவிடுகிறது. தம் ஆசைகளுக்குத்
தடையாய் நிற்பவர்களைக் கொலை செய்யும் கொடியவர்களும்
உள்ளனர் (4 : 2). ஆசைகள் நிறைவேறாதபொழுது சண்டை
சச்சரவுகள் ஏற்படுகின்றன. எளவே பொருள்களின் மீது பேராசை,
உடல் இச்சை போன்ற இழிவான ஆசைகள் ஆகியவற்றை அடக்கி
வாழ்பவனே உண்மையான ஞானியாவான்.
செபத்தின் வல்லமை
"
கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்;
தட்டுங்கள் திறக்கப்படும் என்பவை இயேசுவின் வாக்குறுதி.
"
நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம்
கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்
(மாற். 41 : 24) என்கிறார் நமதாண்டவர். எனினும் நாம்
கேட்கும் அனைத்தும் நிறைவேறாதது ஏன்? "
உமது சித்தம்
வருக"
என்று நம் உதடுகள் கூறினாலும், நம் அடிமனத்தில்
என் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்ற "
நமது சித்தமே"
முன்
வைக்கப்படுவதை உணாலாம். நாம் இறைவனிடம் கேட்பது அவரது
திருஉளத்திற்கு ஏற்றதாமிருந்தால், அவர் நமக்குச்
செவிசாய்க்கிறார் (யோ. 5 : 14). கீழ்த்தர ஆசைகளால்
தூண்டப்பட்டு, நம் சுய நல ஆசைகளைப் பூர்த்தி செய்து
கொள்வதற்கு இறைவன் துணை நிற்கமாட்டார் என்பதை உணர
வேண்டும் (4:3). நாம் நம்பிக்கையுடன்
செபிக்காவிட்டால், நமக்குத் தகாத ஒன்றைக் கேட்டால்,
நாம் கேட்பதை அடைவதால் நமக்கு நன்மை ஏற்படா தென்பதை
இறைவன் உணர்ந்தால், நாம் கேட்பதை அளிக்கமாட்டார்.
கேட்டாலும் ஏன் அடைவதில்லை? தீய எண்ணத்தோடு
கேட்பதால்தான்.
நற்செய்தி : மாற்கு 9 : 30-37
நமதாண்டவர் தன் பாடுகள், மரணம் உயிர்ப்புப் பற்றிப்
பலமுறை முன்னறிவித்துள்ளார். எருசலேமில்தான் அவரைக்
கழுவில் ஏற்றுவார்கள்; அவருக்குக் கல்லறை
கட்டுவார்கள். ஆனால் அவர் மரணத்தையும் வென்று வெற்றி
வாகை சூடுவார் என்பது பழைய ஏற்பாட்டில் நிழலாக வருகிறது.
புதிய ஏற்பாட்டில் அது நிஜமாகிறது.
பாடுகள் பற்றிய அறிவிப்பு
பாடுகள் பற்றிய அறிவிப்பு பலமுறை இடம் பெறுகிறது.
தலைமைக் குருக்கள், பரிசேயர் ஆகியோரால் மெசியா
புறக்கணிக்கப்பட்டுத் தீர்ப்பிடப்படுவார். (காண் மாற்.
8 : 3% திபா.:18 :22- 23). இறந்தவர் உயிர்த்து எழுவார்
(காண் உரோ. 4 : 25; ஒசே. 6:1- 3). ஆண்டவரின் உயிர்ப்பு
சீடர்களுக்குப் புரியவில்லை; அவரது அவமான மரணத்தை
அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே பாடுகள்
உயிர்ப்புக்கு வழி, மீட்பின்வழி என்பதை அவர்களுக்கு
வலியுறுத்தவே பல முறை பாடுகள் பற்றிப் பேசுகிறார்.
சீடர்கள் தம் தவறான கருத்துக்களை மாற்றிக்கொள்ள
வேண்டும்: மீட்பில், பாடுகளின் பங்கை உணர வேண்டும்.
வேதனைக்குப் பிறகே வெற்றி விழா; பெரிய வெள்ளிக்குப்
பிறகுதான் பாஸ்கா ஞாயிறு அல்லேலூயா! ஆண்டவரின் சீடனாகத்
திகழும் நான் என் சிலுவையை எடுத்துக்கொண்டு, ஆண்டவர்
நடந்து சென்ற பாதையில் நடக்கத் தயாரா?
யார் பெரியவன்?
இயேசு இறந்தும் வாழ்வேன் என்று கூறியதால், சீடர்களுக்கு
அவரில் ஒரளவு நம்பிக்கை ஏற்பட்டது. எனவே வாழும் கிறிஸ்து
ஏற்படுத்தும் அரசில் தங்களில் யார் பெரியவன் என்ற
தர்க்கம் எழுகிறது. சீடர்கள் இருவரின் பதவி உயர்வுக்காக
மன்றாடிய தாயும் உண்டு (காண் மத். 20 : 20 - 22).
பதவியின் பயன் மக்களுக்குத் தொண்டு புரிவதே என்பதை
சீடர்கள் உணரவில்லை. இதற்கு மாறானது இயேசுவின் எண்ணம்.
இறைவனுக்கு இணையான இயேசு, உலகப் பெரியவர்கள்,
முதலாளிபோல் பணி பெறுவதற்கன்று; பணி புரியவே வந்தார்
(10: 45). பெரியவனாக எண்ணப்பட விரும்புபவன் தன்னைப்
பலருக்கும் பணிபுரியும் கடையனாகவே கருதட்டும் என்பது
இயேசுவின் போதனை. எனவே "
தான் என்ற ஆணவம் அகன்று,
இறைவன் முன் அனைவரும் சமம் என்று எண்ணி, "
பணி செய்து
கிடப்பதே தன்கடன்""
என்பதை ஏற்று, தன்னலம் மறந்து பிறர்
நலம் பேணுபவனே பெரியவன் என்பதே இயேசுவின் போதனை.
குழந்தையும் இயேசுவும்
இயேசு குழந்தைகளை வரவேற்றார்; அவர்களைக் கொஞ்சினார்.
இவர்கள் முகத்தை வானதூதர் பார்த்து மகிழ்வதாகக்
கூறினார் (மத். 18 : 10). "
சிறுபிள்ளைகளை என்னிடம்
வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில்
இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச்
சிறுபிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு
உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்
(மாற். 10 : 14 - 15). பட்டம், பதவி, பெருமை, முதலிடம்
ஆகியவற்றைக் குழந்தைகள் தேடா. எல்லோரையும்விட,
குழந்தைதான் பிறர் உதவியை நாடி வாழ்கிறது. பிறரின்
உதவியை நாடி வாழ்பவரே உலகில் அதிகம். உடல் ஊனமுற்றோர்,
வறுமையில் வாடுவோர், சமுதாயத்தில் சாதியின் பெயரால்
தாழ்த்தப் பட்டோர், நீதி கிடைக்காது நிலை குலைந்து
வாழ்வோர் ஆகிய அனைவரும் குழந்தைகள்போல் நமது உதவிக்காக
ஏங்குபவர். இத்தகையோருக்கு உதவுவது இறைவனுக்கு
உதவுவதற்குச் சமம். உயிருள்ள கோயில்களைப் பாதுகாக்காது
கற்களால் கோயில்களை எழுப்பி ஆடம்பர வழிபாடு நடத்துவது
பொருளற்றது.
படமாடக் கோயில் [மாடக் கோயில்கள்] பகவற்கு ஒன்று
ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அஃது ஆமே (திருமூலர்)
இயேசுவுக்குத் தெரியாதென்று எண்ணி சீடர்கள்
விவாதித்துக் கொண்டு வந்தனர். "
என்ன பேசிக்கொண்டு
வந்தீர்கள்?"
என்று அவர் கேட்க, அனைவரும் மெளனிகள்
ஆயினர். இயேசுவுக்கு முன் எண்ணாத- சொல்லாத-செய்யாத
எதையும் அவருக்கு மறைவாகச் செய்யேன் என்ற உறுதியுடன்
வாழ்வேனா?
(ஒருவன் முதல்வனாக இருக்க விரும்பினால், அவன்
அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்.)
தமிழகத்தின் எல்லா மூளைமுடுக்களிலும் பலரின் பார்வைக்கு
சொந்தமானவர் இவர். தன் புத்தக வாசிப்பின் வழியாக வாழ்வை
நேசிப்பவர். தமிழ் மீதான ஆர்வமும், தமிழ் மீதுள்ள பற்றும்
இவரின் சொற்பொழிவுகளில் தெவிட்டாத தேனாய் பாய்ந்தோடும்.
அதுமட்டுமல்லாமல் படிப்பு, பண்பு, ஒழுக்கம், திறமை,
சுயமுன்னேற்றம், வழிகாட்டுதல் போன்ற தலைப்புகளில் பல
மேடைகளில் தன் பேச்சின் மூலமாக இம்மானுடத்தின் தவறுகளைச்
சரியாக சுட்டிக்காட்டி வாழ்வின் உண்மையான சுவையை
ஒவ்வொருவரும் அறிந்திட, சுவைத்திட உதவுகிறார். இவர் ஒரு
காவல்துறை அதிகாரி. திருச்சி எஸ்பியாக இருந்து ஒய்வுப்
பெற்றவர். தன்னுடைய காவல் பணியையும், கருத்துகளை
எடுத்துரைக்கும் கனிவான பணியையும் ஓய்வின்றி செய்யும்
ஆற்றலுள்ள, துடிப்புமிக்க மனிதர் இவர். ஒரு முறை தன்னுடைய
பேச்சில்; தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவரசியமான நிகழ்வு
ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். கேரளத்தைச் சார்ந்த ஒரு
போலீஸ் அதிகாரியின் மகள் துப்பாக்கிச் சுடும் போட்டியில்
கலந்து கொள்ள வந்தார். நானும் அந்தப் போட்டியில் பங்கேற்க
சென்றிருந்தேன். எப்போதும் முதல் இடத்தைப் பெறும் நான்
அன்று கொஞ்சம் மதமதப்பில்தான் இருந்தேன். என்னைவிட யார்
பெரியவராய் இருக்க போகிறார் என்றெல்லாம் நினைத்தேன்;.
வழக்கமாய் நான்தான் இந்த போட்டியின் மெடலைப் பெறுகிறேன்.
இந்த ஆண்டும் எனக்குத்தான் என்று காலரைத் தூக்கிவிட்டேன்.
அந்தோ அவரின் நிலை மோசமானது. இளம் பெண்ணாக வலம் வந்த அந்த
கேரளத்து காவல்துறை அதிகாரியின் மகள் மிக நேர்த்தியாக
துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று விளையாட்டை
நிறைவுச்செய்கிறார். போட்டியில் வெற்றியும் பெறுகிறார்.
இதுவரை, இந்த போட்டியில் என்னைவிட யாரும் வெற்றி பெற
முடியாது என நினைத்து பெரிய கனவு கோட்டை கட்டியவரை கடவுள்
உன்னைவிடவும் பெரியவர் இவ்வுலகில் இருக்கிறார்கள் என
சொல்லி அவருக்கு பாடம் புகட்டியதாக அவரே
சொல்லியிருக்கிறார். இத்தகைய எண்ணங்களுக்கும்,
செயல்பாட்டுக்கும் சொந்தக்காரர் யார் என்றால், முன்னாள்
காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய ஐயா திரு.
கலியமூர்த்தி IPS அவர்களே. நம் வாழ்வில் நம்மைவிட
மற்றவர்கள் பெரியவர்கள்தான் என்ற தாழ்ச்சியுள்ளம் நமக்கு
இருந்தால், எல்லாரையும்விட நாம் பெரியவற்றைச் செய்யவும்,
பெரிய காரியங்களில் ஈடுபடவும் முயற்சி செய்வோம் என்கிறார்
அவர்.
இறைஇயேசுவில் இனியவர்களே,
நாம் வாழும் இந்த சமுதாயத்தில் கடந்த இரண்டு ஆண்டளவாக
பெருந்தொற்றான கொரானா வைரசின் தொற்று நம்மை
ஆட்டிப்படைக்கின்றது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,
தூக்கிப் போட கூட ஆளில்லாமல் அனாதையாகவும், குவியல்
குவியலாக குழிகளைத் தோண்டி அடக்கம் செய்யும் அவலநிலையும்
நம் நாட்டில் இருக்கிறது என்பதை யாவரும் அறிவோம். இதில்
ஒன்றை ஆழமாக உற்றுநோக்க வேண்டும். கல்லறையில் அடக்கம்
செய்கையில் இவர் பெரியவர், இவர் அரசியல்வாதி, இவர்
அருள்பணியாளர், இவர் பொறியாளர் என்று யாரையும் பெரியவர்
சிறியவர் பார்வையில் பார்ப்பதில்லை. இறந்தால்
எல்லோருக்கும் ஒரே ஒரு பெயர்தான் 'பிணம்'. இதைக்கடந்து
வேறு பெயர்கள் எதுவும் இறந்தவருக்கு வைப்பதில்லை. ஏன்
இவற்றைச் சொல்கிறேன் என்றால், நாம் இறப்பதற்கு முன்பு வரை
எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோம் என்பதில்
அடக்கியிருக்கின்றது நம்முடைய 'பெரியவர்' என்ற மதிப்பும்,
மரியாதையும். நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய நோயாக,
அச்சுறுத்தும் வைரசாக கொரானாவைப் பார்க்கின்றோம். ஆனால்
அதைவிட மிகப்பெரிய வைரஸ் எதுவெனில் 'தன்னை பெரியவனாக
காட்டிக்கொள்ளும் பழக்கமும், பெரிய இடத்தை நோக்கி
நடைபோடும் வாழ்வும்தான்'. இது மிகப்பெரிய நோயாக மனிதன்
வாழ்வில் இருக்கிறது என்பதை இன்றைய நாள் இறைவாக்கு வழிபாடு
மிகத் தெளிவாய் எடுத்துரைக்கின்றன. படைப்பின்
தொடக்கத்திலேயே ஆணும், பெண்ணுமாக மனிதர்களைக் கடவுள்
படைத்த நாள் தொடங்கி இன்றுவரை பெரியவர், சிறியவர்
போராட்டம் தொன்றுதொட்டு வந்துகொண்டே இருக்கின்றன. சிறுவர்
தொடங்கி அனைத்து தரப்பினரும் நம்மைவிட வேறு யாருமே பெரிய
ஆள்; கிடையாது என்பதை மனதில் இருத்திப் பயணிக்கின்றோம்
என்பதைத் தெளிவுப்படுத்தி, எங்கே, எதில், எப்போது நாம்
பெரியவராக இருக்கிறோம் என்பதையும், அது எப்படிப்பட்ட
புரிதலுடன் இருக்க வேண்டுமென்பதையும் இன்றைய நாள் வழிபாடு
வரையறுத்து நமக்குக்கொடுக்கின்றன.
பிரியமானவர்களே,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாட்டிடைக் குகையிலே குழந்தையாக
பிறந்தார். குடிசையிலே வளர்ந்தார். குன்றிலே இறந்தார்.
இதுதான் அவரின் வாழ்வின் சுருக்கம். பிலி 2:6-11 வரையுள்ள
இறைவார்த்தையில் 'தம்மையே வெறுமையாக்கி அடிமையின்
வடிவமேற்று மனிதருக்கு ஒப்பானார்' என்று இயேசு தன்னையே
முழுவதுமாக இந்த மானுடச் சமூகத்தின் மீட்புக்காக தன்னையே
கையளிப்பதைக் காண்கின்றோம். யோசனையில் பெரியவரே ஆராதனை
ஆராதனை என்று பாடுகிறபோது, நம் எண்ணங்கள் எப்படிப்பட்டதாய்
இருக்கின்றன. இறைவனே மிகப்பெரியவர் என்ற சிந்தனைத்தெளிவு
நமக்குள் உதிக்க வேண்டுமென்பதற்காகத்தான் இப்படிப்பட்ட
பாடல்கள் எல்லாம் நம் திருஅவையில் உள்ளன. ஆகவே இன்றைய
உலகிலே 'யார் மிகப்பெரியவர்' என்ற நோய் எல்லாருடைய
வாழ்விலும் வந்ததால் மிக குறைந்த மனிதர்களே கடவுளே
பெரியவர் என்பதை தங்கள் வாழ்வின் வழியாக
கண்டுபிடிக்கின்றனர். தன்னுடன் வருபவரே மிகப் பெரியவர்
என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத சீடர்கள் தங்களுக்குள்
யார் பெரியவர் என்று; பேசிக்கொண்டனர். ஆக சீடர்களின்
பெரியவர் பற்றிய சிந்தனை அழைப்பு, இருப்புநிலை,
அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல், இயேசுவின்
உடனிருப்பு, அன்புவட்டத்துக்குள் இருக்கும் வாழ்வு,
நெருங்கி பழகுதல், நட்புறவு போன்றவற்றின் அடிப்படையில்
வாக்குவாதம் அங்கே நிகழ்ந்தது. ஆனால் இயேசுவின்
வார்த்தையும், அவர் விரும்பும் வாழ்வும் வித்தியாசமானது.
பெரியவர் யார் என்ற சிந்தனையையும், எப்படிப்பட்ட வகையில்
நாம் பெரியவராக மாற முடியும் என்ற தெளிவையும் தன் போதனை
வழியாக கொடுக்கிறார் இயேசு. இதைத்தான் எசாயா புத்தகத்தில்,
55:8-9இல் 'என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள்
வழிமுறைக் என் வழிமுறைகள் அல்ல' என்று ஆண்டவர் அறிதிட்டு
கூறுவதை வாசிக்கின்றோம். எனவே நாம் நினைப்பதைக்காட்டிலும்
ஆண்டவர் மிகப் பெரியவற்றைச் செய்ய கூடியவராக இருக்கிறார்
என்கிற கருத்தைத் திருப்பாடல் ஆசிரியர் அடிக்கடி தன்
பாடலின் வழியாக செபிக்கின்றார். இன்றைய
பதிலுரைப்பாடலிலும்;;கூட 'என் வாழ்வுக்கு ஆதரவாய்
இருப்பவர் கடவுள்' என்கிற ஆழமான புரிதலைக் கொடுக்கின்றார்.
இவ்வளவும் கொடுத்த பின்பும்கூட நமக்குள் இருக்கும்
'நான்தான் பெரியவன்' என்ற நோய் நீங்காமலே இருப்பதால்தான்
மீண்டும் மீண்டும் இயேசுவின் வார்த்தைகள் தேவைப்படுகின்றன.
இன்றைய வாசகங்களில் பின்னணியில் சிந்திக்கின்ற போது,
மூன்று வாசகங்களுமே முத்தான செய்திகளைக் கொடுக்கின்றன.
முதல் வாசகத்தில்,
கிரேக்கத் தழுவுதலில் ஆழமாய் வேரூன்றிய யூதமக்கள் கிரேக்க
ஞானத்தையும், படிப்பையும், அறிவுத்திறனையும்
உடையவர்கள்தான் பெரியவர்கள் என்று நினைத்தார்கள். கடவுள்
என்ற பார்வையும், அதன் பார்வையில் உருவாகும் வழிபாடும்
மூடநம்பிக்கை என்றும் வாதிட்டு, கடவுளைவிட நாங்களும்,
நாங்கள் வைத்திருக்கும் பணம், பதவி, பட்டம், அறிவுத்திறன்,
திறமை, படிப்பாற்றல் இவற்றின் அடிப்படையில் 'நீ பெரியவர்'
என்ற புரிதலுக்குள் வந்தனர். ஆனால் கடவுளோ இத்தகைய
ஞானத்தைவிட என் ஞானமே சிறந்தது என்பதை தெளிவுபடுத்துவதற்கே
'நீதிமான்களின் சொற்கள்' என்ற சொல்லாடல்
பயன்படுத்தப்படுகிறார். அதன் அர்த்தத்தையும்
விளக்குகிறார்.
இரண்டாம் வாசகத்தில்,
நீங்கள் அனைவரும் பெரியவராக இருக்க விரும்புவதால்தான்
உங்களிடையே பொறாமையும், கட்சிமனப்பான்மையும், குழப்பமும்
அதிகமாக வருகின்றன. கடவுளை முன்னிறுத்தி வாழ்வை பேண
வேண்டிய நீங்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னுறுத்தி
சுயஇலாபம் தேடுகின்றனர். எனவேதான் சண்டை, சச்சரவுகள்,
பேராசை, கொலை செய்யும் எண்ணம் இவையெல்லாம் தோன்றுகின்றன
என்பதையும் தெளிவுபடுத்துகிறார் புனித யாக்போபு.
அப்படியானால் இயேசு கொடுக்க விரும்புகின்ற 'பெரியவர்' என்ற
மனநிலை எப்படித் தோன்றும், அது கிடைத்தால் என்ன நிகழும்
என்பதன் விளக்கவுரையே இந்த இரண்டாம் வாசகம்.
நற்செய்தியில்,
இயேசு தம் சீடர்களுக்கு அழகான உவமைகள், தெளிவான பார்வைகள்,
ஆழமான புரிதல்களுடன் பல்வேறு கருத்துகளைக்
கற்றுக்கொடுத்தார். இருந்தாலும் அவர்களின் எண்ணமெல்லாம்
இயேசு மெசியா அவர் ஒரு அரசர் என்பதில் இருந்ததால்தான்,
அவரின் அரசவையில் யார் பெரியவராய் இருப்பார் என்ற
எண்ணமும், ஏக்கமும் எழுந்ததால்தான் அவர்களுக்குள்ளே வீண்
வாக்குவாதமும், சண்டையும் நிகழ்ந்தது. அதை நிவர்த்திச்
செய்யும் பணியைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில்
செய்கிறார்.
இறைஇயேசுவில் பிரியமானவர்களே,
நாம் ஒவ்வொருவரும் கடவுளைவிட பெரியவர் கிடையாது என்ற
சிந்தனையும், மற்றவர்களுக்கு பணிபுரிவதில், பணி செய்வதில்,
கற்றுக்கொடுப்பதில், கற்றுக்கொள்வதில், நேசிப்பதில்
பெரியவராக இருந்தால் மற்றவர்களின் பார்வையில் நாம்
சிறியவராகவும் இருந்தாலும் பெரியவராக பார்க்கப்படுவோம்
என்ற சிந்தனையையும் இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு
எண்பித்துகாட்டுகிறது. ஆகவேதான் குழந்தை ஒன்றை எடுத்து
அவர்கள் நடுவில் நிறுத்தி இயேசு போதிக்கிறார் என்றால்,
குழந்தைகளிடத்தில் கபடற்ற உள்ளம், பற்றற்ற தன்மை, மனநிறைவு
காணும் குணம் இம்மூன்றும் அப்பழுக்கற்ற நிலையில் உள்ளன.
எனவே குழந்தைக்குரிய மனநிலையில் வாழ்ந்தோமானால் நாம்
பெரியவராக ஆண்டவரின் பார்வையில் இருப்போம். அதற்கு நாம்
என்ன செய்ய வேண்டும். நாம் பெரியவர் என்பதை எதனடிப்படையில்
கண்டுபிடிக்கலாம் என்பதைத்தான் பின்வரும் தலைப்புகளின்கீழ்
உணர்ந்துகொள்வோம்:
பணத்தால் அல்ல பண்பால்:
ஒருத்தருக்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப்
பொறுத்துதான் இவ்வுலக பெரியவர் என்ற நிலையைத்
தீர்மானிக்கிறது. ஆனால் பணத்தைவிட ஒருவரிடத்தில்
காணப்படும் பண்புதான் கடைசி வரை 'இவர் பெரியவர்' என்ற
தகுதியை நமக்கு வழங்குகின்றது.
குறை காண்பதில் அல்ல குணத்தால்:
ஒருசில நேரங்களில் அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே அலசி
ஆராய்ந்து தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ளும் மனிதர்கள்
நம்மிடத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவரின்
குறைகளைக் கண்டால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.
அப்படியிருக்கையில் குறைகள் மட்டுமே மிஞ்சுமே ஒழிய குணம்
பிறக்காது என்பதே உண்மை. பெரியவராய் இருக்க வேண்டிய
இடத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதைவிட குணத்தால்
குறைகளை நிறையாக்கும் பண்புடையவர்தான் அவசியம் என்கிறது
எதார்த்த வாழ்வு.
பதவியால் அல்ல பண்பட்ட வாழ்வால்:
யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் பதவியால் யாரும் பெரிய
இடத்தைப் பிடிப்பதில்லை. வேண்டுமென்றால் அது பணி
நிமித்தமாய் இருக்கலாம். ஆனால் உண்மையில் யார் ஒரு
பெரியவராய் இருப்பார் என்றால், பண்பட்ட உள்ளம் கொண்டவராய்
இருப்போரே என்றென்றும் பெரியவராய் இருப்பர் என்ற
கருத்தியலை வழங்குகிறார். அவர்கள்தான் தூய்மை, அமைதி,
பொறுமை, நடுநிலை தவறாமை, வெளிவேடமற்ற செயல்பாடு, நீதி
ஆகியவற்றை அடித்தளமாய் வைத்து கடவுளே நம்மைவிட பெரியவர்
என்ற மனநிலையில் பெரியவருக்குரிய மனப்பான்மையைப்
பெறுகின்றனர். சிந்திப்போம்! இறைவனின் செயல்கள் நம்முடைய
அறிவுக்கும், ஆற்றலுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்டது.
நாம் நினைப்பதற்கு மேலாகவே இறைவன் எல்லாவற்றையும் செய்ய
கூடியவர். அவரிடத்தில் தஞ்சம் அடைவோம். அப்போது தெளிவான
பார்வை ஒன்று நமக்கு பிறக்கும்: 'கடவுளைவிட நாம் பெரியவர்
அல்ல. கடவுள் நினைத்தால் நம்மைப் பெரியவராய் மாற்றுவார்'
அருள்பணி. அ. மாணிக்கம்
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ