விளம்பர உலகம் இது. வியாபார நோக்கம், விற்பனை பெருக்கம் போட்டிகளில்
ஞாபக சக்தி தரும் உணவு, இயற்கை உணவு, ஆயுளை நீடிக்கச் செய்யும்
உணவு என வகைகளின் பட்டியல் நீட்டமானது.
நீண்டாலும் கற்பனைக்கு எட்டாத
உயிர் தரும் உணவை அருந்தும் விருந்துக்கு வாருங்கள் என, இந்த
ஞாயிறு விளம்பரம் நம் கவனத்தை ஈர்க்கிறது. உணவு தான் வாழ்வின் ஆதாரம்.
அதுவே வாழும் நாட்களின் ஆயுள் சந்தா.
இந்தச் சந்தாவை தவணை முறையில் இடைவிடாது பெற்றுக் கொள்ளச் சொல்லி
ஒவ்வொரு நாளும் நிகழும் திருப்பலி மீண்டும் மீண்டும் அழைப்பு
விடுக்கிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை வயிற்றுப் பசிக்காக உணவைத் தேடும் மனிதன,;
அதை சம்பாதிக்க அலையும் நிலையை நினைத்தால் ஒன்றுமில்லாமைக்காக உழைத்தது
புலப்படும். வாழ்வு தரும் என மனிதன் சேமித்த உணவு, இவ்வுலகத்தை
தாண்டுவதற்கு மட்டுமே என்பதை அறிகிறோம்.
இயேசுதரும் உணவு மண்ணக வாழ்வைத் தாண்டி விண்ணக வாழ்வு வாழ அழைத்துச்
செல்லும் உணவு.
"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் உலகு வாழ்வதற்காகக்
கொடுக்கிறேன்" இந்த வார்த்தை ஆண்டவரே நமக்கு உயிர்தரும் உணவு என்பதைச்
சொல்கிறது.
திருவிருந்தில் நற்கருணையை அருந்தும் போதெல்லாம் நிலைவாழ்வுக்கான
உணவை, உயிரளிக்கும் உணவை அருந்துகிறோம் என்ற உணர்வை மறவாமல் ஞாபகப்படுத்தும்
திருப்பலி இது.
உயிரளிக்கும் விருந்தை அருந்தும் போதெல்லாம் நிலைவாழ்வின் பயணத்தில்
ஒரு அடி முன்னோக்கி வைக்கின்றோம். விண்ணக வாழ்வுக்கான சிபாரிசு உணவை
நற்கருணை வடிவத்தில் மண்ணகம் தன்னகத்தே வைத்துள்ளது.
உயிரளிக்கும் உணவை உண்டு மகிழ்வோம். பிறரையும் மகிழச் செய்வோம். இணைந்து
செபித்து நற்கருணை உணவின் அதிசயங்களை அனுபவிப்போம்.
1. எங்கள் உள்ளத்தில் உணவின் வடிவத்தில் வந்து தங்கும்
இயேசுவே!
நீர் தரும் விருந்தை உண்டு மகிழும் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவியர் நிலைவாழ்வுப் பாதையில் மக்களை வழிநடத்த
உயிரளி;க்கும் உணவின் கொண்டாட்டத்தை மிகுந்த வணக்கத்துடன்
நிறைவேற்ற ஆற்றல் நல்க இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. உயிர் தரும் உணவை அருந்த எமை அழைக்கும் ஆண்டவரே!
நிலையற்ற உணவுக்காக போட்டி போட்டு உழைக்கும் நாட்டுத்
தலைவர்கள்; நிலையான உணவைப் பெற்றுக் கொள்ள தங்கள் பதவியைக்
கொண்டு ஏழை எளிய மக்களின் நலவாழ்வுக்கு ஏற்ற உதவிகள்
பல செய்ய ஆற்றல் நல்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
3. உலகு வாழ்வதற்காக உணவை வழங்கும் இறைவா!
பிறரின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த குருக்களால்
வாழ்வுப் பசிக்கான உணவை இறைமக்கள் அருந்தி மகிழ ஆற்றல்
நல்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நற்கருணை உணவால் நாளும் எமைக் காக்கும் தெய்வமே!
ஒவ்வொரு முறையும் நாங்கள் பங்கேற்கும் திருப்பலி
வழியாக திருவிருந்தை அருந்தி எங்கள் பிரச்சனைகளைத்
தாங்கிக் கொண்டு, மண்ணகத்திலும் விண்ணகத்திலும்
மகிழ்ச்சியோடு வாழ ஆற்றல் நல்க வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
5. விண்ணகப் பயணத்திற்காக உணவு தரும் இறைவா!
அழிந்து போகும் உணவுக்காக வருந்திக் கொண்டும்,
போட்டிப் போட்டுக் கொண்டும் உழைக்கும் எங்கள் உழைப்பை
விண்ணகப் பயணம் நோக்கி அழைத்துச் செல்லும் உயிர்தரும்
உணவுக்கான உழைப்பாக மாற்றிட ஆற்றல் நல்க வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மலையடிவாரத்தில் இருந்த அந்தத் துறவியைச் சந்தித்து அவரின் சீடனாக
ஆசைப்பட்டான் ஓர் இளைஞன். அவன் ஞானியிடம் மனித வாழ்வின் நோக்கம் என்ன
என்பதைப் பற்றி எனக்குக் கற்றுத் தருவீர்களா? என்று கேட்டான். அதற்கு
துறவி முடியாது என்று பதில் சொன்னார். அவன் அந்தத் துறவியிடம்
மீண்டும் மரணத்தைப் பற்றியும் மறுவாழ்வின் தன்மையைப் பற்றியும் எனக்குக்
கற்றுக் கொடுப்பீர்களா? என்று கேட்டான். இந்தக் கேள்விக்கும் துறவி
முடியாது என்றே மறுமொழி கூறினார்.
எல்லாக் கேள்விகளுக்கும் முடியாது.. முடியாது என்றே துறவி பதில்
கூறியதால் சீடனாக வேண்டும் என்ற ஆவலோடு வந்தவன் ஏமாற்றத்துடன்
திரும்பிப் போய்விட்டான். புதிதாகத் துறவியாக வேண்டும் என்ற ஆவலோடு
வந்தவன் திரும்பிப் போனதைக் கண்ட மற்ற சீடர்கள் மன வேதனைப்பட்டனர்.
அதைக் கண்ட துறவி சீடர்களைப் பார்த்து வாழ்க்கையைச் சுவைத்துப்
பார்க்காத ஒருவன் வாழ்க்கையைப் பற்றியோ அதன் பொருளைப் பற்றியோ அறிந்து
என்னப் பயன்?என்று சொன்னார். வாழ்க்கை என்பது ஒருவரால் கற்றுக்
கொடுக்கப்படுகிற பாடம் அல்ல.மாறாக கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அது
என்றார்.
அந்தச் சிறுவன் வீட்டில் பெற்றோருடன் அமர்ந்திருந்தான். தாயைப்
பார்த்து அம்மா இந்த உலகத்திலேயே கனிவான அழகான முகம் உன்னுடையதுதான்.
இந்த முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று
தோன்றுகிறது என்றான். இவ்வாறு சொல்லிவிட்டு தன் தாயின் கைகளைப்
பார்த்தான். அவை வளைந்து நெளிந்து ஒழுங்கற்று இருந்தன. அவன் வியந்துபோய்
என்னம்மா உலகிலேயே அசிங்கமான கைகள் உன்னுடைய கைகளாகத்தான் இருக்க
வேண்டும். இதைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது என்றான். உடனே
அவனுடைய தந்தை அவனை அழைத்து நான் உனக்கு ஒரு கதை சொல்லுகிறேன் கேள்
என்றார். ஒரு; நாள் ஒரு குழந்தை தொட்டிலில் திடீரென தீப்பிடித்தது.
அய்யய்யோ! அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது? என்று பதற்றமாகக்
கேட்டான் சிறுவன். நெருப்பைப் பார்த்ததும் தாய் அலறியடித்துக்
கொண்டு தன் குழந்தையைக் காப்பாற்ற ஓடினாள் குழந்தையை வாரி அணைத்துக்
காப்பாற்றும்போது அவளுடைய கைகள் தீயில் வெந்துபோனது. ஓ! என்ன
துணிச்சல் அந்த அம்மாவுக்கு! என்று வியந்தான் சிறுவன். அந்த அம்மா
யார் தெரியுமா? உன்னுடைய அம்மாதான் .இன்று இப்படி ஒழங்கற்றுத் தழும்புடன்
இருக்கும் இந்தக் கைகள்தான் அன்று உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய கைகள்!
என்றார் அப்பா. அந்தச் சிறுவன் தன் அம்மாவைப் பார்த்தான். அவன் கண்களில்
கண்ணீர் வழிந்தது. தன் தாயின் கரங்களைப் பற்றி தொடர்ந்து முத்தமிட்டான்.
அம்மா இந்தக் கைகள் தான் உலகிலேயே அழகிய கைகள் என்றான்.
"ஆன்ம உணவாகும் அளவுக்கு தம்மை அழித்துக் கொண்ட கிறிஸ்து விசுவாசமுள்ள
கிறிஸ்தவனில் இரண்டற இணைந்து கலந்துவிடுகிறார்.
-புனித பிரான்சிஸ் சலேசியார்
"எடுத்து உண்ணுங்கள். இது என் உடல் என்று இயேசு சொன்னபோது என்னை
உண்ணுங்கள் அப்போது எனக்குள்ளும் உங்களுக்குள்ளும் உயர்ந்த சங்கமம்
ஏற்படுகிறது என்றே பொருள் .
-புனித ஜான் கிறிசோஸ்தோம்
நற்கருணை அன்பின் திருவருட்சாதனம் கடவுள் தரும் மேலான அன்பின் அடையாள
அறிகுறி.
-புனித தாமஸ் அக்குவினாஸ் நற்கருணையை அருந்தி பய பக்தியுடன்
ஜெபிக்கும் போது நம்வேண்டுதல் நிச்சயம் கேட்கப்படும்.
நமது மீட்ப்புக்காகத் தான் இயேசு தன் உடலை உணவாகத் தந்தார்.
நற்கருணையை அடிக்கடி சந்தித்து உடலுக்கும் உள்ளத்துக்கும்
வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்வோம்.
வயிறுப் பசிக்கு உண்ணும் உணவின் பயனைவிட, நற்கருணை பல மடங்கு
பலனை வாழ்க்கைப் பசிக்கான உணவாகத் தருகிறது.
சமீபத்தில் தமிழகத்தில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் காட்டாற்று
வெள்ளத்தில் அகப்பட்ட சகாயராணி என்ற இரண்டாமாண்டு நவகன்னிகையின்
உடலை தேடித் தவித்த போது நற்கருணை நாதரிடம் இடைவிடாது மன்றாடி
மூன்று நாட்களுக்குப் பிறகு அவரின் உடலைக் கண்டடைந்து அடக்கம் செய்தனர்.
இது கடவுள் சகாய ராணிக்கு துறவற பயிற்சி அளித்த கொன்சாகா சபைக்கு
செய்த புதுமை என்றால் அது மிகையாகாது.
நற்கருணையை மிகுந்த மரியாதையுடன், நம்பிக்கையுடன், விசுவாசத்துடன்,
வணங்குவோம்.
வாழ்க்கையில் துன்பப் புயல் தாக்கும் போதெல்லாம் நற்கருணை நாதரிடம்
தஞ்சம் புகுவோம்.
உயிர் போகும் பிரச்சனை என்றாலும் உயிரளிக்கும் உணவை உண்டு ஆறுதலும்
வாழ்வும் பெற்று மகிழ்வோம்.
காசு பணமின்றி இலவசமாக நமக்குக் கிடைக்கும் திருவிருந்தை தகுந்த
தாயாரிப்புடன் உண்டு அதன் பலனை அனுபவித்து மகிழ்வோம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
எது ஞானம்?
மாயையிலிருந்து விடுபட்டு ஞானத்தை நோக்கிச் செல்வதே உண்மையான
ஆன்மீகம் அல்லது நிலை வாழ்வு என்று ஆன்மீக வாதிகள் பலர் அருட்பொழிவு
ஆற்றுவதுண்டு. ஞானம் , மாயை என்னும் மதிகேடு, நிலைவாழ்வு இதனைப்
பற்றித் தான் இன்றைய அனைத்து வாசகங்களும் பேசுகின்றன. எது
ஞானம்? எது மாயை? நாம் திரைப்படம் அல்லது நாடகம்
பார்க்கின்றோம். நமக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள்
நடிகர்கள் திரையில் துன்புற்றால், நாம் இங்கு கண்ணீர்
வடிக்கின்றோம். அதுவே நகைச்சுவை சொல்லி மகிழ்வித்தால்
புன்னகைத்து பூரிப்படைகிறோம். இது நிஜமில்லை என்று
தெரிந்திருந்தும் ஏன் இவ்வாறு செயல்படுகிறோம். காரணம், நாம்
நிழலை நிஜமாகவே எண்ணி அதனை பின்தொடர்கிறோம் . அது சொல்வது
செய்வது அனைத்தும் உண்மை என்றே எண்ண ஆரம்பித்து விடுகிறோம்.
நாம், நம் முன் இருக்கும் திரை, என்ற இரண்டு நிலையில் இருந்து
மாறி அந்த திரையை இயக்குபவர் என்ற மூன்று ஆள் நிலைக்கு நாம்
மாறும் போது ஞானமுள்ளவர்களாக மாறுகிறோம்.
நாம் பெரும்பாலும் ஞானம் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிப்பதில்லை.
அதற்கு மாறாக புத்திசாலி, அறிவாளி என்று கூறி விடுகிறோம். எதன்
அடிப்படையில் ஒருவரை புத்திசாலி என்றோ அறிவாளி என்றோ நாம்
கூறுகிறோம்? நமக்கு தெரியாத ஒன்றை, அல்லது நாம் கேட்டறியாத
ஒன்றை யாராவது செய்தால் சொன்னால் உடனே அவரை அறிவாளி,புத்திசாலி
என்று கூறுகிறோம். அவர்கள் எல்லாம் உண்மையிலேயே அறிவாளிகளா? இப்போதுள்ள
குழந்தைகளுக்கு நாம் பயன்படுத்தும் தொலை தொடர்பு சாதனங்கள்
பற்றிய அனைத்தும் நம்மை விட அதிகமாகவே தெரிகிறது. அதனால் அவர்கள்
அறிவாளிகளாக ஆகிவிடுவார்களா? முடியாது. அத்தியாவசியமான
காரியங்கள் பற்றி தெரியாமல், ஆடம்பரமான காரியங்கள்
பற்றிய அறிவு இருப்பதால் ஒரு பயனும் இல்லை. குழந்தைகளுக்கு
எது நல்லது எது கெட்டது எது தேவை , தேவை இல்லை என்று பகுத்தறியக்
கூடிய அறிவு அனுபவம் தான் முதலில் தேவை.
இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் செயல்களை ,
ஞானமுள்ளவர்கள் செய்யும் செயல்களைப் பற்றிக்கூறுகின்றது.
ஞானம் தனக்கென்று ஒரு வீடு கட்டுகிறது. அதாவது தன்னை ஒரு
நிலைக்கு நிறுத்துகிறது. ஏழு தூண்கள் கொண்டு அதை நிலையான வீடாக
ஆக்குகிறது. இதன்மேல் இன்னும் பல வீடுகள் கட்டுமளவுக்கு அடித்தளத்தை
திடமாக போட்டு கட்டுகிறது. தனது மகிழ்வை பிறருடன் பகிர
விரும்பி அனைவரையும் அழைக்கிறது. சுவையான விருந்து சமைக்கிறது.
தனக்கு நேர், எதிர் குணம் கொண்டவர்களையும் விருந்திற்கு அழைக்கிறது.
தன்னைப் போல வாழ அறிவுரை கூறுகிறது. நாம் ஞானமுள்ளவர்களாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? நமது எதிராளிகள் என்று நாம் எண்ணிக்
கொண்டிருப்பவர்களையும் அழைத்து அவர்களோடு விருந்துண்ண
விரும்புகிறோமா? சிந்திப்போம். பகிர்தல் இன்று நம்மில் மிக அரிதாகி
விட்டது. முன்னர் எல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்வு . ஓரு
திண்பண்டம் பெரியவர்கள் வாங்கி வந்தால் அனைவருக்கும்
சமமாக பிரித்து இணைந்து உண்போம். உனக்கு இது பிடிக்கும் அல்லவா
நீ அதிகமாக சாப்பிடு என்று அன்போடு பகிரும்போது, உண்மையான அன்பு
அங்கு நிலைக்கிறது. மறு முறை யாரும் சொல்லாமலே நாம் நம்மிடம்
இருப்பதை பகிரும் நிலைக்கு மாறுகிறோம். இப்படியாக நல்ல
குணங்கள் வாழ்க்கை செயல்பாடுகள் மூலமாக
கற்பிக்கப்பட்டன. இன்றோ வளர்க்கும் போதே பிரிவு.
தனிக்குடித்தனம், ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள். பொருள்
வாங்கும் போதே இது அக்காவிற்கு இது தம்பிக்கு . சண்டை
போடக்கூடாது. அவரவர் பொருள் அவருக்கு என்று பிரித்து கொடுக்க
ஆரம்பிக்கின்றோம். அப்போது எங்கிருந்து வரும் உறவு? விளையாட்டுப்
பொருளில் ஆரம்பிப்பது கடைசியில் வாழ்வில் இறுதி வரை
நிலைத்துவிடுகிறது. இதில் எப்படி பகிர்வது? எப்படி ஞானத்தைப்
போலாவது?. உடன் பிறப்புக்களோடு பகிராதவன் ஊரானோடு எப்படி
பகிர முடியும்? நமது பிள்ளைகளை ஞானமுள்ளவர்களாக
வளர்க்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆண்டவரைப்பற்றிய
அச்சமே ஞானத்தின் தொடக்கம் என்கிறது நீதி நூல்.
என் பிள்ளைகள் கோவிலுக்கே வர மாட்டேன் என்கிறார்கள் என்று அங்கலாய்க்கும்
பெற்றோர்கள் ஏராளம். கோவிலுக்கு போ கடவுளை கும்பிடு என்று
சொல்வதை விடுத்து, நான் போகிறேன் நமது குடும்பத்திற்கு இவ்வளவு
ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது என்று உங்களுடைய கடவுள் அனுபவத்தை
சொல்லி வளருங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களைப் போல அல்ல உங்களை
விட அதிகமாக கடவுள் பக்தி கொண்டு விளங்குவார்கள். சொல்லை
விட செயலுக்கு அதிக வலிமை உண்டு. எனவே தான் இயேசு சொன்னதோடு
மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார். அவர்தம் சீடர்கள் அவர்
கடல் கடந்து செய்த பணியை, கண்டம் கடந்து செய்தார்கள்.
ஞானம் விடுக்கும் அழைப்பு; வாருங்கள் ,உண்ணுங்கள், வாழுங்கள்
என்று நம்மை அழைக்கிறது. அழைப்பவர் யார்? எங்கு எதற்காக அழைக்கப்படுகிறோம்?
என உணர்ந்து வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.
நாம் நலமுடன் வாழ வேண்டும், துடிப்புடன் தொடர்ந்து பணி
செய்ய வேண்டும் என எண்ணுபவர்களே நமக்கு உணவளிப்பர். உதாரணத்திற்கு
நமது அன்னையர் அனைவருமே (அன்னம் அருள்பவர்) ஞானம் சுவையான
உணவை சமைத்து வைத்து நம்மை அழைக்கிறது. அதன் உணவை உண்டு,
நாமும் அதுபோல மாற அழைக்கிறது.
வாருங்கள் உண்டு உறங்குங்கள் என்று சொல்லவில்லை. இந்த உணவினை
உண்டு பேதைமையை விட்டு விலகுங்கள், உணர்வை அடையும் வழியில்
செல்லுங்கள் என்று நமக்கு பாதை காட்டி அறிவுறுத்துகிறது.
இயேசுவும் இதைத் தான் சொல்கிறார். கொஞ்சம் வித்தியாசமாக அழைக்கிறார்.
ஞானம் போல தன் தோழிகளை அனுப்பி அழைக்கவில்லை. தானே நேரடியாக
சென்று அழைக்கிறார். 7 அருட்சாதங்களைக் கொண்ட திருச்சபை என்னும்
நிலையான வீட்டிற்கு அழைக்கிறார். சுவையான உணவை சமைக்கவில்லை.
தன்னையே சுவை மிகு உணவாக தருகிறார்.
என் உணவை உணவாக உண்டு இளைப்பாறுங்கள் என்னோடே தங்குங்கள் என்று
கூறவில்லை. மாறாக நிலைவாழ்விற்கு நீங்கள் அழைத்துச்செல்லப்படுவீர்கள்
என்கிறார். முதல் வாசகத்தில் ஞானம் நம்மை அழைக்கிறது.
நற்செய்தி வாசகத்தின் மூலம் ஞானமாம் இயேசு நம்மை அழைக்கிறார்.
இரண்டாம் வாசகத்தில் இந்த ஞானத்தை விட்டு விலகாதிருங்கள்
ஞானத்தோடு வாழுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார். ஞானமாம் இயேசுவை
அடைய அவரை உண்டு அவரைப் போல வாழ ஆசிப்போம். நம் மாயைகளைக்
களைந்து அவரை அணிந்து கொள்ள முயல்வோம். அவர்தம் ஞானம்
நம்மை வழிநடத்தட்டும் ஆமென் .
I. நீதிமொழிகள் 9:1-6
II. எபேசியர் 5:15-20
III. யோவான் 6:51-58
பேதைமையை விட்டுவிடுங்கள்; வாழ்வடைவீர்கள்!
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏறக்குறைய பதினைந்து
ஆண்டுகளுக்கு மேல் சேசு சபைத் தலைவராக இருந்தவர் அருட்தந்தை
பெட்ரோ அருப்பே என்பவர். அவர் ஜப்பானில் உள்ள
ஹீரோசிமாவுக்கு அருகில் இருந்த குருமடத்தில் அதிபராக இருந்தபோது
நடந்த நிகழ்வு.
அருட்தந்தை அருப்பே குருமாணவர்களுக்கு அதிபராக இருந்த சமயத்தில்
பக்கத்து ஊர்களில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச்
செய்வதும் மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதும் நோயாளிகளைச் சந்தித்து
திவ்விய நற்கருணை வழங்குவதும் அவர்களுடைய ஆன்மீகக் காரியங்களைக்
கவனித்துக் கொள்வதுமாக இருந்தார். இப்படிப்பட்ட தருணத்தில்தான்
அமெரிக்க இராணுவம் ஹீரோசிமாவில் அணுகுண்டு வீசி, 80,000
பேருக்குள் மேல் கொன்றுபோட்டது, நிறையப் பேர் கை கால்களை
இழந்து போனார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இப்படி
குண்டுவீச்சில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும்
ஒருவேளை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றால், அவர்களுக்கு மருத்துவ
உதவியைச் செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்காக ஜெபித்து,
திவ்விய நற்கருணையையும் வழங்கி வந்தார்.
ஒருநாள் அவர் தன்னுடைய குருமடத்திற்கு அருகில் இருந்த ஒரு
குடிசையில் சாகும் தருவாயில் இருந்த நகமுரா சன் (Nakamura
San) என்னும் பனிரெண்டு வயது சிறுமிக்கு மருத்துவ உதவிகள்
செய்து, திவ்விய நற்கருணை வழங்கச் சென்றார். அவர் அந்த
சிறுமி இருந்த குடிசைக்குச் சென்று, அவளைப் பார்த்தபோது
அவரை அறியாமலே அவருக்கு கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது.
ஏனென்றால் அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள், அவரால்
எழுந்திருக்கவே முடியவில்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்
அந்தச் சிறுமி அருட்தந்தை அருப்பே அவர்கள் தன்னைச் சந்திக்க
வருகின்றார், தனக்கு திவ்விய நற்கருணையை வழங்க இருக்கின்றார்
என்பதை அறிந்து எழுந்து உட்காரத் தொடங்கினார். ஆனால், முடியவில்லை.
அப்போது அந்தச் சிறுமி அருட்தந்தை அவர்களைப் பார்த்து,
தந்தை அவர்களே! எனக்கு திவ்விய நற்கருனையைத் தாருங்கள்.
இதற்காகதான் நான் இவ்வளவு நாட்கள் உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டிருகின்றேன் என்றாள். உடனே அருட்தந்தை அருட்பே
அந்தச் சிறுமியின் அருகே அமர்ந்து, அவளுடைய உடலில் இருந்த
காயங்களில் மருந்து தடவி கட்டுப்போட்டார். அவ்வாறு அவர்
சிறுமியின் உடலில் இருந்த காயங்களைத் துடைத்தபோது, சதைகள்
எல்லாம் பிய்த்துகொண்டு வந்தன. ஆனாலும் அவள் அந்த வேதனைகளை
எல்லாம் பொறுத்துக்கொண்டாள். பின்னர் அவர் சிறுமிக்கு
திவ்விய நற்கருணை வழங்கியபோது அவ்வளவு பயபக்தியோடு
வாங்கினாள். அவள் நற்கருணை ஆண்டவர்மீது காட்டிய பக்தியைக்
கண்டு, அருட்தந்தை அருப்பே அவர்கள், பனிரெண்டு வயதே நிரம்பிய
இந்த சிறுமிக்கு நற்கருணை ஆண்டவர்மீது இவ்வளவு பக்தியா?
என்று ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார். அவள் திவ்விய நற்கருணையை
வாங்கிய சில நிமிடங்களுக்குள் அவளுடைய உயிர் உடலை விட்டுப்
பிரிந்தது. இருந்தாலும் அவள் நற்கருணை ஆண்டவரை உட்கொண்ட
நிறைவில் மனநிம்மதியோடு தன்னுடைய உயிரைத் துறந்தாள்.
சிறுமி நகமுரா சன் நற்கருணை ஆண்டவர் மீது கொண்ட பக்தி, நற்கருணை
ஆண்டவருக்கு அவள் செலுத்திய வணக்கம் எல்லாம் உண்மையிலே
நாம் அனைவரும் வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
நாங்கள் அதிகம் படித்த மனிதர்கள், நாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்
என்று தங்களைக் காட்டிக்கொள்ளும் ஒருசிலர் நற்கருணையில் ஆண்டவருடைய
பிரசன்னத்தைக் கேள்விக்குள்ளாகும்போது பனிரெண்டே வயதான
சிறுமி நகமுரா சன் நற்கருணை ஆண்டவர் மீது கொண்ட பக்தியும்,
அவள் அவருக்குச் செலுத்திய வணக்கமும் நாம் என்றுமே
நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம்
படிக்கக்கேட்ட வாசகங்கள் பேதைமையை விட்டுவிடுங்கள், வாழ்வடைவீர்கள்
என்னும் சிந்தனையைத் தருவதாக இருக்கின்றன. நாம் அதனைக்
குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
பேதைமையை விட்டுவிடுங்கள் என்றால் எதைக் குறித்த பேதைமையை
விட்டுவிடவேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இன்றைய இறைவார்த்தையின் படி சிந்தித்துப் பார்த்தால் - நற்கருணையை
- ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் குறித்த பேதைமையை
விட்டுவிடவேண்டும் என்பதுதான் மிகவும் பொருத்தமான பதிலாக
இருக்கும். ஏனென்றால் நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகத்தில், ஞானம் வாருங்கள், நான் தரும்
உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தை
பருகுங்கள்; பேதைமையை விட்டு விடுங்கள்; அப்பொழுது
வாழ்வீர்கள் என்று சொல்வதாக வாசிக்கின்றோம். ஆம், நம்மிடம்
இருக்கின்ற நற்கருணை குறித்த பேதைமையை விட்டுவிட்டு, நற்கருணையில்
ஆண்டவர் இயேசு உண்மையாகவே பிரசன்னமாக இருக்கின்றார் என்று
நம்புகின்றபோது வாழ்வடைவோம் என்பது உறுதி.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, ஞானமற்றவர்களாய் ஞானத்தோடு
வாழுங்கள்; அறிவிலிகளாய் இல்லாமல், ஆண்டவருடைய திருவுளம்
யாது எனப் புரிந்துகொள்ளுங்கள் என்றுதான் வாசிக்கின்றோம்.
அப்படியானால், ஆண்டவர் இயேசு நற்கருணையில் பிரசன்னமாக இருக்கின்றார்
என்று அறிவதே ஞானம், அந்த நற்கருணை ஆண்டவர் மீது நம்பிக்கை
வைத்து வாழ்வதே வாழ்விற்கான வழி என்பதைப் புரிந்துகொண்டு
வாழவேண்டும். இன்றைக்குப் பலர் (அன்றைக்கும் கூட ஒருசிலர்)
நற்கருணையில் ஆண்டவர் இருக்கின்றா? அல்லது இயேசு எப்படி தன்னுடைய
உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும் இரத்தமாகவும் தருகின்றார்
என்றதொரு கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் அனைவரும்
பேதைமையில், அறிவிலிகளாக இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.
எனவே, அவர்கள் நற்கருணையில் ஆண்டவர் இயேசு உடலோடும் ஆன்மாவோடும்
பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்பவதுதான் வாழ்விற்கான
வழி என நாம் உறுதியாகச் சொல்லலாம்.
நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையில் பிரசன்னமாக இருக்கின்றார்
என்று நம்பினால் மட்டும் போதுமா? அதுவே நமக்கு வாழ்வினைப்
பெற்றுத் தந்துவிடுமா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்றைய நற்செய்தியில் ஆண்டவர்
இயேசு கூறுகின்றார், மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய
இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்
என்று. இயேசுவின் சதையை உண்டு, இரத்தத்தைக் குடித்தல் என்பது,
இயேசுவாகவே வாழ்வதாகவும். இயேசுவாகவே நாம் வாழ்கின்றபோது
நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் You are what you
eat என்று. அதாவது நாம் எதை உட்கொள்கின்றோமோ அதுவாகவே
மாறுகின்றோம் என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்கின்றது. இயேசுவின்
உடலை ஒவ்வொருநாளும் நற்கருணை வடிவில் உட்கொள்ளக்கூடிய நாம்
இயேசுவாகவே மாறி இருக்கவேண்டும். ஆனால், நாம் இயேசுவாக மாறவில்லை
என்பது இங்கே பிரச்சனையாக இருக்கின்றது. இயேசுவின் உடலை உட்கொண்டு
இயேசுவாக மாறாததற்கு நம்முடைய பலவீனங்கள், குறைபாடுகள்,
கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப வாழாததுதான் காரணமாக இருக்கின்றன.
ஆகவே. நம் நம்முடைய பலவீனங்களை, குற்றங்குறைகளைப் போக்கி
ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை வாழ்வாக்குகின்றபோது
நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை
வாழ்வாக்குகின்றோமா என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு
கேள்வியாக இருக்கின்றது.
மிகச் சிறந்த மறைபோதகரான பில்லி கிரஹாம் அவர்களுடைய
வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.
ஒருசமயம் பில்லி கிரஹாம் தில்லிக்கு வந்திருந்தபோது, அங்கு
அவரைச் சந்தித்த இந்து சமயத்தைச் சார்ந்த ஒரு நபர், நான்
மட்டும் இயேசுவின் போதனைக்கேற்ப வாழ்கின்ற ஒரே ஒரு மனிதரைப்
பார்த்தால் போதும், உடனே நான் கிறிஸ்தவராக மாறிவிடுவேன்
என்றார். அதற்கு பில்லி கிரஹாம் அவரிடம், யாராவது ஓர் உண்மையான
கிறிஸ்தவர் உங்களுடைய பார்வைக்குக் கிட்டாமலா
போய்விடுவார், அப்போது நிச்சயம் நீங்கள் கிறிஸ்தவர் ஆவீர்கள்
என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
நாட்கள் நகர்ந்தன. பில்லி கிரஹாம் சில மாதங்கள் தில்லியில்
தங்கியிருந்து நற்செய்தியை அறிவித்து வந்தார். அவரைக்
கூர்ந்து கவனித்து வந்த அந்த இந்து நபர், அவருடைய
வாழ்க்கையால் தொடப்பட்டார், இவரல்லவா உண்மையான கிறிஸ்தவர்,
இவரைத்தானே நாம் இத்தனை நாட்களும் தேடிக்கொண்டு இருக்கின்றோம்
என்று மனதிற்குள்ளே நினைத்தவராய், அவரிடம் சென்று, நான்
இத்தனை நாட்களும் தேடியலைந்த உண்மையான கிறிஸ்தவர், வாழும்
நற்செய்தி நீங்கள்தான் என்று சொல்லி, திருமுழுக்குப்
பெற்று கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். நாம் இயேசுவின் போதனைகளை
வாழ்வாக்குகின்றபோது, அவ்வாழ்க்கை பலரையும் இயேசுவுக்குள்
கொண்டு வந்துசேர்க்கும் அப்போது நாம் மட்டுமல்லாமல், அவர்களும்
நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி.
ஆம், இயேசுவின் உடலை உட்கொண்டு அவருடைய இரத்தத்தைக் குடிப்பது
என்பது அவராக வாழ்வது, அவரோடு இணைந்திருப்பது, நிலவாழ்வினைப்
பெற்றுக்கொள்வதற்கு இணையானது.
எனவே, நாம் நற்கருனையைக் கருத்த ஐயத்தை, பேதைமையான எண்ணங்களைத்
தவிர்ப்போம். ஆண்டவர் இயேசு நற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாக
இருக்கின்றார் என்பதை நம்புவோம், நம்பியதை வாழ்வாக்குவோம்,
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
பேதைமையை விட்டுவிடுங்கள்; வாழ்வடைவீர்கள்!
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு
மேல் சேசு சபைத் தலைவராக இருந்தவர் அருட்தந்தை பெட்ரோ அருப்பே
என்பவர். அவர் ஜப்பானில் உள்ள ஹீரோசிமாவுக்கு அருகில் இருந்த
குருமடத்தில் அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்வு.
அருட்தந்தை அருப்பே குருமாணவர்களுக்கு அதிபராக இருந்த சமயத்தில்
பக்கத்து ஊர்களில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச்
செய்வதும் மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதும் நோயாளிகளைச் சந்தித்து
திவ்விய நற்கருணை வழங்குவதும் அவர்களுடைய ஆன்மீகக் காரியங்களைக்
கவனித்துக் கொள்வதுமாக இருந்தார். இப்படிப்பட்ட தருணத்தில்தான்
அமெரிக்க இராணுவம் ஹீரோசிமாவில் அணுகுண்டு வீசி, 80,000
பேருக்குள் மேல் கொன்றுபோட்டது, நிறையப் பேர் கை கால்களை இழந்து
போனார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இப்படி குண்டுவீச்சில் படுகாயமடைந்தவர்களுக்கு
மருத்துவ உதவிகளையும் ஒருவேளை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றால்,
அவர்களுக்கு மருத்துவ உதவியைச் செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்காக
ஜெபித்து, திவ்விய நற்கருணையையும் வழங்கி வந்தார்.
ஒருநாள் அவர் தன்னுடைய குருமடத்திற்கு அருகில் இருந்த ஒரு
குடிசையில் சாகும் தருவாயில் இருந்த நகமுரா சன் (Nakamura
San) என்னும் பனிரெண்டு வயது சிறுமிக்கு மருத்துவ
உதவிகள் செய்து, திவ்விய நற்கருணை வழங்கச் சென்றார். அவர் அந்த
சிறுமி இருந்த குடிசைக்குச் சென்று, அவளைப் பார்த்தபோது அவரை
அறியாமலே அவருக்கு கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது. ஏனென்றால்
அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள், அவரால் எழுந்திருக்கவே
முடியவில்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்தச் சிறுமி அருட்தந்தை
அருப்பே அவர்கள் தன்னைச் சந்திக்க வருகின்றார், தனக்கு திவ்விய
நற்கருணையை வழங்க இருக்கின்றார் என்பதை அறிந்து எழுந்து உட்காரத்
தொடங்கினார். ஆனால், முடியவில்லை.
அப்போது அந்தச் சிறுமி அருட்தந்தை அவர்களைப் பார்த்து, "தந்தை
அவர்களே! எனக்கு திவ்விய நற்கருனையைத் தாருங்கள். இதற்காகதான்
நான் இவ்வளவு நாட்கள் உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டிருகின்றேன்" என்றாள். உடனே அருட்தந்தை அருட்பே அந்தச்
சிறுமியின் அருகே அமர்ந்து, அவளுடைய உடலில் இருந்த காயங்களில்
மருந்து தடவி கட்டுப்போட்டார். அவ்வாறு அவர் சிறுமியின் உடலில்
இருந்த காயங்களைத் துடைத்தபோது, சதைகள் எல்லாம் பிய்த்துகொண்டு
வந்தன. ஆனாலும் அவள் அந்த வேதனைகளை எல்லாம்
பொறுத்துக்கொண்டாள். பின்னர் அவர் சிறுமிக்கு திவ்விய நற்கருணை
வழங்கியபோது அவ்வளவு பயபக்தியோடு வாங்கினாள். அவள் நற்கருணை ஆண்டவர்மீது
காட்டிய பக்தியைக் கண்டு, அருட்தந்தை அருப்பே அவர்கள்,
"பனிரெண்டு வயதே நிரம்பிய இந்த சிறுமிக்கு நற்கருணை ஆண்டவர்மீது
இவ்வளவு பக்தியா?" என்று ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார். அவள்
திவ்விய நற்கருணையை வாங்கிய சில நிமிடங்களுக்குள் அவளுடைய உயிர்
உடலை விட்டுப் பிரிந்தது. இருந்தாலும் அவள் நற்கருணை ஆண்டவரை
உட்கொண்ட நிறைவில் மனநிம்மதியோடு தன்னுடைய உயிரைத் துறந்தாள்.
சிறுமி நகமுரா சன் நற்கருணை ஆண்டவர் மீது கொண்ட பக்தி, நற்கருணை
ஆண்டவருக்கு அவள் செலுத்திய வணக்கம் எல்லாம் உண்மையிலே நாம் அனைவரும்
வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. "நாங்கள் அதிகம் படித்த
மனிதர்கள், நாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்" என்று தங்களைக்
காட்டிக்கொள்ளும் ஒருசிலர் நற்கருணையில் ஆண்டவருடைய பிரசன்னத்தைக்
கேள்விக் குள்ளாகும்போது பனிரெண்டே வயதான சிறுமி நகமுரா சன் நற்கருணை
ஆண்டவர் மீது கொண்ட பக்தியும், அவள் அவருக்குச் செலுத்திய வணக்கமும்
நாம் என்றுமே நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட
வாசகங்கள் "பேதைமையை விட்டுவிடுங்கள், வாழ்வடைவீர்கள்" என்னும்
சிந்தனையைத் தருவதாக இருக்கின்றன. நாம் அதனைக் குறித்து
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
பேதைமையை விட்டுவிடுங்கள் என்றால் எதைக் குறித்த பேதைமையை
விட்டுவிடவேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இன்றைய இறைவார்த்தையின் படி சிந்தித்துப் பார்த்தால் - நற்கருணையை
- ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் குறித்த பேதைமையை விட்டுவிடவேண்டும்
என்பதுதான் மிகவும் பொருத்தமான பதிலாக இருக்கும். ஏனென்றால்
நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
ஞானம் "வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து
வைத்துள்ள திராட்சை இரசத்தை பருகுங்கள்; பேதைமையை விட்டு
விடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்" என்று சொல்வதாக
வாசிக்கின்றோம். ஆம், நம்மிடம் இருக்கின்ற "நற்கருணை குறித்த
பேதைமையை விட்டுவிட்டு, நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையாகவே
பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்புகின்றபோது வாழ்வடைவோம் என்பது
உறுதி.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, "ஞானமற்றவர்களாய் ஞானத்தோடு
வாழுங்கள்; அறிவிலிகளாய் இல்லாமல், ஆண்டவருடைய திருவுளம் யாது
எனப் புரிந்துகொள்ளுங்கள்" என்றுதான் வாசிக்கின்றோம். அப்படியானால்,
ஆண்டவர் இயேசு நற்கருணையில் பிரசன்னமாக இருக்கின்றார் என்று அறிவதே
ஞானம், அந்த நற்கருணை ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதே
வாழ்விற்கான வழி என்பதைப் புரிந்துகொண்டு வாழவேண்டும். இன்றைக்குப்
பலர் (அன்றைக்கும் கூட ஒருசிலர்) நற்கருணையில் ஆண்டவர் இருக்கின்றா?
அல்லது இயேசு எப்படி தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும்
இரத்தமாகவும் தருகின்றார் என்றதொரு கேள்வியை எழுப்புகிறார்கள்.
அவர்கள் அனைவரும் பேதைமையில், அறிவிலிகளாக இருக்கின்றார்கள் என்பதுதான்
உண்மை. எனவே, அவர்கள் நற்கருணையில் ஆண்டவர் இயேசு உடலோடும் ஆன்மாவோடும்
பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்பவதுதான் வாழ்விற்கான வழி
என நாம் உறுதியாகச் சொல்லலாம்.
நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையில் பிரசன்னமாக இருக்கின்றார்
என்று நம்பினால் மட்டும் போதுமா? அதுவே நமக்கு வாழ்வினைப்
பெற்றுத் தந்துவிடுமா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
கூறுகின்றார், "மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக்
குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்" என்று. இயேசுவின்
சதையை உண்டு, இரத்தத்தைக் குடித்தல் என்பது, இயேசுவாகவே வாழ்வதாகவும்.
இயேசுவாகவே நாம் வாழ்கின்றபோது நிலைவாழ்வினைப்
பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "You are what
you eat" என்று. அதாவது நாம் எதை உட்கொள்கின்றோமோ
அதுவாகவே மாறுகின்றோம் என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்கின்றது.
இயேசுவின் உடலை ஒவ்வொருநாளும் நற்கருணை வடிவில் உட்கொள்ளக்கூடிய
நாம் இயேசுவாகவே மாறி இருக்கவேண்டும். ஆனால், நாம் இயேசுவாக மாறவில்லை
என்பது இங்கே பிரச்சனையாக இருக்கின்றது. இயேசுவின் உடலை உட்கொண்டு
இயேசுவாக மாறாததற்கு நம்முடைய பலவீனங்கள், குறைபாடுகள், கடவுளின்
திருவுளத்திற்கு ஏற்ப வாழாததுதான் காரணமாக இருக்கின்றன. ஆகவே.
நம் நம்முடைய பலவீனங்களை, குற்றங்குறைகளைப் போக்கி ஆண்டவர் இயேசுவின்மீது
கொண்ட நம்பிக்கையை வாழ்வாக்குகின்றபோது நிலைவாழ்வினைப்
பெற்றுக்கொள்ள முடியும்.
இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை
வாழ்வாக்குகின்றோமா என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு
கேள்வியாக இருக்கின்றது.
மிகச் சிறந்த மறைபோதகரான பில்லி கிரஹாம் அவர்களுடைய
வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.
ஒருசமயம் பில்லி கிரஹாம் தில்லிக்கு வந்திருந்தபோது, அங்கு அவரைச்
சந்தித்த இந்து சமயத்தைச் சார்ந்த ஒரு நபர், "நான் மட்டும் இயேசுவின்
போதனைக்கேற்ப வாழ்கின்ற ஒரே ஒரு மனிதரைப் பார்த்தால் போதும்,
உடனே நான் கிறிஸ்தவராக மாறிவிடுவேன்" என்றார். அதற்கு பில்லி
கிரஹாம் அவரிடம், "யாராவது ஓர் உண்மையான கிறிஸ்தவர் உங்களுடைய
பார்வைக்குக் கிட்டாமலா போய்விடுவார், அப்போது நிச்சயம் நீங்கள்
கிறிஸ்தவர் ஆவீர்கள்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
நாட்கள் நகர்ந்தன. பில்லி கிரஹாம் சில மாதங்கள் தில்லியில் தங்கியிருந்து
நற்செய்தியை அறிவித்து வந்தார். அவரைக் கூர்ந்து கவனித்து வந்த
அந்த இந்து நபர், அவருடைய வாழ்க்கையால் தொடப்பட்டார்,
"இவரல்லவா உண்மையான கிறிஸ்தவர், இவரைத்தானே நாம் இத்தனை நாட்களும்
தேடிக்கொண்டு இருக்கின்றோம்" என்று மனதிற்குள்ளே நினைத்தவராய்,
அவரிடம் சென்று, "நான் இத்தனை நாட்களும் தேடியலைந்த உண்மையான
கிறிஸ்தவர், வாழும் நற்செய்தி நீங்கள்தான்" என்று சொல்லி,
திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். நாம் இயேசுவின்
போதனைகளை வாழ்வாக்குகின்றபோது, அவ்வாழ்க்கை பலரையும் இயேசுவுக்குள்
கொண்டு வந்துசேர்க்கும் அப்போது நாம் மட்டுமல்லாமல், அவர்களும்
நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி.
ஆம், இயேசுவின் உடலை உட்கொண்டு அவருடைய இரத்தத்தைக் குடிப்பது
என்பது அவராக வாழ்வது, அவரோடு இணைந்திருப்பது, நிலவாழ்வினைப்
பெற்றுக்கொள்வதற்கு இணையானது.
எனவே, நாம் நற்கருனையைக் கருத்த ஐயத்தை, பேதைமையான எண்ணங்களைத்
தவிர்ப்போம். ஆண்டவர் இயேசு நற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாக
இருக்கின்றார் என்பதை நம்புவோம், நம்பியதை வாழ்வாக்குவோம், அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
ஒரு ஞானி சாகாமைக்கு மருந்து கண்டுபிடித்தது.
அருமையான சகோதரனே! சகோதரியே! சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு
ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று வந்தே தீரும். இது இயற்கையின்
நியதி. காலத்தின் கட்டாயம்! ஆனால் இயேசு கிறிஸ்து
சாகாமைக்கு மூன்று வகையான மருந்துகளை வழங்குகிறார். இந்த
மூன்றையும் நமதாக்கிக் கொண்டால் நாம் நிலை வாழ்வு
பெறுவோம். சாவு நம்மைப் பாதிக்காது.
1. சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருந்து
அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியிலே என்னை
நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார் (யோவா. 6:47).
மேலும் வாசரை உயிர்த்தெழச் செய்யும் முன் மார்த்தாவிடம் உயிர்த்தெழுதலும்
வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே
சாகமாட்டார் (யோவா. 11:25-26).
2. சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து
அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும்.
என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாக மாட்டார்
(யோவா. 8:51). நான் கூறிய வார்த்தைகள் ஆவியும் உயிரும் ஆகும்
(யோவா. 6:63) என்கிறார். நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு
தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன (யோவா. 6:68).
3. சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து
அவருடைய திருவுடல், திரு இரத்தமாகும். இன்றைய நற்செய்தியில்
வாழ்வு தரும் உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர்
என்றுமே வாழ்வார் (யோவா. 6:51).
நாம் பாவிகளாக இருந்தும், கிறிஸ்து நமக்காகச் சிலுவையில்
கைகளை விரித்துப் பாடுபட்டுப் பலியானார். அந்த கல்வாரிப்
பலியைக் காலமெல்லாம் நினைவுகூருவதுதான் திருப்பலியாகும்.
தன் உடலை உலகை மீட்பதற்காக இயேசு கையளிக்கிறார்.
கிறிஸ்துவே கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லப்பட்டார் (எசா.
53:7-12). தன் ஒரே பலியினால் கிறிஸ்து நம்மைத் தூயவராக்கி,
நிறைவுள்ளவராக்கினார் (எபி. 10:14). அந்த ஒப்பில்லா பலியை,
அவர் பணித்தவாரே திருச்சபை நிறைவேற்றுகிறது.
கொடுப்பதில் நான்கு வகையுண்டு:
தன்னில் மிகுதியானதைக் கொடுப்பது (லூக். 21:1-4)
உள்ளத்திலிருந்து கொடுப்பது. சக்கேயு (லூக். 19:8)
உள்ளதை எல்லாம் கொடுப்பது (ஏழை கைம்பெண்) மாற். 12:41-44
தன்னையே கொடுப்பது - இயேசு தன்னையே கொடுத்தார். தன் நண்பர்களுக்காக
உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு
யாரிடமும் இல்லை (யோவா. 15:13).
நிகழ்ச்சி
ஐந்து பெண் குழந்தைகளுடன் வறுமைப் பிடியில் சிக்கித் தவித்த
ஒரு ஏழைக் கைம்பெண், சாமி கர்த்தர்தான் எங்களைப் படைத்தார்!
கண்ணீரைத்தான் எங்களுக்குக் கொடுத்தார். அந்தக் கண்ணீரையே
அவருக்குக் காணிக்கையாக்குகிறோம் என்றாள். ஆம் கடவுளுக்கு
ஏற்ற பலி நம் நொறுங்கிய நெஞ்சமே! (தி.பா 51:16-17)
பலாப்பழத்தில் பலாச் சுளையை எடுக்கக் கத்தி தேவைப்படுகிறது.
வாழ்வைச் சுவைக்க புத்தியுடன் ஞானமும் தேவைப்படுகிறது.
கிறிஸ்துவே கடவுளின் ஞானம்! (1 கொரி 1:24). அவர் அருள்வாக்கைக்
கேட்டு அவரது திருவுடலை உண்டால் நமது அக இருள் அகற்றி ஞான
ஒளி ஏற்றுவார்.
சில சமயம் முட்டாள்களாக நாம் வாழலாம். ஆனால் முட்டாள்களாக
நாம் சாகக் கூடாது.
வாழ்நாள் முழுவதும் நாம் அனைவரும் நிரந்தர மகிழ்ச்சியைத்
தேடி அலைகின்றோம்.
வாழ நினைத்தால் வாழலாம்.
வழியா இல்லை பூமியில்?
ஆழக் கடலும் சோலையாகும்,
ஆசையிருந்தால் நீந்திவா.
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்.
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்.
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்.
காட்சி கிடைத்தால் கவலை தீரும்.
கவலை தீர்ந்தால் வாழலாம்.
இவை கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள். இந்த வரிகளை
வாழ்க்கையாக்க எவ்வளவோ முயற்சி எடுக்கின்றோம். ஆனால் பல
சமயங்களிலே நாம் சூழ்நிலையின் கைதிகளாகி துயரக் கடலில்
வீழ்ந்து விடுகின்றோம். இதோ வாழ்வைத் தேடும், நிலை
வாழ்வைத் தேடும் நமக்குத் தேவையான ஆரோக்கியம் நிறைந்த நல்ல
வழியை நற்கருணை ஆண்டவர் நமக்குக் காட்டுகின்றார். அவர் நம்மைப்
பார்த்து: என் மகளே! என் மகனே! நீ திருப்பலியின் போது என்
உடலை உண்டால் நீ தேடும் நிலைவாழ்வைப் பெறுவாய் (முதல் வாசகம்);
தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவரின் திருவுளத்திற்கேற்ப
நீ வாழ்வாய் (இரண்டாம் வாசகம்) என்கின்றார்.
இதோ வாழ்வுக்கும், நிலை வாழ்வுக்குமிடையே உள்ள வேறுபாடு.
வாழ்வு நிலைவாழ்வு
1. முடிவுள்ளது - முடிவற்றது
2. மண்ணைச் சார்ந்தது - விண்ணைச் சார்ந்தது
3. துன்பம் உண்டு - துன்பம் இல்லை
4. பாவமும், புண்ணியமும் கலந்தது - பாவமற்றது
5. முடிவுள்ள இன்பத்தைத் தருவது - முடிவில்லா இன்பத்தைத்
தருவது
6. இன்பமும்,துன்பமும் மாறி வரும் - மாறாத இன்பத்தைத்
தரும்
7. பாசமும், பகையும் கலந்தது - பாசத்திற்கு மட்டுமே
இடம் தருவது
8. மரணத்திற்கு உட்பட்டது - மரணத்திற்கு அப்பாற்பட்டது
9. கடவுளைத் தேடும் காலம் - கடவுளைக் கண்டடைந்த காலம்
10. கடவுளை நம்பிக்கைக் கண்களால் - கடவுளை நேருக்கு
நேர் பார்ப்பது
மேலும் அறிவோம் :
நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்(து) இவ் வுலகு (குறள் : 336).
பொருள் :
நேற்று இருந்தவன் இன்று இறந்தான் என்று சொல்லும் இரங்கத்தக்க
நிலையினைப் பெருமையாகக் கொண்டுள்ளது இவ்வுலகம்!
குஜராத் மாநிலத்தில் பெரும் வெள்ளம் வந்தபோது,
ஒரு மனைவி கால் ஊனமுற்ற தன் கணவருடன் தன் வீட்டின்
முன்னால் இருந்த மரத்தின் கிளை ஒன்றில் உட்கார்ந்தார், அக்கிளை
இரண்டு பேரையும் தாங்க முடியாமல் முறிந்துபோகும் நிலையில்
இருந்ததைக் கண்ட அம்மனைவி, ஊனமுற்ற தன் கணவரைக்
காப்பாற்றும்படி அவர் வெள்ளத்தில் குதித்து, தன் உயிரையே
தியாகம் செய்தார், நல்ல கணவருக்காக ஒரு மனைவி தன் உயிரைக்
கொடுப்பது அரிது. ஆனால் ஊனமுற்ற கணவருக்காக அந்த மனைவி தன்
உயிரைத் தியாகம் செய்தது நம்மை வியப்படையச் செய்கிறது.
கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கையளித்ததைப் பற்றிக்
கூறும் பவுல், "நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக்
கொடுத்தலே அரிது;... ஆனால் நாம் பாவிகளாய் இருந்தபோதே
கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள்
நம்மீது கொண்டுள்ள அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்" (உரோ
5:7-8) என்று வியந்து எழுதுகிறார்.
ஆம், நாம் பாவிகளாய் இருந்தும் கிறிஸ்து நமக்காகச்
சிலுவையில் கைகளை விரித்துப் பாடுபட்டுப் பலியானார். அவரின்
கல்வாரிப் பலியைக் காலமெல்லாம் நினைவு கூருவதுதான் நற்கருணைத்
திருப்பலியாகும். நற்கருணை ஒரு திரு உணவு மட்டுமன்று; அது
உண்மையிலேயே ஒரு திருப்பலியுமாகும். இன்றைய நற்செய்தியில்,
"என் சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே
கொடுக்கிறேன்" (யோவா 8:51) என்கிறார் கிறிஸ்து. இவ்வா று
நற்கருணை உணவும் பலியுமா கும் என்பதை அவர் உணர்த்துகிறார்.
தமது உடலை உலக மீட்பிற்காகக் கையளிக்கிறார்.
இறுதி இரவு உணவின்போது அவர் அப்பத்தை எடுத்து, "இது உங்களுக்காகக்
கொடுக்கப்படும் என் உடல்" (லூக் 22:19) என்றும், அவ்வாறே
திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம்
உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும்
உடன்படிக்கை (லூக் 22:20) என்றும் கிறிஸ்து கூறினார்.
கொடுத்தல்", " சிந்துதல்" என்ற சொற்கள் கிறிஸ்து தம்மையே
பலியாகக் கொடுத்தார். தமது இரத்தத்தைச் சிந்தினார் என்பதை
உணர்த்துகின்றன.
கிறிஸ்துவே கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லப்பட்ட (எசா
53:7-12). உலகின் பாவங்களைப் போக்கும் உண்மையான செம்மறி
(யோவா 1:29). பாஸ்காச் செம்மறியின் எலும்புகள் முறிக்கப்படவில்லை
(விப 12:48); அவ்வாறே கிறிஸ்துவின் எலும்பும் முறிக்கப்படவில்லை
) (யோவா 19:36). நமது பாஸ்காப் பலி நிறைவேறிவிட்டது.
கிறிஸ்துவே அப்பாஸ்கா (1 கொரி 5:7). தமது ஒரே பலியினால்
கிறிஸ்து நம்மைத் தூயவராக்கி, நிறைவுள்ளவராக்கினார் (எபி
10:14). அவரின் ஒப்புயர்வற்ற பலியை, அவர் பணித்தவாறே
திருச்சபை நிறைவேற்றுகிறது,
பங்குத் தந்தை ஓர் இளைஞனிடம், "ஏம்பா, நீ பூசைக்கு வருவதில்லை
?" என்று கேட்டதற்கு அவன், "அது உங்கவேலை; உங்க வேலையை
நான் ஏன் வந்து பார்க்கனும்? என் வேலையை நீங்க வந்து
பார்க்கிறீர்களா?" என்று திருப்பிக் கேட்டான்.
திருப்பலி குருவின் பலி மட்டுமன்று; நம் அனைவரின் பலி:
முழுத் திருச்சபையின் பலி. அதில் ஒவ்வொருவரும் முழுமையாக,
ஈடுபாட்டுடன் பங்கேற்று. குருவுடன் இணைந்து தம்மையே
காணிக்கையாக்க வேண்டும். கொடுப்பதிலே மூவகை உண்டு; உள்ளதிலிருந்து
கொடுப்பது முதல்வகை. சக்கேயு தன்னிடமிருந்ததிலிருந்து
பாதியைக் கொடுத்தார் (லூக் 13:8). உள்ளதையெல்லாம் கொடுப்பது
இரண்டாம் வகை, ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருந்த அனைத்தையுமே
உண்டியலில் போட்டுவிட்டார் (மாற் 12:41-44). தன்னையே
கொடுப்பது மூன்றாம் வகை. இயேசு கிறிஸ்து தம்மையே நமக்காகக்
கையளித்தார். 'தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த
அன்பு யாரிடமும் இல்லை (யோவா 15:13) என்று அன்பிற்கு இலக்கணம்
வகுத்துக் கொடுத்த கிறிஸ்து உலக மீட்பிற்காகத் தன் இன்னுயிரையே
தாரை வார்த்துக் கொடுத்தார்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு(குறள் 72)
எங்கும், எல்லாருக்கும், எல்லா வகையிலும் நாம் நம்மைப் பயனுள்
ளவர்களாகச் செய்ய முடியும், இரத்தமின்றி உயிர் இழப்பவர்களுக்கு
இரத்த தானம் செய்வது சிறந்தது. "இரத்தத்தைத் தானம் செய்வதால்
நாம் சாக மாட்டோம். ஆனால் ஒருநாள் இரத்தமின்றி நாம்
சாவோம்" என்பதை நெஞ்சில் நிறுத்துவோம். பிறருக்காக நாம்
பயன்படாத நாள்கள் நாம் வாழாத நாள்கள்!
தன்னுடைய ஐந்து பெண்பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில்
சிக்கித் தவித்த ஓர் ஏழைக் கைம்பெண் என்னிடம், "சாமி! கர்த்தர்தான்
எங்களைப் படைத்தார்; கண்ணீரைத்தான் எங்களுக்குக்
கொடுத்தார், அக்கண்ணீரையே அக்கர்த்தருக்குக் காலனிககையாக்குகிறோம்"
என்றார், அவருடைய கடவுள் நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது!
கடவுளுக்குக் கொடுக்க நம்மிடம் வேறு காணிக்கை இல்லை என்றாலும்
நமது கண்ணீரையாவது அவருக்குக் காணிக்கை ஆக்கலாமே? "கடவுளுக்கு
ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே" (திபா 51:16-17). நம்
வாழ்வில் நாம் பல விதங்களில் வெந்துபோய், நொந்துபோய் வேதளைத்
தீயில் புழுவாகத் துடிக்கிறோம், வறுமை, நோய் நோக்காடு, உறவின்
முறிவுகள், விரிசல்கள். பிசகுகள், வலிப்புகள், மனஇறுக்கங்கள்,
பாவங்கள், பலவீனங்கள் ஆகியவற்றைக் கடவுளுக்குக்
காணிக்கையாக்குவோம்.
எங்கள் இறைவனாகிய ஆண்டவரே! தாழ்மையான மனத்தோடும்
நொறுங்கிய உள்ளத்தோடும் வாடுகின்ற எங்களை ஏற்றருளும்"
(திருப்பலி செபம்), கண்ணீரிலும் கடவுளைக் காண 'கம்யூட்டர்
'அறிவு போதாது: அதற்குக் கடவுளின் ஞானம் தேவை. அந்த இறை ஞானத்தைச்
சுவைத்து மகிழ, பேதமை நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ நம்மை
அழைக்கிறது முதல் வாசகம். இரண்டாம் வாசகத்திலும், ஞானமற்றவர்களாய்
வாழாமல் ஞானத்துடன் வாழ நம்மை அழைக்கிறார் புனித பவுல்.
பலாப்பழத்தில் பலாச் சுளையை எடுக்கக் கத்தி தேவைப்படுகிறது.
வாழ்வைச் சுவைத்து வாழ புத்தியுடன் ஞானமும் தேவைப்படுகிறது.
கிறிஸ்துவே கடவுளின் ஞானம் (1 கொரி 1:24). அவரைப் பின்
சென்று, அவர் அருள்வாக்கைக் கேட்டு, அவருடைய திருவுடலை உண்டால்
அவர் நமது அக இருளை அகற்றி ஞான ஒளி ஏற்றுவார்.
முட்டாள்களாக நாம் வாழலாம். ஆனால் முட்டாள்களாக நாம் சாகக்கூடாது.
ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதை உணரும்போது அவன்
ஞானியாகிறான். ஒரு பாவி தான் பாவி என்பதை உணரும்போது அவன்
நீதிமானாகிறான்!
பேராசிரியர் 'கிளாடு பே ஒரு பேரறிஞர். ஒரு நாள் அவர்
தன் மாணவர்களோடு சாலையில் நடந்து கொண்டிருந்தார். எதிரே
ஒரு குருவானவர் வருவதைக் கண்டதும் பேசலாம் என அருகில்
சென்றார். நோயுற்றோருக்கு நற்கருணை எடுத்துச் செல்வதால்
பிறகு சந்திக்கிறேன் என் குருவானவர் சொல்லிவிட்டு நகர்ந்ததும்
பேராசிரியர் கிளாடு. பே நடுரோட்டில் தென்டனிட்டு வணங்கினார்.
இதைக்கண்டு மாணவர்கள் எள்ளி நகைத்தார்கள். அண்ட சராசரங்களைப்
படைத்த இறைவன் ஒரு சாதரரணக் குருவானவரின் கைகளில் அதுவும்
சாதாரண அப்பத்தின் வடிவில் இருக்கிறார் என்பதை நீங்கள்
நம்புகிறீர்களா? ' என்று கிண்டலடித்தனர்.
பேராசிரியர் சொல்வார்: இறைவனின் வலிமை, சக்தி, ஆற்றல்
இவை பற்றி உங்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம். ஆனால்
இறைவனின் ஞானம், தாழ்ச்சி, பேரன்பு பற்றி உங்களுக்குத்
தெரியாது. ஆனால் நான் அறிவேன். இந்தச் சாதாரண அப்பத்தில்
இறைவன் தன்னை அடக்கிக் கொண்டது என்பது நாம் புரிந்து
கொள்ள முடியாத இறைவனின் பெரும் ஞானம். புரிந்து கொள்ள
முடியாவிட்டாலும் அது தான் என் நம்பிக்கை.
அரைவேக்காடுகள் விசுவாசத்தை வேடிக்கைப் பொருளாக்குகின்றன.
நிறைகுடங்கள் விசுவாசத்தை வாழ்வாக்கி வளம் காணுகின்றன.
நமக்காக உணவாக மாறியது இறைவனின் ஞானம். ஞானம் தனக்கு
ஒரு வீட்டைக் கட்டியிருந்தது... விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு
செய்தது... அறியாப் பிள்ளைகளே, வாருங்கள் நான் தரும்
உணவை உண்ணுங்கள். திராட்சை ரசத்தைப் பருகுங்கள்.
பேதைமையை விட்டுவிடுங்கள். அப்போது வாழ்வீர்கள் என்றது
(நீ. மொ. 9:1-6).
கழுகின் கண்களில் பட்டுவிட்ட அந்தப் புறா உயிருக்காகப்
போராடியது. அதற்கு இரையாகிவிடாமல் தப்பித்து மன்னன்
சிபியின் மடியில் அடைக்கலம் புகுந்தது. அந்தப்
புறாவைக் கருணையுடன் பார்த்து கையால் வருடி நிமிர்ந்தபோது
விரட்டி வந்த கழுகு எதிரே வந்து நின்றது. தந்தப் புறா
எனக்குச் சொந்தம். மிகவும் பசியாக இருக்கிறேன். என்னிடம்
கொடுத்துவிடும் என்றது. உன் பசிக்கு. இறைச்சிதானே
வேண்டும். இதோ என்று சொல்லி புறாவின் எடைக்கு எடை தன்
தொடைச்சதையை அரிந்து எடுத்து தராசில் நிறுத்துக் கழுகிடம்
கொடுத்தான் மன்னன். என்னே மன்னனின் தியாகம்!
பாவத்தின் பிடியில் சிக்கித் தன்னலச் சேற்றில்
மூழ்கிக் கொண்டிருந்த மனிதனை மீட்கத் தன்னையே முழுமையாக
இயேசு கையளித்தார். இது இயேசுவின் தியாகம்! எனது சதையை
உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு உய்வதற்காகவே
கொடுக்கிறேன் (யோ. 6:51)
நற்கருணை திருவிருந்து மட்டுமல்ல. அது ஒரு தியாகப்
பலியாகும். இயேசு தன்னை யாருக்காகத் தியாகம் செய்தார்?
நேர்மையாளருக்காக ஒருவர் தன் உயிரைக் கொடுத்தலே
அரிது... ஆனால் நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து
நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள்
நம்மீது கொண்டுள்ள அன்பை எடுத்துக்காட்டியுள்ளார் (உரோ.
5:7-8).
ஆலயத்தில் அரை அம்மணமாகத் தொங்குவதை விட சிலுவையின்
பின்னணியில் உயிர்த்த இயேசுவோ கிறிஸ்து அரசரோ, இருகரம்
விரித்த இருதய ஆண்டவரோ இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு. இயேசுவின் மாட்சி
அல்ல, அவரது தியாகம்தான் ஆலயத்திற்குப் பொலிவூட்டும்.
அழகு சேர்க்கும்.
பட்டுப்பூச்சிகள் மாய்க்கப்படும்போதுதான் பட்டுப்
புடவைகள்
நம் உடலை அணி செய்கின்றன. கோதுமை மணி மண்ணில் விழுந்து
மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது
மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் (யோ.
12:24). மற்றவர்கள் வாழ்வைக் கெடுத்து ஆதாயம் தேடும்
கூட்டத்தினர் மத்தியில் பிறருக்காக நம்மையே இழந்து
வாழ்வதில் எத்துணை அருத்தமிருக்கிறது!
இந்த நிலையில் எழுகிற கேள்விதான் (இயேசுவின்
காலத்திலும் திரு. அவையின் வரலாற்றிலும் பிளவுகளை,
எதிர்விளைவுகளை ஏற்படுத்திய கேள்வி) நாம் உண்பதற்கு
இவர்தம் சதையை எப்படிக் கொடுக்க இயலும்? (யோ. 6:52)
என்பது. இந்த முணுமுணுப்புக்கிடையே இயேசு சொன்னது
அறிவுக்கு எட்டாததாக மட்டுமல்ல, அதிர்ச்சி தருவதாக,
அபத்தமானதாக, இடறலானதாக, ஏற்கக் கடினமானதாக இருப்பதை
யூதர்கள் வெளிப்படுத்தினர். எதிர்ப்பு அதிகமாக அதிகமாக
இயேசுவின் வார்த்தைகளும் வலுவும் அழுத்தமும்
பெறுகின்றன (யோ. 6:53, யோ. 6:55).
இந்தப் போதனையை இறுதி இரவு உணவு வேளையில் இயேசு
செயல்படுத்தினார். இது ஏதோ ஏமாற்றுதல் அல்ல. மாறாக
இறைவனின் பெரும் ஞானம் - இயேசுவின் உடல் அப்பத்தின்
வடிவில் இயேசுவின் இரத்தம் இரசத்தின் வடிவில்,
உடைபட்ட இயேசுவின் உடல் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்
நற்கருணை வடிவில். உணவில் இறைவன்.
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்
(யோ. 6:55). இது சோதனைக் குழயில் போட்டுச் சோதித்து
அறியும் உண்மை அல்ல. புலன்களுக்கு இது தெளிவில்லை.
அதனால் புலன்களாலே அறிய இயலாக் குறையை நீக்க. I
விசுவாசத்தின் உதவி பெறுக என்கிறார் புனித அக்குவினா
தோமா. கிறிஸ்தவன் ஏழறிவு படைத்தவன் ஏழாம் அறிவு என்பது
இறை நம்பிக்கை.
அன்புக்குரியவர் அன்பினால் சொல்லும் வார்த்தைக்கு நாம்
அளிக்கும் ஆம் என்ற பதில்தான் விசுவாசம்.
அன்பர்களிடையே நிலவும் எல்லாவகை உறவுகளிலும் (நட்பு,
பாசம், காதல் பக்தி) ஒரு வகைக் குருட்டுத் தன்மை
உண்டு. Love 15 blind அன்புக்கு கண் குருடு என்ற கூற்று
முற்றிலும் பொருளற்றதல்ல.
உண்மையில் இங்கேதான் ஞானம் இருக்கிறது. எல்லா
அன்பிலும் ஒருவகைப் புரிந்து கொள்ள முடியாத தன்மை
(mystery) உண்டு. கிறிஸ்துவின் அன்பும் அப்படித்தான்.
அவர்தம் உடலையும் இரத்தத்தையும் உணவாக அளிப்பதிலும்
இந்தப் புரியாத தன்மை இருக்கிறது.
அங்கே வெளிப்படும் இறைஞானம்தான் முதல் வாசகத்தில்
விருந்து வைத்து நம்மை அழைக்கிறது. வாருங்கள். நான்
தரும் உணவை உண்ணுங்கள். நான் கலந்து வைத்துள்ள திராட்சை
இரசத்தைப் பருகுங்கள் (நீ. மொ. 9:5).
அழைப்பை ஏற்போமா? உணவாய் மாறியது இறைவனின் ஞானம்
என்றால் அந்த உணவை உட்கொள்வது நமது ஞானமல்லவா! அதுதானே
அறிவுடைமை. எனவே திருத்தூதர் பவுல் அழைக்கிறார்:
ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள்
(எபேசி. 5:15).
இன்றைய வழிபாட்டில் இயேசுவின் அழைப்பு மட்டுமல்ல, அவரது
எச்சரிக்கையும் நம் மனதில் ஆழப்பதியட்டும். மானிட
மகனுடைய சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தால்
ஒழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் (யோ. 6:53)
அன்புக்கும் நம்பிக்கைக்கும் கொடுக்கப்படும் அழகான,
அற்புதமான வெளிப்பாடே நற்கருணை.
மறைநூல் வல்லுனர் புனித அகுஸ்தினார் கூறுகிறார்:
இறைவனே உனக்கு எல்லாம். நீ பசியாய் இருக்கிறாயா? அவர்
உனக்கு உணவாகிறார். நீ தாகமாய் இருக்கிறாயா? அவர்
உனக்குப் பானமாக இருக்கிறார். நீ இருளில் இருக்கிறாயா?
அவர் உனக்கு ஒளியாக இருக்கிறார். நீ நிருவாணமாக
நிற்கிறாயா? அவர் உன். நிலையான நிரந்தர உடையாய்
இருக்கிறார்.
திருப்பலி இயேசுவின் பலி மட்டுமன்று. நம் பலி. முழுத்
திருஅவையின் பலி. ஒளி கொடுக்கும் மெழுகுதிரி தன்னைக்
கரைத்துக் கொள்வது போல், மற்றவர் வாழ்வு ஒளி பெற நம்மை
நாம் கரைத்துக கொள்வோம். வாழ்வு அருத்தம் பெறட்டும்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
"நண்பர்களே, காலையில் நீங்கள்
படுக்கையைவிட்டு எழும்போது, 'நான் இன்று என் கால்களை
எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான்
என்ன?' என்ற உணர்வு உங்களுக்கு எழுந்ததுண்டா?" (Do you
ever have one of those mornings, when you just can't be
bothered to put your legs on? Giles Duley)
இந்தக் கேள்வியை நம் முன் வைப்பவர், மனித நேயமும்,
சமுதாயச் சிந்தனையும் கொண்ட ஜைல்ஸ் டூலி (Giles Duley)
என்ற புகைப்படக் கலைஞர். இவர் 2011ம் ஆண்டு முதல், இரு
செயற்கைக் கால்களுடன் வாழ்பவர். இவரைப்பற்றி இந்த ஞாயிறு
சிந்தனையில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் உண்டு. ஒவ்வோர்
ஆண்டும், ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர
நாளைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, நீதி ஞாயிறென, இந்தியத்
திருஅவை சிறப்பிக்கிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 18,
கொண்டாடப்படும் நீதி ஞாயிறன்று, ஜைல்ஸ் டூலி
அவர்களைப்பற்றி பேசுவது பொருத்தமாகத் தெரிகிறது. Ted.com
என்ற இணையத்தளத்தில் இவர் வழங்கிய ஓர் உரை, நீதி
ஞாயிறுக்குரிய மறையுரையைப் போல ஒலிக்கிறது.
தன் 20வது வயதில், விளம்பர உலகில், புகைப்படக் கலைஞராக,
தொழிலைத் துவங்கியவர், ஜைல்ஸ். இசை உலகில் சிறந்து
விளங்கிய பல புகழ்பெற்ற பாடகர்களையும், பாடகர்
குழுக்களையும் படம் பிடித்து, புகழ்பெற்ற இதழ்களில்
வெளியிட்டு, பரிசுகள் பல பெற்றார். பத்தாண்டுகளாக இவர்
தினமும் கண்டுவந்த அந்த செயற்கையான, பளபளப்பான உலகம்,
இவருக்கு, சலிப்பைத் தந்தது. அந்த உலகிற்கே உரிய ஆணவம்
கொண்ட நட்சத்திரங்களுடன், பலநாட்கள் மோத
வேண்டியிருந்ததால், இவரது சலிப்பு, கசப்பாக மாறிவந்தது.
ஒரு நாள் இரவு, இத்தகையதொரு மோதலுக்குப் பின் வீட்டுக்கு
வந்தவர், தான் வைத்திருந்த விலையுயர்ந்த காமிராவை
கோபத்துடன் கட்டிலில் எறிந்தார். ஸ்ப்ரிங் கம்பிகளால் ஆன
அந்தக் கட்டில் சன்னலுக்கருகே இருந்தது. இவர் கோபத்தில்
எறிந்த காமிரா, ஸ்ப்ரிங் கட்டிலில் விழுந்து, துள்ளி,
அவர் தங்கியிருந்த பல மாடிக் கட்டிடத்தின் சன்னல் வழியே
அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அத்தருணத்தில், தன்
வாழ்வில் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டது என்று, ஜைல்ஸ்
அவர்கள் கூறுகிறார்.
அந்த இரவுவரை, செயற்கைத்தனம் நிறைந்த ஊடக உலகை, தன்
காமிராக் கண்களால் கண்டுவந்த அவர், அடுத்தநாள் முதல்,
இயற்கையான, உண்மை உலகை தன் சொந்தக் கண்களால் காண
ஆரம்பித்தார். அந்த இயற்கை உலகில் அவர் கண்ட உண்மைகளை,
புகைப்படங்களாய் பதிவுசெய்தார். உலகின் கவனத்தை ஈர்க்கும்
வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களை, படங்களில் பதிவுசெய்ய
ஆரம்பித்தார்.
இந்த முயற்சி, அவரை, ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது.
அங்கு, அவர் வாழ்வில், மீண்டும், ஒரு மிகப்பெரும் மாற்றம்
நிகழ்ந்தது. பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்துவரும்
அந்நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின்
கதையைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஜைல்ஸ். அப்போது
ஒரு நாள், பாதையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை இவர்
மிதித்ததால், இரு கால்களையும், இடது கையையும் பாதி
இழந்தார். இது நடந்தது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம்.
மருத்துவமனையில் இருந்தபோது, இருமுறை இவர் மரணத்தின்
வாயில்வரை சென்று திரும்பினார். இப்போது, கடந்த ஏழு
ஆண்டுகளுக்கும் மேலாக, தன் சொந்த அனுபவங்களை மேடையேறி
பேசிவருகிறார் ஜைல்ஸ். இவர் Ted.com என்ற இணையத்தளத்தில்
வழங்கிய உரையின் ஒரு பகுதி, நீதி ஞாயிறுக்கேற்ற
மறையுரைபோல் ஒலிக்கிறது. அந்த உரையில் அவர் பகிர்ந்துகொண்ட
எண்ணங்கள் இதோ:
விளம்பர உலகில் இருந்தவரை மற்றவர்களையே நான் படங்களாகப்
பதிவு செய்து அவர்கள் கதைகளைச் சொல்லிவந்தேன்.
ஆப்கானிஸ்தானில் அன்று நிகழ்ந்த விபத்துக்குப் பின், நானே
ஒரு கதையானேன். போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு
நேரிடுகிறது என்பதைக் காட்ட, என் உடல், ஒரு காட்சிப்
பொருளாகிவிட்டது. என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன்.
இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை, என் கதையில்
சொல்கிறேன்.
ஜைல்ஸ் டூலி அவர்கள் கற்றுக்கொண்ட உண்மைகள் எவை?
உடல் உறுப்புக்களை இழந்தாலும், நீங்கள் வாழ்வை
இழக்கவில்லை.
அங்கக் குறையுள்ளவர் என்று உலகம் உங்களைச் சொல்லலாம்.
ஆனால், அகக் குறையுள்ளவர் அல்ல, நீங்கள்.
- எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், சாதிக்கவேண்டும்
என்று நீங்கள் நினைத்துவிட்டால், எதையும் உங்களால்
செய்யமுடியும்.
இந்த விபத்துக்குப்பின், என் வாழ்வை பின்னோக்கிப்
பார்த்தால், புதிரான ஓர் உண்மை புலப்படுகிறது. முழு
உடலுடன் நான் வாழ்ந்தபோது அடையாத பல நல்லவற்றை இப்போது
நான் அடைந்துள்ளேன்.
இவ்வளவு உயர்வான எண்ணங்களைப் பேசும் ஜைல்ஸ் அவர்கள், மனச்
சோர்வுறும் நேரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், செய்யும் ஒவ்வொரு
செயலுக்கும் போராடவேண்டியிருக்கும் அவருக்கு,
சிலநாட்களில், காலை விடியும்போது, தன் செயற்கைக் கால்களை
மாட்டிக்கொண்டு, படுக்கையைவிட்டு இறங்கவேண்டுமா என்ற
கேள்வி எழாமல் இல்லை. 'நான் இன்று என் கால்களை எடுத்துப்
பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?'
என்ற உணர்வுடன் போராடியிருக்கிறார்.
இத்தனை போராட்டங்கள் மத்தியிலும், ஜைல்ஸ் அவர்கள்,
செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிவரும் ஒரு முக்கிய கருத்து
இதுதான்: "நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை
மாற்றமுடியும். உலகில் நிகழும் அவலங்களை ஊடகங்கள்
காட்டும்போது, அவற்றைப் பார்த்து, விரக்தியுற்று,
செயலிழந்து போகாமல், அந்த அவலங்களைப்பற்றி கருத்துக்களைப்
பரிமாறுவோம். மாற்றங்களைக் கொணரும் வழிகள் பிறக்கும்.
சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும்
மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்" என்பதே, அவர்
மீண்டும், மீண்டும் எடுத்துச்சொல்லும் முக்கியப் பாடம்.
ஊடகங்கள் காட்ட மறந்த, அல்லது, காட்ட மறுக்கும் மனிதர்களை,
ஜைல்ஸ் அவர்கள், தன் புகைப்படங்கள் வழியே மக்களின்
நினைவுகளில் பதிக்கிறார். அதிலும் குறிப்பாக, போரினால்
தங்கள் உறுப்புக்களை இழந்தாலும், நம்பிக்கை இழக்காமல்
வாழ்வைத் தொடரும் பலரின் புகைப்படங்கள், மற்றும் கதைகளை
"Legacy of War" என்ற வலைத்தளம் வழியே, நமக்கு வாழ்க்கைப்
பாடங்களாக்குகிறார்.
"நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும்...
சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும்
மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்" என்று ஜைல்ஸ்
அவர்கள் கூறும் பாடத்தை, நீதி ஞாயிறின் மையப் பொருளாக நாம்
எண்ணிப்பார்க்கலாம். நீதி ஞாயிறு என்றதும், கொடிபிடித்து,
கோஷம் எழுப்பி, ஊர்வலம் சென்று, உரிமைகளைப் பெறுவது என்ற
கோணத்தில் நம் எண்ணங்கள் ஓடலாம். இவை அனைத்தும் தேவைதான்.
இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், வெளிப்படையான
இம்முயற்சிகளுடன், நமது கடமை முடிந்துவிட்டால், பயனில்லை.
நமது சொற்களால் நீதியைப்பற்றி முழக்கமிட்டுவிட்டு, நமது
வாழ்விலும், செயல்களிலும் நீதியை செயல்படுத்தவில்லையெனில்,
நமக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்காது.
அவர்களும் நீதியைப்பற்றி, வறியோரைப்பற்றி, வாய் நிறைய...
சில நேரங்களில், வாய் கிழியப் பேசுகின்றனர். இதுவே நமது
பாணியாகவும் இருந்தால் பயனில்லையே!
நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய
சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில்
யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த
மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? உள்ளிருந்தா?
வெளியிலிருந்தா? என்பதில் கருத்து வேறுபாடுகள் பல உள்ளன.
வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும்... பணம்
படைத்தவர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம்
வேண்டும்; அவர் மாறவேண்டும்; இவர் மாறவேண்டும்; அது
மாறவேண்டும்; இது மாறவேண்டும் என்று நீளமான பட்டியல் ஒன்றை
தயாரித்துக் காத்திருப்பவர்கள், நம்மில் அதிகம் பேர்
உள்ளனர். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள்
நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.
வெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி
இவை அனைத்துமே மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தானே.
உள்ளத்திலிருந்து கிளம்பும் இந்தக் குழப்பங்களைத்
தீர்க்காமல், மாற்றங்களைக் கொணர்வதற்கு, கட்சிகள்
சேர்ப்பதையும், குண்டுகள் வீசுவதையும், நம்பி வாழ்வது,
புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு, ஒப்புக்காக
மருந்திட்டு, கட்டு போடுவதற்குச் சமம். சமுதாயப்
புண்களுக்கு, போராட்டம், உண்ணாவிரதம், மாநாடு என்று,
அரசியல் தலைவர்கள் சொல்லித்தரும் மேலோட்டமான மருந்துகள்
இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் அந்தப்
புண்களைத் திறந்து, வேர்வரைச் சென்று குணமாக்குவது,
கடினமானது, கசப்பானது. இப்படிப்பட்ட ஒரு கடினமான, கசப்பான
உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில்
சொல்லித்தருகிறார்.
5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தபோது,
வயிறார உண்டவர்கள், இயேசுவை மீண்டும் தேடி வந்தனர். ஏன்?
அனைவரும் சமமாக அமர்ந்து உண்ட அந்த அனுபவம், அவர்களுக்கு
இனிமையாக இருந்தது. அத்தகைய சமபந்தியை, இயேசு, மீண்டும்,
மீண்டும், அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற
ஆவலில், அவர்கள் இயேசுவைத் தேடிவந்தனர். சமதர்ம சமுதாயம்
என்ற மாற்றத்தை, மிக எளிதாக உருவாக்கும் ஒரு மந்திரவாதியாக
அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர்களது பார்வை சரியானது அல்ல
என்று இயேசு அவர்களிடம் எச்சரிக்கை கொடுத்தார். அப்பங்களை
வயிறார உண்டதால்தான் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள்,
மற்றபடி, என் சொற்களோ செயல்களோ உங்களை என்னிடம் அழைத்து
வரவில்லை என்ற எச்சரிக்கையை இரு வாரங்களுக்கு முன்
மக்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அவர்கள் தேடும் உணவு,
அவர்கள் தேடும் எளிதான வாழ்வு, ஆபத்தானது என்பதையும்,
வேறொரு வகையான உணவு, வேறொரு வகையான வாழ்வு உண்டு
என்பதையும் சென்ற வாரமும், இந்த வாரமும் இயேசு
நற்செய்தியில் எடுத்துரைக்கிறார். இடித்துரைக்கிறார்.
அவர்கள் தேடிவந்த அப்பங்களுக்குப் பதில், தன் சதையையும்,
இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறார் இயேசு. சதை, இரத்தம்,
என்று இயேசு கூறிய சொற்கள், அம்மக்களை நிலைகுலையச்
செய்கின்றன. அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று
இயேசுவைத் தேடிவந்தால், தன் சதையையும், இரத்தத்தையும்
தருவதாக இவர் கூறுகிறாரே... என்று அவர்கள் அதிர்ச்சி
அடைகின்றனர். இருந்தாலும், இயேசு, "என் சதையை உண்டு,
இரத்தத்தைப் பருகினால் நிலைவாழ்வு பெறுவீர்கள்" என்ற
அந்தக் கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் சொல்கிறார்:
வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதான தீர்வுகளைத்
தேடிவந்த அந்த மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய
மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என்
சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில்
நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி
ஒவ்வொரு நாளும் நடக்கும், வாழ்வு நிறைவாகும்" என்ற
உண்மையை, இயேசு, சென்ற ஞாயிறன்றும், இந்த ஞாயிறன்றும்,
சொல்லித்தருகிறார்.
சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும், இயேசு,
இதையொத்த எண்ணங்களையேச் சொல்கிறார். மாற்றங்கள்
உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும், இந்த மாற்றங்கள் வெறும்
வார்த்தைகளாக அல்ல, உன் சதையாக, இரத்தமாக மாறட்டும். இந்த
மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க
வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று, இந்த
நீதி ஞாயிறன்று நம்முன் வைக்கிறார். நமது பதில் என்ன?
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு முக்கிய கூறு நற்கருணை
ஆகும். இயேசு தம்மையே நமக்கு உணவாகவும் பானமாகவும்
அளித்துள்ளார் என்பதே அந்நம்பிக்கை. யோவான் நற்செய்தி
இந்த உண்மையை விரிவாக விளக்குகிறது (யோவா 6). இயேசு
தந்தையாம் கடவுளிடமிருந்து பெற்ற வாழ்வை நம்மோடு
பகிர்ந்துகொள்கின்ற கருவியாக நற்கருணை உள்ளது (யோவா 6:57).
இயேசு நமக்குத் தம் உடலை உணவாகவும் இரத்தத்தைப்
பானமாகவும் தருகிறார் (யோவா 6:55). இயேசு தம் சதையை
நமக்கு உணவாக்குவது எப்படி முறையாகும் ? இக்கேள்வியை
இயேசுவிடமே கேட்டனர் அக்கால மக்கள். அதற்கு இயேசு அளித்த
பதில்:
எனது சதை உண்மையான உணவு; என் இரத்தம் உண்மையான பானம்
என்பதே (யோவா 6:55). உடலை வளர்க்க உதவும் உணவு நமக்கு
நிலையான வாழ்வை அளிக்க முடியாது. ஆனால் இயேசு வழங்குகின்ற
அவருடைய சதை நமக்கு நிலைவாழ்வை அளிக்கும் (யோவா
6:51-54).
எனவே, இயேசு தருகின்ற உணவு முற்காலத்தில் வழங்கப்பட்ட
மன்னா என்னும் உணவை விடவும் உயர்ந்தது. அவ்வுணவை
உண்டவர்கள் மீண்டும் இறந்தார்கள். ஆனால் இயேசுவின்
உடலை உண்போர் எந்நாளும் உயிர்வாம்வர். இயேசு
வழங்குகின்ற உயிர் இம்மண்ணகத்தைச் சார்ந்ததல்ல. மாறாக,
எந்நாளும் நிலைத்து நிற்கின்ற விண்ணகத்தைச் சார்ந்தது.
தந்தையாம் கடவுள் இயேசுவோடு எந்நாளும் இணைந்து
வாழ்வதுபோல நாமும் கடவுளின் உயிரை நம்மில் கொண்டு அவர்
வழியாகவே வாழ்வோம். அந்த வாழ்வுக்கு ஒருநாளும் முடிவு
இராது.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
தியாக சீலர்களாக மாறுவோம்
கடந்த நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலுமே, தொடர்ச்சியாக திருவிழாக்களைக்
கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். கடந்த வாரம்: மூவொரு கடவுள்
பெருவிழா, அதற்கு முந்தைய வாரம்: தூய ஆவி பெருவிழா. அதற்கு
முந்தைய வாரம்: ஆண்டவரின் விண்ணேற்பு. அதற்கெல்லாம்
முத்தாய்ப்பாக திருச்சபைக்கு இன்றும் ஊட்டம் தந்து வாழ்வளித்து,
இயக்கிக்கொண்டிருக்கும் திரு உடல், திரு இரத்தப்பெருவிழாவை இன்று
கொண்டாடுகிறோம். உணவு மற்றும் இரத்தத்திற்கு பழைய ஏற்பாட்டிலே
பிண்ணனி கொடுக்கப்படுகிறது. கடவுள் பாலைவனத்திலே, மன்னாவை மக்களுக்கு
கொடுத்து, பாலைநிலத்திலே, அவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். மன்னாவை
உண்ட மக்கள், ஒருநாள் இறந்து போனார்கள். ஆனால், இயேசுவின் உடலை
உண்கிற நாமோ, எந்நாளும் அவரில் உயிரோடிருக்கிறோம்.
லேவியர் நூலிலே வாசிக்கிறோம். இஸ்ரயேல் மக்கள் ஆண்டிற்கு ஒருமுறை,
தங்கள் பாவங்களுக்கு கழுவாய் நிறைவேற்றும் நாள் ஒன்றைக்
கொண்டாடினார்கள். அந்த நாளிலே, அனைத்து இஸ்ரயேல் மக்களும்
கூடியிருக்க, ஒரு காளையும், இரு வெள்ளாட்டு கிடாய்களும் கொண்டு
வரப்படும். காளை மாடு, குருவானவருடைய பாவங்களுக்கு பரிகாரமாகவும்,
இரண்டு ஆடுகளில் ஒன்று மக்களின் பாவம் போக்கும் பலிக்கெனவும்
பலியிடப்படும் என்று, லேவியர் ஆகமத்திலே வாசிக்கிறோம். செம்மறியின்
இரத்தத்தை எடுத்து, மக்கள் மேல், தெளிக்க, அவர்கள் பாவம் கழுவப்படுவதாக,
அவர்கள் நம்பினர். அதேபோல, நம் இயேசு கிறிஸ்து, மக்களுடைய பாவங்களைப்போக்குவதற்காக,
தன் இரத்தத்தையே, கொடுத்து, நிரந்தரமாக, நம்மை பாவத்திலிருந்து
விடுவித்து, தன்னையே தியாகமாக்கி, நமக்கு வாழ்வு தந்துள்ளார்.
யூதர்கள், இரத்தத்தை உயிருக்கு சமமாக கருதினார்கள். இரத்தம்
வெளியேறினால், உயிர் வெளியேறுவதாக எண்ணிக்கொண்டனர். இயேசு தன்
உடலையும், இரத்தத்தையும் நமக்காகப் பலியாக்குவதன் மூலமும்,
தியாகமாக்குவதன் மூலமும் மனிதராகப் பிறந்த கடவுள், நமக்காக உயிர்
விடுகிறார் என்று இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நம் அனைவருடைய
பாவங்களும், அவருடைய இரத்தத்தால், கழுவப்பட்டு, புது மனிதர்களாக
மாற வேண்டும், என்று அவர் உயிர் விடுகிறார். கடவுளுக்கும், மனிதனுக்கும்
இடையே துண்டிக்கப்பெற்ற, அந்த உறவை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
நமக்கு வாழ்வு தருகிறார் என்று நம்பினர்.
இந்தப்பெருவிழா, நமக்கு நம்முடைய வாழ்வுக்கு கூறுகிற செய்தி என்னவென்றால்,
எங்கே தியாகம் இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது. இந்த உலகம்
இருப்பதும், இயங்குவதும், வரலாற்றிலே, வாழ்ந்த தன்னலமற்ற தியாக
உள்ளங்களினால் தான். எனை ஈன்ற தந்தைக்கும், எனை வளர்த்த
தாய்நாட்டிற்கும், என்னால் சிறிதளவு நன்மை கிடைக்குமானால்,
செத்தொழியும் நாளும் எனக்கு திருநாளே. இதுதான், தமிழர்களாகிய
நம்முடைய முன்னோர்களின் வாழ்வு முறை. இன்று நம்முடைய வாழ்க்கை
எப்படி இருக்கிறது? அடுத்தவனுக்கு குழிவெட்டி, எப்படியாவது
நான் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்கிற பார்வைதான் அதிகம்.
அப்படிப்பட்ட பார்வையை மறந்து, தியாக உள்ளங்களாக மாற அழைக்கப்படுகிறோம்.
=================================================================================
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
"இயேசு, 'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு
இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' என்றார்"
(யோவான் 6:56)
இயேசு மக்களுக்கு நிலைவாழ்வு தரும் உணவைத் தரப்போவதாகக் கூறியதும்
அவர்கள் தமக்குள்ளே "முணுமுணுத்தார்கள்" (யோவா 6:41). ஆனால்,
அவர் வழங்கப்போகின்ற உணவு அவருடைய சொந்த "சதையும் இரத்தமும்"
என்றதுமே மக்களிடையே வாக்குவாதமே எழுந்துவிட்டது! அவர்கள்
"நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்"
என்று வாதாடத் தொடங்கினர். இதைக் கண்ட இயேசு மக்களுக்கு இன்னும்
அழுத்தமாகக் கூறிய உண்மை இது: "எனது சதை உண்மையான உணவு. எனது
இரத்தம் உண்மையான பானம்" (யோவா 55). இவ்வாறு இயேசு கூறியதைக்
கேட்ட மக்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அதாவது,
எந்த மனிதரும் பிற மனிதரின் சதையை உண்பதை முறையானதாகக் கருத
மாட்டார்கள். ஏன், இத்தகைய செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று
கூடக் கூறுவார்கள். ஆனால் இயேசு கூறுகின்ற சொற்கள் உண்மையிலேயே
அவர் தம்மை நமக்கு உணவாகவும் பானமாகவும் தருகின்ற கொடையைக்
குறிக்கின்றன. என்றாலும் இயேசுவின் உடலை நாம் உண்ண முடியுமா,
அவருடைய இரத்தத்தை நாம் குடிக்க இயலுமா எனச் சிலர் கேட்கலாம்.
இங்கே இயேசு கூறுவது நம் ஆன்ம உணவையும் பானத்தையும் என்பதை
நாம் முதலில் உணர வேண்டும். அதே நேரத்தில், நாம் உட்கொள்கின்ற
உணவும் அருந்துகின்ற தண்ணீரும் நாம் உயிர்வாழ நமக்குச் சக்தி
தருவதுபோல, இயேசுவை நமது உணவாகவும் பானமாகவும் நாம் ஏற்றுக்கொண்டு,
அவருடைய தன்மையை நமது தன்மையாக மாற்றிக்கொண்டால் நாம் ஆன்ம
வாழ்வில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைவோம்.
நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது அப்பமும் இரசமும் இயேசுவின்
உடலாகவும் இரத்தமாகவும் மாற்றம் பெறுகின்றன என்பது நம் நம்பிக்கை.
இயேசுவே தம்மை நமக்குக் கொடையாக அளிக்கின்றார் என்பதே இதன்
பொருள். தம்மையே கொடையாகத் தருகின்ற இயேசுவை நாம் ஏற்று, அவருடைய
சக்தியிலிருந்து சக்தி பெற்று வாழ்ந்தால் அவருடைய வல்லமை நமக்கு
ஊக்கமும் ஆக்கமும் தரும். இயேசுவிடம் துலங்கிய பண்புகள் நம்மிடமும்
துலங்கும். அப்போது நம் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்ததாகவும்
உகந்ததாகவும் மாற்றம் பெறும். இயேசுவின் சதையை உண்டு. அவருடைய
இரத்தத்தைக் குடிக்கும் நாம் ஒருவிதத்தில் இயேசுவின் தன்மையைப்
பெறுவதால் அவர் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களின் நலனுக்காகத்
தம்மையே பலியாக்கியதுபோல நாமும் தன்னலம் களைந்து பிறர்நலம்
பேணுவதில் நிலைத்திருப்போம்; நிலைவாழ்வு பெற்று மகிழ்வோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
முதல் வாசகப் பின்னணி (நீ.மொ. 9:1-6)
இந்நூலானது. எபிரேய மொழியில் சாலமோனின் பழமொழிகள்
என்றும், கிரேக்க விவிலியத்தில் பழமொழிகள் என்றும்
அழைக்கப்படுகிறது. இந்நூல் ஒருவரின் படைப்பு அல்ல, மாறாக
பலரின் படைப்பாகும். இது நான்கு சூழ்நிலை ஆய்வுக்குத்
தகுதி பெறுகின்றது. அவை:- 1, அரசவை சூழ்நிலை 2. பள்ளிச்
சூழ்நிலை 3. இனச் சூழ்நிலை 4. அறிவுப்புலமை சூழ்நிலை
போன்ற குழுக்களில் தோன்றியது. ஞான போதனைகளை ஏற்க
வேண்டுமென்று மக்களை இந்நூல் தூண்டுகிறது. இந்நூலானது
ஒழுக்கம் மற்றும் சமயம் சார்ந்த போதனை தொகுப்பாகும்.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் என்று
தொடங்கி சமய ஒழுக்கம், நல்லறிவு, மற்றும் தன்னடக்கம்,
பற்றி விளக்கிக் கூறுகிறது. வாருங்கள்! நான் தரும்
உணவை உண்டு, நான் கலந்த ரசத்தை பருகுங்கள். அப்போது
வாழ்வீர்கள். இவ்விதம் வாழும்போதுதான் விவேகம்
உள்ளவர்களாக மாறுண்கள். அவ்வாறு செயல்படுவதுதான் ஞானம்,
என்பதை முதல் வாசகம் கூறுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே.
5:15-20)
தந்தை கடவுள் தன் அன்பை கிறிஸ்து வழியாக உலகுக்கு
வெளிப்படுத்தினார். திருமுழுக்கும் விசுவாச வாழ்வும்
இறை அரசில் பங்கு கொள்வதன் அடையாளம் ஆகும், கடவுளைப்
போல வாழ முயற்சி செய்யுங்கள் என்று தூய பவுல்
அறிவுறுத்தி, அத்தகைய வாழ்விற்கு ஏற்ற சில நெறிகளையும்
கூறுகிறார். ஞானமற்ற அறிவிலிகளாய் இராமல் ஞானிகளாய்
வாழ வேண்டும். ஞானம் உடையோர் கவனம் செலுத்துவதிலும்,
ஆய்வு செய்வதிலும் வளர்கிறார்கள். இன்று ஆண்டவரின்
நாள் என்று நம்பும் போது நிகழ்கால தீமை மறைகிறது.
கொடுக்கப்பட்ட நேரத்தை நன்மை செய்வதற்காக செலவிட வேண்டும்
கடவுளை அன்பு செய்வதிலும், மகிமைப்படுத்துவதிலும் தான்,
நற்சிந்தனையும் நன்றியுணர்வும் உதிக்கிறது என்று
இவ்வாசகம் நமக்கு அறிவுறுத்துகின்றது.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 6:51-59)
இயேசுவே உயிர்தரும் உண்மையான உணவு. ஞான வாழ்வில் ஈடுபட
ஒருவன் முதலில் தன்னை அறிவது அவசியம். இயேசு தன்னை
அறிந்து பிறருக்கு வெளிப்படுத்தினார். தன்னைப்பற்றிய
தெளிவு பெற்றவன் கடவுள் மற்றும் உலகு பற்றிய தெளிவு
பெறுவான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவின் உடலையும்
இரத்தத்தையும் பெறுவதன் மூலம், கிறிஸ்துவின்
விடுதலையைப் பெற்று, அவரை நம்பி ஏற்றுக்கொள்கிறான்.
நற்கருணையை உண்ணுகிற- போது இயேசு பூமியில் இரத்தம்
சிந்தி துன்பப்பட்டு, சிலுவையில் மரித்து தன்னையே
தியாகம் செய்து, நம் பாவத்தை போக்கினார் என்பதை நினைவு
கூற வேண்டும். இதனால், இயேசுவோடும் கடவுளோடும் நமது
உறவு வளர்கிறது. நற்கருணையை உட்கொள்வதால் நாம் நிலை
வாழ்வை பெறுகிறோம். கடவுள் இயேசுவை தீயவற்றிலிருந்து
பாதுகாத்தார். நாம் நற்கருணை உண்ணும் போது, அவரே நம்மை
அனைத்து தீய வழிகளில் இருந்தும் பாதுகாக்கிறார். இயேசு
வழியாக நம்பிக்கையை பெறுகிறோம். நற்கருணை வழியாக வாழ்வு
பெறுகிறோம்
பாவிகளாகிய மாந்தர் அனைவருக்காகவும், தம் உயிரையும்
ஈந்தார் நம் அன்பர் இயேசு கிறிஸ்து இதன் மூலம்,
இயேசுவின் தியாக உள்ளமும், முடியாத அன்பும் தெரிகிறது.
இழக்கும் மனமும் மற்றும் கடவுளின் அளவிட முடியாத
அன்பும் தெரிகிறது. பெறுவதில் சாமர்த்தியம் உள்ளது.
ஆனால், கொடுப்பதில் தியாகம் நிறைந்துள்ளது. எனவே நாம்
பெறுவதை விட்டுவிட்டு கொடுப்பதில் வளர வேண்டும் என்று,
இன்றைய அனைத்து வாசகங்களும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
தன்னிடம் ஒன்றும் இல்லையே என்று வருந்து வதை விட
நம்மிடம் இருக்கும் கண்ணீரைக்கூட கடவுளிடம்
கொடுக்கலாம் நாம் கொடூத்த கண்ணீர் கானல் நீராக
மறைகிறது. அவை கருணை கடலாக உருவாகி நம்மையே அதில்
நனைக்கும் ஏனெனில், கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய
உள்ளமே (தி.பா.. ௧1-16-17).
தாழ்ச்சியான மனதையும் நொறுங்கிய உள்ளத்தையுமே கடவுள்
ஏற்பார். கண்ணீரிலும் கடவுளைக் காண கடவுள் ஞானம்
தேவை. அந்த ஞானத்தை பெற்று, சுவைத்து, பேரின்ப வாழ்வு வாழ
வேண்டி இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. நம்
உள்ளத்தில் ஞான ஒளி சுடர் விடும் போது, அவ்வொளி
அன்பின் ஜோதியாக செல்லும் இடமெல்லாம் எரியும். ஞானம்
அற்றவர்களாக அல்ல, மாறாக ஞானம் உள்ளவர்களோடு வாழ இன்றைய
இரண்டாம் வாசகம் நம்மை அழைக்கிறது. ஞானமுடையோர் இவ்வித
உலக இன்பம், பதவி வெறி, பண மோகம், பெண் தாகம் போன்ற
மாய வலையில் இருந்து தங்களை விடுவித்துக்
காத்துக்கொள்வர். அன்போடும் தியாகத்தோடும் வாழ
அறிவுடன் ஞானமும் தேவைப்படுகிறது. கிறிஸ்துவே கடவுளின்
ஞானம் (1கொரி, 1:24). கிறிஸ்து இயேசுவை நம்பி நம்
உள்ளத்தில் பெறும் போது, இறை ஞானம் நம்மில்
செயலாற்றுகிறது.
மனிதனின் அறிவில் முளைப்பது ஆணவம் என்ற மரம், அது வளர
வளர நம்மையும் அழிக்கும், நம்மைச்
சுற்றியுள்ளவர்களையும் அழிக்கும். அது, கடவுளுக்கும்
நமக்கும் இடையேயுள்ள ஓர் உன்னதமான உறவை துண்டிக்கும்.
ஆனால் கடவுளின் ஞானத்தில் உதிப்பதோ தியாக சூரியன்.
அது அனைத்து மக்களுக்கும் வெளிச்சம் கொடுத்து, அக இருள்
நீக்குகிறது. எங்கும் இறை ஒளியான அன்பின் முகத்தை
செல்லும் இடமெல்லாம் விதைத்து இறை அரசை மண்ணில்
பரப்பும்.
பிறருக்காக சிந்திய ஒரு துளி கண்ணீரும், சிறு துளி
உதவியும் வீணாக போகவே போகாது. ஒரு சொட்டு நீர் நீ
இழக்கும் போது, ஒரு கோடி கடல் நீர் அளவுக்கு நீ திரும்ப
பெறுவாய். ஏழைகளுக்கு இரங்குபவன் கடவுளுக்கு வட்டிக்கு
கொடுக்கிறான். அவரும் கைம்மாறு அளிப்பார் (நீ.மொ.
19:7). நீங்கள் சேர்த்ததெல்லாம், பெற்றதெல்லாம்
உங்களுக்கு மட்டும் என்று கடவுள் தரலில்லை. பிறருக்குக்
கொடுத்துப் பாருங்கள். இன்ப வனத்தையே வென்று
விடுவீர்கள்.
கொடு கொடு என உன் உள்ளம் உன்னை உருவாக்கும் போது விடு
விடு என உன் சுய நலம் நீங்கி பெறு பெறு என இறை அருளை
சேர்ப்பாய். கொடுப்பவர், இறைவன் பக்கத்தில்
இருக்கிறார். கொடாதவர் அழிவுப்பாதையின் விளிம்பில்
இருக்கின்றனர். ஒரு தாயின் இதயத்தைப் பாருங்கள்.
மெழுகு தன்னையே கரைத்து உலகுக்கு ஒளி கொடுப்பது போல, '
தாயானவள் தன் குழந்தை மகிழ்ந்து வளர தன்னையே செதுக்கி,
தன் தியாக உள்ளத்தைக் காட்டுகிறாள். கொடை வழங்கும்
போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு? (சீரா. 35:8) என்று
கூறுவதைக் கவனியுங்கள். கடவுள் இன்முகத்தோடு தம் அன்பை
அனைவருக்கும் பொழிந்தார். இயேசு அன்போடு தன் உயிரையே
மக்களுக்காக அளித்து தன் தாழ்ச்சி நிறை, தியாக இதயத்தை
வெளிப்படூத்தினார். இவ்வாறு இன்றைய அரசியல்
தலைவர்களும், சமுக தலைவர்களும், சமய தலைவர்களும்
மற்றும் வசதி படைத்தவர்களும் தங்களையே தியாகம் செய்ய
தயாராகினால், உலகில் வறுமை, பசி, பட்டினி போன்ற கொடிய
நோய்களும் உயர்ந்தவன் தாழ்ந்தவன், பணக்காரன் ஏழை போன்ற
எந்த குறைபாடுகளும் இருக்காது.
ஆனால், இன்றைய குழல் எவ்வாறு உள்ளது. கொடுக்கும் குணம்
நிறைந்தவர்களைவிட பிடூங்கும் உள்ளங்களே மலிந்துக்
கிடக்கின்றது. உழைக்கும் மக்கள் நீதியான, போதிய ஊதியம்
பெறாமல் தவிக்கின்றனர். ஒரு சில தந்திர செல்வந்தர்கள்
தாங்கள் உயர ஏழையின் இரத்தத்தை உறிஞ்சுகின்றனர். அன்று
இறைவாக்கினர் அணிந்த உடையை ஒரு சில போலித் தலைவர்கள்
போர்த்திக் கொண்டு மக்களை மயக்கினார்கள். தனக்கு வேண்டிய
இரையைக் கவ்வும் ஓநாய் போல பொருளாசை கொண்டு, ஏழைகளை
ஏமாற்றினார்கள். இவ்வாறு வாழ்ந்த ஏமாற்றுக்காரர்களை,
இறைவாக்கினர் ஆமோஸ் சாடிணர். இவர்கள், பணத்திற்காக எழை
எளிய மக்களையும், தெய்வீக மதிப்பீடுகளையும் விற்றவர்கள்
நமது வாழ்வு எவ்வாறு உள்ளது? பிறர் தேவையை போக்கி
கொடுக்கும் வள்ளல் குணம் உள்ளவர்களா? அல்லது
பிறரிடமிருந்து பிடுங்கி நம் தேவையை மட்டும் பார்க்கும்
மனிதர்களா? கொடுத்து வாழவே இன்று நாம்
அழைக்கப்பட்டுள்ளோம் ஏனெனில், வாங்குவதும் பெறுவதும்
சாமார்த்தியம், ஆனால் கொடுப்பதோ தியாகம்
தூன் பெற்ற உணவைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் உடையவனை
பசி என்னும் தீப நோய் அணுகாது (குறள் 227). இறுதி
நாளில் நமது தீர்ப்பு, பிறருக்கு நாம் செய்த உதவியின்
அடிப்படையில்தான் அமையும் (மத்தேயு 25:35-37)
கொடுப்பவன் அன்பில் வளர்ந்து அன்பைப் பெறுகிறார்.
சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான், பெருக விதைப்பவன்
பெருக அறுப்பான் நீதியை விதைத்து ௮ன்பை அறுவடை செய்தால்,
ஆண்டவரின் நீதி பொழியப்படும். முகவாட்டத்தாலோ,
கட்டாயத்தாலோ கொடாதீர்கள், முகமலர்ச்சியுடன் கொடுப்பவர்
மேல்தான் கடவுள் அன்பு கூறுகிறார் என்று தூய பவுல்
போதிக்கிறார். ஆகவே, நாம் செய்ய வேண்டியது
என்னவென்றால், பகிர்ந்து வாழ வேண்டும் இறைவன் நமக்குத்
தந்த வளங்களை பிறரோடு பகிர்ந்து வாழ வேண்டும்.
இயேசு தனது உடலையும் இரத்தத்தையும் உணவாக உலகுக்கு
அளித்தார். இதன் மூலம், இயேசு கடவுள் மீது கொண்ட அன்பை
நாம் அறியலாம். கடவுளின் திட்டத்திற்கு தன்னை
முழுவதுமாக கையளித்தார். இயேசுவின் தாழ்ச்சியான
உள்ளமும், கீழ்ப்படியும் குணமும் நமக்கெல்லம் ஒரு
முன் மாதிரி ஆகும். இயேசு கடவுள் விருப்பத்திற்கேற்ப
தன்னை இழந்தார். கடவுளோ அவரை உயிர்ப்பித்து உயர்த்தி
விட்டார். நாமும் கடவுளுக்காக நம்மை இழப்போம், அப்போது
கடவுளால் உயர்த்தப்படுவோம். இயேசுவின் ஒரு துளி ரத்தம்
போதும், உலகம் மீட்பு பெறும். மனிதனின் ஒரு துளி
தியாகம் போதும், ஏழைகள் வாழ்வு பெறுவர்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
*நற்கருணையை நம்பிக்கையோடு பெறும் போது, கடவுளோடும்
இயேசுவோடும் நட்புறவு மேற்கொண்டு, அவரோடும்
ஒன்றாகிறோம். * மனிதன் மனம் மாறி, இயேசுவிடம் திரும்பி
வந்து, நற்கருணைக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதன்
மூலம் மகிழ்ச்சியை பெறுகிறான். * விவேகம் உடையோர்
நல்லது எது, தீயது எது என அறிந்து தியதை விலக்கியும்,
நல்லதை தேர்ந்தெடுத்தும் வாழ்கிறார்கள்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ