இறைத்திருவுளத்தை ஏற்று பணிந்து வாழ வந்துள்ள இறைச்சமூகமாகிய உங்கள்
அனைவரையும் வாழ்த்தி, ஆண்டின் பொதுக்காலம் 10-ம் ஞாயிறு
திருவழிபாட்டு கொண்டாட்டத்திற்கு மூவொரு இறைவனின் பெயரால் அன்புடன்
வரவேற்கின்றோம்.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதர சகோதரியும்
ஆவார் என இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார். இந்த உலகத்திலே
நாம் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். நம்முடைய
பெற்றோரும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். அதுபோல
கடவுளும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அந்தத் திட்டத்தை
அறிந்து செயல்படுத்துவது தான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது
ஆகும். தன் துன்பங்கள், அவமானங்கள் அனைத்தையும் இடைத்திருவுளம் என
ஏற்று, இயேசுவை பெற்றெடுத்ததை இறைத்திருவுளம் என அறிந்து
நிறைவேற்றியதால் கடவுளின் தாயானாள். நாமும் இவ்வாறாக வாழ்ந்தால்
இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரியாக வாழ்ந்து இறைஉறவில் செழிக்க
முடியும். எனவே இறைத்திருவுளத்தை நமதாக ஏற்று இயேசுவின் உறவினராக
வாழ்வோம்! இறையரசின் உழைப்பாளர்களாவோம்! அதற்கான ஆசீரை இப்பலியில்
பெறுவோம்!
முதல் வாசக முன்னுரை:
முதல் வாசகத்தில் ஆதி பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி அலகையின்
ஏமாற்றத்திற்கு உட்பட்டனர். எனவே அலகையின் வெஞ்சகத்தால்தான்
பாவமும், அதன் வழியாகச் சாவும் மற்ற எல்லா துன்பங்களும் வந்தன
என்பதையும், இன்ப வனத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள்
அனுபவித்ததையும் எடுத்துரைக்கும் இறைவார்த்தைக்கு கவனமுடன்
செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள தூய பவுலடியார் இரண்டாம்
வாசகத்தின் மூலம் நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம்
அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று
விண்ணுலகில் நமக்கு உண்டு. அது என்றும் நிலையானது என்று நாம்
நம்பிக்கையோடு வாழ வழிகாட்டுகிறார். எனவே நம்பிக்கையில் வலுப்பெற
இவ்வார்த்தைக்கு நம் செவிகளை திறப்போம்.
1. அருட்பெருஞ்ஜோதியே இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும்
அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். உமது உண்மை நெறியில்
அவர்கள் நடந்து தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப
பிரமாணிக்கமாய் வாழ்ந்திட தேவையான சக்தியையும், ஆற்றலையும்
அளித்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
2. பாதைகளை தெளிவாகும் ஞான வெளிச்சமே! எம் இந்திய
நாட்டையும், சிறப்பாக எம் தமிழகத்தையும் உம் திருவடியில்
அர்ப்பணித்து மன்றாடுகின்றோம். பதவியில் இருப்பவர்கள்
மனதில் மக்களிடையே அமைதிக்காகவும், நல்ல உறவுக்காகவும்
உழைக்கவும், மனித நேயம் காக்கப்படவும், மக்களின்
வாழ்வு ஏற்றம் பெறவும் தேவையான நல்ல உள்ளங்களும்,
நேர்மையும் கொண்டவர்களாக பணிபுரிய இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
3. ஞானத்தின் ஊற்றானவரே! புதிய கல்வி ஆண்டில் நுழைய இருக்கும்
எம் பிள்ளைகளை உம் கரத்தில் அர்ப்பணிக்கிறோம். உமது ஞானத்தோடு,
தேர்ந்து தெளியும் சுய சிந்தனையோடு, பெற்றோருக்கும்,
பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்து உமக்கு உகந்த
வாழ்க்கை வாழ தேவையான அருள் வரங்களை தர வேண்டுமென்று
இறைவா உன்னிடம் மன்றாடுகின்றோம்.
4. சமாதானத்தின் ஊற்றான இறைவா! எங்கள் குடும்பங்களில்
உள்ள அனைவரும் உம்மைத் தேடி கண்டடையவும், உமது திருவுளம்
என்ன என்பதை தெய்வீக ஞானத்தோடு கண்டடைந்து,
நிறைவார்த்தை காட்டும் பாதையில் பயணிக்கவும் தேவையான
ஞான வெளிச்சத்தை தந்து வழிகாட்ட வேண்டுமென்று இறைவா உம்மிடம்
மன்றாடுகின்றோம்.
5. ஒளியும் மீட்பமானவரே இறைவா! படித்துவிட்டு
வேலையின்றி இருக்கும் எம் இளையோரை உம் பாதத்தில் அர்ப்பணித்து
ஜெபிக்கின்றோம். அவர்களுக்கென நீர் முன் குறித்து
வைத்துள்ள இடத்தில் நல்ல எதிர்காலத்தை கொடுத்தருளும்.
ஒளியாக, வழியாக, வாழ்வாக உள்ள உம்மை நல்வழிகாட்டியாக
ஏற்று சாட்சிய வாழ்வு வாழ அருளாசீரை பொழிந்து காத்தருள
வேண்டுமென்று இறைவா உன்னிடம் மன்றாடுகின்றோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
ஒளிந்து கொள்ள இடம் தேடாதே
சிறுவயதில் கண்ணாமூச்சி என்றொரு விளையாட்டு விளையாடிய நியாபகம் எல்லோருக்கும்
இருக்கும் . ஒருவர் கண்களை மூடிக் கொள்ள மற்ற அனைவரும் எங்காவது
சென்று மறைந்து கொள்வர், ஒளிந்து கொள்வர். குறிப்பிட்ட நேரத்துக்கு
பின்னர் கண்களை மூடியவர் மறைந்திருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்.
ஆனால் இங்கு இந்த விளையாட்டு வித்தியாசமாக விளையாடப்படுகிறது. இயேசு
ஒருவரை அவருடைய உறவினர்கள், தாய் மற்றும் சகோதரர்கள் தேடி வருகின்றனர்.
அவருடைய மூன்றாண்டு கால பணிக்காலம் முடியும் முன் அவரை தேடி வருகின்றனர்.
இயேசு தானாக ஒளிந்து கொள்ளவில்லை மாறாக மக்கள் கூட்டத்தின் நடுவே
மறைக்கப்படுகின்றார். எறும்புகள் இனிப்பைச்சுற்றி மொய்த்து மறைப்பது
போல இயேசுவின் இனிமையான வார்த்தைகளில் மயங்கி மக்கள் அவரைச்சுற்றி
மறைத்து இருக்கின்றனர். இருப்பினும் உறவினர்களும் தாயும் சகோதரர்களும்
அவர் இருக்கும் இடத்தைக் கண்டு கொள்கின்றனர்.
இயேசு நன்மையை விரும்பும் மக்கள் கூட்டத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றார்.
சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்து வந்த இயேசு தன்னை அம்மக்கள்
கூட்டத்தில் மறைக்கின்றார். நாம் நம்மை எங்கு மறைக்கின்றோம்? நாம்
எங்கு ஒளிந்து கொள்கின்றோம்? என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு
அழைப்பு விடுக்கின்றன.
நம் ஆதிப் பெற்றோர்கள் இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் கட்டளையை
மீறி உண்ணக்கூடாது என்று சொன்ன கனியை உண்டனர். அதானால் பயம் ஏமாற்றம்
எனும் உணர்வினால் தங்களை மறைக்க முயல்கின்றனர். எனினும் முழுதும்
மறைக்க இயலாமல் தங்களது நிர்வாணம் வெளிப்படுவதாக உணர்ந்து வருந்துகின்றனர்.
எனவே தான் ஆண்டவர் அழைத்தும் அவர் முன் வரத் தயங்குகின்றனர்.
விளைவு, ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகின்றனர். தவறு செய்யத்
தூண்டியவர்( சாத்தான்), தவறு செய்ய முனைந்தவர் ( ஏவாள்), தவறு செய்யத்
தூண்டப்பட்டவர் (ஆதாம்) என அனைவரும் ஆண்டவரின் தீர்ப்புக்கு ஆளாகின்றனர்.
நாமும் பல நேரங்களில் தவறு என்று தெரிந்தும் அதைத் துணிந்து செய்பவராக,
செய்யத் தூண்டுபவராக, தூண்டப்படுபவராக இருந்திருக்கிறோம். ஆனால்
அதற்காக அப்போது வருந்தாது , தவறுக்கு தண்டனை பெறப் போகிறோம் என்றதும்,
பயம் அச்சம், ஏமாற்றம் குற்ற உணர்வு வருத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகளின்
மத்தியில் ஒளிந்து கொள்கிறோம். நம்மை நாமே அடையாளம் காண முடியாத விதத்தில்
நமது உருவினை மாற்றிக் கொள்கிறோம் நமது ஆதிப் பெற்றோர்கள் போல.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் , பன்றியோடு சேர்ந்த கன்றும்
மலம் தின்னும் என்பதற்கிணங்க எத்தகைய உணர்வுகளால் நாம் சூழப்படுகின்றோமோ,
அதே உணர்வுடையவர்களாகவே நாம் மாறுகின்றோம் என்பது பிரபஞ்ச நியதி.
நல்ல உணர்வுகளால் சூழப்படும் போது நன்மையை அடைகிறோம். எதிர்மறை உணர்வுகளால்
சூழப்படும்போது தீமையை அடைகிறோம்.
ஆதிப்பெற்றோர்கள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டதனால்
தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகின்றனர். செய்த தவறுக்கு மன வருந்தி மன்னிப்பு
பெற எண்ணி இருந்தால் ஒருவேளை ஏதேன் தோட்டம் எழில் மாறாமல் இன்று வரை
இருந்திருக்கலாம். அவர்கள் பயம், ஏமாற்றம், எனும் உணர்வுகளில் ஒளிந்து
தங்கள் வாழ்வை அழித்தது போல நாமும் இருக்கக் கூடாது என்பதே இன்றைய
நாளில் இறைவன் நமக்கு தரும் செய்தி. நம்மை மறைக்கும் உணர்வுகளைக்
களைந்து , நம்மை பிறருக்கு வெளிப்படுத்தும் உணர்வுகளை அணிந்து
கொள்ள முயற்சிப்போம்.
கொரிந்து நகர் மக்களுக்கு அறிவுரைக் கூறும் பவுலடியார், மீண்டும்
அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை
என்று வலியுறுத்துகிறார். இந்த அறிவுரை நமக்கும் பொருந்தும். நாம்
கடவுளை அப்பா தந்தாய் என்று அழைக்கும் உரிமை பெற்ற மக்கள். தாயைப்
போல பிள்ளை நூலைப் போல சேலை, என்பர். நாம் நம் தாயாம் கடவுளின் இயல்புடைய
பிள்ளைகள். ஆனால் பல நேரங்களில் நாம் தாம் அதை உணராது செயல்படுகிறோம்.அச்சம்
கொள்வது கடவுளின் இயல்பு கொண்ட பிள்ளைகளின் குணம் அல்ல. எனவே அச்சத்தை
விடுத்து அன்போடு வாழ முயல்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்தால் மறைக்கப்படுகிறார்.
நன்மையைத் தேடி நாடி வந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். நம்மைச்சுற்றி
இருப்பவர்கள் யார்? நன்மையைப் பெற விரும்புபவர்களா? நன்மையைத் தர
விரும்புபவர்களா? என்று சிந்திக்கும் முன் நாம் அவர்களுக்கு யாராக
இருக்கின்றோம் என சிந்திப்போம். இன்றைய நற்செய்தி பகுதியில் இடம்
பெறும் இயேசுவின் செயல்களுக்கும் முதல் வாசகத்தில் இடம் பெறும் ஆதிப்
பெற்றோர்களின் செயல்களுக்கும் இடையே உள்ள ஒரு சில ஒப்புமைகளை கூறி
எனது சிந்தனைகளை நிறைவு செய்ய விளைகிறேன்.
இயேசு உண்ண நேரமின்றி மக்களுக்கு போதனை செய்கின்றார். ஆதிப்பெற்றோர்கள்
ஏதேன் தோட்டத்தில் உள்ள அனைத்துக் கனிகளோடு விலக்கப்பட்ட கனியையும்
உண்டு மகிழ்கின்றனர்.
இயேசு மக்கள் கூட்டத்தினால் சூழப்படுகின்றார். ஆதிப்பெற்றோர், தனிமையினால்
ஆட்கொள்ளப்படுகின்றனர்.
உறவினர்களும் தாயும் சகோதரர்களும் அவரைத் தேடி, உடன் அழைத்துச்
செல்ல எண்ணுகின்றனர். ஆதாம் ஏவாளும் தோட்டத்தினின்று விரட்டப்பட்டு
கடவுளால் தேடப்படுகின்றனர்.
பேய்களின் தலைவன் பெயல்செபூல் கொண்டு இவன் பேய்களை ஓட்டுகிறான் என்று
சொன்ன மறைநூல் அறிஞர்களை அழைத்து அவர்களுக்கு புரியுமாறு உவமைகள்
வாயிலாக விளக்குகின்றார். ஆதிப் பெற்றோர்களோ கட்டளைகளை மீறி தவறு
செய்து விட்டு, அதை கடவுளிடமே மறைக்கப் பார்க்கிறார்கள், கடவுள்
முன்னிருந்து மறையப் பார்க்கின்றார்கள்.
மதி மயங்கி இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறார் இயேசு. நிலத்தைப்
பயிரிட்டு உண்ண, பேறுகால வேதனை அடைந்து குழந்தை பெற தீர்ப்பிடப்படுகின்றனர்
ஆதிப்பெற்றோர்.
இவற்றில் நாம் யார் இயேசுவா? ஆதிப் பெற்றோர்களா?
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்களே என் தாயும் என்
சகோதரரும் சகோதரியும் ஆவார் என்று கூறி தன்னைப் பெற்ற தாயைப்
பெருமைப் படுத்தியவர் இயேசு. இவர் மற்ற தாய்மார்களைப் போல சாதாரண
தாய் அல்ல. இறைத்திருவுளத்தை இனிதே நிறைவேற்றும் உன்னத தாய் என்று
அங்குள்ள அனைத்து மக்கள் முன்னும் அறிக்கை விடுகின்றார். தனது
உயர்ந்த எண்ணங்களினாலும், தூய செபத்தினாலும் மிக உயர்ந்த நிலையினை
அடைந்த அன்னை மரியாள் போல நாமும் அருளிலும் அன்பிலும் வளர அருள்
வேண்டுவோம். இயேசுவின் திரு இருதய விழாவையும், அன்னை மரியாளின்
மாசற்ற இருதய விழாவையும் மகிழ்ந்து கொண்டாடிய நாம் அவர்களின் இருதய
அன்பில் சிறக்க அருள் வேண்டுவோம். நமக்குள்ளும் நம்
உணர்வுகளுக்குள்ளும் ஒளிந்து விடாது நம்மை நாமே வெளிக்கொணர்வோம்.
ஒளிய இடம்தேடாது, ஒளி வீச இடம்தேடுவோம் இறைவன் அருள் என்றும்
நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
வீட்டுக்குள் நுழைதல்!
இயேசுவின் இல்லத்திற்குள் நாம் நுழைய வேண்டுமெனில் கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும்!
அது ஒரு மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி. மாணவர்கள், மாணவியர்
என ஏறக்குறைய 63 பேர் அங்கே தங்கியிருந்தார்கள். வௌ;வேறு
நாட்டைச் சார்ந்த அவர்களைச் சேகரித்த ஒரு நிறுவனம் அவர்களைப்
பாதுகாத்து வந்தது. அங்கிருந்த ஒரு மாணவனின் பெயர்
மோங்-லி-லா. அவனுடைய சொந்த நாடு மியான்மர். அவர்களுடைய
நாட்டில் இராணுவ ஆட்சி வந்தபோது அவர்களுடைய பெற்றோர்கள் இல்லத்தை
விட்டு ஓடுகிறார்கள். சிறுவனாக இருந்த அவன் மனவளர்ச்சி
குன்றியிருந்த காரணத்தால் அவனை இல்லத்திலேயே விட்டுச்
செல்கிறார்கள். அப்படி விடப்பட்ட சிறுவன் தொண்டுநிறுவனம்
ஒன்றில் ஒப்படைக்கப்படுகிறான். தொண்டுநிறுவனம் அவனை
தாய்லாந்துக்கு அனுப்புகிறது. பின்நாளில் தன் மகன்
தாய்லாந்தில் பத்திரமாக இருப்பதைக் கேள்விப்பட்
மோங்-லி-லாவின் பெற்றோர்கள் அவனைக் கண்டு, தங்கள் இல்லம்
அழைத்துச் செல்ல விரும்பி வருகிறார்கள். அன்று காலை முதல்
தான் வித்தியாசமாக நடத்தப்படுவதையும், தனக்கு புதிய உடைகள்
வழங்கப்படுவதையும், தன் பெட்டி தயார்செய்யப்படுவதையும்
பார்த்த மோங்-லி-லா ஒன்றும் புரியாமல் நிற்கிறான். சற்று
நேரத்தில் அவனுடைய பெற்றோர் வருகிறார்கள். இவர் உன் அம்மா!
இவர் உன் அப்பா! என்று அவனுக்குச் சொல்லப்படுகிறது. அவன்
வந்து தங்களை அள்ளிக்கொள்வான் என்று அவனுடைய பெற்றோர்கள்
காத்திருக்க, அவனோ அவர்களைவிட்டுத் தள்ளிச் சென்று ஒளிந்துகொள்கிறான்.
தொண்டுநிறுவனத்தை மேற்பார்வை செய்யும் அருள்பணியாளரை ஆரத்தழுவிக்கொண்டு,
இவரே என் அம்மா! இவரே என் அப்பா! என்கிறான். அவர்களுடைய
வீட்டுக்குள் நுழைவதற்காகத் அவனை அழைத்துச் செல்ல வந்த தன்
பெற்றோரை, தன் வீ;ட்டுக்குள் வருமாறு அழைக்கிறான்
மோங்-லி-லா!
நிற்க.
மாற்கு நற்செய்தியாளர் சிறந்த கதைசொல்லி மட்டுமல்ல, நடந்ததை
அப்படியே பதிவு செய்வதிலும் சிறந்தவர். இன்றைய நற்செய்தி
வாசகத்தில் நெருடல் பகுதி (embarrassment text) ஒன்றை
வாசிக்கிறோம். அதாவது, வாசகர் அப்பகுதியை வாசிக்கும்போது
உள்ளத்தில் நெருடலை உணர்கிற பகுதி இது. ஏன் இது நெருடல் தருகிறது?
இயேசுவை அவருடைய சொந்த ஊரார், இவர் மதிமயங்கி இருக்கிறார்!
(கிரேக்கத்தில், இவருடைய மூளை இவரிடம் இல்லை! அல்லது
இவர் தனக்கு வெளியே இருக்கிறார்! அல்லது இவர் மனநலம்
குன்றியவராக இருக்கிறார்!) என்று முத்திரை பதிக்கிறார்கள்.
தங்களுடைய ஆண்டவரும் போதகருமான ஒருவரைப் பற்றி மற்றவர்கள்
இவ்வாறு குறிப்பிடுவதைக் கண்ட மாற்குவின் குழுமத்தார் நெருடலாக
இதை உணர்ந்திருப்பார்கள்.
இயேசு அவருக்கு வெளியே இருக்கிறார் என்று ஊரார் சொல்லக்
கேட்டு, வெளியே இருந்த அவரைத் தங்களுக்குள்ளே அழைத்துக்கொள்ள
விரும்பி அவரிடம் வருகிறார்கள் இயேசுவின் உறவினர். உறவினர்களின்
பெயர்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், நிகழ்வின் இறுதியில்
அவருடைய தாயும் சகோதரர்களும் என மாற்கு
குறிப்பிடுகிறார்.
அவர்களுடைய இல்லத்திற்குள் தம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தவர்களைத்
தம் இல்லத்திற்குள் வருமாறு அழைக்கிறார் இயேசு. இனி இரத்த
உறவு அல்ல, மாறாக, கடவுளின் திருவுளம் நிறைவேற்றும் இறையாட்சி
உறவே தமக்கு நெருக்கம் எனச் சொல்லி, வீட்டுக்கு வெளியே
நின்றவர்களை வீட்டுக்கு உள்ளே அழைக்கிறார் இயேசு.
இயேசு அவருக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார் எனக்
கேள்விப்பட்டு, அவரை வீட்டுக்கு உள்ளே, உறவு வட்டத்துக்குள்ளே
அழைத்துக்கொள்ள விரும்பியவர்கள், இயேசுவின் வட்டத்துக்குள்,
வீட்டுக்குள் அழைத்துக்கொள்ளப்படுகிறார்கள். இரத்த உறவு என்ற
வட்டம் மறைந்து, இறைத்திருவுளம் உறவு என்னும் புதிய வட்டம்
பிறக்கிறது.
இயேசுவின் உறவினர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்
எனில், இயேசுவின் எதிரிகள், இதே புரிதலை முன்வைத்து இயேசுவைப்
பழித்துரைக்கிறார்கள்.
இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது. பேய்களின் தலைவனைக்
கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் எனக் குற்றம் சுமத்துகிறார்கள்.
இவ்வாறாக, இயேசுவைப் பேய்பிடித்தவன் (மதிமயங்கியவன்) என்று
அழைத்ததோடல்லாமல், அவருடைய வல்ல செயல்களையும் புறக்கணிக்கிறார்கள்.
உவமைகள் வழியாக அவர்களுக்கு விளக்கம் தருகிறார் இயேசு.
தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் (வீடும்)
நிலைத்துநிற்க முடியாது வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய
வீட்டைக் கொள்ளையிட முடியாது.
சாத்தான் சாத்தானுக்கு எதிராக உடைந்த நிகழ்வை இன்றைய முதல்
வாசகத்தில் காண்கிறோம். ஆண்டவராகிய கடவுள் நம் முதற்பெற்றோரை
ஏதேன் தோட்டத்துக்குள் குடிவைக்கிறார். பாம்பின்
சூழ்ச்சியால் பெண்ணும் ஆணும் விலக்கப்பட்ட கனியை உண்கிறார்கள்.
நீ எங்கே இருக்கிறாய்? என்று மனிதனைத் தேடி வருகிறார்
கடவுள். பாம்பைச் சபிக்கிற கடவுள், உனக்கும் பெண்ணுக்கும்
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்!
என்கிறார். அன்றே, சாத்தானின் இல்லம் உடைகிறது. புதிய ஏவாளின்
(மரியா) வித்தாக வருகிற இயேசு சாத்தானின் தலையைக் காயப்படுத்துகிறார்.
சாத்தானோ அவருடைய குதிங்காலைக் காயப்படுத்த அவர்மேல்
குற்றம் சுமத்த முற்படுகிறது. இவ்வாறாக, ஏற்கெனவே பிளவுபட்ட
சாத்தானின் அரசு இனிமேல் நிலைக்க முடியாது என்றும்,
சாத்தான் என்னும் வலியவரைக் கட்டக்கூடிய ஆற்றல் தனக்கே உண்டு
என்றும் மொழிகிறார் இயேசு.
சாத்தானின் வீடு உடைகிறது. அவனுடைய அரசு வீழ்கிறது. அவனுடைய
இல்லம் கொள்ளை போகிறது. ஆக, இயேசு சாத்தானுக்கு எதிரானவராகவும்,
சாத்தானைவிட வலிமையானவராகவும் இருக்கிறார். மறைநூல் அறிஞரின்
குற்றச்சாட்டு பொய்யாகிறது. இயேசுவின் வீடு வலிமை வாய்ந்ததாக
இருக்கிறது. அதை உடைக்க யாராலும் இயலாது.
இயேசுவின் வலிமைமிகுந்த வீட்டுக்குள் நாம் நுழைவதற்கான எளிய
வழி கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், கொரிந்தியருக்கு எழுதுகிற பவுல்
(தன்நிலை விளக்க மடல்), நாம் இவ்வுலகில் குடியிருக்கும்
உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து
கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு என்கிறார்.
இவ்வுலகில் நாம் வசிக்கும் வீட்டையும் நம் உடலையும் கூடாரம்
(தற்காலிகமானது) என அழைக்கிற பவுல், நிலையான வீட்டுக்கான
எதிர்நோக்கை முன்மொழிகிறார். ஆக, பவுலைப் பொருத்தவரையில்
வீடு என்பது மறுவுலகம் சார்ந்தது, இறப்புக்குப் பின்னர்
நாம் சென்றடைவது.
பதிலுரைப்பாடல் ஆசிரியர் (திபா 130), ஆண்டவருக்காக, ஆண்டவரின்
இல்லம் திரும்புவதற்காகக் காத்திருக்கிறார்: ஆண்டவருக்காக
ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம்
காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன்
காத்திருக்கிறேன். விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கிறது.
இயேசு அவரைவிட்டு வெளியே நிற்கிறார் எனக் கேள்விப்படுகிற
அவருடைய உறவினர்கள் அவரைத் தங்களுக்குள்ளே அழைத்துக்கொள்ள
விரும்புகிறார்கள். தாம் அல்ல, மாறாக, அவர்களே அவருக்கு
வெளியே நிற்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.
நாம் நம்மைவிட்டு வெளியே நிற்கிற பொழுதுகள் எவை? நம்மையே
ஏற்றுக்கொள்ளாதபோது, தாழ்வு மனப்பான்மை, குற்றவுணர்வு
கொள்ளும்போது! பாவச் செயல்கள் பழக்கங்களாக மாற நாம் அவற்றையும்
அவை நம்மையும் பற்றிக்கொள்ளும்போது! கடவுளின் திருவுளம்
நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நம் முதற்பெற்றோர்போல அவருக்குக்
கீழ்ப்படிய மறுக்கும்போது! இயேசுவைப் பழித்துரைக்கும்போது!
தூய ஆவியாரைப் பழித்துரைக்கும்போது!
இப்படி நாம் வெளியே நிற்கிற பொழுதுகளில் நாம் வெளியே நிற்பதை
உணராமல், கடவுளுக்கு மதிமயங்கியது என்ற நிலையில் அவரோடு
கண்டும் காணாமல் உறவுகொள்கிறோம்.
நம்மைவிட்டு வெளியே நிற்கிற நம்மைத் தேடி வருகிற இயேசு, நம்
வீட்டை வெற்றிகொண்டு அவருடைய வீடாக அதை
மாற்றிக்கொள்கிறார். அங்கே நாம் அவருடைய தாயும் சகோதரர்களுமாக
மாறுகிறோம்.
இயேசுவோடு இணைந்து நாம் அமைக்கும் இல்லம் அழியாததாக,
நீடித்து நிலைக்கிற இன்பமாகத் தொடர்கிறது.
இயேசுவின் வீட்டுக்குள் நுழைதலே நம் வாழ்வின் இலக்கு!
(மனவளர்ச்சி குன்றியவர்களை, மனவளர்ச்சி குன்றியவர் என
முத்திரையிடப்படுபவர்களை இன்றைய நாளில் சிறப்பாக
நினைவில்கொண்டு அவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்களுடைய
பெற்றோர்கள், உடன்பிறந்தோர்கள், உறவினர்கள், அவர்களைப் பராமரிக்கிற
நன்மக்கள் அனைவரும் துணிவையும் பொறுமையையும் பெற்றுக்கொள்ள
அவர்களுக்காகவும் வேண்டுவோம்.)
மறையுரைச் சிந்தனை 1
யார் இயேசுவின் தாய்? யார் இயேசுவின் சகோதர, சகோதரிகள்?
கிறிஸ்மஸ் வருவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. எல்லாரும்
புத்தாடைகள்> பரிசுப் பொருட்கள் வாங்குவதுமாக மிக மும்முரமாக
இருந்தார்கள்.
பணக்காரப் பெண்மணி ஒருத்தி எல்லாரையும் போல புத்தாடைகள்
வாங்குவதற்காக ஒரு துணிக்கடைக்குச் சென்றார். துணிக்கடைக்குள்
நுழைந்த அவர், அங்கிருந்த ஆடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தார்.
தற்செயலாக அவர் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தபோது சிறுவன்
ஒருவன் கண்ணாடி வழியாக கடைக்குள் பார்ப்பதும் பின்னர் அப்படியே
முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தான். அவன் அணிந்திருந்த
ஆடை மிகவும் அழுக்குப் படிந்திருந்தது.
உடனே அவர் கடைக்கு வெளியே சென்று, சிறுவனை அழைத்துகொண்டு
உள்ளே வந்தார். பின்னர் அவர் அவனிடம், தம்பி! இந்தக் கடையில்
உனக்குப் பிடித்த ஆடைகளை எடுத்துக்கொள், பணத்தைப் பற்றிக்
கவலைப்படாதே, அதனை நான் செலுத்திவிடுகின்றேன் என்றார்.
அவனும் கடையில் தனக்குப் பிடித்த இரண்டு ஆடைகளை எடுத்துக்கொண்டார்.
வந்த வேலை முடிந்ததும், அவர் அவருக்காக எடுத்த ஆடைக்கும்
சிறுவனுக்காக எடுத்த ஆடைக்கும் உரிய பணத்தைக்
கொடுத்துவிட்டு, வெளியே நடக்கத் தொடங்கினார். சிறுவன் அவருக்குப்
பின்னாலேயே வந்தான்.
அப்போது சிறுவன் அவரிடம், உங்களிடத்தில் நான் ஒரு
கேள்வியைக் கேட்கவேண்டும் என்றான். என்ன கேள்வி, கேள்
என்று அவர் சொல்ல, சிறுவன், நீங்கள்தான் கடவுளா? என்றான்.
இல்லை, நான் கடவுளுடைய பிள்ளை என்றார். அதற்குச் சிறுவன்
அவரிடம், எனக்குத் தெரியும், ஏதோவொரு வகையில் நீங்கள் கடவுளுக்குச்
சொந்தம் என்றான்.
கடவுளின் கட்டளையை ஏதோவொரு வகையில் கடைப்பிடிக்கின்ற யாவருமே
அவருக்கு உறவினர்கள்தான் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது
நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் பத்தாம்
ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள்
இயேசுவின் உண்மையான உறவினர்களாவோம் என்னும் சிந்தனையை
நமக்கு வழங்குகின்றது. நாம் எப்படி இயேசுவின் தாயாக, சகோதர,
சகோதரிகளாக மாறுவது என்பதை இன்றைய நாளின் இறைவார்த்தையின்
வழியாக சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்குப்
போதித்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாய் மரியாவும் அவருடைய
சகோதர, சகோதரிகளும் அவரைப் பார்க்க வருகின்றார்கள். ஆனால்,
கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களால் இயேசுவை நெருங்க
முடியவில்லை. எனவே, ஆள் அனுப்பி, அவர்கள் தாங்கள் வந்த
செய்தியை இயேசுவுக்கு தெரியப்படுத்துகின்றார்கள். உடனே இயேசு
தம்மைச் சூழ்ந்திருந்தவர்களைப் பார்த்து, யார் என்னுடைய
தாய்?> யார் என்னுடைய சகோதர சகோதரிகள்? என்று
கேட்டுவிட்டு, இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோரே என் சகோதரரும், சகோதரியும்
தாயும் ஆவார் என்கிறார்.
இயேசுவின் இவ்வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவை
மரியாவை அவமதிப்பது போன்று தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல.
இறையியலாளரான பால் தில்லிச் (Paul Tillich) இந்த நிகழ்வினைக்
குறித்து குறிப்பிடும்போது, இயேசு இங்கே மரியாவை அவமதிக்கவில்லை.
மாறாக, தன்னுடைய இறையாட்சிக் குடும்பத்தை இன்னும் விஸ்தரிக்கின்றார்,
மேலும் இயேசு சொன்ன உறவுமுறை, இரத்த உறவுமுறை அல்ல, மாறாக
ஆன்மீக ரீதியான உறவுமுறை. ஆகையால், இயேசுவின் வார்த்தைகள்
மரியாவைக் காயப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது என்று எண்ணாமல்,
அவ்வார்த்தைகளை நாம் ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொள்ளவேண்டும்
என்பார்.
இயேசு கூட்டத்தினைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்,
யாராரெல்லாம் இயேசுவின் உண்மையான உறவினர், யாராரெல்லாம்
அவருடைய உறவினர் கிடையாது என்னும் உண்மையை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
அதனைக் குறித்து இப்போது பார்ப்போம்.
முதலில் யாராரெல்லாம் இயேசுவின் உறவினர் கிடையாது என்று
பார்ப்போம். அதன்பிறகு யாராரெல்லாம் அவருடைய உண்மையான உறவினர்
கிடையாது என்று பார்ப்போம்.
இயேசுவின் விழுமியங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றவர்கள்,
அவருடைய பணி இந்தப் புவியில் நடந்தேறுவதற்குத் தடையாய் இருப்போர்
ஒருபோதும் இயேசுவின் உறவினராக இருக்கமுடியாது. இன்றைய நற்செய்தியில்
இயேசு போதித்துக்கொண்டிருக்கும்போது அவரைப் பார்க்க வரும்
அவருடைய சகோதர் சகோதரிகள் இயேசு மதிமயங்கிப்
போய்விட்டார் என்று பேசிக்கொண்டதால்தான் அவரைப் பார்க்க
வருகின்றார்கள். ஒருவிதத்தில் இயேசு ஆற்றிவரும் பணிக்கு
முட்டுக்கட்டை போடுவதற்காக அவர்கள் வருகின்றார்கள். இத்தகைய
பின்னணியில்தான் இயேசு, யார் என்னுடைய சகோதர சகோதரிகள்?
என்று கேட்கின்றார். அப்படியானால், இயேசுவுக்கு ஒருவர் இரத்த
சொந்தமாக இருந்தாலும், அவர் இயேசு ஆற்றிவரும் பணிக்குத் தடையாக
இருந்தார் என்றால், அவரால் இயேசுவின் உறவினராக இருக்கமுடியாது
என்பதுதான் உண்மை.
இந்தப் பின்னணியில் நாம் பரிசேயர்களையும், சதுசேயர்களையும்
இணைத்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பரிசேயர்களும்,
மறைநூல் அறிஞர்களும் தாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்று
பெருமை பேசிகொண்டு, இறையாட்சிப் பணியைச் செய்துவந்த இயேசுவுக்கு
முட்டுக்கட்டை போட்டும், அவரைப் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக்
கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்றும் விமர்சித்துக்கொண்டு
வந்தார்கள். அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்றால், ஒருவிதத்தில்
அவர்கள் இயேசுவுக்கு உறவினர்கள். ஆனால், அவர்கள் இயேசுவுக்கும்
அவருடைய விழுமியங்களுக்கும் எதிராகச் செயல்பட்டதால், இயேசுவின்
உண்மையான உறவினர் ஆகும் பேற்றினைப் பெறத் தகுதியற்றுப்
போய்விடுகின்றார்கள். நாம் இயேசுவுக்கும் அவருடைய விழுமியங்களுக்கும்
எதிராகச் செயல்பட்டோம் என்றால், அவருடைய உறவினராக முடியாது
என்பதுதான் உண்மை.
அடுத்ததாக கடவுளின் திருவுளத்திற்கு/ அவருடைய
வார்த்தைகளுக்கு எதிராகச் செயல்படுகின்றவரும் அவருடைய
உறவினராக முடியாது. தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் ஆதாமையும்
ஏவாளையும் பார்த்து, தோட்டத்தில் இருக்கும் எல்லா
மரத்தின் கனிகளையும் உட்கொள்ளுங்கள். ஆனால், தோட்டத்தின்
நடுவே இருக்கின்ற மரத்தின் கனியை மட்டும் நீங்கள்
உண்ணாதீர்கள் என்று சொல்லி வைக்கின்றார். ஆனால், அவர்கள்
பாம்பின் பசப்பு மொழிகளில் மயங்கி, விலக்கப்பட்ட மரத்தின்
கனியை உண்கின்றார்கள். இப்படியாக அவர்கள் கடவுளின்
விருப்பத்திற்கு எதிராக, அவருடைய வார்த்தைகளுக்கு எதிராகச்
செயல்படுகின்றர்கள். இதனால் அவர்கள் கடவுளின் சினத்திற்கு
ஆளாகி, ஏதேன் தோட்டத்திலிருந்து
வெளியேற்றப்படுகின்றார்கள். நாம் இறைவனின் திருவுளத்திற்கு
எதிராகவும் அவருடைய வார்த்தைக்கு எதிராகவும்
செயல்படுகின்றபோது அவருடைய உறவினராக இருக்கவே முடியாது.
பல நேரங்களில் நாம் நம்முடைய மனித பலவீனத்தால் கடவுளின்
வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல், நம்முடைய
விருப்பத்தின்படியே நடக்கின்றோம். இப்படிச் செய்வதன்
வழியாக, நாம் கடவுள் உறவினராக மாறுகின்ற வாய்ப்பினை இழந்து
போய்விடுகின்றோம்.
யாராரெல்லாம் இயேசுவின் உண்மையான உறவினராக முடியாது என்று
இதுவரை சிந்தித்த நாம், அவருடைய உண்மையான உறவினராக
மாறுவதற்கு என்ன வழி என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
இயேசுவின் உறவினராக மாறுவதற்கு/ கடவுளின் அன்புப்
பிள்ளைகளாக மாறுவதற்கு இயேசு சொல்லும் வழி கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வதாகும். கடவுளின் திருவுளத்தை
வார்த்தைகளால் நிறைவேற்றினால் போதுமா என்றால் நிச்சயமாக
இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், மத்தேயு
நற்செய்தி 7:21 ல் இயேசு கூறுவார், என்னை நோக்கி ஆண்டவரே
ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை
என்று. ஆம், வாய்ச்சொல் வீரர்களால் ஒருபோதும் இயேசுவின்
உறவினராக முடியாது.
ஒரு காதலன் தன்னுடைய காதலிக்கு இவ்வாறு குறுஞ்செய்தி
அனுப்பினான்.. அன்பே! நான் உன்னை அதிகதிகமாக அன்பு
செய்கின்றேன். உனக்காக நான் நீரிலும் நடப்பேன்,
நெருப்பிலும் குதிப்பேன், உயர்ந்த மலையிலும் ஏறுவேன், ஏன்
ஆழ்கடலில் கூட நீந்துவேன்.
அவன் இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, கீழே
பின்வருவாறு எழுதினான், நாளை மாலை நாம் சந்திப்பதாக
முடிவு செய்திருந்தோமே, ஒருவேளை நாளை மாலை மழை பெய்தால்,
நம்முடைய சந்திப்பு இரத்து. ஏனென்றால் மழை என்னுடைய
உடலுக்கு ஒத்துக்காது. என்ன ஓர் ஆழமான காதல்!!!
நிறையப் பேர் கடவுளை அன்பு செய்வதும் இப்படித்தான்
இருக்கின்றது.. அவர்கள் வார்த்தையில் மட்டுமே கடவுளை
அன்புசெய்வதாகச் சொல்வார்கள். ஆனால், செயலில்
காட்டமார்கள். இவர்கள் எல்லாம் இயேசுவின் உறவினராக
இருக்கமுடியாது. இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்
மட்டுமே இயேசுவின் உறவினராக, அவருடைய தாயாக, சகோதர
சகோதரியாக மாறமுடியும்.
இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்ததற்கு நம்
கண்முன்னே இருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணம் அன்னை
மரியாதான். மரியா ஆண்டவரின் திருவுளத்தை அனுதினமும்
நிறைவேற்றினார், அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம்.
ஆகையால், மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டுமல்ல,
இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்ததனாலும்
இயேசுவுக்குத் தாயாகின்ற இரட்டைப் பேறு பெறுகின்றார். இது
யாருக்கும் கிடக்கப்பெறாத பேறு. நாம் இயேசுவின் இரத்த
உறவாக மாறும் பேறு கிடைக்காது. ஆனால், இறையாட்சிக்
குடும்பத்தில் அவருடைய உறவினராக முடியும் (உரோ 8:14).
ஆகையால், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக
வாழ்வோம். அதன்வழியாக இயேசுவின் உண்மையான உறவினராக
மாறுகின்ற பேறு பெறுவோம், இறையருள் நிறைவாய் பெறுவோம்.
தூய ஆவிக்கு எதிராக இழைக்கப்படும்
பாவம் மட்டும் மன்னிக்கப்படாது என்கிறது இன்றைய
நற்செய்தி.
தூய ஆவி யார் என்பதைப் புரிந்துகொண்டால் தூய
ஆவிக்கெதிராக இழைக்கப்படும் பாவம் என்ன என்பதை நாம்
எளிதில் புரிந்துகொள்ளலாம்.
தூய ஆவி யார் என்பதற்கு ஓர் அழகான விளக்கத்தை புனித
யோவான் அவர் எழுதிய நற்செய்தியில் 16-ஆம்
அதிகாரத்தில் தருகின்றார்.
தூய ஆவிக்கு மறுபெயர் உண்மை (யோவா. 16:13) அவரது பணி,
நிறை உண்மையை நோக்கி மனித இனத்தை அழைத்துச் செல்வதாகும்
(யோவா. 16:13).
இப்பொழுது தூய ஆவிக்கு எதிராக நாம் புரிகின்ற பாவம் என்ன
என்பதை நம்மால் ஓரளவு ஊகித்துக் கொள்ள முடியும்.
தூய ஆவிக்கு எதிரான மாபெரும் பாவம் பொய்யாகும். இந்த
உண்மையை திருத்தூதர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று
நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
தி.ப. 5:1-11: எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.
இல்லாதார் இல்லாத நிலை வேண்டும் எனச் சொல்லி, தங்கள்
நிலம், வீடு - ஆகியவற்றை விற்று, பணத்தைக் கொண்டு போய்
ஆதிக் _ கிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் பாதங்களில்
வைத்தார்கள். அப்படிப் பணத்தை அர்ப்பணம் செய்தவர்களில்
அனனியா, சப்பிரா என்னும் கணவன் மனைவியர் பணத்தில் ஒரு
பகுதியைத் தங்களோடு வைத்துக்கொள்ள விரும்பினர்.
நிலத்தை விற்றதில் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு ஒரு
பகுதியை மட்டும் அனனியா திருத்தூதர்களின் பாதங்களில்
வைத்தான். அப்போது பேதுரு: அனனியா, நீ நிலத்தை விற்ற
தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக் கொண்டு தூய
ஆவியாரிடம் பொய்சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை
ஆட்கொண்டதேன் (தி.ப. 5:3) என்றார். இதைக்கேட்டதும்
அனனியா விழுந்து உயிர்விட்டான். இறந்தவன் அடக்கம்
செய்யப்பட்டான்.
ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்குப் பின் அவன் மனைவி
வந்தாள். அவளும் பொய் சொன்னாள். அப்போது பேதுரு: தூய
ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ உன்
கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில்
வந்துவிட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து
செல்வார்கள் (தி.ப. 5:9) என்றவுடன் அவளும் இறந்தாள்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து தூய ஆவிக்கு எதிராக
இழைக்கப்படும் பாவம் பொய் என்பது புலனாகிறது.
பொய் உரைப்பவன் தான் பாவி என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.
ஒருவன் நான் பாவி இல்லை என்று சொல்லும் போது அவன்
பாவங்களைக் கடவுள் எப்படி மன்னிப்பார்? கடவுள்
யாரையும் மனம் வருந்தும்படி, மனம் திரும்பும்படி
பலவந்தப் படுத்துவதில்லை.
முதல் மனிதன் ஆதாம் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள
மறுத்து தன் மனைவிமீது குற்றத்தைச் சுமத்தியபோது
அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாத பாவங்களாக மாறின! உண்மை
மறைக்கப்பட அங்கே உயிர்ப்பு உதயமாகவில்லை! அவர்கள் மனம்
மன்னிக்கப்படாத சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டது!
சூழ்நிலை மாறியதால் இறைவனால் வகுக்கப்பட்ட
சூழ்நிலைக்குள் அந்த முதல் மனிதர்களால் வாழ
முடியவில்லை! இறைவன் என்னும் மரத்திலிருந்து வெட்டப்பட்ட
கிளைகளைப் போலானவர்களின் வாழ்க்கை சருகுபோல் ஆனது. இன்ப
வனத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் பட்ட பாடுகள்
என்னவென்று நமக்குத் தெரியும்!
மன்னிக்கப்படாத பாவம் - அது குணமாக்கப்படாத புற்றுநோய்
போன்றது!
எல்லா பாவங்களுக்கும் தாயாக விளங்குவது பொய்தான்! ஆதி
மனிதர்களை ஏமாற்ற தீயசக்தி பயன்படுத்திய கருவி பொய்.
பாம்பு பெண்ணிடம், நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில்
நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள்
திறக்கப்படும். நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமையை
அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும் (தொ.நூ.
3:4-5) என்றது. இப்படிப் பாம்பு கூறியது அப்பட்டமான
பொய். இப்படிப்பட்ட பொய்யால் வரலாற்றில் எத்தனை
மரணங்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை
நாமறிவோம்.
ஒரு நாள் ஆசிரியர் ஒருவர் குறும்புக்கார சிறுவன்
ஒருவனைப் பார்த்து திருடுவாயா? என்றார். திறுடமாட்டேன்
என்ற பதில் வந்தது! காப்பி அடிப்பாயா? காப்பி அடிக்க
மாட்டேன். கோள் சொல்வாயா? சொல்ல _ மாட்டேன்! -
சண்டைபோடுவாயா? போடமாட்டேன். சரி கேட்பதெற்கெல்லாம்
இல்லை என்கிறாயே, உன்னிடம் எந்தத் தீய குணமும் கிடையாதா
என்றார் ஆசிரியர். அதற்கு அந்தச் சிறுவன் அப்பப்போ
கொஞ்சம் பொய் சொல்வேன் என்றான். ஆசிரியர்
அப்படியானால் இப்பொழுது நீ சொன்னதெல்லாம் பொய்யா? என்று
கேட்டதற்கு அந்த மாணவன் சற்றும் தயங்காமல்: இருக்கலாம்
என்றான்.
ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு தனது தவற்றை ஏற்றுக்
கொள்ளும்போது அவன் பொய்யிலிருந்து உண்மைக்கு அழைத்துச் -
செல்லப்படுகிறான். அப்படி அழைத்துச் செல்லப்படும்போது
அவனது அகக்கண் சற்று மருள, புறக்கண் சற்று மிரளும்!
ஆம், உண்மையான வாழ்வு வாழ நாம் முன் வந்தால், அதாவது
நாம் பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால் துன்பங்கள்
நமக்கு வரலாம்! ஆனால் அந்தத் துன்பங்களுக்குப் பிறகு
மறைந்து நிற்கும் மனநிம்மதி என்னும் முழுமதி நமது இதய
வானிலே எழுந்து இதம் தருவது உறுதி.
பாவிகளை அழைக்க வந்தவர் இயேசு
ஒரு குருவுக்குப் பல சீடர்கள். அந்தக் குரு மிகவும்
கனிவும், கருணையும் நிறைந்தவர்! அவரிடம் ஞானம் பெற,
நன்னெறிகளை கற்றுக்கொள்ள பலர் சென்றனர்! அவரா
தங்கியிருந்த சீடர்களில் ஒருவன் திருடன். அவன்
எப்பபாதும் எதையாவது திருடிக்கொண்டிருந்தான்.
மற்ற சீடர்கள் ஒவ்வொரு முறையும் அவனைப்
பிடித்துக்கொண்டுபபோய் குருவிடம் ஒப்படைப்பார்கள்! குரு
ஒவ்வொரு முறையும் மன்னித்துவிடுவார்!
ஒருநாள் அந்தத்திருடும் குணம்படைத்த சீடரைத் தவிர, மற்ற
சீடர்கள் அனைவரும் குருவிடம் சென்று, இவனை
ஆசிரமத்தைவிட்டு துரத்திவிடுங்கள்! அப்படி நீங்கள்
செய்யவில்லை என்றால், நாங்கள் எல்லாரும் ஆசிரமத்தை
விட்டுப் போய்விடுவோம் என்றனர்.
அப்போது அந்த குரு என்ன சொன்னார் தெரியுமா? வழிகாட்டும்
குரு உங்களுக்குத் தேவையில்லை! நீங்கள் நல்லவர்கள்!
நீங்கள் வெளியில் சென்றால் சமுதாயம் உங்களை
ஏற்றுக்கொள்ளும்; ஆனால் இவனைத் தண்டிக்கும். இவன்
திருத்தப்பட வேண்டும். ஆகவ இவன் இங்கே இருக்கட்டும்,
நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டார்.
இந்தக்கதையில் வந்த குருவைப் போன்றவர்தான் நமது
ஆண்டவர் இயேசு! இன்றைய நற்செய்தி கூறுவதுபோல அவர்
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையய அழைக்க வந்தார்!
மக்களின் பணத்தைத் திருடியவர் மத்தேயு! அவர் யூதராக.
இருந்தபோதிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு அநியாயமாக
மக்களின் பணத்தை வசூலித்து அதை இஸ்ரயேலை அடிமைப்படுத்தி
வைத்திருந்த உரோமையர்களுக்குக் கப்பமாகச் செலுத்தியவர்;
சமுதாயத்தால் வெறுக்கப்பட்டவர்; அனைவராலும் பெரிய
பாவியாகக் கருதப்பட்டவர். இயேசு அவரை மன்னித்து
விட்டார்.
மத் 27: 38, லூக் 23:39-43 ஆகிய பகுதிகளில் இரண்டு
திருடர்களை கல்வாரியில் நாம் சந்திக்கின்றோம். கடவுளின்
கருணை மீது நம்பிக்கை வைத்து இயேசுவிடம் விண்ணகத்தைக்
கட்ட திருடனுக்கு இயேசு பேரின்ப வீட்டை அளிக்கின்றார்.
பாவம். என்றால் என்ன? பிறருக்கு உரிமையானதை
தனதாக்கிக்கொள்வதுதான் பாவம்! அநீதிதான் பாவம்!
நேர்மையற்ற வாழ்வு பாவம் நிறைந்த வாழ்வு!
ஆதாமையும், ஏவாளையும் பற்றி இன்றைய முதல் வாசகம்
பேசுகின்றது! அவர்கள் செய்த பாவம் என்ன? அவர்கள்
கடவுளின் கட்டளைக்குக் "கீழ்ப்பழந்திருக்க வேண்டும்!
அவர்கள் கடவுளுக்கு உரிய கீழ்ப்படிதலை தங்களுக்கு
உரியதாக்கிக் கொண்டார்கள்!
அவர்கள் கீழ்ப்படிதலைத் திருடிய திருடர்கள்! அவர்கள்
பாவிகள்தான்! ஆனால் கடவுள் அவர்களைக்
கைவிட்டூவிடவில்லை! மீட்பர் ஒருவரை அனுப்புவேன் என்ற
ஆறுதல் தரும் வாக்குறுதியை கடவுள் அவர்களுக்கு
அளித்தார்.
இயேசு பிறந்தது பாவிகளுக்காக!
இயேசு வளர்ந்தது பாவிகளுக்காக!
இயேசு வாழ்ந்தது பாவிகளுக்காக! இயேசு இறந்தது
பாவிகளுக்காக! இயேசு உயிர்த்தது பாவிகளுக்காக! இயேசு நம்
நடுவே இன்று வாழ்ந்துகொண்டிருப்பதும் பாவிகளுக்காகவ!
இந்தப் பேருண்மை நமது கண்களை இயேசுவின் பக்கம் திருப்ப
- நம்மை உந்தித் தள்ள வேண்டும்.
இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடிகளார்
நம்பிக்கையாளர்களின் தந்தை என அழைக்கப்படும்
ஆபிரகாமைப்பற்றி பேசும்போது, தமக்கு ஏறத்தாழ நூறு வயது
ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும்
செத்தவைபால் ஆற்றலற்றுப் போய்விட்டதை
எண்ணிப்பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி
தளரவில்லை. கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படேவே
இல்லை (உரா 4:19-20] என்கின்றார்.
தமது வாக்குறுதி மீது நம்பிக்கை வைப்பவர்களைக் கடவுள்
ஒருபோதும் கைவிடுவதில்லை.
இன்றைய நற்செய்தியில் இயேசு, நேர்மையாளரை அல்ல,
பாவிகளையயே அழைக்க வந்தேன் (மத் 9:13ஆ] என்கின்றார்.
இமயசுவின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து நமது
நம்பிக்கை நிறைந்த கண்களை அவர் பக்கம் திருப்புவோம்.
அப்பாது சசத்தவனைப் போல் நமது வாழ்க்கை ஆற்றலற்றுக்
கிடந்தாலும் அவர் அதை உயிர்ப்பித்து நம்மை வளமுடன்
வாழவைப்பார்.
ஞாயிறு மறையுரையின்போது தூங்கிக்
கொண்டிருந்த ஓர் அம்மாவை எழுப்பிலிடும்படி அந்த
அம்மாவின் பக்கத்தில் இருந்த அவரின் மகளைப்
பங்குத்தத்தை கேட்டார். அதற்கு அச்சிறுமி, என் அம்மா
நல்லாத்தான் கோவிலுக்கு வத்தாங்க; நீங்ககான் அவர்களை
உங்க பிரசங்கத்தால் தூங்க வைச்சிட்டீங்க; நீங்கதான்
எழுப்பிவிடுங்க என்றாள். ஆலயத்திற்கு நல்ல நிலையில்
வருபவர்களைத் தூங்கு வைப்பவர் பங்குத்தத்தை!
கடவுள் இவ்வுலகை நல்ல நிலையில்தான் படைத்தார். அவர்
படைத்த அனைத்தும் தன்றாக, மிகவும் நன்றாக இருக்கக்
கண்டார். என்று தொடக்கதூல் கூறுகிறது (தொநூ 1:31),
அப்படியானால் பாவம். எப்படி இவ்வுலகில் நுழைந்தது?
இக்கேள்விக்கு இன்றைய முதல் வாசகத்தில் மனித. குலத்தின்
முதல் பெண் வாயிலிருந்து வரும். பதில்: பாம்பு என்னை
ஏமாஜ்நியது. எனவே அலகையின் வஞ்சகத்தால்தான் பாவமும்
அதன் வழியாகச் சாவும், மற்ற எல்லாத். துன்பங்களும்
வந்தன. அலகையின் பொறாமையால் சாவு இவ்வுலகில் நுழைந்தது
(சாஞா 2:24).
கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது அலகைமின் செயல்களைத்
தொலைக்கவே (1 யோவா 3:8) என்று கூறுகிறார் புனித
யோவான்... கிறிஸ்து அலகையை 'இவ்வுலகின் தலைவன்'
என்றழைக்கிறார். ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவின்மேல்
அலகைக்கு எந்த அதிகாரமும் - இல்லை என்பதையும்
ஆணித்தரமாகக் கூறுகின்றார் (யோவா 14:30) மேலும்
இவ்வுலகத் தலைவன் வெளியே துரத்தப்படுவான்" (யோவா
12:31) என்றும் ஐயத்திற்கு இடமின்றி அறிவிக்கிறார்.
இன்றைய தற்செய்தியில் கிறிஸ்து பேய்களை ஓட்டுவதைக் கண்ட
மறைநூல்அறிஞர்கள், கிறிஸ்து பேய்களின் தலைவனைக் :
கொண்டே பேய்களை ஓட்டுகின்றார் என்று கூறி அவருடைய வல்லர்
- செயல்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுடைய
செயல். தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றம்
என்கிறார் கிறிஸ்து. தூய ஆவி உண்மையின் ஆவியானவர்;
உண்மையை மறுப்பவர்கள். அலகையுடன் கூட்டணி
வைத்துக்கொண்டவர்கள் ஆவர்.
அலகையினள். உண்மையான இயல்பை. கிறிஸ்து
வெளிப்படுத்துகிறார்: அலகை பொய்யன், பொய்மைக்குப்
பிறப்பிடம் (யோவா 8:44). ஆதிப் பெற்றோர்களை வஞ்சித்த
அலகை: இன்றும் பொய்களைப் பரப்பி மக்களைக் கெடுத்துக்
கொண்டிருக்கின்றான். கிறிஸ்துவையே அவன் ஏமாற்றத்
துணிந்து மூன்றுமுறை சோதித்தான். ஆனால் கிறிஸ்து அகன்று
போ சாத்தானே (மத் 4:10) என்று கூறி அவனை விரட்டினார்.
இன்று அலகை இருக்கிறதா? பேய், பிசாசு, பூதங்கள் என்று
சொல்வதெல்லாம் உண்மையா? திலம், தீர், நெருப்பு, காற்று,
வானம். ஆகியவை பஞ்சபூதங்கள் எனப்படுகின்றன.
பஞ்சபூதங்கள் எவை? என்ற கேள்விக்கு ஒரு பள்ளி மாணவிகள்
எழுதிய பதில்: 1) ஆங்கில. ஆசிரியை: 2) கணக்கு ஆசிரியை: 3)
வேதியல் ஆசிரியை; 49 இயற்பியல் ஆசிரியை; 5) சமூக
அறிவியல் ஆசிரியை.
இன்று பேய்கள் மனித வடிவில் வருகின்றன. அலகை, அலகை
வடிவத்தில் வராமல் மனித வடிவத்தில் வந்துதான்
மனிதர்களை வஞ்சித்து, கொடிகட்டிப் பறக்கின்றது. சிலுவைச்
சாவை ஏற்க. வேண்டாம் என்று தனக்கு அறிவுரை வழங்கிய
பேதுருவிடம் கிறிஸ்து, கூறுகிறார்: என் கண்முன்
தில்லாதே சாத்தானே. நீ எனக்குத். தடையாய் இருக்கிறாய்
(மத் 15:23), அவ்வாறே, யூதாசையும் கிறிஸ்து. அலகை என்று
முத்திரை குத்துகிறார்: "பன்னிருவராகிய உங்களை, தான்
தேர்ந்து கொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன்.
அலகையாய் இருக்கிறான் (யோவா 6:70). எனவே, யார் யார்
கடவுளுடைய திட்டத்திற்கு எதிராகச் செயல்படுகின்றார்களோ
அவர்கள் அனைவரும் அலகையின்.. முகவர்கள். என்பது
வெள்ளிடைமலை.
பொய்மைக்கு ஊற்றாகிய அலகையின் செயல்களைத் தொலைக்க
வேண்டுமென்றால் நாம். உண்மையை, மூழு உண்மையைப் பேச
வேண்டும். மலைப் பொழிவில் கிறிஸ்து நாம். எப்போதும்
உண்மை பேச வேண்டும், உண்மைக்கு எதிரான அனைத்தும்
அலகையிடமிருந்து வருகிறது என்று கூறுகிறார்: "நீங்கள்.
பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை'
யென்றால் "இல்லை! எனவும் சொல்லுங்கள். இதைவிட
மிகுதியாகச் சொல்லுவது எதுவும் தீயோனிடத்திலிருந்து
வருகிறது (மத் 5:37)
உண்மையை... அறியுங்கள்: உண்மை உங்களுக்கு,
விடுதலைஆளிக்கும் (யோவா 8:32) என்று கூறிய கிறிஸ்து, தமது
இறுதி வேண்டலில் தமது தந்தையிடம், உண்மையினால் அவர்களை
உமக்கு அர்ப்பணமாக்கியகுளூம். உமது வார்த்தையே உண்மை
(யோவா 17:17) என்று மன்றாடினார்.
இன்று ஒவ்வொரு துறையிலும் பொய் கொடிசட்டிப் பறக்கிறது.
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்துகின்றனர்.
ஆனால், ஒருசில நாள்களிலே குட்டு வெளுத்து விடுகிறது ஒரு
பெண்ணின் நீண்ட கூந்தலில் மமங்கி அவரை ஓர் இளைஞர்
காதலித்தார் அவருடைய நீண்ட கூந்தலை அவர் எப்படி
பராமரிக்கிறார் என்று அவரிடம் கேட்டார். அப்பெண்
கூறினார் : காஸையில் கூந்தலுக்கு சோப்பு போட்டு
குளிப்பேன். நண்பகல் சீயக்காய் பவுடர் போட்டுக்
குளிப்பேன்; மாலை "ஷாம்போ போட்டு குளிப்பேன். இரவில்
கழற்றி. ஆணியில் மாட்டி விடுவேன், அவர் கூந்தல்
செயற்கைக் கூந்தல்!
மற்றத் துறைகளில் மட்டுமல்ல, வழிபாட்டிலும் பொய் இடம்
பெறுகிறது. எசாயாவை மேற்கோள் காட்டி கிறிஸ்து கூறினார்
இம்மக்கள் என்னை உதட்டினால் போற்றுகின்றனர், இவர்கள்
உள்ளமோ என்னைவிட்டு வெரு தொலைவில் இருக்கிறது (மத்
15.8), இந்துக் கோவிலுக்குச் செல்பவர்களில் ஒருசிலர்
'அம்பாளைப்' பார்க்கச் செல்கின்றனர்; வேறு சிலரோ
*தம்பாளைப்' பார்க்கப் போகின்றனர்! நாமோ
மெய்யடியார்களாகக் கடவுளை அவாது உண்மை இயல்புக்கு ஏற்ப
உள்ளத்தில் வழிபடுவோம் (யோவா 4:23).
அக இருளை அகற்றவும் புற இருளை அகற்றவும் சிறந்த விளக்கு
பொய்யா விளக்கு; அதுவே உண்மையான விளக்கு.
எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே.வினக்கு" (குறள் 299)
விமார்சனங்களுள் இரண்டு வகை
மின்விளக்கைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா
எடிசனுக்கு அன்று மொழி
. எல்லாம் தயார் நிலையில்.
உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஆலயத்தில்
கூடிவிட்டனர். திருவழிபாட்டு நேரம் நெருங்க, குருவும்
பீடத்துக்கு வந்துவிட்டார். எங்கு தேடியும் மாப்பிள்ளை
எடிசனைக் காணோம். இறுதியில் அவரது ஆய்வுக்கூடத்தில்
இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த அவரை
அழைத்தார்கள். அவரோ யாருக்குத் மொழி
? என்று
கேட்டாராம். அந்த அளவுக்குத் தனக்குத் மொழி
என்பதையே மறந்து ஆய்வில் மூழ்கிப்போய்
இருந்திருக்கிறார்.
கொள்கையிலும் குறிக்கோளிலும் வேரூன்றியவர்கள் அதிலேயே
மூழ்கிவிடுவார்கள். இயேசு இறையாட்சிப்பணியில் காட்டிய
ஆர்வமும் ஈடுபாடும் அடிப்படைத் தேவைகளான உணவையும்
உடல் நலத்தையும் கூட மறக்கச் செய்தது. 12 வயதிலேயே
எருசலேம் திருக்கோவிலில் ஏன் என்னைத் தேடினீர்கள்?
நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க
வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? (லூக். 2:49)
என்று தன் தாய் கன்னி மரியாவைப் பார்த்தே கேட்டவர்தானே
நம் இயேசு.
எதிரிகளின் மோதல்களை மட்டுமல்ல, தன் உறவினர்களின்
எதிர்ப்புக்களையும் கூடக் கடந்து, வரலாற்றில் தடம்
பதித்த சாதனைத் தலைவனாகத் தன்னை இயேசு
வெளிப்படுத்தினார் என்றால் காரணம் அவரது தெளிந்த
சிந்தனையும் உயர்ந்த கொள்கைப் பிடிப்பும்
அனைத்திற்கும் மேலாக இலட்சியத்திற்காக தன்னையே இழக்கத்
துணியும் ஈடுபாடுமே! அவர் மதி மயங்கி இருக்கிறார்
என்று மக்கள் பேசிக் கொண்டார்களாம். அதைக்
கேள்விப்பட்டு அவருடைய உறவினர்கள் அவரைப் பிடித்துக்
கொண்டு வரச் சென்றார்களாம். எருசலேமிலிருந்து வந்த
மறைநூல் அறிஞர்கள் இவனைப் பெயல்சேபூல்
பீடித்திருக்கிறது என்றும் பேய்களின் தலைவனைக் கொண்டே
இவன் பேய்களை ஓட்டுகிறான் என்றும் சொல்லிக்
கொண்டிருந்தனராம் (மார்க். 3:21,22).
எத்தனை விமர்சனங்கள்! விமர்சனங்கள் ஒருவரை வாழவும்
வைக்கும் வீழவும் வைக்கும். காய்க்கின்ற மரத்துக்கே
கல்லெறி கிடைக்கும். விமர்சனங்களுக்குப் பயந்தால்
விடுதலைப் பணிகள் எப்படி நடக்கும்? விடுதலை
இயக்கங்கள், நாம் பெற்ற சுதந்திரங்கள் எல்லாம் கண்
துஞ்சாது பசி நோக்காது கருமமே கண்ணாகி உழைத்த தியாகிகள்
தங்கள் வியர்வையிலும் கண்ணீரிலும் வளர்த்தெடுத்த கனி
தரும் மரங்களாகும்.
இன்றும் உலகம் இரவிலும் ஒளிரும் உலகமாக உருவாகக்
காரணமாக இருந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர்
பள்ளியில் படித்த காலத்தில், இவன் மக்குப் பையன்.
என்ன சொன்னாலும் இவன் மரமண்டையில் ஏறாது. உதவாக்கரை:
என்று தன் ஆசிரியர்களாலேயே பள்ளியிலிருந்து
விரட்டப்பட்டவர். மனம் ஒடிந்து விடாமல் தனது தாயின்
அரவணைப்பு, மற்றும் ஊக்குவிக்கும் வார்த்தைகளால்
உரமூட்டப்பட்ட எடிசன் தனது தேடலைத் தொடர்ந்தார். இன்று
உலகிலேயே அதிகக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்பவர்
அவர்தான். 1093 பொருள்களுக்கான காப்புரிமை அவரிடம்
இருக்கிறதாம்!
பத்திரிகை உலகில் பணியாற்றிக் கொண்டிருந்தார் அந்த
மனிதர். புதிது புதிதாக ஏதாவது ஒர் ஐடியாவை உருவாக்க
வேண்டும் என்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
அவரும் அதில் உற்சாகமாக ஈடுபட்டார். ஆனால் உன்னுடைய
ஐடியாக்கள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாய் இருக்கின்றன
என்று சொல்லி வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
அந்த நபர் அவர்களுடைய விமர்சனத்தைப் பொருள்படுத்தவில்லை.
அந்தச் சிறுபிள்ளைத்தனத்தை வைத்தே மிகப் பெரிய
வெற்றியைப் பெற்றார். அவர்தான் வால்ட் டிஸ்னி. மிக்கி
மெளஸ்' குறித்து இன்று அறியாதவர் யார்?
சிறுபிள்ளைத்தனம் என்று விமர்சிக்கப்பட்டவர் இன்று
வரலாற்றின் அரியணையில் அன்றோ ஏறி அமர்ந்திருக்கிறார்!
பிறரின் விமர்சனத்தைத் தலையில் ஏற்று தனது
தன்னம்பிக்கையை உடைத்திருந்தார் எனில் இன்று 'வால்ட்
டிஸ்னி: என்னும் உலகப் பிரமாண்டம் இல்லாமலே
போயிருக்கும்!
விமர்சனங்கள் இரண்டு வகை. ஒன்று நம்மை
"ஆக்கப்பூர்வமாய்ச் சிந்திக்க வைக்கும், செயல்படத்
தூண்டும் விமர்சனங்கள். இவற்றைக் கவனமுடன் கேட்டு
நம்மையே ஆய்வுக்குட்படுத்துவது பயனளிக்கும். இன்னொரு வகை
குதர்க்க விமர்சனங்கள். இவை பெரும்பாலும்
தன்னம்பிக்கையற்ற மனிதர்களிடமிருந்தே வரும். அடுத்தவர்களை
மட்டம் தட்டுவதில் இன்பம் காண்பவர்கள் இவர்கள். ஒரு
வகையில் தங்களுடைய இயலாமையை மறைக்க அடுத்தவர்களைக்
காயப்படுத்திப் பார்ப்பவர்கள். இவர்களுடைய விமர்சனங்களை
அப்படியே அள்ளிக் குப்பைத் தொட்டியில் வீசி
எறியுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நிருணயிக்க
வேண்டியவர்கள் நீங்கள்தான். மற்றவர்கள் அல்ல!
இவனைப் பெயல்செபுல் பிடித்திருக்கிறது... பேய்களின்
தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஒட்டுகிறான் (மார்க்.
3:22) என்று மறைநூல் அறிஞர் பழித்தபோது. இயேசு எப்படி
அறிவார்ந்த பதில் தந்து விமா்சனங்களைச் சந்திக்கிறார்!
தகுந்த பதில் தந்தது மட்டுமல்ல, மிகக் கடுமையான
எச்சரிக்கையும் விடுக்கிறார். உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும்
எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார். ஆனால் மக்களுடைய
மற்ற பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள்
அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும் (மார்க்.
3:28-29).
தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும்
எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார் என்ற இயேசுவின்
கூற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், தூய ஆவியார்
யார் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
தூய ஆவியாருக்கு மறுபெயர் உண்மை என்று சொல்லலாம். அவரது
பணி நிறை உண்மையை நோக்கி மனித இனத்தை அழைத்துச்
செல்வதாகும். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்
வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை
வழிநடத்துவார் (யோ. 16:13).
இந்தப் பின்னணியில் தூய ஆவியாருக்கு எதிராக
இழைக்கப்படும் பாவம் என்பது பொய்மையாகும். இதனை
உணர்த்தும் தி.ப. 5:1-11இல் நாம் காணும் நிகழ்வு.
அனனியா என்னும் பெயர் உள்ளவரையும் அவருடைய மனைவி
கப்பிராவையும் பார்த்து பேதுரு, அனனியா நீ நிலத்தை விற்ற
தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக் கொண்டு தூய
ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை
ஆட்கொண்டதேன்?... நீ மனிதரிடம் அல்ல, கடவுளிடம் அல்லவா
பொய் சொன்னாய் என்று கண்டிக்கிறார். சாவே
அவர்களுக்குக் கிடைத்த உடனடித் தண்டனை. புண்படுத்தும்
வகையில் பொய்யான விமர்சனம் செய்பவர்களுக்கும்
காத்திருப்பது இந்தச் சோகம் தானே!
இயேசுவிடம் இருந்த ஆற்றலைப் பரிசேயரால் மறுக்க
முடியவில்லை. ஆனால் மக்கள் செல்வாக்குக் கூடுவதைத்
தடுக்கவும் இயலவில்லை. எனவே இயேசுவிடம் வெளிப்படும்
சக்தி அலகையின் சக்தி என்று பொய்ப் பிரச்சாரத்தில்
ஈடுபடுகின்றன. உண்மையும் நன்மையும் எங்கிருந்தாலும்
அதைப் போற்றி ஏற்க ஆதயத்தில் தூய்மை வேண்டும்.
இல்லையென்றால் நமக்குள் வளரும் பொறாமைத் தீ நம்மையே
எரித்துக் கொன்றுவிடும் என்பது நடைமுறை ஞானம்.
பிறருக்காகப் பாடாத உலகம் பிறர் பாடுவதைக் குறை
சொல்கிறது. பிறருக்கு நன்மை செய்யாத உலகம் பிறர் நன்மை
செய்வதைத் தடுக்கிறது. இருளை ஒழித்து ஒளியை ஏற்ற
முனைகிறார் உலகின் ஒளியானவர்!
எதற்கும் மயங்காது தயங்காது எவருக்கும் அடிமையாகாது
இறையாட்சிப் பணியில் ஈடுபடுவோம். உண்மையைச் சொன்னால்,
நன்மையைச் செய்தால் துன்பம் தான் பரிசாகக்
கிடைக்கும். புயலும் மழையும் ஒரு மலரைச் சிதைத்து
விடலாம். அதன் விதையை அழிக்க முடியாது.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
"என்னதான் ஆயிற்று பாவத்திற்கு?"
கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார் ஒரு
குரு. அவருடைய சீடர்களாக, மூன்று இளையோர், அந்த ஆசிரமத்தில்
வாழ்ந்து வந்தனர். அம்மூன்று சீடர்களும் ஒருநாள் அவரிடம்
சென்று, "குருவே, கடந்த ஓராண்டளவாய், நாங்கள் ஒவ்வொரு
நாளும் இந்த நதியின் புனித நீரில் மூழ்கி எழுந்துள்ளோம்.
தற்போது, இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும்
மூழ்கி எழுவதற்கு விரும்புகிறோம்" என்று சொன்னார்கள். அவர்கள்
ஏன் அவ்வாறு முடிவெடுத்தனர் என்று கேட்ட குருவிடம், "கங்கை
எங்கள் பாவங்களைக் கழுவினாலும், இன்னும் மற்ற நதிகளில்
மூழ்கி எழுந்தால், எங்கள் பாவங்கள் முற்றிலும் கழுவப்படும்
என்று நினைக்கிறோம்" என்று பதில் சொன்னார்கள்.
அவர்களது புனித யாத்திரைக்கு அனுமதி வழங்கிய குரு, அவர்கள்
புறப்படும் நேரத்தில், அவர்களிடம் ஒரு பாகற்காயைக்
கொடுத்தார். ஏன் என்று புரியாமல், குருவைப் பார்த்த சீடர்களிடம்,
"நீங்கள் ஒவ்வொரு நதியிலும் மூழ்கி எழும்போது, இந்தப் பாகற்காயையும்
நீரில் அமிழ்த்தி, கொண்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
புனித யாத்திரை முடிந்து திரும்பிவந்த சீடர்கள், பாகற்காயை
குருவிடம் கொடுத்தனர். அவர் அதை வாங்கி, சிறு, சிறு துண்டுகளாக
வெட்டி, சீடர்களிடம் கொடுத்து, "இது எல்லா புனித நதிகளிலும்
மூழ்கி எழுந்த காய். எனவே, சாப்பிடுங்கள்" என்று சொன்னார்.
அதைச் சாப்பிட்ட சீடர்கள் அனைவரும், "என்ன குருவே! இந்தப்
பாகற்காய் இவ்வளவு கசக்கிறதே!" என்று முகம் சுழித்தனர்.
குரு அவர்களிடம், "எத்தனை புனித நதிகளில் அமிழ்த்தி எடுக்கப்பட்டாலும்,
பாகற்காய் தொடர்ந்து கசப்பாகத்தான் இருக்கும். நீங்களும்,
எத்தனை புனித நதிகளில் மூழ்கி எழுந்தாலும், உங்கள் உள்ளங்களில்
மாற்றங்கள் இல்லையெனில், பாவங்கள் கரையாது" என்று
கூறினார்.
பாவப்பரிகாரம் என்ற பெயரில், யாத்திரைகள் செல்வது, புனித
நீராடுவது, உடலை வருத்திக்கொள்வது, கோவிலுக்குக் காணிக்கை
செலுத்துவது, தான தர்மங்கள் செய்வது, என்று நாம்
மேற்கொள்ளும் முயற்சிகள் எண்ணிலடங்கா. இவை அனைத்தையும்
செய்தபின், நம் உள்ளம், தனக்குப் பழக்கமான, விருப்பமான, சுயநலச்
சுகங்களை மீண்டும், தேடிச்சென்றால், பாவம் தொடர்ந்து நமக்குள்
தங்கிவிடும். மனிதர்களாய் பிறந்த அனைவரும் வாழ்வில் எதிர்கொள்ளும்
'பாவம்' என்ற எதார்த்தத்தைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நாம்
அழைக்கப்பட்டுள்ளோம்.
கார்ல் மென்னிஞ்ஜர் (Karl Menninger), அமெரிக்க ஐக்கியநாட்டில்
வாழ்ந்த புகழ்பெற்ற மனநல மருத்துவர். மனநலத்திற்கும் பாவத்திற்கும்
உள்ள நெருங்கியத் தொடர்பை நன்கு உணர்ந்த மென்னிஞ்சர் அவர்கள்,
1973ம் ஆண்டு, "என்னதான் ஆயிற்று பாவத்திற்கு?" (Whatever
Became of Sin?) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார்.
இந்நூலில் அவர் கூறும் ஒரு சில கருத்துக்கள், நம் ஞாயிறு
சிந்தனைக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
மென்னிஞ்ஜர் கூறுவது இதுதான்... கடந்தகாலத்தில், 'பாவம்'
என்ற சொல், மனித வாழ்வின் பல அம்சங்களில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு
வந்தது. காலம் செல்ல, செல்ல 'பாவம்' என்ற சொல், வேறு பல
சொற்களாக உருமாறியது. 'பாவம்' என்ற அடிப்படை உண்மை மாறாமல்
இருந்தாலும், அதற்கு நாம் கொடுத்துவரும் பல்வேறு
மாற்றுப்பெயர்கள், 'பாவத்தை'ப் பற்றிய நம் எண்ணங்களையும்,
உணர்வுகளையும் மாற்றிவருகின்றன.
எடுத்துக்காட்டாக, முதல், மற்றும் 2ம் உலகப் போர்களின்போது
நிகழ்த்தப்பட்டக் கொடுமைகள், குறிப்பாக, வதை முகாம்கள்,
'தேசப்பற்று' என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டன. அந்நிய
நாடுகளை ஆக்கிரமிக்கும் இராணுவ வீரர்களில் பலர், அந்நாட்டுப்
பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியபின், தாங்கள்,
தங்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்ததால்
அவ்வாறு நிகழ்ந்தது என்று கூறினர். 'தேசப்பற்று'
மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிதல் என்ற காரணங்கள், பாவங்களுக்கு
தரப்பட்ட மாறுவேடங்கள்.
இவ்வாறு, எடுத்துக்காட்டுகளுடன், தன் கருத்துக்களை வலியுறுத்திக்
கூறும் மென்னிஞ்சர் அவர்கள், பாவம் என்ற உண்மையின் ஆழத்தைக்
குறைப்பதில், அரசுகள் பெரும் பங்கு வகித்துள்ளன என்றும்
கூறியுள்ளார்.
'பாவம்' என்ற சொல்லுக்குப் பதில், 'குற்றம்' என்ற சொல்லை
அரசுகள் அறிமுகப்படுத்தின. குற்றங்களுக்கு, அரசுகளும்,
நீதிமன்றங்களும் தண்டனைகள் வழங்கத் துவங்கியபோது, ஒருவர்
செய்த தவறு, பாவமா என்று சிந்திப்பதற்குப் பதில், அது, சட்டப்படி
குற்றமா, இல்லையா என்ற கேள்வியே மேலோங்கியது. பாவத்திற்குப்
பதில் சொல்லவேண்டிய ஒருவரது மனசாட்சி, புறந்தள்ளப்பட்டு,
குற்றத்திற்குப் பதில் சொல்லவேண்டிய நீதிமன்ற சாட்சிகள்
முக்கியத்துவம் பெற்றனர். பாவத்தை பல்வேறு ஒப்பனை சொற்களால்
உருமாற்றி, அதைப்பற்றி சிந்திக்கவிடாமல் நம்மை
திசைமாற்றும் வழிகளை, அரசுகளும், ஏனைய சமுதாய நிறுவனங்களும்
செய்துள்ளன. இவற்றின் தவறான தாக்கங்களிலிருந்து விலகி
நின்று, பாவத்தை, நேருக்கு நேர் சந்திக்கவும், சிந்திக்கவும்,
இன்றைய ஞாயிறு வழிபாட்டில், நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
.
தனி மனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் பாவம் என்ற இருளுடன்
வாழப்பழகிக் கொண்டோம். நமது செய்தித்தாள்களைத் திறந்தால்
போதும், அல்லது, நம் தொலைக்காட்சியைப் பார்த்தால் போதும்,
பாவ இருளின் அவலமான முகங்கள் ஒவ்வொரு நாளும் நம்மை வேதனையில்
நிறைக்கின்றன.
இந்தியாவில், ஏப்ரல் மாதத்தில், இரு கொடுமைகள் வெளிச்சத்திற்கு
வந்தன. காஷ்மீர் மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் இரு
சிறுமிகளுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகள், நமது சமுதாயத்தில்
பாவம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சத்திற்குக்
கொணர்ந்தன. காஷ்மீரில், அசிஃபா பானோ என்ற 8 வயது
சிறுமியின் மீது நடத்தப்பட்ட கொடுமைகளும், கொலையும், தற்போது
உலகறிந்த பாவங்களாகிவிட்டன. இந்தப் பாவங்கள், ஒரு கோவிலில்
வைத்து நடத்தப்பட்டன என்பதையும், கோவில் பொறுப்பாளரும், காவல்
துறையைச் சார்ந்தவர்களும் இக்கொடுமைகளைச் செய்தனர் என்பதையும்
அறியும்போது, பாவத்தின் மிக, மிக அருவருப்பான முகங்களை நம்மால்
காணமுடிகிறது. சிதைந்து சின்னாபின்னமான சிறுமி அசிஃபாவின்
உடல், சனவரி மாதமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், ஏப்ரல்
மாதம் வரை அக்கொடுமை வெளிவராமல் ஏன் மறைக்கப்பட்டது என்பதைச்
சிந்திக்கும்போது, நமது ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும்
பல்வேறு பாவங்களின் ஆதிக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சிறுமி அசிஃபா, கால்நடைகளைப் பராமரிக்கும் நாடோடி இனத்தைச்
சேர்ந்தவர் என்பதும், இவரைப்போல, பல பெண்கள் அம்மாநிலத்தில்
அடிக்கடி பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி, கொல்லப்படுகின்றனர்
என்பதால், இது முக்கியமான செய்தி அல்ல என்பதும், இந்தக்
கொடுமை வெளிவராமல் போனதன் காரணங்களாக ஊடகங்களால் அலசப்படுகின்றன.
வன்முறைகளைப் பற்றிய அறிக்கை, குறிப்பாக, பெண்களுக்கு எதிராக
நிகழும் வன்முறைகளைப் பற்றிய அறிக்கை, ஒவ்வொரு நாளும் இடம்பெறும்
வானிலை அறிக்கையைப் போல நமக்குப் பழக்கமாகிவிட்டது என்று
சொல்லி, நம்மையே சமாதானப்படுத்திக்கொள்வது, ஒட்டுமொத்த சமுதாயத்தின்
பாவத்தை வெளிக்கொணர்கிறது.
இன்னும் சற்று ஆழமாக ஆய்வு செய்தால், 'பாவம்' என்ற உணர்வே,
நம் சமுதாயத்தில் தொலைந்து போய்விட்டதைப்போல் தெரிகிறது.
உண்மையிலேயே, 'பாவம்' தொலைந்துபோகவில்லை. அதை, பல்வேறு வடிவங்களில்
கண்டு சலிப்படைந்துவிட்ட நாம், பாவத்தைப் பற்றிய உணர்வுக்கு
மரத்துப்போய்விட்டோம்.
இந்த நிலையை, ஓர் எடுத்துக்காட்டின் வழியே புரிந்துகொள்ள
முயல்வோம். கொதிக்கும் நீரில், ஒரு தவளையைப் போட்டால், அது,
துள்ளி குதித்து வெளியே தாவும். அதே தவளையை, குளிர்ந்த
நீருள்ள ஒரு பாத்திரத்தில் போட்டால், அது, ஆனந்தமாக நீந்தி
வரும். அவ்வேளையில், அந்தப் பாத்திரத்தை நாம் மெதுவாகச்
சூடாக்கினால், அந்த நீரின் வெப்பம் சிறிது சிறிதாகக்
கூடும். உள்ளே நீந்திவரும் தவளை, வெப்பமாகிவரும் நீருக்கு,
கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிப் போவதால், தொடர்ந்து
நீந்திக்கொண்டிருக்கும். வெப்பம் கூட, கூட தவளை மெதுவாக செயலிழக்கும்.
ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தில், தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.
அவ்வேளையில், அந்தத் தவளை, அந்த சூட்டில் முற்றிலும் செயலிழந்து
இறந்துபோகும்.
இதேபோல், சமுதாயத்தில் திரும்பும் இடமெல்லாம் பாவம் கண்ணில்
படுவதால், ஒருவேளை இதுதான் மனித இயல்போ என்ற பாணியில் எண்ணத்
துவங்குகிறோம். பாவங்களின் சக்திக்கு முன் செயலிழந்து,
சிந்திக்கவும் மறந்து, மௌனமாகிறோம்.
பல வேளைகளில், நாம் செய்த தவறுகள் வெளிப்படும்போது, அவற்றிற்கு
முழுப் பொறுப்பேற்பதற்குப் பதில், நாம் வளர்ந்த சூழலை, நம்மைப்
பெற்றவர்களை, வளர்த்தவர்களை, மற்றவர்களை, நம் தவறுகளுக்குப்
பொறுப்பு என்று சுட்டிக் காட்டுகிறோம். இந்தப் போக்கு, இன்று
நேற்றல்ல, மனிதர்கள் தோன்றிய காலத்திலிருந்தே நம்மிடையே ஊறிப்போன
பழக்கமாகத் தெரிகிறது. இன்றைய முதல் வாசகம், இந்தப் பழக்கத்தைப்
படம்பிடித்துக் காட்டுகிறது. (தொடக்க நூல் 3:9-15) கடவுள்
தடை செய்திருந்த பழத்தை ஆதாம் ஏன் சாப்பிட்டார் என்று
கேட்கும் இறைவனிடம், "நீர் தந்த பெண் கனியை எனக்குக்
கொடுத்தாள்" என்று, ஆதாம், ஏவாளைக் குறை சொல்கிறார். ஏவாளை
இறைவன் கேட்கும்போது, "பாம்பு என்னை ஏமாற்றியது" என்று
பாம்பின் மீது பழி சுமத்துகிறார். கடவுள் ஒருவேளை பாம்பிடம்,
ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டிருந்தால், பாம்பு, "நீர்
என்னை அவ்விதம் படைத்துவிட்டீர்" என்று கடவுள் மீதே பழியைத்
திருப்பியிருக்கும். ஆதாம், ஏவாள் காலம் துவங்கி, வரலாற்றில்,
கோடான கோடி குற்றங்களை, பாவங்களை, தவறுகள் என்றுணர்ந்து,
பொறுப்பேற்று, அவற்றைத் திருத்தும் வழிகளைத் தேடுவதற்குப்
பதில், பொறுப்பைத் தட்டிக்கழித்து, தப்பிக்கும் வழிகள் அதிகம்
பேசப்பட்டன. இன்றும் பேசப்படுகின்றன.
பாவத்தில் ஊறி, சுகம் கண்டிருக்கும் இவ்வுலகில், மிக அரிதாக,
சில உன்னத மனிதர்களை நாம் சந்திக்கும் வேளையில், இப்படியும்
ஒருவரால் வாழமுடியுமா என்ற வியப்பு எழுகிறது. பல வேளைகளில்,
இந்த வியப்பு, விரைவில் மறைந்து, அவர், ஏதோ ஒரு மறைமுக காரணத்திற்காக
நல்லவர்போல் நடிக்கிறார் என்று சிந்திக்கத் துவங்குகிறோம்.
உன்னத மனிதர்கள், ஆர்வத்துடன், நற்செயல்களில் ஈடுபடும்போது,
அவர்கள் மதிமயங்கி உள்ளனர் என்று சொல்லவும் இவ்வுலகம் தயங்குவதில்லை.
இத்தகையைச் சூழலை இயேசு எதிர்கொண்டார். அதையே இன்றைய நற்செய்தி
கூறுகிறது. நாசரேத்தில் அமைதியாக தச்சுவேலை செய்துவந்த இளைஞர்
இயேசு, தன் பணிவாழ்வில் அடியெடுத்து வைத்ததும், 'அவர் மதி
மயங்கி இருக்கிறார்' (மாற்கு 3:21) என்ற வதந்திகள் பரவின.
இயேசு, உண்ணாமல், உறங்காமல் தன் பணிகளில் ஈடுபட்டதை தவறாக
பொருள்கொண்டு, அவரை மீண்டும் நாசரேத்துக்கு அழைத்துச்
சென்று, நல்ல புத்தி புகட்டவேண்டும் என்ற ஆதங்கத்துடன்,
உறவினர்கள், அவரைத் தேடிச் சென்றதையும், இன்றைய நற்செய்தியில்
வாசிக்கிறோம்.
இத்தனை எதிர்ப்புக்கள், மறைமுகத் தாக்குதல்கள், வதந்திகள்
சூழ்ந்தாலும், தன் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தன்
பணி என்பதையும், அவ்வாறு நிறைவேற்றுபவரே தன் 'சகோதரரும்,
சகோதரியும், தாயும் ஆவார்' (மாற்கு 3:35) என்பதையும் இயேசு
அழுத்தந்திருத்தமாய் இன்றைய நற்செய்தியில் கூறியுள்ளார்.
பாவம் என்ற உணர்வையே மழுங்கடிக்கும்வண்ணம், உலகில் பரவிவரும்
தீய சக்திகளுடன் சமரசம் செய்யாமல், அவற்றை எதிர்த்து
நிற்கும் துணிவையும், இறைவனின் திருவுளத்தைப் புரிந்து
நிறைவேற்றும் தெளிவையும் நாம் பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.
அவ்விதம் வாழ்ந்தால், இயேசுவின் குடும்பத்தில் நாமும் ஒருவராக
இணைக்கப்படுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே
என் சகோதரரும், சகோதரியும் தாயும் ஆவார்.
இறைவார்த்தையை அன்றாடம் வாசிக்கின்றோம்,
தியானிக்கின்றோம். அப்படிப்பட்ட வார்த்தை நம்முடைய
வாழ்வாக மாறுகின்றதா? என்பதை சிந்திக்க நமக்கு அழைப்பு
விடுக்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையே செய்தார். ஆனால் அவருக்கு
கிடைத்த பெயர்களை பாருங்கள்.
குடிகாரன், பெருந்தீனிக்காரன், பேய்பிடித்தவன்,
மதிமயங்கியவன் என்று பட்டம் சூட்டினார்கள்.
ஆண்டவரின் பார்வையில் அருள்நிறைந்தவராகவும் மக்கள்
பார்வையில் பேறுபெற்றவராகவும் உயர்த்துகின்றார் அன்னை
மரியாவை.
இதற்கு முழுமுதல் காரணம் அன்னை மரியா இறைவார்த்தைக்கு
செவிமடுத்தார்.
ஆகவேதான் கடவுள் அவரை உயர்த்தி பேறு பெற்றவராக்கினார்.
விவிலியத்தில் சில மனிதர்களை பார்க்கிறோம். கடவுளின்
வார்த்தையை கடைபிடித்தார்கள். தங்கள் வாழ்வில்
செயல்படுத்தினார்கள். பேறு பெற்றவர்கள் ஆனார்கள்.
நோவா - இறைவார்த்தையை கேட்டார்; அதை கடைபிடித்தார்.
அவரால் அவரது குடும்பமே காப்பாற்றப்பட்டது.
ஆபிரகாம் - கடவுளின் வார்த்தையை கேட்டார்,
ஆசீர்வதிக்கப்பட்டார். கடவுள் அவர் வழிமரபை பெருக
செய்தார்.
புனிதர்கள், திருத்தூதர்கள் - இறைவார்த்தையை கேட்டனர்.
அவ்வார்த்தையின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
நாமும் பேறுபெற்றவர்களாய், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய்,
இயேசுவின் உறவினராக மாற வேண்டும் என்றால் அவருடைய
வார்த்தையை நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.
கடவுளின் திருவுளம் என்ன என்பதை அறிவோம். அதன்படி நம்
வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
யாக்கோபுக்கு எழுதிய கடிதம் 1:22-ல் வாசிப்பதை போல
இறைவார்த்தையை கேட்கிறவர்களாக மட்டும் இல்லாமல் அதன்படி
செயல்படுகிறவர்களாயும் வாழ வரம் வேண்டி திருப்பலியில்
வரம் வேண்டுவோம்.