✠ புனிதர் விக்டர் ✠ (St. Victor of
Marseilles) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை
/
july-
21) |
✠ புனிதர் விக்டர் ✠ (St. Victor of Marseilles)
மறைசாட்சி:
(Martyr)
பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
இறப்பு: கி.பி. 290
மார்செய்ல்
(Marseille)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருநாள்: ஜூலை 21
பாதுகாவல்:
கேபின் தயாரிப்பாளர்கள் (Cabinetmakers), அரவையாளர்கள் (Millers),
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள்;
மின்னலுக்கு எதிராக
புனிதர் விக்டர், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி
ஆகிய திருச்சபைகளால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார்.
இவர் சிலை வழிபாடுகளை மறுத்த காரணத்தால் மறைசாட்சியாக கொல்லப்பட்டவர்
ஆவார்.
புனிதர் விக்டர், மார்செய்ல் (Marseille) நகரில், ஒரு ரோம இராணுவ
அதிகாரியாக பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. இவர், சிலை
வழிபாடுகளை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இவர் "ஆஸ்டியரிஸ்" (Asterius) மற்றும்
"யூட்டிசியஸ்" (Eutychius) எனப்படும் இரண்டு ரோம நிர்வாக அதிகாரிகளின்
முன்பு கொண்டுவரப்பட்டார். பின்னர், அவர்கள் அவரை ரோமப் பேரரசன்
"மேக்சிமியனிடம்" (Emperor Maximian) அனுப்பினார்கள். பின்னர்,
தெருக்களில் அலைந்து, அடித்து, இழுத்துச்செல்லப்பட்ட அவர்,
சிறையிலெறியப்பட்டார். அங்கே சிறையில், அவர் "லோங்கினஸ்" (Longinus),
அலெக்ஸாண்டர் (Alexander), மற்றும் "ஃபெலீசியன்" (Felician) ஆகிய
மூன்று ரோம வீரர்களை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றினார். பின்னர்
அவர்களும் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். ரோமன் கடவுளான
"ஜூபிடர்" (Jupiter) சிலைக்கு தூபமிட மறுத்த பிறகு, விக்டர்
தனது காலால் அதை உதைத்துத் தள்ளினார். கடும் சினமுற்ற பேரரசன்
மேக்சிமியன், அவரை ஒரு மைல் கல்லினடியில் இட்டு கொள்ளுமாறு உத்தரவிட்டான்.
ஆனால், அந்த மைல் கள் சிதறுண்டு போனது; விக்டருக்கு ஒன்றுமாகவில்லை.
அதன் காரணமாக, அவர் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
புனிதர் விக்டரும், அவரால் கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றப்பட்ட
ரோம வீரர்களான "லோங்கினஸ்" (Longinus), அலெக்ஸாண்டர்
(Alexander), மற்றும் "ஃபெலீசியன்" (Felician) ஆகிய மூவரும்,
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் கொல்லப்பட்டனர்.
நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர் "ஜான் கேசியன்" (Saint
John Cassian) என்பவர், இவர்கள் மூவரும் கொல்லப்பட்ட குகையின்
மேலே ஒரு துறவற (Monastery) மடாலயத்தை கட்டி எழுப்பினார்.
பிற்காலத்தில் இது, பெனடிக்டின் மடாலயமாகவும் (Benedictine
abbey), "சிறு பேராலயமாகவும்" (Minor Basilica) ஆனது. இதுவே
புனிதர் விக்டரின் மடாலயமாகும் (Abbey of St Victor).
புனிதர் விக்டர் மற்றும் அவருடன் மரித்த மூன்று ரோம படை வீரர்களான
"லோங்கினஸ்" (Longinus), அலெக்ஸாண்டர் (Alexander), மற்றும்
"ஃபெலீசியன்" (Felician) ஆகியோரின் நினைவுத் திருநாள், ஜூலை மாதம்
21ம் நாளாகும்.
புனிதர் விக்டர், "எஸ்டோனியா" (Estonia) நாட்டின் தலைநகரான
"டல்லின்" (Tallinn) நகரின் பாதுகாவல் புனிதராவார்.
|
|
|