Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் சிம்போரோசா ✠(St. Symphorosa)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 18)
 ✠ புனிதர் சிம்போரோசா ✠(St. Symphorosa)

 மறைசாட்சி :
(Martyr)

பிறப்பு : --

இறப்பு : கி.பி. 138
டிபூர், (டிவோலி), இத்தாலி
(Tibur (Tivoli), Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்கிய திருத்தலம் :
புனித ஏஞ்செலோ, பேஸ்செரியா, ரோம்
(Sant'Angelo in Pescheria, Rome, Italy)

நினைவுத் திருநாள் : ஜூலை 18

பாதுகாவல் :
டிவோலி, இத்தாலி
(Tivoli, Italy)

புனிதர் சிம்போரோசா, ஒரு கிறிஸ்தவ புனிதராக வணங்கப்படுகின்றவர் ஆவார். பாரம்பரியங்களின்படி, ரோமப் பேரரசன் "ஹட்ரியானின்" (Roman Emperor Hadrian) ஆட்சி முடிவில் (கி.பி. 117138) தமது ஏழு மகன்களுடன் இத்தாலியின் டிபூர் (Tibur) நகரில் (தற்போதைய "டிவோலி" (Tivoli), "லாஸியோ" (Lazio), "இத்தாலி" (Italy) மறைசாட்சியாக மரித்தார்.

பேரரசன் ஹட்ரியான் (Emperor Hadrian), தனக்காக பெரும் பணச் செலவில் ஒரு ஆடம்பர மாளிகையைக் கட்டி முடித்திருந்தான். அதனை ரோம கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக பலிகளைக் கொடுக்க ஆரம்பித்திருந்தான். அவனுக்கு ரோம கடவுளிடமிருந்து பின்வரும் மறுமொழி கிடைத்திருந்தது.

"உமது பேரரசிலுள்ள சிம்போரோசா என்னும் விதவைப் பெண்ணால் எமது அமைதி தொலைந்துவிட்டது. அவள் அவர்களது கடவுளுக்கு (கிறிஸ்துவுக்கு) செய்யும் புகழ்ச்சியும் அவளுடைய (கிறிஸ்தவ) விசுவாசமும் எங்களுக்கு சித்திரவதையாக உள்ளன. அவளையும் அவளது ஏழு மகன்களையும் எமக்கு பலியாக நீர் தரவேண்டும். அப்படிச் செய்தால், நாம் நீ வேண்டுவதெல்லாம் தருவோம்."

சிம்போரோசாவை கொல்ல ஏனைய அரசர்கள் எடுத்திருந்த முயற்சிகள் தோல்வியடைந்திருந்த நிலையில், ஹட்ரியான் சிம்போரோசாவை அவர்களது கடவுளர்களின் கோவிலான "ஹெர்குலிஸ்" கோவிலுக்கு (Temple of Hercules) இழுத்து வரச் செய்தான். பலவித துன்புறுத்தல்களின் பின்னர், சிம்போரோசாவின் கழுத்தில் ஒரு பாறாங்கல்லைக் கட்டி, "இத்தாலியின், லசியோ" (Lazio, Italy) பிராந்தியத்திலுள்ள "அனியோ" (Anio River) நதியில் எறிந்தனர்.

மறுநாள் சிம்போரோசாவின் ஏழு மகன்களையும் கொண்டுவரச் செய்த ஹட்ரியான், தமது ரோம கடவுளர்களை வழிபடுமாறு பலவிதங்களிலும் அவர்களை துன்புறுத்தினான். ஆனால் எதற்கும் அவர்கள் மசியாததால், அவர்களனைவரும் வெவ்வேறு விதமாக சித்திரவதை செய்யப்பட்டு, ஏழு விதமாக கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் குழியில் வீசப்பட்டு மூடப்பட்டனர்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா