✠ புனிதர் பல்லடியஸ் ✠(St. Palladius) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை / July 07) |
✠ புனிதர் பல்லடியஸ் ✠(St. Palladius)
✠ஆயர் :(Bishop)
✠பிறப்பு : கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
✠இறப்பு : கி.பி. 457-461
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
புனிதர் பல்லடியஸ், அயர்லாந்து (Ireland) நாட்டின் முதல்
கிறிஸ்தவ ஆயர் ஆவார். புனிதர் பேட்ரிக்"கிற்கு (Saint Patrick)
முந்தைய இவர், பின்னர் பல்வேறு ஐரிஷ் மரபுகளில்
இணைந்திருந்தார்.
பல்லடியஸ், "கௌல்" (Gaul) மாநிலத்தின் உன்னத குடும்பங்களைச்
சேர்ந்தவர் ஆவார். இக்குடும்ப வகையறாவைச் சேர்ந்த பலர், "கௌல்
திருச்சபையில்" (Church of Gaul) பல உயர் பதவிகளை வகித்தவர்கள்
ஆவர். இவரது தந்தையார் பெயர், "எக்ஸுபெரன்ஷியஸ்" (Exuperantius
of Poitiers) ஆகும். இவருடைய தந்தை, "அர்ல்ஸ்" (Arles) நகரில்
கி.பி. 424ம் ஆண்டு நடந்த ஒரு இராணுவ கலகத்தில்
கொல்லப்பட்டார். கிறிஸ்தவ எழுத்தாளராகிய "ப்ராஸ்பர்", (Prosper
of Aquitaine), பல்லடியஸ் ஒரு திருத்தொண்டர் என்று
எழுதுகிறார். மேலும் சில சரித்திரவியலாளர்கள், இவர் புனிதர்
"ஜெர்மானுசின்" (St Germanus) திருத்தொண்டர் என்கின்றனர்.
ஆயினும் இவர் ரோம் நகரின் திருத்தொண்டர் (Deacon of Rome) என்ற
பெரிய பதவியை வகித்திருக்க சாத்தியங்கள் அதிகம் என்கின்றனர்.
இவருக்கு மொழி
ஆகி, ஒரு பெண் குழந்தையும் இருந்தது. இவரை
தமது நண்பரென்றும் இளம் உறவினரென்றும் ரோம அரசவை கவிஞரான
"நமஷியனஸ்" (Namatianus) விவரிக்கிறார். மனைவியையும்
குழந்தையையும் தம்மிடமிருந்து விடுவித்த இவர், குழந்தையை அதே
தீவிலிருந்த ஒரு பள்ளியில் ஒப்படைத்தார். 408/ 409ம் ஆண்டு,
சிசிலியில் (Sicily) துறவு வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.
சற்றேழத்தால 415ம் ஆண்டு இவர் குருத்துவ அருட்பொழிவு
செய்விக்கப்பட்டார். கி.பி. 418 முதல் 429ம் ஆண்டு வரையான கால
கட்டத்தில் இவர் ரோம் நகரில் "திருத்தொண்டர் பல்லடியஸ்"
(Deacon Palladius) என்ற பெயருடன் வாழ்ந்தார். பிரிட்டன்
மக்களை (Britain) கத்தோலிக்க விசுவாசத்திற்கு மனம் திருப்பும்,
வழிகாட்டும் பணிகளைச் செய்வதற்காக "ஔக்செர்" (Bishop of
Auxerre) ஆயரான "ஜெர்மானசை" (Germanus) அனுப்புமாறு
திருத்தந்தை "முதலாம் செலஸ்டின்" (Pope Celestine I) அவர்களை
வலியுறுத்தும் பொறுப்பேற்றார்.
431ம் ஆண்டு, இவர் அயர்லாந்து நாட்டின் கிறிஸ்தவ விசுவாசிகளின்
ஆயராக நியமிக்கப்பட்டார். திருத்தந்தை "முதலாம் செலஸ்டின்"
(Pope Celestine I) இவருக்கு அருட்பொழிவு செய்வித்தார்.
அயர்லாந்தின் "கர்சொன்" (U Garrchon) என்ற இடத்தில் இறங்கிய
பல்லடியஸ், புனிதர் பேட்ரிக் (St. Patrick) அவர்களுக்கு
முன்னதாகவே மறை பரப்பும் பணியை தொடங்கியதாக ஐரிஷ்
எழுத்தாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவரை தடை செய்த
"லெய்ன்ஸ்டர்" அரசன் (King of Leinster), அவரை வடக்கு
பிரிட்டனுக்கு (North Britain) திருப்பி அனுப்பினான். ரோம்
நகரிலிருந்து பல்லடியஸுடன் நான்கு துணைவர்கள் உடன்
வந்திருந்தனர். அவர்களில் "சில்வெஸ்டர் மற்றும் சோலினஸ்"
(Sylvester and Solinus) ஆகிய இருவரும் அயர்லாந்திலேயே தங்கி
விட்டனர். அவருடன் பிரிட்டன் வரை வந்த "அகஸ்டினஸ் மற்றும்
பெனடிக்டஸ்" (Augustinus and Benedictus) ஆகிய இருவரும் அவரது
மரணத்தின் பின்னர் தமது சொந்த நாட்டுக்கே திரும்பினர்.
கி.பி. 431ம் ஆண்டு, அயர்லாந்திலிருந்து கிளம்பிய பல்லடியஸ்,
வடக்கு பிரிட்டனின் ஸ்காட்லாந்து வந்தடைந்தார். அங்கே அவர்
சுமார் 20 வருடங்கள் மறை பரப்பு பணியாற்றியதாக ஸ்காட்லாந்து
திருச்சபையின் பாரம்பரியங்கள் கூறுகின்றன.
இவர் மரித்த தேதி நிச்சயமாக யாருக்கும் தெரியவில்லை. வெவ்வேறு
சரித்திர ஆசிரியர்கள் வெவ்வேறு தேதிகளையும் காரண
காரியங்களையும் கூறுவதால் அதில் ஒரு குழப்பமே நீடிக்கிறது. |
|
|