Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மேரி மடெலின் போஸ்டெல் ✠(St. Marie-Madeleine Postel)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 16)
 ✠ புனிதர் மேரி மடெலின் போஸ்டெல் ✠(St. Marie-Madeleine Postel)

 மறைப்பணியாளர் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரிகள் (Sisters of Christian Schools) சபையின் நிறுவனர் :
(Religious and Founder of Sisters of Christian Schools)

பிறப்பு : நவம்பர் 28, 1756
பார்ஃப்ளூர், மான்சே, ஃபிரான்ஸ் இராச்சியம்
(Barfleur, Manche, Kingdom of France)

இறப்பு : ஜூலை 16, 1846 (வயது 89)
செயிண்ட்-சாவூர்-லெ-விக்கோம்ட், மான்சே, ஃபிரெஞ்சு இராச்சியம்
(Saint-Sauveur-le-Vicomte, Manche, French Kingdom)

ஏற்கும் சமயம் : கத்தோலிக்க திருச்சபை

முக்திப்பேறு பட்டம் : மே 17, 1908
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X)

புனிதர் பட்டம் : மே 24, 1925
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள் : ஜூலை 16

பாதுகாவல் : கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரிகள் (Sisters of Christian Schools)

புனிதர் மேரி மடெலின் போஸ்டெல், ஒரு பிரெஞ்சு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரும் "கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரிகள்" (Sisters of Christian Schools) எனும் அமைப்பின் நிறுவனருமாவார். தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபை (Third Order of Saint Francis) உறுப்பினரான இவர், ஃபிரெஞ்சு புரட்சிக்குப் (French Revolution) பிறகு பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். சுமார் 300 குழந்தைகளின் கல்வியை மேற்பார்வையிடும் பணியையும் செய்தார். புரட்சியின்போது, தமது உயிருக்கு நேரக்கூடிய பெரும் ஆபத்தையும் மீறி, கலைக்கப்பட்ட தமது பள்ளியை வீடாக மாற்றி, தப்பியோடித் திரிந்த கத்தோலிக்க பாதிரியார்களுக்கு அடைக்கலம் தருவதற்கு உபயோகித்தார்.

"ஜூலி ஃபிரான்காய்ஸ்-கேத்தரின் போஸ்டல்" (Julie Franoise-Catherine Postel) எனும் இயற்பெயர் கொண்ட இவர், "ஜீன் போஸ்டல்" (Jean Postel) எனும் மீனவ தந்தைக்கும், "தெரெஸ் லெவல்லாய்ஸ்" (Thrse Levallois) எனும் தந்தைக்கும், ஃபிரான்ஸ் இராச்சியத்தின் "பார்ஃப்ளூர்" (Barfleur) எனும் நகரில், கி.பி. 1756ம் ஆண்டு, நவம்பர் மாதம், 28ம் நாளன்று பிறந்தார்.

தமது ஆரம்பகால கல்வியின் பின்னர், வடமேற்கு ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள "வலோன்ஸ்" (Valognes) நகரில் உள்ள "பெனடிக்டின் அருட்சகோதரியரின்" (Benedictine nuns) மேற்பார்வையின்கீழ் தமது கல்வியை தொடர்ந்தார். அங்கேதான், மத வாழ்க்கையில் இணைந்து கடவுளை சேவிப்பதற்கான தமக்கு விடப்பட்ட அழைப்பை அவர் உணர்ந்தார். தமது இந்த கனவில் ஒரு படி மேலே தூய்மையாக இருக்க அவர் ஒரு தனிப்பட்ட சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

கி.பி. 1774ம் ஆண்டில் பார்ஃப்ளூர் (Barfleur) நகரில், புதிய ஆட்சியை ஆதரிக்க விரும்பாத மக்களின் சிறுமிகளுக்காக ஒரு பள்ளியை நிறுவினார். இது ஃபிரெஞ்சு புரட்சியின் போது மறைவான ஆன்மீக நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியது, புரட்சியின் தொடக்கத்திலேயே இந்த பள்ளி மூடப்பட்டது. மோதல்கள் தொடர்ந்ததால், ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையை தனது வீட்டில் வைத்திருக்க அவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது, மேலும் சில சமயங்களில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்காக அவர் அதனை எடுத்துச் சென்றார். பலமுறை அவர் சந்தேக வட்டத்தினுள் விழுந்தாலும், ஒருபோதும் அவர் குற்றம்சாட்டப்படவில்லை. அவர் தனித்து விடப்பட்டார்.

புரட்சியின் முடிவில் அவர் "செர்போர்க்" (Cherbourg) நகரில், சுமார் 300 குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் மறைக்கல்வி (Catechism) கற்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டார். கி.பி. 1798ம் ஆண்டு, அவர் தூய ஃபிரான்சிஸ்கன் சபையில் இணைந்து சத்தியப்பிரமாணங்களை ஏற்றுக்கொண்டார். பின்னர், கி.பி 1807ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8ம் நாளன்று, "செர்போர்க்" (Cherbourg) நகரில் "கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரியர்" (Sisters of the Christian Schools) எனும் அமைப்பினை நிறுவினார். கி.பி. 1832ம் ஆண்டு, "செயின்ட்-சாவூர்-லெ-விக்கோம்ட்" (St-Sauveur-le-Vicomte) நகரில், கைவிடப்பட்டிருந்த பள்ளி ஒன்றினை ஏற்று, அதனை தனது தலைமையகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்வரை இவர் உருவாக்கிய சபையானது சிறிய வெற்றியையே பெற்றிருந்தது. சந்தித்தார், பின்னர் அதுவே சபையின் வளர்ச்சியைத் தூண்டியது. மறைமாவட்ட அளவிலான ஒப்புதலை ஆயரிடமிருந்து பெற்றது. பின்னர், கி.பி. 1859ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 29ம் தேதி, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களிடமிருந்து திருத்தந்தையர் பாராட்டுக்குரிய ஆணையை (Papal decree of Praise) பெற்றது. ஆனால், முழு அளவிலான திருத்தந்தையின் ஒப்புதலை மிகவும் காலதாமதமாக, கி.பி. 1901ம் ஆண்டே பெற்றது. கி.பி. 1837ம் ஆண்டுவரை, தூய ஃபிரான்ஸிஸின் மூன்றாம்நிலை சபையின் சட்டதிட்டங்களுக்கு (Rule of the Franciscan Third Order) கட்டுப்பட்டிருந்த இச்சபை, பின்னர் (De La Salle Brothers) "டி லா சலே சகோதரர்களின்" சட்டதிட்டங்களுக்கு மாறியது.

கி.பி. 1846ம் ஆண்டு, ஜுலை மாதம், 16ம் நாளன்று மரித்த இவரது சபையானது, "ரோமானியா" (Romania), "மொஸாம்பிக்" (Mozambique) ஆகிய நாடுகளில் தமது மறைசேவையை தொடர்ந்தது. 2005ம் ஆண்டில், உலகளவில் 69 வெவ்வேறு இடங்களில் 442 மறைப்பணியாளர்களை கொண்டிருந்தது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா