✠ புனிதர் ஜஸ்டின் டி ஜேகொபிஸ் ✠(St. Justin
de Jacobis) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை/
July 31) |
✠ புனிதர் ஜஸ்டின் டி ஜேகொபிஸ் ✠(St. Justin
de Jacobis)
✠ஆயர் :
(Bishop)
✠பிறப்பு : அக்டோபர் 9, 1800
சேன் ஃபிலே, போடேன்ஸா, நேப்பில்ஸ் அரசு
(San Fele, Potenza, Kingdom of Naples)
✠இறப்பு : ஜூலை 31, 1860 (வயது 59)
ஸுலா, செமெணவி கெஇஹ் பஹ்ரி, எரிட்ரீ
(Zula, Semenawi Keih Bahri, Eritrea)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : ஜூன் 25, 1939
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)
✠புனிதர் பட்டம் : அக்டோபர் 26, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
✠நினைவுத் திருநாள் : ஜூலை 31
✠பாதுகாவல் :
மறைப்பணியாளர்கள் (Missionaries)
புனிதர் ஜஸ்டின் டி ஜேகொபிஸ், ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க
ஆயரும் (Italian Roman Catholic Bishop), "புனிதர் வின்சென்ட்
டி பவுல்" (Vincent de Paul) நிறுவிய ரோமன் கத்தோலிக்க சமுதாய
குருக்கள் மற்றும் சகோதரர்களின் திருத்தூதுப் பணிவாழ்வின்
சபையின் (Congregation of the Mission) உறுப்பினருமாவார். இவர்
பின்னாளில், எத்தியோப்பியாவின் துணை ஆயராகவும் (Vicar
Apostolic in Ethiopia), "நிலோபோலிஸ்" நகரின் "பட்டம் மட்டுமே
கொண்டிருக்கிற" (Titular Bishop of Nilopolis) ஆயருமாவார்.
இவர், "கியஸ்டினோ டி ஜேகோபிஸ்" (Giustino de Jacobis) என்றும்
அறியப்படுகின்றார்.
கியஸ்டினோ செபஸ்டியனோ பஸ்குவேல் டி ஜேகோபிஸ் (Giustino
Sebastiano Pasquale de Jacobis) எனும் இயற்பெயர் கொண்ட
"கியஸ்டினோ டி ஜேகோபிஸ்", 1800ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம்
தேதி, நேப்பில்ஸ் அரசின் (Kingdom of Naples), போடேன்ஸா
(Province of Potenza) பிராந்தியத்திலுள்ள "சேன் ஃபிலே" (San
Fele) நகரில் பிறந்தவர் ஆவார்.
1818ம் ஆண்டு, அக்டோபர் மாதம், பதினேழாம் தேதி, நேப்பில்ஸ்
(Naples) நகரிலுள்ள "திருத்தூதுப் பணிவாழ்வு சபையில்"
(Congregation of the Mission) இணைந்தார். 1820ம் ஆண்டு,
அக்டோபர் மாதம், 18ம் தேதி, தமது சத்திய பிரமாணங்களை ஏற்றார்.
1824ம் ஆண்டு, ஜூன் மாதம், 12ம் தேதி, தென் இத்தாலியின்
(Southern Italy) "அபுலியா" (Apulia) பிராந்திய தலைநகரான
"பிரிண்டிசி" (Brindisi) நகரில், குருத்துவ அருட்பொழிவு
பெற்றார். "ஓரியா" (Oria) மற்றும் "மோனோபோலி" (Monopoli)
நகர்களில், ஆத்மாக்களின் கவனிப்பில் சில நேரம் கழித்த பிறகு,
முதலில் "லெஸ்சே" (Lecce) நகரிலும், அதன்பின்னர் "நேப்பில்ஸ்"
(Naples) நகரிலும் தலைமை குருவானார்.
1839ம் ஆண்டு, "எத்தியோப்பியா" (Ethiopia) நாட்டின்
"திருத்தூது தலைமை" (Prefect Apostolic) நியமனம் பெற்றார்.
அங்கே கத்தோலிக்க பணிகளின் அடித்தளத்தை ஒப்படைத்தார்.
ஏறக்குறைய ஒரு தசாப்தம் எத்தியோப்பியாவில் தமது உழைப்பின்
பெரும் வெற்றியைப் பெற்றபின், 1847ம் ஆண்டு, "நிலோபோலிஸ்"
நகரின் "பட்டம் மட்டுமே கொண்டிருக்கிற" (Titular Bishop of
Nilopolis) ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், குறுகிய
காலத்திலேயே எத்தியோப்பியாவின் துணை ஆயராக (Vicar Apostolic in
Ethiopia) நியமிக்கப்பட்டார்.
உள்ளூர் எதியோப்பியன் திருச்சபையில் (Local Ethiopian Church),
கிறிஸ்தவர்களுக்கு எதிரான சிறைத்தண்டனைகள், நாடு கடத்துதல்
மற்றும் இன்னபிற சித்திரவதைகள் நடந்துகொண்டிருக்க, இவர்
மட்டும் எண்ணற்ற கத்தோலிக்க மறைப்பணிகளை
நிறுவிக்கொண்டிருந்தார்.
எத்தியோப்பியன் கத்தோலிக்க திருச்சபை (Ethiopian Catholic
Church) மற்றும் "எரிட்ரீன்" கத்தோலிக்க திருச்சபை (Eritrean
Catholic Church) ஆகியவற்றின் துவக்கங்களைத் தோற்றுவிக்கும்
ஒரு பூர்வ குருத்துவத்திற்கான பயிற்சி மற்றும் செயல்பாட்டு
கல்விக்காக, வடக்கு எத்தியோப்பியாவின் (Northern Ethiopia)
முன்னாள் பிராந்தியமும், தற்போதைய "டிக்ரே" (Tigray Region)
பிராந்தியத்தின் ஒரு பாகமுமான "அகமே" (Agame) எனுமிடத்திலும்,
"அகேலே குசே" (Akele Guzay) பிராந்தியத்திலும் குருத்துவ
பள்ளிகளை கட்டினார்.
புனிதர் ஜஸ்டின் டி ஜேகொபிஸ், 1860ம் ஆண்டு மரணமடைந்தார்.
|
|
|