Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜான் வால் ✠(St. John Wall)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 12)
 ✠ புனிதர் ஜான் வால் ✠(St. John Wall)
 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகள்:
(Forty Martyrs of England and Wales)

பிறப்பு : 1620
பிரெஸ்டொன், லேன்கஷைர், இங்கிலாந்து
(Preston, Lancashire, England)

இறப்பு : ஆகஸ்ட் 22, 1679
வோர்செஸ்டர், இங்கிலாந்து
(Worcester, England)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholicism)

முக்திபேறு பட்டம் : 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம் : அக்டோபர் 25, 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலம் :
டௌவை, ஃபிரான்ஸ்
(Douai, France)

நினைவுத் திருநாள் : ஜூலை 12

புனிதர் ஜான் வால், ஒரு ஆங்கிலேய கத்தோலிக்க ஃபிரான்சிஸ்கன் துறவி (English Catholic Franciscan friar) ஆவார். இவர், கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

வடமேற்கு இங்கிலாந்தின் "லேன்காஷைர்" (Lancashire) பிராந்தியத்தின் "பிரெஸ்டன்" (Preston) நகரில் பிறந்த இவர், தமது இளமையில் "டௌவை" எனுமிடத்திலுள்ள (தற்போதைய ஃபிரான்ஸ்) "ஆங்கிலேய இறையியல் கல்லூரியில்" (English College, Douai) இணைந்து இறையியல் கற்றார். கி.பி. 1645ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தாயகம் திரும்பிய இவர், கத்தோலிக்கர்களுக்காக திருப்பலி நிறைவேற்றியதுடன், திருத்தந்தையருக்கு விசுவாசமாகவும் இருந்தார். "டௌவை" (Douai) திரும்பிய இவர், ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையில் (Order of Friars Minor) இணைந்து, "புனிதர் அன்னாவின் துறவி ஜோச்சிம்" (Friar Joachim of St. Ann) எனும் ஆன்மீக பெயரையும் ஏற்றார். விரைவிலேயே புகுமுக துறவியரின் தலைவராக (Master of novices) நியமனம் பெற்றார்.

கி.பி. 1656ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு திரும்பிய இவர், "வோர்கெஸ்டெர்ஷர்" (Worcestershire) நகரில் குடியேறினார். அங்கே அவர் "அரசு இலக்கணப் பள்ளியின்" (Royal Grammar School Worcester) ஆளுநரானார்.

நாட்டின் கத்தோலிக்கர்களுக்கு 22 வருடம் சேவை புரிந்த இவர் மீது, இவர் "தீதுஸ் ஓட்ஸ்" (Titus Oates) என்பவரின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில், கி.பி. 1678ம் ஆண்டு, இவர் கைது செய்யப்பட்டு "வொர்செஸ்டர்" (Worcester) சிறையிலடைக்கப்பட்டார். ("தீதுஸ் ஓட்ஸ்" (Titus Oates), இங்கிலாந்து அரசன் இரண்டாம் சார்லசை (King Charles II) கொள்வதற்கு "போப்பிஷ் பிளாட்" (Popish Plot) எனப்படும் "கத்தோலிக்க சதித்திட்டம்" தீட்டியவர் என அடையாளம் காணப்பட்டவர்.)

ஏப்ரல் மாதம் 25ம் நாள், இவர்மீதான விசாரணை நடந்தது. லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், அவர் வர்செஸ்டர்க்கு கொண்டு வரப்பட்டு ஒரு கத்தோலிக்க பாதிரியாக இருப்பதற்கும், அத்தகைய நடைமுறைகளை செய்வதற்குமாக, இவர் தூக்கிலிடப்பட்டார்.

உள்ளூரில் அவர் மிகவும் மரியாதைக்குரிய நபராக இருந்தார். பொதுமக்களின் எதிர்விளைவானது, மக்களுக்கு அவர்மேல் அனுதாபங்கள் முற்றிலும் இருந்ததாகக் காட்டியது. பெரும்பாலும் எதிர்திருச்சபைகளைச் சேர்ந்த பார்வையாளர்கள், வாய்விட்டு கதறி அழுதனர். வெளிப்படையாக அழுத நகர தலைவர் (Sheriff), ரோமன் கத்தோலிக்க திருத்தந்தை அல்லது பாப்பிறை அமைப்புகளுடன் தொடர்புடைய கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் விழாக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

வர்செஸ்டரின் செயிண்ட் ஓஸ்வால்ட் ஆலயத்தின் (Church of St. Oswald of Worcester) அருகில் உள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இப்புனிதரின் தலை மட்டும், ஃபிரான்சிலுள்ள (France) "டௌவை" (Douai) எனுமிடத்திலுள்ள அன்னாரின் துறவு மடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அது, இன்னமும் பாதுகாக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

புனிதர் ஜான் வால், ஒரு தலைசிறந்த கல்வியாளராக இருந்தார். ஒருவேளை அவருடைய தலைமுறையின் மிகுந்த அறிவார்ந்த ஆங்கில கத்தோலிக்க குருவாக இருந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா