✠ புனிதர் ஜான் ஜோன்ஸ் ✠(St. John Jones) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை
/
Juill-
12) |
✠ புனிதர் ஜான்
ஜோன்ஸ் ✠(St. John Jones)
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகள்:
(Forty Martyrs of England and Wales)
பிறப்பு : தெரியவில்லை
கிளின்னாக் ஃபாவ்ர், வேல்ஸ்
(Clynnog Fawr, Wales)
இறப்பு : ஜூலை 12, 1598
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholicism)
முக்திபேறு பட்டம் : 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
புனிதர் பட்டம் : அக்டோபர் 25, 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
முக்கிய திருத்தலம் :
போன்டாய்ஸ், வடமேற்கு புறநகர், பாரிஸ், ஃபிரான்ஸ்
(Pontoise, Northwestern Suburbs of Paris, France)
நினைவுத் திருநாள் : ஜூலை 12
"ஜான் பக்கி" (John Buckley) என்றும், "ஜான் கிரிஃப்ஃபித்"
(John Griffith) என்றும், "காட்ஃபிரே மௌரிஸ்" (Godfrey
Maurice) என்றும் அறியப்படும் புனிதர் ஜான் ஜோன்ஸ் (St. John
Jones), ஒரு ஃபிரான்சிஸ்கன் சபை துறவியும் (Franciscan friar),
கத்தோலிக்க குருவும் (Catholic priest), மறைசாட்சியும்
(Martyr) ஆவார். இவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின்
நாற்பது மறைசாட்சிகளுள் (Forty Martyrs of England and Wales)
ஒருவர் ஆவார்.
"வேல்ஸ்" (Wales) நாட்டின் "சேர்னார்ஃபோன்ஷைர்"
(Caernarfonshire) மாநிலத்தின் "கிளின்னாக் ஃபாவ்ர்" (Clynnog
Fawr) எனுமிடத்தில் பிறந்த இவர், "இங்கிலாந்து (England),
வேல்ஸ் (Wales) மற்றும் அயர்லாந்தின் (Ireland) வரலாற்றில்,
ஆங்கிலிகன் (Anglican) சேவைகளில் கலந்துகொள்ள பிடிவாதமாக
மறுத்தவர்களுடைய" (Recusant Welsh) குடும்பங்களில் ஒன்றினைச்
சேர்ந்தவர் ஆவார். எதிர் சீர்திருத்த சபைகளிருந்தும், தமது
வாழ்க்கை முழுதும் கத்தோலிக்க விசுவாசத்தில் வாழ்ந்தவர்கள்
ஆவர். தமது இளமையில், இங்கிலாந்தின் (England)
கிரீன்விச்இலுள்ள (Greenwich) ஃபிரான்சிஸ்கன் துறவறத்தில்
சேர்ந்தார். 1559ம் ஆண்டு, ஃபிரான்ஸ் (France) நாட்டின்
"போன்டாய்ஸ்" (Pontoise) சென்று, தமது உறுதிப்பாடுகளை ஏற்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோன்ஸ் ரோம் நகருக்கு பயணம்
செய்தார். அங்கே, ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியருடன் தங்கினார்.
1591ம் ஆண்டு, தம்மை ஆங்கிலேய மறைப்பணிகளுக்கு தம்மை
அனுப்புமாறு வேண்டினார்.
ஜோன்ஸின் மேலுள்ள துறவியர், அவரது வேண்டுகோளைக் கருத்தில்
கொண்டனர். பிரிட்டன் (Britain) நாடுகளுக்கு மறைப்பணியாற்ற
செல்வோர் அடிக்கடி தூக்கிலிடப்படுவதையும் கொல்லப்படுவதையும்
அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். இருந்த போதினும், அவரது
மேலுள்ள துறவியர், இறுதியாக ஜோன்ஸ் மறைப்பணி வேண்டுகோளை
அனுமதித்தனர். திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் (Pope Clement
VIII) அவர்களிடமிருந்து ஒரு சிறப்பு ஆசீர்வாதத்தையும்
பாராட்டுக்களையும் பெற்றுத் தந்ததனர்.
கி.பி. 1592ம் ஆண்டின் இறுதியில் லண்டன் மாநகர் சென்று சேர்ந்த
ஜோன்ஸ், அங்கே "ஜான் ஜெரார்ட்" (Father John Gerard, S.J)
எனும் இயேசுசபை குரு ஏற்பாடு செய்து தந்திருந்த இல்லத்தில்
தங்கினார். அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உழைக்க
ஆரம்பித்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள அவரது சகோதர
ஃபிரான்சிஸ்கன் துறவியர் அவரைத் தமது தலைமை துறவியாக
தேர்ந்தெடுத்தனர்.
இங்கிலாந்து நாட்டின் அரசியான முதலாம் எலிசபெத்தின் (Elizabeth
I of England) ஆட்சி காலத்தில், "ரிச்சர்ட் டாப்கிலிஃப்"
(Richard Topcliffe) என்றொரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்தார்.
கத்தோலிக்க குருமாரை பிடித்து விசாரணை நடத்துவதும், சித்திரவதை
செய்து துன்புறுத்தி கொல்வதிலும், கத்தோலிக்க நடைமுறைக்கு
எதிரான தண்டனை விதிகளை அரசாங்கத்தின் சார்பாக
செயல்படுத்துவதிலும் அவர் மிகவும் பிரதானமாக இருந்தார். 1596ம்
ஆண்டு ஒருநாள், தந்தை ஜோன்ஸ் இரண்டு கத்தோலிக்கர்களின்
இல்லங்களுக்கு விஜயம் செய்ததுவும், அங்கே திருப்பலி
நிறைவேற்றியதுவும் ஒரு உளவாளி மூலமாக "ரிச்சர்ட்
டாப்கிலிஃப்"கு அறியவந்தது. குற்றம் சாட்டப்பட்டபோது, அந்த
இரண்டு கத்தோலிக்கர்களும் உண்மையில் சிறையில் இருந்ததாக
பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், ஜோன்ஸ் கைது
செய்யப்பட்டார், கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்.
ரிச்சர்ட், பின்னர் ஜோன்சை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று
அவரை சித்திரவதைக்கு உட்படுத்தினான்.
தனது சித்திரவதைக்குப் பின்னர் ஜோன்ஸ் கிட்டத்தட்ட இரண்டு
ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் ஜோன்ஸ் தனது
விசுவாசத்தில் "ஜான் ரிக்பி" (John Rigby) எனும்
கத்தோலிக்கருக்கு ஆதரித்து உதவிகள் புரிந்தார். பின்னாளில்
இவரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது
மறைசாட்சிகளுள் (Forty Martyrs of England and Wales) ஒருவர்
ஆனார். 1598ம் ஆண்டு, ஜூலை மாதம், 3ம் தேதி, இங்கிலாந்து
அரசியின் ஆட்சி காலத்தில், தடை செய்யப்பட்ட ஆன்மீக
(கத்தோலிக்க) நடைமுறைகளை செய்த குற்றத்திற்காக ஜோன்ஸ்
விசாரிக்கப்பட்டார். அவர் மிக உயர்ந்த தேசத்துரோக
குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். அவருக்கு தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டது.
துாக்குத்தண்டனை:
இந்த நேரத்தில், இதுபோன்று மோசமாக தண்டிக்கப்படும்
கத்தோலிக்கர்களுக்காக பொதுமக்கள் பரிவும் இரக்கமும்
காட்டினார்கள். ஆகவே, பொதுமக்களுக்கு அறிய வருவதற்கு முன்னரே,
அதிகாலை நேரத்தில் இவரது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட்டது.
தூக்கிலிடும் பணியாளர் கயிறு கொண்டுவர மறந்து விட்டதால்,
தண்டனை நிறைவேற்றுவதில் ஒரு மணிநேரம் தாமதம் ஆனது. ஜோன்ஸ்,
இந்த நேரத்தையும் வீணாக்காது, மறைபோதகம் செய்வதிலும்,
மக்களுக்கு அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பதிலும் நேரத்தை
செலவிட்டார்.
"நெக்கிங்கர்" (Neckinger) நதியின் மேலுள்ள சிறிய ஆற்றுப்பாலம்
அமைந்துள்ள "செயின்ட் தாமஸ் வாட்டரிங்" (St. Thomas' Watering)
எனும் இவ்விடம், "வால்ட்டிங் தெரு" (Watling Street) என்று
அழைக்கப்படுகின்றது. இங்கேதான் ஜோன்ஸ் தூக்கிலிடப்பட்டார்.
|
|
|