Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சொலனஸ் ✠(St. Francis Solanus)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 17)
 ✠ புனிதர் ஃபிரான்சிஸ் சொலனஸ் ✠(St. Francis Solanus)

 புதிய உலகின் அற்புதங்கள் நிகழ்த்துபவர் :
(Wonder Worker of the New World)

பிறப்பு : மார்ச் 10, 1549
மோன்டிலா, கோர்டோபா, ஸ்பெயின்
(Montilla, Còrdoba, Spain)

இறப்பு : ஜூலை 14, 1610
லிமா, பெரு, ஸ்பேனிஷ் பேரரசு
(Lima, Viceroyalty of Peru, Spanish Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஜூன் 20, 1675
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

புனிதர் பட்டம் : டிசம்பர் 27, 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

முக்கிய திருத்தலங்கள் :
சான் ஃபிரான்சிஸ்கோ'வின் மடாலயம், லிமா, பெரு
(Monastery of San Francisco, Lima, Peru)

நினைவுத் திருநாள் : ஜூலை 14

பாதுகாவல் :
அர்ஜென்டீனா; பொலிவியா; சிலி; பராகுவே; பெரு; பூகம்பங்களுக்கு எதிராக
(Argentina; Bolivia; Chile; Paraguay; Peru; also against earthquakes)

புனிதர் ஃபிரான்சிஸ் சொலனஸ், ஃபிரான்சிஸ்கன் (Franciscans) சபையைச் சேர்ந்த ஸ்பெனிஷ் துறவியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த (South America) மறைப்பணியாளருமாவார். இவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக கௌரவிக்கப்படுகிறார்.

தென் ஸ்பெயின் (Southern Spain) நாட்டின் "கொர்டோபா" (Còrdoba) பிராந்தியத்தின் "மோன்டிலா" (Montilla) நகரில் கி.பி. 1549 ஆண்டு, தமது பெற்றோரின் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை பெயர் "மடியோ, சன்செஸ் சொலனோ" (Mateo Sánchez Solano) ஆகும். இவரது தாயாரின் பெயர், "அனா ஜிமேனேஸ்" (Ana Jimnez) ஆகும். இவர், இயேசு சபையினரிடம் (Jesuits) கல்வி கற்றார். ஆனால், ஃபிரான்சிஸ்கன் துறவியரின் எளிமை மற்றும் தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும் வாழ்க்கை முறை, இவரை அவர்கள்பால் ஈர்த்ததாக உணர்ந்தார். தமது இருபது வயதில் "மோன்டிலா'விலுள்ள" (Montilla) ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையில் (Order of Friars Minor) இணைந்தார். புனித லாரன்ஸ் (St. Lawrence Friary) துறவு மடத்தில் புகுநிலை துறவியாக (Novitiate) இணைந்தார். அங்கே தினசரி கடின செபம், நோன்பு, அமைதி ஆகியவை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. சொலனோவும் இந்த நடைமுறையை கடுமையாக பின்பற்றினார். செல்லுமிடமெல்லாம் காலனிகளில்லாமல் வெறும் கால்களுடனேயே சென்றார். மயிரிழைகளாலான மேல்சட்டைகளையே அணிந்தார். இறைச்சி வகைகளை உண்ணுவதை தவிர்த்தார். இதன்காரணமாக, அவரது உடல் நலம் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது.

கி.பி. 1570ம் ஆண்டு, தமது புகுநிலை பயிற்சிகளின் இறுதியில் தமது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார். தென் ஸ்பெயின் நாட்டின் "குவாடல்குய்விர்" (Guadalquivir) ஆற்றுப்படுகையிலுள்ள அண்டலூசியா (Andalusia) மாநிலத்தின் தலைநகரான "செவில்" (Seville) என்ற நகரிலுள்ள "லோரெட்டோ" அன்னை (Friary of Our Lady of Loreto) துறவு மடத்துக்கு குருத்துவ கல்விக்காக அனுப்பப்பட்டார். அங்கே அவர் இறையியல் மற்றும் தத்துவயியல் மட்டுமல்லாது, சங்கீத திறமையையும் வளர்த்துக்கொண்டார். 1576ம் ஆண்டு, ஃபிரான்சிஸ் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

வடக்கு ஆபிரிக்க நாடுகளில் (North Africa) ஆண்டவரின் நற்செய்தியையும் கத்தோலிக்க விசுவாசத்தையும் பிரசங்கித்து, அதன்காரணமாகவே மறைசாட்சியாக மரிக்க விரும்பிய ஃபிரான்சிஸ் சொலனோ, அங்கு செல்வதற்கான அனுமதி வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் அது அவருக்கு மறுக்கப்பட்டது.

இதற்கிடையே அவரது தந்தையார் மரித்துப்போகவே, வயதான நோயுற்ற தமது தாயாரை பராமரிப்பதற்காக இவர் தமது சொந்த ஊரான "மோன்டிலா" (Montilla) சென்றார். அங்கே, தமது தலையீடு மற்றும் செபம் காரணமாக எண்ணற்ற மக்களின் நோய்களை குணமாக்கும் அற்புதம் செய்தார். இதனால், இவருக்கு "அற்புதங்கள் நிகழ்த்துபவர்" (Wonderworker) என்ற பெயர் கிட்டியது. கி.பி. 1583ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கொள்ளை நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் மரண தருவாயிலிருந்தவர்களின் சேவையில், தமது உடல்நிலை பற்றி கவலைப்படாது பணியாற்றினார்.

ஸ்பேனிஷ் பேரரசரான இரண்டாம் ஃபிலிப் (Spanish Emperor Philip II), அமெரிக்க நாடுகளில் நற்செய்தி அறிவிக்க மறைப்பணியாளர்களை அனுப்புமாறு ஃபிரான்சிஸ்கன் சபையினரைக் கேட்டுக்கொண்டார். கி.பி. 1589ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டிலிருந்து "புதிய உலகிற்கு" (New World) கடல் வழியாக பயணம் மேற்கொண்ட ஃபிரான்சிஸ் சொலனோ "பனாமா'வில்" (Panama) இறங்கினார். அங்கிருந்து வேறொரு கப்பலில் பயணப்பட்டு "பெரு" (Peru) சென்றடைந்தார். இப்பயணத்தின்போது, பெரு'வின் சற்று தொலைவில், கடலில் ஒரு புயல் தாக்கியது. அது கப்பலை ஒரு பெரும் பாறையின் மேல் மோதியது. கப்பலின் பணியாளர் குழுவினரும் பயணிகளும் உயிர் தப்புவதற்காக கப்பலிலிருந்து குதித்தனர். ஆனால் ஃபிரான்சிஸ் கப்பலிலிருந்த அடிமைகளுடன் கப்பலிலேயே இருந்தார். மூன்று நாட்களின் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.

அன்றைய "டுக்குமன்" (Tucuman) (தற்போதைய "வடமேற்கு அர்ஜென்ட்டினா" (Northwestern Argentina) மற்றும் "பராகுவே குடியரசு" (Paraguay) ஆகிய அமெரிக்க நாடுகளில் இருபது வருடங்களுக்கும் மேலாக ஃபிரான்சிஸ் மறைப்பணியாற்றினார். வெகு குறுகிய காலத்திலேயே உள்ளூர் மொழிகளை கற்றுக்கொண்டதால் அவர் உள்நாட்டு மக்களால் வரவேற்கப்பட்டார். நோயுற்றோரையும் அடிக்கடி சந்தித்து வந்தார். தமது வயலினில் சங்கீதங்கள் இசைத்தபடியே மறைப்பணியாற்றினார்.

1601ம் ஆண்டு, பெரு (Peru) நாட்டின் தலைநகரான லிமா'வுக்கு (Lima) அவர் அழைக்கப்பட்டார். அங்கே அவர் ஸ்பேனிஷ் குடியேற்றவாசிகளுக்கு ஞானஸ்நானத்தின் உத்தமத்தைக் காட்ட முயன்றார். உள்நாட்டு மக்கள் ஒடுக்கப்படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் அவர் கடுமையாக உழைத்தார். பெரு'வின் வடமேற்கு கடலோர பகுதியான "ட்ருஜில்லோ" (Trujillo) என்னுமிடத்தில் 1619ம் ஆண்டு ஏற்படவிருந்த பூகம்பத்தை (Earthquake) முன்னறிவித்ததாக கூறப்படுகிறது. கி.பி. 1610ம் ஆண்டு, ஃபிரான்சிஸ் சொலனஸ் லிமாவில் (Lima) மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா