Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் கிறிஸ்டோபர் ✠ (St. Christopher)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 25)


✠ புனிதர் கிறிஸ்டோபர் ✠ (St. Christopher)

மறைசாட்சி:  (Martyr)

பிறப்பு: தெரியவில்லை
கானான் (மேற்கத்திய மரபு) அல்லது மார்மரிக்கா (கிழக்கத்திய மரபு)
(Canaan (Western accounts) or Marmarica (Eastern accounts)


இறப்பு: கி.பி. சுமார் 251
அனத்தோலியா
(Asia Minor)


ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholicism)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodoxy)
லூதரனியம்
(Lutheranism)
ஆங்கிலிக்கம்
(Anglicanism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)


நினைவுத் திருவிழா: ஜூலை 25


பாதுகாவல்:
திருமணமாகாதோர், போக்குவரத்து பணியாளர், நெடுந்தூரம் பயணம் செய்வோர், புயல்காற்று, செயிண்ட் கிட்சு தீவு (Saint Kitts), வில்னியஸ் (Vilnius), வலிப்பு நோய் (Epilepsy), தோட்டக்காரர், நல்ல மரணம், பல்வலி, ரேப் தீவு (Island Rab)


புனிதர் கிறிஸ்டோபர், கிறிஸ்தவ மறைசாட்சியாக வணங்கப்படுபவர் ஆவார். இவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து, கி.பி. 249251ம் ஆண்டு காலத்தில் ரோம் நகரை ஆண்ட, பேரரசர் (Roman Emperor) டேசியஸ் (Decius) அல்லது, கி.பி. 308313ம் ஆண்டு காலத்தில் ரோமை ஆண்ட பேரரசர் இரண்டாம் மேக்சிமஸ் டேசியன் (Maximinus II Dacian) என்பவரால் கொல்லப்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும் இவருக்கு செலுத்தப்படும் வணக்கம் மிகவும் பின் நாட்களிலேயே தொடங்கியதொன்றாகும். இது மேற்கத்திய திருச்சபையில் மத்திய காலத்தின் பிற்பகுதியில் பரவத் தொடங்கியது. எனினும் இவரின் பெயரால் ஏழாம் நூற்றாண்டு முதலே மடங்களும் ஆலயங்களும் கட்டப்பட்டன.


இவர் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த நபரா, அல்லது இப்பெயர் பலரை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லா என்பது குறித்து அறிஞர்களிடையே ஒத்த கருத்தில்லை.


கிரேக்கத் தொன்மவியலின் சாயலில் அமைந்த ஒரு மரபுவழி கதையின்படி, இவர் கிறிஸ்துவை தமது தோளில் சுமந்து, ஆற்றை கடக்க உதவியதாக நம்பப்படுகிறது. ஆகவே இவர் பயணம் செய்வோருக்கு பாதுகாவலராக கருதப்படுகிறார்.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா