✠ புனித அகஸ்டின் ஸாவோ ரோங் ✠ (St.
Augustine Zhao Rong and his 119 Companions) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை
/
july-
09) |
✠ புனித அகஸ்டின் ஸாவோ ரோங் ✠ (St.
Augustine Zhao Rong and his 119 Companions)
மறைசாட்சிகள்: (Martyrs)
பிறப்பு: ----
இறப்பு: கி.பி. 1648 முதல் கி.பி. 1930 வரை
கிங் டைனாஸ்டி மற்றும் சீன குடியரசு
(Qing dynasty and Republic of China)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: நவம்பர் 24, 1946
திருத்தந்தை 12ம் பயஸ்
(Pope Pius XII)
புனிதர் பட்டம்: அக்டோபர் 1, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
நினைவுத் திருநாள்: ஜூலை 9
கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே சீன நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு
வித்திடப்பட்டிருக்கிறது. 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு
கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. கி.பி. 618-907ம் ஆண்டு வரை,
டாங் வம்சத்தினர் அரசுரிமை ஏற்று ஆட்சி செய்த காலத்தில் 2
நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். 13ம்
நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து நற்செய்தி பரப்ப சென்ற
"ஜியோனித மோன்றோ கோர் வீனோ" (Gionitha Mondro Gor vino)
போன்றோர் சீன மக்களின் முன் கூறப்பட்ட கலாச்சாரத்தை ஆழமாக
புரிந்து வைத்திருந்தார்கள். இதனால் பெய்ஜிங் தலைநகரிலேயே ஆயர்
தங்குவதற்கு ஆயர் இல்லம் அமைந்திருந்தது. இதனால் மறைபரப்பு பணியாளர்
தங்கள் பணியில் முழுவீச்சில் இறங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.
பின்னர் கி.பி. 16ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர்
பல துறவு சபைகளிலிருந்தும் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு
சீனா சென்றடைந்தனர். அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற இயேசு சபைக்
குரு மத்தேயுரிச்சி. இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின்
கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்தனர். அதோடு கணிதம்,
விஞ்ஞானம் போன்ற கலைகளிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால்
சீன மக்களிடம் எளிதாக தொடர்புகொண்டனர். அவர்களின் மனதில் இடம்பிடித்து
அவர்களுக்கேற்ப நற்செய்தி பணியை பரப்பினர். கி.பி. 16ம், 17ம்
நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு
திருமுழுக்கு பெற்றனர். இவ்வாறு கிறிஸ்தவர்களானவர்கள் மெய்மறை
கற்று, தங்களை உயர்ந்தவர்களாக கருதினர்.
அப்போது சீன நாட்டு மன்னன், கி.பி. 1692ம் ஆண்டு, நாடு தழுவிய
மறை சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினர். இதன்மூலம் விரும்புபவர்கள்
மெய்மறையில் சேரலாம். கிறிஸ்துவை பின்பற்றலாம் என்றும்
கூறினான். இதன் பலனாக ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஞானஸ்நானம்
பெற்றனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவரின் பிரதிநிதி
டூர்னோனின் (Durnon) அறிவின்மையால் "திருவழிபாட்டில் சீன ரீதி"
என்பதை அறிமுகப்படுத்தினார். இதனால் மன்னன் ஆத்திரமடைந்து
கிறிஸ்தவர்களை தாக்கினான். அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு
விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை
கொன்று குவித்தார்கள். 19ம் நூற்றாண்டின் பாதி வரை இக்கொடுமை
நடந்தவண்ணமாய் இருந்தது. பல ஆலயங்களும் தாக்கப்பட்டது.
கி.பி. 1648ம் ஆண்டு, "மஞ்ச் டார்டர்" (Manj Dardar) இனத்தை
சேர்ந்த கொடியவர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஊர் ஒன்றை இடித்து
தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு புனித சாமிநாதர் சபையை சார்ந்த
தந்தை ஃபிரான்சிஸ் பெர்னாண்டசைக் கொன்றனர். வியாகுல அன்னை மறையுண்மைகளை
கூறி செபமாலை செபிக்கும்போது, அவரின் உடனிருந்த தோழர்களையும்
கொன்றனர். இவர்களே சீன மண்ணில் முதல் மறைசாட்சிகள் ஆவர்.
மீண்டும் கி.பி. 1715-1747ம் ஆண்டு வரை நற்செய்தி பரப்பிய
ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்களையும் கொன்றனர். இன்னும் பல மறைப்பணியாளர்களையும்
கொன்றனர். கி.பி. 1796-1821ம் ஆண்டு முடிய ஆட்சி செய்த மன்னன்
கியா கின் (Kiya Kin) கிறிஸ்தவ மறைக்கு எதிராக பல சட்டங்களை
விதித்தான். சட்டங்களை மீறியவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை
கொடுத்தான். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை
வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். கி.பி. 5ம் நூற்றாண்டிலிருந்து
கி.பி. 1862ம் ஆண்டு வரை கொல்லப்பட்டவர்களில் 119 பேர் புனிதர்
பட்டம் பெற்றவர்கள் ஆவர்.
|
|
|