Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அபொல்லினரிஸ் ✠ (St. Apollinaris of Ravenna)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 20)
✠ புனிதர் அபொல்லினரிஸ் ✠ (St. Apollinaris of Ravenna)

மறைசாட்சி/ ஆயர்: (Martyr/ Bishop)

பிறப்பு:
அந்தியோக்கியா, சிரியாவின் ரோம பகுதி, (தற்போதைய துருக்கி)
(Antioch, Roman Province of Syria (Now Antakya, modern-day Turkey))

இறப்பு:
ரவென்னா, இத்தாலி (Ravenna, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூலை 20

பாதுகாவல்:
வலிப்பு; கீல்வாதம்; எமிலியா-ரோமாக்னா பகுதி (இத்தாலி) ஆச்சேன், பர்ட்செயிட், டுஸ்ஸெல்டார்ஃப், ரவென்னா, ரமஜன்
(Epilepsy; Gout; Emilia-Romagna Region (Italy) Aachen, Burtscheid, Dsseldorf, Ravenna, Remagen)

புனிதர் அபொல்லினரிஸ் ஒரு, சிரிய புனிதரும், மறைசாட்சியும் ஆவார். இவர் துருக்கி (Turkey) நாட்டில், ரவென்னா (Ravenna) மறை மாநிலத்தின் முதல் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்ப பெரும்பாடுபட்டார். இதனால் அந்நாட்டு அரசன் "மார்கஸ் அவுரேலியஸ்" (Markus Aurelias) என்பவரால் பல துன்பங்களை அனுபவித்தார்.

இவர் ரோம பிராந்தியமான சிரியாவின் (Roman Province of Syria) "அந்தியோக்கியாவின்" (Antioch) குடியாவார். பாரம்பரியங்களின்படி, முதல் திருத்தந்தையும், அப்போஸ்தலருமான புனிதர் பேதுரு அவர்களால் ரவென்னாவின் ஆயராக அங்கே அனுப்பப்பட்டார். "ரவென்னாவின்" (Ravenna) முதல் ஆயர் என்ற காரணத்தாலேயே இவர் இடையறாத துன்புறுத்தல்களை எதிர்கொண்டார்.

பேரரசன் "வெஸ்பாசியன்" அல்லது, "நீரோ" (Emperor Vespasian (or Nero) ஆட்சிகால துன்புருத்தல்களின்போது இவரும், இவரது ஆதரவாளர்களும் ரவென்னாவை விட்டு அடித்து வெளியேற்றப்பட்டனர். திரும்பி வந்த அபொல்லினரிஸ், மீண்டும் ரவென்னா சென்றார். ரவென்னா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசங்கித்த அவர், நகருக்குள் நுழைந்தார். அங்குள்ள பாகன் இனத்தவர்களால் கொடூரமாக தாக்குண்ட அவர், கிரேக்கம் செல்லும் கப்பல் ஒன்றினுள் ஏற்றி விடப்பட்டார். அங்கிருந்த பாகன் இனத்தவர்கள் மீண்டும் அவரை இத்தாலிக்கு நாடு கடத்தினார்கள். அங்கே அவர் நான்காவது தடவையாக ரவென்னா சென்றார்.
ஆயர் அபொல்லினரிஸ், ரவென்னாவின் புறநகர்ப் பகுதியில் பாகன் இனத்தவர்களால் மிருகத்தனமாக தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரை கௌரவிப்பதற்காக ஒரு அழகிய பேராலயம் ஆறாம் நூற்றாண்டில் அங்கே கட்டப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா