Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அந்தோனி மரிய சக்கரியா ✠(St. Anthony Maria Zaccaria)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Jull 05)
✠ புனிதர் அந்தோனி மரிய சக்கரியா ✠(St. Anthony Maria Zaccaria)

 எதிர் சீர்திருத்தவாத தலைவர்/ நிறுவனர்/ குரு :
(Leader of the Counter Reformation/ Founder/ Priest)

பிறப்பு : கி.பி. 1502
கிரேமோனா, மிலன் (தற்போதைய இத்தாலி)
(Cremona, Duchy of Milan, (Now Italy)

இறப்பு : ஜூலை 5, 1539
கிரேமோனா, மிலன்
(Cremona, Duchy of Milan)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : ஜனவரி 3, 1890
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம் : மே 15, 1897
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலம் :
புனித பவோலா பள்ளி, மிலன், இத்தாலி
(San Paolo convent, Milan, Italy)

நினைவுத் திருநாள் : ஜூலை 5

திருச்சபையில் நடந்த துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகளுக்கெதிராக "மார்ட்டின் லூதர்" போர்க்கொடி தூக்கியிருந்த அதே நேரம், திருச்சபைக்குள் ஏற்கனவே ஒரு சீர்திருத்தம் முயற்சிக்கப்பட்டிருந்தது.

புனிதர் அந்தோனி மரிய சக்கரியா, ஆதி எதிர் சீர்திருத்தவாத தலைவர்களில் ஒருவரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் குருவும் ஆவார்.

கி.பி. 1502ம் வருடம், இத்தாலியிலுள்ள "கிரேமோனா" (Cremona) என்னுமிடத்தில் பிறந்த இவரது தந்தை, "அன்டோனியா பெஸ்கரோலி சக்கரியா" (Antonia Pescaroli Zaccaria) ஆவார். தாயாரின் பெயர், "லஸ்ஸரோ" (Lazzaro) ஆகும். பிறந்த அன்றைய தினமே "கிரேமோனா" தேவாலயத்தில் (Cathedral of Cremona) திருமுழுக்கு பெற்றார். இவரது இரண்டு வயதிலேயே இவரது தந்தை மரித்தார். இவரது குடும்பம் பிரபுத்துவ குடும்பமாகையால், ஏழைகளின்பால் இரக்கம் காட்டுவதிலும், ஆன்மீக கல்வி கற்பிப்பதிலும் இவரது தாயார் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். தேவாலயத்துக்கு அருகிலிருந்த "குருபரிபாலன" (Episcopal School) பள்ளியில் கற்றபின்னர், "பவியா" பல்கலையில் (University of Pavia) தத்துவம் பயின்றார். அதன் பின்னர், கி.பி. 1520 முதல் 1524ம் ஆண்டு வரையான கால கட்டத்தில் பதுவை பல்கலையில் (University of Padua) மருத்துவம் பயின்றார். மூன்று வருடம் "கிரேமோனா" (Cremona) நகரில் மருத்துவ சேவை செய்தார். 1527ம் ஆண்டு குருத்துவம் கற்க தொடங்கினார். பின்னர் 1529ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இரண்டு ஆண்டுகளாக தனது அழைப்பை ஆராய்ந்து, முக்கியமாக ஏழைகளுக்கான மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றினார்.

சக்கரியா "மிலன்" (Milan) நகரில் இருக்கும்போது, மூன்று நிறுவனங்களை நிறுவி தொடங்கினார். அவையாவன:
1. "பர்னபைட்ஸ்" (Barnabites) என்றழைக்கப்படும் ஆண்களுக்கான சபை. (இதற்கு திருத்தந்தை "ஏழாம் கிளமென்ட்" (Pope Clement VII), 1533ம் ஆண்டு அங்கீகாரம் அளித்தார்).
2. "புனிதர் பவுலின் திருத்தூது சகோதரியர்" (Angelic Sisters of St. Paul) என்றழைக்கப்படும் பெண்களுக்கான சபை. (இதற்கு திருத்தந்தை "மூன்றாம் பவுல்" (Pope Paul III) 1535ம் ஆண்டு, ஜனவரி மாதம், 15ம் தேதியன்று, ஒப்புதல் அளித்தார்.
3. "புனிதர் பவுலின் பொதுநிலையினர்" (Laity of St. Paul) என்றழைக்கப்படும் திருமணமான பொதுநிலையினருக்கான சபை.

இறை இயேசு சிலுவையில் அரையுண்டதை ஞாபகப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் மூன்று மணியளவில் தேவாலய மணி அடிக்கும் வழக்கத்தினை கொண்டு வந்தார்.

ஒருமுறை சமாதான பணிகளின்போது, தீவிரமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சக்காரியா, தமது அன்னையை காண்பதற்காக உடனே இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டார். 36 வயதான புனிதர் அந்தோனி மரிய சக்கரியா இறைபதம் இணைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா