Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஆண்ட்ரூ ✠ (St. Andrew of Crete)
   
நினைவுத் திருநாள் : (ஜூல / Juill- 04)
✠ புனிதர் ஆண்ட்ரூ ✠ (St. Andrew of Crete)

 வணக்கத்துக்குரிய தந்தை, ஆயர், இறையியலாளர், மறையுரையாளர், கீர்த்தனை அல்லது ஆன்மீகப் பாடலாசிரியர் :
(Venerable Father, Bishop, Theologian, Homilist and Hymnographer)

பிறப்பு : கி.பி. 650
டமாஸ்கஸ்
(Damascus)

இறப்பு : ஜூலை 4, 712 அல்லது 726 அல்லது 740
மைட்டிலேன்
(Mytilene)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள் : ஜூலை 4

"கிரேட் நகர ஆண்ட்ரூ" (Andrew of Crete) என்றும், "ஜெருசலேம் நகர ஆண்ட்ரூ" (Andrew of Jerusalem) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், 7-8ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்த வணக்கத்துக்குரிய தந்தையும், ஆயரும், இறையியலாளரும், மறையுரையாளரும், கீர்த்தனை அல்லது ஆன்மீகப் பாடலாசிரியருமாவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Churches) மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் (Eastern Orthodox Churches) இவரை புனிதராக ஏற்கின்றன.

சிரிய அரபு குடியரசின் (Syrian Arab Republic) தலைநகரான "டமாஸ்கஸ்" (Damascus) நகரில் பிறந்த ஆண்ட்ரூ, பிறந்ததுமுதல் ஏழு வயது வரை பேச இயலாத ஊமையாக இருந்தார். புதுநன்மை (Holy Communion) அருட்சாதனம் வாங்கியதுமே இவர் அதிசயித்தக்க விதமாக பேச ஆரம்பித்தார் என்று இவரது சரிதத்தை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் (Hagiographers) கூறுகின்றனர்.

இவர் தமது இறையியல் வாழ்க்கையை (Ecclesiastical Career) ஜெருசலேம் (Jerusalem) அருகிலுள்ள "லாவ்ரா" (Lavra) எனும் "புனிதர் சப்பாஸ்" (St. Sabbas the Sanctified) என்பவரின் துறவு மடத்தில் தமது பதினான்கு வயதில், தொடங்கினார். அங்கே அவர் விரைவில் தனது மேலுள்ள துறவியரின் கவனத்தை ஈர்த்தார். ஜெருசலேம் நகரின் தலைமை ஆயரான (Patriarchate of Jerusalem) "தியோடோர்" (Theodore) என்பவர், இவரை அர்ச்.திருத்தொண்டராக (Archdeacon) அருட்பொழிவு செய்வித்து, ரோமப் பேரரசின் தலைநகரான "கான்ஸ்டண்டிநோபில்" (Constantinople) நகரில் 680681 ஆண்டுகளில் நடந்த "கான்ஸ்டான்டிநோபிள் மூன்றாம் கவுன்சிலில்" (Sixth Ecumenical Council) தமது பிரதிநிதியாகப் பங்குபெற அனுப்பினார். இந்த கவுன்சிலானது, மதங்களுக்கு எதிரான "மோனோடேலிடிஸம்" (Heresy of Monothelitism) கொள்கைகளுக்கெதிரானது என்று, பேரரசன் "நான்காம் கான்ஸ்டன்டைன்" (Emperor Constantine Pogonatus) என்று அழைத்தார்.

"கான்ஸ்டான்டிநோபிள் மூன்றாம் கவுன்சில்" (Sixth Ecumenical Council) முடிவுற்ற சிறிது காலத்திலேயே ஜெருசலேமிலிருந்து கான்ஸ்டான்டிநோபிள் நகருக்கு திரும்ப வரவழைக்கப்பட்ட இவர், முன்னாள் கிரேக்க மரபுவழி திருச்சபைகளின் (Great Church of Hagia Sophia) பேராலயத்தின் அர்ச்.திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். இறுதியில் ஆண்ட்ரூ, கிரேக்க தீவுகளில் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட "கிரேட்" (Crete) தீவின் தலைநகரான "கோர்டினா" (Gortyna) நகரின் ஆயரவையில் (Metropolitan see) நியமிக்கப்பட்டார்.

இவர், மதங்களுக்கு எதிரான "மோனோடேலிடிஸம்" (Heresy of Monothelitism) கொள்கைகளுக்கெதிரானவராயினும், கி.பி. 712ம் ஆண்டு நடந்த ஆலோசனை சபையில் (Conciliabulum) கலந்துகொண்டார். இந்த ஆலோசனை சபையில் "எகுமென்சியல்" சபையின் (Ecumenical Council) தீர்மானங்கள் அகற்றப்பட்டன. ஆனால் அடுத்த வருடத்தில் அவர் மனந்திரும்பி மரபுவழி திருச்சபைக்கு திரும்பினார். அதன்பின்னர், அவர் பிரசங்கங்கள் நிகழ்த்துவதிலும், பாடல்கள் இயற்றுவதிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒரு பிரசங்கியாக, அவருடைய சொற்பொழிவுகள் அவற்றின் கண்ணியமான மற்றும் ஒத்திசைவான சொற்றொடருக்காக அறியப்படுகிறது, இதற்காக அவர் பைசண்டைன் சகாப்தத்தின் (Byzantine epoch) முன்னணி திருச்சபை எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

திருச்சபை சரித்திர ஆசிரியர்களிடையே அவருடைய மரணத்தின் தேதிக்கு சமமான கருத்து இல்லை. "கான்ஸ்டண்டிநோபில்" (Constantinople) நகரிலிருந்து திருச்சபை பணிகளுக்காய் "கிரேட்" (Crete) தீவு திரும்பும் வழியில், "மைடெலின்" (Mytilene) தீவில் இவர் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா