✠ புனிதர் அல்ஃபோன்சா
✠ |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை/
July-
28) |
✠ புனிதர் அல்ஃபோன்சா
✠(St. Alphonsa Muttathupadathu)
இந்தியாவின் முதல் கத்தோலிக்க புனிதர்:
(First Native Indian Catholic Saint)
பிறப்பு: ஆகஸ்ட் 19, 1910
குடமளூர், கோட்டயம், கேரளம், இந்தியா
(Kudamalloor)
இறப்பு: ஜூலை 28, 1946 (வயது 35)
பரனாங்கானம், திருவாங்கூர், (தற்போதைய கோட்டயம்)
(Bharananganam, Travancore (present day (Kottayam)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அருளாளர் பட்டம்: ஃபெப்ரவரி 8, 1986
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
புனிதர் பட்டம்: அக்டோபர் 12, 2008
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)
நினைவுத் திருநாள்: ஜூலை 28
முக்கிய திருத்தலங்கள்:
புனித மரியாள் தேவாலயம், பரனங்கனம், கேரளா, இந்தியா
(St. Mary's Syro-Malabar Church, Bharananganam, Kerala,
India)
பாதுகாவல்: உடல் நோய்
"அன்னா முட்டத்துபடத்து" (Anna Muttathupadathu) எனும் இயற்பெயர்
கொண்ட புனிதர் அல்ஃபோன்சா, "சிரோ-மலபார் கத்தோலிக்க" அருட்சகோதரி"
(Syro-Malabar Catholic Nun) ஆவார். இவர், "புனிதர் தோமா
கிறிஸ்தவ சமூகத்தின்" (Saint Thomas Christian community)
"கிழக்கு கத்தோலிக்க திருச்சபையின்" (Eastern Catholic Church)
"சிரோ-மலபார்"கத்தோலிக்க திருச்சபையின் (Syro-Malabar Catholic
Church) முதல் பெண் புனிதர் ஆவார்.
அக்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த குடமலூர் எனும் ஊரில்
(தற்போதைய கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில்) 1910ம் ஆண்டு ஆகஸ்டு
19ம் நாள், "சிரோ-மலபார் நசரானி" (Syro-Malabar Nasrani)
குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பெயர், "செரியன் ஔசெஃப்" (Cherian
Ousep) ஆகும். இவரது தாயாரின் பெயர், "மேரி முட்டத்துபடத்து"
(Mary Muttathupadathu) ஆகும். பெற்றோர் இவருக்குப் புனித அன்னாவின்
நினைவாக அன்னக்குட்டி (Annakkutty) என்ற செல்ல பெயரிட்டு அழைத்தனர்.
அன்னா இளம் வயதில் விளையாடினாரோ இல்லையோ, விதி அவர் வாழ்வில்
விளையாடத் தவறவில்லை. அன்னாவின் இளம் வயதிலேயே அவரின் தாயார்
இறந்து விட்டார். தாயில்லாக் குழந்தையான அன்னாவை அவரின் அத்தைதான்
வளர்த்தார். அவரது பெரியப்பாவான "அருட்தந்தை ஜோசப்" (Father
Joseph Muttathupadathu) என்பவர்தான் அவரை படிக்க வைத்தார்.
1923ம் ஆண்டு எரியும் நெருப்புக் குழிக்குள் தவறி விழுந்த அன்னாவின்
பாதங்கள் கருகின. இவ்விபத்து வாழ்நாள் முழுமைக்கும் இவரை இயலாமையில்
ஆழ்த்தியது. பட்ட காலிலே படும் என்பதைப் போல இளமையில் தாயின்
மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம்
என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன. கடவுள்
மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு சோதனையையும்
இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
தன் வாழ்வை கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1928ம்
ஆண்டில் அல்ஃபோன்சா எனும் ஆன்மீக பெயரை ஏற்று, கன்னியாஸ்திரீயாக
மாறினார். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதித்தார். எனினும்
உடல்நலக் குறைவால் இவரால் ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்ய இயலவில்லை.
கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி, மேலும் பலவீனமடைந்து, படுத்த
படுக்கையானார். இதற்கிடையில் 'அம்னீசியா' என்னும் மறதி நோயால்
பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர
சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும்
முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு
மேலும் அதிகமாகி 35 வயதில் 1946ம் ஆண்டு ஜூலை 28ம் நாள் கன்னியாஸ்திரி
அல்ஃபோன்சா மரணம் அடைந்தார்.
இவரது உடல் பரனாங்கானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றளவும்
இந்த இடம், நம்பிக்கை உள்ளம் கொண்ட பக்தர்கள் பலர் வந்து
செல்லும் புனித ஸ்தலமாய் விளங்குகிறது. இங்கு வரும் பலர் அன்னை
அல்ஃபோன்சா தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய அதிசயங்களை கூறுகின்றனர்.
|
|
|