Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ உட்ரெச்ட் நகர் புனிதர் பிரடெரிக் ✠ (St. Frederick of Utrecht)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 18)

✠ உட்ரெச்ட் நகர் புனிதர் ஃபிரடெரிக் ✠ (St. Frederick of Utrecht)

உட்ரெச்ட் ஆயர்:
(Bishop of Utrecht)

பிறப்பு: கி.பி. 780
ஃபிரீஸ்லேண்ட் (Friesland)

இறப்பு: ஜூலை 18, 838
உட்ரெச்ட் (Utrecht)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூலை 18

பாதுகாவல்: காது கேளாதோர்

புனிதர் ஃபிரடெரிக், கி.பி. 815/816 முதல் 834/838 வரை உட்ரெச்ட் ஆயராக (Bishop of Utrecht) சேவை செய்தவர் ஆவார். ரோமன் கத்தோலிக்கம் (Roman Catholic Church) மற்றும் கிழக்கு மரபுவழி (Eastern Orthodox Church) திருச்சபைகள் இவரை புனிதராக ஏற்கின்றன.

கி.பி. சுமார் 780ம் ஆண்டு, நெதர்லாந்து (Netherlands) நாட்டின் வடக்கிலுள்ள பிராந்தியமான ஃபிரீஸ்லேண்ட்ல் (Friesland) பிறந்த இவர், ஃபிரிசியன் அரசனான ராட்பௌட் (Frisian King Radboud) என்பவரது பேரனாவார்.

தமது இளம் வயதில் உட்ரெச்ட் (Utrecht) நகரில் கல்வி கற்ற இவருக்கு, ஆயர் ரிக்ஃபிரைட் (Bishop Ricfried) உள்ளிட்ட மறைப்பணியாளர்கள் கல்வி கற்பித்தனர். அவரது படிப்பு முடிந்தபின் அவர் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், மறைமாவட்டத்தின் வடக்குப் பகுதியிலுள்ள மீதமுள்ள பாகன் இனத்தவர்களை (Heathens) கிறிஸ்தவர்களாக மனம் மாற்றுவதற்கான பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மறைமாவட்டத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் இப்பணியைச் செய்தார். இவர், ஸீலேண்ட் (Dutch province of Zeeland) எனும் டச்சுப் பிராந்தியத்தின் வால்ச்சரன் (Walcheren) எனும் முன்னாள் தீவில் மறைபோதகம் செய்ததாக தகவல்கள் உள்ளன. அத்துடன், புனிதர் ஓடல்ஃபஸ் (St. Odulfus) என்பவருடன் இணைந்து ஸ்டாவோரேன் (Stavoren) நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மறைபோதகம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

உட்ரெச்ட் (Utrecht) மறைமாவட்ட ஆயர் ரிக்ஃபிரைட் (Bishop Ricfried) கி.பி. 815/816ம் ஆண்டு மரித்ததும், ஃபிரடெரிக் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது பக்தி மற்றும் அறிவாற்றலுக்காக அறியப்பட்டார். அவர், ஃபிரான்கிஷ் பெனடிக்டைன் (Frankish Benedictine monk) துறவியும், ஜெர்மனி நாட்டின் மெய்ன்ஸ் உயர்மரைமாவட்ட பேராயருமான ரபானஸ் மௌரஸ் (Rabanus Maurus) என்பவருடன் கடித தொடர்பு வைத்திருந்தார். 829ம் ஆண்டு, மெயின்ஸ் (Mainz) நகரில் நடந்த ஆலோசனை சபையில் அவரது அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதலையும் அவர் பாராட்டினார்.

ஃப்ரெட்ரிக் எப்படி மரித்தார் என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்பது மட்டும் நிரூபிக்கப்பட்டது; ஆனால், யாரால் கொலை செய்யப்பட்டார், கொலைக்கான காரணம் ஆகியனபற்றி தெளிவான தகவல் இல்லை. கி.பி. 838ம் ஆண்டு, ஜூலை மாதம், 18ம் நாளன்று, திருப்பலி நிறைவேற்றிவிட்டு வருகையில் இரண்டு பேரால் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்று புராணம் கூறுகிறது.

கி.பி. 11 மற்றும் 12ம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் ஆயர் ஓபெர்ட் (Bishop Otbert of Lige) (பாஸியோ ஃப்ரெடிசி) மற்றும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் வில்லியம் (William of Malmesbury) ஆகியோரின் கூற்றுப்படி, கொலைகாரர்களை ஏற்பாடு செய்து ஏவி விட்டது, பேரரசி ஜூடித் (Empress Judith) என்கிறது. காரணம், பேரரசியின் ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையை ஃபிரடெரிக் தொடர்ந்து விமர்சித்து வந்ததே ஆகும்.

கொலை செய்யப்பட்ட ஃபிரடெரிக், உட்ரெச்ட் (Utrecht) நகரின் தூய சல்வேடார் ஆலயத்தில் (St. Salvator's Church) அடக்கம் செய்யப்பட்டார். இவர், காது கேளாதோரின் பாதுகாவலர் ஆவார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா