Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர்கள் ரூஃபினா மற்றும் செகுண்டா ✠(Saints Rufina and Secunda)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 10)

✠ புனிதர்கள் ரூஃபினா மற்றும் செகுண்டா ✠(Saints Rufina and Secunda)

கன்னியர் மற்றும் மறைசாட்சியர்:
(Virgins and Martyrs)


பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
ரோம், ரோம பேரரசு
(Rome, Roman Empire)


இறப்பு: கி.பி. 257
ரோம், ரோம பேரரசு
(Rome, Roman Empire)


ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)


நினைவுத் திருநாள்: ஜூலை 10


புனிதர்கள் ரூஃபினா மற்றும் செகுண்டா இருவரும் ரோம கன்னியரும், மறைசாட்சியரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்களுமாவர்.


ரோம பேரரசன் "வலேரியன்" (Emperor Valerian) காலத்து கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புருத்தல்களின்போது இவர்கள் மறைசாட்சியராக மரித்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய தந்தை ரோம அதிகார சபை அங்கத்தினர் என்றும், அவரது பெயர் "அஸ்டேரியஸ்" (Asterius) என்றும் கூறப்படுகிறது. சகோதரிகள் இருவருக்கும் மொழி நிச்சயம் ஆகியிருந்தது என்றும் அவர்களுக்கு நிச்சயமான மணமகன்களின் பெயர் "அர்மேண்டரியஸ் மற்றும் வேரினஸ்" (Armentarius and Verinus) என்றும் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் "வலேரியன்" தனது துன்புறுத்தல்களைத் தொடங்கியபோது அவர்களிருவரும் தமது விசுவாசத்தை கைவிட்டனர்.


மத்திய இத்தாலியிலுள்ள "எட்ரூரியா" (Etruria) பிராந்தியத்துக்கு தப்பிச் சென்ற சகோதரியர் ரூஃபினா மற்றும் செகுண்டா இருவரும் பிடிபட்டு கொண்டு வரப்பட்டு நிர்வாக அதிகாரியின் முன்னே நிறுத்தப்பட்டனர். அவன் இவர்களை துன்புறுத்தினான். பின்னர், இவர்களது தலையை வெட்டி கொன்றான்.
இவர்களது உடல்கள் இத்தாலியிலுள்ள "வயா ஆரேலியா" (Via Aurelia) என்ற சாலையில் அடக்கம் செய்யப்பட்டன. இவர்களை கௌரவிக்கும் நிமித்தமாக, ரோம் நகரில் "புனிதர்கள் ரூஃபினா மற்றும் செகுண்டா ஆலயம்" (Church of Sante Rufina e Secunda) கட்டப்பட்டுள்ளது.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா