✠ அருளாளர் ஸ்டேன்லி ஃபிரான்சிஸ் ரோதர் ✠ |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை
/
july-
28) |
✠ அருளாளர் ஸ்டேன்லி ஃபிரான்சிஸ் ரோதர்
✠(Blessed Stanley Francis Rother)
ரோமன் கத்தோலிக்க குரு, மறைசாட்சி:
(Roman Catholic Priest and Martyr)
பிறப்பு: மார்ச் 27, 1935
ஒகார்ச், ஒக்லாஹோமா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Okarche, Oklahoma, United States of America)
இறப்பு: ஜூலை 28, 1981 (வயது 46)
சேன்டியாகோ அடிட்லன், ஸோலோலா, குவாட்மலா
(Santiago Atitln, Solol, Guatemala)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 23, 2017
கர்தினால் ஏன்ஜெலோ அமேடோ
(Cardinal Angelo Amato)
நினைவுத் திருநாள்: ஜூலை 28
அருளாளர் ஸ்டேன்லி ஃபிரான்சிஸ் ரோதர், அமெரிக்காவின்
"ஒக்லாஹோமா" (Oklahoma City) நகரைச் சேர்ந்த ஒரு ரோமன் கத்தோலிக்க
குருவும், "குவாட்மலா" (Guatemala) நாட்டில் மறைசாட்சியாக மரித்தவருமாவார்.
1963ம் ஆண்டு, "ஒக்லாஹோமா" மறைமாவட்ட (Archdiocese of Oklahoma
City) குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், 1968ம் ஆண்டுவரை
பல்வேறு பங்குகளில் பணியாற்றினார். குவாட்மலா (Guatemala)
நாட்டுக்கு மிஷனரி குருவாக நியமிக்கப்பட்டிருந்த அவர், 1981ம்
ஆண்டு, குவாட்மலன் பணி மையத்தில் கொலை செய்யப்பட்டார். கத்தோலிக்க
திருச்சபையால் முக்திபேறு பட்டமளிக்கப்பட்ட, அமெரிக்காவில் பிறந்த
முதல் குருவும் மறைசாட்சியும் இவரேயாவார்.
1935ம் ஆண்டு, மார்ச் மாதம், 27ம் தேதி, ஐக்கிய அமெரிக்க நாடுகளின்
"ஒக்லாஹோமா"(Oklahoma) மாநிலத்திலுள்ள "ஒகார்ச்" (Okarche) நகரில்
பிறந்த இவரது தந்தை, "ஃபிரேன்ஸ் ரோதர்" (Franz Rother) ஆவார்.
தாயார், "கேர்ட்ரூட் ஸ்மித்" (Gertrude Smith) ஆவார். இவர்,
இவரது பெற்றோருக்குப் பிறந்த நான்கு குழந்தைகளுள் ஒருவராவார்.
இவருக்கு, பிறந்த மூன்றாம் நாளான மார்ச் 29ம் தேதி, நகரின்
"பரிசுத்த திரித்துவ தேவாலயத்தில்" (Holy Trinity Church), அருட்தந்தை
செனோன் ஸ்டீபர்" (Father Zenon Steber) என்பவரால்
திருமுழுக்கு அளிக்கப்பட்டது.
பண்ணைப் பணிகளில், ஸ்டேன்லி வலுவானவராகவும், திறமையானவராகவும்
இருந்தார். பின்னர் "பரிசுத்த திரித்துவ பள்ளியில்" (Holy
Trinity school) உயர்நிலைப் பள்ளி படிப்பு முடிந்த பிறகு,
குருத்துவத்திற்கான தமது அழைப்பினை தமது பெற்றோருக்கு
தெரிவித்தார். தமது மகனின் முடிவில் மகிழ்ச்சியடைந்த பெற்றோர்,
"அமெரிக்காவின் எதிர்கால விவசாயியாக கடுமையாக உழைத்ததற்கு பதிலாக,
நீ இலத்தீன் மொழியை ஏன் கற்கவில்லை" என்று கேட்டனர். இதன் தயாரிப்பிற்காக,
அவர் முதலில் "செயின்ட் ஜான் செமினரிக்கும்" (Saint John
Seminary), பின்னர் டெக்சாஸ் (Texas) மாநிலத்தின் "சேன் அன்டோனியோவில்"
(San Antonio) உள்ள "அசம்ப்ஷன் செமினரிக்கும்" (Assumption
Seminary) அனுப்பப்பட்டார். விவசாய நிலங்களில் உழைத்த அவரது திறமை,
அவரை செமினரியின் பிற பணிகளிலேயே விட்டுச் சென்றது. அவரது படிப்பு
கடுமையாக பாதிக்கப்பட்டது. இலத்தீன் மொழியை கற்றுக்கொள்ள அவர்
போராட வேண்டியிருந்தது. அவர், "கிறிஸ்தவக் தேவாலயங்களில் உள்ள
புனிதப் பொருள்களைக் காப்பவராகவும்" (Sacristan), "பள்ளி அல்லது
பிற கல்வி நிறுவனங்களின் தரையை பராமரிக்கும் ஒரு நபராகவும்" (Groundskeeper),
புத்தகம் கட்டுபவராகவும் (Bookbinder), பிளம்பர் (Plumber), மற்றும்
தோட்டக்காரனாகவும் (Gardener) பல்வேறு பணிகளைச் செய்து, ஆறு வருடங்கள்
கடினமாக உழைத்த ஸ்டேன்லியின் உழைப்பு முழுதும் வீண்போயின. கிட்டத்தட்ட
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, செமினரி ஊழியர்கள் அவரை அங்கிருந்து
விலக்கிக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.
அவரது உள்ளூர் ஆயர் "விக்டர் ரீட்" (Bishop Victor Reed) என்பவருடன்
கலந்தாலோசித்த பிறகு, "மேரிலேண்ட்" (Maryland) மாநிலத்தின்,
"எம்மிட்ஸ்பர்க்" (Emmitsburg) எனுமிடத்திலுள்ள "மவுண்ட்
செயின்ட் மேரி செமினரியில்" (Mount Saint Mary's Seminary)
சேர்ந்து குருத்துவ கல்வி கற்ற இவர், 1963ம் ஆண்டு பட்டம்
பெற்றார். 1963ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 14ம் தேதி, "மவுண்ட்
செயின்ட் மேரி செமினரியின்" தலைவர், ஆயர் "விக்டர் ரீட்" அவர்களுக்கு
எழுதிய கடிதமொன்றில், "ரோதர் இந்த செமினரியில் சிறந்த வெற்றிகரமான
போக்கை அடைந்துள்ளார். அவர் மிகவும் மதிப்புமிக்க ஒரு பங்குத்
தந்தையாக இருக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார். 1963ம் ஆண்டு,
மே மாதம், 25ம் தேதி, ரீட் இவருக்கு குருத்துவ அருட்பொழிவு
செய்வித்தார்.
பின்னர், ஸ்டேன்லி, ஒக்லாஹோமாவைச் சுற்றியுள்ள பல்வேறு பங்குகளில்
இணை பங்குத் தந்தையாக பணியாற்றினார்.
சபைக்கு நெருக்கமாக தொடர்புகொண்டு பணியாற்றுவதற்காக, அவர்
ஸ்பேனிஷ் (Spanish) மற்றும் "ஸுடுஜில்" (Tzutujil ) இன மக்கள்
பேசும், எழுதப்படாத மற்றும் உள்நாட்டு மொழியான, "மாயன்" (Mayan
language) மொழிகளை கற்றுக்கொண்டார். 1968ம் ஆண்டுமுதல், தமது
மரணம்வரை, "சேன்டியாகோ அடிட்லனில்" (Santiago Atitln) பணியாற்றினார்.
ரோதர், நடைமுறை உரையாடல்களை நன்கு புரிந்துகொள்வதற்காக, ஒரு உள்ளூர்
குடும்பத்துடன் சிறிது காலம் வாழ்ந்தார். எவ்வாறு எழுதுவது,
வாசிப்பது என்பதை காட்டவேண்டும் என்பதற்காக உள்ளூர் மக்களுடன்
பணிபுரிந்தார். மிஷனரி சொத்து நிலத்தில் அமைந்திருந்த ஒரு
வானொலி நிலையம், மொழி மற்றும் கணித படிப்பினைகளை தினசரி ஒலிபரப்பியதை
அவர் ஆதரித்தார். 1973ம் ஆண்டு அவர் எழுதிய கடிதமொன்றில்,
"நான் இப்பொழுது ஸுடுஹில்" (Tzutujil ) மொழியில் பிரசங்கிக்கிறேன்"
என்று கடிதத்தில் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். அந்த சமயத்தில்,
தமது வழக்கமான கடமைகளைவிட கூடுதலாக அவர் புதிய ஏற்பாட்டை
ஸுடுஹில்" (Tzutujil ) மொழியில் மொழிபெயர்த்தார். திருப்பலி
கொண்டாட்டங்களையும் அதே மொழியில் நிறைவேற்ற தொடங்கியிருந்தார்.
ரோதர், 1960ம் ஆண்டின் இறுதியில், "பானாபஜ்" (Panabaj) நகரில்
ஒரு சிறிய மருத்துவமனையை நிறுவினார். இந்த திட்டத்தில் "தந்தை
கார்லின்" (Father Carln) ஒரு கூட்டுப்பணியாளராக பணியாற்றினார்.
குவாட்மலாவின் நல்ல பயனுக்காக தனது விவசாய திறமைகளைப் பயன்படுத்தினார்.
ஒரு சமயம், உள்ளூர் பண்ணைகளின் நிலங்களை சீர் செய்வதற்காக காலை
7:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை புல்டோசர் (bulldozer) இயக்கி
உழைத்தார். இடையில் திருப்பலி நிறைவேற்றுவதற்காகவே வேலையை
நிறுத்தினார். அவரது வீட்டின் கதவுகள் அனைத்து மக்களுக்கும் திறந்தேயிருந்தது.
ஒரு முதியவர் ஒருவர் தினசரி மதிய உணவு வேளையின்போது அங்கே
தோன்றினார். மற்றவர்கள் தனிப்பட்ட அல்லது நிதி விவகாரங்களில்
ஆலோசனைகளுக்காக அவரை அணுகினார்கள். சிலர் தமது பல் பிடுங்குவது
போன்ற சிகிச்சைகளுக்காக வந்தனர். ஒரு சமயம், வாய் புற்றுநோயால்
(Lip Cancer) பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் ஒருவனை அழைத்துக்கொண்டு
சிகிச்சைக்காக குவாட்மலா நகருக்கு போய் வந்தார். அதிசயமாக,
சிறுவன் இறுதியில் குணமடைந்தான்.
தமது வாழ்க்கையின் இறுதி வருடத்தில், வானொலி நிலையம் நொறுக்கப்பட்டதையும்,,
அதன் இயக்குனர் கொலை செய்யப்பட்ததையும் ரோதர் கண்டார். முதலில்
காணாமல் போன அவரது மறைக் கல்வி மாணவர்களும் பங்கு பொதுநிலையினரும்
பின்னர் இறந்து காணப்பட்டார்கள். அவர்களது சடலங்களில் தாக்கப்பட்ட,
மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட அறிகுறிகள் காணப்பட்டன.
1981ம் ஆண்டின் தொடக்கத்தில், அவரது பெயர் மரண பட்டியலில் இருப்பதாக
எச்சரிக்கப்பட்டார். உயிருடன் தப்பிக்க வேண்டுமானால், குவாட்மலாவை
விட்டு வெளியேறவும் வலியுறுத்தப்பட்டார். ஜனவரி மாதம், "தந்தை,
நீங்கள் தீவிர ஆபத்தில் இருக்கிறீர்கள். உடனடியாக வெளியே வர
வேண்டும்" என்று அவரது பங்கு பொதுநிலையினர் ஒருவர் எச்சரித்தார்.
ரோதர் தயக்கம் காட்டினார், ஆயினும் அவர் ஜனவரி மாதம் ஓக்லஹோமாவிற்கு
திரும்பினார். பிற்பாடு, தாம் குவாட்மலா திரும்புவதற்கு அனுமதிக்குமாறு
அவர் பேராயரை கேட்டார். என் மக்களுக்கு நான் தேவைப்படுகிறேன்.
நான் இனிமேல் அவர்களை விட்டு விலகி இருக்க முடியாது. அவர்
திரும்புவதற்கான முக்கிய இன்னொரு காரணம், அவர் அம்மக்களுடனேயே
ஆண்டவரின் உயிர்த்தெழுதல் (Easter) விழாவை கொண்டாட
விரும்பினார். அவர் குவாட்மளாவுக்கு திரும்பிச் செல்ல விரும்புவதை
கேள்விப்பட்ட அவரது சகோதரர் "டோம்" (Tom), "ஏன் அங்கே போக
விரும்புகிறாய்? அவர்கள் அங்கே உனக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்கள் உன்னை கொன்றுவிடுவார்கள்." என்றார். ஆனால், ரோதர்,
"ஒரு மேய்ப்பன் தனது மந்தையை விட்டு விலகியிருக்க முடியாது" என்றார்.
பின்னர், ஏப்ரல் மாதம் "சேன்டியாகோ அடிட்லன்" (Santiago
Atitln) திரும்பிய அவருக்கு, தாம் கவனிக்கப்படுவது தெரிந்தே
இருந்தது.
ஜூலை மாதம், 28ம் தேதி அதிகாலை (நள்ளிரவுக்கு சற்று நேரம் கழித்து),
துப்பாக்கி ஏந்தியவர்கள் தேவாலயத்தின் மறைப்பணியாளர் இல்லத்தினுள்ளே
நுழைந்தனர். சுருக்கமான போராட்டத்தின் பின்னர் அவரை இரண்டு
முறை தலையில் சுட்டுக் கொன்றனர். கொலைகாரர்கள், அந்த நேரத்தில்
தேவாலயத்தில் இருந்த "ஃபிரான்சிஸ்கோ போசெல்" (Francisco Bocel)
என்ற இளைஞனை, "சிவப்பு தாடி ஓக்லஹோமா மிஷனரியின்" படுக்கையறைக்கு
வழிகாட்டுமாறு கட்டாயப்படுத்தினார்கள். அந்த ஆண்டு குவாட்மலாவில்
கொல்லப்பட்ட 10 குருமார்களில் தந்தை ரோதர் ஒருவர் ஆவார். அவரது
உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஸுடுஹில்" (Tzutujil ) பங்கு பொதுநிலை மக்களின் வேண்டுகோளின்படி,
அவரது இருதயம் மாத்திரம் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு,
குவாட்மலாவில் அவர் சேவை புரிந்த ஆலயத்தின் திருப்பலி பீடத்தின்
அடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. |
|
|