Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் சோலனஸ் கேசே ✠(Blessed Solanus Casey)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை/ July 30)
✠ அருளாளர் சோலனஸ் கேசே ✠(Blessed Solanus Casey)
 
குரு :
(Priest)

பிறப்பு : நவம்பர் 25, 1870
ஓக் க்ரோவ், விஸ்கோன்சின், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Oak Grove, Wisconsin, U.S)

இறப்பு : ஜூலை 31, 1957 (aged 86)
டெட்ரோய்ட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Detroit, Michigan, U.S.)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : நவம்பர் 18, 2017
கர்தினால் ஏஞ்ஜெலோ அமேட்டோ
(Cardinal Angelo Amato)

முக்கிய திருத்தலம் :
தூய பொனவென்ச்சுர் துறவு மடம், டெட்ரோய்ட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Saint Bonaventure Monastery, Detroit, Michigan, U.S.)

நினைவுத் திருநாள் : ஜூலை 30

அருளாளர் சோலனஸ் கேசே, ஒரு அமெரிக்க ரோமன் கத்தோலிக்க குருவும் (American Roman Catholic priest), ஃபிரான்சிஸ்கன் இளநிலை கப்புச்சின் சபையின் (Order of Friars Minor Capuchin) உறுப்பினருமாவார்.

அவர் தனது வாழ்நாளில், தாம் கொண்ட பெரும் விசுவாசத்திற்காகவும், ஒரு ஆன்மீக ஆலோசகராகவும், தனது திறமைகளுக்காகவும் வியக்கத்தக்க செயல்களை செய்பவராக,அறியப்பட்டார். ஆனால், நோய்வாய்ப்பட்டோர் மீது அவர் செலுத்திய விசேட கவனம் காரணமாக, அவர்களுக்காக அவர் திருப்பலிகளும் நிறைவேற்றினார். இவர் வசித்த டெட்ரோயிட் நகரில், அதிக மக்கள் நாட்டுச் செல்பவராகவும், மதிப்பு மிக்கவராகவும் இருந்தார். வயலின் இசைக்கருவி மீது தீராத காதல் கொண்டிருந்த இவர், தமது முன்னோரான புனிதர் "ஃபிரான்சிஸ் சொலனஸ்" (Saint Francis Solanus) என்பவரின் பெயருடன் தம் பெயரையும் பகிர்ந்து கொண்டார்.

"பெர்னார்ட் ஃபிரான்சிஸ் கேசே" (Bernard Francis Casey) எனும் இயற்பெயர் கொண்ட இவர், 1870ம் ஆண்டு, நவம்பர் மாதம், 25ம் தேதியன்று, வடமத்திய ஐக்கிய அமெரிக்காவின் "விஸ்கோன்சின்" (Wisconsin) மாநிலத்தின் "பியர்ஸ்" (Pierce County) மாகாணத்தின் "ஓக் க்ரோவ்" (Oak Grove) நகரத்தில் பிறந்த இவரது தந்தையார் "பெர்னார்ட் ஜேம்ஸ் கேசே" (Bernard James Casey) ஆவார். இவரது தாயாரின் பெயர், "எலன் எலிசபெத் மர்ஃபி" (Ellen Elizabeth Murphy) ஆகும். இவர், ஐரிஷ் நாட்டிலிருந்து (Irish immigrants) குடிபெயர்ந்து வந்த இவரது பெற்றோரின் பதினாறு குழந்தைகளில் ஆறாவது குழந்தை ஆவார். அதே வருடம், டிசம்பர் மாதம், 18ம் நாளன்று, இவருக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்டது.

1878ம் ஆண்டு, "டிப்தீரியா" (Diphtheria) எனப்படும் தொண்டை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட இவரது குரல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. அந்நோய், அவரது குரலில் பிசிறுதட்டும் குறைபாட்டை விட்டுச் சென்றது. அதே வருடம், இந்நோயால் பாதிக்கப்பட்ட, குழந்தைப் பருவத்திலிருந்த இவரது இரண்டு சகோதரர்கள் மரணமடைந்தனர். பின்னர், இவர்களது குடும்பம், "ஹட்சன்" (Hudson) நகருக்கு குடிபெயர்ந்தது. 1882ம் ஆண்டு, அக்டோபர் மாதம், "செயின்ட் க்ரோய்க்ஸ்" (Saint Croix County) மாகாணத்திலுள்ள "புர்க்கார்ட்" (Burkhardt) நகருக்கு மீண்டும் குடிபெயர்ந்து சென்றது. 1887ம் ஆண்டில், தனது சொந்த மாநிலத்திலும், அருகிலுள்ள "மின்னெசோட்டா" (Minnesota) மாநிலத்திலும், "லும்பெர்க்ஜேக்" (Lumberjack) எனப்படும் (வட அமெரிக்க தொழிலாளர்கள் செய்யும் மரங்களை வெட்டுதல், சறுக்கல், ஸ்தல செயலாக்கம் மற்றும் மரங்களை லாரிகளில் ஏற்றுதல் அல்லது பதிவு செய்தல் ஆகிய வேலைகள்), "மருத்துவமனை ஒழுங்குப் பணியாள்" (Hospital Orderly), "மின்னசோட்டா மாநில சிறையில் பாதுகாப்பு பணி" (Guard in the Minnesota State Prison) மற்றும் கார் ஓட்டுனர் பணி போன்ற தொடர்ச்சியான வேலைகளுக்காக பண்ணையை விட்டு வெளியேறினார். சிறையில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது, அமெரிக்க சட்டவிரோத (Outlaw), வங்கி (Bank) மற்றும் ரயில் கொள்ளைக்காரனும் (Train Robber), கெரில்லாவுமான (Guerrilla), "ஜெஸ் ஜேம்ஸ்" (Jesse James) எனும் சம வயதுடைய ஒருவரின் நட்பும் கிடைத்தது. ஆரம்பத்தில், அவர் மொழி செய்துகொள்ள விரும்பினார். ஆனால், தாம் பார்த்த பெண்ணின் தாய், அவளை ஒருநாள் திடீரென உண்டுறை பள்ளியில் (Boarding School) சேர்த்துவிட்டார்.

அவர் கடைசியாக செய்த வேலையில் பணியாற்றும் போது ஒருநாள், கொடூரமாக நடைபெற்ற கொலை ஒன்றினை காண நேர்ந்தது. அது, இவரது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மதிப்பீடு செய்ய இவருக்கு உதவியது. ஒருநாள், போக்கிரிகள் நிறைந்த நகரின் "சுபீரியர்" பகுதியில் கார் ஓட்டிச் செல்கையில், ஒரு குடிகார கடற்படை வீரன், ஒரு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றதைக் கண்டார். அந்த நேரத்தில்தான் தாம் குருத்துவ வாழ்விற்கு அழைக்கப்பட்டதை உணர்ந்தார். ஆனால், 1891ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமது குறைவான கல்வித் தகுதியின் காரணமாக, "மில்வௌகி உயர்மறைமாவட்டத்தின்" (Archdiocese of Milwaukee) இளநிலை செமினரியான (Minor Seminary), செயின்ட் பிரான்சிஸ் உயர்நிலை பள்ளி செமினரியில் (Saint Francis High School Seminary) மறைமாவட்ட குரு (Diocesan Priest) ஆவதற்கான கல்வி கற்க சேர்ந்தார். அங்கே கற்பிக்கப்பட்ட வகுப்புகள் அனைத்தும் ஜெர்மனி அல்லது இலத்தீன் மொழிகளில் நடத்தப்பட்டன. இம்மொழிகளின் பேச்சுவழக்கினை இவர் அறிந்திருக்கவில்லை. காலப்போக்கில், அவருடைய கல்விக் குறைபாடுகளின் காரணமாக, - ஒரு மதகுருவாக ஆவதற்கு அவர் விரும்பினால் ஒரு மத சபையில் சேர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தப்பட்டார். அங்கே, அவர் ஒரு எளிய குருவாக (Simplex Priest) குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்படுவார் என்றனர். திருப்பலி நிறைவேற்றும் உரிமை மட்டுமுள்ள அதில், பொதுக்கூட்டங்களில் பிரசங்கிக்கவோ, கற்பிக்கும் பணிகளோ, ஒப்புரவு வழங்கும் அதிகாரமோ கூட கிடைக்காது. சபையில் சேர்வதற்கான தமது விண்ணப்பத்தைத் தயாரிப்பதற்கு முன்னர் அவர் வீடு திரும்பினார்.

செய்வதறியாது திகைத்த பெர்னார்ட் ஃபிரான்சிஸ் கேசே, தமது மனநிலையை, அர்ச்சிஷ்ட அன்னை கன்னி மரியாளின் (Blessed Virgin Mary) திருச்சொரூபம் ஒன்றின் முன்பு அறிக்கையிட்டு மன்றாடியபோது, அன்னையின் தெளிவான ஸ்பஷ்டமான குரல், அவரை "டெட்ரோய்ட்" (Detroit) செல்ல உத்தரவிட்டதை அவரால் கேட்க முடிந்தது. பின்னர் அவர், அந்நகரின் "ஃபிரான்சிஸ்கன் இளநிலை கப்புச்சின்" (Order of Friars Minor Capuchin) சபையில் சேர விண்ணப்பித்தார். 1897ம் ஆண்டு, ஜனவரி மாதம், 14ம் தேதி, அவர் அச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவருக்கு புனிதர் "ஃபிரான்சிஸ் சோலனஸ்" (Saint Francis Solanus) நினைவாக, "சோலனஸ்" என்ற ஆன்மீகப் பெயர் தரப்பட்டது. இருவருமே வயலின் இசைக்கருவியை காதலித்தனர். 1898ம் ஆண்டு, ஜூலை மாதம், 21ம் நாளன்று, தமது சத்தியப் பிரமாணங்களை ஏற்ற அவர், கல்வியில் கஷ்டப்பட்டாலும், 1904ம் ஆண்டு, ஜூலை மாதம், 24ம் தேதி, "மில்வௌகி" (Milwaukee) நகரிலுள்ள "அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் தேவாலயத்தில்" (Saint Francis of Assisi Church), பேராயர் "செபாஸ்டியன் மெஸ்மர்" (Archbishop Sebastian Messmer) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

அவர், நியூ யார்க் (New York) நகரில், அடுத்தடுத்து இரண்டு தசாப்தங்களாக, பலவகைப்பட்ட துறவியரிடையே பணியாற்றினார். அவருக்கு ஒதுக்கப்பட்ட்ட முதல் பணி ஸ்தலம், "யோங்கர்ஸ்" (Yonkers) நகரிலுள்ள "திருஇருதய துறவு மடம்" (Sacred Heart Friary) ஆகும். பின்னர், நியூ யார்க் (New York) நகருக்கு மாற்றப்பட்ட அவர், முதலில் "பென் ஸ்டேஷனுக்கு" (Penn Station) அருகிலுள்ள "தூய யோவான் ஆலயத்தில்" (Saint John's Church) பணிபுரிந்தார். அதன்பின்னர், "ஹார்லெம்" (Harlem) எனும் மாநகரிலுள்ள அன்னை தேவலோகத்தினரின் அரசி" (Our Lady Queen of Angels) ஆலயத்தில் பணிபுரிந்தார்.

ஒரு எழுச்சியூட்டும் பேச்சாளராக அங்கீகரிக்கப்பட்ட தந்தை சோலனஸ், 1924ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், "டெட்ரோய்ட்" (Detroit) நகரிலுள்ள "புனிதர் பொனவென்ச்சர் பள்ளிக்கு" (Saint Bonaventure convent) மாற்றப்பட்டார். 1945ம் ஆண்டுவரை, சுமார் 21 வருடங்கள் அங்கே இருந்த அவர், அங்கிருந்த அதிக காலம் ஒரு சாதாரண சுமை தூக்குபவராகவும் (Porter), வரவேற்பாளராகவும் (Receptionist), வாயிற்காப்போனாகவும் (Doorkeeper) வேலை செய்தார். ஒவ்வொரு புதன்கிழமை பிற்பகலிலும், நோயாளிகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சேவைகளை அவர் நடத்தினார். இந்த சேவைகள் மூலம், அவர் தனது பெரும் கருணை மற்றும் அவரது ஆலோசனைகளின் மூலம், நோயாளிகளுக்கு அற்புதமான முடிவுகள் கிடைத்ததனால் இவர் பரவலாக அறியப்பட்டார். மக்கள் அவரை குணப்படுத்தக்கூடிய கருவியாகவும், பிற ஆசீர்வாதங்களுக்கான கருவியாகவும் கருதினர். இரவின் அமைதியில், நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக முழந்தாழிட்டு ஆழ்ந்த தியானத்தில் மூழ்க அவர் நேசித்தார். ஒருமுறை, இந்த பள்ளியில் தமது அனுபவத்தை நினைவுகூர்ந்த அருட்தந்தை "பெனடிக்ட் குரோஸ்செலி" (Father Benedict Groeschel), இரவு நேரங்களில், திருப்பலிபீடத்தின் மேல் படியிலே, முழந்தாழிட்டு, தந்தை சோலனஸ் அசைவற்று செபிப்பதை தாம் பல இரவுகள் கண்டிருப்பதாக கூறுகிறார்.

வயலின் இசைக் கருவியை இயக்கும் திறன் கொண்டிருந்த்த சோலனஸ், பொழுதுபோக்கு நேரங்களில், தமது சக துறவியருக்காக, ஐரிஷ் மொழி பாடல்களை பாடி இசைத்தார். அவரது குழந்தை பருவ பேச்சு தடை காரணமாக, அவரது குரல் பயங்கரமாக இருந்தது. அடிக்கடி விரதங்களிருந்த இத்துறவி, போதுமான அளவே உண்டார். தமது எழுபதுகளில் கூட, இளம் துறவியருடன் டென்னிஸ் (Tennis), வாலிபால் (Volleyball) மற்றும் ஓட்டம் (Jogging) போன்ற விளையாட்டுக்களையும் விளையாடுவதுண்டு.

1946ம் ஆண்டுமுதலே பலவீனமடைந்து, நோய்வாய்ப்பட ஆரம்பித்த இவருக்கு "எக்சீமா" (Eczema) எனப்படும் சிரங்கு நோய், உடல் முழுதும் பரவ ஆரம்பித்தது. "இண்டியானா" (Indiana) மாநிலத்தின் "ஹன்டிங்க்டன்" (Huntington) நகரிலுள்ள "புனிதர் ஃபெலிக்ஸ்" கபுச்சின் புகுமுக துறவியர்" (Capuchin novitiate of Saint Felix) பயிற்சியகத்திற்கு மாற்றப்பட்டார். 1956ம் ஆண்டுவரை, அங்கேயே டெட்ரோய்ட் நகரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1957ம் ஆண்டு, உணவு விஷத் தன்மையாக (Food Poisoning) மாறியதற்காக மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சைகளுக்கு அப்பாலான (Erysipelas) அல்லது (Psoriasis) ஆகிய நோய்கள் இருப்பதகாக மருத்துவர்கள் சொன்னார்கள். புண்கள் குணமடத் துவங்கும் வரை, உறுப்புகள் துண்டிக்கப்படுவது (Amputation) அவசியமாக மருத்துவர்கள் கருதினார்கள்.

சோலனஸ் கேசே, 1957ம் ஆண்டு, ஜூலை மாதம், 31ம் தேதி, டெட்ரோய்ட் (Detroit) நகரிலுள்ள புனிதர் யோவான் மருத்துவமனையில் (Saint John Hospital) மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா