Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் பியர் ஜியோர்ஜியோ ஃப்ரசட்டி ✠(Blessed Pier Giorgio Frassati)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill 04)
✠ அருளாளர் பியர் ஜியோர்ஜியோ ஃப்ரசட்டி ✠(Blessed Pier Giorgio Frassati)
 

சமூக ஆர்வலர் / பொதுநிலையினர் :
(Social Activist and Layman)

பிறப்பு : ஏப்ரல் 6, 1901
டுரின், இத்தாலி அரசு
(Turin, Kingdom of Italy)

இறப்பு : ஜூலை 4, 1925 (வயது 24)
துரின், இத்தாலி அரசு
(Turin, Kingdom of Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : 20 மே 1990
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

திருவிழா ஜூலை 4

பாதுகாவல் :
மாணவர்கள் (Students)
இளம் கத்தோலிக்கர்கள் (Young Catholics)
மலை ஏறுபவர்கள் (Mountaineers)
இளைஞர் குழுக்கள் (Youth groups)
கத்தோலிக்க நடவடிக்கை (Catholic Action)
டொமினிகன் மூன்றாம் நிலை (Dominican tertiaries)
உலக இளைஞர் தினம் (World Youth Day)

அருளாளர் பியர் ஜியோர்ஜியோ ஃப்ரசட்டி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க சமூக ஆர்வலரும் (Italian Roman Catholic social activist), டோமினிகன் மூன்றாம் சபையின் (Third Order of Saint Dominic) உறுப்பினரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அருளாளருமாவார்.

இவர், 1901ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 6ம் தேதி, "புனித சனிக்கிழமையன்று" (Holy Saturday), டுரின் (Turin) நகரில், ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். "லா ஸ்டம்பா" (La Stampa) என்னும் செய்தித்தாளினைத் துவங்கி நடத்திவந்த இவரின் தந்தையின் பெயர், "அல்ஃபிரடோ ஃப்ரசட்டி" (Alfredo Frassati) ஆகும். இவரது தாயாரான "அடேலைட் அமெட்டிஸ்" (Adelaide Ametis), ஒரு பிரபல ஓவியர் ஆவார். இவரது ஒரே சகோதரியான "லூசியானா (Luciana Gawronska), 2007ம் ஆண்டு, தமது 105 வயதில் மரித்தார். இவர், கல்வியில் சுமாராயிருப்பினும், தன் நண்பர்கள் மத்தியில் பக்திக்கும் விசுவாசத்திற்கும் பேர்போனவர் ஆவார்.

இவர் ஈகை, செபம் மற்றும் சமூகப் பணிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார். இவர் கத்தோலிக்க இளையோர் மற்றும் மாணாக்கர் சங்க உறுப்பினர் ஆவார். மேலும் டோமினிக்கன் மூன்றாம் (Third Order of Saint Dominic) சபையில் சேர்ந்திருந்தார். இவர் அடிக்கடி "ஈகை மட்டும் போதாது, சமூகப் மறுமலர்ச்சியும் தேவை" என்பார். திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் (Pope Leo XIII) சுற்றுமடலான (Rerum novarum) இன்படி ஒரு செய்தித்தாளை துவங்க உதவினார். 1918ம் ஆண்டு, புனித வின்சண்ட் தே பவுல் சபையில் (Saint Vincent de Paul group) சேர்ந்து தன் நேரத்தை ஏழைகளுக்கு உதவுவதில் செலவிட்டார். தன் பெற்றோரிடமிருந்து பெறும் பயணச்செலவை குறைக்க, மூன்றாம் தர தொடர்வண்டியில் பயணம் செய்தார். இதனால் சேமித்த தொகையை ஏழைகளுக்கு கொடுத்தார்.

இவர் பங்குபெற்ற பக்த சபைகளில் வெளிப்போக்காக இல்லாமல், முழுமையாக ஈடுபட்டார். பாசிச கொள்கைகளுக் எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டார்.

ஒரு முறை ரோம் நகரில், கத்தோலிக்க திருச்சபையினால் ஆதரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வேறோருவர் கையிலிருந்து காவலர்கள் தட்டிவிட்ட விளம்பர பதாகையை இவர் இன்னும் உயத்திப்பிடித்தபடி சென்றார். இதனால் இவர் சிறை செல்ல நேர்ந்தது. அங்கே தன் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தவில்லை. ஒருமுறை இவர் வீட்டினுள் பாசிசர்கள் புகுந்து இவரையும் இவரின் தந்தையையும் தாக்கினர். இவர் தனியொரு ஆளாய் அவர்களைத் தாக்கி தெருவில் ஓட ஓட விரட்டினார்.

1925ம் ஆண்டு, தனது 24ம் வயதில், இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, இவர் மரித்தார். இவரின் குடும்பத்தினர் வியப்புக்குள்ளாகும் வகையில் இவரது இறுதி ஊர்வலத்தில் பெரும் திரளான ஏழை மக்கள் கலந்துக்கொண்டனர். இம்மக்களின் வேண்டுதலுக்கு இணங்கி டுரின் நகர பேராயர் புனிதர் பட்டத்திற்கான முயற்சிகளை 1932ம் ஆண்டு, துவங்கினார். மே 1990ம் ஆண்டு, மே மாதம், 20ம் நாளன்று, முக்திபேறு பட்டம் அளிக்கையில், திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II), இவரை மலைப்பொழிவின் மனிதர் எனப் புகழ்ந்தார். இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூலை மாதம், 4ம் நாளாகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா