✠ அருளாளர் ஜான் இங்க்ராம் ✠ (Blessed John
Ingram) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை
/
july-
26) |
✠ அருளாளர் ஜான் இங்க்ராம் ✠ (Blessed John
Ingram)
ஆங்கிலேய இயேசுசபை குரு, மறைசாட்சி:
(English Jesuit and Martyr)
பிறப்பு: கி.பி. 1565
ஸ்டோக் எடித், ஹியர்ஃபோர்ட்ஷைர்
(Stoke Edith, Herefordshire)
இறப்பு: ஜூலை 26, 1594
கேட்ஷீட் (Gateshead)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholicism)
முக்திபேறு பட்டம்: 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI)
அருளாளர் ஜான் இங்க்ராம், ஒரு ஆங்கிலேய இயேசுசபை குருவும்
(English Jesuit), இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின்
மகாராணியான (Queen of England and Ireland), முதலாம் எலிசபெத்தின்
(Elizabeth I) ஆட்சி காலத்தில், கத்தோலிக்க மறையின்மீது தமக்கிருந்த
விசுவாசம் காரணமாக, மறைசாட்சியாக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டவருமாவார்.
இவரது தந்தை, "அந்தோணி இங்க்ராம்" (Anthony Ingram of Wolford)
ஆவார். இவரது தாயார், "டாரதி" (Dorothy, daughter of Sir John
Hungerford) ஆவார். இவர், இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்டில்
உள்ள "வொர்செஸ்டர்ஷைர்" (Worcestershire) எனும் மாவட்டத்தில்
உள்ள "ஆக்ஸ்ஃபோர்ட்" பல்கலையின் "நியூ கல்லூரியில்" (New
College, Oxford) கல்வி பயின்றார். பின்னர், கத்தோலிக்க மறைக்கு
மனம் மாறிய இவர், "ரெய்ம்ஸ்" நகரிலுள்ள "ஆங்கிலேய கல்லூரி"
(English College, Rheims) எனும் கத்தோலிக்க செமினாரியில் (Catholic
seminary) குருத்துவ கல்வி பயின்றார். (இது, தற்போதைய
ஃபிரான்சில் உள்ளது). பின்னர், "பொன்ட்-எ-மௌஸ்ஸோன்" (Pont-a-Mousson)
எனும் இயேசுசபை கல்லூரியிலும், பின்னர் ரோம் (Rome) நகரிலுள்ள
ஆங்கிலேய கல்லூரியிலும் (English College, Rome) கற்றார்.
கி.பி. 1589ம் ஆண்டு, ரோம் (Rome) நகரில் குருத்துவ அருட்பொழிவு
பெற்ற இவர், கி.பி. 1592ம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்காட்லாந்து
(Scotland) நாட்டுக்குச் சென்றார். அங்கே அவர் பல சக்திவாய்ந்த
பிரமுகர்களுடன் நட்பு கொண்டார். அங்கே, ஸ்கோட்டிஷ் ரோமன் கத்தோலிக்க
(Scottish Roman Catholic intriguer) அறிஞரான "வால்ட்டர்
லிண்ட்சே" (Walter Lindsay of Balgavie) என்பவரது சிற்றாலய
குருவாக 18 மாதங்கள் நியமனம் பெற்றிருந்தார்.
கி.பி. 1593ம் ஆண்டு, நவம்பர் மாதம், 25ம் தேதி,
"நார்தும்பர்லாந்து" (Northumberland) மாகாணத்திலுள்ள "ட்வீட்"
(River Tweed) நதிக்கரையோரமுள்ள "வார்க்" (Wark on Tweed) எனும்
கிராமத்தில் வைத்து பிடிபட்ட ஜான் இங்க்ராம், கைது செய்யப்பட்டு
முதலில் "பெர்விக்" (Berwick) சிறையிலடைக்கப்பட்டார். பின்னர்
"டர்ஹம்" (Durham), "யோர்க்" (York) ஆகிய ஊர்களிலுள்ள
சிறைச்சாலைகளிலும், இறுதியாக "டவர் ஆஃப் லண்டன்" (Tower of
London) எனும் சித்திரவதைக் கூட சிறையிலும் அடைக்கப்பட்டார்.
அங்கே, அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார். அவர் இருபது
இலத்தீன் புராணங்களை (Latin epigrams) எழுதினார். அவை இன்றளவும்
உள்ளன.
லண்டன் டவரில் அவருக்கு நேர்ந்த கடுமையான சோதனைகளின் பின்னர்,
அவர் மீண்டும் வடக்கிலுள்ள யோர்க் (York), நியு காஸ்டில்
(Newcastle) மற்றும் "டர்ஹம்" (Durham) சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டார்.
அங்கே அவர், புனிதர் "ஜான் போஸ்ட்"(John Boste) போன்றோருடன்
சேர்த்து விசாரிக்கப்பட்டார்.
வெளிநாடுகளில் குருத்துவம் பெற்ற கத்தோலிக்க குருக்களுக்கு இங்கிலாந்து
நாட்டில் தடை இருந்தது. தடையை மீறி அங்கே இருப்பது, இராஜதுரோகமாக
கருதப்பட்டது. இங்கிலாந்தில் அவர் எப்போதுமே ஒரு கத்தோலிக்க
குருவாக செயல்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லாதிருந்தும்,
மேற்படி சட்டப்படி, வடக்கு இங்கிலாந்தின் "டர்ஹாம்" (Durham)
நகரிலுள்ள "அஸ்ஸிஸஸ்" (Assizes) எனப்படும் ஒரு விசாரணை நீதிமன்றத்தால்
கி.பி. 1594ம் ஆண்டு, ஜூலை மாதம், 23ம் நாளன்று தண்டிக்கப்பட்டார்.
ஸ்காட்லாந்தில் உள்ள யாரோ ஒருவர், இன்க்ராமின் தண்டனையிலிருந்து
காப்பாற்றுவதற்காக, ஆயிரம் கிரீடங்களை ஆங்கில அரசாங்கத்திற்கு
வழங்கியதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் வீணாயின.
நியூகேஸ்டல் (Newcastle) அதிகாரிகள் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான
பொருப்பிலிருந்ததால், இங்க்ராம் நியூகேஸ்டல் நகரிலுள்ள
நியூகேட் சிறைச்சாலைக்கு (Newgate Prison) மாற்றல் செய்யப்பட்டார்.
தண்டனை நாளான ஜூலை மாதம், 26ம் நாள், வெள்ளிக்கிழமையன்று,
"கேட்ஸ்ஹெட் ஹை ஸ்ட்ரீட்" (Gateshead High Street) எனுமிடத்திலுள்ள
பாலத்தின் (தற்போதைய தொங்குபாலம் (Swing Bridge) குறுக்கேயுள்ள
தூக்கு மரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கி.பி. 1594ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் தேதி, "கேட்ஸ்ஹெட்"
(Gateshead) நகரில் ஜான் இங்க்ராம் தூக்கிலிடப்பட்டார்.
|
|
|