Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் வெரோனிகா கிலியானி ✠ (St. Veronica Giuliani)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 09)
✠ புனிதர் வெரோனிகா கிலியானி ✠ (St. Veronica Giuliani)

பெண்கள் துறவு மடாதிபதி மற்றும் கத்தோலிக்க மறைபொருள்:
(Abbess and Catholic mystic)

பிறப்பு: டிசம்பர் 27, 1660
மேர்சடேல்லோ சுல் மேடௌரோ, ஊர்பினோ (இத்தாலி)
(Mercatello sul Metauro, Duchy of Urbino (Italy)

இறப்பு: ஜூலை 9, 1727 (வயது 66)
ஸிட்டா டி கஸ்டெல்லோ, திருத்தந்தையர் மாநிலம், (இத்தாலி)
(Citt di Castello, Papal States (Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 17, 1804
திருத்தந்தை ஏழாம் பயஸ்
(Pope Pius VII)

புனிதர் பட்டம்: மே 26, 1839
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)

முக்கிய திருத்தலம்:
புனிதர் வெரோனிகா கிலியானி துறவு மடம், ஸிட்டா டி கஸ்டெல்லோ
(Monastery of St. Veronica Giuliani, Citt di Castello)

நினைவுத் திருநாள்: ஜூலை 9

புனிதர் வெரோனிகா கிலியானி, ஒரு இத்தாலிய "கபுச்சின் எளிய கிளாரா" சபையின் அருட்சகோதரியும் (Italian Capuchin Poor Clares nun), மறைபொருளும், (Mystic) ஆவார்.

"ஊர்சுளா கிலியானி" (Ursula Giuliani) என்ற இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலியின் "மெர்சடேல்லோ" (Mercatello) என்ற இடத்தில், கி.பி. 1660ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 27ம் தேதியன்று, பிறந்தார். இவருடைய தந்தை ஃபிரான்செஸ்கோ" (Francesco) ஆவார். இவரது தாயார் பெயர் "பெனேடேட்டா" (Benedetta Mancini Giuliani) ஆகும். இவரது பெற்றோருக்கு பிறந்த ஏழு பெண் குழந்தைகளில் இவர் கடைசி குழந்தை ஆவார். சகோதரிகள் எழுவரில் மூவர் துறவு வாழ்க்கையை தேர்வு செய்துகொண்டனர்.

இவருக்கு ஏழு வயதான போது இவரது தாயார் மரித்துப் போனார். குழந்தைப் பருவத்தில் இவர் சற்றே முரடாகவும் முன்கோபியாகவும் இருந்தார். ஆனால் பதினாறு வயதில் இவர் கண்ட ஒரு திருக்காட்சி, இவரது குறைபாடுள்ள குணத்தை மாற்றியமைத்தது. மகளுக்கு திருமண வயது வந்ததை உணர்ந்த தந்தை, ஊர்சுளாவுக்கு திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார். ஆனால், இவர் தந்தையிடம் அழுது கெஞ்சி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். மகளின் விருப்பத்தை அறிந்துகொண்ட தந்தை, அவரை தாம் விரும்பிய வாழ்வினை தேர்ந்தெடுக்க அனுமதியளித்தார்.

கி.பி. 1677ம் ஆண்டு, 17 வயதான ஊர்சுளா, இத்தாலியின் "ஊம்ப்ரியா" (Umbria) மாநிலத்திலுள்ள "ஸிட்டா டி கஸ்டெல்லோ" (Citt di Castello) என்னுமிடத்திலுள்ள "கபுச்சின் எளிய கிளாரா" (Capuchin Poor Clares) பெண் துறவு மடத்தில் இணைந்தார். இறைவனின் பாடுகளின் நினைவாக "வெரோனிகா" (Veronica) எனும் ஆன்மீக பெயரையும் ஏற்றார். இவர் துறவு மடத்தில் இணைந்த அன்று, ஆயர் இவரது மடாதிபதியிடம் கூறியதாவது, "நான் இந்த புதிய மகளை உங்கள் சிறப்பு கவனிப்பிற்கு விடுகிறேன்; ஏனென்றால், இவர் ஒருநாள் மிகவும் பெரிய புனிதராவார்" என்றார்.

வெரோனிகா தனது ஆன்மீக வழிகாட்டிகளின் (Spiritual Directors) விருப்பத்திற்கு முழுமையாக கீழ்ப்படிந்தார். துறவற வாழ்வின் முதல் ஆண்டில் அவர் சமையலறை, மருத்துவமனை மற்றும் புனிதப் பாத்திரங்கள், அங்கிகள் முதலானவை வைக்கும் இடம் ஆகிய இடங்களில் பணியாற்றினார். அத்துடன் சுமை தூக்குபவராகவும் பணியாற்றினார். இறுதியில், தமது 34 வயதில், புதுமுக பெண் துறவியரின் தலைவரானார்.

அருட்சகோதரி வெரோனிகா, ஐம்பது வருடங்கள் கபுச்சின் பள்ளியில் வாழ்ந்தார். 34 வருடங்கள் புதுமுக பெண் துறவியரின் தலைவராக தாழ்ச்சியுடனும், 11 வருடங்கள் மடாதிபதியாக உறுதியுடனும் கண்டிப்புடனும் வாழ்ந்தார்.

வெரோனிகா தமது வாழ்நாள் முழுதும் கிறிஸ்துவின் பாடுகளின்பால் அளப்பரிய பக்தி கொண்டிருந்தார். அந்த பக்தியானது, இறுதியில் அவரது உடல் அடையாளங்களில் வெளிப்பட்டது. கி.பி. 1694ம் ஆண்டு, கிறிஸ்துவின் முள்முடியின் அடையாளம் அவரது முன் நெற்றியில் தோன்றியது. கி.பி. 1697ம் ஆண்டு, இறைவனின் ஐந்து காய அடையாளங்கள் இவரது உடம்பிலும் தோன்றின.

ஆனால், அவருடைய ஆயரின் கடுமையான சோதனைகள் அவருடைய அனுபவத்தை அவமானப்படுத்தியது. அவர் சாதாரண சமுதாய வாழ்க்கையில் இருந்து நீக்கப்பட்டார் மற்றும் அவருடன் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அந்த நிகழ்வுகள் உண்மையானவை என்று ஆயர் முடிவு செய்தபோதுதான் அவர் மீண்டும் அவரது துறவு மடத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.

கி.பி. 1727ம் ஆண்டு, ஜூலை மாதம், 9ம் தேதியன்று, "ஸிட்டா டி கஸ்டெல்லோ" (Citt di Castello) நகரில் வெரோனிகா மரித்தார்.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா