Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(18)  யோபு


1. யோபு வாழ்ந்து வந்த இடம் இது?

     ஊசூ. (1:1)


2. யோபு எப்படிப்பட்ட மனிதர்?
      அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞசி
      தீயதை விலக்கி வந்தார்.(1:1)


3. யோபுவுக்கு எத்தனை மக்கள் இருந்தனர்?
    ஏழு புதல்வரும், 3புதல்வியரும். (1:2)

4. கடவுள் யோபுவைப்பற்றி சாத்தானிடம் கூறியது என்ன?
    யோபு நல்லவன், தீமையானதை விலக்கி நடப்பவன். (1:8)

5. சாத்தான் கடவுளிடம் கூறியது என்ன?
    "அவருக்குரியவற்றின் மீது கை வையும்.  அப்போது அவன் உம் முகத்திற்கு
      நேராகவே உம்மைப் பழிப்பான்" (1:11)

6. யோபுவைச் சோதிக்க கடவுள் சாத்தானுக்கு அனுமதி அளித்தாரா?
     "ஆம், அவன் மீது மட்டும் கை வைக்காதே" என்றார். (1:12)

7. சாத்தான் செய்தது என்ன?
    யோபுவுக்கு இருந்த அனைத்து உடைமைகளையும் அழித்து விட்டது. (1:13-20)

8. யோபு கூறியது என்ன?
    "என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்: அங்கே
    திரும்புகையில்  பிறந்த மேனியாய் யான் செல்வேன்: ஆண்டவர் அளித்தார்:
    ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" (1:21)

9. கடவுள் யோபுவுக்கு என்ன கைமாறு அளித்தார்?
      ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். (42:10)

10. யோபு எவ்வளவு காலம் வாழ்ந்தார்?
       140 ஆண்டுகள். (42:16)
 
 

தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என் உள்ளம் தாயுனைத்தேடி கூவிடும் குரல் கேளாய்!