Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

 மாதாபாடல்கள்   விண்மீன் முடியென  
வாழ்க மரியே வாழ்க
வாழ்க மரியே வாழ்க

விண்மீன் முடியென அணிந்தவளே
எங்கள் மரியே நீ வாழ்க
விண்ணக மண்ணக காவலியே
எங்கள் மாதா நீ வாழ்க - (2)

அம்மா நீ வாழ்க
அமலியே நீ வாழ்க
அடைக்கலமே வாழ்க - எங்கள்
ஆறுதலே வாழ்க - (2)

ஏழை மகனாம் இயேசுவுக்கு நீ
எண்ணும் எழுத்தும் போதித்தாய்
எல்லாம் அறிந்த இறைவனுக்கே
உறைவிடம் ஆனவளே - (2)
பிள்ளைகள் எம்மை கண்பாரும்
அறிவில் கரை சேரும் - (2)
கண்மணிபோல் காத்திடம்மா
வழித்துணையும் நீயம்மா - (2)

வேளை நகரில் அமர்ந்தவளே நீ
வேண்டும் வரங்கள் அருள்வாயே
தேவையில் தேடி வருவோரை
தேற்றிடும் தாரகையே - (2)
கருணை மழையே கார்முகிலே
கனிவே கனியமுதே - (2)
கரம் பிடித்தே எமை நடத்தும்
ஒளியின் வழியே நீயம்மா - (2)


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்