நன்றிப்பாடல்கள் | அன்பினில் துள்ளிடும் நெஞ்சம் |
அன்பினில் துள்ளிடும் நெஞ்சம் உந்தனின் இல்லிடம் தஞ்சம் விந்தையில் உன் செயல் எண்ணி நன்றியில் மகிழ்ந்து பாடும் நன்றி (3) எந்தன் நன்றி நன்றி (2) நெஞ்சம் சொல்லும் நன்றி வாழ்வினைப் பிறர் வாழ்ந்திட தரும் அன்பு சிறந்ததென்றாய் சொன்னதை பலர் ஏற்றிட உயிர் மண்ணில் கொடுத்துச் சென்றாய் உன்னருள் இன்று எம் உள்ளம் சேர்ந்ததே உன் துணை பெற்றதால் நெஞ்சம் பாடுதே நன்றி (3) எந்தன் நன்றி நன்றி (2) நெஞ்சம் சொல்லும் நன்றி இயேசு உன்வழி ஏகிடவரும் நெஞ்சில் சோகம் இல்லை பேசும் உன் மொழி கேட்டபின் எனில் அச்சம் ஏதுமில்லை உன் வழி அன்புடன் என்னைக் கண்டதே உன்னிலே கலந்ததே எந்தன் நெஞ்சமே நன்றி (3) என்றன் நன்றி நன்றி (2) நெஞ்சம் சொல்லும் நன்றி |