நன்றிப்பாடல்கள் | கவினுறு கவிதைகள் புனைந்து |
கவினுறு கவிதைகள் புனைந்து களித்திடும் புதுமை உணர்வு பெற்று கனிந்திடக் கண்டேன் மன்னவனே உன் திருவடி தொழுதிட்டேன் உந்தன் கையில் என்றும் வளர பனியின் துளியிலே உன் முகம் தெரிந்திட பகிர்ந்திடும் சொல்லினுள் எழில்வண்ணம் மிளிர்ந்திட பகலவன் ஒளியினுள் ஆ...ஆ... ஆ... ஆ... ஆ... பகலவன் ஒளியினுள் கலைத்திறன் விளங்கிட பரமனே..... தலைவனே.... பணிகின்றேன் மாண்பையும் மகிமையும் மனிதனின் உரிமையும் மக்கள் மனதினில் அளித்தீரே மகிழ்ந்திட மலர்ந்திட மணிமுடி சூடிட மனித குலத்தினைக் கொடுத்தீரே வானமும் வானமண்டலமும் அவர் மாட்சிமையே அவர் மாட்சிமையே அவர் கைத்திறனே நாடினும் உன்னடி நாடுவேன் இறைவா பாடினும் புகழ் பாடுவேன் நாயகா தேடினும் உன்னருள் ஆ....ஆ...ஆ... ஆ... ஆ... ஆ... தேடினும் உன்னருள் தேடுவேன் தேவா வாடினும் நீயின்றி வாடுவேன் நாதா (2) மாண்பையும் மகிமையும் மனிதனின் உரிமையும் மக்கள் மனதினில் அளித்தீரே மகிழ்ந்திட மலர்ந்திட மணிமுடி சூடிட மனித குலத்தினைக் கொடுத்தீரே வானமும் வானமண்டலமும் அவர் மாட்சிமையே அவர் மாட்சிமையே அவர் கைத்திறனே |