நன்றிப்பாடல்கள் | இதயம் பாடும் நன்றியே |
இதயம் பாடும் நன்றியே உதயம் காணும் நன்றியே வெள்ளி மலர் நன்றியே உள்ளம் மகிழ் நன்றியே வல்ல தேவன் கருணைக்கு நன்றி நன்றியே இருபத்தைந்து ஆண்டுகளும் இமயம் சாட்சியே எதிர்வரும் ஆண்டுகளில் நிழல் போல நடந்திட அன்னை தந்தை அன்பினுக்கு நன்றி நன்றி நன்றியே கருணை தேர்ந்த உருவைத் தந்தீர் நன்றி நன்றியே நண்பனாக நடந்து வந்தீர் நன்றி தெய்வமே கலங்கும்போதும் தயங்கும் போதும் துணிவைத் தந்தீரே என்ன சொல்லிப் போற்றுவேன் நன்றிப்பூக்கள் சாற்றுவேன் அருள் வாழ்வை அளித்தீரே நன்றி நன்றி நன்றியே அறுவடையின் ஆண்டவரே நன்றி நன்றியே பணிகள் செய்யப் பலன் தந்தீர் நன்றி தெய்வமே சிரசிலமர்த்தி சிரமம் தளர்த்தி காத்து வந்தீரே நனறி நன்றி கோடி நன்றி போற்றிப் போற்றி பாடுவேன் |