நன்றிப்பாடல்கள் | இறைவன் தந்த நாளில் |
இறைவன் தந்த நாளில் எல்லாம் இனிய நாளிது இதயம் எங்கும் அருள்மழை வெள்ளம் பொங்கிப் பாயுது பொங்கிப் பாயுது ஆ பொங்கிப் பாயுது பூமியின் இருளை விலக்கிடவே ஆதவன் இயேசு எழுந்தருள்வாய் பூபாள ராகத்தை இசைத்திடவே ஆனந்த மழையினைப் பொழிந்திடுவாய் இதயம் உன்னிலே உதயம் காணுதே இதயம் வீழ்ந்திடும் பொழுதுகளில் நினைவுகள் தானே உந்தன் நினைவுகள் தானே நீதியின் வழியினில் வாழ்ந்திடவே நெஞ்சினில் உறுதியைத் தந்திடுவாய் வீதிகள் எங்கணும் விடுதலையின் பயணங்கள் தொடர்ந்திட துணைபுரிவாய் புதிய பூமியே புலர வேண்டும் புது யுகங்களைத் தோழமையில் படைத்திடுவோமே தடைகளைத் தகர்த்திடுவோமே |