Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள்   இறைவா நீ தந்த வாழ்வில்  


இறைவா நீ தந்த வாழ்வில் துயரில்லையே
இமயமே என் எதிர் வரினும் கவலையில்லையே
இதயம் நாடும் உன் உறவில் அன்பின் பந்தமே
இயேசுவே நான் தேடும் வாழ்வின் பந்தமே

எந்தன் உள்ளம் துள்ளிப் பாடும் அன்பின் கீதமே
இறைவனே என் சொந்தமென்று சொல்லி மகிழுமே
இருந்தாலும் இறந்தாலும் உனக்காகவே - உன்
பணியைச் செய்து நிறைவு காணும் எந்தன் நெஞ்சமே

வாழும் உயிரில் உந்தன் காலம் கண்டு உணர்த்துவேன்
மனிதநேயம் கொண்டு வாழும் மனங்கள் செய்குவேன்
ஏற்றத்தாழ்வு எவ்வடிவம் எடுத்தாலுமே - நான்
எதிர்த்து நின்று மனித மாண்பின் காவலாகுவேன்





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்