Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள் எந்தன் நெஞ்சம் பாடும் கீதம்  

சுவாசமே......சுவாசமே.......
இறைவா நீ எந்தன் சுவாசமே.........
சுவாசமே........சுவாசமே........
நன்றி நன்றி நன்றி நன்றி
என்றும் சொல்வேன்
உள்ளம் நன்றி (2)

எந்தன் நெஞ்சம் பாடும் கீதம் உமக்காகவே
உந்தன் அன்பில் வாழும் ஜீவன் நானாகவே
எந்தன் சிந்தை செயல்களும் உமக்காகவே
உந்தன் நெஞ்சில் இடம் உண்டோ எனக்காகவே
நன்றி நன்றி நன்றி நன்றி
என்றும் சொல்வேன் உள்ளம் நன்றி (2)

உயிரே என் உறவே நான் உம்மைப் போற்றுவேன்
அன்பே என் அமுதே நான் உம்மை சாற்றுவேன்
இறையே என் அமுதே நான் உம்மில் வாழவே
உணவாய் உயிராய் நீ என்னில் வந்தாயே
உந்தன் பாதம் நான் அமர்வேன் எந்தன் வாழ்வு நீயாகவே (2)
நன்றி நன்றி நன்றி நன்றி
என்றும் சொல்வேன் உள்ளம் நன்றி (2)

அன்பாய் இறை பண்பாய் வாழக் கற்றுத் தந்தாய்
என்றும் உன் அன்பில் என்னைச் சேர்க்கிறாய்
உள்ளம் உன் இல்லம் மாறிட வேண்டுமே
எண்ணம் உன் வண்ணம் கண்டிட வேண்டுமே
உந்தன் பாதம் நான் அமர்வேன் எந்தன் வாழ்வு நீயாகவே (2)
நன்றி நன்றி நன்றி நன்றி
என்றும் சொல்வேன் உள்ளம் நன்றி (2)







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்