நன்றிப்பாடல்கள் | என்னையாளும் தெய்வமே |
என்னையாளும் தெய்வமே என்றும் காக்கும் இறைவனே என் யேசு ராஜராஜனே அன்பு என்னும் சுரங்களில் நன்றி தோய்ந்த இசையினில் நாம் பாடும் புதிய ராகமே உன் நாமம் வாழ்த்துவோம் உன் அன்பைப் போற்றுவோம் உன் ஜீவ வார்த்தையை உள்ளத்தில் ஏற்றுவோம் உலகில் உந்தன் சாட்சியாகுவோம் கவலையேதும் எனக்கெதிராய் கலகம் செய்யினும் இடரெதுவும் எமை நெருக்கி இன்னல் செய்யினும் நானிருக்கும்போது நீங்கள் கலங்குவதேனோ என்று நீயும் உரைத்தாலே அஞ்சிடாமல் நாம் ஊரெங்கும் செல்வோம் உன் வார்த்தை சொல்வோம் பாழாகும் பாரை உம் அன்பால் வெல்வோம் போரினால் நலிந்த இந்த அவனி மீதில் சாந்திக்காய் உழைக்க எமக்கு ஆற்றல் அருளுமே அடைக்கப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் அவலம் தீரவே வருக தேவா வாரும் உமது ஆட்சி வருகவே இல்லாமை எவருக்கும் இல்லாமல் செய்வோம் எல்லாரும் எங்கள் சோதரர் என்போம் உலகில் உந்தன் சாட்சியாகுவோம் |