Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள் அன்புத் தந்தை இறைவா  

அன்புத் தந்தை இறைவா போற்றி (போற்றி)- யாம்
நன்றிப் புகழ் இசைத்தோம் போற்றி (போற்றி)
அன்னை ஆரோக்கியத் தாயின் சீராட்டும் அன்பில்
ஆரோக்கிய நலம் தந்தாய் போற்றி

துயருற்று பேறுபெற்றோம் - எங்கள்
துயர் நீக்கும் மீட்பரானீர்
நோயுற்று தாழ்வுபட்டோம் - உந்தன்
சேய்யுற்ற துன்பத்தின் பலன் தந்தீர்
வாழ்வுற்று யாவரும்  நலமடைய - எங்கள்
ஆரோக்கியத்தாய் வழி வேண்டுகிறோம் 
உந்தன் ஆற்றல் பெரிது அரசாட்சி பெரிது
கொடை மாட்சி பெரிது இறைவா - நன்றி

துன்புறும் சோதரரை தாங்கும்
பணியாளர் நீடுவாழ்க
நம்பிக்கை அவர் வாழ்வில் - ஊட்டும்
குருத்துவ மருத்துவ கரம் வாழ்க
அன்பு கொண்டு அவர் தம் துயரினிலே - இறை
அரசினைக் காண்போம் வாழியவே
சுமை சுமந்த நெஞ்சம் சுகமடையவேண்டுமென
ஜெபிக்கும் நெஞ்சம் வாழ்க - வாழ்க


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்