997-நெஞ்சில் சுரக்கும் நன்றி |
நெஞ்சில் சுரக்கும் நன்றி ஸ்வரங்கள் நானிலமெங்கும் நான்பாட நந்தவனத்தில் உண்டுகளிக்கும் வண்டுகள் பாடும் பண்போல விண்ணில் முளைத்திடும் மின்மினியாய் நெஞ்சில் முளைத்திடும் நல்விதைகள் மின்னித்தெறித்திடும் மின்னல்களாய் கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள் நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன் நானிலம் எங்கும் உன் புகழ் சொல்வேன் தோளமுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க தோழமையில் பூமியிலே புதுவுலகம் படைக்க நெஞ்சுக்குள்ளே புரட்சிக்கனவை யார் விதைத்தது கண்ணுக்குள்ளே நெருப்புக்கனலை யார் வைத்தது அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும் எல்லாமே நீ தந்தது - (2) எல்லையில்லா உலகினிலே எனக்கு உயிர்தந்தாய் எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய் ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது இறையரசின் நினைவுகளும் யார் தந்தது புதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள் எல்லாமே நீ தந்தது - (2) |